பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, November 21, 2009

முகாம்கள் திறந்த இடங்களாக மாறப்போகின்றன -பசில் ராஜபக்ஷ (எம்.பி)

மோதல்கள் காரணமாக இடம்பெயர நேர்ந்திருந்த மக்களில் சுமார் ஒரு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் பேர் வரையிலான மக்கள் இன்றளவும் முகாம்களில் தங்கியுள்ள நிலையில், இந்த முகாம்கள் திறந்த இடங்களாக மாறப்போகின்றன என்றும், உள்ளேயிருப்பவர்கள் சுதந்திரமாக நடமாடவும், வெளியில் சென்று தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்கவும் முடியும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
வரும் ஜனவரி மாத இறுதிக்குள் முகாம்களில் உள்ள மக்கள் அனைவரையும் மீளக் குடியமர்த்துவது என்ற அரசாங்கத்தின் திட்டத்தை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது இடம்பெயர்ந்தவர்களுக்கு மீள்குடியேற்றத்திற்கென வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவானது, டிசம்பர் 15 ஆம் திகதி முதல் 50 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் சனிக்கிழமை மனிக்பாமுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமாகிய பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

தமிழீழ மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் – எங்கள் வீரர்களுக்கு, எங்கள் காவல் தெய்வங்களுக்கு அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சுதந்திரமாக வீர வணக்கம்


1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று 1989 ம் ஆண்டு இந்த காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று இங்கு பதியப்படுகின்றது.1989 ம் ஆண்டு ஐப்பசி மாதம் முதல்வாரம் அளவில் இரண்டு போராளிகள் அந்த குளிர்கால கும் என்ற இருட்டிலும் கூட வீட்டை ஒருவாறு தேடி கண்டுபிடித்து வந்து சேர்ந்து விட்டனர். எங்குமே இந்திய அமைதி காக்கும்படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் அதற்கிடையே காட்டிகொடுப்போர்கள், துணை இராணுவ குழுக்கள் என நிறைந்திருந்திருந்தது தேசம். இரண்டு போராளிகளில் ஒருவர் எமது ஊர்காரர் மற்றவர் முல்லை மாவட்டம் என சொன்னார் ஆனால் இடம் சொல்லவில்லை. ஒருவர் சந்திரன் மற்றவர் பெயர் ஞாபகம் இல்லை. சந்திரன் அரைகாற்சட்டையும் சேட்டும் மற்ற போராளி சாரம் கையில் டோர்ச் லைட் ஆனால் ஆயுதம் எதுவும் கைகளில் இல்லை களைத்து விழுந்தடித்து வந்தவர்கள் எனது அப்பாவையும் அம்மாவையும் தான் சந்திக்கவேண்டும் என கேட்டனர்.

நான் அவர்களை எங்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்க சொல்லிவிட்டு குசினிக்குள் இருந்த அம்மா அப்பா ஆகியோரை கூப்பிட்டு கொண்டு வந்து அவர்கள் முன் விட்டேன் ஆச்சரியம் எதுவும் இல்லை ஏனென்றால் அவ்வளவு நெருக்கடிக்குள்ளும் கிழமைக்கு இரண்டு தடவை போராளிகள் வந்து போவார்கள் ஆகையால் அம்மா கேட்டார் என்ன ஐய்யாக்கள் இந்த நேரம் ஏதும் பிரச்சினையோ என்று சி..சீ அப்படி ஒண்டும் இல்லை அம்மா இந்த கடிதத்தை உங்களிட்ட கொடுக்க சொன்னவை அண்ணையின்ர இடத்தில் இருந்து வந்தது. சரி நாங்கள் போவிட்டு வாறம் என்றனர்.

அவசரப்படவேண்டாம் ஏதாவது சாப்பிடுங்கோ அல்லது தேத்தண்ணியாவது குடிச்சிட்டு போங்கோ என்றார் அம்மா. அப்பா சொன்னார் இந்த இருட்டுக்க எங்க போகப்போறியள் மழையும் இருட்டு கட்டி கிடக்கு என்றார். ஆனால் அவர்கள் இல்ல இல்ல நாங்கள் போகவேண்டும் என அடம்பிடித்தனர்; சென்றனர். ஆனால் ஏன் அடம் பிடித்தார்கள் என்பது எனக்கு அடுத்த நாள் தான் எனக்கு தெரிந்தது. அத்தோடு எங்கள் வீட்டில் அழுகை ஒலியும் கேட்கவே அயலவர்கள் வீட்டில் கூடிவிட்டனர்.
அந்த கடிதம் இதுதான் அதாவது ஒரு தபால் அட்டை பருமனில் சிவப்பு ரோஜா படத்தின் அருகே ஊன்றப்பட்ட துப்பாக்கி அதில் மாவீரர் நாள் 1989 கார்த்திகை 27 என அச்சிடப்பட்ட எழுத்துக்கள் என நினைக்கின்றேன். ஆனால் அடுத்த பக்கத்தில் எழுதப்பட்டவைதான் எம்மை எல்லோரையும் எனது குடும்பம் அனைவரையும் தூக்கிவாரிப்போட்டது. ஆம் அதில் எழுதப்பட்டு இருந்தது என்னவென்றால் மேஜர் ———– குடும்பத்தினருக்கு என எழுதப்பட்டு இருந்தது. ஆம் அன்றுதான் எங்கள் சகோதரன் வீரச்சாவு உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்ட நாள்.
அதற்கு முன்னர் மேஜர் —– வீரமரணம் என செய்தி வந்தது ஆனால் எவரும் உறுதியாக சொல்லவில்லை என்பதால் அடிக்கடி வரும் வதந்திகள் என்றே வீட்டில் நினைத்தார்கள் ஏனென்றால் எப்போ வீரமரணம்? எந்த சண்டையில்? நாள்? நேரம்? என்ன நடந்தது? என்ற எந்தவிபரமோ அல்லது வித்துடலோ எங்கே அடக்கம் செய்தது என்ற விபரமோ சொல்லவில்லை ஆகையால்தான் வதந்தி என நாம் இருந்துவிட்டோம்.
ஆனால் வதந்தி அல்ல உண்மை 1989 ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நித்திகை குளத்தில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்திருந்தார் மேஜர் —– அவர்கள். தமிழீழ தேசிய தலைவருக்கு மெய்பாதுகாவலராக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இந்த காலப்பகுதியில் இந்தியப்படையினரால் ஒப்பரேசன் செக்மேற் 3 என்ற நடவடிக்கையினை முறியடித்து தாக்கிய சமரில் வீரச்சாவு அடைந்தார். இவரின் வித்துடலும், இவருடன் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளினதும் வித்துடல்களும் தலைவர் முன் நிலையில் தேசிய தலைவரின் முகாம்களில் ஒன்றான (பின் நாளில் கமல் பேஸ்) மணலாற்று காட்டுப்பகுதியில் விதைக்கப்பட்டது.
ஆம் முதலாவது தமிழீழ மாவீரர் நாள் நினைவு கூரப்படுவதற்கு முன்பாகவே எமக்கு இந்த விடயம் அனைத்தும் தெரிந்தது. இதனால் எனது அம்மா கட்டாயம் நான் என் பிள்ளை புதைக்கப்பட்ட இடத்தை பார்க்கவேண்டும் என அடம்பிடித்தார். இதனால் 1989 நவம்பர் மாதம் அளவில் சில போராளிகள் வந்து வடமராட்சியில் இருந்து எம்மை அழைத்து சென்றனர். முல்லைதீவு வரை சென்றோம் எங்குமே இந்திய இராணுவம் நின்றாலும் அதைப்பற்றி யாரும் பொருட்படுத்தவில்லை. நாம் முல்லைத்தீவு வரை பஸ் இல் பயணம் செய்து பின்னர் அளம்பில் பகுதி கடற்கரையில் ஒரு தென்னம் தோட்ட பகுதிவரை ஒரு கன்ரர் வானில் சென்றோம். இரண்டு நாள் அங்கு தங்கி இருந்தபின்பு ஒரு பச்சை நிற டற்சன் பிக் அப் வாகனம் வந்து எம்மை அழைத்து சென்றது நீண்ட தூரம் சென்றபின்பு ( இரவு) ஒரு முகாமுக்குள் நுழைந்தோம். பின்னர் அங்கு போராளிகள் எமக்கு தே நீர் தந்தார்கள். அதன்பின்னர் போராளிகள் சொன்னார்கள் இனிதான் கவனமாக இருக்கவேண்டும் என்றார்கள். ஏனென்றால் ஆபத்து நிறைந்ததும், குன்றும் குழியும்,சேரும் சுரியும், மழை நீரும் அதேவேளை கும் என்ற இருட்டும் எனது பெற்றோருக்கு பயத்தினை ஏற்படுத்தினாலும் மகனின் இடத்தை பார்க்கவேண்டும் என்ற வீச்சும், போராளிகள் பக்கத்தில் இருந்ததாலும் பயம் கலைந்தது. 05 அல்லது 06மணித்தியாலம் கழிந்து அந்த முகாமை அடைந்தோம்.
அங்கு மண்குவியலால் கல்லறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மழைவெள்ளத்தில் அவை கரைந்தும் இருந்தது. ஒவ்வொரு மாவீரர்களது தலைமாட்டிலும் ஒரு தடி நாட்டப்பட்டு இருந்தது அதில் ஒரு பலகை துண்டில் சிவப்பு பெயின்ற் இனால் ஒவ்வொருவரது பேரும் எழுதப்பட்டு இருந்தது. டோர்ச் வெளிச்சத்தில் ஒவ்வொன்றாக பார்த்துகொண்டிருந்தோம் இதே நேரம் எனது தம்பி (போராளி) சொன்னான் அம்மா அண்ணாவின்ர 7வதாக இருக்கு பாருங்கோ என்றான் ஆம் மேஜர் —– என்ற பெயர் எழுதப்பட்டு இருந்தது. குந்தியிருந்து எல்லா மாவீரர்களது பெற்றோர்கள் போலவும் மண்ணில் அடித்து, நெஞ்சில் அடித்து கதறி அழுதார்கள் எனது பெற்றோர். பூக்கள் தூவினோம்.மெழுகுவர்த்தி ஏற்றினோம். எல்லோரும் கவனமா இருங்கோ பிள்ளையள் என்ற எனது பெற்றோரின் எச்சரிக்கையோடு அந்த இடத்தை விட்டு புறப்பட்டோம். ஒரு கிழமை பயணத்துடன் எங்கள் முதலாவது தமிழீழ மாவீரர் நாளை நினைவு கூர்ந்து மணலாற்று காட்டில் இருந்து புறப்பட்டோம் புறப்படும் போது எமது சகோதரர் விதைக்கப்பட்ட வீடியோ பிரதியினையும் தந்தார் எனது இளைய சகோதரர்.
அந்த வீடியோ கொப்பியினை வீட்டிற்கு கொண்டுவந்து எங்களூரில் டி.வி வைத்திருக்கின்ற ஒருவரிடம் சென்று அதனை போட்டு பார்த்தோம். அதில் பெற்றோ மாக்ஸ் வெளிச்சத்தில் கிடங்கு வெட்டி வரிசையாக அதே உடுப்புடன் வீரர்கள் விதைக்கப்படுவதும் அதனை வீடியோ பிடிப்பதனையும்பார்க்கும் போது அதிசயமாக இருந்தது சண்டை உக்கிரமாக நடந்த வேளையிலும் கூட தேசியத்தலைவர் அவர்களுடன் கேணல் சங்கர் அண்ணா, கேணல் கிட்டண்ணா, பிரிகேடியர் சொர்ணம் அண்ணா, மேஜர் சோதியா அக்கா ஆகியோர்கள் இறுதிவரை நின்று 07 மாவீரர்களுக்கும் மண் தூவி வீரவணக்கம் செலுத்தியிருந்தார்கள். அதே போன்றுதான் முள்ளிவாய்க்கால் இறுதி போரிலும் வீரச்சாவடைந்த போராளிகளும் மக்களும் அப்படியே புதைக்கப்பட்டதும் வணக்கம் செலுத்தியதனையும் ஒப்பீடு செய்து பார்க்கின்றேன்.
எங்கள் வீரர்களுக்கு, எங்கள் காவல் தெய்வங்களுக்கு அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சுதந்திரமாக வீர வணக்கம் செலுத்தும் நாள் இனி எப்போது வரும்? வரவேண்டும். வரும்.

Freedom of movement for IDP's from next month

Senior Presidential Advisor MP Basil Rajapaksa, who visited the Menik Farm welfare village in Vavuniya this morning, said that the Internally Displaced People (IDP) in the camps will have greater freedom of movement with effect from the 1st of December.

வவுனியா தடுப்பு முகாம்கள் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து சுதந்திரமான நடமாட்டத்திற்காக திறந்துவிடப்படும்: பசில் ராஜபக்ச

வவுனியாவில் உள்ள தடுத்து முகாம்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், சுதந்திர நடமாட்டத்திற்காக திறந்து விடப்படும் என அரசாங்கத்தின் சார்பில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இதனை சற்று முன்னர் வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் வைத்து அறிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், இந்த அறிவித்தல் அரசியல் நோக்கம் கருதி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் முட்கம்பிகள் தகர்க்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று வரலாம் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீளக்குடியேற்றப்படுவர் என்றும் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இன்று பசில் ராஜபக்ச வரலாற்று ரீதியான ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்தமைக்கு அமையவே இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Friday, November 20, 2009

கருணாநிதியைக் கண்டித்து போஸ்டர்கள் - பரபரப்பு

மதுரை: விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படவில்லை. அதனால்தான் இன்று நாடு நாடாக இலங்கைத் தமிழர்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி, யாருக்குத் தெரியும் இந்த மெளன வலி என்ற தலைப்பில் முரசொலியில் எழுதியிருந்தார்.இந்த நிலையில் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தமிழின உணர்வாளர்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.அதில், ஈழ விடுதலைப் போரை கொச்சைப்படுத்தும் கலைஞரே, உங்கள் அறிக்கை மெளனத்தின் வலியா, துரோகத்தின் மொழியா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.தமிழின உணர்வாளர்கள், மதுரை என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் பெரியார் படமும் இடம் பெற்றுள்ளது.இந்தப் போஸ்டர்களை பெரியார் தி.க. அல்லது நாம் தமிழர் அமைப்பினர் ஒட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.இந்த போஸ்டர்களை போலீஸார் உடனடியாக அகற்றி விட்டனர்.

Former Sri Lankan CDS writes to war heroes

Nov 20, Colombo: Retired Chief of Defence Staff General Sarath Fonseka says that he will now sacrifice his life for the safeguard of country's democracy.
Sending a special letter to war heroes and their family members General Fonseka said that he would always back the war heroes as they are the sole owners of the victory over the terrorism.
"I will be by your side like a shadow," he said.
According to General Fonseka the real leaders of this historical victory over thirty years long war were the brave soldiers.
"It was a great graveness for the soldiers and we should protect it," he stressed.
According to the General Fonseka several persons are attempting to defame the war heroes, but it should be defeated, he said.
Politicization of the forces could not be allowed as "we are the real heroes," retired Chief of Defence Staff pointed out.
He further said that he was not even able to speak to the war heroes who supported him for the historical victory over LTTE, as he was removed from the post of Army Commander soon after defeating the war.
General Sarath Fonseka said that although his security was reduced to 25 persons he will commit himself to protect democratic freedoms which we are rapidly losing as well as to work to restore human rights, media freedom, social justice, ethnic unity, and peaceful coexistence.
He finally reminded to the brave soldiers that this is our heritage.

சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயற்சி : அரசு மறுப்பு

கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற சரத் பொன்சேகாவை கொலை செய்ய அரசு முயற்சிப்பதாக வெளியிடப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் இந்த செய்தி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுணுகல்ல இக்கருத்தினை வெளியிட்டார்.சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி ஆதரவான 'லங்கா புவத்' பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்."சரத் பொன்சேகாவைக் கொலை செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாகப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு அரசாங்கத்துடன் தொடர்பிருப்பதாக நேரடியாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமையானது பாரதூரமான விடயமாகும். ஆகையால் இதனை தீர விசாரிக்க வேண்டியுள்ளது.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாகக் குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியரின் விளக்கமும் தேவைப்படுகின்றது.அவ்வாறானதொரு செய்தி தமக்குக் கிடைக்குமிடத்து, அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்திருக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு யோசித்து சொல்கிறேன்

பேராண்மை பட வெற்றியைத் தொடர்ந்து தில்லாலங்கடி பட சூட்டிங்கில் பிஸியாகி விட்டார் ஜெயம் ரவி. இதற்கிடையில் அவருக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பேராண்மை படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் ரோலண்ட் கிக்கிங்கர் நடித்திருந்தார். சூட்டிங் நேரத்தில் ஜெயம் ரவியும், ரோலண்ட்டும் நட்புடன் பழகினார்கள். இடையிடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஹாலிவுட்டில் எப்படி சினிமா உருவாக்குகிறார்கள் என ரவி கேட்டு தெரிந்துகொள்வாராம். அதேபோல் கிக்கிங்கரும் தமிழ் சினிமா பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்துகொண்டாராம். இப்போதும் இந்த நட்பு நீடித்து வருகிறதாம். தன் புதிய நண்பருக்கு சமீபத்தில் தனது வீட்டில் விருந்தளித்தார் ஜெயம் ரவி. விருந்து முடிந்து அவர் புறப்பட்டபோது, அவருக்கு வேட்டி – சட்டை, வலம்புரி சங்கு ஆகியவைகளை ஜெயம் ரவி பரிசாக அளித்தார். இந்த பரிசுகளைப் பார்த்து வியந்த கிக்கிங்கர், “நல்ல திறமையான நடிகராகவும், எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்கும் தன்மையும் உள்ள உங்களைப் போன்றவர்கள்தான் ஹாலிவுட்டுக்கு தேவை. உண்மையிலேயே உங்களைப் போன்ற ஒருவரை எனக்குத் தெரிந்த பிரபல ஆங்கில இயக்குநர் தேடிக் கொண்டிருக்கிறார். நடிக்க வருகிறீர்களா?” என்று கேட்டிருக்கிறார். ஹாலிவுட் பட வாய்ப்பு வாயிற்கதவை தட்டியபோதிலும் யோசித்து சொல்கிறேன் என்று ஒற்றைவரி பதிலையே கூறியுள்ளார் ஜெயம் ரவி.

தேசிய தலைவரின் மாவீரர் தின உரை வருமா ? வராதா ?

மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ் வேளையில், மாவீரர் தின உரை வருமா இல்லை வராதா என்ற ஏக்கத்துடன் உலகத் தமிழர்கள் இருப்பதை நாம் அறிவோம். ஒருபுறம் மாற்றுக் கருத்து உள்ளவர்களும், அரசுடன் சேர்ந்து இயங்குபவர்களும் மாவீரர் தின உரை இம்முறை வெளிவராவிட்டால் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டு விட்டது என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை பரப்புரையாக மேற்கொள்ள காத்திருக்கின்றனர். மறு முனையில் இலங்கை அரசானது தாமே ஒரு பொய்யான மாவீரர் தின உரையை நிகழ்த்தி, அதில் தேசிய தலைவருக்கும் ஈகைச் சுடர் ஏற்றி அதை வெளியிட்டு, புலம்பெயர் தமிழர்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்ச முயல்வதாகச் செய்திகள் கசிந்திருக்கின்றன.
குறிப்பாக இணையத்தள உரிமையாளர்கள், இந்த விடையத்தில் மிகவும் அவதானமாகச் செயல்படுவது நல்லது. மாவீரர் தின அறிக்கை என, எவராலும் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு அவை இலங்கை புலனாய்வுத் துறைமூலமாக வெளியிடப்படலாம். இச் சந்தர்ப்பத்தில் பொறுமைகாத்து நிதானாமாகச் செயல்படுவது நல்லது.
எது எவ்வாறு இருப்பினும் மாவீரர் தின உரை என்பது எமது தேசிய தலைவரால் வாசிக்கப்படும் ஒரு உன்னதமான உயிரோட்டமுள்ள உரை. ஒரு பேரழிவை எமது இனம் சந்தித்துள்ளவேளை, எமது ஆயுதப்போராட்டம் தற்காலிகமாக மௌனித்துள்ள இவ் வேளை நாம் தேசிய தலைவர் அவர்களின் உரையை எதிர்பார்த்திருப்பது முறையல்ல. ஏன் எனில் வழமையாக நவம்பர் மாதம் என்றாலே இலங்கை அரசு கதிகலங்கி இருக்கும். மாவீரர் மாதத்தில் பல பாரிய தாக்குதல்கள் இலங்கை அரசுக்கும், இராணுவத்தினருக்கும் எதிராகவும் நடைபெறும். அவ்வாறு தாக்குதல்கள் வெற்றியாக முடிந்த தறுவாயில் தேசிய தலைவர் மாவீரர் நாள் உரையாற்றுவது வழக்கம்.
அதனால் இன்னும் ஒரு பாரிய வெற்றி, அது அரசியலாக இருக்கலாம் இல்லை ஆயுதப் போராட்ட வெற்றியாக இருக்கலாம் அப்படி ஒரு வெற்றியை நாம் அடைந்த பின்னரே அவர் உரை வெளிவரும் என்பதை புலிகளை நன்கு விளங்கிக்கொண்டவர்கள் அறிவார்கள். அதுவே அவர் உரைக்கும் பெருமை சேர்க்கும், தமிழினம் தலை நிமிரும் உரையாகவும் அமையும்.
உரை வரும் வராது என்ற வாதப் பிரதிவாதங்களை முதலில் நாம் நிறுத்திவிட்டு எமது மாவீரச் செல்வங்களின் கல்லறை நோக்கி அணிதிரளுவோம். உங்கள் நாடுகளில் எங்கெங்கு மாவீரர் நினைவு தினம் நடக்கின்றதோ அங்கே சென்று அவர்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றுவோம். எமது போராட்டத்திற்கு உரம்சேர்ப்போம், உறுதியுடன் போராடுவோம் என மாவீரர் முன் நின்று அவர்கள் கனவு நினைவாக உழைப்போம் என சபதம் எடுத்துக்கொள்வோம்.
இதுவே எம் மனதைத் தூய்மைஆக்குவதோடு சரியான முடிவுகளை எடுக்க உறுதுணையாக இருக்கும் . எமது மாவீரச் செல்வங்களின் உருவப்படத்தை ஒரு முறை பார்த்தால் சஞ்சலங்கள் தீரும். எமது ஏக்கம் தீரும். ஒவ்வொரு மாவீரனும் மண்ணில் விழும்போது நாளை பிறக்கும் தமிழீழம் என்ற லட்சியக் கனவுடன் கண்மூடி இருப்பான்.. அவர்கள் கண்மூடும் போது கண்ட கனவை நாம் நிஜமாக்குவோம்.

சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்

ஈழம் வருமா? வரும். எங்ஙனமென்பதை இவ்விதழில் விவாதித்து விவரிப்பதாயிருந் தோம். இடையில் அரங்கேறிய ராணுவத் தளபதி சரத் பொன் சேகா தொடர்பான அதிரடிக் காட்சிகள் முக்கிய சில செய்தி களை சொல்லிச் செல்வதால் முதலில் அதனைப் பார்ப்போம்.

காட்சிச் சுருளை சற்று பின்னோக்கி ஓடவிட்டு இயக்கு வோம். தமிழரை அழித்த போருக்கு களத்தில் தலைமை ஏற்றிருந்தவர் சரத் பொன்சேகா. போர் வெற்றியின் முழுப் பெருமை யினையும் ராஜபக்சே-கோத்த பய்யா சகோதரர்கள் அரசிய லாக்கி அபகரிக்க, உள்ளுக்குள் ராஜபக்சே சகோதரர்களுக்கும் பொன்சேகாவுக்கும் உரசல் என அரசல் புரசலாய் செய்திகள் வந்தன. செய்திகளை உண்மை யாக்கும் வண்ணம் ராணுவ தலை மைத் தளபதி பதவி பொன் சேகாவுக்கு நீட்டிக்கப்படவில்லை. இது நடந்த அக்டோபர் மாதத் தில்தான் இலங்கையில் ராணுவப் புரட்சி வெடிக்கக் கூடுமென்ற அச்ச அதிர்வலைகள் எழுந்து இந்திய ராணுவத்தின் உதவியை ராஜபக்சே அக்டோபர் 15-ம் தேதி வேண்டியதாக பொன்சேகா இப்போது குற்றம் சாட்டியுள்ளார். இதே காலகட்டத்தில் சிறப்பு இந்திய கமாண்டோக்கள் ஏதோ கொழும்பு நடவடிக்கைக்காக ஆயத்தமாய் வைக்கப்பட்டிருந்த செய்திகளும் அப்போது உலவின.இப்பின்னணியில் பொன் சேகா அதிபர் தேர்தலில் போட்டி யிடக் கூடுமென்ற செய்திகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட் பாளராக அவர் நிறுத்தப்படும் சாத்தியப்பாடுகளும் விவாதிக்கப்பட, கொழும்பு அரசியற் களம் சூடேறத் தொடங்கியது.
அமெரிக்க குடி யுரிமையும் கூடவே கொண்ட பொன்சேகா திடீரென அமெரிக் காவில் வாழ்ந்து வரும் தனது மகளை சந்திக்கப் புறப்பட்டதும், அங்கு அவரை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து "சம்மன்' இல்லாமலேயே விசாரிக்க அமெரிக்க தேச பாது காப்பு பிரிவு விருப்பம் தெரி வித்ததும் வெப்ப நிலையை மேலும் சூடேற்றின.

விசாரணை எதையும் சந்திக் காமலேயே சரத் பொன்சேகா கொழும்பு திரும்பினார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் முக்கிய அமெரிக்க அதிகாரிகள் அவரைச் சந்தித்தனர் என்றும், அமெரிக்கா அறிய விரும்பிய முக்கிய சில செய்திகளை அவர் சொல்லிவிட் டார் என்றும் இப்போது தெரிய வருகிறது. இந்நிலையில் ராணுவ அமைப்பில் இப்போது பொன்சேகா வகித்து வரும் முதன்மை அதி காரி என்ற பதவியிலிருந்தும் அவரை விடு வித்து அதிபர் ராஜபக்சே கடந்த சனிக்கிழமையன்று கடிதம் எழுத, அவசர கதியில் இந்திய அரசின் இரண்டாம் நிலையில் இருக்கும் பிரணாப் முகர்ஜி அவர் கள் கொழும்புக்குப் புறப்பட, இலங் கை அரசியல் உலகின் கூர்த்த கவ னம் பெற்றது. மேற்குலக நாடுகளின் அரசியல்-ராஜதந்திர முற்றுகை இறுக்கத்திலிருந்து ராஜபக்சே சகோதரர்களை காப்பாற்றும் நோக் குடன் பிரணாப் முகர்ஜி புறப்பட் டாரா, இல்லை சர்வாதிகாரிகளாய் கொக்கரித்தவர்கள் பலவீனப்படுகிற தருணத்தை பயன்படுத்தி அரசியற் தீர்வு முயற்சிகளை துரிதப்படுத்தும் வாய்ப்பு தேடிச் சென்றாரா என்பது ராஜதந்திர வட்டங்களில் ஒருபுறம் விவாதிக்கப்பட, வந்திறங்கியபின் முதல் நிகழ்வாக அவர் ஆற்றிய லக்ஷ்மண் கதிர்காமர் நினை வுரையில் "அரசியற் தீர்வுக்கான வரலாற்றுத் தருணமும் வாய்ப்பும் இது' என வலியுறுத்திக் குறிப்பிட்ட தும் கவனிக்கப்பட்டது.

இதற்கிடையில் ராஜபக்சே அரசும் தனியார் நிறுவனங்களும் நடத்தியுள்ள ஆய்வுகளில் சரத் பொன்சேகா எதிர்கட்சிகளின் ஆதரவின்றித் தனித்து நின்றாலே சராசரி 22 சத வாக்குகள் பெறு வார் என்பதும், குறிப்பாக இலங்கை சமூகத்தில் சக்திமிக்க பௌத்த பிக்குமாரின் பெருவாரியான ஆதரவு அவருக்கு இருப்பதும், போர் வெற்றி யின் நாயகனாக சாதாரண சிங்கள மக்கள் சரத் பொன் சேகாவைத்தான் பார்க்கிறார்களென்ப தும் தெரிய வந்துள் ளது. இந்தப் பின்ன ணியில்தான் 2012-ம் ஆண்டு நடைபெற வேண்டிய அதிபர் தேர்தலை வரும் ஆண்டு ஏப்ரல் மாதமே நடத்தலாம் என முன்னர் ராஜபக்சே செய்திருந்த முடிவினை இப்போது மறுபரிசீலனை செய்யும் செய்திகளும் வந்திருக்கின்றன. கடந்த ஞாயிறு தனது கட்சியின் மாநாட்டில் ஏப்ரல் மாதம் தேர்தல் என அறிவிப்பதாய் முன்னர் முடிவு செய் யப்பட்டிருந்தது. இப்போதோ தேர்தல் அறிவிப்பு உரிய நேரத்தில் வரும்'' என ராஜபக்சே சமாளித்துள்ளார்.வரலாறு நெடுகிலும் நாம் தரிசிக்கும் மகா மன்னர்களின் குப்பைமேடுகளும், சரிந்த சாம்ராஜ் யங்களின் இடிபாட்டுச் சிதறல்களும் கொஞ்ச நஞ்சமல்ல. முள்ளிவாய்க் கால் கொடுமை நடந்த வாரத்தில் -வரலாறு ஓர் சுழல் வினை -சாம்ராஜ் யம் சரியும்- அதிகார போதையின் உச்சகட்ட கிறக்கத்தில் நிற்கும் ராஜபக்சே சகோதரர்களை யதார்த்த உண்மைகள் ஒருநாள் நிச்சயம் சுற்றி வளைக்குமென எழுதியிருந்தோம். இத்துணை விரைவில் அது நடக்குமென நினைக்கவில்லை.

ஏதோ உலக மகா சரித்திர புருஷர்கள் போல் தமிழர் இன அழித்தலை கொக்கரித்துக் கொண்டாடிய ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா மூவரையும் திருவிழாக்கூத்தின் வித்தியாசமான பரமபத மரண விளையாட்டில் மேற்குலக நாடுகள் எப்படி எலி-பூனைகளாக மணி கட்டி ரசமான வேடிக்கை ஜீவராசிகளாக இறக்கி விட்டிருக்கின்றன என்பதை உன்னிப் பாய் கவனித்தால் உலக அதிகார ஒழுங்கு எவ்வாறெல்லாம் இயங்க முடியும், அந்த உலக அதிகார ஒழுங்கினை தமிழர்கள் தம் நலன் களுக்காய் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற சூட்சுமங்கள் புரியும்.சாமான்யமானதோர் அரசியல் விஞ்ஞான மாணவனாய் எனது அவதானங்களும், அவற்றினடிப்படையிலமைந்த அனுமானங் களும் இவை: ஆனையிறவு வெற்றி யின் உச்சியில், நின்ற விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை வளை யத்திற்குள் இந்தியா மற்றும் அமெரிக்க மேற்குலக நாடுகள் உந்தித் தள்ளியதில் பல பிராந்திய வல்ல மைக் கணக்குகள் இருந்தன. ஆனால் அவற்றினூடே தமிழ் மக்க ளுக்கு அதிகபட்ச அரசியல் உரிமை களை உறுதி செய்யும் ஓர் ""கூட் டாட்சி ஏற்பாட்டினை'' உருவாக்க வும், அதன் முதன்மை நாயகர் களாய் விடுதலைப் புலிகளை ஏற் றுக் கொள்ளவுமான முடிவுகளும் மேற்குலக நாடுகளைப் பொறுத்த வரை இருந்தன. அமைதிப் பேச்சு வார்த்தைகளின் காலத்தில் அமெ ரிக்க பயங்கரவாத இயக்கம் எனத் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அன்டன் பாலசிங்கம் அவர்களை அவரது லண்டன் இல்லத்திற்கே சென்று அதே அமெரிக்காவின் தென் ஆசியாவிற்கான அரசியற் செயலர் ரிச்சர்ட் அர்மிடாஜ் சந்தித்தது மிக முக்கியமான நிகழ்வு. அதுபோலவே இப்போதைய அமெரிக்க வெளி யுறவுச் செயலர் ஹிலாரி கிளிண் டன் அவர்களின் கடந்த 15 ஆண்டுகால ஈழத்தமிழர் பிரச் சனை தொடர்பான உரைகளையும், நேர்காணல்களையும் நோக்கினோ மென்றால் ஒரு தருணத்தில் கூட தமிழ் மக்களின் அரசியற் போராட்டத்தை பயங்கரவாதமாக அவர் தீர்ப்பிட்டதில்லை. விடுதலைப் புலிகளை வன்முறை- பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் இயக்கமாகக் குறிப்பிடும் அவர் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் நியாயங்கள் உண்டு, அவர்களது போராட்ட நியாயங்களுக்குப் பதில் தரப்பட வேண்டுமென்றே கூறி வந்திருக் கிறார். இந்த அணுகுமுறையின் தெளிவான தொடர்ச்சியை இன்றும் அமெரிக்க-மேற்குலக நாடுகள் அதனிலும் தெளிவாக வலியுறுத்துகின்றன. செய்தி இதுதான்: ""விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாக நாங்கள் பட்டியலிட்டாலும் தமிழர்களின் நீண்ட அரசியற் சிக்கல் பயங்கரவாதமல்ல. அதற்கு அரசியற் தீர்வு ஓர் கூட்டாட்சி ஏற்பாடாக காணப்பட வேண்டும்''.

போருக்குப் பின் ராஜபக்சே சகோதரர்கள் காட்டிய ஆணவமும், அப்பட்டமான தமிழ் இன வெறுப்பு அணுகுமுறையும் மேற்குலக நாடுகளை கோபப்படுத்தியுள்ளன. இப்போதைய தென் ஆசியாவுக் கான அமெரிக்காவின் வெளி யுறவுச் செயலர் ராபர்ட் பிளேக்ஸ் ராஜபக்சே சகோதரர்களை மண்டியிட வைக்கும் வியூகங்களை வாஷிங்டனில் இருந்துகொண்டு வகுக்கிறார். இந்த ராபர்ட் பிளேக்ஸ் முன்னர் இலங்கையில் அமெரிக்காவுக்கான தூதராக இருந்தார். ராஜபக்சே சகோதரர் களை- குறிப்பாக கோத்த பய்யாவை போர்க்குற்றவாளியாக கூண்டில் நிறுத்த வேண்டுமென்பதில் குறியாக இருப்ப வரும் இவர்தான் எனக் கூறப்படு கிறது.காரணம் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த நடேசன்- புலித் தேவன் படுகொலை. இந்த உண்மை நார்வே நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றிற்கு முன்னாள் அமைதி பேச்சு வார்த்தையாளர் எரிக்சோல் கெய்ம் வழங்கிய செவ்வியில் வெளிப்பட்டுள்ளது. நடேசன்-புலித்தேவன் சரணடைதல் பேச்சுவார்த்தை களை இலங்கை அதிபர் -இந்தியத் தலைவர்கள் -ஐ.நா. அமைப்புகள் -புலித்தேவன் என நான்கு முனையிலும் ஒருங் கிணைத்ததுதான் என்பதை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தி பதிவு செய்துள்ளார் எரிக்சோல் கெய்ம். தென் ஆசியாவுக்கான அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ராபர்ட் பிளேக்ஸ்தான் எரிக்சோல்கெய்மை அதில் வழி நடத்தியிருக்கிறார். அவரது உத்தர வாதத்தின்பேரில்தான் சரணடையும் அறிவுறுத்தல் புலித்தேவனுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக புலித்தேவனுடன் கடைசியாக நடந்த தொலைபேசிப் பதிவையும் எரிக் சொல் கெய்ம் வெளிப்படுத்தி யுள்ளார். வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சென்ற நடேசன், புலித் தேவன் உள்ளிட்ட சுமார் 17 பேரை படுகொலை செய்ய உத்தரவிட்டது கோத்தபய்யா ராஜபக்சே. இதனை மன்னிக்க ராபர்ட் பிளேக்ஸ் தயாராக இல்லை.

வாஷிங்டனிலிருந்து நமக்கு கிடைக்கிற முக்கிய தகவல்கள் இவை: ""சரத் பொன்சேகா அமெ ரிக்கா செல்லவில்லை, வர வழைக்கப்பட்டார். நடேசன்-புலித் தேவன் படுகொலை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. கோத்தபய்யா உத்தரவில் அது நடந்ததென்றும், படுகொலை நடந்து பத்து நிமிடங்களுக்குப் பின்னரே தனக்கு அதுபற்றித் தெரிய வந்ததாகவும் வாக்குமூலமும் கூறியுள்ளார் பொன்சேகா. சரத் பொன் சேகாவை அதிபர் தேர்தலில் போட்டியிடும்படி அறிவுறுத்தியதும் -உண்மையில் உத்தரவிட்டுள் ளதும்- அமெரிக்காதான் என்றும் தெரிய வருகிறது. கோத்தபய்யா வுக்கெதிராய் வாக்குமூலம் தரவில்லையெனில் அமெரிக்க குடிமகனென்ற வகையில் அவர் மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு எங்கு வைத்து வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்பட முடியு மென்றும் எச்சரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த ""எங்கு வைத்து வேண்டுமானாலும் எங்களால் உங்களை கைது செய்ய முடியும்'' என்ற எச்சரிக்கைதான் அவரை வழிக்குக் கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கும் வேறு பின்னணி கள் உள்ளது. அவை...!




80 ஆயிரத்துக்கு மனைவியை அடகு வைத்தவன் கைது

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (30). இவரது மனைவி உஷா (28). இவர்களுக்கு பத்ரி என்ற 4 வயது மகன் இருக்கிறான்.
பாலாஜி எப்போதும் குடித்துவிட்டு சூதாடுவதையே தொழிலாக வைத்திருந்தார்.பாலாஜி இதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவரிடம் ரூ.45 ஆயிரம் கடன்பட்டார். மேலும் சூதாடுவதற்காக ரூ.80 ஆயிரத்திற்கு தனது மனைவி உஷாவை பணயம் வைத்தார். அதற்கு சம்மதித்த வெங்கடேஷ் பாலாஜியிடம் இருந்து மீதமுள்ள ரூ.35 ஆயிரத்தை வாங்கிக் கொண்டார்.
உஷாவும் வெங்கடேசுடன் சென்று குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் பாலாஜி, தனது மனைவி உஷாவை வெங்கடேசிடம் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றார்.
அப்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்ததில் இந்த தகவல்கள் வெளிப்பட்டன. தன்னுடன் உஷாவை அனுப்பிவைக்குமாறு போலீசாரிடம் பாலாஜி கேட்டுக்கொண்டார்.
ஆனால் வெங்கடேசுடன் தான் வாழ்வேன் என்று உஷா தெரிவித்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆபாச அர்ச்சகர்: பரபரப்பு வாக்கு மூலம்

காஞ்சீபுரம் ஸ்ரீமச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன். (35). இவர் கோவில் கருவறையில் பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்று வெளியான ஆபாச வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையொட்டி அர்ச்சகர் தேவநாதன் மீது பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். சில தினங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் முதல் வகுப்பு குற்றவியல் கோர்ட்டில், பெண் மாஜிஸ்திரேட் சுதா முன்பு அர்ச்சகர் தேவநாதன் சரண் அடைந்தார். தேவநாதனை வருகிற 30-ந்தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
அர்ச்சகரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட் சுதா அர்ச்சகரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் அர்ச்சகர் தேவநாதன் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அர்ச்சகர் தேவநாதனிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்தனர். விசாரனையில் அவர் போலீசிடம்,
’’காஞ்சீபுரம் ஸ்ரீமச்சேஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண்கள் தங்களது குடும்ப கஷ்டத்தைக்கூறுவார்கள். அவர்களுக்கு நான் அர்ச்சனை செய்து ஆறுதல் கூறுவேன்.
இவ்வாறு வரும் சில பெண்களுடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் கருவறையிலே அவர்களது சம்மதத்தோடு நான் உல்லாசமாக இருப்பேன். அந்த காட்சியை நான் என்னுடைய செல்போன் கேமராவில் ரகசியமாக படம் பிடிப்பேன். பிறகு ஓய்வாக இருக்கும் நேரத்தில் அந்த காட்சியை நானே பார்த்து, ரசித்து, இன்பமடைவேன்.
மேலும் சில பெண்களை லாட்ஜூகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் உல்லாசமாக இருப்பேன். நான் கோவில் கருவறையில் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ எனது செல்போனில் இருந்து எப்படி பரவியது என்பது எனக்கு தெரியவில்லை.
செல்போனை ஒரு கடையில் ரிப்பேருக்கு கொடுத்தேன். அவர்கள் இந்த வீடியோ காட்சியை எனது செல்போனிலிருந்து எடுத்து பரப்பினார்களா? என்று எனக்கு புரியவில்லை’’என்று தெரிவித்தார்.
அர்ச்சகர் தேவநாதன் மீது 153-(எ) (2), 295எ, 506(2) ஆகிய 3 பிரிவுகளில் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
காஞ்சீபுரம் செல்போன் கடைகாரர்கள் பாலாஜி, பிரவின்குமார் ஆகியோர்களிடம் அர்ச்சகரின் செக்ஸ் லீலைகளை சி.டி.யில் பரப்பினீர்களா? என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

Thursday, November 19, 2009

80 வயது கிரிமினல் கிழவன்!

80 வயது கிரிமினல் கிழவன்!
""உருவத்தைப் பார்த்து எடை போடா தீங்கப்பா... என்னை மாதிரி வயதான ஆளுங்கள்லயும் டேஞ்சரஸ் ஆளுங்க இருப்பாங்க''’’-என வாக்குமூலம் கொடுத்து அதிரவைத் திருக்கிறார்... 80 வயது கில்லாடிக் கிரிமினல் கிழவரான கண்ணன். காவி உடையில் சாந்தமாகக் காட்சிதரும் இந்த கிழவரின் ஜாதகங் களைக் கிளறிய காக்கிகள்... கிறுகிறுத்துப்போய் நிற்கிறார்கள். 29.7.2009 பகல் நேரம்.""சார் போலீஸ் ஸ்டேஷனா? எங்க லாட்ஜ் ரூம் ஒன்னில்... பிணவாடை வருது. மர்டர் நடந்திருக்கும் போலிருக்கு சார். அறைக்கதவு லாக் பண்ணியிருக்கு''’’-சிதம்பரம் பாரி லாட்ஜின் மேனேஜர் பதட்டத்தோடு தகவல் கொடுக்க...அடுத்த கொஞ்ச நேரத்தில் எஸ்.பி.செந்தில்வேலன் தலைமையிலான போலீஸ் டீம்... அந்த லாட்ஜை முற்றுகை இட்டது.
கதவு உடைக்கப்பட்டு காக்கிகள் உள்ளே போனபோது... 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ரத்தக் காயத்தோடு பிணமாய்க் கிடந்தார். தலையில் பலமாகத் தாக்கி மரணம் ஏற்படுத்தப் பட்டிருந்தது. கொல்லப்பட்டவரோடு 80 வயது பிராமணப் பெரியவர் ஒருவரும் தங்கி இருந்ததாக ரூம் பாய் சொல்ல... அவர்கள் கொடுத்திருந்த விலாசத்தை காக்கிகள் அலசினர்.
அது பொய் முகவரி என்பது தெரிந்தது. கொல்லப்பட்டவர் குறித்த தடயங்கள் கிடைக்காததால்... வழக்கு அப்படியே தேங்கி நின்றது.இந்த நிலையில் எஸ்.பி. செந்தில் வேலன் மாற்றலாகி ராமநாதபுரம் போய்... அங்கிருந்து தஞ்சைக்கு மாறுதலாகி வந்தார். இந்த நிலையில்... தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் உமாமகேஸ்வரி என்ற பெண்மணி கொடுத்த புகார் ஒன்று தற்செயலாக எஸ்.பி.செந்தில்வேலன் கண்ணில் பட்டது. தனது மாமனார் ராமசாமி என்பவரைக் காணவில்லை என அவர் புகாரில் குறிப்பிட்டி ருந்தார். உடனே அவரை அழைத்த எஸ்.பி.... சிதம்பரம் பாரி லாட்ஜ் விவகாரத்தைச் சொல்லி...’’""அவர் உங்கள் மாமனாரா என பார்த்துவிட்டு வாருங்கள்''’’ என்றதும்... ராமசாமியின் ஒட்டுமொத்த குடும்பமும் அலறியடித்துக்கொண்டு சிதம்பரத்துக்கு ஓடியது.
காவல்நிலையத்தில் எடுத்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்து... அவர்தான் ராமசாமி என்று அடை யாளம் காட்டி.. கதறி அழுதனர். தஞ்சை வந்து அவர்கள் எஸ்.பி. செந்தில்வேலனிடம் தகவல் சொல்ல... நிமிர்ந்து உட்கார்ந்த எஸ்.பி.... ராமசாமியுடன் லாட்ஜில் தங்கியிருந்த காவிவேட்டிப் பெரியவர் பற்றி ராமசாமி குடும்பத்தினரிடம் விசாரித்தார். “""அவர் வைத்தியர் கண்ணன். அவர் கூடத்தான் எங்க அப்பா எப்பவும் இருப்பார். அவர் நல்ல மனுசனாச்சே...''’ என ராமசாமியின் பிள்ளைகள் சொல்ல... எஸ்.பி.யோ.. இன்ஸ்பெக்டர் முத்தரசு தலைமையிலான டீமை களமிறக்கினார். விசாரணையில் வைத்தியர் கண்ணன்... தஞ்சை நட்சத்திர நகர் முதல்தெருவில் 19-ஏ என்ற இலக்கத்தில் வசித்துவந்த தகவல் கிடைக்க... காக்கிகள் டீம் அந்த வீட்டில் இருந்த கண்ணனின் வைப்பான 60 வயது சந்திராவை ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்தது. சந்திராவோ ""புதுக்கோட்டையில் என் கணவரோடும் ரெண்டு மகள்களோடும் வசித்துவந்தேன்..85 ஆம் வருசம் எங்க குடும்பத்துக்கு பழக்கமான கண்ணன்,, சில உதவிகள் செய்து எங்க மனசில் இடம்பிடிச்சார். என் மகள்களுக்கு திருமணமான பின்... என்னை என் கணவரிடமிருந்து பிரித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்துட்டார். திடீர் திடீர்னு எங்கயாவது போவார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்''’என்று கண்ணைக் கசக்கினாள். இவளது போனுக்கு அடிக்கடி கண்ணன் வருவதை அறிந்த காக்கிகள் டீம்... செல்போன் டவர்களை கண் காணித்து கண்ணனின் நடமாட்டத்தை ட்ரேஸ் செய்தது. போலீஸ் எதிர்பார்த்தது போலவே சந்திராவை செல்போனில் தொடர்புகொண்டு தகவல் சொல்லிவிட்டு... கண்ணன் தஞ்சைக்கு சீக்ரெட்டாய் வர... கண்ணனை பேருந்து நிலையத்திலேயே மடக்கிப் பிடித்தது போலீஸ்.
பக்திப் பழமாக... காவியில்... முதுமைத் தோற்றத்தில் இருந்த கண்ணன்... அடித்து விசாரிப்பதற்கெல்லாம் வாய்ப்பு தராமல் தானாகவே தனது குற்றங்களைப் பட்டியலிட... ஒருகணம் காக்கிகளே ஆடிப்போனார்கள். மிகவும் ஜோவியலாய்ப் பேச ஆரம்பித்த கண்ணன்...’’""புடவை வியாபாரம், நாய்க்குட்டி வியாபாரம்னு நிறைய தொழில் பார்த்துட்டு.. கடைசியா சித்த வைத்தியத்துக்கு தாவினேன். அதுலதான் அலுங்காம காசு பாக்கலாம். பொதுவா வயதானவங்க... தாம்பத்ய உறவில் சரியா ஈடுபடமுடியலையேன்னு ஏங்குவாங்க. இதை சாதக மாக்கி... அவங்களோட பழகி... உணர்ச்சியைத் தூண்டும் மாத்திரைகளைக் கொடுத்து அவங்களை வசப்படுத்துவேன். முடிஞ்சவரை கறந்துடுவேன். அதேபோல் குழந்தையில்லாத தம்பதிகள் வந்தா... கவுன்சிலிங் என்ற பெயரில் தனித்தனியா சந்திப்பேன். அப்ப பெண்களை சோத னைங்கிற பேர்ல கிளர்ச்சிக்கு ஆளாக்கி... மத்த ஆண் நண்பர்களை அவங்களோட இருக்க வைத்து ரசிப்பேன். சிலரை சூன்யம் வைச்சிருக் காங்கன்னு சொல்லி பயமுறுத்தி காசைப் பறிச்சிருக்கேன்.
ஒரு தரம் திண்டுக்கல் லாட்ஜில் தங்கியிருந்தப்ப.. பக்கத்து ரூமில் இருந்த ஒரு வியாபாரியை சிநேகம் பிடிச்சி... ஒன்னேகால் லட்ச ரூபாயைத் தூக்கிட்டுப் போய்ட் டேன். ஈரோட்டில் பக்கத்து ரூமில் இருந்த வியாபாரிக்கு ஒருத்தருக்குத் தூக்க மாத்திரை கொடுத்து 20 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப் புடவைகளைத் திருடினேன். ராஜபாளையத்தில் கடப்பாக்கல் வியாபாரி துளசியை பின்பக்கமாத் தாக்கி 75 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடிச்சேன். இதேபோல... ராமசாமி.. தான் கட்டும் வீட்டுக்கு டைல்ஸ் வாங்க புதுவைக்குக் கூப்பிட்டார். வழியில் ஒருவேலையிருக்குன்னு சிதம்பரத்தில் அவரோட வந்து தங்கினேன். அவர்ட்ட 2 லட்சம் கடன் கேட்டேன். தரமாட்டேன்னு சொன் னார். அதனாலதான் அவருக்கு பிராந்தி வாங்கி கொடுத்து... மயக்கத்தில் இருந்த அவரை பின் தலையில் அடிச்சிட்டு முகத்தைத் தலையணையால் அழுத்தியும் கொன்னேன். அவர் பணம் கொடுத் திருந்தா ஏன் கொல்லப்போறேன். என் வயசையும் உருவத்தையும் பார்த்து யாரும் சந்தேகப்படமாட்டாங்க. அதனால் இஷ்டத்துக்கும் ஆட்டம் போட்டுட்டேன். போலீஸ் தம்பிகளா... உருவத்தைப் பார்த்து பெருசுகளையும் நம்பாதீங்க''’என அந்த கிரிமினல் கிழவன் பேசப் பேச விசாரித்த காக்கிகள்தான் திகிலடித்துப்போனார்கள். வியூகம் அமைத்து கண்ணனைப் பிடித்த எஸ்.பி.செந்தில்வேலனோ ""கூடவே இருந்து நல்லா பழகி... நம்பிக்கையை உண் டாக்கி.. அப்புறம் கொலை கொள்ளையில் ஈடுபடற... வித்தியாசமான கிரிமினல் கண்ணன். இன்னும் கொலை கள்ல இவருக்கு சம்பந்தம் இருக்கான்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கோம்'' என்கிறார் வெற்றிப் புன்னகையோடு.

யுத்தம் 2 - நக்கீரன் கோபால்

வம்பர் 20, 2001.

தினம் தினம் நெருக்கடி செய்திகள் வந்து கொண்டே இருந்ததால், சட்டரீதியாக எதிர்கொள்வது தொடர்பாக நமது வக்கீல்களிடம் ஆலோசித்து அதற்குத் தகுந்தபடி செயல்பட்டுக்கொண்டிருந்த நேரம். மதிய சாப்பாட்டுக்காக மாலை 5 மணிக்குத்தான் வீட்டுக்குப் போயிருந்தேன். சோற்றில் கைவைத்த நேரம். ஒரு செல்போன் அழைப்பு. தம்பி சிவசுப்ரமணியனின் துணைவியார் ஜெயந்தியின் குரல் பதற்றமாக கேட்டது.""அண்ணே.. மாமாவை காலையிலிருந்து காணலை. யாரோ கடத்திட்டதா சொல்றாங்க.''சேலம் ஆத்தூரிலிருந்து அவர் பேசியதைக் கேட்டதும் என் குரலிலும் அதிர்ச்சி வெளிப்பட்டது. ""என்னம்மா சொல்றீங்க... காலையிலிருந்து காணோம்னு இப்பதான் போன் பண்றீங்க.''

""காலையில குமுதம் ரிப்போர்ட்டர் கதிரவனுக்கு ஒரு கேஸில் ஷ்யூரிட்டி கொடுக்க சேலத்துக்குப்போறேன்னு சொல்லிட்டு கிளம்பினார். அப்புறம் தகவல் இல்லை. செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்குது.வீட்டுக்குப் பக்கத்திலேயே அவரை யாரோ கடத்திட்டுப் போயிட்டதா இப்பதான் தகவல் கிடைச்சதுங்கண்ணே'' என்றார் ஜெயந்தி.



நக்கீரன் டீம் மொத்தமும் பரபரப்பானது. ஜனாதிபதியில் தொடங்கி பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மாநில கவர்னர், பிரஸ் கவுன்சில், காவல்துறை உயரதிகாரிகள் என எல்லா இடங்களுக்கும் தந்திகள் கொடுக்கப்பட்டன. பத்திரிகை நிறுவனங்களுக்கும் தொலைக்காட்சி சேனல்களுக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது. நமது வழக்கறிஞர் பெருமாள் மூலம் ஹேபியஸ் கார்பஸ் மனு போடுவது பற்றியும் உடனடியாக ஆலோசிக் கப்பட்டது. சேலம் மாவட்ட காவல்துறை, சென்னை மாநகர காவல்துறை, அதிரடிப்படை போலீசார் என பல இடங்களிலும் நாம் தொடர்ந்து விசாரித்தபடியே இருந்தோம். ""நாங்க எதுவும் அரெஸ்ட் பண்ணலையே...'' என்றுதான் ஒவ்வொரு அதிகாரியிடமிருந்தும் பதில் வந்தது. அப்படியென்றால் சிவா எங்கே? இரவு முழுவதும் நமது தேடுதல் பணி தொடர்ந்துகொண்டே இருந்தது. பதட்டமும் கூடிக்கொண்டே இருந்தது. எல்லா இடங்களுக்கும் தந்தி கொடுத்து, சிவா கடத்தப்பட்டதை பதிவு செய்தபடியே இருந்தோம். நமது தொடர் தேடலின் ஒரு கட்டமாக, ஆத்தூரில் என்ன நடந்தது என்று விசாரித்தோம்.
அன்று காலையிலிருந்தே தம்பி சிவாவின் வீட்டுக்கு சற்று தூரத்தில் ஒரு மகேந்திரா வேன் நின்றிருக்கிறது. வேனில் வந்திருந்தவர்கள் அந்த ஏரியாவுக்குப் புதியவர்கள். அக்கம்பக்கத்தில் சிவாவைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். சிவா சேலம் போவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, ஒரு ஆள் அவர் பக்கத்தில் வந்து, ஏதோ பேசிக்கொண்டே போனார். எங்கே போனார் என்ற ஒரு விவரமும் தெரியவில்லை.நவம்பர் 21-ந் தேதி பகல் பொழுது முழுக்க தேடுதல் பணியை பல வகையிலும் நீடித்தோம். அன்றைக்கு மாலையில்தான் சிவசுப்ரமணியத்தின் குரலை அவரது தாயாரும் மனைவியும் செல்போனில் கேட்டனர்.
""நான் நல்லா இருக்கேன். என்னை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. எந்த இடத்திலே வச்சிருக் காங்கன்னு எனக்குத் தெரியலை- இதுதான் சிவா சொன்ன தகவல். கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் குடும்பத்தினருக்கு முறைப்படி தெரிவிக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் சிவாவை பேச அனுமதித்திருக்கிறார்கள் போலீஸ்காரர்கள். அதைத் தொடர்ந்து ஒரு தந்தியும் சிவா குடும்பத்தினருக்கு வந்தது. அதில்தான், சிவாவை கர்நாடகப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள் என்பதும், அந்த மாநிலத்தில் உள்ள கொள்ளேகாலில் இருந்து தந்தி அனுப்பப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவந்தது. ஆனாலும், சிவாவை எங்கே வைத்திருக்கிறார்கள், என்ன நிலையில் அவர் இருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.நக்கீரன் தம்பிகள் சுப்பு, ஜெயப்பிரகாஷ், ஆத்தூர் சேகர் ஆகியோர் உடனடியாக கர்நாடகாவுக்கு விரைந்தனர்.
கர்நாடக போலீஸ் தரப்பில் அவர்கள் விசாரித்தபோது, கொள்ளேகால் சப்-இன்ஸ்பெக்டர் ஒய்.எம்.பிரசாத் காக்கிகளின் கதை சொல்லும் பாணியில் ஒரு தகவலை வெளியிட்டார். அவரும் கான்ஸ்டபிள்களும் வழக்கமான ரோந்து பணியை ஏரஹன்னஹள்ளியில் மேற்கொண்டிருந்த போது, 2 பேர் கையில் பையுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் காட்டுப்பகுதியில் போய்க் கொண்டிருந்தார்களாம். போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும் இருவரில் ஒருவர் தப்பி விட்டாராம். பிடிபட்ட இன்னொருவரிடம் விசாரணை நடத்தியபோது, தான்தான் நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் என்றாராம். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்ததாம். வீரப்பனிடம் இதைக் கொடுப்பதற்காக காட்டுக்குள் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது செய்தார்களாம். இதுதான் கர்நாடக போலீசார் சொன்ன கைது கதை.
ஆனால் உண்மையில் என்ன நடந்தது? அது, கர்நாடக போலீசார் சொன்ன கதைக்கு நேர் எதிரானது.சேலம் செல்வதற்காக, ஆத்தூர் வீட்டிலிருந்து வெளியே வருகிறார் சிவா. அடையாளம் தெரியாத ஒரு நபர் அவரிடம் வந்து, க்யூ பிராஞ்ச் டி.எஸ்.பி. முத்துசாமி உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். முத்துசாமியை சிவாவுக்கு நன்றாகத் தெரியும். ஒரு வகையில் அவருக்கு சோர்சும்கூட. அதனால், எங்கே முத்துசாமி என்று, அந்த அடையாளம் தெரியாத நபரிடம் சிவா கேட்கிறார். ""உங்க வீட்டுக்கிட்டே வர்றப்ப வண்டி பிரேக்டவுன் ஆயிடிச்சி. ஒர்க் ஷாப்பில் உட்கார்ந்திருக்கிறார்'' என்று அந்த ஆள் சொல்லியிருக்கிறார்.
சிவா வீட்டுக்குப் பக்கத்தில் நிறைய ஒர்க் ஷாப்புகள் இருக்கின்றன. அதனால், அந்த ஆள் சொன்னதை சிவா நம்பவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. அந்த ஆளுடன் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது, ஒரு சிமெண்ட் கலர் மகேந்திரா ஜீப் நிற்பதை சிவா பார்த்திருக்கிறார். ஏதோ ஒரு வண்டி என நினைத்தபடி அவர் அதை கடந்தபோது, சிவாவின் பிடரியில் சரியான அடி. அந்த ஆள்தான் அடித் திருக்கிறான். ஜீப் அருகில் அதுவரை கேஷூவலாக நின்று கொண்டிருந்த இரண்டு பேர் கூடவே சிவாவை ஜீப்பை நோக்கித் தள்ள, ஜீப் கதவுகள் சடாரென திறந்தன. உள்ளே இரண்டு பக்கமும் உட்கார்ந்திருந்த ஆட்கள், சிவாவை உள்ளே இழுத்து, ஒரு துணியை அவர் வாயில் வைத்து, கத்த முடியாமல் அடைத்து விட்டனர். ஜீப் ஆட்கள் யாரையும் சிவா அதுவரை பார்த்ததில்லை. ஜீப் உடனடியாக கிளம்ப, ஒருவன் ஒரு துணியை எடுத்து சிவாவின் முகத்தை மூடிவிட்டான். இரு கைகளையும் பின்னால் சேர்த்துவைத்து ஒரு துணித்துண்டால் கட்டி விட்டார்கள். சிவாவை ஜீப்பின் கீழே குப்புற போட்டு 4 தடி மாடுகளும் தங்கள் கால்களால் மிதித்து திமிறாமல் பார்த்துக் கொண்டனர். துண்டால் மூடியதால் சிவாவுக்கு மூச்சுத் திணற ஆரம்பித்துவிட்டது. எங்கே செத்து விடுவாரோ என்று பயந்து, கண்ணை மட்டும் கட்டி, மூச்சுவிட மட்டும் வசதி செய்திருக்கிறது ஜீப்பில் இருந்த கும்பல். எந்த திசையில் செல்கிறோம் என்ற விவரம் எதுவும் தெரியாமல் சிவா உள்ளே உட்கார்ந்திருக்க...
மகேந்திரா ஜீப் மணிக்கணக்கில் ஓடிக்கொண்டி ருந்தது.
அது போய் நின்ற இடம் .....!

அமிதாப்பின் பக்கத்து வீட்டுக்காரராகும் ஷில்பா- ராஜ் குந்த்ரா ஜோடி!

திருமணம் முடிந்த கையோடு நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் ஜூஹு கடற்கரையில் உள்ள ஜல்சா பகுதியில் கட்டப்பட்டுளள புதிய வீட்டுக்குக் குடிபோகிறார். இங்குதான் அமிதாப்பின் பிரமாண்ட வீடு அமைந்துள்ளது.லண்டன்வாசியான ராஜ் குந்த்ரா, திருமணத்துக்குப் பிறகு மும்பை க்குக் குடியேற சம்மதித்துவிட்டதில் ஷில்பா ஷெட்டி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளாராம். கொஞ்ச நாள் மும்பையிலும் பெரும்பாலான நாட்கள் லண்டனிலும் வசிக்கத் திட்டமிட்டுள்ளதாம் ஷில்பா - ராஜ் குந்த்ரா ஜோடி!மேலும் மும்பையில் மிகப் பிரமாண்டமான மாளிகை ஒன்றையும் ஷில்பாவுக்கு வாங்கியுள்ளார் ராஜ் குந்தரா. ஆனால் அந்த வீட்டில் இன்னும் அலங்கார வேலைகள் பாக்கியுள்ளன. இந்தப் பணியில் தீவிரமாக இறங்கியிருப்பவர் சூஸன். இவர் வேறு யாருமல்ல.. நடிகர் ஹிரித்திக் ரோஷனின் மனைவி!புதிய மாளிகை தயாராகும் வரை வேறு வீட்டில் குடியிருக்க முடிவு செய்த ஷில்பா ஜோடி, பிரபல தயாரிப்பாளர் வாசு பக்னானிக்குச் சொந்தமான சொகுசு அபார்ட்மெண்ட்டைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது மும்பை ஜல்ஸா பகுதியில் அமிதாப் பச்சனின் வீட்டுக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி! - -ராகுல்



""ஹலோ தலைவரே... போன ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு காலையில் சினிமா டைரக்டரும் காங்கிரஸ்காரருமான முக்தாசீனிவாசனுக்கு 80-வது பிறந்தநாள். இதில் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசிய கலைஞர், தி.மு.க-காங்கிரஸ் கூட் டணியின் முக்கியத்துவத்தைச் சொல்லி, இந்தக் கூட்டணி வலுவாக இருந்தால் இந்தியாவே வலுவாக இருக்கும்னு சொன்னார்.''


""அதே நாள் மதியம் ஒண்ணரை மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதைக் கேட்டியா?''


""கேட்டேங்க தலைவரே... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பக்கத்தில் இருக்கும் கூகளூர் பேரூராட்சி யின் காங்கிரஸ் சேர்மன் சுப்ரமணியின் பதவியை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு காலி செய்தது போன்ற சம்பவம் மற்ற பகுதிகளிலும் தொடரு மானால் சென்னை கோட்டையிலும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்னு இளங்கோவன் எச்சரிக்கை குரலில் பேசினாரு. இதிலே என்ன உண்மைன்னா, கூகளூர் பேரூராட்சியில் மொத்தம் 15 உறுப்பினர் கள். அதில் 12 பேர் சேர்மன் மேலே நம்பிக்கை இல்லைன்னு ஓட்டுப் போட்டிருக்காங்க. 15 பேரில் 6 பேர் தி.மு.க.காரங்க. 3 பேர் காங்கிரஸ்காரங்க. சொந்தக்கட்சிக்காரரில் ஒருத்தரே வாக்களிக்க வரலை.''

""ஏற்கனவே வாழப்பாடியார் நினைவு நாளில் இப்படித்தான் காரசாரமா பேசி பரபரப்பை கிளப்பினார் இளங்கோவன். குலாம்நபி ஆசாத் சென்னைக்கு வந்தப்ப இது பற்றி கலைஞர் பேசியதையும் நாம சொல்லியிருந்தோம். அதன்பிறகும் பரபரப்பு தொடருதே..''

""இளங்கோவனிடம் காங்கிரஸ்காரர்கள் சிலர் இதுபற்றி கேட்டப்ப, நானாக எதுவும் பேசலை. ராகுல்காந்தி என்ன நினைக்கிறாரோ அதைத்தான் பேசுறேன். தென்மாநிலங்களில் ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி. கேரளாவில் காங்கிரஸ் மறுபடியும் வலுவடைந்து வருவதால் அங்கே அடுத்த ஆட்சி நம்ம ஆட்சிதான். கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியிலிருந்தாலும் காங்கிரஸ்தான் பவர்ஃபுல் கட்சி. தமிழ்நாட்டில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாமல் இருக்குது. அதே நேரத்தில், இங்கே நம்ம ஆதரவில்லாமல் தி.மு.க ஆட்சி இல்லை. இதைப் பயன்படுத்தி, சட்டமன்றத் தேர்தலில் ஒரு புதுக் கணக்கு போட்டிருக்கிறார் ராகுல்னு சொல்றாராம் இளங்கோவன்.''
""சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரசுக்கு 50% சீட் ஒதுக்கணும். அதாவது மொத்த முள்ள 234 தொகுதிகளில் 117 சீட் காங்கிரசுக்கு. ஆட்சிக்கு வந்ததும் துணை முதல்வர் பதவியும் காங்கிரசுக்கு. இதுதான் ராகுலின் கணக்கு. இதை தெரிஞ்சுக்கிட்டுத்தான் நான் பேசுறேன்னு காங்கிரஸ்காரர்களிடம் சொல்லும் இளங்கோவன், நானே கூட சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து துணை முதல்வராகலாம். ராகுலின் கணக்கை தி.மு.க ஓ.கே. பண்ணணும்ங்கிறதுக் காகத்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான சி.பி.ஐ. ரெய்டெல்லாம் வேகமெடுத்ததுன்னும் சொல்றாராம்.''
""ஏற்கனவே இளங்கோவன் பேசியது சம்பந்தமா கோவையில் கலைஞர்கிட்டே பத்திரிகையாளர்கள் கேட்டப்ப, இதுபோன்ற உளறல்களுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்னு சொன்னார். தி.மு.க தரப்பிலோ, கூட்டணி-சீட்டு பற்றியெல்லாம் சோனியா மேடமும் தலைவரும்தான் முடிவு பண்ணுவாங்க. அப்ப பார்த்துக்கலாம்னு சொல்றாங்க. அதேநேரத்தில், காங்கிரசிலேயே ஒரு தரப்போ.... கலைஞரும் ராகுலும் ஒரே மேடையில் ஏறப்போவதாகவும் அப்பதான் கூட்டணி உறவின் பலம் தெரியும்னும் சொல்லுது.''
""ஆமாங்க தலைவரே... சென்னை ஸ்பென்சர் காம்ப்ளக்ஸ் பக்கத்தில் இந்திராகாந்தி சிலை வைப்பதற்காக மூப்பனார் காலத்திலேயே ஏசய்யாங்கிற வக்கீல் அனுமதி வாங்கியிருந்தார். பீடமும் கட்டப்பட்டுவிட்டது. சிலையும் செஞ்சிட்டாங்க. ஆனா, அதை இன்னும் பீடத்தில் நிறுத்தி திறந்துவைக்காமல் காலங்கடந்துகொண்டே இருந்தது. இப்ப ஜி.கே.வாசன் முயற்சியில் அந்த இடத்தில் சிலை வைக்க ஏற்பாடாகியிருக்குது. இந்த சிலை திறப்பு விழாவில்தான் கலைஞர் தலைமையில், தன் பாட்டி சிலையை ராகுல் திறந்துவைக்கவிருக்கிறார். விழாவுக்கு சோனியா வருவதைவிட ராகுல் வருவது தமிழக காங்கிரசுக்கு பலன் தரும்னு வாசன் முடிவெடுத்து, இந்த ஏற்பாட்டை செய்திருக்காராம். கலைஞரும் ராகுலும் மேடையேறப் போகும் இந்த விழா அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்குது.''
""லஞ்சம் வாங்குற அரசு ஊழியர்களை அதிரடி ரெய்டு மூலமா பிடிச்சிக்கிட்டிருந்தாரு விஜிலென்ஸ் ஏ.டி.ஜி.பி ராமானுஜம். இதனால, அரசு அதிகாரிகள் பலரும் லஞ்சத்தை நேரில் வாங்காம, அந்தக் கடையில கொடுத்திடுங்க. இந்த ஓட்டல்ல கொடுத்துட்டுப் போயிடுங்கன்னு சொல் லிக்கிட்டிருந்தாங்க. இந்த ரெய்டுகள் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஏ.டி.ஜி.பி ராமானுஜம் விஜிலென்சிலிருந்து குற்ற ஆவணக் காப்பகத்துக்கு.
மாற்றப்பட்டிருக்கிறாரே, என்ன பின்னணி?''
""விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட்டுக்கு டி.ஜி.பி.தான் ஹெட்டா இருப்பார். ராமானுஜம் ஏ.டி.ஜி.பி.ன்னாலும் அவர் தலைமையிலேயே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில், விஜிலென்சுக்கு பழைய வழக்கம்போலவே டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள போலோநாத் நியமிக்கப்பட்டார். நான் இருக்கும்போது எதற்கு இன்னொருத்தரை நியமிக்கணும்னு தலைமைச் செயலாளரிடம் முறையிட்ட ராமானுஜம், தன்னை வேறு இடத்துக்கு மாற்றச் சொன்னார். எந்த இடத்துக்குப் போகவிருப்பம்னு தலைமைச் செயலாளர் கேட்டப்ப, ராமானுஜமே தேர்வு செய்ததுதான் குற்ற ஆவணக் காப்பகம். அவர் விருப்பப்படியே அங்கே ஏ.டி.ஜி.பி.யா நியமிக்கப்பட்டிருக்கிறார்.''
""அதிகாரி மாறிட்டதால அதிரடி ரெய்டுகள்?''
""அது முன்னைவிட அதிக பாய்ச்சலோடு இருக்குமாம். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் நிம்மதியா இருக்க முடியாதுன்னு விஜிலென்ஸ் வட்டாரம் சொல்லுது. அடுத்த தகவலைச் சொல்றேங்க தலைவரே.. .. ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு மாவட்டத்துக்குப் போனால், அந்த புதுமாவட்டத்திலேயே சாதி சான்றிதழ் வாங்கிக்க லாம்னு சமீபத்தில் அரசாணை போடப்பட்டது. இதற்காக முதல்வரை சந்தித்து நன்றி சொன் னார் மூவேந்தர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார். இந்த அர சாணையை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்குப் போட வன்னியர் கூட்டமைப்பின் செயல் தலை வர் சி.என்.ராமமூர்த்தி தீவிரமா இருக்கிறார்.''
""முக்குலத்தோர் சமுதாயத்தினர் தஞ்சை, புதுக்கோட் டை போன்ற சில மாவட்டங்களில் எம்.பி.சி.ங்கிற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக் காங்க. வேறு பல மாவட்டங்களில் பிற் படுத்தப்பட்டோர் அதாவது பி.சி. பட்டியலில் இருக்காங்க. இப்ப மாவட்டம் மாறி சாதி சான்றி தழ் வாங்குவதுங்கிற பேரில் இவங்க எல்லோரும் எம்.பி.சி சர்டிபிகேட் வாங்கிட முடியும்னும், அப் படி நடந்தால் ஏற்கனவே எம்.பி.சி பட்டியலில் உள்ள சாதிகளைச் சேர்ந்தவர்கள் கல்வி- வேலை வாய்ப்புகளில் பாதிக்கப்படுவாங்கங்கிற தும்தான் வன்னியர் கூட்டமைப்பின் வாதம். அதனால்தான் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு.''""எதிர்பார்ப்பும் பரபரப்புமான ஒரு தகவலை நான் சொல்றேம்ப்பா.. ... ஈழப்பிரச்சினையில் வன் முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதா வைகோவையும் கண்ணப்பனையும் தமிழக அரசு கைதுசெய்த சம்பவம் ஞாபக மிருக்குதா. கோவையில் இருந்த கண்ணப்பனை ஃப்ளைட் டில் அழைத்து வந்து கைது செஞ்சாங்க. இந்த வழக்கில் வைகோ பெயில் போடலை. அரசுத் தரப்பில் ரிமாண்ட் எக்ஸ் டென்ஷன் கேட்கப்படாததால் அவர் வெளியே வந்தார். சட்ட நுணுக்கங்களின்படி, அவர் வழக்கில் சம்பந்தப்பட்டுத் தான் இருக்கிறார். 21-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருது. அப்ப வைகோ பெயில் பெட்டிஷன் போடணும். இல் லைன்னா மறுபடியும் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும். ம.தி.மு.க வக்கீல்கள் இதுபற்றி வைகோவிடம் சொன்னப்ப, ஜெயிலுக்குப் போவது பற்றி கவலையில்லைன்னு சொல்லிட்டாராம். போலீஸ் தரப்போ அதெல்லாம் நடக் காது என்கிறது.''
""கண்ணப்பன்?''
""இப்ப அவர் தி.மு.க.வில் இருப்ப தால், சார்ஜ் ஷீட்டி லேயே அவர் பெய ரைக் காணோம்னு சொல்றாங்க.''

லஞ்சம் வாங்காமல் வாழ்ந்து பார்


"தடக், தடக், தடக், தடக்' -பெரும் சத்தத்துடனும் கரும் புகையை வெளியிட்டபடியேயும் கோக், பெப்சி உற்பத்தி ஆலை இயங்கிக் கொண்டிருக்க "சர்ர்ரென... காற்றை கிழித்தபடி அங்கு வந்து நிற்கிறது அரசு ஜீப். பருத்தி ஆடையில் ரப்பர் செருப்பில் அதிகாரி ஒருவர் இறங்க அவரை கண்டு மிரண்ட நிர்வாகத்தினர் உள்ளூர் கவுன்சிலரிலிருந்து வெளிநாட்டு அதிகாரிகளின் பெயர்கள் வரை சொல்லி பார்க்க எதையும் சட்டை செய்யாமல் கேட்டை இழுத்து மூடி ஆலைக்கு சீல் வைத்து, மாவட்டத்தில் சாதாரண பெட்டிக்கடை உட்பட எங்கும் கோக், பெப்சி விற்கக் கூடாதென தடை விதிக்கிறார். உலகத்திலேயே முதன்முறையாக ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு சீல் வைத்து காஞ்சி புரத்தையே கலங்கடித்த அன்றைய டி.ஆர்.ஓ. அதிரடி சகாயம் தான் இன்றைக்கு நாமக்கல் கலெக்டர் "சக்சஸ்' சகாயமாகி இந்தியாவிலேயே முதல் கலெக்டராக தன் சொத்து கணக்கை வெளியிட்டு தேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
"மதுரையில் சொந்தமாக 9 லட்சத்தில் ஒரு வீடு, 7,172/- ரூபாய் வங்கி இருப்பு' இதுதான் சகாயத்தின் சொத்து. 4000 கோடி ரூபாய் பதுக்கி வைத்த மதுகோடாக்கள் தேசத்தில் இப்படியும் ஒரு அதிகாரியா? ஆச்சர்யத்தோடு "சக்சஸ்' சகாயத்தை பேட்டியெடுக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்றோம். "பேட்டியா? ப்ளீஸ் அதெல்லாம் வேண் டாமே?' என மறுத்தவரை எப்படியோ பேசி ஒப்பக்கொள்ளவைத்து "வாழ்த் துக்கள்' சொல்லி "உங்கள் சொத்து விவரங்களை சொல்லுங்கள்' என் றோம். "மதுரையில் என் மனைவிக்கு அவங்க அப்பா 9 லட்சத்தில் வாங்கித் தந்த ஒரு வீடு உள்ளது. அதற்கு எல்.அய்.சி. லோன் ஏழரை லட்சம் இருக்கு. மாத தவணையாக ரூ.8,500/- கட்டி வருகிறோம். அதில்லாமல் வங்கியில ரூ.7,172/- இருப்பு இருக்கு.

பொது வாழ்வில் இருப்போர் தங்களது சொத்து விபரங்களை வெளியிடவேண்டும் என்ற கருத்து வலுவான பின்தான் நீங்கள் வெளியிட துணிந் தீர்களா?

சகாயம்: இல்லை. அப்படியில் லை. வருடம் ஒருமுறை அசையா சொத்துக்களை ஒவ்வொரு கலெக்டரும் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டு மென்பது அரசு விதி. கடந்த மாதம் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. அக்கூட்டத்திலேயே இதை வெளியிட்டேன். அத் தோடு சேர்த்து என் வங்கி இருப்பையும் வெளி யிட்டு அதை அப்பொழுதே எங்கள் மாவட்ட நிர்வா கம் பற்றிய இணையதளத்தில் வெளியிட்டுவிட்டேன்.

இதை வெளியிடும் நோக்கமென்ன?
சகாயம்: மக்கள்தான் நம் எஜமானர்கள். மக்களின் நம்பிக்கையை நாம் பெற்றாக வேண்டும். அதற்கு நாம் மக்கள்முன் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதிகாரிகள், அரசு அலுவலர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையென்று ஒன்று கிடையாது. அவர்கள் மக்களில் ஒருவரே. மக்களுக்கான அவர் பணியில் மக்கள் முன் ஒளிவு மறைவில்லாமல் இருக்க வேண்டி என் கணக்கை வெளியிட்டேன்.
ஆனால் கடனில் ஒரு வீடு, 7,172 ரூபாய் பேங்க் பேலன்ஸ் என்பது நம்ப முடியவில்லையே?
சகாயம்: "ஹா ஹா ஹா' (சிரிக்கிறார்) பின், தொடர்ந்து... இவையில்லாமல் வேற சொத்துக்கள் என் பெயரிலோ, குடும்பத்தின் பெயரிலோ இருப்பதாக யாராவது கண்டுபிடித்தால் அதை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும்.
நேர்மையாக இருந்தால் சராசரியாக தான் இருக்க முடியுமா?
சகாயம்: ஆம் அதிலென்ன சந்தேகம். ஆடம்பரமாக இருக்க முடியாது. ஆனால் அழகான வாழ்க்கையாக இருக்கும். ஆசைக்கான வருமா னத்தை அமைத்துக் கொள்வதை விட தேவைக் கான வருமானம், அந்த வருமானத்திற்குள்ளேயே வாழ்க்கையை அமைத்து கொள்வது நமக்கு மனநிம்மதியை தரும். என் 20 வருட அனுபவம் இதுவே. இதுவே யதார்த்தனமானது.
நேர்மையாக இருக்க யார் இன்ஸ்பிரேசன்?
சகாயம்: என் அம்மாவும் என் துணைவி யும்தான். விவசாயம் செய்யும்போது வரப்புக்கு அருகே ஒரு அங்குல புறம்போக்கு இடமிருந்தா கூட அதை பயன்படுத்த மாட்டாங்க எங்கம்மா. "எது நமக்கு உரியதோ அதை மட்டுமே நாம் அனுபவிக்க வேண்டும்' எங்கம்மா சொல்லிக் கொடுத்தது. அப்புறம் என் துணைவி. 2003-ல என் குழந்தை யாழினிக்கு பயங்கர வீசிங் பிரச்சனை. மருத்துவமனையில சேர்க்கிறோம். அப்ப நான் கோவை கலால் துறையில டெபுடி கமிஷனரா இருக் கேன். யாழினி சீரியசா இருக் காள். நாலாயிரம் ரூபாய் கட்டணும். மாத கடைசிங்கற தால சுத்தமா பணமில்லை. என் துணைவி ஆஸ்பிடல்ல துடிச்சிக்கிட்டு இருக்காள். அக்கம்பக்கத்தில் உள்ளவங்களோ "உங்க வீட்டுக்காரர்தானே கலால் துறையில இருக்காரு. சிக்னல் காண்பிச்சாலே பிராந்தி கடைக்காரங்க லட்சம் ரூபாயினாலும் வந்து கொட்டிடுவாங்களே'னு சொன்னாங்க. ஆனா என் துணைவியோ "லஞ்சப் பணத்தில் என் குழந்தை உயிரோடு வாழ்றதை விட இங்கே சாவுறது பெரிய சுமையில்லை'னு சொன்னாங்க. என் கொள்கைக்கேற்ப துணைவி கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. அப்புறம் ஆசிரியர் நண்பர் ஒருவரிடம் கடன் பெற்று குழந்தையை காப்பாற்றினோம்' எனும்போதே ""ஆனா சாருக்கு கோபம்தான் ஜாஸ்தி'' என்றபடியே தேநீர் கொடுத்து உபசரித்த கலெக்டர் மனைவி விமலா, ""போனவாரம் மதுரைக்கு குடும்ப விழா ஒன்றுக்கு என்னை போக சொன்னாரு. பஸ் ஏறி ஸ்டேன்டிங்க்ல போறேன். கொஞ்ச நேரத்திலேயே போன் செய்து "இன்னும் அங்கு போய் சேரலையா'னு கோபமா பேசுறாரு. கூட்டம் அதிகம்ங்கிறதால பஸ் மெதுவா போனதுக்கு நான் என்ன செய்வேன்' முகம் சுருக்க "சரிம்மா நம்ம நக்கீரன். முன் னாலேயே சுயவிமர்சனம் செய்து வருத்தம் தெரிவிச்சுக்கிறேன் போதுமாம்மா' வேடிக்கையாக கேட்டவர் தொடர்ந்து ""If you have Power, use it for Poor' அதாவது "உனக்கு அதிகாரம் இருந்தால் அதனை ஏழைகளுக்கு பயன்படுத்து' என்பதுதான் என்னுடைய கொள்கை. அந்தடிப்படையிலேயே நானும் நேர்மை யோடு என் பணியை தொடர்கிறேன்'' என்றார் சிந்திக்கும்படி.உண்மைதான். ஒருபக்கம் நாள் ஒன்றுக்கு ஒருவேளை உணவு கூட சரியாக கிடைக்காமல் 45 கோடி மக்கள் இருக்கும் வறுமை இந்தியா. மறுபக்கம் 4000 கோடி பதுக்கல் செய்யும் ஊழல்வாதிகளின் வளமை இந்தியா -சகாயம் போல ஒவ்வொரு குடிமகனும் நேர்மையோடு செயல்பட்டால் வறுமை ஒழிந்த "சமத்துவ இந்தியா'வாக தேசம் ஒளிருமே!


இஞைர்கள் வேட்டை! களத்தில் குதித்த கட்சிகளின் காட்சிகள்!

2011 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளை இப்போதே துவக்கிவிட்டன அரசியல் கட்சிகள். களப்பணியின் முதன்மைப் பணியாக, இளைஞர்களின் ஆதரவை திரட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றன அத்தனை கட்சிகளும்!
இளைஞர் காங்கிரசின் உறுப்பினர் எண்ணிக்கை யை அதிகரிப்பதற்காகவே தமிழகத்தில் 3 நாள் அதிரடி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் ராகுல் காந்தி. இளைஞர்களை அதிக அளவில் அ.தி.மு.க. பக்கம் இழுப்பதற்கான அஜெண்டாவோடு மாவட்டம் தோறும் இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் கூட்டத்தை நடத்தி வருகிறார் டாக்டர். வெங்கடேஷ். புதிய தலைமுறை இளைஞர்கள் ம.தி.மு.க.வை விரும்புகிறார்கள் என்ற நம்பிக்கை யோடு 100 நாள் பயணத்திட்டத்தை வகுத்திருக்கிறார் வைகோ. மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தீவிர உறுப்பினர் சேர்க்கையை ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடத்தி முடித்ததோடு மேலும் உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வருகிறது. ஜனவரி முதல் கிராம சுற்றுப்பயணத் திற்கு திட்டமிடும் பா.ம.க.வின் டாக்டர் அன்புமணியும் பெரிய அளவில் இளைய தலைமுறையை ஈர்க்கும் எண்ணத்திலேயே களம் இறங்குகிறார். ஆளும் கட்சியான தி.மு.க.வின் பக்கம் இளைஞர்களின் ஆதரவை திருப்ப அதிரடி திட்டத்தோடு தயாராகி வருகிறார் இளைஞர் அணியின் செயலாளரான ஸ்டாலின்.
இந்த தலைமுறை இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வமே குறைவுதான். அவர்கள் அரசியலை வெறுக்கி றார்கள் என்கிற பொதுக்கருத்து உருவாகியுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் “இளைஞர்கள் ஈர்ப்பு’’ முயற்சிக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வில் இருந்து உற்சாகமாகவே வருகிறது பதில். ""இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் இதுவரை 38 லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள். கிராமப்புற இளைஞர்கள், நகர்ப் புற இளைஞர்கள் என்று எல்லோருமே அம்மாவின் தலை மையை ஏற்க ஆர்வத்துடன் வருகிறார்கள்''’என நம்மிடம் உற்சாகமாக பேசுகிறார் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ். கூடவே, ""தமிழக இளைஞர்களிடம் இப்போதும் அண்ணா ஊட்டி வளர்த்த இன உணர்வும், மொழி உணர்வும் இருப்பதை உணர முடிகிறது. இந்த தலைமுறை இளைஞர்களிடம் விழிப்புணர்வும் அதிகம். குடும்ப அரசியலுக்கு எதிராக பேசுகிறார்கள். ஈழப் பிரச்சனை உள்ளிட்ட பலவற்றில் காங் கிரஸ் கட்சியை நிராகரிப்பதாக சொல்கி றார்கள். இலவச டி.வி. வழங்குவதை, இடியட் பாக்ஸ் கொடுத்து மக்களை முட்டாளாக்கு கிறது ஆளும் கட்சி என்று ஒரு இளம் பெண் மேடையில் பேசுகிறார்'' என்கிறார் டாக்டர் வெங்கடேஷ்.
குறைந்த பட்சம் 5 லட்சம் உறுப்பினர் களையாவது இளைஞர் காங்கிரசில் சேர்த்து விட வேண்டும் என்ற டார்கெட்டோடு தமி ழகத்தில் களம் இறங்கியது ராகுல் டீம். பாண்டிச்சேரியில் சுமார் 1 லட்சம் உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டதும் அந்த உறுப்பினர் களில் 90 சதவீதத்துக்கு மேலானவர்கள் கடந்த எம்.பி.தேர்தலில் காங்கிரசுக்கே வாக்களித்ததும் ராகுலுக்கு உற்சாக டானிக்காக இருந்ததாம். பாண்டிச்சேரியைப் போன்று தமிழகத்திலும் காங்கிரசுக்கு இளைஞர் சக்தியை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டாராம்.
’ராகுல்ஜியின் சுற்றுப்பயணத்திற்கு பிறகு இளைஞர்கள் அதிக அளவில் இளை ஞர் காங்கிரசில் உறுப்பினர் ஆனார்கள். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தமிழக இளைஞர் காங்கிரசில் இணைந்திருப்பதால் உற்சாகமாகியிருக்கிறோம். தமிழகத்தில் திராவிடம் மட்டுமே இளைஞர்களை ஈர்க்க முடியும் என்கிற நிலையை மாற்றியிருக்கிறார் ராகுல்ஜி'' என்று வெங்கடேஷின் கருத்தை மறுக்கிறார் இளைஞர் காங்கிரசின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான ஜோதி.
""கேப்டனுக்கு இருக்கும் இளைஞர்கள் ஆதரவை சென்ற ஆண்டு நாங்கள் நடத்திய இளைஞரணி மாநாட்டின் மூலம் அனைத்து கட்சியினரும் தெரிந்துகொண்டார்கள். 2006 தேர்தலில் 12 நாட் களுக்கு முன்புதான் எங்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. குறை வான நாட்களில் எங்கள் சின்னத்தை பிரபலப்படுத்த எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலம் பரப்பியது படித்த, நகர்ப்புற இளைஞர்கள்தான். இப்போது கட்சியின் உறுப்பினர்களாக 75 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் அதிகம் பேர் இளைஞர்கள்தான். அந்த வகையில் மற்ற கட்சிகளை விட எங்களிடமே அதிக இளைஞர்கள் இருக்கிறார்கள்''’ என்று அழுத்தமாக சொல்கிறார் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் சுதீஷ்.
மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கண்ணன் பேச்சிலும் உற்சாகம் தெரிகிறது. ""ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தியபோது 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் சேர்ந்திருக்கிறார்கள். அதன் பிறகும் உறுப்பினர் சேர்ப்பு தொடர்கிறது'' என்றவர், ""எங்கள் கட்சி மாஸ் கட்சி அல்ல. கேடர் பேஸ்டு கட்சிதான். அதே நேரத்தில், மத்திய-மாநில அரசுகள் மீது அதிருப்தியில் இருக்கும் இளைஞர்களும் எங்கள் மீது நம்பிக்கையோடு வருகிறார்கள். எங்கள் உறுப்பினர்கள் யாரும் வேறு கட்சியில் இருக்க மாட்டார் கள். மற்ற கட்சிகளில் அப்படி அல்ல''’ என் கிறார் கண்ணன்.
பா.ம.க. இளைஞரணி கடந்த ஆண்டே மாவட்டம் தோறும் மாநாடுகள் நடத்தி, தரமான கட்டாயக்கல்வி, தனியார் துறை இட ஒதுக்கீடு, ரசிகர் மன்றங் களை கைவிடுதல் உள் ளிட்ட 10 அம்ச உறுதிமொழி யை தங்கள் இளைஞர்களை எடுக்க வைத்தார் டாக்டர் அன்பு மணி ராமதாஸ். ""இப்போது நடைபெறும் உறுப்பினர் சேர்க் கையில் லட்சக்கணக்கான பேர் இளம்பெண்கள் அணியிலும், இளைஞர் அணியிலும் சேர்ந்து வருகிறார்கள்'' என்கிறார் பா.ம.க. இளைஞரணி செயலாளர் அறிவுச் செல்வன்.
""லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்த்திருக்கிற கட்சியாக நாங்கள்தான் இருக்கிறோம். இளைஞர்களை எழுச்சி பெற வைக்கும் தலைவராக தோழர் திருமா இருக்கிறார்'' என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எம்.எல்.ஏ.ரவிக்குமார். மற்ற கட்சிகளின் இளைஞர்கள் எண்ணிக்கை இப்படி இருக்க ஆளும்கட்சியான தி.மு.க.வின் இளைஞரணி துணை செயலாளரான வக்கீல் அசன்முகமது ஜின்னா,’""எங்கள் கட்சி யில் சுமார் 45 லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள். 2007ம் ஆண்டு நடந்த இளைஞரணி மாநாட்டுக்கு பிறகு மேலும் உத்வேகத்தோடு செயல்படுகிறது இளைஞரணி. துணை முதல்வர் ஸ்டாலின் பெயரில் செயல்படும் இணைய தளத்தில் மட்டுமே 15 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருமே இளைஞர்கள்தான். படித்த இளைஞர்கள் மத்தியிலும் எங்கள் தளபதிக்கு ஆதரவு அதிகம் என்பதற்கு இதுவே உதாரணம்'' என்கிற ஜின்னா, ""தர்மபுரியில் இளைஞரணி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை முதல்வரிடம் மனு ஒன்றை கொடுத்தார் பள்ளி மாணவி ஒருவர். அந்த மனுவில் தங்கள் பள்ளியை தரம் உயர்த்த 2 லட்ச ரூபாய் வேண்டும் எனக் கோரியிருந்தார். அந்த பணத்தை இளைஞரணி மூலம் உடனடியாக கட்ட வைத்து பள்ளி யின் தரம் உயர நடவடிக்கை எடுத்தார். அதே போல, குற்றாலத்தில் எம்.பி.பி.எஸ். படிக்க உதவ வேண்டும் என்று மனு கொடுத்த மாணவனின் விருப்பத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார். அந்த மாணவனின் ஆசிரியர்களை தொடர்பு கொள்ளச் செய்து, அந்த மாணவரின் படிப்பு குறித்து விசாரித்தார். அந்த மாணவனின் கல்வி செலவு உள்ளிட்டவற்றை தொடர்ந்து கவனிக்க இளைஞரணி பொறுப்பாளர் ஒருவரை நியமித்தார். இவையெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலதான்'' என்று உதாரணங்களை அடுக்கினார் ஜின்னா.
கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு கவிஞர் கனிமொழி நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் இதுவரை 54 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது எனக் குறிப்பிடும் தி.மு.க.வினர், இதன் மூலமும் நிறைய இளைஞர்கள் தி.மு.க. பக்கம் ஈர்க்கப்படுவதாக சொல்கிறார்கள்.2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள்தொகையில் 2.88 கோடி இளைஞர் கள். இப்போது அந்த எண்ணிக்கை மூன்றரை கோடியாக உயர்ந்திருக்கலாம் என்கிறார்கள் சர்வே துறையினர். முக்கிய கட்சிகளின் கூற்றுப்படி 2 கோடிக்கு மேலான இளைஞர்கள் அரசியல் கட்சி களில் உறுப்பினர்களாக இருப்பதாக தெரியவருகிறது.முக்கிய கட்சிகளின் இளம் தலைவர்கள் சொல்வது எவ்வளவு தூரம் உண்மை?இன்றைய தலைமுறை, அரசியலில் ஆர்வமாக இருக்கிறதா? எந்த கட்சியை பெரும்பான்மை இளை ஞர்கள் ஆதரிக்கிறார்கள்? இளைய தமிழகத்தை கவர்ந்த இளம்தலைவர் யார்? என்பது போன்ற கேள்வி களுடன் நக்கீரன் சர்வே டீம் களமிறங்கியுள்ளது.இளைய தலைமுறையினரின் அரசியல் பார்வை நமது டீமிற்கு பல ஆச்சர்யங்களை கொடுத்து வருகிறது. நக்கீரன் சர்வே முடிவுகள் வரும் இதழில்...

சரியும் சாம்ராஜ்யம்! - ஜெகத் கஸ்பர்

ழம் வருமா? வரும். எங்ஙனமென்பதை இவ்விதழில் விவாதித்து விவரிப்பதாயிருந் தோம். இடையில் அரங்கேறிய ராணுவத் தளபதி சரத் பொன் சேகா தொடர்பான அதிரடிக் காட்சிகள் முக்கிய சில செய்தி களை சொல்லிச் செல்வதால் முதலில் அதனைப் பார்ப்போம்.காட்சிச் சுருளை சற்று பின்னோக்கி ஓடவிட்டு இயக்கு வோம். தமிழரை அழித்த போருக்கு களத்தில் தலைமை ஏற்றிருந்தவர் சரத் பொன்சேகா. போர் வெற்றியின் முழுப் பெருமை யினையும் ராஜபக்சே-கோத்த பய்யா சகோதரர்கள் அரசிய லாக்கி அபகரிக்க, உள்ளுக்குள் ராஜபக்சே சகோதரர்களுக்கும் பொன்சேகாவுக்கும் உரசல் என அரசல் புரசலாய் செய்திகள் வந்தன. செய்திகளை உண்மை யாக்கும் வண்ணம் ராணுவ தலை மைத் தளபதி பதவி பொன் சேகாவுக்கு நீட்டிக்கப்படவில்லை. இது நடந்த அக்டோபர் மாதத் தில்தான் இலங்கையில் ராணுவப் புரட்சி வெடிக்கக் கூடுமென்ற அச்ச அதிர்வலைகள் எழுந்து இந்திய ராணுவத்தின் உதவியை ராஜபக்சே அக்டோபர் 15-ம் தேதி வேண்டியதாக பொன்சேகா இப்போது குற்றம் சாட்டியுள்ளார்.
இதே காலகட்டத்தில் சிறப்பு இந்திய கமாண்டோக்கள் ஏதோ கொழும்பு நடவடிக்கைக்காக ஆயத்தமாய் வைக்கப்பட்டிருந்த செய்திகளும் அப்போது உலவின.இப்பின்னணியில் பொன் சேகா அதிபர் தேர்தலில் போட்டி யிடக் கூடுமென்ற செய்திகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட் பாளராக அவர் நிறுத்தப்படும் சாத்தியப்பாடுகளும் விவாதிக்கப்பட, கொழும்பு அரசியற் களம் சூடேறத் தொடங்கியது. அமெரிக்க குடி யுரிமையும் கூடவே கொண்ட பொன்சேகா திடீரென அமெரிக் காவில் வாழ்ந்து வரும் தனது மகளை சந்திக்கப் புறப்பட்டதும், அங்கு அவரை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து "சம்மன்' இல்லாமலேயே விசாரிக்க அமெரிக்க தேச பாது காப்பு பிரிவு விருப்பம் தெரி வித்ததும் வெப்ப நிலையை மேலும் சூடேற்றின.

விசாரணை எதையும் சந்திக் காமலேயே சரத் பொன்சேகா கொழும்பு திரும்பினார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் முக்கிய அமெரிக்க அதிகாரிகள் அவரைச் சந்தித்தனர் என்றும், அமெரிக்கா அறிய விரும்பிய முக்கிய சில செய்திகளை அவர் சொல்லிவிட் டார் என்றும் இப்போது தெரிய வருகிறது. இந்நிலையில் ராணுவ அமைப்பில் இப்போது பொன்சேகா வகித்து வரும் முதன்மை அதி காரி என்ற பதவியிலிருந்தும் அவரை விடு வித்து அதிபர் ராஜபக்சே கடந்த சனிக்கிழமையன்று கடிதம் எழுத, அவசர கதியில் இந்திய அரசின் இரண்டாம் நிலையில் இருக்கும் பிரணாப் முகர்ஜி அவர் கள் கொழும்புக்குப் புறப்பட, இலங் கை அரசியல் உலகின் கூர்த்த கவ னம் பெற்றது.
மேற்குலக நாடுகளின் அரசியல்-ராஜதந்திர முற்றுகை இறுக்கத்திலிருந்து ராஜபக்சே சகோதரர்களை காப்பாற்றும் நோக் குடன் பிரணாப் முகர்ஜி புறப்பட் டாரா, இல்லை சர்வாதிகாரிகளாய் கொக்கரித்தவர்கள் பலவீனப்படுகிற தருணத்தை பயன்படுத்தி அரசியற் தீர்வு முயற்சிகளை துரிதப்படுத்தும் வாய்ப்பு தேடிச் சென்றாரா என்பது ராஜதந்திர வட்டங்களில் ஒருபுறம் விவாதிக்கப்பட, வந்திறங்கியபின் முதல் நிகழ்வாக அவர் ஆற்றிய லக்ஷ்மண் கதிர்காமர் நினை வுரையில் "அரசியற் தீர்வுக்கான வரலாற்றுத் தருணமும் வாய்ப்பும் இது' என வலியுறுத்திக் குறிப்பிட்ட தும் கவனிக்கப்பட்டது.இதற்கிடையில் ராஜபக்சே அரசும் தனியார் நிறுவனங்களும் நடத்தியுள்ள ஆய்வுகளில் சரத் பொன்சேகா எதிர்கட்சிகளின் ஆதரவின்றித் தனித்து நின்றாலே சராசரி 22 சத வாக்குகள் பெறு வார் என்பதும், குறிப்பாக இலங்கை சமூகத்தில் சக்திமிக்க பௌத்த பிக்குமாரின் பெருவாரியான ஆதரவு அவருக்கு இருப்பதும், போர் வெற்றி யின் நாயகனாக சாதாரண சிங்கள மக்கள் சரத் பொன் சேகாவைத்தான் பார்க்கிறார்களென்ப தும் தெரிய வந்துள் ளது.
இந்தப் பின்ன ணியில்தான் 2012-ம் ஆண்டு நடைபெற வேண்டிய அதிபர் தேர்தலை வரும் ஆண்டு ஏப்ரல் மாதமே நடத்தலாம் என முன்னர் ராஜபக்சே செய்திருந்த முடிவினை இப்போது மறுபரிசீலனை செய்யும் செய்திகளும் வந்திருக்கின்றன. கடந்த ஞாயிறு தனது கட்சியின் மாநாட்டில் ஏப்ரல் மாதம் தேர்தல் என அறிவிப்பதாய் முன்னர் முடிவு செய் யப்பட்டிருந்தது. இப்போதோ தேர்தல் அறிவிப்பு உரிய நேரத்தில் வரும்'' என ராஜபக்சே சமாளித்துள்ளார்.வரலாறு நெடுகிலும் நாம் தரிசிக்கும் மகா மன்னர்களின் குப்பைமேடுகளும், சரிந்த சாம்ராஜ் யங்களின் இடிபாட்டுச் சிதறல்களும் கொஞ்ச நஞ்சமல்ல. முள்ளிவாய்க் கால் கொடுமை நடந்த வாரத்தில் -வரலாறு ஓர் சுழல் வினை -சாம்ராஜ் யம் சரியும்- அதிகார போதையின் உச்சகட்ட கிறக்கத்தில் நிற்கும் ராஜபக்சே சகோதரர்களை யதார்த்த உண்மைகள் ஒருநாள் நிச்சயம் சுற்றி வளைக்குமென எழுதியிருந்தோம். இத்துணை விரைவில் அது நடக்குமென நினைக்கவில்லை.
ஏதோ உலக மகா சரித்திர புருஷர்கள் போல் தமிழர் இன அழித்தலை கொக்கரித்துக் கொண்டாடிய ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா மூவரையும் திருவிழாக்கூத்தின் வித்தியாசமான பரமபத மரண விளையாட்டில் மேற்குலக நாடுகள் எப்படி எலி-பூனைகளாக மணி கட்டி ரசமான வேடிக்கை ஜீவராசிகளாக இறக்கி விட்டிருக்கின்றன என்பதை உன்னிப் பாய் கவனித்தால் உலக அதிகார ஒழுங்கு எவ்வாறெல்லாம் இயங்க முடியும், அந்த உலக அதிகார ஒழுங்கினை தமிழர்கள் தம் நலன் களுக்காய் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற சூட்சுமங்கள் புரியும்.சாமான்யமானதோர் அரசியல் விஞ்ஞான மாணவனாய் எனது அவதானங்களும், அவற்றினடிப்படையிலமைந்த அனுமானங் களும் இவை: ஆனையிறவு வெற்றி யின் உச்சியில், நின்ற விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை வளை யத்திற்குள் இந்தியா மற்றும் அமெரிக்க மேற்குலக நாடுகள் உந்தித் தள்ளியதில் பல பிராந்திய வல்ல மைக் கணக்குகள் இருந்தன. ஆனால் அவற்றினூடே தமிழ் மக்க ளுக்கு அதிகபட்ச அரசியல் உரிமை களை உறுதி செய்யும் ஓர் ""கூட் டாட்சி ஏற்பாட்டினை'' உருவாக்க வும், அதன் முதன்மை நாயகர் களாய் விடுதலைப் புலிகளை ஏற் றுக் கொள்ளவுமான முடிவுகளும் மேற்குலக நாடுகளைப் பொறுத்த வரை இருந்தன.
அமைதிப் பேச்சு வார்த்தைகளின் காலத்தில் அமெ ரிக்க பயங்கரவாத இயக்கம் எனத் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அன்டன் பாலசிங்கம் அவர்களை அவரது லண்டன் இல்லத்திற்கே சென்று அதே அமெரிக்காவின் தென் ஆசியாவிற்கான அரசியற் செயலர் ரிச்சர்ட் அர்மிடாஜ் சந்தித்தது மிக முக்கியமான நிகழ்வு. அதுபோலவே இப்போதைய அமெரிக்க வெளி யுறவுச் செயலர் ஹிலாரி கிளிண் டன் அவர்களின் கடந்த 15 ஆண்டுகால ஈழத்தமிழர் பிரச் சனை தொடர்பான உரைகளையும், நேர்காணல்களையும் நோக்கினோ மென்றால் ஒரு தருணத்தில் கூட தமிழ் மக்களின் அரசியற் போராட்டத்தை பயங்கரவாதமாக அவர் தீர்ப்பிட்டதில்லை. விடுதலைப் புலிகளை வன்முறை- பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் இயக்கமாகக் குறிப்பிடும் அவர் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் நியாயங்கள் உண்டு, அவர்களது போராட்ட நியாயங்களுக்குப் பதில் தரப்பட வேண்டுமென்றே கூறி வந்திருக் கிறார். இந்த அணுகுமுறையின் தெளிவான தொடர்ச்சியை இன்றும் அமெரிக்க-மேற்குலக நாடுகள் அதனிலும் தெளிவாக வலியுறுத்துகின்றன. செய்தி இதுதான்: ""விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாக நாங்கள் பட்டியலிட்டாலும் தமிழர்களின் நீண்ட அரசியற் சிக்கல் பயங்கரவாதமல்ல. அதற்கு அரசியற் தீர்வு ஓர் கூட்டாட்சி ஏற்பாடாக காணப்பட வேண்டும்''.போருக்குப் பின் ராஜபக்சே சகோதரர்கள் காட்டிய ஆணவமும், அப்பட்டமான தமிழ் இன வெறுப்பு அணுகுமுறையும் மேற்குலக நாடுகளை கோபப்படுத்தியுள்ளன. இப்போதைய தென் ஆசியாவுக் கான அமெரிக்காவின் வெளி யுறவுச் செயலர் ராபர்ட் பிளேக்ஸ் ராஜபக்சே சகோதரர்களை மண்டியிட வைக்கும் வியூகங்களை வாஷிங்டனில் இருந்துகொண்டு வகுக்கிறார்.
இந்த ராபர்ட் பிளேக்ஸ் முன்னர் இலங்கையில் அமெரிக்காவுக்கான தூதராக இருந்தார். ராஜபக்சே சகோதரர் களை- குறிப்பாக கோத்த பய்யாவை போர்க்குற்றவாளியாக கூண்டில் நிறுத்த வேண்டுமென்பதில் குறியாக இருப்ப வரும் இவர்தான் எனக் கூறப்படு கிறது.காரணம் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த நடேசன்- புலித் தேவன் படுகொலை. இந்த உண்மை நார்வே நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றிற்கு முன்னாள் அமைதி பேச்சு வார்த்தையாளர் எரிக்சோல் கெய்ம் வழங்கிய செவ்வியில் வெளிப்பட்டுள்ளது. நடேசன்-புலித்தேவன் சரணடைதல் பேச்சுவார்த்தை களை இலங்கை அதிபர் -இந்தியத் தலைவர்கள் -ஐ.நா. அமைப்புகள் -புலித்தேவன் என நான்கு முனையிலும் ஒருங் கிணைத்ததுதான் என்பதை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தி பதிவு செய்துள்ளார் எரிக்சோல் கெய்ம். தென் ஆசியாவுக்கான அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ராபர்ட் பிளேக்ஸ்தான் எரிக்சோல்கெய்மை அதில் வழி நடத்தியிருக்கிறார். அவரது உத்தர வாதத்தின்பேரில்தான் சரணடையும் அறிவுறுத்தல் புலித்தேவனுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக புலித்தேவனுடன் கடைசியாக நடந்த தொலைபேசிப் பதிவையும் எரிக் சொல் கெய்ம் வெளிப்படுத்தி யுள்ளார். வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சென்ற நடேசன், புலித் தேவன் உள்ளிட்ட சுமார் 17 பேரை படுகொலை செய்ய உத்தரவிட்டது கோத்தபய்யா ராஜபக்சே. இதனை மன்னிக்க ராபர்ட் பிளேக்ஸ் தயாராக இல்லை.வாஷிங்டனிலிருந்து நமக்கு கிடைக்கிற முக்கிய தகவல்கள் இவை: ""சரத் பொன்சேகா அமெ ரிக்கா செல்லவில்லை, வர வழைக்கப்பட்டார். நடேசன்-புலித் தேவன் படுகொலை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. கோத்தபய்யா உத்தரவில் அது நடந்ததென்றும், படுகொலை நடந்து பத்து நிமிடங்களுக்குப் பின்னரே தனக்கு அதுபற்றித் தெரிய வந்ததாகவும் வாக்குமூலமும் கூறியுள்ளார் பொன்சேகா. சரத் பொன் சேகாவை அதிபர் தேர்தலில் போட்டியிடும்படி அறிவுறுத்தியதும் -உண்மையில் உத்தரவிட்டுள் ளதும்- அமெரிக்காதான் என்றும் தெரிய வருகிறது. கோத்தபய்யா வுக்கெதிராய் வாக்குமூலம் தரவில்லையெனில் அமெரிக்க குடிமகனென்ற வகையில் அவர் மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு எங்கு வைத்து வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்பட முடியு மென்றும் எச்சரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ""எங்கு வைத்து வேண்டுமானாலும் எங்களால் உங்களை கைது செய்ய முடியும்'' என்ற எச்சரிக்கைதான் அவரை வழிக்குக் கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.இதற்கும் வேறு பின்னணி கள் உள்ளது. அவை...!

பிரபல நடிகைக்கு ஆபாச மிரட்டல்: கமிஷனரிடம் புகார்

செல்போனில் தனக்கு அடிக்கடி ஆபாச மிரட்டல் வருவதாக நடிகை சி.ஆர்.சரஸ்வதி சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்துள்ளார்.
தமிழில் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி. அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். இவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் சி.ஆர்.சரஸ்வதி கூறியிருப்பதாவது, கடந்த சில தினங்களாக மர்ம நபர் ஒருவர் எனது செல்போன் எண்ணுக்கு போன் செய்து ஆபாசமாக பேசி வருகிறார். யார்? என்று கேட்டால் மிரட்டும் வகையில் பேசி வைத்து விடுகிறார். நேற்று முன் தினம் செல்போனில் மீண்டும் பேசிய போது, தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டல் அறைக்கு வர சொல்லி ஆபாசமாகவும், அறுவெறுக்க தக்க வகையிலும் பேசினார். நான் அவரிடம் என் செல்போன் நம்பர் எப்படி கிடைத்தது? பேசுவது யார்? போலீசில் புகார் செய்வேன் என்றேன். அதற்கு அவர் வெறோரு செல்போன் நம்பரை கொடுத்து அந்த நபர் தான் பேச சொன்னார் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அந்த நபர் தந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். எதிர்முனையில் ஒரு பெண் போனை எடுத்தார். மேற்கண்ட விவரத்தை கூறினேன். அதற்கு அவர் இதே போல் சில தினங்களாக ஒரு நபர் என்னிடம் ஆபாசமாக பேசி மிரட்டி வருகிறார். அவர் யாரென்று தெரியவில்லை என்று தெரிவித்தார். இதனால் என்னிடம் செல்போன் மூலமாக ஆபாச மிரட்டல் விடும் நபர் ஏராளமான பெண்ணிடம் இது போல் சில்மிஷ பேச்சு பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.

இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்


இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 32 பில்லியன் டாலர் ஆகும். இரண்டாவது இடத்தில் லட்சுமி மிட்டல்( 30 பில்லியன் டாலர்), 3 வது இடத்தில் அனில் அம்பானி (17.5 பில்லியன் டாலர்) உள்ளனர். 4 வது இடத்தில் அசிம் பிரேம்ஜியும் (14.9 பில்லியன் டாலர்), சசி & ரவி ரூயா(13.6 பில்லியன் டாலர்) 5 வது இடத்திலும் உள்ளனர். கே.பி.சிங் (13.5 பில்லியன்), சாவித்ரி ஜிண்டல் (12 பில்லியன்), சுனில் மிட்டல் (8.2 பில்லியன்), குமார் பிர்லா (7.8 பில்லியன்), கவுதம் அதானி(6.4 பில்லியன்) முறையே 5 முதல் 10 ம் இடத்தில் உள்ளனர்.

நடிகர் விஜய் மீதான வழக்கு தள்ளுபடி

வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு தொடர்பாக நடிகர் விஜய்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகர் விஜய்க்கு நிலம் ஒதுக்கியதில் எந்த முறைகேடும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நடிகர் விஜய்க்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்தாவது,
கொரட்டூரில் நடிகர் விஜய்க்கு வீட்டு வசதி வாரியத்தால் நிலம் ஒதுக்கப் பட்டதில் முறைகேடு இருப்பதாக கூறி அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று கோரியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விஜய்க்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு எதுவும் இல்லையென்று வீட்டு வசதி வாரியம் விளக்கமளித்தது. இதனை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதி கூறினார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஜய் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: 2002 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரிய ஏலத்தில் கே.கே.நகரில் எனக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த நிலம் ஒப்படைக்கப்படவில்லை. இதனையடுத்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் எனக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென்று வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையிலேயே பாடியில் 5 கிரவுண்டு நிலமும், கொரட்டூரில் 3 கிரவுண்டு நிலமும் வழங்கப்பட்டது. சட்டப்பூர்வமாகவே நிலம் வழங்கப் பட்டிருக்கிறது.
என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை வாங்கவில்லை; இதில் முறைகேடு எதுவும் இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் விஜய் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி இதனை ஏற்றுக் கொண்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

Wednesday, November 18, 2009

யார் இந்த பொன்சேகா? who is Sarath Fonseka?


படை அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்த கடிதம் ஊடகங்கள் மூலமாகப் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த மே மாத நடுப்பகுதியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தன்னை ஓரங்கட்டுவதற்கு அரசாங்க உயர்மட்டத்தினால் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதாக கவலை வெளியிட்டிருக்கும் ஜெனரல் ஓய்வுபெறுவதற்குத் தன்னை நிர்ப்பந்தித்த காரணிகளைக் கடிதத்தில் விளக்கமாகக் கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
படைகளின் விவகாரங்களுடன் தொடர்புடைய அம்சங்களுக்குப் புறம்பாக அரசியல் ரீதியில் சர்ச்சைக்குரியவையாகியிருக்கும் சில பிரச்சினைகள் குறித்தும் அவர் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக, போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அவலம், போரின் முடிவுக்குப் பின்னர் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்வதற்கு உருப்படியான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறியமை, ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படுகின்றமை போன்ற விடயங்கள் அவற்றில் முக்கியமானவையாகும்.
தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று அரசாங்கத்தின் மீது ஜெனரல் பொன்சேகா சுமத்தும் குற்றச்சாட்டை நோக்கும் போது ஒருவருடத்துக்கும் கூடுதலான காலத்துக்கு முன்னர் அதாவது 2008 செப்டெம்பர் பிற்பகுதியில் அவர் இராணுவத் தளபதியாக இருந்த வேளையில் கனடாவின் “நாஷனல் போஸ்ட் பத்திரிகைக்குஅளித்த பேட்டியில் இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கக்கூடிய அந்தஸ்து தொடர்பில் தெரிவித்த கருத்துகளே நினைவுக்கு வருகின்றன.
வன்னியில் போர் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் ஜெனரல் பொன்சேகா அளித்த பேட்டியென்பதால் இலங்கைப் பத்திரிகைகள் அதற்குப் பெரு முக்கியத்துவம் கொடுத்து மறுபிரசுரம் செய்திருந்தன. “தமிழர்கள் தங்களுக்கென ஒரு தாயகத்தை அமைக்கவிரும்பி அதற்காக இலங்கையைத் தெரிவு செய்தமையினாலேயே போர் மூண்டது. தமிழ்ச் சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கையைத் துண்டாடுவதற்கு பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதுமே அனுமதிக்கப் போவதில்லை. இந்த நாடு சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆனால், சிறுபான்மை இனத்தவர்களும் இலங்கையில் வாழ்கிறார்கள். எமது மக்களைப் போன்று அவர்களையும் நாம் நடத்துகிறோம். நாட்டு சனத்தொகையில் 75 சதவீதத்தினராக இருக்கும் சிங்களவர்களாகிய நாம் ஒரு போதுமே விட்டுக்கொடுக்க மாட்டோம். நாட்டைப் பாதுகாப்பதற்கான உரிமை எமக்கிருக்கிறது. நாமும் ஒரு பலம் வாய்ந்த தேசத்தவர்கள். சிறுபான்மை இனத்தவர்கள் எம்முடன் சேர்ந்து வாழலாம். ஆனால், சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் தகாத கோரிக்கைகளை முன்வைப்பதற்கு முயற்சிக்கக்கூடாது” என்று அந்தப் பேட்டியில் ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

ஜெனரலின் இந்தக் கருத்துகள் இலங்கையின் சிறுபான்மை இன மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் தொடர்பில் எத்தகைய சிந்தனையை அவர் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாக உணர்த்தியிருந்தன.

இலங்கை சிங்களவர்களுக்கே சொந்தமானது என்ற சிங்கள பௌத்த பேரினவாத அபிப்பிராயத்தையே ஜெனரல் பொன்சேகாவும் கொண்டிருக்கிறார்.

எந்தவொரு சிறுபான்மை இனத்தவரும் நாட்டின் எந்தவொரு பகுதியையும் தங்களின் பாரம்பரிய வாழ்விடம் என்று உரிமை கோரமுடியாது. சிறுபான்மை இனத்தவர்களுக்கு தனித்துவம், சுய உரிமை என்று எதுவுமே இருக்க முடியாது என்பதே அந்தப் பேரினவாத நிலைப்பாட்டின் அடிப்படை அர்த்தமாகும்.

அந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தி கனடா பத்திரிகைக்கு தன்னால் அளிக்கப்பட்ட பேட்டி இலங்கை சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்களின் மனங்களை எந்தளவுக்கு புண்படுத்தியிருக்கும் என்பதே ஜெனரல் பொன்சேகா அறியமாட்டார்.
இன்று அவர் அரசாங்க உயர்மட்டத்தினால் தனக்கு அவமதிப்பு நேரும் போது தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்வது குறித்து பேசப் ஆரம்பிக்கும் விசித்திரத்தைக் காண்கிறோம். தனது தலைமையின் கீழ் போரில் இராணுவம் வெற்றி பெற்றபோதிலும், அரசாங்கம் சமாதானத்தை இன்னும் வென்றெடுக்கவில்லை என்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் ஜெனரல் பொன்சேகா தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை என்றும் இதனால் போரில் கண்ட வெற்றி பாழாகி எதிர்காலத்தில் இன்னொரு கிளர்ச்சி மூளக்கூடிய ஆபத்து தோன்றும் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற அவலங்கள் குறித்து தனக்குப் பெரும் வேதனையாக இருப்பதகக் கூறும் ஜெனரல் அந்த மக்களுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் உகந்த திட்டங்கள் இல்லை என்று குற்றஞ்சாட்டுகிறார். நாட்டின் ஏனையபகுதிகளில் உள்ள உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்வதற்கு இடம் பெயர்ந்த மக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக போரின் முடிவுக்குப் பிறகு முழுநாடுமே எதிர்பார்த்த சமாதானத்தின் பலாபலன்களை அனுபவிக்க முடியவில்லையே என்ற பெருங் கவலை அவருக்கு!
பொருளாதார நெருக்கடியினால் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் அதேவேளை ஊழல்,மோசடி, விரயம் ஆகியவை தலைவிரித்தாடுகின்றன என்றும் ஜனாதிபதிக்கு கூறியிருக்கும் ஜெனரல் பொன்சேகா ஊடக சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படுவதையும் வெறுக்கிறார். இராணுவச் சீருடையைக் கழற்றிய பின்னரே அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவதாக ஜெனரல் கூறியிருக்கின்ற போதிலும், கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் மேற்படி விடயங்களை நோக்கும் போது சரத் பொன்சேகாவிற்குள் இருக்கும் அரசியல்வாதி சீருடை களற்றப்படும் வரை காத்திருக்காமல் பேச ஆரம்பித்து விட்டார் என்றே கூற வேண்டியிருக்கிறது.

சின்னத் திரை விருதை திருப்பிக் கொடுத்த ராதிகா!


விருதுக்கான நடிகர் நடிகை பரிசீலனையில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி, தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதினை திருப்பி அனுப்பியுள்ளார் ராதிகா. மேலும் இது தொடர்பான தனது படங்களை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்கு நடிகை ராதிகா கண்டன கடிதம் அனுப்பியுள்ளார். இன்று அதை தனி அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் ராதிகா கூறியிருப்பதாவது:

கடந்த 14 ந்தேதி மாலை சென்னை காமராஜர் அரங்கில் பெஸ்ட் (சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு) சார்பில் நடந்த விருது கள் வழங்கும் விழாவில் பல சங்கடமான நிகழ்வுகள் நடந்தேறின. அது சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் மனதையும் பெரிதும் பாதித்துள்ளது.சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர் , கதை, வசன கர்த்தா வரிசையில் பல திறமைசாலிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படவே இல்லை. என்ன காரணத்துக்காக அவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டன? என்பதும் தெரியவில்லை. மேற்படி விழாவில் கலந்து கொள்ளமாட்டார்களோ என்ற சந்தேகத்தின் பேரில் சில பேரிடம், குறிப்பாக நடிகர், நடிகைகளிடம் உங்களுக்குத் தான் விருது தரப்போகிறோம் என்று உறுதியளித்து விழாவிற்கு வரவழைத்ததாக அறிகிறேன்.தகுதியும், திறமையும் படைத்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் விழாவிற்கு வரவழைப்பதற்காகவே பலரையும் அழைத்து அதைப் படம் பிடித்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காட்ட முனைவது தவறான முன்னுதாரணமாகவே அமையும்.எனவே தகுதி, திறமையின் அடிப்படையில் எனக்கு விருது வழங்கப்பட்டு இருந்தாலும் இதே போல் திறமை வாய்ந்த பலபேர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகைக்கான விருதை ஏற்றுக்கொள்ள என் மனசாட்சி விரும்பவில்லை. இந்த தவறுகள் மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும் பெஸ்ட் அமைப்பின் எதிர்கால நலனை கருதியும் இது போன்ற நிகழ்வுகள் மேலும் தொடரக் கூடாது என்ற நல்ல எண்ணத்தோடும் எனக்கு வழங்கிய விருதை உங்களிடமே திருப்பி ஒப்படைக்கிறேன்.மேற்படி விருது வழங்கிய நிகழ்ச்சியில் நான் இடம் பெறும் எந்த ஒரு புகைப்படம் அல்லது படக்காட்சிகள் உள்பட எவையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் இடம் பெறுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..." என்று ராதிகா கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது/ Election Date Announced

எதிர்வரும் ஜனவரி 23ம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிடுவதறகான சாத்தியங்கள் குறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச விருப்பம் கொணடுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமது அதிகாரங்க்ள மற்றும் அரசாங்க இயந்திரம் பாதுகாப்பு படைத்தரப்பு ஆகியவற்றின் உதவியுடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதே அவரின் நோக்கம் என்று முக்கிய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் எதிர் கட்சிகளின் கூட்டணி பலமான நிலையில் இருப்பதால் அதில் அரசாங்கத் தரப்பு வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர்கள் பலரும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு தாவியவர்கள் என்பதால் தேர்தல்களின் வெற்றி பெறும் சந்தர்பம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் பலரும் ராஜபக்ச தரப்புடன் முரண்பட்டு நிற்பதால் பொதுத் தேர்தல் பணிகளில் அவர்களை முழு வீச்சுடன் ஈடுபடுத்த முயடிhத நிலை காணப்படும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் தனக்குள்ள மக்கள் செல்வக்கு மூலம் வெற்றி பெற முடியும் என்பதே ஜனாதிபதியின் எண்ணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1000 ரூபாய் நோட்டில் ராஜபக்சே உருவம்(படம்)


ராஜபக்சே படத்துடன் கூடிய புதிய ஆயிரம் ரூபாய் நோட்டை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றிபெற்றதைக் குறிக்கும் வகையில் இந்த நோட்டு வெளியிடப்பட்டது. முதல் நோட்டை அதிபர் ராஜபக்சே பெற்றுக் கொண்டுள்ளார்.

புலிகள் எடுத்த அவசர முடிவுகளே இன்றைய விளைவுகளுக்குக் காரணம் - கருணாநிதி


சென்னை: விடுதலைப் புலிகள் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இன்றைய விளைவுகள். இதைக் கண்டு நாம் மெளனமாக அழுது கொண்டிருப்பது யார் காதில் விழப் போகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.இதுகுறித்து முதல்வர் கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ளதாவது:ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல்; தி.மு.க. தென்னிந்தியாவில் இலங்கை பிரச்சினைக்காக எழுப்பிய குரலும் - இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் - நடத்திய அறப்போராட்டங்களும் - சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் - சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்த நிலைகளும் - ஏன்;

இருமுறை ஆட்சியையே இழந்த சரித்திரச் சம்பவங்களும் -தி.மு.கழகத்தின் சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள்; செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும் -"டெசோ'' இயக்கத்தின் சார்பில் - நானும், தமிழர் தலைவர் வீரமணியும், பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் முன்னின்று மாவட்டந்தோறும் நடத்திய பேரணிகளைத் தொடர்ந்து; 4-5-1986 அன்று மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தினசபாபதி, டி.இ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜப்பெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும்,அந்த மாநாட்டில் அகில இந்திய ரீதியில் என்.டி.ராமராவ், வாஜ்பாய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணிய சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பதும்,அந்த மாநாட்டிற்கு பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு போராளிகளிடையே அடிக்கடி எழும் புயல் குறித்து விவாதித்து; அதனை நிறுத்த சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள் என்பதும்,ஆனால் அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் தான் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை என்பதும்;

அரசு பொறுப்பில் முதல்வராக இருந்து கொண்டே, அமைதிப்படை இந்தியாவிற்கு திரும்பி வந்ததை வரவேற்க செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வும் - இலங்கையில் நடந்த விடுதலை போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை நடுநிலையாளர்கள் யாரும் மறந்துவிட முடியாது.ஆனால் விடுதலைப் படைமுகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு - தளபதிகளுக்கு - தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன் படுத்திய அளவுக்கு; இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்.எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ;

என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்தபோது கூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றதையும் - நடைபெற்றதற்கான காரணத்தையும் - நான் அல்ல; என்னைப் போன்றவர்கள் அல்ல; இதோ மவுன வலி உணர்ந்து, அதனை நமக்கு உரைக்கும் அருமை நண்பர்களாம், தமிழ் எழுத்தாளர்களில் தலைநிமிர்ந்து நிற்கும் தன்மானத் தோழர், கோபாலுக்கு; அண்மையில் சென்னைக்கு வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், இன்றைய இலங்கை எதிர்க்கட்சி தலைவரும், இலங்கையின் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே 18-11-2009 தேதியிட்ட நக்கீரன் வார இதழுக்காக அளித்த பேட்டியில்,"இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம்.

தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டி முயற்சி நடந்தபோதெல்லாம் அதனை தவிர்த்தார் பிரபாகரன். 2003-ல் நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து தானாகவே வெளியேறினார்.2005-ல் டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். இறுதியில் அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார்.மேலும் 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்;

பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்.''என்று ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.விளைந்த நிலைமையை எண்ணிப்பார்ப்பதற்கு இந்த விடுதலைப் போரின் பின் விளைவுகளுக்கு; சகோதர யுத்தத்தின் காரணமாக; மாவீரன் மாத்தையாவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கமே மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும்;டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும்;பத்மநாபாவையும், அவரோடு இணைந்து பத்து போராளிகளையும் கொன்று குவித்தும்;தொடக்க காலத்திலிருந்து போராளிகளின் துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் இந்த நிகழ்ச்சிகளில் உச்சகட்டமாக பலியாக்கியும்;டெலோ இயக்கத்தைச் சேர்ந்த மனோமாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம்தம்பிமுத்து, கலாதம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும், மரணக் குழியிலே தள்ளியும்;

தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு, தொலைத்து விட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்தப் போர்முனை சரித்திரம் இன்னமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு தானிருக்கிறது.நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை. இலங்கையில் 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் - 9-4-2004 அன்று கிழக்கு இலங்கையிலே சகோதர யுத்தம் - பிரபாகரன், கருணா படைகளிடையே ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும், 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.இப்படி சகோதர யுத்தம் காரணமாக - நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டது மாத்திரமல்ல - முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் - நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் - நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது. இளம் சிறார்கள் எத்தனை பேர் தங்கள் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்?

அவர்களை இழந்த அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சைகளாக, பராரிகளாகச் செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையைத் தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் பிரபாகரனின் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதி தான் என்ன? இப்படி எத்தனை குடும்பங்கள்? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து - தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் - தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் இதனை நான் எழுத நேரிட்டது. வாழ வேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் இதனை எழுதுகின்றேன்.

என்னையும், மாறனையும் 15-3-1989 அன்று; அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து - விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப் பிரச்சினை குறித்தும் இரண்டு நாள் உரையாடி - அதுபற்றிய விவரங்களை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழ்நாடு மாளிகையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வர்சிங் மூலமாக எங்களுக்கு தெரிவித்து - நீங்களும், மாறனும், வைகோவும் தேவைப்பட்டால் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு - பிரபாகரனுடன் இந்த பிரச்சினை குறித்து விரிவாகப் பேசுங்கள், எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள், இலங்கையில் நீங்கள் அவர்களைச் சந்திக்கவோ அல்லது அவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சந்திக்கவோ தேவையான ஏற்பாடுகளை நான் இங்கிருந்து செய்து தருகிறேன், அதிகபட்சம் அவர்களது கோரிக்கை என்ன என்பதை விவரமாகத் தெரிந்து கொள்ளுங்கள், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் - என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்த அந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அந்த சம்பவமும் ஈழ விடுதலைப் போராட்டத் தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று என்பதை உலகம் மறந்து விடவில்லை.

இதோ ஒரு நிகழ்ச்சி. 17-11-2005 அன்று இலங்கை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. 13 பேர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் முக்கியமாக போட்டியிட்டார்கள். அந்த தேர்தலை சிறுபான்மையினரான தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப்புலிகள் அறிவுறுத்தினர். அந்த தேர்தலின்போது, தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சைத் தொடருவதற்கு முன்னுரிமை அளிப்பேன் என்றார் ரணில். அப்போது ரணில் சொன்னதைத் தான் இப்போதும் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியிலும், "2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.2005-ம் ஆண்டு நடைபெற்ற அந்த தேர்தலில், இலங்கையின் ஐந்தாவது அதிபராக, பிரதமராக இருந்த ராஜபக்சே வெற்றி பெற்றார். ராஜபக்சேவுக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது - விடுதலைப்புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்த்து நாம் மவுனமாக அழுவது யார் காதிலே விழப் போகிறது? நம்முடைய மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது? என்று கூறியுள்ளார் கருணாநிதி.கருணாநிதி வேதனைக்கு என்ன காரணம்...கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈழம்- மெளனத்தின் வலி என்ற பெயரில் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு தரப்பினரும் ஈழம் குறித்த தங்களது கருத்துக்களைக் கவிதைகளாக பதிவு செய்துள்ளனர்.இதற்குப் பதிலளிக்கும் வகையில்தான் முதல்வர் கருணாநிதி தனது வேதனையை வெளிப்படுத்தி தற்போதைய கடிதத்தை முரசொலியில் எழுதியுள்ளார்.