பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, January 22, 2010

ஆசிரியருடன் ஏன்?

டியூசன் மாணவியோடு அமலன் என்ற ஆசிரியரும்...
டியூசன் மாணவனோடு நசுரீன் என்ற ஆசிரியையும் காதல் மராத்தான் நடத்தியதைப் பற்றி "குரு- சிஷ்யை உறவு' என்ற தலைப்பில் ரிப்போர்ட் வெளியிட்டிருந்தோம்.
இந்த கள்ள ஜோடிகளில்... ஆசிரியர் அமலனால் கடத்தப்பட்ட ப்ளஸ்-டூ மாணவி ஸ்ரீலேகா வை... சந்தித்து.. ""எப்படி ஆசிரியரின் வலையில் விழுந்தாய்'' என்றோம். கண்ணீர் ததும்ப சங்கடமாய்ப் பேச ஆரம்பித்த அவள்..
“""நான் டென்த் படிக்கும் போது அமலன் சார்தான் எனக்கு கிளாஸ் டீச்சர். நான் கிளாஸ்லயே முதல் மார்க் வாங்குற மாணவி. அதனால் என் மேல் சார் ரொம்பப் பாசம்காட்ட ஆரம்பிச்சார்.
ஸ்கூல் பீஸ் கட்ட ஒருதடவை நான் சிரமப்பட்டப்ப... அவரே கட்டினார். அதனால் அவர் மேல் எனக்கு மரியாதை வந்துச்சி. இதைத்தெரிஞ்சி சந்தோசப் பட்ட எங்க அப்பாவும் அம்மாவும்... சார்ட்ட எங்க பொண்ணை உங்கக்கிட்ட ஒப்படைக்கிறோம். நீங்கதான் அவளை பெரிய ஆளாக்கணும்னு சொன்னாங்க. அதிலிருந்து சார் எங்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்க ஆரம்பிச்சார்.
சாருக்கு ஸ்கூலிலும் செல்வாக்கு அதிகம் என்பதால் என்னை எல்லோரும் அமலன்சார் ஸ்டூடண்ட்டுன்னு மரியாதையா பார்க்க ஆரம்பிச்சாங்க.டென்த்ல ஸ்டேட் லெவல்ல மார்க் வாங்க வைக்கிறேன்னு அவர் வீட்டுக்கு கூப்பிட்டு இலவசமா டியூசனும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சார்.
அப்ப அவ ருக்கும் அவர் மனைவிக்கும் பேச்சு வார்த்தை சரியா இருக்காது. அதனால் அடிக்கடி தன் மனைவி இல்லாத சமயங்களில் நான் அன்புக்கு ஏங்கற ஜீவன்னு ஒரு மாதிரியா பார்ப்பார்.
என் கையைப் பிடிச்சிக்கிட்டு கலங்குவார். அப்பல்லாம் எனக்கு அவர்மேல் பரிதாபமா இருக்கும். டென்த் முடிஞ்சி லெவன்த் வந் தப்பவும் அவரே டியூசனுக்குக் கூப்பிட்டார். இந்த சமயத்தில் அவர் மனைவியோட கோச்சிக்கிட்டு தனியா ஒரு சின்ன ரூமில் தங்கினார். அங்கும் என்னை டியூசனுக்குக் கூப்பிட்டார். அங்க டியூசனை மறந்து எனக்கு அன்புகாட்டற ஜீவன் வேணும்னு என்னை கட்டிப்பிடிச்சிக்குவார்.
சார் இது தப்புன்னு சொன்னாலும் விடாம... உன்னை உலகத் திலேயே பெரிய ஆளா நான் ஆக்கிக் காட்டறேன். என் கூடவே இருந்தா போதும்னு சொல்லியே... கொஞ்சம் கொஞ்சமா அங்க இங்க தொடுவார். கடைசியா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். நீதான் என் மனைவி.
நான் அந்தமான்லயாவது... அஸ்ஸாம், பீகார்லயாவது வேலைதேடிக்கிறேன். நாம் அங்க போய்டலாம். நாம நிறைய சம்பாதிச்சி உங்க அப்பா- அம்மாவுக்கு நிறைய பணத்தை அனுப்பலாம்னு சொல்லிச் சொல்லியே தப்பிக்கவிடாம பண்ணிட் டார்.அமலன் சாரை முதல்ல ஆசானா நினைச்சேன்.
அப்புறம் அப்பா ஸ்தானத்தில் வச்சிப்பார்த்தேன். அப்புறம் என்னை வழி நடத்தவந்த கடவுளா நினைச்சேன். கடைசியா தன்னைக் கணவன்னு சொல்லி என்னை முழுசா மோசம்பண்ணிட்டார். இவ்வளவும் பண்ணிய அந்த ஆள்... எல்லாத்தையும் முடிச்சிக்கிட்டு... என்னை நடுத் தெருவில் விட்டுட்டுப் போய்ட்டார். இனி எப்படி எந்த முகத்தை வச்சிக்கிட்டு எங்க அப்பா- அம்மாவை நான் பார்ப்பேன்''’’ அதற்குமேல் பேச முடியாமல் முகத்தைப் பொத்திக்கொண்டு உடைந்து அழ ஆரம்பித்தாள் அந்த பரிதாபத்துக்குரிய மாணவி.மாணவி ஸ்ரீலேகாவின் கதை; பலருக்கும் விழிப்புணர் வைப் போதிக்கும் விதமாக இருக்கிறது.
காக்கிகளுடன் கண்ணா மூச்சி ஆடும்... ஆசிரியர் அமலன் பிடிபடும்போது மேலும் பல பகீர் விவகாரங்கள் வெடித்து வெளியே வரலாம் என்கிறார் கள் காக்கிகள்.

Wednesday, January 20, 2010

சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் படம் சில ஆங்கிலப் படங்களின் தழுவலாக இருப்பதை யாராவது நிரூபித்தால், நான் சினிமாவை விட்டே போய் விடுகிறேன் என்றார் இயக்குநர் செல்வராகவன்.
பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரத்தில் ஒருவன் படம் பொங்கலுக்கு வெளியானது. ஆனால் ரசிகர்களுக்கு இந்தப் படம் புரியாததால், வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் கூறுகிறது.
அதே நேரம் மீடியாவில், வேறு விதமான விமர்சனங்களை செல்வராகவன் எதிர்கொள்ள வேண்டிய சூழல்.
எனவே உடனடியாக பிரஸ் மீட்டுக்கு அழைக்கப்பட்டனர் செய்தியாளர்கள்.இந்த கூட்டத்தில், 'ஆயிரத்தில் ஒருவன் படத்தின் காட்சிகளில் மெக்கனாஸ் கோல்ட், டைம்லைன், கிளாடியேட்டர் போன்ற படங்களின் தாக்கம் உள்ளதே?' என்று கேள்வி எழுப்பினர்.இதைக் கேட்டதும் மிகவும் கடுப்பான செல்வராகவன், 'இந்தப் படம் முழுக்க முழுக்க கற்பனையானது. அது போன்ற ராஜா உண்மையில் கிடையாது. எந்த ஆங்கிலப் படத்தையும் பார்த்து நான் காப்பியடிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
அப்படி எந்தப் படக் காட்சியாவது இதில் இடம் பெற்றிருந்தால், அந்த படத்தின் சிடியைக் கொடுங்கள்... உண்மையாக இருக்கும்பட்சத்தில் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்..." என்றார். அடுத்ததாக, 'படத்தில் லாஜிக்கே இல்லையே?' என்று கேட்டதற்கு, "ஆங்கிலப் படங்களில் லாஜிக் பார்க்கிறீர்களா... அதே மாதிரி இந்தப் படத்தையும் பாருங்கள் (!??). அவதார் படத்தில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தாலும் அதை ரசிக்கிறார்கள்... ஆனால் ஒரு தமிழன் எடுத்த வித்தியாசமான படத்தில் ஆயிரம் ஓட்டைகளைக் காண்கிறீர்கள்.இப்படி இருந்தால் வித்தியாசமான படங்கள் எப்படி வரும்? ஹாலிவுட்டை விட அட்டகாசமான படைப்புகளை இங்கேயே தர முடியும்" என்றார்.

எந்திரன் பாட்டு லீக்?!

ரஜினிகாந்த்- ஷங்கர் கூட்டணியில் உருவாகும் மெகா படைப்பான எந்திரன் - தி ரோபோ படத்தின் பாடல் என்ற பெயரில் ஒரு ஆடியோ ஃபைல் இணைய தளங்களில் உலா வரத் துவங்கியுள்ளது.
படம் வெளியாகும் முன்பே அதை இணைய தளங்களில் லீக் செய்வது வாடிக்கையாகிவிட்டது.முன்பு சிவாஜி படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள், பாடல்கள் அனைத்தும் படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் லீக்காகி பரபரப்பேற்படுத்தின. தரம் மோசமாக இருந்தாலும், முன் கூட்டிய படத்தின் பாடல்களை தெரிந்து கொள்வதில் உள்ள த்ரில் காரணமாக பலரும் இவற்றை டவுன்லோடு செய்து வந்தனர்.
இந்த பப்ளிசிட்டியைப் பார்த்த கவுதம் மேனன் போன்ற சில இயக்குநர்கள் இதனை ஒரு விளம்பர உத்தியாகவே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். வாரணம் ஆயிரம், விண்ணத் தாண்டி வருவாயா படங்களில் இதை பெரும் பப்ளிசிட்டியாக்க முயன்றார் அவர்.
( சரத்குமாரின் ஜக்குபாய் சமாச்சாரம் இதில் சோராதுங்ணா!)இந் நிலையில் இப்போது மீண்டும் ரஜினியின் எந்திரன் பட பரபரப்பு ஆரம்பித்துள்ளது. முதலில் பெருவில் எடுக்கப்பட்ட எந்திரன் படப்பிடிப்பு காட்சிகளின் வீடியோவை உலாவிட்டவர்கள், இப்போது, அதன் ஆடியோ என்று ஒரு பாடலை லீக் செய்துள்ளனர்.
'என் உயிரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்...' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் 3.16 நிமிடங்கள் ஒலிக்கிறது.இந்தப் பாடலின் ஒலி (பாடகர் குரல்) தெளிவாக இல்லை. ரஹ்மான் ட்ராக் பாடியதை அப்படியே எடுத்து இணையத்தில் விட்டுவிட்டார்களோ எனும் அளவுக்குதான் உள்ளது.

Tuesday, January 19, 2010

A Brighter Future


தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை
எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார்.
தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.
எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.
சிங்கள பேரினவாத அரசு எமத மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதற்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன்.
எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
ச.தமிழ்மாறன்
செய்தி தொடர்பாளர்
தமிழீழ விடுதலைப்புலிகள்தமிழீழம் .