
இப்போதெல்லாம் தனது நேரத்தில் பெரும்பாலும் பக்தி மார்க்கத்தில் கழிக்கிறாராம். மாலை நேரமானால் நேராக கோவிலுக்கு செல்லும் அவர், வீட்டிலும் பக்தி சிந்தனையோடுதான் இருக்கிறார் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரங்கள்.
அவரது இமேஜ் அதல பாதாளத்தில் சரிந்து கிடப்பதால் (ஏதோ இப்போதுதான் என்கிற மாதிரி...) அதிகம் அப்செட் ஆகியிருப்பவர் பாரதிராஜாதான். இவர் கலைஞர் டிவியில் இயக்கி வரும் தெக்கத்திபொண்ணு சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் புவனேஸ்வரி. இந்த கேரக்டரில் முன்பு ரஞ்சிதா நடித்து வந்தார். அவரை நீக்கிவிட்டுதான் இவரை ஒப்பந்தம் செய்தார் ராஜா. சிறைக்குள் சென்று திரும்பி வந்திருக்கும் அவரை தொடர்ந்து தனது சீரியலில் நடிக்க வைப்பதா? அல்லது அவருக்கு பதில் இவர் என்று வேறு யாரையாவது நடிக்க வைப்பதா? யோசித்துக் கொண்டிருக்கிறாராம். ஆனால் இரண்டையுமே எதிர்கொள்ள தயாராக இருக்கிறாராம் புவனேஸ்வரி.
பாரம் து£க்குற குதிரைக்கு பல்லு வலின்னாலும், சும்மா விடுவானா குதிரைக்காரன்?