பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, November 25, 2009

மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழீழ வானொலியில் நேரடி ஒலிபரப்பு

ம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் முதன் முறையாக புலத்தில் இருந்து நேரடி அஞ்சல் செய்யப்பட விருக்கின்றது. புலிகளின் குரல் வானொலியில் செய்மதியூடாகவும், சிற்றலை வரிசை ஊடாகவும் நேரடி ஒலிபரப்பு செய்யப்படவிருக்கின்றது.
நிகழ்ச்சிகள்
பொது சுடரேற்றல்
தேசிய கொடியேற்றுதல்
உரை – 12.50
மணி ஒலி – 13.35
அகவணக்கம்
ஈகை சுடரேற்றல் ( துயிலும் இல்ல பாடல்) – 13.37
அனைத்து தமிழ் மக்களையும் இந்த வேளையில் கலந்து கொண்டு தாயகத்திற்காக தம்மை ஈகம் செய்த மாவீர செல்வங்களுக்கு ஒழியேற்ற வருமாறு ஏற்பாட்டு குழுவினர் வேண்டிக்கொள்கின்றனர்.

4 நிபந்தனைகளுக்கு முப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேக இணக்கம்

அகதி முகாம்களிலுள்ள மக்களை விரைவில் மீள்குடியேற்றி அவர்களுக்கான ஒரு சிறந்த அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுத்தல் உட்பட 4 நிபந்தனைகளுக்கு முப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேக்க இணங்கியுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
இதனால் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற குழுத்தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க குறிப்பிட்டார். இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது வேட்பாளர் அரசாங்கத்திற்கு எதிரான பொது வேட்பாளரே தவிர அவர், ஐக்கிய தேசியக் கட்சியையோ, ஜே.வி.பியையோ சார்ந்தவர் அல்ல எனவும் குறிப்பிட்டார். இவர் எந்த கட்சியும் சாராத பொது வேட்பாளர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பொதுவேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.இன்று இடம்பெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்களான கே.டி லால்காந்த, விஜித ஹேரத், ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர், 2005 ம் ஆண்டு தாம் இந்த அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமையினால் இன்று இந்த நாட்டில் ஜனாநாயகம் சீரழிந்துள்ளதுடன், ஊழல் மோசடி என்பன புற்று நோய் போல் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். பிரபாகரன் என்ற ஏகாதிபத்தியத்தை இல்லாதொழிக்க 2005 ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்த தாங்கள், மஹிந்த ராஜபக்ஷவின் ஜனநாயக ஏகாதிபத்தியத்தை இல்லாதொழிக்க இன்று சரத்பொன்சேக்கவுடன் இணைந்துள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளரின் சின்னம் குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும், விரைவில் ஒரு இராசியான சின்னம் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

த்ரிஷா, ரம்யா, சோனா... ராத்திரி கூத்து!

அது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சிதான்... ஆனால் பத்திரிகைகளுக்கு செய்தியாக வந்த பிறகு என்ன பிரைவஸி வேண்டிக் கிடக்கிறது... அறைக்குள் நடந்த கூத்துக்களை அம்பலத்தில் விட்டிருக்கிறார்கள்.ஸிட்னி ஸ்லேடன் என்ற டிசைனர் சினிமா நடிகர் நடிகை கள் மத்தியில் பிரபலம். ஹை கிளாஸ் டெய்லர்னு வச்சுக்கங்களேன்... பார்க்க பின்லேடன் மாதிரி ஒல்லிக் குச்சியாக இருந்தாலும் வேலையில் கெட்டிக்காரராம்!இவருக்கு எல்லா நடிகைகளுமே ரொம்ப தோஸ்த் போலிருக்கிறது.நேற்று இவருக்கு பிறந்தநாள். அதைக் கொண்டாட தாஜ் கோரமண்டல் ஓட்டலில் குழுமினார்கள் நட்சத்திரங்கள். கிட்டத்தட்ட பாதி திரையுலகம் திரண்டுவந்திருந்தது. வந்திருந்தவர்களில் ஒழுங்கான ஆடையுடன் வந்தவர்கள் அஜீத் - ஷாலினி மட்டுமே. மற்றவர்கள் ஏதோ பெயருக்கு ஆடையுடன் வந்திருந்தனர். மீடியா உலகைச் சேர்ந்த ஒரு பெண்மணி, நடிகை சோனாவையே தூக்கிச் சாப்பிடும் விதத்தில் முன்னழைகை முக்கால்வாசி காட்டியபடி ஆடையணிந்து வந்திருந்தார். பார்ட்டி துவங்கியது... அவ்வளவுதான்... ஆளாளுக்கு அந்த ஹைகிளாஸ் டெய்லரைக் கட்டிப்பிடித்து மடியில் ஏறி உட்கார்ந்து விளையாட ஆரம்பித்தனர் (சேச்சே... பொறாமையெல்லாம் இல்லீங்!).புதிதாக வரைந்த டாட்டூ பளிச்சென்று முன்பக்கம் எட்டிப் பார்க்க, துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருந்தார் த்ரிஷா. அவருக்கு சற்றும் குறையாத உற்சாகத்துடன் அவரது சகோதரி... அட .. அவங்க அம்மா!நிகழ்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டிய இன்னொரு ஆன்ட்டி ரம்யா கிருஷ்ணன்.சோனாவின் உடையைப் பார்த்ததும் தாஜ் பேரர்களுக்கே குப்பென்று வேர்த்துவிட்டதாம். அஜீத்துடன் நின்று அவர் போஸ் கொடுக்க ஆசைப்பட, அஜீத் கேமராவை மட்டும் பார்த்தபடி பாதுகாப்பாக நின்றார். ஆட்டம் பாட்டம் அயல்நாட்டு மதுவிருந்துடன் அமர்க்களமாக நடந்த இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திலிருந்து மனசே இல்லாமல் பிரிந்து போனார்கள் நட்சத்திரங்கள், நள்ளிரவு தாண்டியபிறகு!

ரம்பாவுக்கு தொழிலதிபர் மாப்பிள்ளை-திருப்பதியில் திருமணம்!

தென் இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவராக விளங்கிய ரம்பா அடுத்த மாதம் திருப்பதியில் தொழிலதிபர் மாப்பிள்ளையை மணக்கிறார்.
33 வயதாகும் ரம்பா, முதல் முதலில் தமிழில் நடித்த படம் உழவன். பின்னர் ரஜினி, கமல், பிரபு, சரத்குமார் , கார்த்திக் , விஜய், அஜீத் என ஒரு பெரிய ரவுண்ட் வந்தார்.இந்தி, தெலுங்கு , மலை யாளம், போஜ்புரி படங்களிலும் நடித்தார். சமீப காலமாக மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவராகவும் இருந்தார்.அவரோடு நடிக்க வந்த எல்லோருக்கும் மீனா போன்றவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டாலும், இவர் மட்டும் தொடர்ந்து சொந்தப்படம், செக் மோசடி, வீட்டுத் தகராறு என பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டிருந்தார்.

இப்போது கிட்டத்தட்ட எல்லா விவகாரங்களிலிருந்தும் மீண்டு விட்டாராம். மேலும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்கு விளம்பர்த் தூதராகவும் மாறியுள்ளார்.இந்திப் பட வாய்ப்பு வேறு வந்துள்ளது. இந்த சந்தோஷத்தோடே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்த அவர், ஒரு பெரிய தொழிலதிபருடன் செட்டிலாகிறார்.

சமீபத்தில் ரம்பாவுக்கு விலை உயர்ந்த கார் ஒன்று பரிசாக வந்ததாக செய்தி அடிபட்டதே... அந்தக் காரை வங்கித் தந்தது கூட இந்த தொழிலதிபர்தானாம். ஆனால் அவர் பெயரை இன்னும் வெளியிடாமல் ரகசியம் காக்கிறார் ரம்பா.வரும் டிசம்பர் 27ம் தேதி இருவருக்கும் திருப்பதியில் திருமணமாம்.

குனியக் குனிய...

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய அரசர் அகிஹோடோவைக் குனிந்து வணங்கி நட்புப் பாராட்டிய நிகழ்ச்சி, அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது. அமெரிக்காவிடம் நிதி உதவியும், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உதவியும் பெறும் குட்டி நாடான ஜப்பானின் மன்னரை, அதிபர் ஒபாமா குனிந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன என்று அமெரிக்கர்கள் கொதித்தெழுந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன?
இந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு!
உலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன்? இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. "நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது?
சீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.
அதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.
ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.
கடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.
சீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா? சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா? அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா?
அமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்!
குனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?

விடுதலைப் புலிகளுக்கு நிதி- பிரான்சில் 21 தமிழர்களுக்கு சிறை

விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 21 தமிழர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. நடராஜா மதீந்திரன் என்பவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிரான்சில் உள்ள தமிழ் சமுதாயத்தினரிடம் இருந்து விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதாதக் கூறி 20க்கும் மேற்பட்டோரை பாரிஸ் நகர போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்துவந்தது.
இவ்வழக்கில் விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் நாட்டுப் பொறுப்பாளரான நடராஜா மதீ்ந்திரன் முக்கிய குற்றவாளியாக இணைக்கப்பட்டிருந்தார்.இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரான்சில் தமிழ் சமுதாயத்தினரிடம் சட்ட விரோதமாக நிதி திரட்டியதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், 21 விடுதலைப் புலிளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிகப்பட்ச தண்டனையாக நடராஜா மதீந்திரனுக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அரசு தரப்பில் வாதாடிய வக்கீல், பிரான்சில் குடியேறியுள்ள தமிழர்களிடம் இருந்து புரட்சி வரி என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாகவும், பிரான்சில் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசதி படைத்த தமிழர்களிடம் இருந்து இவ்வாறு மொத்தம் 5 மில்லியன் யூரோக்கள் திரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.பிரான்சில் செயல்பட்டு வந்த தமிழர்-ஃபிரென்சு ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற அமைப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானதாக இருப்பதாகக் கூறி அந்த அமைப்பையும் நீதிமன்றம் தடை செய்துவிட்டது.

தவிக்க முடியாத சவாலை முறியடிப்பாரா மஹிந்த: பகுதி 1

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் உருவாக்கி விட்ட “வீர புருஷர்கள்” இருவருக்கிடையில் நிகழவிருக்கும் ஜனாதிபதிப்பதவிக்கான போர் குறித்து ஆழமாக அலசும் விதத்தில் அமைக்கிறது இக்கட்டுரை. விக்ரர் ஐவனால் எழுதப்பட்ட இவ் ஆய்வுக்கட்டுரை, கடந்த 15ஆம் திகதிய “ராவய” பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் தமிழ் வடிவமே இது.
யுத்தத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈட்டிக் கொண்ட வெற்றியானது அவரை இராட்சதப் பலவானாகவும் நாட்டின் ஏனைய அனைத்து அரசியல் தலைவர்களையும் சித்திரக் குள்ளர்களாகவும் ஆக்கிவிட்டுள்ளது. இந்த நிலைப்பாடானது அந்த இராட்சதப் பலவானுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் ஆற்றலுடன் போட்டியிடக் கூடிய எவரும் மேற்படி அரசியல் தலைவர்கள் மத்தியில் தென்படாததொரு நிலையையும் உருவாக்கி விட்டிருந்தது. அதேபோன்று, மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகத்துக்கே உரிய எவ்விதமான வரையறைகள் நிலவினாலும் கூட, கடும் போட்டியென்ற சவால் எதுவுமின்றியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் இலகுவான வெற்றியை ஈட்டிக் கொள்ளத்தக்கதான நிலைப்பாடொன்றும் நாட்டில் உருவாகியிருந்தது.
மூன்று பிரபலங்கள்

இறுதியில் சம்பிரதாயமான எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதிலாக, யுத்தம் உருவாக்கி விட்ட மேலுமொரு இராட்சதப் பலவானை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டியில் நிறுத்தும் நிலைப்பாடொன்று உருவானதன் மூலம் அந்த இடைவெளி நிரப்பப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றி யுத்தமானது மூன்று பிரபலங்களை உருவாக்கி விட்டிருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோரே அந்த மூவரும்.
யுத்தத்தில் இந்த மூவரும் வகித்த பாத்திரங்கள் மிக விசேடமான மற்றும் அசாதாரணத் தன்மை கொண்டதாகவே இருந்தன. இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா அந்த யுத்தத்துக்கு அவசியமான யுத்தமயத் தலைமைத்துவத்தை வழங்கிநின்றார். பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷ இவ்விரண்டு சாதக நிலைகளையும் ஒருமுகப்படுத்தி நின்றார். இவர்கள் அந்த யுத்தத்தில் வகித்த விசேடமான பாத்திரத் தன்மையின் காரணமாக யுத்தம் முடிவுக்கு வந்தபோது அம்மூவரும் அசாதாரணமான வீர புருஷர்களாக வரலாற்றில் இடம்பெற்றனர்.
அதேவேளை, இம் மூவருமே எதிர்க்கட்சியின் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தனர். இந்த யுத்தம் குறித்த எதிர்க்கட்சியின் பார்வை, தனது ஆளுமையின் இருப்பைப் பலப்படுத்திக்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை ஒரு சாதனமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதாகவே இருந்தது. எதிர்க்கட்சியின் விமர்சனங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ பாதுகாப்புச் செயலாளருக்கோ ஒரு பொருட்டாக இருக்க வில்லை. தமது அரச பணியென்ற ரீதியில் இராணுவ வீரராகக் கருதக்கூடிய ஜெனரல் சரத் பொன்சேகா மீது எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த சந்தர்ப்பங்களும் அமைந்தன. அத்தகைய சில விமர்சனங்களுக்கு கோபாவேஷத்துடன் இராணுவத் தளபதி பதிலடி கொடுத்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்தன.

ஐ.தே.க. ஜே.வி.பி. இணைப்பு

இவையனைத்தும் அவ்வாறிருக்கையிலும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த தமது வசத்தில் எவரொருவரும் இல்லாததொரு நிலையிலிருந்த எதிர்க்கட்சியானது, யுத்தம் உருவாக்கி விட்டிருந்த எஞ்சியிருந்த வீரர்களுள் ஒருவரை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தல் களத்தில் நிறுத்துவதற்குத் திறன் பெற்றுள்ளமையானது எதிர்க்கட்சி ஈட்டிக்கொண்டுள்ளதொரு வெற்றியேயெனக் கருதமுடிகிறது. இங்கு புதுமையானதொரு நிகழ்வாகக் கொள்ளத்தக்கது, இணைசேர்ந்து செயற்பட இயலாததொரு நிலையில் இருந்துள்ள ஐ.தே.கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் ஒரு முகப்பட்டுச் செயற்படத்தக்கதொரு பின் புலத்தை இத் தெரிவு வழங்கியுள்ளதேயாகும்.
முக்கியமாக பொதுமக்கள் ஐக்கிய முன்னணி வசத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பலம் கிட்டியிருந்தபோது, ஐ.தே.கட்சிக்கு நாடாளுமன்றப் பலம் கிட்டியிருந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரம சிங்கவின் நாடாளுமன்றப் பலத்துடனான அரசுக்குச் சாவுமணியடித்து விடுவதற்கு கச்சை கட்டிக் கொண்டு களமிறங்கி நின்றது இந்த ஜே.வி.பி. கட்சியேயாகும்.
தமது அக் கைங்கரியம் குறித்த ஜே.வி.பி யின் அன்றைய பார்வை, தேசத்துரோக அர சொன்றை நாட்டிலிருந்து நீக்கிவிடும் உத்தமமான தொரு பெரும் பணியென்பதாகவே இருந்தது. அதன்பின்னர் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்திவிடும் அரசியல் செயற்பாட்டில் ஜே.வி.பியானது சுகப்பிரசவமொன்றுக்காகப் போராடும் மருத்துவ மாதொன்றின் பாத்திரம் வகித்துச் செயற்பட்டது.
இன்று அதே ஜே.வி.பி ., தேசப்பற்று மிக்க இரட்சகனாகக் கருதித் தம்மால் பதவியில் அமர்த்தப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு அரசியல் சவக்குழி தோண்டும் பாத்திரத்தையும், தம்மால் தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டு அதிகாரத்திலிருந்து துரத்தி விடப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை வேறு விதத்தில் பதவியில் அமர்த்திவிடும் அரசியல் செயற்பாடொன்றையும் வகிக்க வேண்டி நேர்ந்திருக்கிறது. ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.கட்சியென்ற இவற்றுக்கிடையில் நிலவிய பகை அதன் மூலமாகவேனும் தீருமானால் அதை நாட்டின் அரசியல் மேம்பாட்டுக்குக் காரணமாகும் சாதகமொன்றாகக் கருதமுடியும்.

ரணிலின் தந்திரம்

ஐ.தே.கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பிரச்சினைகள் மலிந்த இச்சிக்கலினுள் பல வர்ணங்கள் கொண்ட தொரு பாத்திரதாரியாகவிருப்பது தெரிகிறது.இதற்கு முன்னர் அவரது நிலை இலகுவில் வெளியேற இயலாத கழுத்தளவுக்கு சேற்றுக் குழியில் அமிழ்ந்துபோயிருந்ததொரு நிலைப் பாடாகியிருந்தது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் வலுவானதொரு போட்டியாளராகி விடும் திறனாற்றலை அவர் பெற்றிருக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான அந்த யுத்த வெற்றியானது மஹிந்த ராஜ பக்ஷவை ராட்சதப் பலவானாகவும் அவரைச் சித்திரக்குள்ளனாகவும் ஆக்கிவிட்டிருந்தது. சம்பிரதாய ரீதியில் நோக்கும்போது இப் போட்டியில் அடுத்த போட்டியாளராக அமைய வேண்டியது அவரேயாவார். இருந்தபோதிலும், போட்டியின் மூலம் கிட்டும் தோல்வியானது அவரது எதிர்கால அரசியல் இருப்பை அற்றுப்போகச் செய்வதற்கு இடமிருந்தது. மறுபுறத்தில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கட்சியின் வேறுமொரு பிரமுகருக்கு வழங்கும் கொள்கையை அவர் பின்பற்றினாலும் கூட, அதன் மூலமும் கட்சித் தலைமைத்துவத்தை அவர் இழந்துவிடும் நிலை மற்றும் அரசியல் எதிர்காலமொன்று அற்றுப்போகும் நிலை உருவாகவும் இடமிருந்தது. இந்நிலையில், தனது கட்சித் தலை மைத்துவத்தையும் பேணிப் பாதுகாத்துக் கொண்டு, அதேசமயம், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கடும் போட்டியை முன்னிறுத்திவிடும் முறைமையொன்றை இச்சந்தர்ப்பத்தில் கண்டறிந்து கொள்வதற்கு ரணில் திறனாற்றல் பெற்றுள்ளமையானது, தனது அரசியல் வாழ்க்கையில் அவர் ஈட்டிக் கொண்டுள்ள முகியத்துவம் பெறும் வெற்றி யொன்றாகவே கருதமுடியும். ஜெனரல் சரத் பொன்சேகா இந்த ஜனாதிபதிப் போட்டியில் வெற்றிபெற்றதாக ஊகித்துக்கொண்டு, அதன் பின்னர் ரணில் விக்கிரம சிங்கவின் எதிர்பார்ப்புக்கு அமைய அனைத்துச் செயற்பாடுகளும் நிகழுமானால், வெற்றிப் புருஷரான ஜெனரல் சரத் பொன்சேகாவை அந்த வெற்றியின் சின்னமாகக் கருதச் செய்யும் முக்கியத்தும் பெறும் வரையறைக்கு உட்படும் பதவியொன்றில் நிறுத்திவைத்து, நாட்டை நிர்வகிக்கும் அதிகார பலத்தைத் தன தாக்கிக்கொள்ளும் ஆற்றல் அவருக்குக் கிட் டக்கூடும்.வெற்றியீட்டிக் கொள்பவர் தனது வெற்றி யின் பின்னர் ரணில்விக்கிரமசிங்கவின் அரசியல் செயற்றிட்டத்தை நிராகரித்துவிட்டாலும் கூட, குறைந்தபட்சம் கட்சித்தலைமைத்துவத்தையாவது பாதுகாத்துக்கொள்ளும் திறனாற்றல் ரணிலுக்குக் கிட்டக்கூடும். அந்த அர்த்தத்தில் நோக்கும்போது இத் தேர்தலில் கிட்டும் பெறுபேறு எவ்வாறானதாக அமைந்தாலும் கட்சித் தலைமைத்துவத்தைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளும் திறனாற்றல் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிட்டுகிறது.

தமிழ் அரசியல் கட்சிகள்

ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா மற்றும் கருணா போன்றோர் அரச தரப்பிலேயே உள்ளனர். மனோ கணேசன், ஜெனரல் சரத் பொன்சேகாவைச் சார்ந்து நிற்கிறார். இங்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு யாருக்குக் கிட்டப் போகின்றது என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைபின் தலைவர்கள் அரசியல் கண்ணோட்டத்தில் ஆழமான தொரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தாலும் கூட, இந்த ஜனாதிபதிப் போட்டியில் அவர்கள் கைக்கொள்ளவிருக்கும் கொள்கை எதுவென்பது தெளிவற்றதாகவே உள்ளது.
அவர்கள் புறம்பானதொரு ராச்சியம் அல்லது அதற்குப் பதிலாகக் கோரிநின்ற சமஷ்டி ஆட்சி முறைமை தொடர்பான எண்ணத்தைக் கைவிட்டிருந்தாலும் கூட தமது இனம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்து நிற்பதுமான தீர் வொன்றைக் கோரி நிற்கின்றனர். ஆனாலும், அவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் ஆக்கபூர்வமான தீர்வொன்றை முன்வைக்க இன்னமும் அரசு திறன்பெற்றிருக்கவில்லை.
யுத்த காலத்தில் மிகப்பெரும் சாதனை படைத்து அதன்மூலம் வீரபுரஷரென்ற பெயரைத் தட்டிக்கொண்ட பிரமுகராக ஜெனரல் சரத் பொன்சேகா திகழ்கின்றார். யுத்தத்தில் கிட்டிய கௌரவம் அந்த யுத்தம் உருவாக்கிய வீரபுரஷர்கள் மூவரிடையில் எவ்விதத்தில் பகிரப்பட வேண்டியுள்ளது என்பது குறித்துப் பல்வேறு கருத்துகள் வினவினாலும் கூட, அவர் யுத்தகளத்தில் வழங்கியுள்ள பங்களிப்பு மிக விசேடமானதாகும். ஜெனரல் சரத் பொன்சேகா களமிறங்கவுள்ளார் என்ற சலசலப்பு வரும் வரையிலும் எதிர்க் கட்சியினால் விடுக்கப்படும் கடும் சவா லொன்று இல்லாத தனிப்பயணத்தையே மஹிந்த அரசு மேற்கொண்டு வந்திருந்தது. ஆனால், ஜெனரல் சரத் பொன்சேகாவின் வருகையானது, அந்த நிலைப்பாட்டில் ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத்திவிடக் காரணமாகியுள்ளதோடு, அதைச் சற்று ஆழமாக நோக்கும்போது, அதை நல்லதொரு நிலைப்பாடாக அன்றி தீயதொன்றாகக் கருத இயலாது. பலமிக்க தொரு அரசு, பலமிக்கதொரு எதிரணி அமைப் பினால் விடுக்கப்படும் சவால்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியிலேயே முன்னோக்கிப் பயணிக்க நேர்ந்துள்ளது.
இருந்தபோதிலும், தமது பார்வைக்கு எட்டும் தீவிர சக்திகளோடு அல்லாது, அதற்கு முற்றிலும் மாறான கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள தீவிர சக்திகளுடன் இணைந்தே ஜெனரல் சரத் பொன்சேகா செயற்பட வேண்டி நேர்ந்துள்ளது. முக்கியமாக, தாம் முன்னெடுத்துச் சென்ற யுத்தத்துக்குச் சார்பாக நின்று செயற்பட்ட தரப்புடன் அல்லாது, கடும் எதிர்ப்பைக் காட்டிச் செயற்பட்டுள்ள தரப்பொன்றுடன் இணைந்தே அவர் செயற்பட வேண்டி நேர்ந்துள்ளது. இந்தப் பொருந்தாத தன்மை தெளிவாகப் புலப்படும் நிலைப் பாடே நிலவுவதோடு, அது இக்கூட்டமைப் புக்கேயுரிய பலவீனமான இலட்சணமெனவும் கொள்ள முடிகிறது.
மேலும், ஜெனரல் சரத் பொன்சேகா முதிர்ந்ததொரு அரசியல் தலைவரல்ல. தேர்ச்சி பெற்றதொரு இராணுவத் தலைவரேயா வார்.இராணுவத் தலைவரொருவரிடத்தில் அரசியல் தலைவரொருவருக்கு அமையாத சீரொழுக்கக் கட்டுக்கோப்பு அமைந்திருந்தாலும், அரசியலில் போன்றல்லாது யுத்தமொன்றில் முக்கியத்துவம் பெறுவது கட்டளைகளைப் பிறப்பித்தல் மற்றும் கட்டளைகளைப் பின்பற்றலேயாகும்.

Tuesday, November 24, 2009

தமன்னா -பெரிய புராணம்

மன்னாவிடம் அப்படி என்ன இருக்கிறது என்று ஆத்திரப்படுகிறார்களாம் த்ரிஷாவும், நயன்தாராவும்.
இவர்கள் ஏன் இப்படி ஆத்திரப்படுகிறார்கள்.
தமிழ் திரையுலகமே தமன்னா பக்கம் சாய்ந்திருக்கிறது. சொல்லிக்கிற மாதிரி அப்படி ஒன்றும் அழகு இல்லை என்று ஆரம்பத்தில் ஓரங்கட்டப்பட்ட தமன்னாவுக்கு இப்போ செம மவுசு.
ஹூரோக்களும், இயக்குநர்களும், புரடியூசர்களும் போட்டி போட்டுக்கொண்டு தமன்னாவை புக் பண்ணுகிறார்கள். அதுமட்டுமல்ல சின்ன இடைவெளி கிடைத்தாலும் தமன்னா பற்றி பெரிய புராணம் பாடிவிடுகிறார்கள்.
படிக்காதவன் பட ஆடியோ வெளியீட்டின் போது சேரனும், அமீரும் மாறி மாறி அவரின் பக்கத்தில் நின்றுகொண்டார்கள்.
‘’எனக்கு தமன்னாவ ரொம்ப பிடிக்கும். நான் அவரோட அழகுல மயங்குறேன். அதுக்காக நான் அவர காதலிக்கிறேன்னு எழுதிடாதீங்க’’என்று ஜெயம்ரவி போட்டுத்தாக்கினார்.
தில்லாலங்கடி பட விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், தமன்னாவின் அழகு சூப்பர் என்றார். இப்போது பையா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஷங்கர், ‘’தமன்னாவின் நடிப்பில் படத்துக்கு படம் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
சீக்கிரமே அவர் சிம்ரன் இடத்தை பிடிப்பார்’’என்றார்.
சினேகா தொடர் புராணம் பாடிவரும் நல்ல நடிகர் பார்த்திபன், தமன்னா புராணம் பாட ஆரம்பித்திருக்கிறார்.
’’தினத்தந்தி குருவியார் பதிலில் தமன்னா இடுப்பில் கிள்ளினால் என்னவாகும்? என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பதில், ``அந்த இடம் சிவப்பாகி விடும்'' என்று இருந்தது. எந்த இடம் என்று குருவியார் சொல்லவில்லை. தமன்னாவின் இடுப்பா அல்லது கிள்ளியவரின் கன்னமா? என்று தெரியவில்லை.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால், ஏற்கனவே தமிழ் ரசிகர்களின் மனதில் தமன்னா இடம்பிடித்து விட்டார். இந்த படம் ரிலீசானால், சொல்லவே வேண்டாம். தமன்னா பிரேமின் ஓரத்தில் நின்றாலே ரசிகர்கள் மனதெல்லாம் ஈரமாகிவிடும். ``அடட மழை'' பாடலில் தமன்னா ஈரமாகவே வந்து நிற்கிறார். ரசிகர்கள் மனசு என்னவாகும்? திரையே பற்றிக்கொண்டு எரிகிறது.
ஏற்கனவே தமன்னா மார்பிள் சிலை மாதிரி இருக்கிறார். இந்த படம் ரிலீசுக்குப்பின், ஆண்கள் மனசுக்குள் சிலை வைக்கிற அளவுக்கு இருப்பார்’’என்று பெரிய்ய்ய்ய்ய்ய புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராணம் பாடினார்.

சின்னத்திரை விருது வில்லங்கம்!

சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் 2008-ம் ஆண்டிற்கான சின்னத்திரை தொடர் கலைஞர்களுக்கான விருது கடந்த 14-ந் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் வழங்கப்பட்டது. "அரசி' சீரிய லுக்காக சிறந்த நடிகை விருது ராதிகாவுக்கு தரப்பட்டது. இந்த விருதை மேடையில் பெற்றுக் கொண்ட ராதிகா இப்போது அந்த விருது தேவையில்லை என திருப்பியனுப்பியதோடு விருது தேர்வு முறையையும் விமர்சித்து அறிக்கைவிட... சின்னத்திரை வட்டாரம் செம பரபரப்பில் இருக்கிறது.


விருது வில்லங்கமானதன் பின் ணணி என்ன?


என டி.வி. வட்டாரங்களில் விசாரணையில் இறங்கினோம்.சீரியல் தயாரிப்பாளரான ராமமூர்த்தியின் விஷன்டைம் நிறுவனமும், சீரியல் ஹீரோ விஷ்வாவும் சேர்ந்து ‘"சின்னத்திரை கலைஞர்கள் விருது-2008' என்ற பெயரில் விருது விழா நடத்த முடிவு செய்தனர். விழாவை ஆஸ்கார் பாணியில் நடத்த முடிவு செய்தனர். உதாரணத்திற்கு சிறந்த நடிகை விருது என்றால் அதற்கு ராதிகா, தேவயானி, அபிதா என மூவரை யும் வேட்பாளர்களாக தேர்ந்தெடுப்பது. மூவரை யும் மேடையில் ஏற்றி சஸ்பென்ஸை கூட்டி... அதன்பின் ‘"சிறந்த நடிகை' என யாராவது ஒருவரை வின்னராக தேர்ந்தெடுத்துவிட்டு மற்ற இருவரை ரன்னராக அறிவிப்பது. இதுதான் இந்த விழாவின் ஹைலைட்! இந்த சஸ்பென்ஸ் விருது எதிர்பாராத க்ளைமாக்ஸில் முடிந்து விட்டது.


"சின்னத்திரை கூட்டமைப்பு வழங்கிய விருதில் பல திறமைசாலிகளின் பெயரை பரிசீலிக்காமலேயே நீக்கிவிட்டார்கள். இந்த விருது விழா பலரின் மனதை சங்கடப்படுத்தி விட்டது. இதனால் இந்த விருதை ஏற்றுக் கொள்ள எனக்கு மனசாட்சி இடம் தரவில்லை. அதனால் விருதை திரும்ப ஒப்படைக்கிறேன்' என்கிறார் சிறந்த நடிகை விருது பெற்ற ராதிகா.


கூட்டமைப்பின் தலைவர் விடுதலையிடம் பேசினோம்.
""மூன்றுபேரை மேடையில் ஏற்றி அதில் ஒருவரை தேர்ந்தெடுப்பது மற்றவர்களை அவமதிப்பதுபோல இருக்கிறது என தேவயானி, டைரக்டர் "கோலங்கள்' திருச்செல்வம் உட்பட பலரும் என்னிடம் சொன்னார்கள். அதோடு "உங்களுக்குத்தான் விருது' என விஷ்வா ஆசை காட்டி பலரையும் வரவழைப்பதாகவும் புகார் சொன்னார்கள். ஏர்கனவே விஷ்வா மீது இண்டஸ்ட்ரியில் கெட்ட பெயர். இதனால் விஷன் டைம் ராமமூர்த்தியிடம் ‘"விஷ்வா தரும் விருதுக்காக யாரும் வர மாட்டார்கள்' என்று சொன்னேன். "அப்படியானால் நாங்களும், உங்கள் கூட்டமைப்பும் சேர்ந்து விருது விழாவை நடத்தலாம்' எனச் சொன்னார் ராமமூர்த்தி. ஒரு மாதம் கெடு கேட்டேன். ஆனால் ‘"எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டதால் விழாவை உடனே நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நிறைய நஷ்டம் வரும்' என ராமமூர்த்தி சொன்னதால் சம்மதித்தோம். ஏற்கனவே விஷ்வா மூலம் விருது பெறுவோர் பட்டியல் தயாரானதாலும், விழா தன் கையை விட்டு போனதால் எல்லோருக்கும் போன் போட்டு விருது உங்களுக்குத்தான் என விஷ்வா குழப்பம் செய்ததாலும் சங்கடங்கள் ஏற்பட்டுவிட்டது.விருதை பெற்றுக்கொண்ட ராதிகா என்னிடம் போனில் பேசும் போது "தனக்கு இந்த விருதில் உடன்பாடில்லை. அதனால் விஷன் டைம் நிறுவனத்திற்கு விருதை திருப்பியனுப்பி விடுகிறேன்' என் றார். "இது கூட்டமைப்பு சேர்ந்து கொடுத்த விருது.
அதனால் உங்க விளக்கத்தை கடிதமாக எழுதி அத் துடன் விருதை கூட்டமைப்பிடமே ஒப்படையுங்கள்' என்று சொன் னேன். அதன்படியே செய்த ராதிகா தான் எழுதிய கடிதத்தை பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட் டார். இதனால் கூட்டமைப்பின் மீது கெட்ட பெயர் ஆகிவிட்டது. ‘"கூட்டமைப்பில் இருந்துகொண்டே கூட்டமைப்பை ராதிகா டேமேஜ் பண்ணிவிட்டார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பலரும் என்னிடம் மனம் வெதும்பி பேசினார்கள். "அது ராதிகாவின் தனிப்பட்ட கருத்து. அவரின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்' என உறுப்பினர்களை சமாதானப்படுத்தி வருகிறேன். "கூட்டமைப்பை குறை சொல்லணும்னு நினைக்கலை. ஆனா அப்படி ஒருசூழல் ஆகிப் போச்சு.
"இந்த பிரச்சனைகளுக்கெல் லாம் காரணம் விஷ்வாதான் என நீங்கள் ஒரு அறிக்கை கொடுத்து விடுங்கள்' என ராதிகா இப்போது சொல்கிறார். ‘நீங்களே விஷ்வா மீது புகார் அறிக்கை கொடுங்கள் எனச் சொல்லிவிட்டேன். விஷ்வாவை கூட்டமைப்பிலிருந்து நீக்க முயற்சி மேற் கொண்டிருக்கிறோம்!'' என்றார் விடுதலை.இந்த விருது சர்ச்சை குறித்து டி.வி. வட்டார பிரபலங்கள் பலரும் பல விஷயங்களை நம் காதில் போட்டார்கள்."இந்த விருதுக்கு 18 சீரியல்கள் போட்டிக் காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த 18 சீரி யல்களுமே சன் டி.வி.யில் வரும் சீரியல்கள் தான். இந்த விழாவை டிவியில் போட நல்ல தொகை தருவதாகச் சொன்னது சன் தரப்பு. வேறு சேனல்களின் சீரியல்களை கணக்கில் சேர்க்காமலேயே இந்த சின்னத்திரை விருது நடத்தியதே பெரிய தவறு. அடுத்ததாக "அரசி' சீரியலுக்கு சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தயாரிப்பாளர் என நான்கு விருதுகளை தருவதாக ராதிகாவிடம் விஷ்வா முன்கூட்டியே தெரியப்படுத்தினார். இதனால் தான் ராதிகா தனது வெளிநாட்டு பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். ஆனால் அதற்குள் விருது பொறுப்பு கூட்டமைப்பின் கைக்கு போய்விட்டதால் ராதிகாவுக்கு மட்டுமே விருது கிடைத்தது. இந்த கோபத்தில்தான் ராதிகா கூட்டமைப்பை சாடியதோடு விருதையும் திருப்பிக் கொடுத்து விட்டார். அத்துடன், தான் விருது பெறும் காட்சிகளையோ, விழாவில் பங்கு பெற்றதையோ டி.வி.யில் ஒளிபரப்பக்கூடாது எனவும் சொல்லி விட்டார்' என பரபரப்பின் பின்ணணியைச் சொன்னார்கள்.சீரியல்லதான் அழுகையும், ஆத்திரமும் இருக்குன்னா சீரியல் விருதுலயும் இந்தக் கதை தானா?

இலங்கை அகதிகளுக்கு கான்கிரீட் வீடுகள்: கருணாநிதி உறுதி

மிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு தனியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன. அதே நேரத்தில் ராஜீவ் காந்தியும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறிசபாரத்தினமும், பத்மநாபாவும் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கினர். அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்த எனக்கு உரிமை இல்லையா?
புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் மறைந்த போது இரங்கல் கவிதை எழுதினேன்.
இறந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட ஜெயலலிதாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னைக் கண்டித்து அவர் அறிக்கை வெளியிட்டார்.
இப்படி அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல மனம் இல்லாமல் அல்லது துணிவு இல்லாமல் என் மீது பாய்கிறார்களே?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்று பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் ஜெயலலிதா.
இப்போது நல்லதை எண்ணி நடுநிலையுடன் நான் எழுதினேன். இதற்காக, என் மீது பாய்கிறார் ஜெயலலிதா.
பிரபாகரனை என்றைக்கும் ஆதரிப்பேன் என்று சொல்லிக் கொண்டிப்பவர்களும், ஜெயலலிதாவுக்கு துணை போய் என்னைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள்.
இலங்கை அகதிகளுக்காக... தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளின் மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.45 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதர நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட துறைகள் பொறுப்பேற்று உடனடியாக நிறைவேற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.100 கோடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான செலவுகள் போக, மீதமுள்ள தொகையில் தக்கதொரு கட்டட வடிவமைப்பை ஏற்படுத்தி தகுதியான நிலத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர், புதிய கான்கிரீட் வீடுகள் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்ட தனியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

புலிப் போராளிகளில் 1500 பேருக்கு மேல் பலியானார்கள்.ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 175: புலிகளைத் தாக்கிய ஆழிப்பேரலைகள்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுக்கோப்பு என்பது கருணாவின் நடவடிக்கையால் குலைந்தது. கிழக்கு புறக்கணிக்கப்படுகிறது என்ற புகாரைக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
விடுதலைப் புலிகளின் இயக்கத்திலிருந்து விலகிய கருணா, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டிஎம்விபி) என்ற கட்சியைத் தொடங்கினார். 20 ஆண்டுகளாகப் புலிகள் இயக்கத்தில் மட்டக்களப்பு-அம்பாறை பகுதிகளின் பொறுப்பாளராக இருந்ததால், அவரின் கீழ் சுமார் ஏழாயிரம் போராளிகள் இருந்தனர். அவர்களில் 1400 பேர் மட்டும் அவருடன் இணைந்தனர். கிழக்குப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, புலிகள் வடக்கிலிருந்து புறப்படும் முன்பாகவே, கருணாவின் ஆட்கள் ராணுவ முகாமில் சரணடைந்து, கருணா படையணியாக உருவாக்கப்பட்டு, 20 ஆண்டுகால புலிகளின் யுத்த தந்திரங்கள் ராணுவத்துக்குப் போய்ச் சேர்ந்தன.
அவரைக் கட்டுப்படுத்த, போர் நிறுத்த ஒப்பந்தத்தை சேதப்படுத்தாத வகையில் அவரது குழுவினர் மீதான நடவடிக்கைகளை புலிகள் இயக்கம் மேற்கொண்டது. ஆனாலும் அவரின் வெளியேற்றப் பின்னணியில் ரணிலின் கட்சி இருக்கிறது என்பது புலிகளின் குற்றச்சாட்டாக இருந்தது. (இதைப் பின்னாளில் காமினி திஸ்ஸநாயக்காவின் மகன் நவீன் திஸ்ஸநாயக்கா, "புலிகள் இயக்கத்திடமிருந்து கருணாவை நாங்கள்தான் பிரித்தெடுத்தோம்' என்று நுவரேலியா தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது வெளிப்படுத்தினார். அக்கூற்றை ரணில் உள்ளிட்டவர்கள் மறுக்கவில்லை.)
தென் இலங்கை சக்திகளாலும், ராணுவத்தாலும் கருணா ஒரு விலைமதிப்பற்ற சொத்து எனக் கருதப்பட்டு, அவருக்கு ஊட்டம் அளிக்கும் வேலைகளில் மும்முரம் காட்டப்பட்டது. ("இலங்கையில் சமாதானம் பேசுதல்'-குமார் ரூபசிங்க-அடையாளம் வெளியீடு).
அடுத்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உருமய ஆகிய சிங்களவெறிக் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கப்பட்டதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்று, பிரதமராக மகிந்த ராஜபட்ச தேர்வு ஆனார் (4.4.2004).
இதே தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் கூடி, தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டு, 2001-ஆம் தேர்தலில் பங்கேற்றது போலவே இப்போதும் தேர்தலில் நின்றனர். இக்கால கட்டத்தில் புலிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டிருந்தது. கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் "புலிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்' என வலியுறுத்தப்பட்டிருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இத் தேர்தலில், 22 இடங்கள் கிடைத்தன. நாடாளுமன்றத்தில் இவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் முன்னணியாகச் செயல்பட்டனர்.
தேர்தலுக்கு முன்பு சந்திரிகாவின் விமர்சனம் என்பது வேறு; தேர்தல் முடிந்ததும் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்க அவரே ஆர்வம் காட்டி, நார்வே குழுவினரிடம் பேசினார். புலிகளிடமும், இடைக்கால தன்னாட்சி நிர்வாக சபை குறித்தும், நிரந்தரத் தீர்வு குறித்தும் ஒரே நேரத்தில் பேசலாம் என்றார்.
அது தவிர சந்திரிகா காலத்தில், 2000-ஆம் ஆண்டில் அவரது தயாரிப்பான தீர்வுத் திட்டத்தையும் கூடப் பரிசீலிக்கலாம் என்றும் விருப்பப்பட்டார்.
அந்த 2000-வது திட்டமும் இடைக்கால நிர்வாகம் சார்ந்ததுதான். அதே நேரத்தில் அதிபர் முறையை ஒழித்து, வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான நாடாளுமன்ற அரசை நிறுவவும் முயன்றார். இலங்கை அரசியல் அமைப்புப்படி ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே அதிபராக இருக்க முடியும். வெஸ்ட்மினிஸ்டர் முறையிலான நாடாளுமன்ற அரசமைப்புக்குத் தாவினால் மீண்டும் ஒருமுறை பிரதமராகும் வாய்ப்பு அவருக்கும் கிடைக்கும் என்பது மறைமுகத் திட்டமாகும்.
2004-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி என்னும் ஆழிப் பேரலை ஏற்படுத்திய இழப்புகள் என்பது கொஞ்ச நஞ்சமல்ல. அந்த சுனாமியும் கூட ஏற்கெனவே போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில்தான் முகாமிட்டது. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தி, மிகப் பெருந்தொகையான கட்டுமானங்களையும் அடியோடு பெயர்த்தெடுத்துக் கொண்டு போன நிலையில், புலிகளுக்கே அதிக அளவில் இழப்பு ஏற்படுத்தியிருந்தது.
புலிப் போராளிகளில் 1500 பேருக்கு மேல் பேரலைக்குப் பலியானார்கள். அவர்களின் கடற்படைத் தளமும், ஏராளமான ஆயுதங்களும், கப்பல்களும் கடலலைகளால் மூழ்கடிக்கப்பட்டன.
திகைத்து நின்று வேடிக்கை பார்க்காமல் இலங்கை அரசு செயல்படுவதற்கு முன்பாகவே, புலிகள் களத்தில் இறங்கி, மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளில் தீவிரம் காட்டினர். இந்த சுனாமிக்குப் பிரபாகரனும் பலியானதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அரசு கெஜட்டும் அவ்வாறே செய்தி வெளியிட்டது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய பத்திரிகை ஒன்று "பிரபாகரன் மறைவு' என்றே செய்தி வெளியிட்டது. இதுபோன்ற செய்தியை அப் பத்திரிகை, இதற்கு முன்பும் ஒருமுறை வெளியிட்டது.
அந்தப் பகுதியில் இருந்த தூதரகங்கள் (இத்தாலி) தங்களால் முடிந்த நிதியை புலிகளிடம் அளித்தனர். இதனால் சந்திரிகா வெகுண்டெழுந்து, புலிகளுக்கு யாரும் நிதியளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். தூதரகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். வரும் நிதிகளையெல்லாம் வாங்கிக் குவித்தார். இதனால் எழுந்த புலிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க "சுனாமி புனரமைப்பு ஒப்பந்தம் போடலாம்' என்று சமாளித்தார்.
சுனாமி பாதிப்புகளைப் பார்வையிட, ஐ.நா. சபை பொதுச் செயலாளர் கோபி அன்னான் இலங்கைக்கு வருகை தந்தார். அவரது கண்களில் புலிகளின் செயல்பாடுகள் படாமல் அதிபர் சந்திரிகா பார்த்துக் கொண்டார்.
சுனாமிக்குப் பின்னர், வெளிநாட்டு உதவிகளை வடக்கு-கிழக்குப் பகுதிகளில் மீட்பு, மறுகட்டுமானம், புனர்வாழ்வுப் பணிகளுக்காக தொழிற்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பு (டர்ள்ற் பன்ள்ய்ஹம்ண் ஞல்ங்ழ்ஹற்ண்ர்ய்ஹப் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் நற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங் -டபஞஙந)ஒன்று புலிகள்-சந்திரிகா அரசிடையே உருவானது (ஜூன் 2005).
இதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஆறு மாவட்டங்களிலுள்ள கரையோர மக்களுக்கு விரைவாக நிவாரணம் அளிக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. வடக்கு-கிழக்கில் மன்னார், வவுனியா மாவட்டங்கள் இதில் உட்படாத மாவட்டங்களாகும். ஆனாலும் போரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இவை. எனவே மறுவாழ்வுப் பணிகளில் இந்த மாவட்டங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
இந்தத் திட்டத்தின்படி நிதியளிப்பு கிடைக்கும் சூழ்நிலையில், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து சந்திரிகாவின் அணியிலிருந்த ஜே.வி.பி. கட்சி வழக்குத் தொடர்ந்தது. இலங்கை உயர்நீதிமன்றம் இவ் வழக்கினை ஏற்று ஒப்பந்தத்திற்குத் தடைவிதித்தது. புலிகள் மற்றும் அரசுத்தரப்பிடையே (சந்திரிகா) மீண்டும் நெருக்கம் ஏற்படும் என்று நம்பிய நேரத்தில் நீதிமன்றத் தடை மூலம் இடையூறு நேர்ந்தது. எனவே வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளும் புனர்வாழ்வுப் பணிகளுக்கான நிதி யாவும் சிங்களப் பகுதிகளுக்கே சென்றது.
அதிபர் சந்திரிகாவின் பதவிக்காலம் நவம்பர் 2005-இல் முடிவுற இருந்தது. தந்தை பண்டாரநாயகா, தாயார் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா என்கிற சங்கிலித்தொடர் ஆட்சியதிகாரம் தன்னுடன் முடிவு பெறுவதை சந்திரிகா விரும்பவில்லை. எனவே, தனக்குப் பிறகு தனது தம்பி அநுரா பண்டாரநாயகாவை அதிபர் பதவிக்கு நிறுத்தப் பெரும் முயற்சியெடுத்தார்.
காலந்தாழ்ந்த இந்த முடிவினை மகிந்த ராஜபட்சவும், அவரது ஆதரவாளர்களும் முறியடித்தனர். சந்திரிகாவின் சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்தாவின் ஆதரவாளர்களே பல்வேறு பொறுப்புகளில் நிலைபெற்றிருந்ததால் சந்திரிகாவின் முயற்சி பலனளிக்காது போயிற்று. மகிந்த ராஜபட்சவை, அதிபர் வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது.
சமாதான முயற்சியில் ரணில் பெற்றிருந்த நல்ல பெயர், அதிபர் தேர்தலில் அவருக்கு வெற்றியைத் தந்துவிடக்கூடாது என்பதற்காக சிங்களத் தீவிரவாதிகள் பெயரால், நார்வே நாட்டுத் தூதுவரகம் முன்பாக சவப்பெட்டிகள் ஊர்வலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நார்வே நாட்டின் தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டம் நடத்துவது, பெüத்த இளம்பிக்குகளைக் கூட்டி வந்து ஆர்ப்பாட்டம் செய்வது உள்ளிட்ட செயல்களின் பின்னணியில் மகிந்த ராஜபட்ச இருந்தார் என "இலங்கையில் சமாதானம் பேசுதல்' (அடையாளம் வெளியீடு) என்னும் நூலில், அதன் ஆசிரியர் குமார் ரூபசிங்க தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது அன்றைய தேர்தல் காலச் சூழ்நிலையை விளக்கும்.
வாஷிங்டன் ஆலோசனைக் கூட்டத்தில் புலிகள் ஒதுக்கப்பட்டமை, அதுகுறித்துப் புலிகளுடன் ஆலோசனை நடத்தாதது, தொடர்ந்து அக்கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் கூறிய புலிகள் குறித்து வெளியிட்ட கருத்துகளும், "புலிகள் பேச்சுவார்த்தையை முறித்தால், கஷ்டப்படப்போவது அவர்கள்தான். நான் சர்வதேச சமுதாயத்துடனேயே சொல்வேன். புலிகள் அளிக்கும் வாக்குறுதிகளில் அவர்கள் உறுதியாக இருக்கவேண்டும்' என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியது, அதற்கு பாலசிங்கம் அளித்த விளக்கத்துக்கு இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் அளித்த விமர்சனம், அமெரிக்காவின் கரையோரக் காவல் கப்பல் ஒன்றை பால்டிமோரில் நடைபெற்ற நிகழ்வில் மிலிண்டா மோரகொடா பெற்றது, கருணா பிரச்னையில், "சமாதான நடைமுறையின் ஓர் உற்பத்தி கருணா. யுத்தச் சூழ்நிலையில் அவரால் தற்போதைய முடிவை எடுத்திருக்கமுடியாது. துப்பாக்கிகளை அமைதிப்படுத்தியதன் மூலமும், நெடுஞ்சாலைகளைத் திறந்தவிட்டதன் மூலமும் விடுதலைப் புலிகளுக்கு மாற்று வழிகளை வழங்கும் சூழ்நிலையை நாம் உருவாக்கினோம்' என மிலிண்டா மோரகொடா கருத்து தெரிவித்ததன் மூலமும் (ஆதாரம்: மேலது நூல்), போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகளில் ரணில் அரசு அக்கறை காட்டாதது, குறிப்பாக மீள்குடியேற்றம், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலிருந்து ராணுவம் வெளியேறாமை, கடலில் மீன்பிடி உரிமை மறுக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால், தமிழர்கள் தேர்தலில் பங்கேற்க தயக்கம் காட்டினர். முடிவில் மகிந்த ராஜபட்ச குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபரானார் (19-11-2005).

Monday, November 23, 2009

Gazette notification for Presidential poll sent to print

The gazette notification announcing the holding of the Presidential elections next year is now being printed by the government printer, sources at the government printer told www.shockan.blogspot.com a short while ago. The gazette will later be sent to the Commissioner of Elections. (YP)

செல்போனில் எடுத்த குடும்ப பெண்களின் படத்தை இண்டர்நெட்டில் பரப்பினார்கள்: மாணவர்கள் உள்பட 6 பேர் சிக்கினர்

சென்னையில் ஆண்களும், பெண்களும் சகஜமாக பேசி பழகுவது அதிகரித்து வருகிறது. கள்ளம்கபடம் இல்லாமல் இந்த நட்பு நீடித்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி. அதே வேளையில் நட்பாக பழகும் பெண்ணிடம் சில்மிஷ வேலைகள் செய்ய ஆரம்பித்தால் பெண்ணின் பாடு திண்டாட்டம்தான்.

அந்த வகையில் சில வக்கிர மனம் படைத்த வாலிபர்கள் தங்களுடன் நட்புடன் பழகும் குடும்ப பெண்களிடம் நைசாக பேசி செல்போன் காமிரா முலம் படம் எடுத்துக் கொள்கிறார்கள். பின்னர் அந்த படத்தை பப்ளிக் இணைய தளங்களில் சேர்த்து விடுகின்றனர். பெரும்பாலான பெண்களின் படத்துடன் அவர்களது செல்போன் நம்பர்களையும் போட்டு விடுகின்றனர்.போதாகுறைக்கு அந்த படத்திற்கு அருகில் நான் சென்னையில் இருக்கிறேன். உல்லாசத்திற்கு தயார் என்ற அறிவிப்பு ஆங்கிலத்தில் மின்னுகிறது. இதை பார்த்து சபல ஆசாமிகள் பலர் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்கின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் தற்கொலை வரை செல்ல நேரிடுகிறது. இத்தகைய விபரீதங்களை தடுத்து அதிரடி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர்கிரைம் போலீசார் இத்தகைய நபர்களை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் திருவான்மியூரைச் சேர்ந்த பாமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் பொறியியல் கல்லூரி மாணவி. இவர் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

அதில் யாரோ மர்ம ஆசாமி நான் கல்லுரியில் இருந்து சுற்றுலா சென்ற போது எடுத்த படத்தை இண்டர்நெட்டில் வெளியிட்டு தன்னுடைய செல்போன் நம்பரை குறிப்பிட்டு உல்லாசத்துக்கு தயார் என்ற ஆபாச வாசகத்தோடு பரப்பி விட்டுள்ளான்.இதனால் எனக்கு நிறைய பேர் போன் செய்து தொல்லை செய்கின்றனர். இண்டர்நெட்டில் பரப்பப்பட்ட எனது படங்களை அழித்து, பரப்பி விட்ட மர்ம ஆசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் அதிரடியாக துப்பு துலக்கினர்.

பாமாவின் படத்தை இண்டர்நெட்டில் வெளியிட்டது அவருடன் கல்லூரியில் படிக்கும் நெருங்கிய நண்பர். அவர் மீது ஒருதலையாக காதல் கொண்டு இது போன்ற வக்கிர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த மாணவரை பிடித்து எச்சரித்தனர்.

புகார்தாரர் பாமா கேட்டுக்கொண்டதால் மாணவரின் எதிர்கால வாழ்க்கை நலன் கருதி மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதே போல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணின் படத்தை உடன் வேலை பார்க்கும் ஊழியரே இண்டர்நெட்டில் பரப்பி விட்டதாக சிக்கினார். பக்கத்து வீட்டு பெண்ணின் படத்தை இது போல் பரப்பிய மற்றொரு மாணவரும் பிடிபட்டார். இதுவரை சென்னையில் 2 மாணவர்கள் உள்பட 6 பேர் போலீசில் சிக்கி உள்ளனர்.

இதுகுறித்து சைபர்கிரைம் உதவி போலீஸ் கமிஷனர் சுதாகர் கூறியதாவது:-

இண்டர்நெட் மூலம் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களை தடுப்பதில் போலீசார் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். குடும்ப பெண்களின் படத்தை செல்போன் நம்பர்களுடன் வெளியிட்டு தவறான வகையில் அவதூறு பரப்பும் நபர்கள் தப்ப முடியாது. கடந்த 2 வருடத்தில் இதுபோன்று 6 புகார்கள் வந்தது.இதில் அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் சிக்கினர். பெரும்பாலும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நன்கு அறிமுகமானவர்களே இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பெண்கள் விருப்பப்படியே அவர்களை எச்சரித்து அனுப்பி விடுகிறோம். புகார்தாரர்களின் பெயர் விவரம் ரகசியம் காக்கப்படுகிறது. சமீபத்தில் கூட மாணவியின் படத்தை அவதூறாக பரப்பிய கல்லூரி மாணவர் சிக்கினார்.

எனவே இது போன்ற மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் முறைபடி புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஒரு லீற்றர் மனிதகொழுப்பு 15,000 டொலர்!

60 க்கு மேற்பட்ட மனிதர்கள் படுகொலை!
ஒரு லீற்றர் மனிதகொழுப்பு 15,000 டொலர்!!
ஐரோப்பியரின் அழகுசாதனைக்கு மனித கொழுப்பா!!!
ஆட்டைக்கடித்து! மாட்டைக்கடித்து!! மனிதனைக் கடிக்கும்!!! வெள்ளை ஏகாதிபத்தியர்களின் அழகுசாதலைக்கு மனிதகொழுப்பு தேவை என்பதற்காக கடந்த காலத்தில் 60மேற்பட்டவர் களை கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர்கைது. இவர்கள் கொலை செய்த மனிதர்களிடம் இருந்து பெற்ற கொழுப்பை ஒரு லீற்றர் 15,000 டொலர் வீதம் விற்று வந்துள்ளனர். மேற்படி நால்வரைக் கொண்ட குழுவானது பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக ஆசை காட்டி, இனிக்க கதைத்து அழைத்து வந்து படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது. இன்று பலவிதங்களில் பணம் சம்பாதிப்பதற்கு கிராமங்களை அழிப்பதும் அங்குவாழும் மக்களை கொலை செய்வதும் சர்வதேசத்தில் ஒரு சாதாரன நிகழ்வாகிவிட்டது. ஆனால் அந்த கிரமப்புரங்களில் வாழும் மக்கள் சேற்றில் குளித்தால் தான் பட்டனத்தில் அரைகுரை பூச்சுக்களுக்கும், வயிற்றுக்கும் ஆகாரங்கள் கிடைக்கும் என்ற பகுத்தறிவுகள் அற்றவர்கள் இன்று பட்டனத்தில் அதிகரித்து விட்டார்களா? அல்லது அவர்களிடம் மனிதாபிமானம் தொலைந்துவிட்டதா?? என்று கேள்விகள் எழுகின்றது. மேலும் சந்தேகநபர்கள் ஐரோப்பாவிலிலுள்ள அழகுசாதன மற்றும் மருந்தக கம்பனிகளுக்கு மனிதக் கொழுப்பை விற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை கவலை தெரிவித்துவருகின்றது. இந்த சர்வதேச மனிதக் கொழுப்பு கடத்தல் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெளதமி நடிக்கும் டிவி சீரியல்... கமல் தொடங்கி வைத்தார்!

அபிராமி ராமநாதன் தயாரிக்கும் புதிய மெகா சீரியலில் நடிக்கிறார் கௌதமி. சீரியலின் பெயர் அபிராமி!சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி மெகாமாலில் இதன் துவக்க விழா இன்று நடந்தது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.திங்கள் முதல் வெள்ளி வரை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதையை எழுதியிருப்பவர் நடிகை குட்டிபத்மினியின் மகள்.
இதுபற்றி கெளதமி கூறுகையில், "நிறைய பேர் என்னை மீண்டும் நடிக்கச் சொல்லிக் கேட்டார்கள். ஆனால் அப்போதல்லாம் மறுத்து வந்த நான், இந்தக் கதையைக் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். கிட்டத்தட்ட 8 மாதங்கள் இதற்காக என்னைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் குட்டிபத்மின். அவருக்கு நன்றி" என்றார்.அபிராமி ராமநாதன் பேசுகையில், "ஆரம்பத்தில் சில சீரியல்கள் தயாரித்தேன். இப்போது மீண்டும் அதை தொடங்கியுள்ளேன். இந்த முறை மிக விரிவாக செய்யப் போகிறோம். இப்போது கலைஞர் தொலைக்காட்சிக்கு ஒரு சீரியல் தயாரிக்கும் நாங்கள், அடுத்து எல்லா டிவிக்கும் தொடர்கள் செய்யத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இந்தத் தொடரில் கெளதமி அணியும் ஆடைகளை நல்லி குப்புசாமி நிறுவனமும், ரூ 50 லட்சம் மதிப்புள்ள நகைகளை என்ஏசி ஜுவல்லரியும் ஸ்பான்சர் செய்துள்ளன. முதல் காட்சி படமாக கேமராவை கமல்ஹாஸன் துவக்கி வைக்க, ராமநாராயணன் க்ளாப் அடித்தார்.விழாவில் குஷ்பு, கஸ்தூரி ராஜா, கல்பனா, கேஆர்ஜி, கலைப்புலி தாணு, கலைப்புலி சேகரன், விசி குகநாதன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடம் முற்பகுதியில் நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது

இன்று ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அக்கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடம் முற்பகுதியில் நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கான திகதி பற்றிய அறிவித்தல் தேர்தல் ஆணையாளரால் விரைவில் வெளியிடப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவுக்கு கேரள அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

ம்முட்டி-சரத்குமார் நடித்த பழசிராஜா படத்திற்கு மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார் இளையராஜா. இது என் முதல் படமாக அமைந்திருக்கக்கூடாதா என்று இந்த படம் பற்றி ராஜாவே புகழ்ந்துதள்ளினார்.
இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் எல்லோராலும் பாரட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் கேரள அமைச்சர் பேபி மட்டும் ராஜா மீது மன வருத்தத்தில் உள்ளார்.
இதற்கு காரணம், சமீபத்தில் நடந்த பழசிராஜா படத்தின் நிகழ்வில் ராஜா பேசும் போது, ’’பழஸி ராஜா என்ற மலையாளப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அந்தப் பாடல்கள் பெரும் வெற்றியடைந்துள்ளன. இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இளையராஜா பங்கேற்றுப் பேசினார்.அப்போது படத்துக்கு பாடல் எழுதிய மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குரூப், உணர்ச்சியற்ற வரிகளை எழுதித்தர, அதை அந்தப் படத்தின் தன்மைக்கேற்ப உணர்ச்சிப்பூர்வமாக தான் மாற்றியது குறித்து விவரித்தார். இத்தனைக்கும் அவர் தவறாக அந்தக் கவிஞர் பற்றிச் சொல்லவில்லை. கவிஞர்கள் படத்தின் தன்மைக்கேற்ப பாடல்களை எழுத வேண்டும்’’ என்று கூறினார்.
இது பற்றி அறிந்த கேரள மாநிலத்தின் அமைச்சர், ’’ஓ.என்.வி.குரூப்பும் பெரிய சாதனையாளர்தான். இதை மறந்துவிட்டாரா இளையராஜா?
ஒருவேளை இளையராஜாவுக்கு மறதிநோய் இருக்கலாம். இதனால்அவர் பழசிராஜா பாடல்கள் குறித்து விமர்சனம் எழுப்பி இருக்கலாம். இது நல்லதல்ல...’’என்று தெரிவித்தார்.

Sunday, November 22, 2009

Colombo-Jaffna bus service begins

Colombo-Jaffna bus service begins :: Buses will leave for Jaffna daily from Kotahena and Wellawatta areas at 12.30 midnight and 1.30 am respectively

UN Chief welcomes Sri Lanka's decision to allow more freedom to IDPs

The United Nations Secretary-General Ban Ki-moon Saturday welcomed the Sri Lankan government's decision to allow more freedom of movement to the Internally Displaced Persons sheltered in welfare camps in the North.
Sri Lanka government said Saturday that the displaced civilians in the camps will have more freedom to move in and out of the camps with effect from next month ahead of their resettlement.
"The Secretary-General also welcomes the release of over half of the IDPs from the camps, and encourages the Government to continue to prioritise the return of IDPs," the spokesperson for the Secretary-General said in a statement.
The UN has been pressing the Sri Lankan government to grant the freedom of movement to the detainees and for their early resettlement.
"The Secretary-General urges the Government of Sri Lanka to continue to work with the UN and other humanitarian partners to improve the quality of the returns process, including through consultation with the IDPs themselves, and to ensure the best possible assistance and services to returnees," the statement said.
Senior Presidential Advisor and parliamentarian Basil Rajapaksa who is leading the "Uthuru Wasanthaya" development program said the restrictions imposed on the movement of civilians in the camps will be lifted with effect from 1st December 2009 to enable them to freely move to any part of the region.
He further said that all the displaced persons would be resettled in their own villages by the 31st of January.
The government has resettled over 140,000 IDPs so far and another 136,000 are remaining in the camps.

election on jan 23

President to declare early poll date tomorrow- Official
President Mahinda Rajapaksa will announce a date for early national elections tomorrow (Monday), a senior government official told Reuters. Three other government sources confirmed the announcement and said the poll date would most likely be Jan. 23.

நமக்கு விடப்பட்ட சவால்!

மெரிக்காவின் வேகத்துக்கும் வேறு பின்னணிகள் உள்ளது. அவற்றில் இந்தியப் பெருங்கடல் பிராந்திய வல்லாதிக்க கணக்குகள் உண்டு. அவைதான் அடிப்படையானவை. சீனா- ரஷ்யா-ஈரான் நாடுகளை இப்போது இந்தியப் பெருங்கடலுக்கான ஐரோப்பிய-ஆசிய அச்சுக் கூட்டணி என்கிறார்கள் (Euresian Alliance). தமிழர்களை அழிக்க கனரக, நவீன, ரசாயன ஆயுதங்கள் மற்றும் பெரும் பொருளுதவி கொடுத்துதவியவர்கள் இவர்களென்பதால் ராஜபக்சே சகோதரர்கள் அவர்கள் பக்கமாய் சாய்கிறார்கள். அதன்வழி மேற்சொன்ன நாடுகள் இந்தியப் பெருங்கடலில் வலுவாகிற சூழலை அமெரிக்க மேற்குலகம் இடைமறிக்க விழைகிறது. ராஜபக்சே சகோதரர்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவது அதற்கான ஓர் தந்திர வியூகம். அவ்வளவுதான்.
கார்த்திகை 27 வருகிறது. தமிழீழக் கனவு சுமந்து களமாடிக் காவியமாகிய முப்பத்து ஏழாயிரத் திற்கும் மேலான மாவீரர்களையும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும் தமிழுலகம் வணங்கிப் பணியும் நாள். ஈழத்திற்கான இறுதிப்போருக்கு நம்மையெல்லாம் அழைக்கின்ற நாள். தூர விலகி நிற்பதற்கு இதுவரையும் நூறு காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் மே-17 முள்ளிவாய்க்கால் இன அழித்தல் நடத்தி முடிக்கப்பட்ட பின் நாம் விலகி நிற்பதை நியாயப்படுத்த எக்காரணமும் இல்லை.

லட்சோப லட்சம் தமிழ் மக்களின் வீடு, வாசல்களை தரைமட்டமாக்கி, ஆடு, மாடுகள் போல் அடித்துத் துரத்தி உணவு, மருந்து, குடிநீர் மறுத்து குழந்தைகள், பெண்க ளென்றுகூட கருணை காட்டும் மனமின்றி வன்கொலைகள் புரிந்து, வயதுப் பிள்ளைகளோடு பெற்றவர்களையும் நிர்வாணமாய் கரங்களுயர்த்தி நடக்க வைத்து, ஒரேநாளில் இருபதாயிரம்பேரை படுகொலை செய்து, நூற்றுக் கணக்கானவர்களை உயிரோடும் புதைக்க முடிந்த கொடுங்கோலர்களோடு மானமுள்ள எந்தத் தமிழனுக்கும் சமரசம் இல்லை, நீதி கிடைக்கும்வரை, ஈழம் மலரும்வரை நாம் ஓய்வதுமில்லை.

எல்லாவகையிலும் வேதனையுற்று நிற்கிறோம். ஆனால் ஒடுங்கிப் போகவில்லை. மனக்கலக்கம் அடைந்து நிற்கிறோம், ஆனால் மனம் உடையவில்லை -உறுதி தளரவில்லை, வீழ்த்தப்பட்டு நிற்கிறோம், ஆனால் முற்றிலுமாய் அழிந்து போகவில்லை. இந்த நம்பிக்கையோடே அடிபணியமாட்டோம், அறப்போர் தொடரும் எனச் சங்கநாதம் முழங்கி உலகத் தமிழர்கள் மாவீரர்களையும், உயிர் நீத்த மக்களையும் வணங்க அணிவகுக்கிறார்கள்.

நண்பர் ஒருவர் சொல்லிக்கேட்ட ஈழத்துப் புறநானூற்றுக் கதைகளில் ஒன்று இது. தற்கொலைப் போராளி ஒருவர் தன் இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். அவரை வழிநடத்தி முன்செல்ல வெளியிலும் மறைவிலுமாய் பல அணிகள் இருக்குமாம். இலக்கினை நெருங்கியபின் கடைசியான தாக்குதல் உத்தரவினை புலனாய்வுப் பிரிவின் போராளி ஒருவர் வழங்குவாராம். அவ்வாறே பயணித்து, தடைகள் பல கடந்து தாக்கவேண்டிய இலக்கு வட்டத்தை அடைகிறார் அத்தற்கொலைப் போராளி. அங்குதான் தெரிகிறது தாக்குதலுக்கான இறுதிக் கட்டளையை தரவேண்டிய புலனாய்வுப் போராளியாக நிற்பது ஐயிரண்டு திங்கள் சுமந்து பெற்று ஆசையுடன் தனை வளர்த்த தாய் என்ற உண்மை. இருவரும் போராட்ட இயக்கத்தில் இணைந்து பயணிப்பதுதான் அவர்களுக்குத் தெரியுமேயன்றி, யார் எத்துறையில் கடமையாற்று கிறார்களென்பது இருவருக்குமே தெரியாது. தாயும் மகனும் சந்தித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. விடுதலைக்கான தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கும் இறுதிக் கணத்தில் தாயும் மகனும் மீண்டும் ஒருகணம் இறுதியாகச் சந்திக்கிறார்கள். கண்கள் பேசுகின்றன. தாய்மை இடைமறிக்க வில்லை. தமிழீழம் என்ற தாயகக் கனவே அந்த வீரத்தாயின் ஆன்ம உயிராய் நிற்கிறது. கட்டித்தழுவி கண்ணீருடன் கடைசி முத்தம் தரும் அவகாசம்கூட இல்லை. தாக்குதல் கட்டளையை பிறப்பிக்கிறாள் அந்த புதிய புறநானூற்றுத் தாய். அம்மா என்று அழைக்கவோ, இன்னும் சிலகணம் ஈன்ற தாயை அணைத்துப் பிரியவோ அத்தனயனும் எத்தனிக்க வில்லை. கட்டளை பிறந்ததும் இலக்கு நோக்கி நகர்ந்து தீப்பிழம்பாய் தன்னை அர்ப்பணிக்கிறான். தாய்மையின் விகாசங்களில் பிறிதொரு நெருப்பு நிச்சயம் எழத்தான் செய்திருக்கும். இல்லையேல் அவள் தாயில்லை. ஆயினும் தாய்மையின் தவிப்பும், தாயகக் கனவும் தழுவிக்கொண்ட வியாகுலப்பொழுதில் அந்தத் தாய் அரவணைத்தது தாயகக் கனவையே.

ஒன்றா, இரண்டா... தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகள் முப்பத்தேழாயிரத்திற்கும் மேல். அவர்களது முடிவிலா கனவாம் தமிழீழ நாள்தான் கார்த்திகை 27. இவ் ஆண்டின் அப்புனித நாள் முற்றிலும் புதியதோர் காலச்சூழலில் வருகிறது.

முக்கியமானதொரு அறிக்கையினை இம்மாதம் கடந்த 8-ம் தேதியிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்டிருந்தது. முள்ளி வாய்க்கால் மே-17 ஆயுதப்போராட்ட மௌனிப்புக்குப்பின் விடுதலைப்புலிகளின் கட்டளைத் தலைமை பற்றின தெளிவானதும் வெளிப்படையானதுமான தோற்றப்பாடு இன்னும் நமக்குக் கிட்டவில்லையென்றாலும்- அந்த அறிக்கையின் இரண்டு கருத்துகள் கவனத்திற்குரியவை யாய் இருந்தன.

முதலானது, ""முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வீரமிகு ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரழிவினை தவிர்ப்பதற்காக மௌனிக்கப்பட்டது. இன்றைய சூழலில் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும் -குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடமும் ஒப்படைக்கப்படுகிறது - என்ற பகுதி.

இரண்டாவது, அரசியல் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிஈழம் அமைக்கும் உரிமை ஈழத்தமிழ் மக்களுக்கு உண்டு என்பதை உலகளவில் துரிதமாய் நிறுவும் பணியில், புலம்பெயர் ஈழமக்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமையவேண்டுமென்ற அறிவுறுத்தலும், அவ்வாறு அமைவதானது மக்கள் பங்களிப்புகளை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும் உதவக்கூடியதாக அமையும் -என்ற அறிவுறுத்தல்.

இந்தியத் தமிழர்களாகிய நாம் ஏன் ஈழ விடுதலை முயற்சியில் இணைகிறோம் -இணையும் வரலாற்றுக் கடமையில் இருக்கிறோமென்றால் அங்கு அம்மக்கள் அழிக்கப்பட்டமைக்கு ஒரே காரணம் அவர்கள் நாமும் பேசுகின்ற தமிழ்மொழியின் மக்களாயும், அதன்வழி "தமிழர்' என்ற இனத்தவராயுமிருந்ததால். எந்த அடிப்படையில் அடக்குமுறை நிகழ்கிறதோ, அதே அடிப்படையில்தான் எதிர்ப்பதிலும் அமையுமென்ற வகையில் தமிழ்மொழி- இன- தேசிய அடிப்படையில் நின்று சிங்களப் பேரினவாதத்தையும் அதன் துணையாளர்களையும் நாம் எதிர்கொள்கிறோம். இரண்டு அங்கு நிகழ்ந்தது இன அழித்தல்; நடந்தேறிய கொடூர போர்க்குற்றங்கள் ஒன்றிரண்டல்ல; நடந்தவற்றை முறைப்படி பதிவு செய்யும் மிகக் குறைந்தபட்ச நீதிகூட இன்னும் நடக்கவில்லை. இன அழித்தலும் போர்க்குற்றங்களும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள். தமிழரென்ற அடையாளத்தையும் கடந்து மனிதர்கள் என்ற அடிப்படையில் சிங்களப் பேரினவாதத்தையும் அதன் துணையாளர்களையும் நீதித் தணிக்கைக்கும் தண்டனைக்கும் உட்படுத்துவது நம் மானுடக் கடமையாகவும் ஆகிறது.

இன்றைய நிலையில் முதலாகவும், விரைந்தும் யாவரும் ஒன்றாய் இணைந்தும் செய்யவேண்டியது முள்ளிவாய்க்காலுக்குப் பின் மிஞ்சிய மக்களை வதை முகாம்களிலிருந்தும், உலகை ஏமாற்ற அவர்களை வவுனியாவிலிருந்து விடுவித்துவிட்டு மன்னாரிலும் பிற பகுதிகளிலும் அடைத்து வைக்கும் மோசடியிலிருந்தும், ஊர் திரும்பியபின் யாருமறியாமல் இளவயதுப் பிள்ளைகளை தீர்த்துக்கட்டும் கொடுமையினின்றும் மக்களைக் காப்பது. மக்கள் இன்றி ஈழம் எதற்கு? விழிப்புணர்வுடன் உலகத்தமிழர் நடத்தும் இடைவிடா இயங்குதலால் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும் உலகநாடுகள், அமைப்புகளால் மட்டுமே இதனைச் செய்ய முடியும். அவ்வாறே ஆங்காங்கு கொண்டு அனாதைகளாய் இறக்கிவிடப்படும் நம் மக்கள் மீண்டுமொரு வாழ்வைத் தொடங்குவதற்கான திட்டமிடப்பட்ட பொருண்மிய உதவிகள் செய்தல்.

இரண்டாமது முதலானதற்கு இணையானது. ஒருவகையில் அத னிலும் முக்கியமானது, அடிப்படை யானது. தமிழீழ தாயகம் என்ற நில அலகு காப்பாற்றப்படுதலே அது. யாழ்குடா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ராஜபக்சே-கோத்தபய்யா திட்டப்படி சிங்களக் குடியேற்றங்கள் நடந்தால் -நடப்பது அனுமதிக்கப்பட்டால் ஈழம் என்ற கருதுகோளே இல்லாது போய்விடும். தமிழர் நிலத்தை அபகரித்து சிங்களமயப் படுத்துவதொன்றும் சிங்களப் பேரினவாதத்திற்குப் புதிதல்ல. தமிழீழத்தின் தலைநகரம்- இதயம் என வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இதயத்தில் வணங்கிய திருகோணமலை மாவட்டத்தில் 1827-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 81.8% பேர் தமிழர்கள். 1.3% பேரே சிங்களவர். எஞ்சிய 16.9% பேர் தமிழ் பேசிய இசுலாமிய மக்கள். இதே மாவட்டத்தில் 1981 கணக்கெடுப்பின்போது 81.8 சதமாயிருந்த தமிழர் 36.4 சதமாகச் சுருங்கிவிட்டனர்; 1.3 சதமாயிருந்த சிங்களவர் 36.4 சதமாக விரிந்தனர். இன்று கணக்கெடுத்தால் சிங்களவர் திருகோண மலை நிலத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும் வியப்பதற்கில்லை. இந்த ஆபத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நிகழுமேயானால் ஈழத்தை நாம் மறந்தேவிடலாம். கோத்தபய்யா திட்டப்படி இவ்விரு மாவட்டங்களிலும் நெறி செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் விரைவில் தொடங்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகத் தமிழ் மக்கள் முன் நிற்கும் மிகவும் அடிப்படையான சவால் இதுதான். இதனைத் தடுத்து நிறுத்தும் வலு நிலையில் தமிழர்கள் நாம் இன்று இல்லை. இலங்கைக்குள், ஒருமித்த தமிழ் அரசியல் வலுப்பட்டு, அது உலகத்தமிழ் மக்களின் ஒருமித்த வலுவோடு இணைந்து இரண்டுமாய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு உருவாக்கும் தீரா அழுத்தத்தின் மூலமாகவே அதைத் தடுத்து நிறுத்த முடியும். அனைவரும் இணைந்து நின்றால் மட்டுமே இது சாத்தியம். அதைவிடுத்து வள்ளுவப் பெருந்தகை சொல்வதுபோல், "பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையுமாய்' தமிழர் நாம் இப்போதுமிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.ஈழம் மலர வேறென்ன நிகழவேண்டும்?

மன்மத குருக்கள்! சி.டி.யில் சிக்கிய...

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் கருவறைக்குள்ளேயே பெண் களுடன் சல்லாபம் புரிந்து.. அதை செல்போனிலும் படம் பிடித்த மன்மத குருக்கள் தேவநாதன் போலீஸில் சர ணடைந்து கம்பிஎண்ணிக்கொண்டிருக்க... அவன் லீலைகள் உலகெங்கும் செல்ஃபோனில் டாப் 1-ஆக போய்க்கொண்டி ருக்கிறது. இந்த நிலையில்...
நாம் தேவநாதனின் மன்மத விவ காரங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கினோம்.காஞ்சிபுரம் அருகே இருக்கும் தேவநாதனின் ஊரான பழைய சீவரம் கிராமத்தில் ஆஜரானோம். அங்கு அவனது பால்யகால அக்ரஹார நண்பர்களிடம் தேவநாதன் பற்றி நாம் விசாரித்தபோது...’""சின்ன வயசிலிருந்தே பிள்ளையாண்டா னின் நடத்தை சரியில்லை. நாங்க ஸ்கூல்ல படிக்கிறச்சே... அவன் தன்னோட பாட புஸ்தகத்துக் குள்ள கிளுகிளுப்பான லேடீஸ் படங்களை ஒளிச்சி வச்சி, ரசிச்சிண்டு இருப்பான். வயசுப் பையனா வளர்ந் ததும் ஏகக் கெட்டபேரை சம்பாதிச்சான். யாரும் இவனுக்குப் பெண்தர முன்வரலை. அப்புறம் அப்பா அம்மா இல்லாத அப்பாவிப் பொண்ணு கங்கா தலையில் இவ னைக் கட்டிவச்சிட்டாங்க. அவனுக்கு ஐஸ்வர்யா, சாருன்னு ரெண்டு பெண்பிள்ளைகள் இருந்தும்... பய திருந்தலை. கோயிலுக்கு வரும் பொம்பளைகளை மயக்கி... கோயில் கருவறையிலேயே சல்லாபிச்சும் பெட்ரூமில் சல்லாபிச்சும்.. அந்தக் கண்றாவிகளை அவனே தன் செல் போன்ல படமா எடுத்து வச்சிண்டிருந் திருக்கான்னா.... அவன் எப்படிப் பட்டவன்னு பாருங்கோ''’என்றார்கள் எரிச்சலாக.
தேவநாதனின் கிளுகிளு படங்கள் வெளியே வந்தது எப்படி தெரியுமா? தன் செல்போன் ஹேங் ஆக...அதில் இருந்த லீலைக் காட்சிகளை அழித்துவிட்டு... செல்போனை அங்குள்ள ‘பாலாஜி டெலிகாம் சர்வீசஸசில் தேவநாதன் ரிப் பேருக்குக் கொடுக்க... அவனது புத்தியை அறிந்திருந்த கடைக்காரர்... அந்த செல்போனின் பேரண்ட்ஸ் டாக்குமெண்ட்டு களைத் தேடியிருக்கிறார். அப்போதுதான் குருக்கள் அழித்த படங்கள் கிடைத்திருக் கிறது. இதைக்கண்டு ஷாக்கான கடைக் காரர்... தான் பெற்ற இன்பம் பிறருக்கும் கிடைக்கட்டும் என்று... தனது நண்பர் களின் செல்போன்களுக்கெல்லாம் அதை புளூ டூத்மூலம் அனுப்பி வைக்க... அது உல கம் முழுக்க பரவிவிட்டது. இதைப்பார்த்த காஞ்சிபுரவாசி ஒருவர் திகைத்துப்போய்... போலீசின் கவனத்துக்குக் கொண்டு போக... அந்த வீடியோ காட்சி களைக் கைப்பற்றிய போலீஸ்... அதில் ஆறெழு பெண்களுடன் தேவநாதன் லீலைகள் நடத்திய தைக் கண்டு ஷாக்காகி... மத உணர்வைப் புண்படுத்தியதாக 295-ஏ சட்டப் பிரிவின்படி தேவ நாதன் மீது வழக்கைப் பதிவு செய் தது. இதையறிந்த தேவநாதன்... தன் மனைவி பிள்ளைகளுடன் எஸ் கேப் ஆகிவிட்டான். இந்த நிலையில் காக்கிகளுக்கு இன்னொரு தகவல் கிடைத்தது.
2008-ல் மச்சேஸ்வரர் கோயில் நிர்வாகத் தரப்பைச் சேர்ந்த வடிவேல் முதலியாரும் ராஜகோபால் முதலியாரும் கோயில் கருவறையி லேயே சில்மிஷ விவகாரங்கள் நடப்ப தாகக் கேள்விப்பட்டு தேவநாதனைக் கண்டிக்க... அவர்களிடம் "நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன். என் விவகாரத்தில் நீங்கள் தலையிட் டால்... அழிச்சிடுவேன் அழிச்சி'’என்று மிரட்டினானாம். இதை அறிந்த காக்கிகள் உபரியாக மேற்படி கோயில் நிர்வாகத் தரப்பினரிடம் புகார் வாங்கி... சாதிப் பிரச்சினையைத் தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற குற்றங்களின் பேரிலும் அவன் மீது வழக்கைப் பதிவு செய்தனர்.



இது குறித்து விசாரிக்கப்போன காக்கிகளிடம் தேவநாதனின் அப்பா சுப்பிரமணிய குருக்கள் தகராறு செய்ய... பணிசெய்யவிடாமல் தடுத்ததாக அவரைக் கைது செய்தனர். அதேபோல் அவனது சகலை ரமணி குருக்களையும் தகராறு செய்ததாக உள்ளே தள்ளினார்கள். இதைக் கண்டு பீதியான தேவநாதனும் அவனது உறவினர்கள் 13 பேரும் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தை நோக்கி ஓட... தேவநாதனின் ஜாமீன் மனுவை மட்டும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.இதற்கிடையே மனம் வெறுத்துப்போய் தற் கொலைக்கு முயன்ற தேவநாதனின் மனைவி கங்காவைக் காப்பாற்றி அவரது உறவினரான மணி குருக்கள் வீட்டில் சிலர் தங்கவைக்க... இதை ஸ்மெல்செய்த காக்கிகள், கங்காவை மடக்கி அவர் மூலமே தேவநாதனை தொடர்புகொண்டனர். இனி தப்ப முடியாது என புரிந்து கொண்ட தேவநாதன்... பிராமண சங்கத்தினர் பாதுகாப்போடு காஞ்சியில் சரணடைந்தான்.அவனை புழல் சிறையில் நாம் சந்தித்தபோது “""என் மீது ஒரு சாதாரண வழக்கைப்போட்ட போலீஸ்... பின்னர் தீவிரமான வழக்குகளைப் போட்டிருக்கிறது. என் உறவினர்கள் மீதும் பொய் வழக்கு போட்டிருக்கிறது. வேறு என்ன சொல்ல...'' என்றான் சோகமாக.
தேவநாதனின் ஆபாச வீடியோ காட்சிகளில் இடம்பிடித்த பெண்களை லோக்கல் நண்பர்கள் உதவியுடன் தேடிய நாம்... சிலரை அடையாளம் கண்டு சந்தித்தோம். அவர்களில் சத்யவானோடு தொடர் புடைய அந்த இளம் குடும்பத்தலைவி ""நான் கோயி லுக்குப் போகும்போது அந்த குருக்கள் இதமா பேசுவார். உன் குடும்ப கஷ்டம் தீர... உன்னைக் கரு வறைக்குள் தரிசனம் பண்ண வைக்கிறேன்னு ஒரு நாள் மதிய நேரத்தில் கருவறைக்குள் கூட்டிட்டுப் போனார். அப்ப சிவலிங்கத்தைக் காட்டி... இந்த சிம்பல் என்ன தெரியுமா?ன்னு சொல்லி வெட்கப்பட வச்சார். அப்புறம் அவர் என்னைக் கட்டிப்பிடிக்க.. என்னை விடுங்கோன்னு நான் சத்தம் போட்டேன். யாரும் அங்க இல்லாததை சாதகமாக்கிக்கிட்டு என்னை தொட்டுட்டார். அப்புறம் அந்த பழக்கம் தொடர ஆரம் பிச்சிது. அந்த நேரத்திலும் அவர் கையில் செல்போன் வச்சிருப்பார். ஆனா அதில் கேமராவெல்லாம் இருக்கும்னு எனக்குத் தெரியாமப்போச்சு. இவரால் அவமானம் தாங்கலை''’என்றாள் கண்ணீருடன்.
அந்த மூன்றெழுத்து பெயர் கொண்ட பூக்காரப் பெண்ணோ
""அந்தக் கோயிலுக்கு பூக்கொடுக்கும் நான்... மதிய வேளைகளில் கோயில் மண்டபத்திலேயே உட்கார்ந்து சாயந்தர வியாபாரத்துக்காகப் பூ கட்டுவேன். ஒரு நாள் மதியம் என்னை அழைத்த குருக்கள்... இன்னைக்கு உன் கையாலேயே மூலவ ருக்கு பூ சார்த்துன்னு கூப்பிட்டார். இப்படி ஒரு வாய்ப் பான்னு சந்தோஷப்பட்ட என்னை கருவறைக்குள் அழைச்சிக்கிட்டுப்போனார்.
பக்திப் பரவசத்தோட இருந்த என்னை... திடீர்னு கட்டிப்பிடிச்சார். நான் திமிறி.. விடுங்க சாமின்னு சத்தம் போட... கருவறையில் சல்லாபிச்சா ஆண்டவனின் அனுக்கிரகம் முழுசா கிடைக்கும்னு சொல்லியே... நினைச் சதை சாதிச்சிக்கிட்டார். அழுத என் கையில் 300 ரூபாயைக் கொடுத் தார். இதன்பிறகு அடிக்கடி இதே போல வளைச்சி... பணம் கொடுக்க ஆரம்பிச்சிட்டார். ஆனா இப்படி அசிங்கப்படுவோம்னு நான் நினைச்சிக்கூடப் பார்த்ததில் லை''’’ என்றாள் தேம்பியபடி.
இன்னொரு ஐந் தெழுத்துப் பெயர் கொண்ட குடும்பத் தலைவியோ ""என் வீட்டுக்காரருக்கு பக்தி அதிகம். அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து பரிகார பூஜைகள் பண்ணி தட் சணை வாங்கிக்கிட்டுப் போவார் குருக்கள். ஒரு நாள் என்னை மதிய நேரத்தில் தனியா கோயிலுக்கு வா.. பரிகார பூஜை பண்ணணும்னு கூப்பிட்டார். நம்பிப் போன என்னை கருவறைக்குள் கூப்பிட்டு... என்னையே பூஜை பண்ணச்சொன்னார்.அந்த சந்தோஷத்தில் இருந்த என்னை.. அங்கங்கே தொட்டு சில்மிஷம் பண்ணி... இப்படி அசிங்கப்படுத்திட்டார். நியாயம் கேட்டதுக்கு என்னை மன்னிச்சிடு என் வீட்டுக்காரிக்கு உடம்பு சரியில்லை. அவளால சந்தோஷம் தரமுடியலை. அதனால்தான் இப்படி பண் ணிட்டேன். மன்னிச்சிடுன் னார்''’என்றபடி அழுதாள்.இதற்கு மேலும் பாதிக் கப்பட்ட பெண்களைத் தேடிப்பிடிக்க விருப்பமின்றி... தேவநாத குருக்களின் மனைவி கங்காவை அவரது வழக்கறிஞர் தேசாய் உதவியோடு சந்தித்தோம். ""உங்க கணவர் இப்படி லீலைகள் பண்ணி யதை நீங்க ஏன் தடுக்கலை?'' என்றோம். கங்காவோ
""எனக்கு எதுவுமே புரியலை. நான் குத்துக்கல்லாட்டம் இருக்கேன். எனக்கு என்ன கேடு. அவருக்கு எந்தக் குறையும் நான் வைக்கலை. இருந்தும் வீட்டில் ராமரா இருந்த என் கணவர் பத்தி இப்ப வர்ற தகவல்களை இன்னும் என்னால நம்ப முடியலைங்க. ஆனா முதல்ல சாதாரண கேஸைப் போட்டுட்டு அப்புறம் புதுசு புதுசா போலீஸ் பெரிய வழக்குகளைப் போட்டிருக்கு. அதனால் இதெல்லாம் பொய்வழக்குன்னு தோணுது''’என்றார் அதிர்ச்சியிலிருந்தும் சங்கடத்திலிருந்தும் மீளாதவராய்.குருக்களின் ஆபாச லீலைகளை சி.டி.போட்டு விற்றதாக செல்போன் ரிப்பேர் கடை நடத்திய பாலாஜி யையும் செந்திலையும் கைது செய்திருக்கிறது போலீஸ்.டி.எஸ்.பி. சமுத்திரக்கனியோ, ""அந்த கிரிமினல் குருக்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தராமல் ஓயமாட்டோம்''’என்கிறார் மீசையை முறுக்கியபடியே.
காஞ்சிபுரவாசிகளோ, ""அந்த மச்சேஸ்வரர் கோயிலுக்கு தன் கையால் கும்பாபிஷேகத்தைச் செய்தது... சங்கராச்சாரியார். அப்படியிருக்க... அந்தக் கோயிலைப்பத்தி எப்படி நல்ல விஷயங்கள் வரமுடியும்?''’என்கிறார்கள் நக்கலாய். தேவநாத குருக்களைப் போன்றவர்களால்தான்... ஆன்மீகம் அழுக்காகிக்கொண்டிருக்கிறது.

தேர்தல் அறிவிப்பு ஒத்தி வைப்புக்கு விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமே காரணம்

லங்கை அரசாங்கம் தேர்தல் அறிவிப்பை ஒத்தி வைத்ததற்கு விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் வழக்கம்போலவே கொள்கை விளக்க உரை வரும் நவம்பர் 27 ஆம் தேதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் விடுதலைப் புலிகளின் கொள்கை பிரகடனம் எவ்வாறு வெளியிடப்படவுள்ளது என்பதை சர்வதேச சமூகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றது.
இந்நிலையில் தேர்தல் அறிவிப்பினை அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டால்,கொள்கை விளக்க உரையில் தேர்தல் முடிவுகளை மாற்றும் விதமான சில முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என்று இலங்கை அரசு தரப்பு அச்சமடைந்துள்ளது.
எனவே மாவீரர் தின உரை நிறைவடையும் வரை தேர்தல் அறிவிப்பினை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மாவீரர் தின உரைக்கு முன்பாகம, அரசு தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டும் பட்சத்தில் அதற்கு ஏற்ற வகையில் கொள்கை விளக்க உரையில் மாற்றங்ளை ஏற்படுத்தவும் விடுதலைப் புலிகள் தரப்பு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இம்முறை வெளியிடப்படவுள்ள விடுதலைப்புலிகளின் கொள்கை விளக்க உரையானது இலங்கையில் நடைபெறவுள்ள எந்த தேர்தல் முடிவினையும் தீர்மானிக்கும் சக்தி மிக்கதாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர் கால தமிழ் மக்களின் தெரிவுகள் குறித்து தெளிவான முடிவுகளை விடுதலைப்புலிகளின் மாவீரர் தின உரை பிரதிபலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பசங்க பட இயக்குநர் பாண்டிராஜுக்கு தங்க யானை விருது!

சங்க படம் வசூல் வேட்டை முடிந்து இப்போது விருது வேட்டையில் இறங்கியுள்ளது. ஹைதராபாத்தில் நடந்த 16வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் இந்தப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜிக்கு சிறந்த குழந்தைகள் பட இயக்குநருக்கான தங்க யானை விருது வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்த இரண்டாவது படம் இது.
விழாவில் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மட்டுமல்ல, நடுவர்களும் பாராட்டினார்களாம். சிறந்த ஆசியப் படங்கள் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பாண்டிராஜ் நேரில் போய் தங்க யானை விருதினைப் பெற்றுக் கொண்டார்.

'ரஜினியுடன் நடிக்கணும்..' சிணுங்கும் தமன்னா!

ரஜினியுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நாயகிகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் தமன்னா. கமலின் அடுத்த பட நாயகி இவர்தான் என்று பரபரப்பாகப் பேசப்படும் தமன்னா, இப்போதெல்லாம் விருப்ப நடிகர்களாக ரஜினி - கமல் இருவரையுமே குறிப்பிடுகிறார் (எப்படி சாமர்த்தியம்!).தமன்னாவின் முதல் படம் கேடி. அது வந்த வேகத்தில் பெட்டிக்குள் போய்விட, தமன்னாவும் தனது சொந்த ஊரான பாடியாலாவைப் பார்க்கப் போய்விட்டார் கொஞ்ச நாளைக்கு.பின்னர் தெலுங்கில் அவர் நடித்த ஹேப்பி டேஸ் அம்மணிக்கு ஏக சந்தோஷத்தை வாரி வழங்கியது. உடனே 'கல்லூரி'யில் நடித்தார்.
சுக்கிர தசை அங்கே ஆரம்பமானது.இப்போது கமல் படத்துக்கு இவர்தான் நாயகி என்பது முடிவாகிவிட்டதால், இப்போதே மற்ற நாயகர்கள் இவரது கால்ஷீட்டை வாங்கிவிடச் சொல்கிறார்களாம் இயக்குநர்களிடம். குறிப்பாக தனுஷ் தனது படங்களில் தமன்னாவைத்தான் போட வேண்டும் என அடம் பிடிக்கிறாராம்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதுதானே நடிகைகள் பாலிசி... கணிசமாக சம்பளத்தை உயர்த்திவிட்டவர், தனுஷுடன் நடிக்கும் அடுத்த படத்துக்கு ஒரு கோடிக்கு மேல் ரேட் பேசிவிட்டதாகத் தகவல். இன்னொரு பக்கம் ஒரே படத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக நயன்தாரா வந்தது எப்படி என்று ஆராய்ந்தவர், சந்திரமுகி ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டாராம்.அடுத்த நிமிடமே தனது மேனேஜரிடம் சிணுங்க, அதுவே பின்னர், "சூப்பர் ஸ்டாருடன் நடிக்க விரும்புகிறார் தமன்னா... சம்பளமெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை" என பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த மாதிரி செய்தியாகி விட்டதாம்!

எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கிறாராம்.. ராகுலையே பிரதமராக்கி விடலாமே-அமர்சிங்

வ்வொரு முக்கியப் பிரச்சினைக்கும் ராகுல் காந்தி சிறந்த தீர்வைத் தருகிறார் என்று காங்கிரஸ் கட்சி நினைத்தால் பேசாமல் அவரையே பிரதமராக்கி விடலாம் என்று நக்கலடித்துள்ளார் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து முக்கியப் பிரச்சினைகளையும் ராகுல் காந்திதான் சரியாகத் தீர்க்கிறார் என்று காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது, பேசி வருகிறது. கரும்பு விலை தொடர்பான அவசரச் சட்டமாக இருந்தாலும் சரி, நிவாரண உதவிகள் அறிவிக்கப்படுவதாக இருந்தாலும் சரி, எல்லாமே ராகுலால்தான் சரியான தீர்வைக் காண்கின்றன என்று காங்கிரஸ் கூறுகிறது.இதற்குப் பேசாமல் ராகுல் காந்தியையேய பிரதமராக்கி விடலாமே காங்கிரஸ். எல்லாவற்றையும் அவரே சரி செய்கிறார் என்றால் தனியாக எதற்கு ஒரு பிரதமர்.

பேசாமல் ராகுலே பிரதமராக பதவியேற்றுக் கொள்ளலாம்.பிரதமர் ராகுல் காந்தியிடம் பிரச்சினைகளைக் கொண்டு செல்லவும், பேசவும் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றார் அமர்சிங்.கரும்பு விலை தொடர்பான அவசரச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கூட்டணிக் கட்சியான திமுகவும் இந்த விஷயத்தில் எதிர் முகாமுக்குத் தாவியுள்ளது. விவசாயிகள் இதை ஏற்க முடியாது, ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளும் இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. ஆனால் அரசு கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.

ஆனால் நேற்று ராகுல் காந்தி போய் பிரதமரைப் பார்த்தார், பேசினார். உடனே, விவசாயிகளுக்கு பாதகமாக எதையும் இந்த அரசு செய்யாது, நிச்சயம் சட்டம் திருத்தப்படம் என அறிவித்தார் பிரதமர். இதுதான் அமர்சிங்கை கடுப்பாக்கி விட்டது.

சின்னத்திரையில் கஸ்தூரி!?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார் நடிகை கஸ்தூரி. ஆனால் அந்தப்படம் வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டதாலும், வேறு எந்த இயக்குநரும் புதிய வாய்ப்புகள் தரத் தயாராக இல்லாததாலும் இப்போது சின்னத் திரைப்பக்கம் ஒதுங்கிவிட்டார் அம்மணி.பிரபல சின்னத்திரை இயக்குநர்கள் பலர் இவரை அணுகி கதைச் சொல்லி இருக்கிறார்களாம். ஆனாலும் உடனடியாக ஓகே சொல்லும் மூடில் இல்லையாம் கஸ்தூரி. இன்னும் சில தினங்கள் பொறுத்துப் பார்ப்போம்... அப்படியும் சினிமா வாய்ப்பு வராவிட்டால், சின்னத் திரைக்குப் போய்விடுவோம் என்று கூறி வருகிறாராம்.
குறிப்பிட்ட முன்னணி சேனல் ஒன்று சீரியலுக்கான நேரத்தை ஒதுக்கித் தந்த பிறகே சீரியல் ஆரம்பமாகும் என்கிறார்கள். அதுவரை வாய்ப்பு தேட டைம் இருக்கிறதல்லவா!சும்மா இருந்தால் வருமா பெரிய திரை வாய்ப்பு? இதற்காக தனது புதிய படங்கள் அடங்கிய ஆல்பத்தை ஒரு கோடம்பாக்க மேனேஜர் மூலம் எல்லாருக்கும் கொடுத்தனுப்பி வருகிறாராம்.

மீள் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் அவலங்கள்

ன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 இலட்சம் ஈழத் தமிழர்களில் 1,19,000 பேரை அவர்கள் வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தியுள்ளோம் என்று சிறிலங்க அரசு கூறியுள்ள நிலையில், முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் இன்னல்களை நேரில் கண்டு விவரித்துள்ளது கிரவுண்ட் வியூவ்ஸ் என்கிற இணையத் தளம்.
கிரவுண்ட் வியூவ்ஸ் என்கிற இந்த இணையத் தளத்தை சிறிலங்கப் பத்திரிக்கையாளர்களே நடத்திவருகின்றனர். இதன் ஒரு பத்திரிக்கையாளருக்கு கடந்த வாரம் மாணிக்கம் பண்ணை முகாமிற்கும், கிளிநொச்சி, மன்னார் பகுதிகளுக்குச் சென்றுவரும் வாய்ப்பு கிட்டியுள்ளது. தனது பயணத்தில் கண்டதை உள்ளது உள்ளவாறு விவரித்துள்ளார்.
அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறது என்று இங்கு தமிழகத்தின் முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். ஈழத் தமிழர்களின் மறுவாழ்விற்கு இந்தியா உதவுவதாக ஒரு தோற்றமும் காட்டப்படுகிறது. அவர்களின் மறுவாழ்விற்காக உதவுகிறோம் என்று சிறிலங்க சிங்கள அரசும் கூறுகிறது.
ஆனால் மீள் குடியமர்த்தல் என்ற பெயரில் அவர்கள் அனுபவித்துவரும் துயரத்தை இந்தப் பத்திரிக்கையாளர் விவரித்துள்ளார். அந்த விவரிப்பின் முக்கியப் பகுதிகள் இங்கு அளிக்கப்பட்டுள்ளது.
“கடந்த வாரம் எங்களில் சிலர் மன்னார், கிளிநொச்சி பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படும் வாய்ப்பைப் பெற்றோம். வன்னியிலுள்ள மனிக் ஃபார்ம் என்றழைக்கப்படும் மாணிக்கம் பண்ணைக்கும் அழைத்துச் செல்லப்பட்டோம்.
மாணிக்கம் பண்ணையிலிருந்து வெளியேற்றப்படும் மக்களை பன்னாட்டு இடம்பெயர்வு அமைப்பு (International Organization for Migrants) பேருந்துகளில் ஏற்றி, அவர்கள் வாழ்விடங்களுக்கோ அல்லது வேறொரு தற்காலிக முகாமான வவுனியா ஊரகப் பேரவைக்கோ அல்லது அம்மக்களை மறு சோதனைக்கு உட்படுத்தவோ கொண்டு செல்கிறது.
நாங்கள் கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு வவுனியா வந்தோம். அப்போது அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மாணிக்கம் பண்ணையிலிருந்து இடம்பெயர்ந்தோர் பேருந்துகளில் அங்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வவுனியா ஊரகப் பேரவை மைதானத்திலிருந்த கூரையின் கீழ் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களைக் கொண்டு வந்த பேருந்துகளில் ஐஓஎம் என்று பன்னாட்டு இடம்பெயர்வு அமைப்பின் பெயர் ஒட்டப்பட்டிருந்தது.
அவர்கள் யாரோடும் எங்களால் பேச முடியவில்லை, அவர்களைச் சுற்றி சிறிலங்க இராணுவத்தினர் நின்றுகொண்டிருந்தனர். சிறிது நேர முயற்சிக்குப் பின் 13 பேரிடம் பேசினேன். அவர்களில் பலர் பெண்கள். இவர்களின் குடும்பத்தில் குறைந்தது ஒருவராவது போரிலோ அல்லது அதற்கு முன்னரோ கொல்லப்பட்டவர்களாகவோ அல்லது சோதனைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டு மீ்ண்டும் திரும்பதவராகவோ இருப்பதை அறிந்தோம். தங்கள் குடும்ப உறுப்பினர் திரும்பாதது குறித்து இரண்டு பெண்கள் மட்டுமே பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்திடம் புகார் செய்ய முடிந்தது. தன்னுடைய சகோதரி ஒருவரை (விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்) பம்பை மது மறுவாழ்வு மையத்தில் ஒரு முறை பார்த்ததாகவும், அவரைக் காண மறுமுறை சென்றபோது, அவரை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாக கூறிய அதிகாரி ஒருவர், மேற்கொண்டு எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லையென்றும் கூறியதாக எங்களிடம் கூறினார்.
மற்றொரு பெண் கருவுற்று இருந்தார். முகாமின் 4வது மண்டலத்தில் இருந்தபோது அவருடைய கணவரை இராணுவத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர், இதுவரை திரும்பவில்லை. இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. வவுனியாவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள (இருந்த) தனது வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால் மானிக் ஃபார்மில் உள்ளவர்களை மட்டுமே மீள் குடியமர்த்துகிறார்கள் என்றும், தங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்று அச்சம் தெரிவித்தார்.
கிளிநொச்சியிலுள்ள துணுக்கை என்ற இடத்திற்குச் சென்றோம். ஆச்சரியமான விடயமாக அங்கு பல வீடுகள் அப்படியே இருந்தன. முள்வேலி முகாம்களில் இருந்து தங்களுடைய இல்லங்களுக்குத் திரும்பிய மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். ஆயினும் அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படவில்லை. இங்கு வந்தப் பிறகும் தாங்கள் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

துணுக்காயில் மீள் குடியமர்த்தப்பட்ட 1,200 குடும்பங்களுக்கும் ரூ.5,000 ரொக்கமும், சில மாதங்களுக்கான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 ஆயிரம் வைப்புத் தொகை வங்கியில் செலுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த உதவிக்கான நிதிகள் குறித்து ஆழமாக விசாரித்ததில், மீள் குடியமர்த்தப்படும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் (UNHCR) மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் ரூ.25,000 கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இதைத்தான் சிறிலங்க அரசின் மீள் குடியமர்த்தல் அமைச்சகத்தின் மூலம் இம்மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது!
இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில மாதங்களுக்கான உணவுப் பொருட்களை (ரேஷன்) ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதாகும் (இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உணவே வன்னி முகாம்களில் இருப்போருக்கு அளிக்கப்படுகிறது).
இந்த ரூ.25,000 தொகை 2001இல் ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியோடு நடந்த வடகிழக்கு சமூக மறுவாழ்வு மேம்பாட்டு அமைப்பின் பரிந்துரையின் படி நிர்ணயிக்கப்பட்டதாகும் என்றும் தெரியவந்தது.
அகதிகளுக்கு அளிக்கப்படும் நிவாரணங்கள் அனைத்தும் பன்னாட்டு இடம்பெயர்வு அமைப்பிடமிருந்தோ அல்லது ஐ.நா.விடமிருந்தோதான் கிடைத்து வருகிறது என்பதையும் அறிந்தோம்.
(ஈழத் தமிழர்கள் தகரத்தைத் தாண்டி வேறு எதையும் இந்தியா கொடுக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. அப்படியானால் அவர்களுக்காக சிறிலங்க அரசிற்குக் கொடுக்கப்பட்ட ரூ.500 கோடி என்ன ஆனது?)
தாங்கள் வாழ்ந்த ஊர்களுக்கு கொண்டு செல்லவில்லையெனில் வன்னி முகாம்களில் இருந்து வெளியேறப் போவதில்லை என்று 4,6,7வது மண்டல முகாம் மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட மக்கள் மற்ற இடங்களில் அனுபவித்துவரும் துயரத்தை தாங்கள் அறிந்திருப்பதாகத் தெரிவித்தனர். இதனை அவர்கள் எங்களிடம் கூறும்போது அவர்களையும், எங்களையும் இராணுவத்தினர் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். ஆயினும் அவர்கள் துணிச்சலாகப் பேசினர்.
தங்களது குடும்பத்தைச் சேர்ந்த இளம் வயதினர் – ஆண்களும் பெண்களும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு எவரும் திரும்பவில்லை என்று பலரும் தெரிவித்தனர். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் வவுனியா முகாமில் உள்ளார்களா என்று பார்த்துத் தெரிவிக்குமாறு சில பெண்கள் பெயர்களை எழுதி எங்களிடம் அளித்தனர். அப்படிப்பட்ட 14 தற்காலிக முகாம்கள் அப்பகுதியில் உள்ளதாகவும் எங்களுக்குத் தெரிவித்தனர்.
அவர்கள் அளித்த பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு வெளியே செல்லாதீர்கள், உங்களுக்குப் பிரச்சனையாகிவிடும் என்று அங்கு சேவையாற்றிடும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர் கூறினார்.

இவ்வாறு விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்கள் திருப்பாதது குறித்தும், மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பாதது குறித்தும் பன்னாட்டு அமைப்புகளிடம் புகார் செய்யவில்லையா என்று கேட்டதற்கு. பன்னாட்டு செஞ்சிலுவை சங்கத்தினர் உட்பட எந்த அமைப்பினரையும் முகாம் மக்களோடு பேச கடந்த ஜூலை முதலே அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

மன்னாருக்குச் சென்றோம், அங்கு கடந்த 12 ஆண்டுகளாக போய் வந்திருக்கின்றேன், ஆனால் இதுநாள் வரை பெறாத பாதுகாப்பு அனுபவத்தைப் பெற்றேன். எங்களிடம் இருந்த தேச அடையாள அட்டையை மன்னார் தீவின் நுழைவிலேயே பறித்துக் கொண்டு, தற்காலிக அடையாள அட்டையை வழங்கினர்.
மன்னாருக்கு அங்கு வரும் வெளியாருக்கு மட்டும் இப்படி தற்காலிக அடையாள அட்டை வழங்குகின்றனர். அதில் எத்தனை நாட்கள் மன்னாரில் இருப்பீர்கள் என்பது குறிக்கப்படுகிறது. எங்கே தங்கப்போகிறீர்கள், என்ன காரணத்திற்காக வந்தீர்கள் என்றரெல்லாம் கேள்வி கேட்டனர். அப்போது அங்கே வந்த ஒரு பெண்ணை அதிக காலம் தங்கி விட்டாய் என்று கூறி அவளின் அடையாள அட்டையை இராணுவத்தினர் தர மறுத்தனர். இருவருக்கும் இடையே மொழிப் பிரச்சனை வேறு. என்னோடு வந்தவர் தலையிட்டுப் பிரச்சனையைத் தீர்த்தார். எங்களோடு வந்த சிங்களப் பெண், இராணுவத்தினரை நோக்கி சிங்களத்திலேயே திட்டித் தீர்த்தார். காரணம்: அவருக்கு தவறான அடையாள அட்டையை இராணுவத்தினர் கொடுத்தது!
மன்னாரில் எங்களோடு எந்த அதிகாரியும் பேச மறுத்தனர். இராணுவத்தினருக்கும் நிர்வாகத்தினருக்கும் ஏற்பட்ட மோதலால் இந்த நிலை. அங்கு பாதுகாப்பில் இருந்த அதிபர் அதிரடிப் படை (Presidential Task Force) அளித்த கடிதத்தை வைத்திருந்தால்தான் சேவைகளிலோ அல்லது மறுசீரமைப்புத் தொடர்பான நடவடிக்கைகளிலோ ஈடுபட அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்குள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு எந்த நிவாரண உதவியும் வழங்கப்படவில்லை, அவைகளைப் பெறுவதற்கு வசதியும் இல்லை. “ வன்னி முகாமில் இருந்தபோதாவது சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைத்தது, இங்கு அதுவும் இல்லை” என்று ஒரு பெண்மணி பரிதாபத்துடன் கூறினார்.
“உறவினர்களுடன் தங்கச் சொல்கின்றனர், எவ்வளவு நாட்களுக்கு அவர்கள் எங்களுக்கு சோறு போடுவார்கள்” என்று அந்தப் பெண்மணி கருவுற்று இருந்தார். இப்படி உறவினர்களுடன் வாழ்ந்து வருபவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் இருக்குமா என்று சேவையமைப்புகளின் ஊழியர்களிடம் கேட்டதற்கு அப்படி ஏதும் இல்லை என்று கூறினர்.
மன்னாரின் தெற்கே உள்ள மூசாலை, வடக்கே உள்ள அடம்பன் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். மூசாலையில் 651 தமிழ்க் குடும்பங்களும், 700 முஸ்லீம் குடும்பங்களும் மீள் குடியமர்த்தப்பட்டிருந்தனர். தங்களுக்கு வழங்கப்பட்ட 15 தகரங்களைக் கொண்டு 16க்கு 12 சதுர அடி அளவிற்கு குடிசைகளை அமைத்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு தரை போட்டுக்கொள்ள ரூ.5,000மும், 5 மூட்டை சிமெண்டும் அளிக்கப்பட்டிருந்தது. காட்டிலிருந்து கட்டைகளை வெட்டி வந்து அமைக்கப்பட்ட இந்தக் குடிசைகளுக்கு துணியால் சுற்றி மறைப்பு கட்டியிருந்தனர்.
தங்களுக்கு கழிவறை வசதியில்லை என்றும், இரவு நேரத்தில் காட்டிற்குச் சென்று – பூச்சி, பாம்பு, யானை அச்சுறுத்தல்களுக்கு இடையே – கழிக்கச் செல்ல வேண்டியதுள்ளது என்றும் பெண்கள் கூறினர். ஆனால் இங்குள்ள கிராமங்களுக்கு இடையே இராணுவ முகாம் நிரந்தரமாக அமைக்க கான்கிரீட் கட்டடங்கள் எழுப்பும் வேலை நடைபெற்று வருகிறது!
ஆனால் மூசாலையில் இவர்களைக் குடியமர்த்த ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது நிர்வாகம். ஆனால் சாலை வசதிகள் கூட இல்லை!
கள்ளிமோடை என்ற இடத்தில் உள்ள தற்காலிக முகாமைக் கண்டோம். அங்கு நாங்கள் கேட்ட சத்தம் பயங்கரமாக இருந்தது. அங்கு இரண்டு தமிழ் பேசும் நபர்கள் பேருந்தில் வந்திறங்கும் மக்களை சோதனை செய்வதாகக் கூறினர். அவர்களை அழைத்து வந்த பன்னாட்டு இடம்பெயர்வு அமைப்பினர் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டதற்கு, எவரும் இல்லை என்று கிண்டலாக ஒருவர் பதிலளித்தார்.
சிறிது நேரத்தில் பேருந்தில் ஏற மறுத்து ஒரு பெண் அடம் பிடித்தார். அவரை மற்றவர்கள் சாந்தப்படுத்தி பேருந்தில் ஏற்றினர். “இப்போது புரிகிறதா ஏன் அந்தப் பெண் பேருந்தில் ஏற மறுக்கிறார் என்று” என அந்த நபர் என்னைப் பார்த்துக் கூறினார். தங்கள் வாழ்விடங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பேருந்தில் ஏற்றப்படுவோரை பல இடங்களில் இவ்வாறு சோதிக்கின்றனர் என்றும், அப்போது பலர் கடத்தப்படுகின்றனர் அல்லது காணாமல் போகின்றனர் என்று அங்கு பணியாற்றிடும் ஒரு தொண்டு நிறுவன ஊழியர் கூறினார்.
அடம்பனில் எந்த கட்டடமும் இல்லை, அங்கு கொண்டு வரப்பட்ட மக்கள் அனைவரும் அரசு கட்டடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த கட்டடத்திற்கு மேற்கூரை இல்லை, சுற்றிலும் வனம். சிலர் கூடாரத்தில் தங்கியிருந்தனர். சிலர் மரங்களின் கீழ் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் சென்றிருந்தபோது மன்னாரில் தொடர்ந்து 4 நாட்கள் மழை பெய்தது.

உயிலங்குளம் அருகே கண்ணி வெடி எச்சரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள குருகுலம் பள்ளிக்கு மாணவர்கள் சென்றுக் கொண்டிருந்தனர். கூரையற்ற பள்ளி அது!
நாங்கள் தனது குழந்தையோடு மட்டுமே இருந்த பல பெண்களைப் பார்த்தோம். தனக்கு அளிக்கப்பட்ட தகரங்களில் ஆடையின் ஒரு முனையைக் கட்டி, மற்றோரு முனையை மரத்தில் கட்டி, அந்தத் தொட்டிலில் குழந்தையை இட்டுவிட்டு, வீடு கட்ட மரம் எடுக்க காட்டை நோக்கி நடந்தாள் ஒரு பெண்.
உழைத்துத் தங்களைக் காப்பாற்றக் கூடிய ஆணோ பெண்ணோ இல்லாத பல குடும்பங்களைக் கண்டோம். போரிலோ அதற்கு முன்னரோ அவர்களை இழந்துள்ளனர் அல்லது பாதுகாப்புப் படையினர் விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்டு வராதவர்கள். தங்கள் வாழ்விடத்திற்கு வந்தவர்களின் வாழ்வு நாம் நம்புவதுபோல மகிழ்ச்சியானதாக இல்லை.
வீடின்றி, பள்ளியின்றி, மருத்துவமனையின்றி, குடிக்க நல்ல நீர் இன்றி, மின்சாரமின்றி, பிழைக்க வழியேதுமின்றி, சுதந்திரமாக நடமாட உரிமையின்றி… இடம் பெயர்ந்தோர் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பிவிட்டார்கள் என்று கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது என்று தெரியவில்லை” என்று கூறி முடித்துள்ளார்.
வன்னி முகாம்களில் இருந்து தமிழர்களை 4 நாட்களில் விடுவித்தார் என்று போற்றப்படும், “அங்கு எல்லாம் நன்றாக உள்ளது” என்று கூறும் தமிழக முதல்வர் கருணாநிதி இதையெல்லாம் அறிவாரா? மத்திய அரசு வழங்கிய நிதியுதவி எங்கே சென்றது என்று கேட்பாரா? அல்லது இதற்கும் காரணம் பிரபாகரன்தான் என்று கூறுவாரா?

சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா? : வரலாறு ஒருநாளும் வாழ்த்தாது: தமிழருவி மணியன்

விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது. சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா?இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்ததாக ஜூனியர் விகடன் தனது வார இதழில் குறிப்பிட்டுள்ளது.
'மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது' என்று 'பூம்புகார்' திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது.
'மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்' என்று எழுதினார் ஜெயகாந்தன். 'அழுதால் கொஞ்சம் நிம்மதி' என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காக அழுதாலும் அழுவது நல்லதுதான்.
ஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், 'விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை' விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம்.
மகிந்த ராஜபக்ஷேவும், ரணில் விக்கிரமசிங்கவும் 2005-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரிக்க மறுத்தது ஒரு பெரிய அரசியல் பிழை என்பது கலைஞரின் கருத்து.
ஒரு லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வியைத் தழுவினார். ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்குப் பணிந்து தேர்தலைப் புறக்கணிக்காமல், ரணிலுக்கு ஆதரவாக வாக்குகளை வழங்கியிருந்தால், ராஜபக்ஷே அதிபராக வந்திருக்க முடியாது என்பதே நம் முதல்வரின் வாதம்.
2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் பிரபாகரன் தமிழர்களை வாக்களிக்க அனுமதித்திருந்தால், ரணில் வெற்றிபெற்று அமைதிப் பேச்சைத் தொடர்ந்திருப்பார் என்பது கலைஞரின் நம்பிக்கை.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 1998 மற்றும் 1999-ல் ஆற்றிய 'மாவீரர் தின' உரைகளில், 'சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் சமாதானப் பேச்சுகளில் பங்கேற்க நாம் தயார்!' என்று பிரகடனம் செய்தார். நவம்பர் 2001-ல் மாவீரர் நாள் உரையில், 'ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமை கொள்ள முனையும் அரசுக்கும், அரசுப் படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்து வருகிறோம். இக்கொடிய போருக்கு முடிவு கட்டி, நிரந்தர அமைதியை நிலைநாட்டுவதாயின், போர் வெறி கொண்ட இனவாத சக்திகளை இனங்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நிதி வழங்கவும் சிங்கள மக்கள் முன் வர வேண்டும்' என்று பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.
ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகளிடம் அமைதியான அரசியல் தீர்வை எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் ஏமாற்றமுற்றனர் என்பதுதான் வரலாறு. இதை நம் முதல்வர் நன்றாகவே அறிவார். ஆனால், பதவி நாற்காலிப் பற்றுதான் அவர் நினைப்பதை வெளியில் சொல்லி, 'நெஞ்சுக்கு நீதி' தேடுவதைத் தடுத்துவிடுகிறது.
ஈழத் தமிழர்கள் 1987-ல் ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத் தெருக்களில் வீதியுலா வந்தபோது, 'நிரந்த அமைதியையும், உரிமை மிக்க வாழ்வையும் வழங்க வானத்து தேவர்களே வரமளிக்க மண்ணில் வந்து இறங்கியதுபோல்' மகிழ்ந்து வரவேற்றனர். ஆனால், அந்த அமைதிப் படையால் தங்கள் அமைதி முற்றாகக் குலைந்தபோது அவர்கள் திகைத்து நின்றனர். அப்போதும் நம் முதல்வராக இருந்த கலைஞர் அந்த 'அமைதிப் படை' நாடு திரும்பியபோது தேடிச் சென்று வரவேற்க மறுத்தார். அன்று கலைஞருக்கு இனம் முக்கியமாகப் பட்டது. இன்று...?
சந்திரிகா குமாரதுங்கவால் இனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். அவர் 1994-ல் வெற்றி பெற்றபோது, 'காரிருள் கலைந்து வெளிச்ச விழுதுகள் ஈழ நிலத்தில் இறங்கியதாக' தமிழர் நெஞ்சம் மீண்டும் நம்பிக்கை கொண்டது. வளையல்களுக்கும், புடவைகளுக்கும் அது சந்திரிகாவின் பெயர் சூட்டி மகிழ்ச்சியில் மிதந்தது.
ஆனால், வாக்களித்தபடி ஈழத்தமிழர் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படவுமில்லை; போரை நிறுத்த சந்திரிகா அரசு சம்மதிக்கவுமில்லை. அவருடைய ஆட்சியில்தான் 'ஜெய சுக்குறு' (வெற்றி நிச்சயம்), 'தீச்சுவாலை' போன்ற மோசமான இராணுவ நடவடிக்கைகள் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டன.
ரஷ்யா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து நவீன போர்க் கருவிகளையும், படை விமானங்களையும் சந்திரிகா அரசு வாங்கிக் குவித்தது. யாழ் நகரை, சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து, ஐந்து லட்சம் தமிழர் இடம் பெயர்ந்தனர். இந்த மாபெரும் மனித அவலத்தை உலகநாடுகள் அன்றும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தன. 'சமாதான தேவதை' சந்திரிகாவின் சுயமுகம் வெளிப்பட்டபோது ஈழத்தமிழர்கள் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடந்தனர்.
சந்திரிகாவிடம் ஏமாற்றமடைந்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேவிடம் நம்பிக்கை கொண்டனர். அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்குவதாகவும், பொருளாதாரத் தடை, பயணத் தடை போன்ற முட்டுக் கட்டைகளை முற்றாக நீக்குவதாகவும் 2001-ல் நடந்த பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி வழங்கியது. '
சமாதானம் வேண்டி நிற்கும் சக்திகளுக்கும், அதற்கு எதிரான தீவிரவாத சக்திகளுக்கும் இடையில் போட்டியாக இத்தேர்தல் நடக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இத்தீவில் சமாதானம் நிலவ வேண்டுமா... போர் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டிருக்கிறது!' என்று கூறிய பிரபாகரன், சந்திரிகாவின் சுதந்திர கட்சிக்கு எதிராக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.
'ரணிலின் கட்சி விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது' என்று சந்திரிகா குற்றம் சாட்டினார். தமிழர் ஆதரவுடன் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ரணிலிடமும் தமிழர் நம்பிக்கை துரோகத்தையே சந்தித்தனர்.
நோர்வே நட்டின் முயற்சியால் இலங்கையில் போர் நிறுத்தம் வந்தது. பெப்ரவரி 22, 2002 அன்று வன்னியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் முதலில் கையொப்பமிட்டார். பிரதமர் ரணில் கையொப்பம் இட்ட பின்பு யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவிலுக்கும் சாவகச்சேரிக்கும் சென்றார். வீதியெங்கும் தமிழர் கூடிப் புதிய நம்பிக்கையுடன் ரணிலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் முதல் பேச்சு வார்த்தை தாய்லாந்தில் 2002 செப்டம்பரில் நடந்தது. அங்கேயே அக்டோபர் - நவம்பரில் இரண்டாவது பேச்சு வார்த்தையும் தொடர்ந்தது. சமாதானம் நாடிய பிரபாகரன், தனித் தமிழீழம் என்ற கோரிக்கையிலிருந்து கூட்டாட்சி முறைக்கு இறங்கி வந்தார்.
'உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்துக்கு இசைவாக நாமும் எமது போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே. சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகுக்கு உணர்த்தவே, நாம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம். எமது மக்களின் தேசிய இனப் பிரச்னைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின், அதனை முயன்று பார்ப்பதில் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்' என்றார் பிரபாகரன்.
ஆனால், ரணில் தமிழினத்தைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றினார். தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி, ஜப்பான் என்று ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த நிலையிலும் தமிழினம் எந்த உரிமையையும் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டது.
கலைஞர் இன்று கொண்டாடும் இந்த ரணில் விக்கிரமசிங்க, பேச்சுவார்த்தை நடக்கும்போதே கருணாவை, பிரபாகரனிடமிருந்து பிரித்து 2004-ல் விடுதலைப் புலிகளிடையே பிளவை உண்டாக்கியவர். கிழக்கு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் வலிமையைப் பலவீனப்படுத்த கருணாவை ரணில் அரசு பயன்படுத்திக் கொண்டது ஒருமலினமான வஞ்சகப் படலம்.
இலங்கை அதிபராக இருந்த சந்திரிகாவின் அரசியல் சூழ்ச்சியை எதிர்க்க, விடுதலைப்புலிகளைத் தன் அரசியல் சதுரங்கத்தில் வெட்டுக் கொடுத்தவர் ரணில். போர் நிறுத்த ஒப்பந்தப்படி யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றாமல் அதைத் திறந்த வெளிச் சிறைச்சாலையாக வைத்திருந்ததன் விளைவாகவே பிரபாகரன் ரணிலிடம் நம்பிக்கை இழந்தார்; பேச்சு வார்த்தை முறிந்தது.
சிங்களத் தலைவர்கள் அனைவரும் நிரந்தர அமைதியையும், அரசியல் தீர்வையும் உருவாக்குவதற்கான நேர்மையும், உண்மையான அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் இல்லை என்பதையும் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள தமிழினத்துக்கு எதிராக சிங்களப் பேரினவாதத்தை வளர்க்கவும், பௌத்த பிக்குகளின் ஏவல் கூவல்களாகச் செயற்படவும் சித்தமாக உள்ளவர்கள் என்பதையும் கலைஞர் அறியாதவரா? எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆய்வு இன்று அவசியந்தானா? இந்திய அரசுதான் ஈழத்தமிழரை அழிப்பதில் ராஜபக்ஷே அரசுக்கு முழுமையாக உதவியது என்பதை சரத் பொன்சேகா போட்டுடைத்த பின்பும், மத்திய அரசின் அத்துமீறிய தமிழின அழிப்பு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து வாய் திறக்க முடியாத நம் முதல்வர், இன்னும் எத்தனை காலம் 'சகோதர யுத்தம்' குறித்து விதம் விதமாக வியாசம் எழுதி பிரச்னையை திசை திருப்பப் போகிறார்?
போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், நிலங்களை விட்டு ரணில் ஆட்சியில் ராணுவம் வெளியேறவில்லை. மக்கள் வாழிடங்கள் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்ததால் மீள்குடியேற்றம் நிகழவில்லை. 800 ச.கி.மீட்டர் பரப்புள்ள யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்களப் படையை நிரந்தரமாகக் குவித்து வைத்திருந்த ரணிலுக்கு, பிரபாகரன் மீண்டும் தேர்தலில் ஆதரவு தர மறுத்ததைக் கலைஞர் அரசியல் பிழை என்கிறாரா? 'அந்த அரசியல் பிழையினால்தான் ராஜபக்ஷே ஆட்சி மகுடம் தாங்கினார்; தமிழினத்தைக் கொடூரமாக அழித்தார்' என்று கலைஞர் கருதினால், ராஜபக்ஷேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசை இவர் ஏன் எதிர்த்து எழவில்லை? இந்திய அரசுக்கு அன்றும் இன்றும் தலைமை தாங்கும் காங்கிரஸை ஏன் எதிர்த்துப் போர் முழக்கம் செய்யவில்லை? பதவி நாற்காலி பறிபோய்விடுமே என்ற அச்சம் காரணமாகவே புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்துவிட்டதா?
வன்னி மக்கள் வாழ் நிலத்தில் பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகள், எரிகுண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள் என்று சர்வதேசப் போர்விதிகளுக்கு மாறாக இரக்கமிலா ஓர் அரக்க ஆட்சி பல்லாயிரம் தமிழரைக் கொன்று குவித்ததை எதிர்த்து ஐ.நா. மனித உரிமை அமைப்பில் விவாதிக்க ஜெனிவாவில் மே 25, 2009 அன்று சிறப்புக் கூட்டம் நடந்தபோது இந்தியா வெளிநடப்பு செய்தபோதும், இலங்கை அரசுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்டியபோதும் இனவுணர்வுடன் அவற்றை எதிர்த்து எழுத ஏன் கலைஞர் பேனாவைக் கையில் எடுக்கவில்லை?
அசோக சக்கரத்தைத் தேசியக் கொடியில் வைத்திருக்கும் காந்தி தேசத்தை ஆளும் அரசு, தமிழினத்துக்கு எதிராக ராஜபக்ஷே சகோதரர்கள் நடத்திய இரத்தக் குளியலுக்கு இரகசிய ஆதரவு வழங்கியதோடு, அழித்தவன் கைகளிலேயே புனர்வாழ்வு தர ஆயிரம் கோடியை அள்ளிக் கொடுத்த கொடுமைக்கு உடந்தையாக நின்ற கலைஞரை வரலாறு எப்படி வாழ்த்தும்?
சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா? பெரியாரின் பொருந்தாத திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார்? எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார்? வேலூர் செயற்குழுவில் சம்பத் தாக்கப்பட்டதும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கண்ணதாசன் மீது செருப்பு வீசப்பட்டதும் சகோதர யுத்தத்தின் சமிக்ஞைகளன்றி வேறென்ன? 'மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ, பெண்ணையோ சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டுவிடுகிறது' என்றார் ஹென்றி மெய்ன்.
விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.
இதுதானோ கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!