டியூசன் மாணவியோடு அமலன் என்ற ஆசிரியரும்...
டியூசன் மாணவனோடு நசுரீன் என்ற ஆசிரியையும் காதல் மராத்தான் நடத்தியதைப் பற்றி "குரு- சிஷ்யை உறவு' என்ற தலைப்பில் ரிப்போர்ட் வெளியிட்டிருந்தோம்.
இந்த கள்ள ஜோடிகளில்... ஆசிரியர் அமலனால் கடத்தப்பட்ட ப்ளஸ்-டூ மாணவி ஸ்ரீலேகா வை... சந்தித்து.. ""எப்படி ஆசிரியரின் வலையில் விழுந்தாய்'' என்றோம். கண்ணீர் ததும்ப சங்கடமாய்ப் பேச ஆரம்பித்த அவள்..
“""நான் டென்த் படிக்கும் போது அமலன் சார்தான் எனக்கு கிளாஸ் டீச்சர். நான் கிளாஸ்லயே முதல் மார்க் வாங்குற மாணவி. அதனால் என் மேல் சார் ரொம்பப் பாசம்காட்ட ஆரம்பிச்சார்.
ஸ்கூல் பீஸ் கட்ட ஒருதடவை நான் சிரமப்பட்டப்ப... அவரே கட்டினார். அதனால் அவர் மேல் எனக்கு மரியாதை வந்துச்சி. இதைத்தெரிஞ்சி சந்தோசப் பட்ட எங்க அப்பாவும் அம்மாவும்... சார்ட்ட எங்க பொண்ணை உங்கக்கிட்ட ஒப்படைக்கிறோம். நீங்கதான் அவளை பெரிய ஆளாக்கணும்னு சொன்னாங்க. அதிலிருந்து சார் எங்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்க ஆரம்பிச்சார்.
சாருக்கு ஸ்கூலிலும் செல்வாக்கு அதிகம் என்பதால் என்னை எல்லோரும் அமலன்சார் ஸ்டூடண்ட்டுன்னு மரியாதையா பார்க்க ஆரம்பிச்சாங்க.டென்த்ல ஸ்டேட் லெவல்ல மார்க் வாங்க வைக்கிறேன்னு அவர் வீட்டுக்கு கூப்பிட்டு இலவசமா டியூசனும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சார்.
அப்ப அவ ருக்கும் அவர் மனைவிக்கும் பேச்சு வார்த்தை சரியா இருக்காது. அதனால் அடிக்கடி தன் மனைவி இல்லாத சமயங்களில் நான் அன்புக்கு ஏங்கற ஜீவன்னு ஒரு மாதிரியா பார்ப்பார்.
என் கையைப் பிடிச்சிக்கிட்டு கலங்குவார். அப்பல்லாம் எனக்கு அவர்மேல் பரிதாபமா இருக்கும். டென்த் முடிஞ்சி லெவன்த் வந் தப்பவும் அவரே டியூசனுக்குக் கூப்பிட்டார். இந்த சமயத்தில் அவர் மனைவியோட கோச்சிக்கிட்டு தனியா ஒரு சின்ன ரூமில் தங்கினார். அங்கும் என்னை டியூசனுக்குக் கூப்பிட்டார். அங்க டியூசனை மறந்து எனக்கு அன்புகாட்டற ஜீவன் வேணும்னு என்னை கட்டிப்பிடிச்சிக்குவார்.
சார் இது தப்புன்னு சொன்னாலும் விடாம... உன்னை உலகத் திலேயே பெரிய ஆளா நான் ஆக்கிக் காட்டறேன். என் கூடவே இருந்தா போதும்னு சொல்லியே... கொஞ்சம் கொஞ்சமா அங்க இங்க தொடுவார். கடைசியா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். நீதான் என் மனைவி.
நான் அந்தமான்லயாவது... அஸ்ஸாம், பீகார்லயாவது வேலைதேடிக்கிறேன். நாம் அங்க போய்டலாம். நாம நிறைய சம்பாதிச்சி உங்க அப்பா- அம்மாவுக்கு நிறைய பணத்தை அனுப்பலாம்னு சொல்லிச் சொல்லியே தப்பிக்கவிடாம பண்ணிட் டார்.அமலன் சாரை முதல்ல ஆசானா நினைச்சேன்.
அப்புறம் அப்பா ஸ்தானத்தில் வச்சிப்பார்த்தேன். அப்புறம் என்னை வழி நடத்தவந்த கடவுளா நினைச்சேன். கடைசியா தன்னைக் கணவன்னு சொல்லி என்னை முழுசா மோசம்பண்ணிட்டார். இவ்வளவும் பண்ணிய அந்த ஆள்... எல்லாத்தையும் முடிச்சிக்கிட்டு... என்னை நடுத் தெருவில் விட்டுட்டுப் போய்ட்டார். இனி எப்படி எந்த முகத்தை வச்சிக்கிட்டு எங்க அப்பா- அம்மாவை நான் பார்ப்பேன்''’’ அதற்குமேல் பேச முடியாமல் முகத்தைப் பொத்திக்கொண்டு உடைந்து அழ ஆரம்பித்தாள் அந்த பரிதாபத்துக்குரிய மாணவி.மாணவி ஸ்ரீலேகாவின் கதை; பலருக்கும் விழிப்புணர் வைப் போதிக்கும் விதமாக இருக்கிறது.
காக்கிகளுடன் கண்ணா மூச்சி ஆடும்... ஆசிரியர் அமலன் பிடிபடும்போது மேலும் பல பகீர் விவகாரங்கள் வெடித்து வெளியே வரலாம் என்கிறார் கள் காக்கிகள்.