பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, March 8, 2010

சுவாமி நித்யானந்தாவின் காதல் லீலை


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம். 33நாடுகளில் கிளைகள். 32வயதில் இரண்டாயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதி. உலகம் முழுவதும் 1,500 கிளைகள். விவேக் ஓபராய் முதல் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா வரை விசிறிகள் என காவி சாம்ராஜ்யத்தை நிலை நாட்டிய சுவாமி நித்யானந்த பரமஹம்சர், தன்னுடைய காவி உடைக்குள் ஒளித்து வைத்திருந்த காமம், நடிகை ரஞ்சிதா ரூபத்தில் அம்பலப்பட்டுப் போகும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கதவைத் திற காற்று வரட்டும் என்றவர் கதவைச் சாத்து காதல் வரட்டும் என்று அம்பலமாகட்டும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது சர்வதேச மீடியாக்களின் பக்கங்களில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் நித்தியானந்தர், தான் நடத்திய ஆபாச வேட்டை சி.டி. அம்பலமாகாமல் இருக்க நடத்திய கடைசி கட்ட சேஸிங் ஒரு விறுவிறுப்பான ஆங்கிலப் படம் போன்றது.

பெயர் வைத்த ரஜினியின் குரு!

மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹீலிங் தெரபியில் எக்ஸ்பர்ட்டான நித்யானந்தரை முதன் முதலில் அடையாளம் கண்டுகொண்டது திருவண்ணாமலை விசிறி சாமியார்தான். எட்டு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் பற்று கொண்டிருந்த ராஜசேகருக்கு, இமயமலையில் வைத்து பரமஹம்ச நித்யானந்தர் எனப் பெயர் சூட்டியது நடிகர் ரஜினியின் ஆன்மிக குருவான பாபாஜி. மெக்கானிக்கல் டிப்ளமோ பட்டம் மட்டுமே வாங்கியிருந்த நித்யானந்தருக்கு சரளமாகப் பேசத் தெரிந்த ஆங்கிலமும், தீவிர புத்தக வாசிப்பும் தனித்த புகழைத் தேடித் தந்தது. இதுவரை யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளாத நித்யானந்தர், தனக்கென ஒரு பெருங் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை நடத்தி வந்த சண்முகசுந்தரம் நித்யானந்தரிடம் பக்தியைக் காட்ட மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள பிடாடியில் 200 ஏக்கர் ஆசிரமம் எழுந்தது.

ஆனந்த நடன அசிங்கம்!

இந்த ஆசிரமம் உருவாவதற்கும் ஒரு பின்னணியைச் சொல்கிறார்கள். பெங்களூரு ஆசிரமத்தில் அய்நூறு ஆண்டுகள் பழைமையான ஆலமரம் ஒன்று இருக்கிறது. அந்த ஆலமரத்தின்கீழ் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சித்தர் சமாதியானாராம். அந்த சித்தர்தான் இந்த ஜென்மத்தில் அவதரித்துள்ள நான் என்றாராம் நித்யானந்தா. சாமியார் கைகாட்டிய அந்த இடத்திலேயே மிகப் பெரிய காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டு, நித்யானந்த தியான பீட ஆசிரமம் உருவானது. எட்டு ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரமத்தின் அசிங்கப் பக்கங்கள் அம்பலமானது 2005 ஆம் ஆண்டில் சிறு வயதுப் பெண்களை நித்யானந்தா அருகில் அவரது சீடர்கள் அனுமதிக்கிறார்கள். ஹீலிங் தெரபியைக் கொடுக்கும் போது இளம்பெண்களின் உடல்களை வருடுகிறார். இவர் நடத்தும் ஆனந்த நடனத்தில் நடக்கும் காட்சிகள் அருவருப்பானவை. ஸ்டார் ஓட்டல்களை விஞ்சும் வகையில் ஆனந்த நடனம் இருக்கிறது என்றெல்லாம் புகார் சொல்லப்பட்டது.

பெங்களூரு டூ சேலம் ...

இன்றைக்கு சுவாமிகளின் படங்களுக்குச் செருப்படி கொடுக்கிறார்கள். போராட்டம் ஆர்ப்பாட்டம் எனத் தீவிரம் காட்டுகிறார்கள். முதலியார் இனத்தில் பிறந்தவரை வேற்று சாதி சன்னியாசிகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்தப் பிரச்சினையெல்லாம் என புதுக் காரணத்தை அடுக்கிய ஆசிரம நிருவாகி ஒருவரிடம் அப்படியானால் வெளியான படங்கள் அவருடையது அல்ல என்கிறீர்களா? என்றோம்.
இது பற்றி உண்மைகளைப் பேச ஆரம்பித்தால் எனக்கு நேரும் விளைவுகளை நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்த ஆபாச சி.டி. விவகாரத்தின் பின்னணி எட்டுப் பேருக்குத் தெரியும். ஆசிரமத்தில் சுவாமிக்கு அடுத்தடியாக இருக்கும் இவர்கள் மூலம்தான் பெரும் தொகையைக் குறி வைத்துப் பேரம் நடந்தது. இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருந்த இந்த சேஸிங் காட்சிகள் பெங்களூரு ஆசிரமத்தில் தொடங்கி, சேலம் அழகாபுரத்தில் முடிந்தது என்று சொன்னால்தான் பொருத்தமானதாக இருக்கும். இந்தப் பேரத்தில் பங்கெடுத்த ஒருவரிடம் அனுப்புகிறேன். அவரிடம் பேசுங்கள். இன்னும் விளக்கமாகத் தகவல் கிடைக்கும் என நம்மை அங்கிருந்து சென்னை நகரின் பிரதான பகுதியில் உள்ள அந்த நபரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
நாம் சந்தித்த ஆசிரமத்தின் அந்த முக்கிய நபர் கூறும் காட்சிகள் இனி அப்படியே.

ரஞ்சிதா என்ட்ரி ...

இதுவரை மீடியாக்களில் ஒளிபரப்பான காட்சிகள் இருபது நிமிடம் அய்ந்து செகண்ட். ஆனால், உண்மையில் ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் கொண்ட முழுநீளஆபாசப்படம் அது. நடிகை ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் அறை பெங்களூருவில் உள்ள அவரது படுக்கை அறைதான். அந்தப் படுக்கையறைக்குள் அவ்வளவு சுலபத்தில யாரும் நுழைய முடியாது. ராணுவத்தில் மேஜராக இருந்த ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ரஞ்சிதா. நாடோடித் தென்றல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி வரிசையில் வந்த நேரத்தில் திருமணமும் செய்து கொண்டார். காஷ்மீரில் சில காலம் சேர்ந்து வாழ்ந்த ரஞ்சிதாவுக்கு அந்த வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து வாங்கினார். மிகுந்த மனப் போராட்டத்தில் இருந்த அவரிடம் நடிகை ராகசுதா, சுவாமி நித்யானந்தாவிடம் ஹீலிங் தெரபி வாங்கினால், மனசாந்தி கிடைக்கும் என பெங்களூரு நெடுஞ்சாலைக்கு ரூட் போட்டுக் கொடுத்தார். இதன் பிறகு ஆசிரமத்திலேயே தங்கி சேவை செய்ய ஆரம்பித்தார் ரஞ்சிதா என தொடக்கத்தை விவரித்தவர்,

அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் . . .

மரணத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்கவேண்டும். அடிமனதில் மன அமைதியை உருவாக்குவதன்மூலம் இறைவனை அடையலாம் என்ற சுவாமியின் அடிப்படை தியரி ரஞ்சிதாவுக்கும் பிடித்துப் போய்விட்டது. பெங்களூரு ஆசிரமம் ஒரு வினோதமானது. அங்கு ஆண், பெண் பாகுபாடெல்லாம் கிடையாது. ஓரிரு மணி நேர உறக்கம். மற்ற நேரமெல்லாம் தியானம்தான்.
எப்போதும் இளம் பெண் துறவிகளும், ஆண் துறவிகளும் நடந்து கொண்டேயிருப்பார்கள். இந்த வாழ்க்கையோடு ரொம்பவே பழக்கப்பட்டு விட்டார் ரஞ்சிதா. நித்யானந்தரின் படுக்கையறையைச் சுத்தம் செய்ய பல பெண்கள் வந்து போவார்கள். அவர்களைப் போல்தான் இவரும் ஒரு கட்டத்தில் சுவாமியோடு மிகவும் நெருக்கமாகிவிட்டார். இதை ஒரு சில துறவிகள் பார்த்துவிட்டாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள வாழ்க்கை முறைகள் அப்படி. அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் தவறில்லை என்பது ஓஷோவின் தத்துவம்தான் என்றாலும், அதை வெளிப்படையாக யாரும் சொன்னதில்லை.

அமெரிக்க கேமரா அஸ்திரம் . . .

இந்த நேரத்தில் சுவாமிகளின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளைப் பார்த்த ரஞ்சிதாவுக்கு சின்ன ஆசை ஏற்பட்டிருக்கிறது. சரியான நேரம் பார்த்துக் காத்துக் கிடந்தார். அவருக்குப் பின்புலமாக இருந்து தூண்டில் வீசியது ஆசிரமத்தின் ஒரு சில துறவிகள்தான். (அட). அவர் பயன்படுத்திய கேமிரா உளவுத் துறைக்குப் பயன்படுத்தும் அதிநவீன கேமரா. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பது நாங்கள் பின்பு நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அந்த கேமிராவின் தொழில் நுட்பம் எப்படியென்றால் ஏதாவது பொருள்கள் அசைந்தால் மட்டுமே படம் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. சுவாமியோடு தான் இருக்கும் நாட்களில் உடலுறவுக் காட்சிகளைப் படம் பிடிக்கவேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரது அறையைச் சுத்தம் செய்யப் போனவர் படுக்கையில் இடதுபுறத்தில் உள்ள பூச்சட்டியில் இந்த கேமராவை சரியான கோணத்தில் பொருத்தியிருக்கிறார். வழக்கம் போல் அன்றிரவு இருவரும் இணைந்திருக்கிறார்கள். நீங்கள் பார்த்த ஒரு காட்சியின் போது விளக்கை அணைக்க சுவாமி முயலும்போது ரஞ்சிதா அதைத் தடுக்கும் காட்சிகள் தெளிவாகத் தெரியும். இதிலிருந்தே ரஞ்சிதாவின் சூழ்ச்சியைத் தெரிந்து கொள்ளலாம்.

துணையோடு தூண்டில்

இதன்பிறகு எதையும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் ஆசிரமத்தின் பணிகளில் தீவிரம் காட்டிய ரஞ்சிதா, சுவாமியின் அனுமதியோடுதான் டி.வி.சீரியல்களில் தலைகாட்டி வந்தார். இந்தக் காட்சிகளை வியாபாரமாக்கும் நோக்கத்தில் இருந்தவருக்கு தூபம் போட்ட சாமியார்களும் ஆசிரமத்தில் ஒரு சில பாலியல் விவகாரங்களில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்கள்தான். இவர்களது சீண்டல்களால் இதுவரை அய்ந்து இளம் பெண்கள் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு கனடா நாட்டு இளம் துறவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதெல்லாம் ஆசிரம வளாகத்திற்குள்ளேயே மூடி மறைக்கப்பட்ட உண்மைகள். இதில் நித்யானந்தா டார்ச்சரால் இரு பெண்கள் தற்கொலை வரை போனதாகவும் சொல்கிறார்கள் என்றனர்.
ரஞ்சிதாவை இயக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சுவாமி தர்மானந்தா. சேலத்தைச் சேர்ந்த இந்தத் துறவியின் இயற்பெயர் லெனின். 2004 ஆம் ஆண்டு காந்தப் படுக்கைமோசடியில் சேலம் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. இந்த விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்தான் லெனின். பின்னர் பெயரை மாற்றிக் கொண்டு சுவாமியின் நம்பிக்கைக்குரிய ஒருவராக மாறினார். ஆசிரமத்தின் முதல் பத்து முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். ரஞ்சிதா விவகாரத்தில் இருந்து சாமியைக் காப்பாற்ற, தான் பாடுபடுவதாகக் கடைசி வரை காட்டிக் கொண்ட இந்தத் துறவிதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்போது மீடியாக்களுக்கு இதை அனுப்பி வைத்ததும் இந்த லெனின்தான்.

ஆபாசத்தின் விலை அய்ம்பது கோடி ரூபாய

இரண்டு மாதங்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை தொடங்கியது. அப்போது லெனின் தன்னிடம் மிக ரகசியமாக இதை ரஞ்சிதா கொடுத்ததாக சில படங்களை ஆசிரமத்தின் தலைமை நிர்வாகியிடம் கொடுத்தார். அதில் ரஞ்சிதாவும், சுவாமியும் இருக்கும் ஆபாசப் படங்கள் மட்டுமே இருந்தன. இதற்கு மசியாத ஆசிரம நிர்வாகிகளிடம் சி.டி.யும் காட்டப்பட்டது. இது வெளியாகாமல் இருக்க ரஞ்சிதா நிர்ணயித்த தொகை அய்ம்பது கோடி ரூபாய். இதில், சரிபாதி லெனின் மற்றும் அவரது அண்ணன் குமார் ஆகியோருக்கு என்று முடிவானது.
நித்தியானந்தரின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் சதானந்தா உள்ளிட்ட வெகுசிலருக்கு மட்டும் இந்த சி.டி.காட்டப்பட்டது. இந்தக் காட்சிகளைப் பார்த்த பெங்களூரு ஆசிரமத்தின் வி.அய்.பி. துறவி ஒருவர், இது பக்கா பிளாக்மெயில். இது சுவாமியே கிடையாது. அவளை உள்ளே அனுமதித்ததற்கு அய்ம்பது கோடி ரூபாய் என்பது டூ மச் என சத்தம் போட்டார். இவரது அவசர செயல்பாடுதான் முதலில் போடப்பட்ட அச்சாரம். இந்த சி.டி.விவகாரம் பல கட்டங்களாக சென்னை மற்றும் பெங்களூருவில் பேரம் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை நடக்கும் போது செல்போனில் மட்டுமே ரஞ்சிதா பேசுவார். தர்மானந்தாதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்.

நேரடிப் பேச்சில் நித்தியானந்தா

பின்னர் விவகாரம் சீரியஸாகப் போன நேரத்தில் மட்டும் நான்கு முறை நேரடிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் நித்யானந்தா. பெங்களூரு ஆசிரமத்தில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், சக துறவிக்கு இவ்வளவு பணம் செல்வதை நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. லெனினை சந்தேகத்துடன் பார்த்து வந்தனர். பணம் வருவதற்குத் தாமம் ஏற்பட்டதால் ரஞ்சிதாவுக்குச் சாதகமாக நேரடி வியாபாரத்திற்கு உதவி செய்ய முன்வந்தார் சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவ தொழில் அதிபர் ஒருவர். சுவாமியின் பெயர் கண்டிப்பாக நாறிப்போகும். பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணுங்கள் என அவர் சொல்ல, இரண்டு வாரத்திற்கு முன்பு சென்னையில் முக்கிய ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஆசிரம நிர்வாகிகள், தர்மானந்தா, தொழிலதிபர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஃபைனல் ரேட் 15 கோடி ரூபாய்

நீண்ட நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் அய்ம்பது கோடி என்பது அதிகம். கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என கோரிக்கை வைக்கப்பட கடைசியாக யாருக்கும் பாதகமில்லாமல் முடிவாக 15 கோடி கொடுக்கிறோம். அந்த சி.டி.யின் ஒரிஜினல் பிரிண்ட் படங்கள் என அனைத்தும் செட்டில் செய்யப்பட வேண்டும் என ஆசிரம நிர்வாகிகள் உறுதியாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் நித்யானந்தருக்கு அப்போதே செல்போனில் சொல்லப்பட நான் கட்டிக் காத்த பெயர் காற்றில் பறந்துவிடக்கூடாது. 15 கோடி ரூபாயை செட்டில் பண்ணுங்கள். தர்மானந்தாதான் இவ்வளவும் செய்திருக்கிறான். அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் எனப் பேசியிருக்கிறார். இதன் பிறகும், இந்தப் பணம் லெனினுக்குப் போய்ச் சேரக்கூடாது என ஆசிரம நிர்வாகிகள் வஞ்சம் பார்த்ததன் விளைவுதான் இப்படி ஊரெல்லாம் சிரிப்பாய் சிரிக்கக் காரணம் என பேரத்தின் உச்சத்தை அதிர்ச்சியோடு விவரித்தவர், லெனினுக்குச் சொந்த ஊர் சேலம். இதே சேலம்தான் நித்தியானந்தருக்கு இறுதி சவக்குழி தோண்டக் காரணம். கடந்த 15 ஆம் தேதியில் கோவை சேலத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார் சுவாமி. கோவை வ.உ.சி. மய்தானத்தில் அவரைப் பார்க்கத் திரண்ட கூட்டமே அவரது மகிமையைச் சொல்லும். சேலம் அழகாபுரத்தில் உள்ள ஆசிரமத்துக்குச் சென்றவர், முக்கிய வி.அய்.பி.களின் வீடுகளுக்குச் சென்று பூஜையும் செய்தார். சேலம் நேரு அரங்கில் மாபெரும் சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு ராமகிருஷ்ணா தெருவில் உள்ள ஆசிரமத்தின் கிளைக்கு இரவு வந்தார். தர்மானந்தாவும் அங்கு இருந்தார். இந்தக் கிளையில் நள்ளிரவு இரண்டு மணி வரை நடந்த வாக்குவாதங்களை சாகும் வரையில் நித்யானந்தாவால் மறக்கமுடியாது.
தர்மானந்தா உள்பட பேரம் பேச அழைக்கப்பட்டவர்கள், தொகை போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றெல்லாம் பேச, ஒரு கட்டத்தில் கடுப்பின் உச்சிக்கே போன சுவாமி, ஆசிரமத்தில் தர்மானந்தா செய்த செயல்களைப் பற்றியும் ரஞ்சிதாவோடு சேர்ந்து கொண்டு என்னை பிளாக் மெயில் செய்வது சரியானதா? எனவேதனைப்பட்டார். அருகில் இருந்த ஆசிரம நிர்வாகிகள் சுவாமியின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். தர்மானந்தாவுக்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவை, தான் அனுபவிப்பதாகப் புலம்பினார் சுவாமி. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரஞ்சிதா தரப்பினர் பணம் வந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் ஊரெல்லாம் அம்பலமாகும். அதான் ஆசிரமத்தில் பல ஆயிரம் கோடிகள் இருக்கிறதே என அழுத்தமாகப் பேச ஒரு கட்டத்தில் தன் முகத்தில்தானே அறைந்து கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டார் நித்யானந்தா.
நீண்ட நேரம் நீடித்த அவரது அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை. பின்னர் ஒரு வழியாகத் தன்னைத் தேற்றிக் கொண்டவர், இத்தோடு செட்டில் செய்துவிடுங்கள். நான் இனி தர்மானந்தா முகத்திலேயே விழிக்கக் கூடாது என முடிவாகச் சொல்லிவிட்டார். அத்தோடு பிரச்சினை முடிந்தது. பணத்தை செட்டில் செய்வதற்குக் கால அவகாசம் கேட்கப்பட்டது. அந்த நேரத்தில் சுவாமியின் கதறலைப் பார்த்திருக்கிறார் வி.அய்.பி. பக்தர் ஒருவர். அவர் ஆசிரமத்தின் தலைமை நிர்வாகி ஒருவரிடம், தர்மானந்தாவின் கதையை நான் பார்த்துக் கொள்கிறேன். பணம் எதுவும் தரவேண்டாம். போலீஸ் அதிகாரிகள் நமக்குத் துணை நிற்பார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

டி.ஜி.பி. இருக்கிறார்

இந்தத் தகவலை சுவாமியிடம் கூறிய ஆசிரமத்தின் துறவி தமிழ்நாட்டில் டி.ஜி.பி. லத்திகா சரணிடம் பேசப் போகிறார்கள். அவனை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடலாம். போலீஸ் விட்டாலும் உங்களுக்காக உயிரை விடக் காத்திருக்கும் மூன்றரை லட்சம் பக்தர்கள் அவனை சும்மா விடமாட்டார்கள். என ஆறுதல்படுத்த நிம்மதிப் பெருமூச்சில் ஆழ்ந்தார் நித்யானந்தா. இந்த விவரம் தர்மானந்தாவுக்குத் தெரிந்தால் திருந்திவிடுவான். 15 கோடி ரூபாய் மிச்சம் எனஆசிரம நிர்வாகி ஒருவர் கணக்கு போட்டார். இதைத் தெரிந்து கொண்ட தர்மானந்தா, இரண்டு மாதம் பாடுபட்டும் பைசா தராமல் ஏமாற்றுகிறார்கள். போலீசில் போனால் சிக்கிவிடுவோம். போலீசிலிருந்து தப்பினால் இவர்கள் உயிரோடு விடமாட்டார்கள் எனப் பயந்து முதல் கட்டமாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார்.

இப்போது ரஞ்சிதா

நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் தர்மானந்தாவைப் பிடிக்க முடியவில்லை. சேலத்திலும் தேடினோம். இதன் பிறகு ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் ஒரு சில காட்சிகளை மட்டும் அனைத்து மீடியாக்களுக்கும் சென்று சேரச் செய்தார். இதை வைத்து ஒரு மீடியா, இரண்டு கோடி ரூபாய் கொடுங்கள். செய்தியை வெளியிட மாட்டோம் என மிரட்டிய தகவலும் உண்டு. இதே மீடியா நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்கத் தூண்டியபோது நான் தவறு செய்துவிட்டேன். என் விவகாரத்தை நான் கையாளாமல் மூன்றாம் நபரிடம் பொறுப்பை ஒப்படைத்ததுதான் பெருங்குற்றம். சுவாமிஜிக்கு எதிராக நான் எந்தப் புகாரும் சொல்லமாட்டேன் என உறுதியாக மறுத்துவிட்டார்.
இப்போது நித்யானந்தாவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டு பெங்களூரு ஆசிரமத்தில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ரஞ்சிதா. மீடியாக்களின் பார்வை திசை மாறும்போது சீரியல் வேலைகளில் இறங்குவார். சுவாமி இப்போது வாரணாசியில் பூரண கும்பமேளாவில் இருக்கிறார். ஒரு வாரம் கழித்துதான் வருவார். அதற்குள் எல்லாம் மாறிவிடும். இதுதான் நடக்கப் போகிறது என்றவர், எது நடக்கக்கூடாது என சுவாமி நினைத்தாரோ அது நடந்து விட்டது. இதில் குற்றவாளி யார்?காமத்திற்கு சபலப்பட்டவரிடம் பணத்திற்கு சபலப்பட்டவர் விளையாட நினைத்தார். இரண்டு பேரின் பசியும் ஒன்றுமில்லாமல் மீடியாவின் பெரும் பசியைத் தீர்த்துவிட்டதுதான் இந்த இருவரும் செய்த அருஞ்செயல் என சேஸிங்கை படிப்படியாக விவரித்து முடித்தார். நமக்கு வியர்த்துக் கொட்டியது.
மீடியாக்களில் நித்யானந்தரின் ஆலிங்கனங்கள் அம்பலமாகும் தகவல்கள் வாரணாசியில் இருக்கும் அவருக்குத் தெரிவிக்கப்பட, எல்லாம் எனது விதிப் பயன். உங்கள் எல்லோரையும் நான் மனதார நம்பினேன். என்னைக் கைவிட்டு விட்டீர்கள். இந்தச் செயலால் நான் காராஹிருகத்திற்குச் (சிறை) செல்ல வேண்டிய நிலை வந்தாலும் ஏற்றுக் கொள்வேன். கடவுளின் விருப்பம் எதுவோ அதுதான் நடக்கும் எனச் சொல்லிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாராம்.
இப்போது அவத் தேற்றுவதற்குப் புதிய வார்த்தைகளைத் தேடி அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரம துறவிகள்.

ஆ.விஜயானந்த்- நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Saturday, March 6, 2010

நித்யானந்தரிடம் ரஞ்சிதா சிக்கியது எப்படி? பெட்ரூமில் கேமரா வைத்த சாமியார் ஸ்ரீநித்ய தர்மானந்தா

""நக்கீரனால்தான்இந்த துணிச்சலான செயலை செய்யமுடியும். ஆன்மீகப் போர்வையைப் பொத்திக்கொண்டுசல்லாப ஆட்டம் போடுபவர்களை முகம் மறைக்காமல் வெளிப்படுத்த உங்களால்மட்டும்தான் முடியும்'' -தமிழகம் முழுவது மிருந்து வாசகர்களும்பொதுமக்களும் தொடர்புகொண்டபடியே இருக்கிறார்கள்.பரமஹம்ஸ(!) நித்யானந்தருடன் நடிகை ரஞ்சிதா நெருங்கியிருக்கும் காட்சிகளுக்காகத்தான்மக்களிடமிருந்து இந்த பாராட்டு.
உலகம் முழுவதும் பிரபல மான நித்யானந்தாவை சிக்க வைக்கும் வீடியோவை எடுத்த நபர் யார்?கடந்த 6 மாத காலமாக நம்முடன் தொடர்பில் இருந்தவர்.
தற்போது தலைமறைவான அவரது இருப்பிடம் அறிந்து நேரில் சென்று சந்தித்தோம்.
முன்புபார்த்தபோது காவி உடை, உத்திராட்சம், நெற்றிப் பொட்டு என நித்யானந்தாபோலவே ஸ்ரீநித்ய தர்மானந்தாவாக (ஆசிரமத்தில் நித்யானந்தர் வைத்தபெயர்)இருந்தவர், இப்போது ஜீன்ஸ் பேண்ட்- ஷர்ட்டில் "உன்னைப்போல்ஒருவன்'கமலஹாசன் போல லேப்-டாப் சகிதம் இருந்தார். அவருடைய பழைய சிரிப்புமட டும்மாறவில்லை.
""மிகப்பெரியசாதனையைச் செய் திருக்கீங்க'' என்று கை கொடுத்தோம். அவர் அடக்கமாகப் புன்னகைத்தார். அந்த இளைஞரின் பெயர், லெனின். கம்யூனிஸ்ட்குடும்பத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞர். என்ன நடந்தது என்பதை விவரிக்கத்தொடங்கினார். அவர்உண்மைதான் பேசுகிறார் என்பதை தீர்க்கமான கண்கள்உணர்த்தின. (பாதுகாப்புகாரணங்களுக் காக அவரின் படம் வெளியிடப்பட வில்லை.)
""நான்கடவுள் நம்பிக்கையில்லாதவனாகத்தான் இருந்தேன். நித்யானந்தாவின்பிரசங்கங்களைக் கேட்க ஆரம் பித்ததும், அவர் மீது ஒரு ஈர்ப்புஏற்பட்டது.இத்தனை சின்ன வயதில், மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில்ஆன்மீகச் சேவைசெய்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். நாம் வாழ்ந்ததற்குஅடையாளமாக இந்தசமுதாயத்திற்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும்ங்கிற விருப்பத்தோடுதான் பெங்களூரில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத் தில் சேர்ந்தேன். இந்து மதவளர்ச்சிக்கு அவர் மூலம் என்னை அர்ப்பணித்துக்கொள்ளும் வகையில் தலையில் , சிறு குடுமியளவுக்கு முடியை விட்டுவிட்டு, மற்ற பகுதி களை மொட்டையடிச்சிக்கிட்டேன். காவி கட்டிக் கிட்டேன். ஜட்டி அணியக் கூடாதுஎன்பதால்லங்கோடுக்கு மாறினேன்.
முஸ்லிம்,கிறிஸ்டியன் என்ற பேதமில்லாமல் எல்லோருக்கும் நம்பிக்கையளிக்கும்விதத்தில் நித்யானந்தா பிரசங்கம் செய்தார். தியானம், யோகா,ஹீலிங் என்றுஉளவியல் சார்ந்த அவரோட செயல் பாடுகள் மன ஆற்றலைமேம்படுத்திக்கொள்வதற்குஊக்கமளித்தது. சரியான இடத்திற்கு வந்திருக்கிறோம்என்ற நம்பிக்கையுடன்ஆசிரமத்தில் இன்னும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன். பல நாடுகளிலும்கிளைகள் விரிந்து, டாலர்களும் யூரோக்களும்கொட்ட ஆரம்பித்ததும் நான்தான்கடவுள் என்றும் சிவனின் அவதாரம் என்றும்பக்தர்களிடம் பிரசங்கம் செய்யஆரம்பித்துவிட்டார். அவர் உட்கார்வதற்குதங்க சிம்மாசனம் உருவாக்கப்பட்டது. ஒன்றல்ல, 10 தங்க சிம்மாசனம்.ஒவ்வொன்றும் தலா 25 லட்ச ரூபாய்மதிப்புடையது.
தன்னைசந்திக்க வரும் பக்தர்களைக் கட்டிப்பிடிக்கும் பழக்கத்தையும்ஆரம்பித்தார்.வசூல்ராஜா படத்தில் வருவதுபோல இதுவும் ஒரு கட்டிப்பிடிவைத்தியம்தான் என்றுஆசிரமத்தில் உள்ளவங்க சொன்னாங்க. அதாவது,நித்யானந்தரிடம் உள்ள எனர்ஜி,பக்தர்களுக்கு கிடைப்பதற்காகத்தான் இந்தகட்டிப்பிடி ஃபார்முலா என்றார்கள்.
அப்படின்னா, எல்லா பக்தர்களுக்கும் எனர்ஜி தரலாமே, ஏன் இளம்பெண்களுக்கு,அதிலும் பணக்காரபெண்களுக்கு மட்டும் இந்த கட்டிப்பிடி ஃபார்முலா என்றுஅவர்களிடம்கேட்டேன். சாமி, எது செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும்னுசொன் னாங்க.
மாற்றங்கள்ஏற்படுவதை நான் புரிந்துகொண்டேன். இருந்தாலும், நம்பிக்கைகுறைய வில்லை.ஆசிரம சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். நித்யானந்தாதங்கியுள்ளகுவார்ட் டர்சுக்கு அவரோட அனுமதி யில்லாம ஈ-காக்கைகூட நுழையமுடியாது. அந்தஇடத்துக்கு பெண் சாமியார்கள் போயிட்டு வருவதையும்அவங்களில் சிலர்கலங்கியிருப்பதையும் பார்த்தப்ப, ஏதோ மனக் குழப்பத்தில் இருக்காங்கன்னும்,அதற்காகத்தான் நித்யானந்தாகிட்டே போய் எனர்ஜிபெற்றுக்கிட்டுவர்றாங்கன்னும் நினைச்சேன். அதில் ஒரு பெண் சாமியார்ரொம்பவும் கலங்கியிருந்ததைப் பார்த்து அவர்கிட்டே பேசியப்பதான், தவறானஇடத்தில் வந்துமாட்டிக் கொண்டு, ஒரு அயோக்கியனை நம்பி இத்தனை நாளாசேவைபண்ணிக்கிட்டிருக்கோம்ங்கிற உண்மை தெரியவந்தது.
அந்தபெண் சீடர் சொன்ன விஷயங்கள் பகீரென்றிருந்தது. யாரையும் தன்குவார்ட்டர்சுக்குள் அவ்வளவு எளிதாக அனுமதிக்காத சாமியார், பெண்சீடர்களில்இளமையான- கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்களைமட்டும்அனுமதிக்கிறார் என்றும், இதற்கு அந்த ஆசிரமத்தில் உள்ள ஒருகேரக்டரேஉதவுகிறது என்றும் அந்த பெண் சாமியார் கண்கலங்கினார். (அந்தகேரக்டரைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்) பிரசங்கம், ஹீலிங், மெடிடேஷன் என்றபெயரில்அவர்களை வசியம் செய்தபிறகு, அவர்களை குவார்ட்டர்சுக்குள்வரச்சொல்வார். பணிவிடை என்ற பெயரில் இப்படி பல பெண்கள் சென்றாலும், ஒருவர்செல்வது இன்னொரு வருக்குத் தெரியாது. அந்தளவுக்கு நித்யானந்தர்மெயின்டெய்ன்செய்தார்.
தியானமண்டபத்துக்கு பக்கத்திலிருக்கும் அவருடைய அறைக்கோ அல்லதுஆசிரமத்தில் அவருக்கென்று இருக்கும் பிரத்யேகமான தங்குமிடத்திற்கோபணிவிடைப் பெண்கள்போக வேண்டும்.
எப்போதும்யாராவதுஒரு பெண்ணை பக்கத்தில்வைத்து தடவிக்கொண்டேதான்இருப்பார். ஒவ்வொருபெண்ணிடமும் தனித்தனியாக கவுன்சிலிங் செய்வார். ஹீலிங்என்ற பெயரில்சகஜமாகத் தொடுவார். தன்னை கிருஷ்ணருடைய அவதாரம் என்றும், தன்னுடன் உள்ளபெண்களை கோபியர்கள் என்றும் சொல்லிக் கொஞ்சுவார். அவர்மீதுள்ளபக்தியினாலும், அவரது மெடிடேஷன் திறமையாலும், குவார்ட்டர்சுக்கு செல்லும்பெண்கள் ஒரு கட்டத்தில், நித்யானந்தரின் எந்த விருப்பத்தையும்நிறைவேற்றும்மனநிலைக்கு வந்துவிடுவார்கள்.
உணவுபரிமாறுவது, கால் அமுக்கிவிடுவது, மாத்திரை கொடுப்பது என்றுதொடங்குகிறபணிவிடை அப்படியே செக்ஸ் பக்கம் திரும்பும். காமசூத்ரா போன்றபுத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லு வார். ஆசிரமத்தில் யாரும்டி.வி.பார்க்கக்கூடாது என்று கட்டுப்பாடு உண்டு. நித்யானந்தர் அறையில்டி.வி,டி.வி.டி.பிளேயர் மட்டுமில்லாமல் அந்த மாதிரியான கேசட்டுகளும்இருக்கும்.கிருஷ்ண அவதாரமான தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் கோபியர், சீக்கிரமாக ஞானம் பெறலாம் என்று சொல்லியே படுக்கைக்கு உடன்படச் செய்துவிடுவார். அப்படித் தான் என்னிடம் பேசிய பெண் சீடரையும்உடன்படவைத்திருக்கிறார். இதையெல்லாம் அவர் என்கிட்டே சொன்னப்ப, இந்தஆசிரமம் ஒருடைட்டானிக் கப்பல். இது மூழ்க ஆரம்பிச்சிடிச்சி. கேப்டன்மட்டுமில்ல, இதிலபயணிக்கிறவங்களும் மூழ்க வேண்டியதுதான். தப்பிக்கமுடிஞ்சவங்கதப்பிச்சுக்குங்கன்னு சொன்னேன். ஏன்னா, அப்பவே என் மனசில் ஒருதிட்டம்உருவாயிடிச்சி. ஆன்மீக சேவைன்னு நம்பி இந்த ஆளால் என்வாழ்க்கையையே தொலைத்துவிட்டேனேங்கிற ஆத்திரம் மனதில் உருவானது. அதைஅடக்கிக்கிட்டு, இந்த அக்கிரமங்களை அம்பலப்படுத்த முடிவு செய்திட்டேன்.அதற்காக 3 மாசம்ப்ளான் பண்ணி, இந்த வீடியோவை எடுத்து முடித்தேன். இதில்எனக்கு ஆசிரமத்துக்குள்ளேயே பலர் ஒத்துழைச்சாங்க. எப்படி எடுத்தோம்ங்கிறதைஅப்புறம்சொல்றேன்.
ரஞ்சிதாவும்நித்யானந்தாவும் இருக்கிற வீடியோ காட்சிகளை நாடே பார்த்திருக்குது.நித்யானந்தர் குவார்ட்டர்சுக்குள் ஒரு பெண் நுழையணும்னாஅதற்கு எவ்வளவுகாலமாகும்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன்.ஆனா, நடிகை ரஞ்சிதாவிஷயம்அப்படியல்ல. 2009ல் சென்னையில் நடந்த நித்யானந்தாவின்கல்பதருநிகழ்ச்சிக்கு வந்தார் ரஞ்சிதா. அப்போதே அவருக்கு ஈர்ப்புவந்துவிட்டது. கல்யாண வாழ்க்கையில் நிம்மதியில்லாத ரஞ்சிதா, நித்யானந்தாவை சென்னையில் ஒரு வீட்டில் சந்தித்தார். 10 நிமிஷம் பேசினால் ப்ரெய்ன்வாஷ்பண்ணிவிடும்சக்தி நித்யானந்தாவுக்கு உண்டு. அதில் ரஞ்சிதாகிறங்கிப்போயிட்டார். ரொம்பபவ்யமான பக்தையாக நடந்துக்கிட்டார். அதனால,ரொம்ப சீக்கிரமாஆசிரமத்துக்குள் நுழைஞ்சு, நித்யானந்தாவின் குவார்ட்டர்சுக்குப்பக்கத்திலேயே தங்குற அளவுக்கு ரொம்ப சீக்கிரமா முன்னேறிட்டார். நித்யானந்தாவுக்கும் ரஞ்சிதாவின் பணிவிடைகள் பிடிச்சுப்போனதால, குறுகியகாலத்திலேயே தன்னோட குவார்ட்டர்சுக்குள் அனுமதிச் சிட்டார்.அவங்கஅன்னியோன் யத்தைத்தான் வீடியோவில் பார்த்தீங்க.
ஒருரஞ்சிதா மட்டுமல்ல... சாமியாரால் கட்டிலில் தள் ளப்பட்டு, வெளியே தெரியாதபல ரஞ்சிதாக்கள் ஆசிரமத்தில் இருக்கிறார்கள். ஆனால், நடிகைஎன்றுபார்த்தால் ரஞ்சிதா மட்டும்தான்'' என்று சொன்ன லெனின் என்கிற நித்யதர்மானந்தா, ஆசிரமத்தில் நடக்கும் மற்ற விஷயங்களையும் சொல்ல ஆரம்பித்தார்.
""பிடாடிஆசிரமத்தில் இன்னர் அவேக்கனிங் என்ற புரோகிராம் நடக்கும்.அதாவது, மனதுக்குவிழிப்புணர்ச்சி ஏற் படுத்தும் வகையில் நித்யானந்தர்அருளுரை வழங்குவார்.இது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு கனடா நாட்டிலிருந்து ஒருபிரஜை வந்திருந்தார்.ஆசிரமத்தில் உள்ள அனந்தபுரி அபார்ட்மென்ட்டில்தங்கவைக்கப்பட்டிருந்த அவர்காலை 6 மணியளவில் அந்த அபார்ட்மென்ட்டுக்கு கீழே விழுந்துகிடந்தார். பலத்தஅடி பட்டிருந்த அவரை நாங்களெல்லாம் பார்த்தபோது, இரண்டாவது மாடி யிலிருந்துவிழுந்திருக்கிறார் என்றுதெரிந்தது. உடனடியாக அவரை பக்கத் தில் இருந்தபி.ஜி.எஸ்.மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். பரிசோதித்த டாக்டர்கள்,கொண்டுவரும் வழியி லேயே அவர் இறந்து விட்டார் என்று சொல்லிவிட்டார்கள்.
இறந்துவிட்டார்என்று உறுதி செய்யப் பட்டபிறகும், அந்த மருத்துவமனையின்ஓனரான கர்நாடகாவைச்சேர்ந்த பிரபல சாமியார் பாலகங்காதர் சாமி மூலம்டாக்டருக்குப் பிரஷர்கொடுத்து, பாடியை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துட்ரீட் மெண்ட் தர வைத்தார்நித்யானந்தர். அதோடு, ஹார்ட் அட்டாக்கினால்தான்அந்த கனடா நாட்டுக் காரர்இறந்துபோனார் என்று சர்டிபிகேட் கொடுக்கவும்பிரஷர் செய்தார் நித்யானந்தா.அப்படியே சர்டிபிகேட்டும் கொடுக்கப்பட்டது.கீழே விழுந்து அடிபட்டு, ரத்தம் கொட்டி, இறந்து போன வரின் உடலை போஸ்ட்மார்ட்டம்கூட செய்யாமல், ஹார்ட்அட்டாக் என்று சர்டிபி கேட் கொடுக்கவைத்தார் நித்யானந்தா.
இந்தவிஷயம் லோக்கல் போலீசுக்கும் தெரிந்துவிட்டது. அவர்கள் விசாரணைக்குவரும்முன்பே, வெயிட்டாக பணம் அனுப்பப்பட்டு விட்டது.விசாரணைமுடக்கப்பட்டுவிட்டது.
அதோடு இந்த செய்தி வெளியே வராதபடி சர்வ ஜாக்கிரதையாக மூடி மறைத்து விட்டார்கள் எங்கள் பீடத்து ஆட்களும் போலீசாரும்.
இறந்தவர்கனடா நாட்டுக்காரர் என்ற போதும், அவரது உடலை பெங்க ளூரிலேயேரகசியமாக எரித்து விட்டார்கள்'' என்ற லெனின், எல்லா மட்டங்களிலும் நித்யானந்தரின்தொடர்புகள் விரிந்திருப்பதையும் விளக்கி னார்.
""மெடிடேஷன்ங்கிறதுஒரு கலை. என்னைப்போன்ற பலர் அதை கற்றிருக்கிறார்கள்.ஆனா, நித்யானந்தா அதைஆன் மீகத்தோடு சேர்த்து வசியம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருடைய மெடிடேஷன், ஹீலிங் மூலம் உடல்நலன் குணமாவதாபலருக்கும் நம்பிக்கை வந்தது.இதன் மூலம் 60% பேருக்கு உடல் நலன்சரியாகும் என்பது உண்மை தான்.
நித்யானந்தர் அதையே தன்னோட பவரா காண்பிச்சிக் கிட்டார். அதனால பல வி.வி. ஐ.பிக்கள் அவரோட டிவோட்டி ஆயிட்டாங்க.
கர்நாடகமுதல்வரில் தொடங்கி, அமைச் சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள்,அரசு அதிகாரிகள் என்று பலரும் நித்யானந்தரின் பிறந்த தினகொண்டாட்டங்களுக்காகஆசிரமத் திற்கு வந்து போவதால், போலீசார் எப்போதுமேஆசிரம விஷயத்தில் அடக்கியே வாசிப்பார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர்எஸ்.எம் கிருஷ்ணாவின்மனைவிக்கு ஹீலிங் மூலம் சிகிச்சை தந்தார்நித்யானந்தா. அதனால கிருஷ்ணாஆட்சியில் நித்யானந்தா ஆசிரமம் ஓஹோன்னு வளர்ந்திடிச்சி. மத்திய மந்திரிகள்பலரும் நித்யானந்தருக்குப் பக்தர்கள்.உங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருசில மந்திரிகளையும் உயரதிகாரிகளையும்கூட எங்கள் ஆசிரமத்தில் பார்த்திருக்கிறோம். ஸ்டேட், சென்ட்ரல் என்றுஎல்லா இடத்திலும் தனது பக்தர்கள்இருப்பதால், எல்லா அக்கிரமத்தையும்துணிச்சலாகவே செய்வார் நித்யானந்தா.இங்கே நடக்கிற குற்றங்களையெல்லாம் மறைப்பதுதான் நித்யானந்தரின் செயலாளர்ஸ்ரீநித்ய சதானந்தா, பி.ஆர்.ஓ.நித்ய சேவானந்தா ஆகியோருக்கு முழுநேர வேலை.ஆசிரமத்தில் நடக்கும் குற்றங்களால் அதிக பாதிப்புக் குள்ளாகிறவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள்தான்'' என்ற பகீர் தகவலையும் சொன்னார்லெனின்.
""லைஃப் ப்லிஸ்டெக்னாலஜி என்ற இலவச வகுப்பு இந்த ஆசிரமத்தில் ரொம்பபாப்புலர். அதில்கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டி லிருந்தும் மற்றமாநிலங்களிலிருந் தும்ஏராளமான இளம்பெண்களும் இளைஞர்களும் வருவார்கள்.இலவச வகுப்புமுடித்துவிட்டுப் போய் விடலாம் என்றுதான் அவர்கள்நினைத்திருப்பார்கள்.ஆனால், அவர்களை மூளைச் சலவை செய்து ஆசிரமத்திலேயேதங்கவைத்து விடுவார்கள்நித்யானந்தாவும் அவரது சீடர்களும். இப்படி இந்தஆசிரமத்தில் தற்போது சுமார்70 பிரம்மச்சாரிகளும் 50 பிரம்மச்சாரினிகளும்இருக்கிறார்கள். இதில் பலர்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இலவசவகுப்புக்குப் போன தங்கள் பையனோ பெண்ணோ திரும்பி வருவார்கள் எனக்காத்திருக்கும் பெற்றோர், பிள்ளைகள் வரவில்லை என்றதும் பதறியடித்துக் கொண்டுஇங்கே வருவார்கள். ஆனால், அவர்களை ஆசிரமத்து ஆட்கள் மதிக்கவேமாட்டார்கள்.சரியாகப் பதில் சொல்ல மாட் டார்கள். பிள்ளைகளை ஆசிரமத்திலேயே தங்க வைக்கபெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதாடினால், அவர்களின்பையனையோ பெண்ணையோ ஆசிரமக்காரர்கள் அழைத்துக்கொண்டு வருவார்கள். அந்தப்பிள்ளைகள் வாயா லேயே,நாங்க இங்கதான் இருப்போம் என்று சொல்ல வைப்பார்கள். அந்தளவுக்குநித்யானந்தாவின் வசிய வேலைகள் நடந்திருக்கும். வீட்டுக்கு வரமறுக்கும்பிள்ளைகளை அவர்களது பெற்றோரோ, உறவினர்களோ வற்புறுத்தி அழைத்தால், அவர்களைஆசிரமக்காரர்கள் அடித்து விரட்டி விடுவார்கள். இந்தசம்பவங்கள்பற்றியெல்லாம் நிறைய புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழக ஸ்டேஷன்களிலும் கம்ப்ளைண்ட் கொடுக் கப்பட்டிருக்கிறது. ஆனால், தன்பவர்மூலம் எல்லாவற்றையும் சமாளித்து விட்டார் நித்யானந்தா.
தமிழ்நாட்டைச்சேர்ந்த 22 வயது பிரம்மச்சாரினி, தற்கொலைக்கு முயன்றசம்பவம் ஆசிரமத்தில்உள்ள எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.ரொம்பவும் வெகுளியான அந்தப்பெண்ணால், நித்யானந்தாவின் செக்ஸ்டார்ச்சர்களைத் தாங்க முடியலை. நடந்ததைநினைத்து நினைத்துஅழுதிருக்கிறார். இனிமேல் இங்கிருந்து தப்பிக்க முடியாதுஎன்றுதான் அந்தப்பெண் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.
இந்தவிவகாரத்தையும் அமுக்கி, அந்தப் பெண்ணை சத்தமில்லாமல் அவளுடையவீட்டுக்குஅனுப்பிவைத்துவிட்டார்கள். வழக்கம்போல, போலீஸ் கேஸ்வராமலும்பார்த்துக்கொண்டது ஆசிரம நிர்வாகம்.
கனடாநாட்டைச் சேர்ந்தவர் மாடியிலிருந்து விழுந்து மர்மமான முறையில்மரணமடைந்தஒரு வாரத்தில், 18 வயது பெண் சந்நியாசி பூச்சி மருந்துகுடித்துதற்கொலைக்கு முயன்றார். இவரையும் பி.ஜி.எஸ்.மருத்துவமனைக்குத்தான் கொண்டுசென்றார்கள். மூச்சு பேச்சில்லாமல் 10நாட்கள் கோமாவில் கிடந்தார் அந்தப்பெண். இது சம்பந்தமாக பிடாடி, கெங்கேரிஇரண்டு காவல் நிலையங்களிலும்வழக்குப் பதிவு செய்யப் பட்டபோதும் எந்த நடவடிக்கையும் எடுக் கலை.
போனடிசம் பர் 24ந் தேதிகூட ஒரு சந்தியாசி இளைஞர் 14 தூக்கமாத்திரைகளைச்சாப்பிட்டு தற் கொலைக்கு முயன்றார். என்ன காரணம் என்றால்,டிசம்பர் 23ந்தேதி முதல் ஜனவரி 1ந் தேதி வரை ஆசிரமத்தில் பிரம்மோத்சவத்தைநித்யா னந்தாநடத்துவார். அதற்கானதொடக்க ஏற்பாடுகளை சரியாகச் செய்யவில்லை என்று, அந்த இளைஞரை கடுமையாகத்தாக்கிவிட்டார் நித்யானந்தா. அதனால்தான் அந்த இளைஞர், மாத்திரைகளைச் சாப்பிட்டார்.
வழக்கம்போலபி.ஜி.எஸ். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு போலீஸ் கேஸ்இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது என்று நம்மிடம் விரிவாக விளக்கியலெனின், ஆசிரமத்தில் உள்ள இளம் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் என்றால்,இளைஞர்களுக்கு அடி-உதைதான். நித்யா னந்தாவே ஒரு மூங்கில் குச்சியைஎடுத்துவந்து,இளைஞர் களைக் கடுமையாகத் தாக்கு வார். அடி வாங்கினால் அந்தஇளைஞர் கொடுத்துவைத்தவர், சாமியே அடித்துவிட்டார் நமக்கு அந்த வாய்ப்புகிட்ட வில்லையேஎன்று மற்றவர்கள் ஏங்குவார்கள். அந்தளவுக்கு அவரை கடவுளாகஎல்லோரும் நினைத்தார்கள். ஒருசிலர்முகம் சுளித்தால், அந்த இளைஞர் குரு துரோகம் செய்துவிட்டதாகவும்,பாவத்திலேயே பெரிய பாவமே குரு துரோகம் தான் என்றும் ஆசிரமத்திலிருந்துபதில் வரும். ஆனால், குரு செய்கின்ற பெரிய பாவம் எதற்கும்எந்தத்தண்டனையும் கிடையாது. குருதுரோகத் திற்கான தண்டனையை இந்தஜென்மத்தில் மட்டுமல்ல, அடுத்தடுத்த ஜென் மங்களிலும் அனுபவிக்க வேண்டும்என்று தன்னுடையசீடர்களையும் பக்தைகளையும் மிரட்டி வைப்பார் நித்யானந்தா.
இவர்களிடம் பல பெண்களும் ஆண்களும் சிக்கிக்கொண்டு இருக்கிறார் கள். உண்மைகளை வெளியே சொன்னால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ப தால்தான் எல்லோரும் பேசாமல் இருந்தோம்.
இப்போது,சாமியாரின் லீலைகள் வீடியோவாக வெளியாகி, அவருடைய யோக்கியதையை எல்லோரும் பார்த்து விட்டார்கள். இன்னும் பல பெண் சீடர்களுடன் நித்யானந்தாபரமானந்தமாகஇருக்கும் ஆதாரங்கள் இருக்கின் றன. இனிமேலாவதுநடவடிக்கை எடுத்து, ஆசிரமத்தில் சிக்கியிருக்கும்நூற்றுக்கும் அதிகமானவர்களை மீட்க வேண்டும். நக்கீரனால் அது முடியும்''என்ற லெனின்என்கிற ஸ்ரீநித்ய தர்மானந்தாவின் கண்களில் நம்பிக்கை தெரிந்தது.
""இன்னும் பல விஷயங்கள் இருக்கு. அடுத்த சந்திப்பில் சொல்கிறேன்'' என்று விடைபெற்றார்.

திருவண்ணாமலையில்பிறந்த ராஜசேகரன், குடியாத்தத்தில் டிப்ளமோ படித்து, 16வயதில்வீட்டைவிட்டு ஓடினார். கன்னியாகுமரி யிலிருந்து இமயமலை வரை 9வருடங்கள்நடந்தே சென்று, பிச்சை எடுத்து சாப்பிட்ட தனக்கு, புத்தாயிரம்தினமான2000-ஜனவரி 1-ந் தேதி ஞானம் பிறந்ததாகச் சொல்லி நித்யானந்தாவானராஜசேகரன்,2003-ம் ஆண்டில் ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் முதல்ஆசிரமத்தைஅமைத்தார்.

ஆன்மீகப்பிரசங்கம் செய்வதில், உரையாற்றுவதில் வல்லவரான நித்யானந்தர்,தியானம்,யோகா, ஹீலிங் இந்த மூன்றிலும் சிறப்பாக பயிற்சி தரக்கூடியவர்.தற்போது 33நாடுகளில் இயங்கும் 1500 கிளை களையும் சேர்த்து இவரது சொத்துமதிப்பு 2000கோடி ரூபாயைத் (20ஆயிரம் கோடி என்றும் சொல்கிறார்கள்)தாண்டும்என்கிறார்கள். இதன் சார்பில் 8-க்கும் மேற்பட்ட டிரஸ்ட்டுகள்இருக்கின்றன.பல்லா யிரம் கோடி வருமானம் வந்தாலும்அதில் 50% மட்டுமேகணக்கில்காட்டப்படுகிறதாம். வரி ஏய்ப்பு விவரங்களையும் தோண்டினால் அதுதனிக்கதை.கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும்லாக்கர்கள்பிடாடி ஆசிரமத்தில் உள்ள ஆனந்த நிலையக் கட்டிடம்,நித்யானந்தரின் தனிதங்குமிடம், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட், அனந்தபுரிஅபார்ட்மென்ட், பலஊர்களிலும் நித்யானந்த தியானபீடத்துக்காகஎடுக்கப்பட்டிருக்கும் தனியார்அபார்ட்மென்ட்டுகளிலும் கறுப்பு பணம்பதுக்கிவைக்கப்பட்டிருப்ப தாகசொல்கிறார்கள்.

Wednesday, March 3, 2010

பரமஹம்ஸ(!) நித்யானந்தருடன் பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதா!

பரமஹம்ஸ(!) நித்யானந்தருடன் பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதா!


திருவண்ணா மலையைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த 32 வயதுக்காரர், தன் பெயரில்நித்யானந்த தியான பீடம் என்ற ஆன்மீக அமைப்பை நடத்திவருகிறார்.
சத்தியமாகஇவருக்கு 32 வயதுதான் என்ற அவரது சிஷ்யர்கள் அவரது பிறந்ததேதி 1-1-1978என்பதற்கான ஆதாரத்தை நம்மிடம் காட்டியதோடு, 33 நாடுகளில் 1500 கிளைகளுடன்பல லட்சம் பக்தர்கள் பரமஹம்ச நித்யானந்தரைப் பின்பற்றுவதாகவும்சொன்னார்கள்.நித்யானந்த தியான பீடத்தின் கிழக்கத்திய தலைமையகமாக இருப்பது பெங்களூருபிடதியில் உள்ள மையம்.
மேற்கத்திய நாடுகளின் தலைமையகம், அமெரிக்காவின்லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது. தமிழகத்தின் பல ஊர்களிலும் இந்த ஆன்மீகஅமைப் புக்கு கிளைகள் இருப்பதுடன் லட்சக்கணக்கான பக்தர்களும் இருக்கிறார்கள்.தியானம், யோகம் உள்ளிட்டவை நித்யா னந்தரின் தியானபீட கிளைகளில் கற்றுத்தரப்படுகிறது. தொடுதல் கலையான ஹீலிங் முறையில் நித்யானந்தர் எக்ஸ்பர்ட்என்கிறார்கள் அவரது வெளிநாட்டு பக்தர்கள். கிழக்கத்திய தலைமையகமாக உள்ள பெங்களூரு பிடதி ஆசிரமம் 30 ஏக்கர்பரப்பளவில் அமைந்துள்ளது.

இதில், 20 அடி உயர காம்பவுண்டு எழுப்பப்பட்ட 3ஏக்கர் பரப்பளவில் பரமஹம்ச நித்யானந்தரின் குவார்ட்டர்ஸ் உள்ளது. இந்தகுடியிருப்புக்குள் அவரது அனுமதியின்றி ஒருவரும் நுழைய முடியாது.மிகவும் கட்டுப்பாடு நிறைந்த இந்த குடியிருப்புக்குள் ஆன்மீக சாமியாராகஉலாவும் நித்யானந்தருடன் அவரது பக்தரும் தமிழ்த் திரையுலகில் பிரபலநடிகையாக விளங்கியவரும் தற்போது டி.வி சீரியல்களில் முக்கிய பங்குவகிப்பவருமான ரஞ்சிதா அன்னியோன்யமாக உள்ள வீடியோ காட்சிகள் 20 நிமிடம் 5செகன்ட் பதிவாகியுள்ளது.

அந்த பெட்ரூம் ஸீன்கள் இங்கும் இனி வரும் பக்கங்களிலும்... ... ...


Saturday, January 30, 2010

பொதுமக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கைக்கு தடையாக இருக்க வேண்டாம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள்


பொது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்களது இயல்பு வாழ்க்கைக்குத் தடையான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபட வேண்டாம் என்றும் கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமைகள் தோன்றி எமது மக்களை பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கியதை நாம் மனதில் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்வதே நாம் எமது சமுதாயத்திற்கு செய்யும் உன்னத கடமையாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக எழுந்துள்ள ஒரு தகவலை அடிப்படையாகக் கொண்டு, அவர் அப்பதவியை இராஜினாமா செய்யக் கூடாது எனக் கோரி இன்றைய தினம் பொது அமைப்புக்களினால் யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொது ஹர்த்தால் நடவடிக்கையையடுத்தே அமைச்சர் அவர்கள் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் இவ்வாறான ஹர்த்தால்கள் கடையடைப்புக்கள் போன்ற பல்வேறு இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த போதெல்லாம் தான் அதற்கு தொடர்ந்தும் எதிராகவே கருத்துக் கூறி வந்துள்ளதை உணர்த்தியதுடன் பொதுமக்களின் உணர்வுகளையும் கருத்து கூறும் சுதந்திரத்தையும் தான் பெரிதும் மதித்து வருவதாகவும் அதற்காக பொதுமக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கைக்குத் தடையான வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வது தனக்கு மிகுந்த வேதனையைத் தருவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது இராஜினாமா தொடர்பில் தான் பரிசீலனை செய்து வருவதாகவும் இவ்விடயம் தொடர்பில் தான் பகிரங்கமாக அறிவிப்பதாகவும் எனவே இவ்வாறான ஹர்த்தால் செயற்பாடுகளை இப்போதும் சரி எதிர்காலத்திலும் சரி தவிர்த்துக் கொள்வதே எமது மக்களுக்கும் எமது சமுதாயத்திற்கும் நாம் செய்யும் சிறந்த கடமையாகும் என்றும் உணர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Friday, January 29, 2010

அரசியல் அமைப்பில் திருத்தம்: நாட்டில் நல்லாட்சி:

அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து நாட்டில் நல்லாட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அதற்காக ஒருவார கால அவகாசம் வழங்கப்படுமென அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சி இதற்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் பாராளுமன்றத்தின் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று எதிர்கால நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்க மளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
வரலாற்றில் முன்னெப்போதுமில் லாதவாறு 60 வீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். இது நன்றியுணர்வுள்ள நாட்டு மக்கள் அவருக்கு வழங்கிய கெளரவ மாகும். இவ்வெற்றியையடுத்து நாட்டை சமாதானத்திலும் அபிவிருத்தியிலும் முன்னெடுப்பதே எதிர்கால நோக்கமாகும். நல்லாட்சியை ஏற்படுத்தி நாட்டைக் கட்டியெ ழுப்புவதில் எதிர்க்கட்சி எம்முடன் ஒத்துழைக்க முடியும். அரசியல மைப்பில் திருத்தம் கொண்டு வருவதில் அவர்கள் எமக்கு உதவ முடியும்.
எவ்வாறெனினும் பாராளுமன்றத் தேர்தலில் எமக்கு நாட்டு மக்கள் மூன்றி லிரண்டு பெரும்பான் மையைப் பெற்றுத்தருவர் என்பது உறுதி. நாட்டின் நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அங்கீகாரத்தை நாம் மக்களிடம் கோருவோம். மக்கள் அதற்கு பூரண ஆதரவு தருவது உறுதி.
சகல மக்களுக்கும் பொருத்த மானதான நிர்வாகத்தை ஏற்படுத்துவதே ஜனாதிபதியின் நோக்கம். எதிர்வரும் நவம்பர் மாதம் வரையிலான அவரது முதலாவது பதவிக் காலத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். அடுத்து வரும் ஆறு வருடங்களில் நாட்டில் நல்லாட்சியை அவர் ஏற்படுத்துவார்.
இதேவேளை, இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் யானையா - அன்னமா என்ற பிரச்சினையும் எதிர்க்கட்சியினருக்கு உள்ளது. சாதாரண மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டால் இன்னும் ஐந்து தேர்தல்களில் கூட ஐ. தே. க. வால் வெல்ல முடியாமற் போகும்.
இம்முறை தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஜனாதிபதிக்கு ஓரளவு ஆதரவு வழங்கியுள்ளனர். கடந்த காலங்களை நோக்குகையில் சிறுபான்மையினர் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ பெருமளவு ஆதரவு வழங்கியதில்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவு வழங்கினர். இம்முறை எம்முடனிருந்த தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒப்பந்தமே திசை திருப்பியது.
வாக்களிப்பை நோக்குகையில் புலிகளின் தமிbழ எல்லைக்குள் வாழும். மக்களே எதிர்க்கட்சிக்கு வாக்களித்துள்ளமை தெரிகிறது.
அரசாங்கம் தற்போதுதான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கிணங்கவே டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களை அரசாங்கம் நியமித்து செயற்படுகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

பாராளுமன்றத்தைக் கலைக்க ஏற்பாடு: ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும்

பாராளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அறிவித்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் விடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற 60 வீத வாக்குகளை தக்கவைத்துக்கொண்டு எதிர்க் கட்சிக்கு வழங்கப்பட்ட 40 வீத வாக்குகளையும் வெற்றிகொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விஷேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த், அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ரிஷாத் பதியுதீன், சம்பிக ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஆகியோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால மேலும் கூறுகையில்:-
தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு வெகு விரைவில் விடுக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தகவல்களை திரட்டி பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கைகள் நேற்று (இன்று) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன் என்றார்.
மக்கள் எதிர்பார்க்கும் வளமான எதிர்காலம் நிச்சயம் உருவாக்கப்படும். மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டமை நிறைவேற்றப்படும். உலகிலேயே வளமான நாடாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் 60 வீத வாக்குகளையும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 40 வீத வாக்குகளையும் வழங்கியுள்ளனர்.
எஞ்சிய 40 வீதத்தை பெற முடியாமல் போன காரணங்கள் ஆராயப்பட்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு ஜனநாயக முறையிலான அரசியலின் மூலம் எஞ்சிய 40 வீத வாக்குகளையும் எமது வெற்றிக்காக பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நாட்டை முன்னேற்ற எதிர்க்கட்சியின் 40 வீத வாக்காளர்களும் எம்முடன் கைக்கோர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
சரத் பொன்சேக்கா தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி வருகிறார். அவருக்கு நாங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை, இதற்கான தேவையில்லை.
எமது கூட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். ஆனால் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இது நீதியான தேர்தல் இல்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்தார். இதன் மூலம் அரசியல் தெரியாதவர் என்பதை தெளிவாக காண்பிக்கின்றது என்றார்.
மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தவறான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Thursday, January 28, 2010

19 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி அமோக வெற்றி

லக நாயகனாகவும், ஜனாதிபதித் தேர்தலில் உலகிற்கே வழிகாட்டியாகவும் தனது புதிய வரலாற்றினை நிரூபித்துள்ள எமது இலங்கை மாதாவின் பெருமகனுக்கு http://www.shockan.blogspot.com/ வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

Wednesday, January 27, 2010

18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராஜபக்சே வெற்றி

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றார்.
சுமார் 18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் சரத் பொன்சேகாவை தோற்கடித்தார்.இதன்மூலம் 3ல் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் ராஜபக்சே.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடந்தது. மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தது. கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியிருந்தன.
வாக்குப் பதிவு முடிந்த பின்னர் இரவில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.இதில் ஆரம்பத்திலிருந்தே ராஜபக்சே முன்னிலையில் இருந்து வந்தார். தமிழர் பகுதிகளில் பொன்சேகாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தாலும் அவர் ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பின் தங்கியிருந்தார்.இறுதியில் 18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராஜபக்சே வெற்றி பெற்றதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியான ரூபவாகினி அறிவித்துள்ளது.
இதன் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வாக்கு வித்தியாசத்திலும் ராஜபக்சே வென்றுள்ளார்.பொன்சேகா வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் தோல்வியுற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.வட கிழக்கில் பொன்சேகாவுக்கு கூடுதலான வாக்குகளும், தெற்கில் ராஜபக்சேவுக்கு கூடுதலாகவும் வாக்குகள் கிடைத்துள்ளன.
கடந்த 2005ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே 50.29 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கே 48.43 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால் இம்முறை சுமார் 60சதவீத வாக்குகளை ராஜபக்சே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 6வது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே நாளை பதவி ஏற்பு/mahinda rajapaksa won election


இலங்கையின் ஆறாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்பது உறுதியாகிவிட்டது.

Tuesday, January 26, 2010

2ம் இணைப்பு ‐ யாழ்ப்பாணத்தில் தொடர்; குண்டுத் தாக்குதல் நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகள்

யாழ்மாவட்டத்தில் பரவலாக பல பிரதேசங்களில் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. மக்களை வாக்களிப்பிலிருந்து தடுப்பதற்காகவே இந்தக் குண்டுவெடிப்புகள்நிகழ்த்தப்படுவதாக யாழ் கள நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேட விமானத்தில் டில்லி பயணம்‐

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேட விமானத்தில் டில்லி பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தத் தேர்தல் தனக்குச் சாதகமாக இருக்கப் போவதில்லை என உணர்ந்த மகிந்த ராஜபக்ச அது தொடர்பாக டில்லித்தலைமைகளுடன் உரையாடவே உடனடியாக டில்லி புறப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
சரத் பொன்சேகா ஜனாதிபதியாவதைத் தடுக்கு முகமாக இந்திய இராணுவத்தைத் தலையீடு செய்யக் கோருவதற்கான விஜயமாக இது இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

Sunday, January 24, 2010

ராஜபக்சே சரத் பொன்சேகா வெல்வது யார்?

பரபரப்பான உச்சத்தில் இருக்கிறது 26-ந்தேதி நடக்கும் இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல்.
இந்த தேர்தலை நடத்துவதற்கு இன்னும் இரண்டு வருட கால அவகாசம் இருக்கும் நிலையில், போரின் வெற்றியை தனதாக்கிக் கொள்ளும் தீராத ஆசையில், முன்கூட்டியே நடத்துகிறார் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் (ஆளும் கட்சி கூட்டணி) சார்பில் தற்போதைய ஜனாதிபதி ராஜபக்சேவும், இலங்கையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே உருவாக்கிய "தேசிய சுதந்திர கூட்டமை'ப்பின் (எதிர்க்கட்சிகளின் கூட்டணி) சார்பில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும், பிரதான வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள்.
ஜனநாயக கோட்பாடுகளை சிறிதும் மதிக்காமல் ஈழத் தமிழினத்தை கொன்றழித்து, உலகமே அதிர்ச்சியடையும் வகையில் மனித பேரவலத்தை தமிழீழத்தில் நடத்திக் காட்டியவர்களான இந்த நண்பர்கள் இரண்டுபேரும் (ராஜபக்சே, சரத் பொன்சேகா) தற்போது எதிரிகளாக நின்று தேர்தலை சந்திக்கின்றனர்.
தேர்தல் களத்தில் ராஜபக்சேவும், சரத்பொன்சேகாவும் சம பலத்துடனேயே மோதுகிற சூழல் காணப்படுகிற நிலையில், இவர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற சக்தியாக தமிழர்களின் 15 சதவீத வாக்குகள் இருப்பதாகவே தேர்தல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
இதனால் தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து களத்தில் குதித்திருக்கிறார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தைச் சேர்ந்தவருமான சிவாஜிலிங்கம். ஆனால், இவருக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்க மறுத்து, சரத் பொன்சேகாவிற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது "தமிழ்த் தேசிய கூட்டமைப்பு' என்பது இந்த தேர்தலில் குறிப்பிடத் தக்கது.
""2008-ல் எடுக்கப் பட்ட வாக்காளர் பட்டிய லின் அடிப்படையில் நடக் கிறது இந்தத் தேர்தல். அதன்படி ஒட்டுமொத்த இலங்கையின் வாக்காளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர். இதில் தமிழ் வாக்காளர்கள் (வடகிழக்கு, மலையகம், மேல் மாகாணம்) எண்ணிக்கை 15 சதவீதம்.
அதாவது, 21 லட்சத்து 13 ஆயிரத்து 275 பேர்'' என்கிறது இலங்கை தேர்தல் ஆணையம்.மேலும், ""ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களான ராஜபக்சேவிற் கும் சரத்திற்கும்தான் போட்டி. இலங்கைத் தேர்தல் நடைமுறைகளின்படி, பதிவாகிற வாக்குகளில் யார் அதிகம் வாங்கு கிறார்களோ அவர்தான் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்க முடியாது. மாறாக, பதிவாகிற வாக்குகளில் 50 சதவீதத் திற்கும் அதிகமாக யார் பெறுகிறார்களோ அவர்தான் வெற்றி பெற்றவர்.
50 சதவீதத் திற்கும் அதிகமான வாக்குகளை ஒருவர் வாங்கிவிட்டால் வெற்றியை உடனடி அறிவிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.அதேசமயம், பிரதான வேட்பாளர் கள் இருவருமே 50 சதவீதத்திற்கும் குறைவாக முதல் இரண்டு இடங்களை பிடிக்கிற போதுதான் சிக்கல்.
, இரண்டாவது விருப்ப வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைத்துள்ளதை வைத்துதான் வெற்றி தோல்வி முடிவு செய்யப்படும்.
அதாவது, இந்தத் தேர்தலில் ஒருவர் இரண்டு வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். முதல் வாக்கினை ராஜபக்சே வுக்கும் இரண்டாவது வாக்கினை சரத் திற்கும் ஒருவர் போடலாம். அல்லது முதல் வாக்கு சரத்துக்கும் இரண்டாவது வாக்கு ராஜ பக்சேவுக் கும் பதிவாகலாம். அல்லது முதல் வாக்கு இவர்களில் ஒருவருக்கும் 2-வது வாக்கு இவர்கள் அல்லாத வேறு ஒருவருக்கும் ஒருவரின் ஓட்டு பதிவாகலாம்.
அந்த வகையில், முதல் ரவுண்டில் ராஜபக்சேவுக்கு 49 சதவீதமும் சரத்திற்கு 48 சதவீதமும் வாக்குகள் பதிவாகி யிருக்கும் பட்சத்தில்... இருவருக்கும் கிடைத்துள்ள இரண் டாவது விருப்ப வாக்குகள்தான் யார் வெற்றி பெற்றவர் என்பதை முடிவு செய்யும். இதுதான் இங்குள்ள தேர்தல் நடைமுறை.2005-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சே 50.23 சதவீதமும் ரணில் விக்ரமசிங்கே 49.3 சதவீதமும் முதல் ரவுண்டில் வாக்குகள் வாங்கியிருந்தனர். முதல் ரவுண்டிலேயே 50 சதவீதத்தை ராஜபக்சே தாண்டியிருந்ததால் அவரது வெற்றியை உடனே அறிவிக்க முடிந்தது.
ஆனால், தற்போதைய தேர்தலில் அந்த சூழல் இருப்பதாக தெரியவில்லை. காரணம், யாரும் 50 சதவீதத்தை கடக்க முடியாத நிலையே இருக்கிறது. அதனால், ""இரண்டாவது விருப்ப வாக்குகள்'' என்கிற நிலையை நோக்கியே தற்போதைய இறுதி கள நிலவரம் போய்க் கொண்டிருக்கிறது!'' என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.யுத்தத்தின் வெற்றியால் கிடைத்த இமேஜ் மூலம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விடலாமென்றும் கண்களுக்கு எட்டிய தூரத்தில்தான் தமது வெற்றி இருக்கிறது என்றும் கணக்கிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த முன்வந்துள்ள ராஜபக்சேவிற்கு, சரத் பொன்சேகாவின் திடீர் அரசியல் பிரவேசமும் எதிர்க்கட்சிகளின் "பொது வேட்பாளர்' என்கிற கான்ஸெப்ட்டும் மிகப் பெரிய தடையாக பூதாகரமாகிவிட்டது. இந்த சூழலில் இரு தரப்புமே... சிங்களர் மற்றும் தமிழர்களின் வாக்குகளில் அதிகபட்ச வாக்குகளை பெற்று விட, இறுதிக்கட்ட மாயாஜாலங்களை காட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இரண்டு தரப்பினரும் "முதல் ரவுண்டிலேயே வெற்றி பெறுவோம்' என்று மார்தட்டுகிறது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை களத்தில் இறக்கியுள்ள ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலை வர்கள், ""2005-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 1 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் ராஜபக்சேவிடம் தோற்றுப் போனார் ரணில். தேர்தலை புறக்கணிக்காமல் தமிழர்கள் ஓட்டுப் போட்டிருந்தால் ராஜபக்சே ஜெயித்திருக்கவே முடியாது. அந்த தேர்தலில் எங்களிடம் கூட்டணி பலமே கிடையாது. ராஜபக்சேவிடம் கூட்டணி பலம் வலிமையா இருந்தது. கூட்டணி பலமே இல் லாமல், 1 சதவீத வித்தியாசத் தில்தான் தோற்றார் ரணில். ஆனால், இந்த முறை அப்படி அல்ல, ரணில் உருவாக்கியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி அசுர பலம் கொண்டதாக இருக்கிறது.குறிப்பாக, கடந்த தேர்தலில் ராஜபக்சேவின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்த ஜே.வி.பி. (சிங்கள பேரினவாத கட்சி) தற்போது எங்க கூட்டணியில் இருக்கிறது. மேலும் ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியை பிளவுபடுத்தி தனிக்கட்சி கண்டுள்ள மங்கள சமரவீராவும், 2004 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 7 சதவீத வாக்கு களைப் பெற்ற தமிழ்த்தேசிய கூட் டமைப்பும், அதே தேர்தலில் போட்டி யிட்டு 9 எம்.பி.க்களை பிடித்த ஜாதிக ஹெல உறுமய கட்சியும், 5 எம்.பி.க்களை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், மேல் மாகாணத்தில் தமிழர்களின் ஆதரவு பெற்ற மனோகணேசன் எம்.பி.யின் ஜனநாயக மக்கள் முன்னணியும் சரத்தை ஆதரித்து எங்க கூட்டணியில் இருக்கின்றன.
மெகா கூட்டணியாக நாங்கள் இருக்கிறோம். தவிர, அதிகார துஷ்ய பிரயோகம், ஊழல் முறைகேடுகள், குடும்ப அரசியல், ராணுவத்தின் தியாகத்தை கேவலப்படுத்தியது, பொருளாதார சீரழிவு, விலைவாசி உயர்வு என்பவை ராஜபக்சேவிற்கு எதிராக இருக்கிறது. மேலும், சரத் பொன்சேகாவை காட்டிலும் ராஜபக்சே மீதுதான் தமிழர்களின் வெறுப்புகள் அதிகரித்து கிடக்கிறது. அதேபோல, எந்த கட்சியையும் சாராதவர் என்கிற இமேஜ் சரத்திற்கு இருப்பதும் கூடுதல் பலம். அதனால், எந்த அரசியல் கண் ணோட்டத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் முதல் ரவுண்டிலேயே சரத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விடும்'' என்கின்றனர் மிகுந்த நம்பிக்கையுடன்.ஆனால், இந்த விபரங்களையெல்லாம் மறுத்துப் பேசுகின்ற ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சியினரோ,
""ஒரு தேர்தலில் கூட்டணி பலம் மட்டுமே வெற்றியை தீர் மானிப்பதில்லை. சிங்களவர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் யார் பெறுகிறார் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. அந்த வகையில், 30 வருட காலம் சிங்கள வர்களை அச்சுறுத்திக் கொண்டி ருந்த ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து சிங் களவர்க்கு நிம்மதியை ஏற்படுத்தித் தந்திருப்பது ராஜபக்சேதான். அது மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளிடம் இலங்கையின் இறையாண்மையை யும் தனித்தன்மையையும் அடகு வைக்காமல் ஆட்சி செய்த ராஜ பக்சேவிற்குத்தான் சிங்கள மக்க ளிடம் ஆதரவு அதிகம் உள்ளது. சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகள் ராஜபக்சேவிற்கு கிடைக்கும் என்பதால், இரண்டாவது விருப்ப வாக்கிற்கு அவசியமே இருக்காது. நாங்கள் எடுத்துள்ள கருத்துக் கணிப்பும் இதனைத்தான் கூறுகிறது. மேலும், 15 சதவீதம் உள்ள தமிழர் களின் வாக்குகள் ஒரே இடத்தில் குவிந்துவிடும் என்பதெல்லாம் ஏற் பதற்கல்ல. வட பிரதேச தமிழர்கள் (யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்) வேண்டுமானால் ராஜபக்சேவிற்கு எதிராக இருக்கலாம். மற்றபடி தென்னிலங்கை, மத்திய இலங்கை, கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்களில் கணிசமானவர்கள் ராஜபக்சேவை ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மேலும், தமிழர்களில் ராஜபக்சேவை எதிர்ப்பவர்கள் சரத்தை ஆதரிப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. போரின் விளைவுகளுக்கு சரத்தும் காரணம் என்பதை தமிழர்கள் உணராதவர்கள் அல்ல.
அதனால், இருவருக்கும் இல்லாமல் தேர்தலை பெரும்பான்மை தமிழர்கள் புறக்கணித்தாலும் அது எங்களுக்கு பலம்தான். ஆக, ராஜபக்சேதான் மீண்டும் ஜனாதிபதி. இது உறுதி செய்யப்பட்ட விஷயம்!'' என்று விவரிக்கின்றனர்.இரு தரப்பும் இப்படி தங்களின் வெற்றி குறித்து விவரித்தாலும், தமிழர்களின் 15 சதவீத வாக்குகள் எந்த பக்கம் சிதறும் என்றே அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.
அவர்களிடம் நாம் பேசியபோது, ""போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் "எந்த ஒரு சிங்களவன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் கிடைத்துவிடப் போவதில்லை. தமிழின விரோத நடவடிக்கைகளையே கடைபிடிக்கப் போகிறார்கள். அப்படியான நிலையில் இவர்களுக்கேன் ஓட்டுப்போட வேண்டும்? இரண்டு சிங்களவனும் அடித்துக்கொள் ளட்டும், தேர்தலை புறக்கணிப்போம். அதுதான் அவர்களுக்கு நாம் தரும் பதிலடி' என்று நினைக்கின்றனர். மற்ற பகுதிகளில் உள்ள தமிழர்களோ, "ராஜபக்சே மீண்டும் ஜனாதிபதியானால் ஒட்டுமொத்த இலங்கையும் சிங்கள ராணுவமயமாக்கிவிடுவார்.
சரத்தை ஆதரித்தால், அட்லீஸ்ட் ராணுவமயமாக்கலாவது நிறுத்தப்படும். ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கலாம்' என்றே கருதுகிறார்கள்.
அதனால், தமிழர்களின் வாக்குகள் சிதறுகிற நிலையில், ராஜபக்சேவை விட சரத்திற்கே தமிழர்களின் வாக்குகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது'' என்கின்றனர்.ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் கொழும்பு தமிழ் எம்.பி.யும் சரத்தை ஆதரிப்பவரு மான மனோகணேசன் ""இந்தத் தேர்தலில் தமிழர்கள் யாரை ஆதரிப்பது என்பதைவிட, யார் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதில்தான் தெளிவாக இருக்க வேண்டும். அந்தவகையில், இன்றைய ஆட்சித் தலைமையை (ராஜபக்சே) தூக்கியெறிய வேண்டியதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. தமிழ் மக்களை கொன்றவரும் (சரத்) கொல்ல ஏவியவரும் (ராஜபக்சே) எதிர் எதிராக நிற்கின்றனர். கொன்றவனைவிட ஏவியவன்தான் கொடூரமானவன். அதனால் ஏவியவன் இருக்க அம்பை நோவதால் பயனில்லை. ஏவிய ராஜபக்சேவின் தலையைக் கொய்ய...
இந்தத் தேர்தலை தமிழர்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை கள நிலவரப்படி ஒரு தமிழரோ, சிறுபான்மையினரோ ஜனாதிபதியாகும் வாய்ப்பே கிடையாது. ஒரு சிங்களவர்தான் ஆட்சிக்கு வரமுடியும். தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தேர்தலைப் புறக்கணித்தாலும் இதுதான் யதார்த்தமான நிலை. அப்படிப்பட்ட சூழலில், தேர்தலைப் புறக்கணித்து ராஜபக்சேவின் வெற்றிக்கு தமிழர்கள் மீண்டும் வித்திட்டுவிடக்கூடாது. தமிழினத்தின் முதல் பொது எதிரி ராஜபக்சே தான்.
அவரை ஆட்சி அதிகாரத்திலிருந்து துரத்துவதுதான் தமிழர்களின் கடமையாக இருக்க வேண்டும். நிச்சயம் தமிழர்கள் அதனை செய்துகாட்டுவார்கள்'' என்கின்றார் மிக உறுதியாக!ஆக, இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தலில் "நண்பர்கள் இருவரும் கடுமையாக சம பலத்துடன் மோதிக்கொள்கிற சூழலே இறுதிக்கட்டம் வரையிலும் எதிரொலித் துக்கொண்டிருக்கிற நிலையில், ஓரிரு சதவீதத்தில் ராஜபக்சேவை விட சரத்பொன்சேகா முன்னணியில் இருப்ப தாகவே இறுதிக் களநிலவரம் கூறுகிறது. இதனைத் தடுக்க, கடைசிகட்ட பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார் ராஜபக்சே.

வந்துட்டாங்கய்யா அதிகாரிங்க வந்துட்டாங்கய்யா! -வடிவேலுவின்


சென்னையில் கடந்த 19-ந்தேதி நடந்த ரெய்டுகள் குறித்தும் நடிகர்கள் சூர்யா, வடிவேலு, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் வீடுகளில் நடந்த களேபரத்தால் மற்ற நடிகர்கள் பணத்தோடும் டாக்குமெண்ட்டுகளோடும் அன்று முழுதும் காரிலேயே சுற்றிக் கொண்டிருந்தது குறித்தும் கடந்த நக்கீரன் இதழ் "ராங்-கால்' பகுதியில் ட்ரெய்லர் பாணியில் மிகச் சுருக்கமாய் சொல்லியிருந்தோம். இப்போது திரை பிரபலங்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாய் புகுந்தது குறித்து கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.டெல்லியில் இருந்து சென்னையில் தரையிறங்கிய வருமானவரித்துறை அதிகாரிகளோடு சென்னை அதிகாரிகளும் 19-ந் தேதி அதிகாலை, ஒரு தனியார் டிராவல்ஸில் 40 கார்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டனர்.

திபுதிபுவென காரில் ஏறிய அதிகாரிகள் முதலில் அந்தந்த கார் டிரைவர்களின் செல்ஃபோன்களை வாங்கி ஸ்விட்ச் ஆப் செய்தனர்.பின்னர் 4 டீமாகப் பிரிந்து நடிகர்கள் சூர்யா, வடிவேலு, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரைக் குறிவைத்து... அவர்களின் வீடுகளை நோக்கி விரைந்தனர்.

அதேநேரம்... முன்னதாகவே மதுரையில் லேண்ட் ஆகியிருந்த மற்றொரு டீம்... மதுரை அருகே இருக்கும் ஐராவதநல்லூர் கிராமத்தில் இருக்கும் நடிகர் வடிவேலுவின் வீட்டுமுன் போய் நின்றது. அப்போது ஹாயாக எம்.ஜி.ஆர். பாட்டை பாடிக் கொண் டிருந்த வடிவேலு...

அதிகாரிகளைப் பார்த்து "ஷாக்'காகி... ""என்ன சார் மதுரை வரை வந்து என்னைத் துரத்திப் பிடிக்கிறீங்க'' என சமாளித்தபடி சிரிக்க முயல... அதிகாரிகளோ இறுக்கமான முகத்தோடு வீட்டுக்குள் நுழைந்து கதவுகளை உட்பக்கமாக தாழிட்டனர்."சட்'டென பாத்ரூமுக்குள் ஓடிய வடிவேலு... "மதுரைக் காரரை' அழைத்து... விஷயத்தைச் சொல்ல... அவரது செல்ஃபோனையும் கேட்ச் பண்ணினார்கள் அதிகாரிகள். இருந்தும் வடிவேலு வின் சமயோஜித புத்தியால் அங்கு சுருக்கமாகவே ரெய்டை முடித்துக் கொண்ட அதிகாரிகள்...

""சென்னைக்குப் புறப் படுங்க'' என அவரைத் தமிழகத் தலைநகரில் தரை இறக்கம் செய்தனர்.இதற்கிடையே சென்னை தி.நகர் கிருஷ்ணா தெருவில் இருக்கும் நடிகர் சூர்யாவின் வீட்டுக்குள் அதிகாரிகள் நுழைய முயல... செக்யூரிட்டிகள் அவர்களை உள்ளே விட மறுத்து வாக்குவாதத்தில் இறங்கினர்.அப்போது தனது "சிங்கம்' படத்திற்காக டப்பிங் பேசக் கிளம்பிய சூர்யாவை, வாசலிலேயே அதிகாரிகள் மடக்க... ""என்ன சார் ரெய்டா... வாங்க'' என அவர் களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். திபு திபுவென வீட்டிற்குள் புகுந்த அதிகாரிகள்... முதல் வேலையாக வீட்டுத் தொலைபேசி இணைப்புகளை "கட்' பண்ணிவிட்டு செல் ஃபோன்களையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.

சூர்யாவின் மனைவி ஜோதிகா கொஞ்சம் டென்ஷனாக இருக்க... வீட்டில் இருந்த நடிகர் சிவகுமாரும் அவர் மனைவியும் அமைதியாக சோபாவில் உட்கார்ந்தபடி... ரெய்டை வேடிக்கை பார்த்தனர்.

தனது "ஆயிரத்தில் ஒருவன்' படம் எப்படி ஓடுகிறது என்று பார்ப்பதற்காக மதுரைப் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்த நடிகர் கார்த்தி... அவசரமாக சென்னைக்கு அழைக்கப்பட்டார் விசாரணைக்கு என்று.இதை வழக்கமான ஃபார்மால்டி ரெய்டு என நினைத்த சூர்யாவும் வடிவேலுவும் நேரம் செல்லச் செல்ல... அதிகாரிகள் காட்டிய தீவிரத்தைப் பார்த்துத் திகைத்தனர்.

வீட்டில் அன்றாட செலவுக்கு வைத்திருந்த ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கே கணக்கைக் கேட்டு குடைந்து அதிகாரிகள் பீதியூட்ட... ஆரம்பத்தில் கேஸுவலாக இருந்த இந்த இருவரும் பதட்டமடைந்தனர்.டிரைவர்களையும், வீட்டு வேலைக்காரர்களையும் கூட விட்டு வைக்காமல் தீவிரமாய் விசாரித்தனர். வடிவேலுவின் சாலிகிராமம் ஆபீசுக்கு சான்ஸ் கேட்டு வந்த திருச்சி இளைஞர் ஒருவரையும் பிடித்து உட்கார வைத்துவிட்டார்கள் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள்.

""ஏண்ணே அவனை புடுச்சிருக்கீங்க... பாவம்ணே அந்த பையன் என்று'' அதிகாரிகளிடம் பேசிப் பார்த்தார் வடிவேலு. நள்ளிரவு 1 மணி வரை அமர வைத்துவிட்டார்கள்.இவர்களைப் போலவே இயக்குநர்களான ரவிக்குமாரும், முருகதாஸும் அதிகாரிகளின் நட வடிக்கைகளைப் பார்த்து விழிபிதுங்கினர். ரவிக்குமாருக்கு ஏற்கனவே ரெய்டு அனுபவம் உண்டு. அப்போதெல்லாம் இவ்வளவு கெடுபிடி இல்லை.

ரவிக்குமார் வீட்டிற்கு ரெய்டு நடத்த வந்த வட இந்திய அதிகாரி ஒருவர் இயக்குநரின் மகளின் பெட்டில் படுத்துக் கொண்டு யாரிடமோ ஃபோனில் மிதப்பாக பேசிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்து கடுப்பான ரவிக்குமார், ""உங்க லிமிட்டுக்கு மேல போறீங்க... இப்படி பெட்ரூமில் அட்டகாசம் செய்வதற்கு எந்த ரைட்சும் கிடையாது'' என்று கோபப்பட்டார். அதன் பிறகு மற்ற அதிகாரிகள் அவர்களை சமாதானப் படுத்தி ரெய்டை தொடர்ந்தனர். முருகதாஸுக்கோ ரெய்டு அனுபவம் புதிது. எனவே அவர்தான் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளானார்.

வழக்கமாக சில மணி நேரங்கள் மட்டுமே நடக்கும் ரெய்டு இந்தமுறை நள்ளிரவைத் தாண்டிப் போகப் போக... திரைப்பிரபலங்களான நால்வரும் கைபிசைந்தனர். சூர்யாவின் வீட்டருகே அவர் நடத்தும் "அகரம்' அறக்கட்டளை அலுவலகமும், அடையாறு பிளாட்டும் "ஸ்டுடியோ கிரீன்' என்ற படத் தயாரிப்பு நிறுவன அலுவலகமும் கூட ரெய்டுக்குத் தப்பவில்லை.அதிகாரிகள் தீவிரமாக ரெய்டு நடத்தும் தகவல் கலைஞர் காதுக்குப் போக...

அவர் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருக்கும் பழனி மாணிக்கத்தை தொலைபேசியில் அழைத்து ""என்னய்யா நடக்குது. சினிமாக்காரங்க என்ன செஞ்சாங்க?

ஏன் இந்தக் குடை குடையறாங்க. சூர்யா, வடிவேலெல்லாம் சரியாகத்தானே இருக்காங்க. நார்மலா நடக்குற ரெய்டு மாதிரி தெரியலையே... யாரோட தூண்டுதல்ய்யா இது'' என்ற ரீதியில் கறார் குரலில் வறுத்தெடுக்க...""பாக்கறேண்ணே... விசாரிக்கிறேண்ணே... நாம சொல்லி இது நடக்கலேண்ணே...'' என அவர் திணறினார். இதன்பின்னர் ரெய்டின் போக்கு இயல்பு நிலைக்கு மாறியதோடு...

வழக்கமான சில காமெடிக் காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்தன.சூர்யா வீட்டில் கறாராய் ரெய்டு நடத்திய அதிகாரி ஒருவர் ""சார்... என் வொய்ப்... உங்க தீவிர ரசிகை சார். எனக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுங்க'' என பாக்கெட் நோட்டை நீட்டினார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கிய ரெய்டு வைபவத் துக்கு மறுநாள் காலை அதிகாரிகள் முற்றுப் புள்ளி வைத்தனர். இந்த ரெய்டில் பணத் தையோ நகைகளையோ கைப்பற்றாத அதிகாரிகள் -கணக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை மட்டும் அள்ளிச் சென்றனர். ஆரம்பத்தில் வடிவேலுவிடம் கடுமை காட்டிய அதிகாரிகள் முடியும் நேரத்தில் ஒருமணி நேரம் வாய்விட்டு சிரிக்கும் அளவு காமெடி கச்சேரி பார்த்திருக்கிறார்கள். இனி சொந்த பந்தம் யாரும் எட்டு வருஷம் வரமாட்டாங்க என தன் ஸ்பெஷல் மாடுலேஷனில் பேச... இதுக்கு ஏன் பயப்படணும் என அதிகாரிகள் திருப்பி கேட்டிருக்கிறார்கள்.

""ஏண்ணே நீங்க சும்மாவா விடுவீங்க. வர்ற சொந்தக்காரங் களை புடுச்சு உன் வீட்ல இருக்கிற கோழி எத்தனை வருஷமா இருக்கு? அது போட்ட முட்டை எவ்வளவு? அதுக்கு கணக்கு எங் கேன்னு குடைஞ்சுருவீங்களே'' என்று ஜாலியாக கலாய்த்திருக்கிறார். நள்ளிரவுக்கு பின் ரெய்டு முடிந்து கிளம்பிய அதிகாரிகளிடம், ""அடிக்கடி வந்துட்டு போங்கண்ணே'' என்று வழியனுப்பியிருக்கிறார்.திரையுலகப் புள்ளிகள் அனைவர் வயிற்றிலும் இந்த ரெய்டு... புளியக் கரைக்க... எல்லோருமே கணக்கில் வராதவைகளை பாதுகாப்பாய் வைக்க... அந்த ரெண்டு நாளும் படாதபாடு பட்டனர். இந்த ரெய்டு... குறித்த டாக்கும்... விதவிதமாய் எழுந்து கொண்டிருக்கிறது.""இந்த ரெய்டின் பின்னணியில் இருப்பவரே உதயநிதிதான்'' என அடித்துச் சொல்கிறது ஒரு தரப்பு.""எப்படி என்றால்...

"ஆதவன்' படத்தில் சூர்யாவும் வடிவேலுவும் இயக்குநர் ரவிக்குமாரும் தங்கள் சம்பளத்தில் ரொம்பவும் கறார் காட்டினர். இதனால் இவர்களோடு தயாரிப்பு தரப்பிற்கு லேசான உரசல் இருந்தது. எங்களிடமே இப்படியா? எங்க பவரைப் பாக்கறீங்களா? என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தத்தான் இந்த ரெய்டை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்'' என அந்தத் தரப்பே... ஏகப்பட்ட புள்ளிகளை வைத்து... கோலத்தையும் போட்டுக் கொண்டிருக்கிறது.உதயநிதி மீதான இந்தப் புகார்கள் குறித்தும் ரெய்டு குறித்தும் சம்பந்தப்பட்ட திரைப் பிரபலங்கள் என்ன நினைக்கிறார்கள். நடிகர் சூர்யாவோ, ""ச்சே! ச்சே! உதயநிதி ஜென்டில்மேன்.

ரெய்டு பத்தி தெரிஞ்சதும் எங்களுக்கு முதல்ல லைன்ல வந்து அக்கறையா விசாரிச்சி ஆறுதல் சொன்னதோடு... ஏதாவது சிக்கல்ன்னா சொல்லுங்கன்னு உதவிக்கரமும் நீட்ட ரெடியானார். அதே சமயம் எங்க கணக்கு வழக்குகள் கிளியரா இருந்ததால் நாங்க யாரும் பயப்படவோ கவலைப்படவோ இல்லை'' என்கிறார் நம்மிடம்.நடிகர் வடிவேலுவோ ""இது என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு. உதயநிதி எப்பவுமே எங்களுக்கு உதவும் நிதியாத்தான் இருப்பார். உபத்திரநிதியா அவர் யாருக்கும் இருக்கமாட்டார். அவர் தயாரிப்பில் ரவிக்குமார் சார் டைரக்ட் பண்ற அடுத்த படத்தில் நானும் நடிக்கிறேன். ரெய்டுக்கு வந்த அதிகாரிகளுக்கு என்ன பிரச்சினையோ... அவங்க எரிச்சலை எல்லாம் எங்க மேல காட்டிட்டாங்க. பொங்கல் கொண்டாட மதுரைக்கு போன என்னை வரச் சொன்னாங்க.

கணக்கு வழக்கு எல்லாம் தெளிவா கொடுத்திருக்கேன். ஒரு பிரச்சினையும் இல்லை'' என்று நம்மிடம் வெளிப்படையாக பேசினார். இயக்குநர்களான ரவிக்குமாரும் முருகதாஸும் கூட ""இது டிபார்ட்மெண்ட் ரெய்டு. இதில் சம்பந்தமே இல்லாம உதயநிதி சாரை எதுக்கு சம்பந்தப்படுத்தறாங்க. எங்கக்கிட்ட அள்ளிக்கிட்டு போற அளவுக்கு எதுவும் இல்லை. அதனால் பயமில்லை.

மன உளைச் சல் உண்டாக்கிட்டுப் போயிட்டாங்க'' என்றார்கள் வேதனையோடு.மழை விட்டும் தூவானம் விடாததைப்போல் ரெய்டு முடிந்த பிறகும்... அது தொடர்பான சர்ச்சை அலைகள் ஓயாமல் எழுந்தபடி இருக்கிறது.

Friday, January 22, 2010

ஆசிரியருடன் ஏன்?

டியூசன் மாணவியோடு அமலன் என்ற ஆசிரியரும்...
டியூசன் மாணவனோடு நசுரீன் என்ற ஆசிரியையும் காதல் மராத்தான் நடத்தியதைப் பற்றி "குரு- சிஷ்யை உறவு' என்ற தலைப்பில் ரிப்போர்ட் வெளியிட்டிருந்தோம்.
இந்த கள்ள ஜோடிகளில்... ஆசிரியர் அமலனால் கடத்தப்பட்ட ப்ளஸ்-டூ மாணவி ஸ்ரீலேகா வை... சந்தித்து.. ""எப்படி ஆசிரியரின் வலையில் விழுந்தாய்'' என்றோம். கண்ணீர் ததும்ப சங்கடமாய்ப் பேச ஆரம்பித்த அவள்..
“""நான் டென்த் படிக்கும் போது அமலன் சார்தான் எனக்கு கிளாஸ் டீச்சர். நான் கிளாஸ்லயே முதல் மார்க் வாங்குற மாணவி. அதனால் என் மேல் சார் ரொம்பப் பாசம்காட்ட ஆரம்பிச்சார்.
ஸ்கூல் பீஸ் கட்ட ஒருதடவை நான் சிரமப்பட்டப்ப... அவரே கட்டினார். அதனால் அவர் மேல் எனக்கு மரியாதை வந்துச்சி. இதைத்தெரிஞ்சி சந்தோசப் பட்ட எங்க அப்பாவும் அம்மாவும்... சார்ட்ட எங்க பொண்ணை உங்கக்கிட்ட ஒப்படைக்கிறோம். நீங்கதான் அவளை பெரிய ஆளாக்கணும்னு சொன்னாங்க. அதிலிருந்து சார் எங்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்க ஆரம்பிச்சார்.
சாருக்கு ஸ்கூலிலும் செல்வாக்கு அதிகம் என்பதால் என்னை எல்லோரும் அமலன்சார் ஸ்டூடண்ட்டுன்னு மரியாதையா பார்க்க ஆரம்பிச்சாங்க.டென்த்ல ஸ்டேட் லெவல்ல மார்க் வாங்க வைக்கிறேன்னு அவர் வீட்டுக்கு கூப்பிட்டு இலவசமா டியூசனும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சார்.
அப்ப அவ ருக்கும் அவர் மனைவிக்கும் பேச்சு வார்த்தை சரியா இருக்காது. அதனால் அடிக்கடி தன் மனைவி இல்லாத சமயங்களில் நான் அன்புக்கு ஏங்கற ஜீவன்னு ஒரு மாதிரியா பார்ப்பார்.
என் கையைப் பிடிச்சிக்கிட்டு கலங்குவார். அப்பல்லாம் எனக்கு அவர்மேல் பரிதாபமா இருக்கும். டென்த் முடிஞ்சி லெவன்த் வந் தப்பவும் அவரே டியூசனுக்குக் கூப்பிட்டார். இந்த சமயத்தில் அவர் மனைவியோட கோச்சிக்கிட்டு தனியா ஒரு சின்ன ரூமில் தங்கினார். அங்கும் என்னை டியூசனுக்குக் கூப்பிட்டார். அங்க டியூசனை மறந்து எனக்கு அன்புகாட்டற ஜீவன் வேணும்னு என்னை கட்டிப்பிடிச்சிக்குவார்.
சார் இது தப்புன்னு சொன்னாலும் விடாம... உன்னை உலகத் திலேயே பெரிய ஆளா நான் ஆக்கிக் காட்டறேன். என் கூடவே இருந்தா போதும்னு சொல்லியே... கொஞ்சம் கொஞ்சமா அங்க இங்க தொடுவார். கடைசியா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். நீதான் என் மனைவி.
நான் அந்தமான்லயாவது... அஸ்ஸாம், பீகார்லயாவது வேலைதேடிக்கிறேன். நாம் அங்க போய்டலாம். நாம நிறைய சம்பாதிச்சி உங்க அப்பா- அம்மாவுக்கு நிறைய பணத்தை அனுப்பலாம்னு சொல்லிச் சொல்லியே தப்பிக்கவிடாம பண்ணிட் டார்.அமலன் சாரை முதல்ல ஆசானா நினைச்சேன்.
அப்புறம் அப்பா ஸ்தானத்தில் வச்சிப்பார்த்தேன். அப்புறம் என்னை வழி நடத்தவந்த கடவுளா நினைச்சேன். கடைசியா தன்னைக் கணவன்னு சொல்லி என்னை முழுசா மோசம்பண்ணிட்டார். இவ்வளவும் பண்ணிய அந்த ஆள்... எல்லாத்தையும் முடிச்சிக்கிட்டு... என்னை நடுத் தெருவில் விட்டுட்டுப் போய்ட்டார். இனி எப்படி எந்த முகத்தை வச்சிக்கிட்டு எங்க அப்பா- அம்மாவை நான் பார்ப்பேன்''’’ அதற்குமேல் பேச முடியாமல் முகத்தைப் பொத்திக்கொண்டு உடைந்து அழ ஆரம்பித்தாள் அந்த பரிதாபத்துக்குரிய மாணவி.மாணவி ஸ்ரீலேகாவின் கதை; பலருக்கும் விழிப்புணர் வைப் போதிக்கும் விதமாக இருக்கிறது.
காக்கிகளுடன் கண்ணா மூச்சி ஆடும்... ஆசிரியர் அமலன் பிடிபடும்போது மேலும் பல பகீர் விவகாரங்கள் வெடித்து வெளியே வரலாம் என்கிறார் கள் காக்கிகள்.

Wednesday, January 20, 2010

சினிமாவை விட்டே போயிடறேன்!-செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் படம் சில ஆங்கிலப் படங்களின் தழுவலாக இருப்பதை யாராவது நிரூபித்தால், நான் சினிமாவை விட்டே போய் விடுகிறேன் என்றார் இயக்குநர் செல்வராகவன்.
பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரத்தில் ஒருவன் படம் பொங்கலுக்கு வெளியானது. ஆனால் ரசிகர்களுக்கு இந்தப் படம் புரியாததால், வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் கூறுகிறது.
அதே நேரம் மீடியாவில், வேறு விதமான விமர்சனங்களை செல்வராகவன் எதிர்கொள்ள வேண்டிய சூழல்.
எனவே உடனடியாக பிரஸ் மீட்டுக்கு அழைக்கப்பட்டனர் செய்தியாளர்கள்.இந்த கூட்டத்தில், 'ஆயிரத்தில் ஒருவன் படத்தின் காட்சிகளில் மெக்கனாஸ் கோல்ட், டைம்லைன், கிளாடியேட்டர் போன்ற படங்களின் தாக்கம் உள்ளதே?' என்று கேள்வி எழுப்பினர்.இதைக் கேட்டதும் மிகவும் கடுப்பான செல்வராகவன், 'இந்தப் படம் முழுக்க முழுக்க கற்பனையானது. அது போன்ற ராஜா உண்மையில் கிடையாது. எந்த ஆங்கிலப் படத்தையும் பார்த்து நான் காப்பியடிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
அப்படி எந்தப் படக் காட்சியாவது இதில் இடம் பெற்றிருந்தால், அந்த படத்தின் சிடியைக் கொடுங்கள்... உண்மையாக இருக்கும்பட்சத்தில் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்..." என்றார். அடுத்ததாக, 'படத்தில் லாஜிக்கே இல்லையே?' என்று கேட்டதற்கு, "ஆங்கிலப் படங்களில் லாஜிக் பார்க்கிறீர்களா... அதே மாதிரி இந்தப் படத்தையும் பாருங்கள் (!??). அவதார் படத்தில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தாலும் அதை ரசிக்கிறார்கள்... ஆனால் ஒரு தமிழன் எடுத்த வித்தியாசமான படத்தில் ஆயிரம் ஓட்டைகளைக் காண்கிறீர்கள்.இப்படி இருந்தால் வித்தியாசமான படங்கள் எப்படி வரும்? ஹாலிவுட்டை விட அட்டகாசமான படைப்புகளை இங்கேயே தர முடியும்" என்றார்.

எந்திரன் பாட்டு லீக்?!

ரஜினிகாந்த்- ஷங்கர் கூட்டணியில் உருவாகும் மெகா படைப்பான எந்திரன் - தி ரோபோ படத்தின் பாடல் என்ற பெயரில் ஒரு ஆடியோ ஃபைல் இணைய தளங்களில் உலா வரத் துவங்கியுள்ளது.
படம் வெளியாகும் முன்பே அதை இணைய தளங்களில் லீக் செய்வது வாடிக்கையாகிவிட்டது.முன்பு சிவாஜி படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள், பாடல்கள் அனைத்தும் படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் லீக்காகி பரபரப்பேற்படுத்தின. தரம் மோசமாக இருந்தாலும், முன் கூட்டிய படத்தின் பாடல்களை தெரிந்து கொள்வதில் உள்ள த்ரில் காரணமாக பலரும் இவற்றை டவுன்லோடு செய்து வந்தனர்.
இந்த பப்ளிசிட்டியைப் பார்த்த கவுதம் மேனன் போன்ற சில இயக்குநர்கள் இதனை ஒரு விளம்பர உத்தியாகவே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். வாரணம் ஆயிரம், விண்ணத் தாண்டி வருவாயா படங்களில் இதை பெரும் பப்ளிசிட்டியாக்க முயன்றார் அவர்.
( சரத்குமாரின் ஜக்குபாய் சமாச்சாரம் இதில் சோராதுங்ணா!)இந் நிலையில் இப்போது மீண்டும் ரஜினியின் எந்திரன் பட பரபரப்பு ஆரம்பித்துள்ளது. முதலில் பெருவில் எடுக்கப்பட்ட எந்திரன் படப்பிடிப்பு காட்சிகளின் வீடியோவை உலாவிட்டவர்கள், இப்போது, அதன் ஆடியோ என்று ஒரு பாடலை லீக் செய்துள்ளனர்.
'என் உயிரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்...' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் 3.16 நிமிடங்கள் ஒலிக்கிறது.இந்தப் பாடலின் ஒலி (பாடகர் குரல்) தெளிவாக இல்லை. ரஹ்மான் ட்ராக் பாடியதை அப்படியே எடுத்து இணையத்தில் விட்டுவிட்டார்களோ எனும் அளவுக்குதான் உள்ளது.

Tuesday, January 19, 2010

A Brighter Future


தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை
எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார்.
தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.
எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.
சிங்கள பேரினவாத அரசு எமத மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதற்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன்.
எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
ச.தமிழ்மாறன்
செய்தி தொடர்பாளர்
தமிழீழ விடுதலைப்புலிகள்தமிழீழம் .

Friday, January 15, 2010

ராஜபக்சேவின் கள்ளக் காதலி!


இலங்கை அதிபர் தேர்தல் விறுவிறுப்பாகியிருக்கும் சூழலில்,மகிந்த ராஜபக்சேவின் ரகசிய காதலி பற்றி ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. ராஜபக்சேவின் இந்த ரகசிய உறவுகள், அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்சேவிற்கு தெரியவர...
அந்த ரகசிய காதலிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.சுதந்திரா கட்சியில் பரபரப்பாகியிருக்கும் இந்த விவகாரம் குறித்து அக்கட்சி வட்டாரங்களிடம் பேசியபோது,
’’ ""போரின் வெற்றிக்கு பிறகு ராஜ பக்சேவை போற்றிப் புகழ்ந்துரைக்கும் வகையில் "வணக்கம் மாமன்னரே'’என்கிற பாடல் எழுதப்பட்டது.இந்த பாடலை பிரபல சிங்கள பாடகி சஹோலிகமகே பாடினார். இந்த பாடல் தொடர்பாக ’அலரி மாளிகை’ (அதிபர் மாளிகை)க்கு சஹோலிகமகே வந்து போக வேண்டியிருந்தது. அப்போது ராஜபக்சேவையும் சந்திக்க நேர்ந்தது பாடகிக்கு.பாடகியின் அழகிலும் குரலிலும் மயங்கினார் ராஜபக்சே.
பாடகியின் நட்பை’விரும்பியுள்ளார். ராஜ பக்சேவின் விருப்பத்தை அறிந்ததும் பாடகியோடு ‘புதிய சிநேகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். பாடல் உருவாகும் பணி முடிந்துவிட்ட பிறகும் பாடகியுடனான அந்த ‘சிநேகிதம்’ துண்டிக்கப்படவில்லை.
மாறாக சிநேகத்தை இறுக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே.இந்த விவகாரம் ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சேவிற்கு தெரியவர,அதிர்ச்சி அடைந்தவர்... இது குறித்து ரகசியமாக விசாரித்திருக்கிறார். அப்போது பாடகியுடனான ரகசிய உறவுகள் உண்மைதான் என்று சொல்லப் பட்டிருக்கிறது.
அத்துடன், தனது பெர்சனல் மொபைல்ஃபோனிலிருந்து தினமும் பாடகியுடன் அதிக நேரம் ராஜபக்சே பேசியிருக்கும் விவ ரங்களையும் ஷிராந் தியே கண்டுபிடித்திருக் கிறார்.இது பற்றி ராஜபக்சேவிடம் பேச விரும்பாத ஷிராந்தி... ராஜபக்சேவின் சகோதரரும் இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சேவிடம் முறையிட்டுள்ளார். உடனே இந்த பிரச்சினையை முளையிலேயே ரகசியமாக கிள்ளியெறிய வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அதனடிப்படையில் பாதுகாப்புத் துறையில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய 2 அதிகாரிகளிடம் விஷயத்தை கூறியிருக்கிறார் கோத்தபாய.உடனே அந்த அதிகாரிகள் பாடகியை தொடர்புகொண்டு,’"ஜனாதிபதியுடனான தொடர்பை துண்டித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில்...
நீங்கள் அதிகம் சங்கடப்பட நேரிடும்'’என்று எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கையை அறிந்து ஆத்திரமடைந்த ராஜபக்சே, பாடகியை அச்சுறுத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கோபப்பட்டுள்ளார். அதேசமயம் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் எச்சரிக்கையால் பயந்துபோன பாடகியோ தற்போது தலைமறை வாகிவிட்டார்'' என்று விவரிக்கின்றனர்.இதற்கிடையே, தேர்தல் அரசியலுக்காக பாடகி சஹோலியை வைத்து ’"இளைஞர்களின் எதிர்காலம்' என்கிற விளம் பரப்படத்தை தயாரிக்கத் திட்ட மிட்டிருந்தார் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே.
பாடகியுடனான தனது கணவரின் ரகசிய உறவுகளை அறிந்திருந்த ஷிராந்தி, விளம்பரப்படம் தொடர்பாக பாடகியுடன் இருக்கும் தொடர்புகளை துண்டித்துக்கொள்ளுமாறு மகனுக்கு கட்டளை பிறப்பித்திருப்பதாகவும் கொழும்பில் தகவல்கள் பரவிக் கிடக்கின்றன.
ராஜபக்சேவின் இந்த ரகசிய சினேகிதம், இலங் கை அரசியல் மேல்மட்டத்தில் சத்தமில்லாமல் அலையடித்துக் கொண் டிருக்கிறது.

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

வேட்டைக்காரன் படம் சரியில்லை என்பது தெரிந்த விசயம். சன் டிவியின் விளம்பரத்தால் அது கொஞ்சம் மறைந்து போனது. விளம்பரத்தால் ஓரளவு கலெக்‌ஷன் ஆகிக்கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் சன் பிக்சர்ஸ், படத்தை ஓட வைப்பதற்கு ஏவி.எம். பாணியை கையாண்டதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாகிவிட்டது.
வேட்டைக்காரன் படத்தை தயாரித்தது ஏவி.எம்.தான். பொதுவாக ஏவி.எம். தயாரித்த படங்கள் ஓடுவதற்கு அந்நிறுவனம் பல பரிசு போட்டிகளை அறிவிப்பது வழக்கம். இந்த போட்டிகளில் முக்கிய நட்சத்திரமாக பெரும்பாலும் பங்கேற்று பரிசு அளித்தது நடிகை மனோரமா.
இப்படி பரிசு போட்டி அறிவிப்புகள் மக்கள் மத்தியில் ‘’ஆஹா அப்ப படம் ஓடலையா’’ என்ற கமெண்ட்டை கிளம்பும். வேட்டைக்காரனிலும் அதுதான் நடந்திருக்கிறது. வேட்டைக்காரன் படத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்போருக்கு 25 ஆயிரம் பரிசு என்ற விளம்பரம் வந்ததுமே வேட்டைக்காரன் படம் பார்க்காதவர்களும், அப்படம் பற்றி கேள்விப்படாதவர்களும், ‘’ஏன் வேட்டைக்காரன் படம் நல்லாயில்லையா? படம் ஓடலையா? இப்படி போட்டியெல்லாம் வைக்கிறாங்களே?’’என்ற கேள்வியை எழுப்பிவிட்டார்கள்.
அப்புறமென்ன, தியேட்டர்களில்.......!(சொல்ல வேண்டுமா என்ன..தெரிந்த விசயம்தானே)

Thursday, January 14, 2010

"தம்பி உயிரோடு நலமாக இருக்கிறான்: என்னை வந்து பார்ப்பதாக சொல்லிச்சென்றான்"

"தம்பி உயிரோட நலமாக இருக்கிறான்.
அவன் என்னை சந்திப்பதாக சொல்லியே சென்றான்" -
என்று தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா தெரிவித்துள்ளார் என விடுதலை சிறுத்தைகள் அணி தலைவர் தொல் திருமாவளவன் விகடனுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் சஞ்சிகைக்கு திருமாவளவன் வழங்கியுள்ள விரிவான செவ்வி வருமாறு:-
தமிழகம் திரும்பியதும் கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரியான விநோதினிக்கு ஒரு நண்பர் மூலம் தகவல் சொல்லிவிட்டு, விசா எடுப்பதற்கான வேலைகளில் தீவிரமானேன்.
அதற்குள்ளே என் கனவுத் தாழி உடைந்துபோய் விட்டது.கடந்த ஆறாம் தேதி இரவு அய்யா வேலுப்பிள்ளை இறந்ததாகச் செய்தி வந்தது. ஒரு மாவீரனின் தந்தையை மீட்கவும் காப்பாற்றவும் முடியாத கையறு நிலையில் துடித்தேன். அவசரகதியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கல நாதன், ஆகியோரிடம் பேசி, 'வேலுப்பிள்ளையின் இறுதி அஞ்சலி நிகழ்வில் நான் கலந்துகொள்ள வேண்டும்.
இலங்கை அரசிடம் பேசி ஏ-9 பாதையால் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்' எனச் சொன்னேன். ஒருவழியாக அனுமதி கிடைக்க, எட்டாம் தேதி இலங்கைக்கு பயணமானேன். வேலுப்பிள்ளைக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு இட்டிப்பான மன பாரத்தோடு திரும்பி இருக்கிறேன்!'' என்ற திருமாவளவனிடம் நம் கேள்விகளை அடுக்கினோம்.''இலங்கை போய் இறங்கியவுடன் முதலில் எங்கு போனீர்கள்?''''எம்.பி-யான செல்வம் அடைக்கலநாதன்தான் என்னை அழைக்க வந்திருந்தார். கொழும்பில் இருந்து வவுனியா 280 கிலோமீட்டர் தூரம்.
ஒன்பதாம் தேதி விடியற்காலை மூன்று மணிக்கு செல்வம் அடைக்கலநாதன், அரியனேந்திரன், தோமஸ் வில்லியம் ஆகிய எம்.பி-க்களோடு நானும் தமிழக வழக்கறிஞர்களான சந்திரசேகர், பிரபு ஆகியோரும் புறப்பட்டோம். வவுனியாவில் உள்ள 'ஸ்வர்கா' என்ற ஹோட்டலில் வேலுப்பிள்ளை அவர்களின் உடலை ராணுவப் பாதுகாப்போடு வைத்திருந்தார்கள். அங்கே பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவும் இருந்தார்.
முதலில் அவரைத்தான் பார்த்தோம். அங்கு வரும் வரை பார்வதி அம்மாவுக்கு தன் கணவர் இறந்தது தெரியவில்லை. முதுமையும் வேதனையும் அவரை ரொம்பவே சுகவீனமாக்கி இருந்தது.அந்தத் தாயைப் பார்த்ததுமே என் கண்கள் பொங்கி நிறைந்துவிட்டன.
அவர்களை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். ''ஐயா...'' என வேலுப்பிள்ளை குறித்து நான் வாய் திறந்ததுமே, ''அவர் சாமி கும்பிடப் போயிருக்கார், அல்லவா... சீக்கிரமே வந்திடுவார்...'' எனச் சொன்னார். அவரிடம் அந்த நிமிடம் வரை அப்படித்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.''அம்மா... நீங்கள் என்னோடு இந்தியாவுக்கு வந்து விடுகிறீர்களா?'' எனக் கேட்டேன். ''ஐயா வந்ததும் அவரை கேட்டுவிட்டுச் சொல்கிறேன்...'' என்றார்.
கணவர் மீது அவர் வைத்திருந்த மரியாதையைப் பார்த்து என் கண்கள் குளமாகிவிட்டது!''''வேலுப்பிள்ளை சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக ஒரு கருத்து இருக்கிறதே..?''''தமிழ் மக்கள் அடைக்கப்பட்டிருக்கும் வழக்கமான அகதிகள் முகாம்களில் மேதகு பிரபாகரனின் பெற்றோர் தங்க வைக்கப்படவில்லை. ராணுவ முகாமான பனாகொடா முகாமில்தான் அய்யா வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.சிலநாட்களாகவே அய்யா வேலுப்பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லையாம். உயர் ரத்த அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரை வெளியே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், உள்ளுக்குள்ளேயே சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு வரை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாளும் அருகருகேதான் வைக்கப்பட்டு இருந்தார்களாம். வேலுப்பிள்ளைக்கு சிகிச்சை அளிப்பதாகச் சொல்லி அவரை மட்டும் பிரித்து வேறெங்கேயோ தங்க வைத்திருக்கிறது ராணுவம்.கடந்த ஆறாம் தேதி இரவே வேலுப்பிள்ளை இறந்து விட்டாராம். அந்தத் தகவலை ராணுவத் தரப்பு அடுத்த நாள் காலையில்தான் வெளியிட்டிருக்கிறது. பிரபாகரனின் சகோதரியான விநோதினியின் வேண்டுகோளை ஏற்று, வேலுப்பிள்ளையின் உடலை சிவாஜிலிங்கம் எம்.பி-யிடம் ஒப்படைக்க ராணுவம் முடிவெடுத்தது.
வேலுப்பிள்ளை இறந்த தகவல் பார்வதி அம்மாளிடம் சொல்லப்பட, அவர் அதை நம்பாமல் அழத் தொடங்கிவிட்டார். ''எங்க ஐயா செத்திருக்க மாட்டார்...'' எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். உடல் நிலை சரியில்லாததால், அவர் இறந்து விட்டதாக ராணுவத்தினர் பார்வதி அம்மாவிடம் சொல்லி இருக்கின்றனர். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ராணுவத்தினர் ஏதோ செய்து விட்டதாகவே அவர் அஞ்சுவதாகத் தெரிகிறது. அய்யா வேலுப்பிள்ளை சித்திரவதை செய்யப்பட்டிருப்பாரோ என்கிற சந்தேகம் எனக்கும் உண்டு. ஆனால், அதை எப்படி உறுதிப்படுத்த முடியும்? முறையாக பிரேதப் பரிசோதனை செய்து, பாடம் பண்ணி, முகச் சவரம் செய்து, தலை வாரி, புது உடை உடுத்தி, வெண் பட்டுத் துணியால் போர்த்தி அவரை சவப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். அவருடைய நெற்றியையும் காலடிகளையும் தொட்டு வணங்கினேன்!
''''இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தன? அப்போது அங்கிருந்த தமிழ் மக்களின் மனநிலை எப்படி இருந்தது?
''''வல்வெட்டித்துறையில் உள்ள தீருவில் என்னும் பகுதியில் புலேந்திரன், குமரப்பா ஆகிய 12 பேருக்கான நினைவிட மைதானம் உள்ளது. அய்யா வேலுப்பிள்ளையின் உடல் அங்குதான் கொண்டு வரப்பட்டது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த சதுக்கத்தில், வேலுப்பிள்ளையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மக்கள் ஏதோவொரு பயத்தோடு தூரத்தில் நின்றே வேலுப்பிள்ளையின் உடலை பார்த்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி-க்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதி ராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ஸ்ரீகாந்தா, வினோ உள்ளிட்டோர் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.சைவ மரபுப்படி அய்யா வேலுப்பிள்ளைக்கு அனைத்து சடங்குகளும் நடக்கத் தொடங்கின.
அவருடைய உடம்பு பாடம் செய்யப்பட்டிருந்ததால், அதன் மேல் தண்ணீர் பட்டுவிடாமல் அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. வாழைப்பழம், தயிர், வெல்லம், பால் என பலவித அபிஷேகங்களும் அவரது உடலுக்கு அருகே செய்யப்பட்டது. ஒருபுறம் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டது.வேலுப்பிள்ளையின் மைத்துனர்களில் ஒருவரான (வேலுப்பிள்ளையின் தாத்தா வழி உறவான) ராமசாமி என்பவர்தான் இறுதிச் சடங்குகளை முன்னின்று செய்தார்.
ராணுவக் கண்காணிப்பு இருப்பது தெரிந்தும் வேலுப்பிள்ளையின் உடலை நோக்கி கண்ணீரோடு வந்த ஒரு தாய், ''மாவீரனை பெத்துக் கொடுத்த ராசாவே... என்னிக்கு இருந்தாலும் நாம நாடு அடையாம விடமாட்டோம்யா... நீங்கள் நிம்மதியாப் போய் வாருங்கோ!'' எனக் கதறினார். கொந்தளிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்களாக தமிழ் இளைஞர்கள் பலரும் இறுக்கத்தோடு அங்கே நின்று கொண்டிருந்தார்கள். சில இளைஞர்கள் துக்கத்தை வெளிக்காட்டும் விதமாக வாண வெடிகளைக் கொளுத்தினார்கள். ஒன்பதாம் தேதி காலையில் நிறைய இளைஞர்கள் தைரியமாக வேலுப்பிள்ளையின் உடலைப் பார்வையிட வந்தார்கள்.
அவர்கள் உணர்ச்சி வேகத்தோடு, ''கண்டிப்பாக தமிழீழம் மலரும். தலைவரின் கனவு நனவாகும்!'' என சத்தமிட்டார்கள். காலை 10.40 மணிக்கு அந்த சதுக்கத்திலிருந்து, மூத்த மகள் ஜெகதீஸ்வரியின் வீட்டுக்கு வேலுப்பிள்ளையின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.
பார்வதி அம்மாள் அடக்க முடியாத வேதனையில் கணவரின் சடலத்துக்கு அருகே அமர்ந்து குமுறிக் குமுறி அழுது கொண்டேயிருந்தார். 'என்னைய விட்டுட்டு எங்கேயும் போக மாட்டீங்களே... ஏன்யா எங்கிட்ட சொல்லாம போனீங்க..?' என அங்கே இருந்த நான்கு மணி நேரமும் அரற்றியபடியே இருந்தார். அவரைத் தேற்றுவதற்குள் தெம்பற்றுப் போய் நானும் குலுங்கத் தொடங்கிவிட்டேன்!
''''பிரபாகரனின் தாயாரோடு நீங்கள் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தீர்களாமே... தன் மகன் பிரபாகரன் குறித்து அவர் ஏதாவது சொன்னாரா?''''தலைவர் பிரபாகரன் குறித்து நான் கேட்டபோது, 'அவர் பத்திரமா இருக்கார்...' என்றே பார்வதி அம்மா திரும்பத் திரும்ப சொன்னார். போர்க் காலங்களில் பார்வதி அம்மா எங்கிருந்தார், யார் யாரெல்லாம் அவரை சந்தித்தனர் என்பது உள்ளிட்ட தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். வயதான நிலையிலும் மிகுந்த கவனத்தோடு பார்த்துப் பார்த்துப் பேசினார். 'தலைவர் பிரபாகரன் உங்களைப் பார்த்தாரா' என நான் கேட்டபோது,
'தம்பி உயிரோடு நலமாக இருக்கிறார். என்னை கனடாவில் வந்து சந்திப்பதாகச் சொல்லிச் சென்றார்' என்றார். அவருடைய உறவினர்கள் சிலருடைய பெயரைச் சொல்லி நான் சில விஷயங்கள் கேட்டபோதும், அவர்களின் பெயர்களை மிகத் திருத்தமாக, நல்ல சுவாதீனமாகவே சொன்னார். தற்போது சிவாஜிலிங்கத்தின் கவனிப்பில் இருக்கும் பார்வதி அம்மாவை கனடாவுக்கோ இந்தியாவுக்கோ அழைத்துக்கொள்ள அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்!'' என்ற திருமாவளவன், அங்கே எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Wednesday, January 13, 2010

என் சாமி கோயிலுக்கு போயிருக்கிறார் -பிரபாகரனின் அம்மா!

உலகத்தில் தமிழர்கள் இருக்கும் நாடுகளிலெல்லாம் பிரபாகரனின் தந்தைக்கு கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர் தமிழர்கள். பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு வேலுப்பிள்ளையின் உடல் கொண்டு செல்லப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மக்களின் அஞ்சலிக்குப் பிறகு வேலுப்பிள்ளையின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை விடுதலை செய்திருந்தது சிங்கள அரசு.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், பழனி ஆகியோர் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து சென்றிருந்தனர்.இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த திருமாவளவனை தொடர்பு கொண்டு பேசினோம்.
நம்மிடம் பேசிய திருமா, ‘""கடந்த 6-ந்தேதி மரண மடைந்திருக் கிறார் அய்யா வேலுப்பிள்ளை. அதனை உடனடியாக சிங்கள அரசு தெரிவிக்க வில்லை. மறுநாள் 7-ந்தேதி மதியத்திற்கு மேல்தான் அறிவித்தனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கத்திடமும் செல்வம் அடைக்கல நாதனிடமும் வேலுப்பிள்ளையின் உடலை சிங்கள அரசு ஒப்படைத்தது.
பிரபாகரனின் தந்தையின் உடலை தக்க மரியாதையுடன் அவர்கள் வல்வெட்டித்துறைக்கு கொண்டு சென்றனர். மற்றொரு வாகனத்தில் பார்வதி அம்மாள் அழைத்து வரப்பட்டார்.
பார்வதி அம்மாள் குளிப்பதற்காக வவுனியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் உடல் சில மணி நேரங்கள் இருக்க வேண்டியிருந்தது. 8-ந்தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட நாங்கள், வவுனியாவில் அவர்களுடன் இணைந்து கொண்டோம்.அங்கேயே அய்யா வேலுப்பிள்ளைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அறையில் இருந்த பார்வதி அம்மாவிற்கு ஆறுதல் சொன்னேன். வயதின் முதிர்ச்சிக் காரணமாக மிகவும் தளர்ந்து போயிருந்தார். என்னைப்பற்றி சொல்லிய போது கேள்விப்பட்டிருப்பதாகச் சொன்னார் அம்மா. அய்யா மரணமடைந்திருப்பதை வல்வெட்டித்துறைக்கு சென்ற பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருந்ததால் அவரிடம் யாரும் இறப்பு குறித்துப் பேசவில்லை. ஆனால் பார்வதி அம்மாள்,
"என் சாமி (அய்யா) கோயிலுக்கு போயிருக்கிறார். பின்னால வருவார்' என்றே சொல்லிக்கொண்டிருந் தார்.வவுனியாவிலிருந்து வல்வெட்டித் துறைக்கு புறப்பட்டபோது அவர்களோடு இணைந்து கொண்டேன். 9-ந்தேதி மாலை வல்வெட்டித்துறையைச் சென்றடைந்தோம்.
புலேந்திரன்குமரப்பா நினைவு சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப் பட்டது. வல்வெட்டித்துறைக்கு வந்ததும்தான் பார்வதி அம்மாளிடம் அய்யா மரணமடைந்திருப்பதையே சொன்னார்கள். அதை கேட்டு கதறித் துடித்தார் பார்வதி அம்மாள். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. அதாவது, ராணுவ முகாமில் கடைசி நாட்களில் வேலுப் பிள்ளையையும் பார்வதி அம்மாளையும் தனித்தனியே பிரித்து வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை. அதனால்தான் வேலுப்பிள்ளை மரணமடைந்த சம்பவம் அவருக்கு தெரிந்திருக்கவே இல்லை.
வல்வெட்டித்துறைக்கு வந்ததும் சிவாஜிலிங்கம் சொன்னபிறகுதான் தெரிந்தது.வல்வெட்டித்துறையில் எங்குதிரும்பினாலும் 100 அடிக்கு 2 ராணுவத்தினர் துப்பாக்கிகளை ஏந்தி கொண்டு நின்றிருந்தனர். ராணுவம் நிற்கும் தோரனையே மக்களை மிரட்டுகிற தொனியில்தான் இருந்தது. இதனால் அந்த பகுதி மக்களிடம் சொல்லமுடியாத பயம் சூழ்ந்திருந்தது. அதையும் மீறி ஏராளமானோர் அஞ்சலி செய்ய திரண்டு வந்திருந்தனர். இதில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தலைமையில் தமிழ் எம்.பி.கள் பலரும் வந்திருந்து கண்ணீர் அஞ்சலி செய்தனர். தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு சிதிலமடைந்திருந்தது. பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று இருந்ததால் அந்த வீடு சிதைந்திருந்தது. மக்கள் திரண்டு அந்த வீட்டை துப்புரவு செய்தனர்.
அதேபோல பிரபாகரனின் அக்காள் ஜெகதீஸ்வரியின் வீடும் சிதைந்திருந்தது. அந்த வீட்டையும் சுத்தப்படுத்தினர் மக்கள்.10-ந்தேதி ஜெகதீஸ்வரியின் வீட்டிற்கு வேலுப் பிள்ளையின் உடலை கொண்டு சென்று அங்கு சைவ முறைப்படி சில சடங்குகள் நடந்தன. சைவ மதத்தில் வேலுப்பிள்ளை தீட்சைப் பெற்றிருக்கிறார். அதனால் சைவ கடவுளான சிவபெருமானுக்கு எப்படி அபிஷேகம் செய்யப்படுமோ அந்த முறைகளில் சடங்குகள் நடந்தன. இந்த சடங்குகள் நடக்கிறபோது தேவாரம், திருவாசகத்தின் பாடல்களை பாடினர்.வேலுப்பிள்ளையின் உடல் "பாடம்' செய்யப்பட்டு சவப்பெட்டியில் வைத்திருந்தனர். முகத்தை ஷேவ் செய்து உடலுக்கு புதிய உடையை உடுத்தியிருந்தனர்.
பாடம் செய்யப்பட்ட உடல் என்பதால் உடலை மீண்டும் ஒருமுறை தண்ணீரால் சுத்தம் செய்வது சரியாக இருக்காது என்பதால் மிகப்பெரிய நிலைக்கண்ணாடி கொண்டு வரப்பட்டு சவப்பெட்டிக்கு முன்னால் நிறுத்தப்பட்டது. கண்ணாடியில் தெரிந்த உடலை சைவ சித்தாந்தப்படி தண்ணீர் விட்டு கழுவினர். தனது கணவர் வேலுப் பிள்ளையின் தலைமாட்டிலேயே அமர்ந்துகொண்டு கணவரின் முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் பார்வதி அம்மாள். அவரது கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. எல்லாவித சடங்குகளும் முடிந்ததும் பார்வதி அம்மாளின் கழுத்திலிருந்து தாலியை அகற்றினர். ஓ..வென்று கதறினார்.
நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது எங்களுக்கு. பார்வதி அம்மாளின் கதறலுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் மக்களும் வேலுப் பிள்ளையின் உறவினர்களும் கதறினர்.
அதன்பிறகு இரங்கல் உரை. தமிழகத்திலிருந்த வைகோ, பழ.நெடுமாறன், சீமான் ஆகியோரை சிவாஜிலிங்கம் தொடர்பு கொள்ள அவர்கள் வாசித்த இரங்கல் உரைமைக்கில் ஒலிபரப்பப்பட்டது. அதன் பிறகு நான், சிவாஜிலிங்கம், கஜேந்திரன் ஆகியோர் இரங்கல் உரை வாசித்தோம். இதனையடுத்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊரணிக்கு உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
வழி நெடுகிலும் மக்கள் தங்கள் வீடுகளின் இருபுறமும் நின்றுகொண்டு மலர் தூவி வணங்கினர். ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் "மாவீரனை இந்த மண்ணுக்கு ஈந்த மாமனிதரே... உங்கள் ஆன்மா அமைதி கொள்ளட்டும். அந்த மாவீரனின் (பிரபாகரன்) கனவு ஒரு நாள் நிறைவேறும். தமிழீழம் கிடைத்தே தீரும்....' என்று வீரமாக கோஷமிட்டுக்கொண்டே வந்தனர். ஊரணியில் வேலுப்பிள்ளையின் உடல் எரியூட்டப்பட்டது.
அவரது உடலுக்கு வேலுப்பிள்ளையின் உறவினர் ராமசாமி தீ மூட்டினார்.ராமசாமிக்குத்தான் அந்த உரிமையை தரவேண்டும் என்று கனடாவில் உள்ள பிரபாகரனின் அக்காள் வினோதினி சொல்லியிருந்ததால் ராமசாமி கொள்ளி வைத்தார். வேலுப்பிள்ளையின் பிறந்த நாள் ஜனவரி 10. அதே நாளில் அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது'' என்று அந்த துயர நினைவுகளை பகிர்ந்து கொண்டார் திருமா.

நக்கீரன் சொன்னது! கேட்காத மக்கள் கண்ணீர்!


அதிர்ச்சியோ ஆச்சர்யமோ படுவதற்கு ஒன்றுமில்லை.
"ஹெலிகாப்டர்ல இறங்கி வந்து... இப்படி யும் மோசடி' என்று ஜெ.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத் தின் தில்லுமுல்லுகளையும்...
ஜெகஜ் ஜால ஜெ.பி.ஜெ.வான இதன் உரிமையாளர் ஜஸ்டின் தேவ தாஸின் ஃப்ராடு தனத்தையும் கடந்த 08-10-08 நக்கீரன் இத ழிலேயே அம்பலப்படுத்தியிருந் தோம். அப்போதே அந்நிறுவனத் தில் பணம் போட்டு ஏமாந்த பலரும் போலீஸில் புகார் கொடுக்க... பணத்துக்கு துணை போகும் அதிகாரிகளால் தப்பித்துவிட்டார் ஜெ.பி.ஜெ.அதற்குப் பிறகாவது உஷா ரானார்களா மக்கள்? ம்ஹூம்... ஜெ.பி.ஜெ.வின் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் வாய் பிளந்து முன்பைவிட அதிகமாகவே பணம் கட்டி நிலத் திற்காக காத்திருந்தவர்களின் வயிற்றில் இடியாய் இறங்கி கண்ணீர் விட வைத்திருக்கிறது இந்த செய்தி.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக துறைமுகப்பகுதி தலைவர் முகமது ஹாலித் ""ரெண்டு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணம் கட் டின பாத்திமாவுக்கு நிலம் கொடுக்காம இழுத்தடிக் கிறதோட... எக்ஸ்ட்ராவும் பணம் கேட்டு மிரட்டுறதா நம்மக்கிட்ட வந்து சொன்னதும்... சென்னை அண்ணாநகர் 18-வது மெயின் ரோட்டுல இருக்குற ஜெ.பி.ஜெ.வின் தலைமை ஆபீஸுக்குப் போனோம். அங்க போனபிறகுதான் ஏகப்பட்ட பேர் ஏமாந்து போய்...
அடியாட்களால் மிரட்டப்படுறதும் தெரிய வந்தது. அதுக்கப்புறம்தான் எல்லாரையும் கூட்டிட்டுப் போய் புகார் கொடுத்தோம். சினிமாவும், சீரியலும் பார்க்குற நேரத்துக்கு நக்கீரன் மாதிரியான விழிப்புணர்வு பத்திரிகைகளை படிச்சாலே ஏமாறாம இருக்கலாம்'' என்கிறார் அவர்.
""தமிழ்நாடு மட்டுமல்ல ஜெ.பி.ஜெ.வின் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி என 120 கிளைகளும், 40 அலுவலகங்களும், 60 சேவை(?) மையங்களும் உள்ளன.
கர்நாடகாவில் மட்டுமே ரூ.7 கோடி அளவுக்கு பணம் வசூலித்து மோசடி செஞ்சுருக்காரு. விஜயக்குமார், மீனா, பா.விஜய்னு வெச்சு விளம்பரங்கள் பண்ணினது மட்டுமில்லாம... சினிமா, சீரியல் முன்னணி நடிகைகளிடமும் ஜெகஜ்ஜாலமாக இருக்கும் கில்லாடி இவர்'' என்கிறார்கள் ஜெ.பி.ஜெ.வை பற்றி நன்கு அறிந்தவர்களே.சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது இந்த வழக்கு. ஐ.ஜி.விஜயகுமாரோ, ""புகார்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. நாலரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெங்களூரில் கைது செய்யப்பட்ட ஜெ.பி.ஜெ.. நிறுவனத்தின் உரிமையாளர் ஜஸ்டின் தேவதாஸ் மீது 420 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செஞ்சுருக்கோம். முழுமையா விசாரித்த பிறகுதான் பல உண்மைகள் வெளிவரும்'' என்கிறார்.
"ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்' என்ற ஓல்டு டயலாக்கை விட்டுக் கொண்டிருக்காமல் அட்லீஸ்ட் ஜெ.பி.ஜெ.வுக்கு துணை போனவர்களையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.

நயன்-பிரபுதேவா! கும்பகோணம் கும்மாளம்!

சென்னை புத்தகக் காட்சியில், நக்கீரன் ஸ்டாலில் இருந்து வெளியே வந்த காவேரியின் கரங்களில் இருந்த புத்தகங்களை வாங்கிப் பார்த்தார் மெரீனா.
""இன்னாம்மே... பிரபாகரன் பேசுகிறார்... பிரபாகரன் சிந்தனைகள்... பிரபாகரன் நூறு... வீரம் விளைந்த ஈழம்னு ஒரே பிரபாகரன் கலெக்ஷனா கீது?''""என் டேஸ்ட் இப்படி.
நீ கவிதைப் புத்தகம் வாங்கினியா... இது யாருடி உன் கூட புதுசா ஒரு குட்டீஸ்? கவிதை மாதிரி அழகழகா?''""இவ பேர்கூட கவிதா தாண்டி... என் கிளாஸ் மெட்டோட கவிதைடி...
இவளை எழுதின கவிஞனையும் எழுதப்பட்ட காகிதத்தையும் காட்டவா? அதோ பார்... அந்த ஸ்டால்ல... நடனப் புயல் பிரபுதேவாவும் நயன்தாராவும் மாதிரி... அவங்கதான் இந்த கவிதையைப் பெத்தவங்க!''.""நிஜமாவே பிரபுதேவா-நயன்தாரா பத்தின ஒரு கும்பகோணம் சீக்ரெட் நியூஸ் எங்கிட்ட இருக்குடி... வாங்க வெளில...
பட்டிமன்றம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கு... அங்கே போய் உக்கார்ந்து சொல்றேன்...!''.""சொல்லுங்க காவேரி... சொல்றேன்னு கூட்டி வந்துட்டு... மேடையைப் பாத்துட்டு இருக்கீங்களே!''""ம்... மெரீனாவும் பெண்ணையும் வரட்டும்னுதான் இருந்தேன்... சொல்றேன்.
"சிவா மனசில சக்தி' படம் டைரக்டர் ராஜேஷ்... "பாஸ் என்ற பாஸ்கரன்'னு ஒரு படம் எடுக்கிறாரு... திருவாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சி, தஞ்சாவூர் ஏரியாக்கள்ல படம் சூட்டிங். படத்தோட ஹீரோயின் நயன்தாரா வுக்கும் ஹீரோ ஆர்யாவுக்கும் கும்ப கோணம் ஹோட்டல் ரிவர் சைட் ரிசார்ட்ல ரூம் போட்டுக் கொடுத்திருந்தாங்க...''""ஒரு நிமிஷம்... கன்டினீயூட்டிய மறந்திராத... நீ சொல்லப் போற நியூஸ், நம்ம திண்ணைக் கச்சேரியை நக்கீரன் அட்டையில கவர் ஸ்டோரியா போட்றாமாதிரி இருக்கும்ல... ஏன்னா... இதுவரை நாம் கவர்ல வர்ற லைடி அதான்... இன்னக்காச்சும் உன் நயன்தாரா நியூசால நமக்கு பிரமோஷன் கிடைச்சா சரி... ஆமா, நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் ரூம் போட்டுக் கொடுத்தாங்க... அப்புறம்?''.""அவங்க ரெண்டுபேருக்கும் தனித்தனி ரூம்... ஆர்யா அந்தப் படத்திலதான் ஹீரோ... நம்ம நியூஸ்ல இல்லை.
8 நாள் சூட்டிங் ஒழுங்கா போச்சு... அந்த எட்டுநாளும் கேமராவுக்கு முன்னால நிக்கிற நேரம் தவிர மற்ற நேரமெல்லாம், ஒரு காதில ஐபேடு ஒயர்... மறுகாதில செல்போன் ஒயர்... இன்ட்ரஸ்டா பாட்டுக் கேக்கிற மாதிரி செல்போன்ல சீரியஸா பேசிக்கினே இருந்தாராம் நயன்தாரா...!''.""பொறுமையைச் சோதிக்காம விஷயத்துக்கு வாங்கங்க!''.""கடைசி நாள் 23-ஆம் தேதி சூட்டிங் முடிஞ்சு ஹோட்டலுக்கு வந்த நயன்தாரா... அரைமணி நேரத் தில, ஹோட்டல் ரூம்ல இருந்து பிரபுதேவாவோட இறங்கி வந்து கார்ல ஏறிப் பறந்துட்டாரு... "பாஸ் கரன்' பட யூனிட்டே வாயைப் பொளந்திருக்கு. நாம இங்கேதானே இருக்கோம்... பிரபுதேவா எப்ப வந் தாருனு எல்லாருக்கும் ஷாக். அதே ஹோட்டல்லதான் ஆர்யா இருந்தார். "மாப்பிள்ளை' ரீமேக் படத்துக்காக வந்த நம்ம தனுஷ் தங்கியிருந்தார்.
இவங்களுக் கெல்லாம் நடனப் புயல் வந்தது பற்றி எதுவும் தெரி யலை. ஹோட்டல் பாய் ஒருத்தர் எனக்கிட்ட ரகசியமா சொன்னாரு... ரெண்டுநாள் முன்னயே வந்து... அந்த ரூமுக்குள்ளயே இருந்தாரு பிரபுதேவா... ஒரே கும்மாளம்தான். எனக்கே காலைலதான் தெரியும்னு... மறுநாள் சொன்னார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில பிரபுதேவா-நயன்தாராவுக்கு பிரபுதேவா அப்பா சுந்தரம் மாஸ்டர்தான் வீடு பாத்திட்டு இருக்காராம்!''.
""யாருக்கும் தெரியாம எப்படி ரெண்டுநாள் அந்த ரூம்ல இருக்க முடியும்?''""ஸாரிடி... நயன்தாராவோட மேனேஜருக்கும் மேக்கப்மேனுக்கும் தெரியு மாம்டி... பப்ளிக்குக்கும் மீடியா வுக்கும் தெரியக் கூடாதுனு சீக்ரெட்டை மெயின் டைன் பண்ணிருப் பாங்கம்மே... சரி வுடுங்க... இதெல் லாம் சீக்ரெட் டாவே இருந்துட்டு போவட்டும்!''

Sunday, January 10, 2010

வரன் பார்க்க அரவாணிகள் தொடங்கியுள்ள இணையம்
அரவாணிகளும் பெண்கள்தான், மதிப்புக்குரிய பெண்கள். அவர்களுக்கும் திருமணம் செய்து, கணவருடன் வாழ வேண்டும், சமூகத்தில் அந்தஸ்துடன் உலவ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.


அப்படிப்பட்டவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய திருநங்கை கல்கி புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். www.thirunangai.net என்ற பெயரில் கல்கி தொடங்கியுள்ள இந்த இணையதளம், அரவாணிகளுக்கு வரன் பார்க்கும் அருமையான வேலையை செய்கிறது.


கல்கி - பொள்ளாச்சியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தந்தை லாரி தொழிலில் ஈடுபட்டிருந்தார். 2 சகோதரிகள். கல்கி மட்டுமே வீட்டின் ஒரே ஆண் வாரிசு. கொடைக்கானலில் போர்டிங் பள்ளியில் சேர்ந்து படித்தார்.


சிறு வயதிலேயே தனது சகோதரிகளுடன் அதிக நேரத்தை செலவிட விரும்பாமல் ஆண்களுடனேயே செலவிட விரும்பினார். தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை அவர் உணர ஆரம்பித்தார். மேலும், அழகான பெண்களை விட துணிச்சலான, உறுதியான பெண்கள்தான் இவரை அதிகம் கவர்ந்தனர்.


13 வயதில் இவரது மனதுக்குள் அலையடித்த உணர்வுகளின் போராட்டத்தை தாயார் கண்டுபிடித்தார். கவலை கொண்டார்.


பள்ளிப் படிப்பிலிருந்து ஒரு நாள் விலகி முழுமையான திருநங்கையாக தன்னை மாற்றிக் கொள்ள முடிவு செய்தார் கல்கி. 14 வயதில் அரவாணிகள் குடும்பத்தில் இணைந்தார். இன்று கல்கி, சகோதரி பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் - இயக்குநர்.இவர் உருவாக்கியுள்ள திருநங்கை.நெட் இணையதளம், அரவாணிகளுக்கு வரன் பார்த்துத் தரும் வேலையைத் தொடங்கியுள்ளது.வெளிநாடுகளில் அரவாணிகளுக்கு திருமணம் என்பது சர்வசாதாரண விஷயம்.


ஆனால் இந்தியாவில் இது மிக மிக கடினமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக அரவாணிகளுக்கு மாப்பிள்ளைகள் கிடைப்பது என்பதும், தேடுவதும் சாதாரண விஷயமல்ல. பல தடைகள், இடையூறுகள், சிக்கல்கள் குறுக்கே நிற்கின்றன.இதுவே கல்கி தனி இணையதளம் தொடங்க முக்கியக் காரணம். இதுகுறித்து கல்கி கூறுகையில், நிறைய ஆண்களுக்கு திருநங்கைகளுடன் பழக வேண்டும் என விருப்பம் உள்ளது. ஆனால் கல்யாணம் என்று வரும்போது மறுத்து விடுகிறார்கள்.


எங்களது சமூகத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு நல்ல ஆண்களைக் கல்யாணம் செய்து குடும்பமாக வசிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சமூகத்தில் கெளரவத்தோடு வாழ வேண்டும் என்பதே அவர்களின் ஆசை.சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அரவாணிகள். அப்படிப்பட்டவர்களுக்கான தளம்தான் இந்த திருநங்கை.நெட்.எங்களது இணையதளம் மூலம் வரன்களைத் தேடிக் கொள்ளலாம், நல்ல ஆண் துணைவர்களைத் தேடிக் கொள்ளலாம்.


எல்லோருக்கும் போலவே எங்களுக்கும் காதல் வரும். நல்ல கணவன் வேண்டும் என்ற ஆசையம் வரும். எங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றாலும், குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டு அந்தக் குழந்தையுடனும், கணவருடனும் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என்றார்.தற்போது இந்த இணையதளத்தில் சில அரவாணிகள் தங்களுக்கு வரன் தேவை என்று கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த அரவாணிகளை கல்யாணம் செய்து கொள்ள விரும்பியும், துணைவிகளாக்கிக் கொள்ளவிரும்பியும், இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டவற்றிலிருந்து 200க்கும் மேற்பட்ட பதில்கள் வந்துள்ளனவாம்.அவர்களில் டாக்டர்கள், பொறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், தொழிலதிபர்களும் அடக்கமாம்.இருப்பினும் தீவிரப் பரிசீலனைக்குப் பிறகே வரன்கள் இறுதி செய்யப்படும் என்கிறார் கல்கி.அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி (மகளிர் தினம்) அல்லது பிப்ரவரி 14ம் தேதி (காதலர் தினம்) ஆகிய ஏதாவது ஒரு நாளில் முதல் கல்யாணம் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கல்கி.இந்தியாவில் அரவாணிகள் அல்லது திருநங்கைகள் குறித்த பார்வை மாறி வருகிறது.


அரவாணிகளும் கூட மாறி வருகிறார்கள். பாலியல் தொழில், பிச்சை எடுப்பது உள்ளிட்டவற்றிலிருந்து மீண்டு வருகிறார்கள். இதில் இன்னும் ஒரு படி மேலே போய், சாதாரணப் பெண்களைப் போல திருநங்கைகளும், கணவன், குடும்பம் என்ற கட்டமைப்புக்கு மாறும் சூழல் தற்போது வந்துள்ளதாகவே கருதுகிறேன் என்கிறார் கல்கி.