பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 6, 2009

அமெரிக்கா விசாரணை! குற்றவாளி கூண்டில் கொலைகார ராஜபக்சே!

கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பின் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய்யா ராஜபக்சே தனது உரைகளில், பேட்டிகளில் மேற்குலக நாடுகளை வறுக்கத் தொடங்கினார். சீனா மட்டும் எங்களுக்குப் போதும் என்ற ரீதியிலும் பேசினார். அமெரிக்க குடியுரிமை பெற்ற அவரின் திடீர் மாற்றத்திற்கான காரணம் கடந்த ஞாயிறு வரை புதிராகவே இருந்தது. புதிர் திங்கட்கிழமை யன்று அவிழ்ந்தது: ""செப்டம்பர் மாதம் இறுதி வாரம் அமெரிக்க நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது அவை அமர்வில் பங்கேற்கச் சென்றிருந்தபோது அமெரிக்க அதிகாரிகள் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப் பட்ட யுத்த குற்றங்கள் (War Crimes) தொடர்பாக நீண்ட நேரம் அவரை விசாரித்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் வந்திறங்கும் ஒருவரை குடி வரவு அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று குடைச்சலான கேள்விகளைக் கேட்பதென்பது சற்றே அவமானம் தருகிற அனுபவம்தான். அதுவும் இலங்கையில் சர்வ வல்லமை கொண்டவராய் உலா வரும் கோத்தபய்யாவுக்கு அது உடல் முழுதும் கம்பளிப் புழுக்கள் ஊர்வது போலவே இருந்திருக்கும்''.கோத்தபய்யாவுக்கு நடந்தது பற்றி இலங்கை அரசு அப்போது வாய் திறக்கவில்லை. இது மாதிரியான விஷயங்களை மோப்பம் பிடிக்கும் ஊடகங்கள் கூட இது பற்றி எழுதவில்லை. இப்போது அமெ ரிக்கா சென்றிருக் கும் தமிழர் இன அழித்தலில் மூன்றாவது குற்றவாளி யான போர்க்கால இராணுவத் தளபதி சரத் பொன் சேகாவை "சம்மன்ஸ்' என்ற விசாரணை அழைப்பு இல்லாமலேயே குறுக்கு விசாரணை செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பதன் பின் னணியில்தான் கோத்தபய்யா செய்தியும் வெளி வந்துள்ளது. செப்டம்பரில் கோத்தபய்யா அமெரிக்காவால் விசாரிக்கப்பட்ட செய்தியை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகொலகம்மா பூர்வாங்கமாக ஒத்துக் கொண் டிருக்கிறார். இப்போது இராணுவத் தளபதி பொன்சேகாவை இறுக்க வேண்டி செய்யப்பட்டி ருக்கும் அமெரிக்க முடிவின் உண்மையான இலக் கும் கோத்தபய்யா தான் எனத் தெரிய வருகிறது. கோத்த பய்யாவுக்கெதிராய் யுத்தக் குற்ற சாட்சியம் சொல்லும்படி பொன்சேகாவை அமெரிக்கா கேட் டுக் கொண்டுள்ள தாகவும் தெரிய வருகிறது.

கோத்தபய்யாவை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் குறிவைக்க பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது வெள்ளைக் கொடியேந்தி, இறுதி ரத்தக்களறியை தவிர்க்கும் ஒரே நோக்கு டன், ஆயுதங்களை மௌனப்படுத்துதல் (Silencing the Guns) தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக் குச் சென்ற நடேசன், புலித்தேவன் ஆகியோ ரது படுகொலை. இந்த முயற்சியில் பிரித் தானியா, அமெரிக்கா, இந்தியா மூன்று நாடுகளும் ஐ.நா. அமைப்பும் விடுதலைப் புலிகளது அனைத்துலகச் செயலகத்தினது வேண்டுகோளின் பேரில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவை ஈடுபடுத்துவதில் தமிழகத் தலைவர் களும் இணைந்திருந்தனர். களத்திலிருக்கும் கட்ட ளைத் தளபதியை வெள்ளைக் கொடி ஏந்தி சந்திக்கச் சொல்லுங்கள் என்று அதிபர் ராஜபக்சே கூறிய பின்னர்தான் ஐ.நா. அமைப்பு புலிகளுக்கு செய்தி கூறியிருக்கிறது. ஆனால் அதிபர் கொடுத்த வாக்குறுதியையும் மீறி, நடேசன், புலித்தேவன் மற்றும் உடன் சென்ற வர்களை சுட்டுக் கொல்லும் உத்தரவை பிறப்பித்தது கோத்த பய்யா. இது அப் பட்டமான யுத்தக்குற் றம், நம்பிக்கைத் துரோ கம். இரண்டையும் மன்னிப்பதற்கு அமெ ரிக்க-மேற்கு நாடுகள் தயாராக இல்லை.

இரண்டாவது விடுதலைப் புலிகளை அழித்தபின் தமிழர் இனச் சிக்கலுக்கு நீதியான தொரு அரசியற் தீர்வினை ராஜபக்சே அரசு முன்வைக்குமென்றும், அதன் முதல் நிலையாக வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களையும் தாமதமின்றி தத்தமது வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்குமென்றும் உள்ளபடியே மேற்குலகம் நம்பியது. அந்த நம்பிக்கையைச் சார்ந்துதான் விடுதலைப் புலிகளை அழிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூர யுத்தத்தை அந்நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் யுத்தம் முடிந்த பின் தன் சுயமுகத்தை சிங்களப் பேரினவாதம் காட்டியது, காட்டி வருகிறது. கோத்த பய்யாதான் இந்தக் கடும் போக்கின் பிதாமகன், சூத்திரதாரி. அவரைப் பொறுத்தவரை முல்லைத் தீவு முள்ளி வாய்க்கால் தமிழர் இன அழித்தலின் தொடக்கம் மட்டுமே. இனி எக்காலத்திலும் இலங்கை நிலப்பரப்பிற்குள் ""தமிழருக்கான அர சியல்'' என ஒன்று இருக்கக்கூடாது என்ற நிலைப் பாட்டில் நின்று கொண்டு இனவெறி மதம் பிடித்து இயங்குகிறார். அவரது இயக்கத்தில் அங்கு அரங்கேறி வரும் தொடர் இன அழித்தல் பயங்கரங்களை மேற்குலகம் பார்க்கத் தவற வில்லை. அவர்களை மிகவும் ஆத்திரத்திற்குள் ளாக்கியிருக்கிற சில செயற்பாடுகள் இவை:கடந்த மூன்று வாரங்களில் மட்டுமே வவுனியா வதை முகாம்களிலிருந்து 2100-க்கும் மேலான தமிழ் இளைஞர்கள்- இளம்பெண்கள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள், என்ன ஆனார்கள் என்பது அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திற்கே தெரியவில்லை. கோத்தபய்யாவின் உத்தரவின் பேரில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என மேற்குலக நாடுகள், ஐ.நா. அமைப்புகள் அஞ்சுகின்றன.தமிழர்கள் பாரம் பரியமாக பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்த தாயக நிலப்பரப் பொன்று இருந்தது, இருக்கிறது, அது வடக்கு-கிழக்கு இலங்கை என்ற அடிப்படையை மேற்குலக நாடுகள் ஏற் கின்றன. இனப்பிரச்சனை அரசியற் தீர்வுக்கு இதனை ஏற்றுக் கொள்வது முக்கியமெனவும் அந்நாடுகள் ராஜதந்திர வழிகளில் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் "தமிழர் தாயகம்' என்ற கோட்பாடு இனி ஒருபோதும் எழாதபடி தகர்த்து விட வேண்டுமென்பதில் கோத்தபய்யா வரிந்து கட்டி நிற்கிறார். முதற்கட்டமாக தமிழ்மக்களின் புனர்வாழ்விற்கென உலக நாடுகள் இதுவரை வழங்கியுள்ள பெரு நிதியைக் கொண்டு யாழ்குடா விலேயே பலாலி தொடங்கி தொண்டைமானாறு வரையான செழித்த நிலப்பரப்பில் 60,000 ராணுவக் குடும்பங்களை நிரந்தரமாய் குடியமர்த் தும் ஏற்பாடுகளை கோத்தபய்யா முடுக்கி விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் தென் னிலங்கையில் இருந்தால் காடைத்தனங்களில் ஈடுபடுவார்கள் என அஞ்சப் படும் "ரவுடி' ராணுவ அணிகள்தான் அங்கு நிரந்தர மாக்கப்படப் போகிறார்கள். உலக நாடுகள் கேட்டால், ""தமிழர் தாயகத்தில் சிங்களர் களை குடியமர்த்தவில்லை... நாட்டின் ராணுவத்தினரையும் அவர்தம் குடும்பங்களையும் தான் அமர்த்துகிறோம்...'' என புத்திசாலித் தனமாகப் பதில் சொல்வார்கள். நமக்கு கிடைக்கிற தகவல்களின்படி இந்த விபரம் கொழும்பிலுள்ள இந்திய அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் உரிய அக்கறையுடன் புதுடில்லி அரசுக்குத் தெரிவிக்கிறார்களில்லை. கொழும்பிலிருக்கும் இந்திய தூதர் அலோக் பிரசாத்தை அகற்றி விட்டு ஓர் இதயமுள்ள தமிழ் அதிகாரியை நியமிக்கும் மிகக்குறைந்தபட்ச அக்கறையை புதுடில்லிக்காரர்கள் செய்தாலே இன்று அது பெரிய விஷயமாக இருக்கும்.வதை முகாம்களில் தொடர்ந்தும் மக்களை இருத்தி வைப்பதற்கு எந்த முகாந்திர மும் இல்லை என்பதில் மேற்குலக நாடுகள் உறுதியாக உள்ளன. எல்லா மக்களும் அவர்தம் வாழ்விடங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமென ஏறக்குறைய அனைத்து மேற்குலக நாடுகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஆனால் கோத்தபய்யா கொள்கைப்படி முல்லைத்தீவு -கிளிநொச்சி மாவட்ட மக்களை இன்னும் ஓராண்டுக்கேனும் வதை முகாம் களில் வைத்திருந்து சிதைக்க வேண்டும்.மேற்சொன்ன, மற்றும் மேலும் சில காரணங்களால் ஆத்திரமுற்றுள்ள அமெரிக்க மேற்குலக நாடுகள் கோத்தபய்யாவை குறிவைக்கத் தொடங்கியுள்ளன. கோத்தபய்யா வை யுத்தக்குற்றவாளி என உலகம் அறிவித் தால் கூட பெரிதாக என்ன நடந்து விடப் போகிறது? அவரைக் கைது செய்வது சாத்தியமா? அதனால் பாதி அழிந்துவிட்ட தமிழருக்கு என்ன பயன்? -என்றெல்லாம் கேள்விகள் எழும்.அதிகாரத்தின் பீடங்களில் எவரும் நிரந்தரமாக அமர்ந்திருந் ததாய் நவீன கால வரலாறு இல்லை. அங்கும் ஆட்சி மாறுகிற நாளொன்று வரும். அப்போது அனைத்துலகக் காட்சிகளும் மாறும். கோத்தபய்யா, ராஜபக்சே, பொன்சேகா மூவரையுமே உலக நீதிமன்றத்திடம் ஒப்படைக்கச் செய்யும் அழுத்தத்தை உலகநாடுகள் நிச்சயம் இலங்கைக்கு ஏற்படுத்தும்.இரண்டு, புலிகளின் பயங்கரவாதம் என்ற பழைய பல்லவி காற்றலைகளிலிருந்து அகன்று சிங்களத்தின் போர்க்குற்றங்கள் குறித்த பறை முழக்கம் உலகெங்கும் அதிரும். இலங்கை அவமானப்படும். உலகின் முன் கொடிய போர்க்குற்ற வாளிகளாய் அவர்கள் நிற்பார்கள். அதுவே தமிழ் மக்களது அரசியல் சுய நிர்ணய உரிமைக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தரும் புதிய தொடக்கமாகவும் அமையும். ஆதலால் தமிழர்களே, நம்பிக்கைகள் முற்றுமாய் இற்றுப் போகவில்லை, அற்றுப் போவதுமில்லை. வரலாறு புதிய தோழமைகளோடு நம் இனத்தை விடுவிக்கும்.கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளது பொது பாராளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் இருவரும், இரண்டு நாடுகளது வெளியுறவுத்துறை அதிகாரிகள் இருவரும் அவர்தம் இந்தியாவிலுள்ள தூதரகப் பிரதிநிதிகள் சிலருமாய் சென்னை வந்திருந்தார்கள். அவர்கள் தத்தமது பாராளுமன்றங்களுக்கு மிக முக்கியமானதோர் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண் டிய கடமையின் பேரில் வந்திருந்தார்கள். அவர்களோடு சுமார் மூன்று மணிநேரம் உரையாடும் அரிய வாய்ப்பு கிட்டியது. அவர்கள் ஆய்வு செய்யத் தலைப்பட்டது இரண்டு விஷயங்கள். முதலாவது: ""இலங்கை மீது மனித உரிமைகள், அரசியல் தீர்வு தொடர்பாக மேற்குலக நாடுகள் எடுக்க விழையும் எல்லா நடவடிக்கைகளுக்கும் எதிராக நிற்பது சீனாவும் இந்தியாவும். சீனாவின் செயலை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்திய வெளியுறவுக் கொள்கையின் தமிழர் மீது கரிசனையற்ற போக்கினைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை''. ஒரு கட்டத்தில் ஓர் அதிகாரி தலையை அசைத்துக் கொண்டே சொன்னார்: ""இந்தியா எங்களை களைப்படையச் செய்கிறது''.இரண்டாவதாக அவர்கள் அறிய விரும்பியது:

ஜெ.வின் யோக்கியதை! சுளீர் ஆ.ராசா!

குருஷேத்திர யுத்தத்தில் சீறி வந்த அம்புகளைப்போல வருகின்றன ஸ்பெக்ட் ரம் கணைகள். சளைக்காமல் எதிர் கொண்டு வருகிறார் மத்திய அமைச்சர் ஆ.ராசா. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் இல்லையென்பதை விளக்கி, புகார்க் கணைகளை கேடயத்தில் தடுப்பதுபோல தடுத்து, முனை மழுங்கச் செய்துவந்த ஆ.ராசா இப்போது பா.ஜ.க. ஆட்சியில்தான் ஊழல் என்று பதில் கணைகளையும் ஏவத் தொடங்கிவிட்டார். விறுவிறுப்படைந்திருக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ. நடவடிக்கைக் குப்பின் ஆ.ராசா அளிக்கும் விரிவான முதல் பேட்டி...

உங்களை நோக்கியே உதைக்கப்பட்டு வந்த பந்தை, பா.ஜ.க பக்கம் உதைத்துத் தள்ளி யிருக்கிறீர்களே... இந்த புதிய வியூகத்தின் பின்னணி என்ன?

ஆ.ராசா : பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி சுமத்துகின்ற குற்றச்சாட்டு என்னவென்றால் 2001-ல் என்ன விலைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் பட்டதோ அதே விலைக்கு இப்போதும் நிர்ணயித்திருக் கிறார்கள். அதன் மீது அலைவரிசை ஒதுக் கீடு நடந்ததன் மூலம் அரசுக்கு 60 ஆயி ரம்கோடி ரூபாய் அளவுக்கு நட்டம் என்கிறார். இதற்கு நான் பலமுறை பதில் சொல்லி யிருக்கிறேன். சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருவதால் இதற்குள் நான் விரிவாகப் போகமுடியாது. ஆனால், ஒன்றை மீண்டும் வலியுறுத்திச் சொல் கிறேன். 2001-ம் ஆண்டு ட்ராய் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக்கட்டணம், அதே ட்ராய் நிறுவனத்தால்தான் மறுபரிசீலனையோ மறுமதிப்பீடோ செய்யப்படவேண்டும். 2007-ம் ஆண்டு புதிய பரிந்துரைகளை வழங்கிய ட்ராய் நிறுவனம், அதனுடைய பரிந்துரைகளை 2001-ம் ஆண்டு கட்டணத்தை உயர்த்தப் பரிந்துரைக்க வில்லை. எனவேதான், அதற்குப்பின்னிட்டு பிரமோத்மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் ஆகிய எனக்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் இதே நுழைவுக் கட்டணத்தில்தான் தொடர்ந்து உரிமங்களை வழங்கி வந்தனர். அருண்ஜெட்லியைப் பொறுத்தவரை, அவருடைய அரசியல் மூளையும் சட்ட மூளையும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், இதே அருண்ஜெட்லிதான் புதிய உரிமங்கள் வழங்கக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் புதிதாக உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றின் சார்பில் வழக்கறிஞராக ஆஜராகி, அரசு கடைப்பிடித்த நெறிமுறைகள்- விதிமுறைகளின்படி வழங்கப்பட்ட உரிமத்தை தனது ஆணித்தரமான வாதத்தால் நிலைநிறுத்தி, சென்ற ஆண்டில் வெற்றியும் பெற்றிருக் கிறார். அதே அருண்ஜெட்லி இப்போது உரிமம் வழங்குவது முறைகேடு என்றால் அருண் ஜெட்லியினுடைய சட்ட அறிவுக்கும் அரசியல் அறிவுக்கும் நடக்கிற மோதலால் ஏற்படும் காயங்களுக்கு நான் வைத்தியம் பார்க்க முடியாது.

பா.ஜ.க தரப்பில் இதை அரசியலாக்குவதாகச் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் நீங்களும் பா.ஜ.க ஆட்சியில்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி அரசியலாக்குகிறீர்களே?

ஆ.ராசா : உங்கள் கேள்வியின் சாரத்திற்கு வருகிறேன். சுமார் 350 MHz (மெகாஹெட்ஸ்) அளவுக்கான அலைக்கற்றை என்னுடைய காலத்தில் புதிய உரிமதாரர்களுக்கு, போட்டியை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ட்ராய் நிறுவனத்தின் பரிந்துரையுடனும், பிரதமரின் ஆலோசனையுடனும் இந்தியாவினுடைய தலைமை வழக்கறிஞரின் சட்ட ஒப்புதலுடனும் நான் வழங்கியதால், அருண்ஜெட்லி குறிப் பிடுவதைப்போலஅரசுக்கு 60ஆயிரம் கோடி ரூபாய் இழப்பென்றால், எந்த நெறிமுறைகளையும் பின்பற்றாமல் , அமைச்சர் என்கிற அதிகார வரம்பில் மட்டுமே முடிவுகளை மேற்கொண்டு, அதனடிப்படையில் 250 MHz அலைவரிசையை தனியார் நிறுவனங்களுக்கு அள்ளித் தந்திருக்கிறார்கள் பா.ஜ.க ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜனும் அருண் ஷோரியும். இதனால் அரசுக்கு ஏற்பட்டிருக்கின்ற இழப்பு எவ்வளவு என்றுதான் நான் கேட்கிறேன். நக்கீரன் : 250 MHz எந்த முறையில் பா.ஜ.க ஆட்சியில் வழங்கப்பட்டது என்பதையும் அதனால் ஏற்பட்ட இழப்பையும் விரிவாக விளக்க முடியுமா? ஆ.ராசா : உரிமம் பெற்ற ஒரு நிறுவனம் தன்னுடைய சேவையைத் தொடங்குவதற்கு 4.4 MHz் அலைவரிசைதான் அடிப்படையில் வழங்கப் படவேண்டிய அலைவரிசை அளவாகும். 4.4 MHzமேல் எத்தனை அலைவரிசை வழங்கினாலும் அது, அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கூடுதல் ஸ்பெக்ட்ரமாகும். இந்தக் கூடுதல் ஸ்பெக்ட்ரமை வழங்குவது குறித்து, அப்போது அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் எந்த கூடுதல் கட்ட ணமும் வசூலிக்காமல் தனியார் நிறுவனங் களுக்கு 6.2 MHz வரையும் அதற்குப் பின்பு 8 MHz், 10 MHz வரையிலும் வழங்கியிருக்கிறார். இதே முறையில்தான் அருண்ஷோரியும் வழங்கினார். தங்களது பிதுரார்ஜித சொத்தைப் போல அலைக் கற்றையை எடுத்து, கோடிகோடியாக இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கிற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியவர்கள்தான் இவர்கள்.தங்கள் சொந்த சொத்தாக அலைக் கற்றையைப் பாவித் தவர்கள் தான், விதிமுறைகளைக் கடைப்பிடித்து, ஸ்பெக்ட்ரம் இருப்பை முதலில் கண்டுபிடித்து புதிய நிறுவனங்களுக்கு வழங்கி ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தி அதனால் செல்போன் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கட்டணக் குறைப்புக்கு வழி வகுத்த, என்னுடைய செயலைக் குற்றம் சாட்டுகிறார்கள். இதுமட்டுமல்ல, அருண்ஷோரி அமைச்ச ராக இருந்தபோதுதான், தனியார் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்திவந்த, ஸ்பெக்ட்ரம் கட்டணத்தில் (ரெவின்யூ ஷேர்) 2% குறைத்து ஆண்டொன்றுக்கு சுமார் 900 கோடி ரூபாயை ரத்து செய்திருக்கிறார். அதேபோல 900 MHz பேண்டு என்று சொல்லப்படும் தொகுப்பிலிருந்து கூடுதல் அலைவரிசையை எந்த நிறுவனத்திற்கும் வழங்கக்கூடாது என்பது 2002 பிப்ரவரியில் அன்றைய அரசு எடுத்த முடிவு. இந்த முடிவை மீறி தனியார் நிறுவனங்களுக்கு அவற்றின் இலாபத்தை அதிகரிப்பதற்காக இந்த 900 MHz அலைவரிசையை வழங்கிய ஆட்சிதான் இவர்களின் ஆட்சி. இதனால் பயன்பெற்ற தனியார் நிறுவனங்கள் எவை? அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? இவற்றையெல்லாம் கேட்டுத் தான் நான் தோராயமாக 1 லட்சத்து 60 ஆயிரம் என்று குறிப்பிட்டேன்.

பா.ஜ.க ஆட்சியின் ஊழல்கள் பற்றி இப்போது சொல்வது ஏன் என்று கேட்கிறாரே விஜயகாந்த்?

ஆ.ராசா : இதுவரை நான் எடுத்த முடிவுகளில் தவறு இருப்பதாகவும் பிரதமரோடு கலந்து பேசி எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி வந்த எதிர்க்கட்சிகள் இப்போது ஐம்பதாயிரம் கோடி என்றும், அறுபதாயிரம் கோடி என்றும், இந்தியாவிலேயே நடந்த மிகப்பெரிய ஊழல் என்றும் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, இயற்கையாக என்னுள் ஒரு கேள்வி எழுந்தது. ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் ஒவ்வொரு அமைச்சர்கள் இருந்த காலத்திலும் எப்படி அலைக்கற்றை வழங்கப்பட்டது , எவ்விதம் வழங்கியிருக் கிறார்கள் என்று கோப்புகளை நான் ஆய்வு செய்தபோது, இந்த அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தது. அவர்கள் போட்ட ஒவ்வொரு உத்தரவையும் எடுத்துப் படிக்கிறபோதுதான் தொலைத்தொடர்புத்துறையை ஏதோ தங்கள் கைவசப் பட்ட கம்பெனியின் கணக்கு எழுதுவதுபோல, இவர்கள் விதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. எனவே, எப்போது சொல்கிறேன் என்பது முக்கியமல்ல. சொல்லப்படுவதில் உண்மையும் சாரமும் இருக்கிறதா என பார்ப்பதுதான் ஒரு நாணயமான நல்ல அரசியல்வாதியின் அடையாளம். அந்த அடையாளத்தை நான் விஜயகாந்த்திடம் தேடினால் என் அறிவின் மீது உங்களுக்கு சந்தேகம் வரும். அவர் தன்னுடைய அறிக்கையில் தொலைத்தொடர்புத்துறை செயலாளராக இருந்த டி.எஸ்.மாத்தூர் இந்த உரிமம் வழங்குவதற்கு கையெழுத்துப் போட மறுத்துவிட்டதாகவும் அவர் ஓய்வு பெற்ற பிறகுதான் உரிமங்கள் வழங்கப்பட்டன என்றும் கூறியிருக்கிறார். உரிமம் வழங்குவது உட்பட எல்லா கொள்கை முடிவுகளுக்கும் கையெழுத்திட்டிருப்பவரே மாத்தூர்தான். அவரை அடுத்து வந்த செயலாளர் இதை செயல்படுத்தினார். இந்த உண்மைகள் தெரியாமல் ஊடகங்களில் வரும் தகவல்களின் அடிப்படையில் எழுதி தரப்படும் அறிக்கைகளை வெளியிடுகிறார் விஜயகாந்த். பாவம்... அவரை விட்டுவிடுங்கள்.

நீங்கள் எவ்வளவுதான் விளக்கம் கொடுத்தாலும் எதிர்க்கட்சிகளும் மீடியாக்களும் தொடர்ந்து உங்களை குறி வைக்கும்போது பொது மக்களிடமும் தாக்கத்தை உண்டாக்குகிறதே?

ஆ.ராசா : எதிர்க்கட்சிகள் செய்வது அரசியல். மீடியாக்கள் செயல்படுவதற்கு இரண்டு காரணங்கள். 1. பத்திரிகையாளர்கள் தவறாக நினைக்கக்கூடாது. செய்தி சேகரிப்பாளர்களுக்கும் கட்டுரை எழுதுபவர்களுக்கும் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்பதும் தொலைத்தொடர்பு உரிமம் என்பது எந்த வடிவில் வழங்கப்படுகிறது-அதிலுள்ள பரிந்துரைகள் என்ன ஆகியவை குறித்து போதுமான தகவலும் இல்லை. புரிதலும் இல்லை. ஓராண்டுக்கும் மேலாக எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் 2001-ம் ஆண்டில் நிர்ணயிக் கப்பட்ட கட்டணத்தை ஏன் மாற்ற வில்லை என்றும், முதலில் வந்தவர் களுக்கு முதலில் அனுமதி அளிப் பது சரியா, அலைக் கற்றையை ஏன் ஏலம் விடவில்லை போன்ற கேள்விகள் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டு, அவற்றிற்குத் திரும்பத் திரும்ப பதில் சொல்லி சலித்தும் களைத்தும் போய்விட் டேன். பார்வையில்லாத சிலர் யானையைப் பார்த்து அவர்களாகவே உருவகப்படுத் திக்கொள்வது போல இது குறித்து செய்திகளும் கட்டுரைகளும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. காரணம் 2. இந்தத் துறையில் யார் அமைச்சராக இருந்தாலும் ஒரு முக்கிய முடிவு எடுக்கும்போது அதனால், கோடிகோடியாக இலாபம் ஈட்டுகின்ற சில நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதும், சில நிறுவனங்களுக்கு அனுகூலமாக அமைவதும் இயற்கையான ஒன்று. தங்களுடைய வியாபார தொழில் மேலாதிக்கத்திற்கு இழப்பு வரும்போது அவர்கள் அந்த முடிவுக்கு எதிராகத் திரும்பத்தான் செய்வார்கள். அவர்கள் கையில் இருக்கின்ற செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும்கூட, அவர்களின் குரலாகத்தான் ஒலிக்குமே தவிர, உண்மை பேசும் என எதிர்பார்க்க முடியாது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமரின் ஆலோசனைப்படிதான் செயல்பட்ட தாகத் தொடர்ந்து சொல்லிவருகிறீர்கள். இது குறித்து பிரதமருக்கு நீங்கள் எழுதிய கடிதத்தினை பெற்றுக்கொண்டதற்கான அக்னாலட்ஜ்மென்ட் மட்டுமே பிரதமர் வழங்கியதாகவும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு பிரதமர் ஒப்புதல் கொடுக்கவில்லை என்றும் செய்திகள் வெளியிடப்படுகின்றனவே?

ஆ.ராசா : பிரதமர் ஒப்புக்கொள்ளவில்லை யென்றால் அந்த கடிதத்திலேயே கருத்தாக, இம்முடிவு களை நிறுத்தி வையுங்கள் என்று ஒரு வரியில் தெரிவித்திருப்பாரே! ஒப்புதல் வழங்கவில்லை என்று பிரதமர் இதுவரை மறுக்கவில்லை என்பதையும் செய்தி வெளியிடு பவர்கள் மறந்துவிடக்கூடாது.

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதால், உங்களை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறாரே?

ஆ.ராசா : ப்ளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு, டான்சி நில வழக்கு, தர்மபுரியில் வேளாண் மாணவிகள் எரிக்கப் பட்ட வழக்கு உள்பட பல வழக்குகளில் நீதிபதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளானவர் ஜெயலலிதா. உயர்நீதி மன்ற நீதிபதி சீனிவாசன் அவர்கள், "நாடொறும் நாடிமுறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்' என்ற வள்ளுவரின் குறளைச் சொல்லி ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதை மறக்க முடியாது. நிறைந்த நீதிமன்றத்தில் தான் போட்ட கையெழுத்தை தன்னுடையது இல்லை என்று சொன்ன நாணயப் புத்திகொண்ட டான்சி, கொடநாடு, சிறுதாவூர் புகழ் ஜெயலலிதாவுக்கு தொலைத்தொடர்பில் கிராமப்புறங்களுக்கு அதிக சேவையும் நுகர்வோருக்கு கட்டணக்குறைப்பும் வழங்க வேண்டும் என்றும் எடுக் கப்பட்ட நல்ல முடிவுகளைப் பற்றிப் பேசுவதற்கும், என்னைப் பதவி விலகச் சொல்வதற்கும் என்ன யோக்கியதை இருக்கிறது?




சிங்களப்படத்தில் நான் நடிக்கவில்லை:சூர்யா மறுப்பு கடிதம்


Thursday, November 5, 2009

மோகன் சேர்த்த சொத்து!


""எம்.பியோட கார் எங்கே நிக்குது?''""காரெல்லாம் கிடையாது. எம்.80 ஸ்கூட்டர்தான் எங்க எம்.பியோட வாகனம். பங்களாவோ தனி வீடோ கூட அவருக்கு கிடையாது. ஹவுசிங் போர்டு வீடுதான்.''-10 வருடம் தொடர்ந்து எம்.பியாக இருந்த ஒருவருக்கு பங்களாவோ காரோ இல்லை என்பது அரசியல் அதிசயம். மதுரை தொகுதி மக்களுக்கு அது பெருமிதம். அந்த பெருமிதத்திற்குக் காரணமான, சி.பி.எம் கட்சியின் முன்னாள் எம்.பி. மோகனின் மறைவு மதுரையில் கட்சி கடந்த கண்ணீரை வரவழைத்துவிட்டது.அல்சர் நோயினால் பாதிக்கப்பட்டு, கடந்த சில காலமாகவே சிகிச்சை பெற்று வந்தார் மோகன். கடந்த எம்.பி தேர்தலில் அந்த நோயுடனேயே களம் கண்டார். அல்சர் அதிகமான நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவ மனை யில் அனுமதிக்கப்பட்ட மோக னின் உயிர், தேவர் குருபூஜை தினமான அக் டோபர் 30-ந் தேதி பிரிந்தது. முதல்வர் கலைஞர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு, மோகனின் இழப்பு குறித்து உருக்கமுடன் கருத்து தெரிவித்தார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.வும் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்.""தோழருக்கு அதுதாங்க சிறப்பு. அவரோட கட்சி சி.பி.எம். ஆனா, எல்லா கட்சித் தலைவர்கள்கிட்டேயும் தொண்டர் கள்கிட்டேயும் மதிப்பு உண்டு. அவரது ஜாதி, பிரமலைக்கள்ளர். ஆனா, எல்லா சமுதாயத்தினர்கிட்டேயும் சரிசமமா பழகுவார். மக்கள் நலன்தான் அவருக்கு முக்கியம். சொந்த விஷயங்கள் இரண்டாம் பட்சம்தான்'' என்கிற மதுரை சி.பி.எம் காரர்கள் ஒரு சம்பவத்தையும் விளக் கினார்கள்.""மோகனின் மனைவி பூங்காவனம் பள்ளி ஆசிரியை. அவர் விழுப்புரம் நகராட்சி பள்ளி ஒன்றில் வேலை பார்த்துவந்தார். மோகனோ மதுரை எம்.பி.யாகிவிட்டார். இரண்டுபேரும் ஒரே இடத்தில் இருந்தால் நல்லா இருக்கும்னு குடும்பத்தினர் நினைச் சாங்க. ""முறைப்படி எப்போது மாறுதல் கிடைக்குமோ அப்ப மதுரைக்கு வரட்டும். நான் சிபாரிசு செய்ய மாட்டேன். மக்களுக் காகத்தான் நான் எம்.பி. யாகியிருக்கேன். மனைவிக்காக அல்லன்னு மோகன் சொல்லிட் டார். மனைவி வேறு மாவட் டத்தில் இருந்ததால் ஓட்டல் சாப்பாடுதான். சில நேரங்களில் அவரே சமைப்பார். பிள்ளை களுக்கும் அவர் சமையல்தான். சாப்பாட்டு விஷயத்தில் கவனம் இல்லாமல் இருந்ததால் ஏற்பட்ட அல்சர்தான் இன்னைக்கு அவர் உயிரையே பறிச்சிடிச்சி'' என்று வேதனையோடு சொன்னார்கள் தோழர்கள்.அ.தி.மு.க கூட்டணியில் 1999-லும் தி.மு.ககூட்டணியில் 2004-லும் எம்.பியானார் மோகன். 2009 தேர்தலில் மதுரையில் அழகிரி போட்டியிடுகிறார் என் றதுமே அ.தி.மு.கவினர் பலரும் ஒதுங்கிக்கொள்ளத் தொடங் கினர். தொகுதி சி.பி.எம்.முக்கு ஒதுக்கப்பட, மோகன்தான் அழகிரியை எதிர்க்க சரியானவர் என போயஸ் கார்டனிலிருந்தே தெரிவிக்கப்பட்டது. எளிமை தான் மோகனின் பலம்.எம்.80 வாகனத்தில் காலையில் கிளம்பினால் கட்சி யினர், பொதுமக்கள் ஆகியோரை சந்தித்துப் பேசி, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்பார். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பேசி, தொகுதிக்கு வேண்டியதை செய்து தருவது மோகனின் வழக்கமாக இருந்தது. கூட்டணி மாறுபட்டிருந்த நேரத்திலும் கலைஞரிடம் பேசி, மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்தார். உத்தபுரத்திற்கு பிருந்தாகாரத் வந்தபோது போலீசுடன் பிரச்சினை ஏற்பட, அதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுசென்று நிலைமையை சுமுகமாக்கியவர் மோகன்தான்.மதுரையில் அவரது உடலுக்கு ப.சிதம்பரம், மு.க.அழகிரி உள்ளிட்ட பெருந்தலைகளும் கட்சித் தோழர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில், கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்தார் பாப்பா பட்டி ஊராட்சித் தலைவர் பாலுசாமி. சாதி ஆதிக்கத்தால் 10 வருடமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாமல் இருந்த தலித் ஊராட்சிகளான பாப்பா பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்துக்கு 2006-ல் தேர்தல் நடத்த ஆட்சியாளர்களுடனும் அப்போதைய மாவட்ட கலெக்டர் உதயச்சந்திரனுடனும் தோளோடு தோள் நின்று பணியாற்றி, அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதில் முக்கிய பங்கு மோகனுக்கு உண்டு.அந்த நினைவலைகளே கண்ணீராகப் பெருகியதால் உணர்ச்சிபொங்க நம்மிடம் பேசினார் பாலுசாமி. ""முக்குலத்தோர் நிறைந்துள்ள பகுதியில் ஒரு தலித் ஊராட்சித் தலைவரா நான் இருக்கிறேன்னா, என்னை அந்த பதவி யில் உட்கார வைத்த பெருமை கலைஞருக்கும் மோகனுக் கும்தான். தன்னோட சாதி அடையாளத்தை தோழர் மோகன் எங்கேயுமே வெளிப்படுத்தியதில்லை. சாதாரண வட்டச்செயலாளர்கூட ஸ்கார்ப்பியோ காரில் பவனி வருகிற காலத்தில், 10 வருசம் எம்.பி.யா இருந்தவர் எம்.80யிலே தொகுதியை சுற்றி சுற்றி வந்ததை நாங்க பார்த்தோம். எங்க எம்.80 எம்.பி போல ஏழேழு ஜென்மத்துக்கும் இன்னொரு எளிமையான எம்.பி.யை பார்க்க முடியுமான்னு தெரியலீங்க. அவர் எங்களைவிட்டு தற் காலிகமா பிரிஞ்சிருக்கிறதாகத்தான் நினைக்கிறோம். எங்க நெஞ்சில் அவர் நிரந்தரமா இருக்காரு'' என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.மோகன்-பூங்காவனம் தம்பதியருக்கு 5 பிள்ளைகள். நேர்மையும் மக்கள் செல்வாக்கும்தான் தங்களின் அப்பா சேர்த்து வைத்துள்ள சொத்து என்பதை மோகனின் குடும்பம் பெருமையோடு நினைக்கிறது. இறுதி ஊர்வலத்திலும் அது வெளிப்பட்டது. மதுரையில் பி.டி.ஆர். மறைவுக்கு 50ஆயிரம் பேர் திரண்டனர். அதன்பிறகு, மோகனுடைய இறுதி ஊர்வலத்தில்தான் பொதுமக்கள் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்டதைப் பார்க்க முடிந்தது. கட்சியின் செங்கொடி, தோழர்களின் வீரவணக்கம், மக்களின் கண்ணீர் இவற்றிற்கிடையே தன் கடைசிப் பயணத்தை மேற்கொண்டார் முன்னாள் எம்.பி. மோகன்.நேர்மையும் எளிமையுமான அரசியல்வாதியை சுமந்து சென்ற அந்த எம்.80 வாகனம் , இனி இப்படிப்பட்ட ஒருவர் தன் மீது சவாரி செய்வாரா என்ற ஏக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது.

ஆண் நர்ஸ்களுக்கு ஆட்டம்!


"டிப்ளமோ நர்ஸிங் படிப்பில் ஆண்களுக்கு இடமில்லை. அரசு மருத்துவமனைகளிலும் ஆண் நர்ஸுகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை'- என தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அரசாணை செல்லும் என்று... அழுத்தமாய்த் தீர்ப்பளித்து... ஆண் நர்சுகள் தரப்பை அண்மையில் அதிர வைத்திருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம். நர்ஸிங்கில் ஆண்களுக்கு மட்டும் இந்த தடை ஏன்? தமிழக அரசு நர்ஸுகள் சங்கச் செயலாளரான லீலாவதியோ...’’""நர்ஸிங் கோர்ஸில் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லை என்பது நர்ஸிங் கவுன்சிலின் விதிமுறை. என்றபோதும்... மகப்பேறு பயிற்சியை முடித் தவர்களுக்குத்தான் நர்ஸிங் பட்டம் கொடுக்கவேண்டும் என்கிறது சட்டம். ஆண் நர்ஸுகளுக்கு மகப்பேறு பயிற்சியை எப்படி அளிக்கமுடியும்? பிரசவமான பெண்களின் பக்கத்திலேயே இருந்து அவர்களைப் பராமரிக்கும் நர்ஸ் வேலையை ஆண்களால் செய்ய முடியுமா? இந்த சேவையைச் செய்ய ஆண் நர்ஸுகள் முன்வந்தாலும் அதைப் பெண் நோயாளிகள் ஏற்றுக் கொள்வார்களா? இதையெல்லாம் உத்தேசித்து தான் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது அரசு'' என்றார் அவர் தரப்பு வாதமாய். ""அப்படியெனில்... நர்ஸிங் பட்டப் படிப்பை முடித்த ஆண்களுக்கு மட்டும் இந்தத் தடை இல்லையே அது ஏன்?'' என்றோம் அவரி டமே. லீலாவதியோ ""நர்ஸிங் பட்டப்படிப்பில் குறைந்த நேரமே பிராக்டிக்கல் பயிற்சி. டிப்ளமா கோர்ஸிலோ... பெரும்பாலான நேரம் வார்டுகளிலேயே பிராக்டிகல்'' பயிற்சி’’என்றார் கூலாக.ஆண் நர்ஸுகளோ ""இது பாரபட்சமான உத்தரவு. பிரைவேட் மருத்துவமனைகளில் ஆண் நர்ஸுகள் வேலை பாக்கறங்களே.. அங்க மட்டும் ஆண் நர்ஸுகளை பெண் நோயாளிகள் விரும்புவாங்களா? எங்களை ஒதுக்கும் அவர்கள்... ஈ.சி.ஜி. லேப்கள்ல மட்டும் எப்படி ஆண் பணியாளர் களை ஒத்துக்கறாங்க. பெண்ணாக இருந்தாலும் அங்க முழுசா மேலாடை களைக் கழற்ற வேண்டி வருமே. இன்னைக்கு புகழ் பெற்ற மகப்பேறு மருத் துவர்கள் எல்லாம் ஆண் கள்தான். அப்படி இருக்க எங்களை மட்டும் இப்படி ஓரம் கட்டலாமா?''’என் கிறார்கள் ஆதங்கமாய்.இது குறித்து தமிழ் நாடு நர்ஸிங் துறை இணை இயக்குநர் சரோஜினியிடம் கேட்டபோது “""2045-ஆம் ஆண்டுவரை போதுமான ஆண் நர்ஸுகள் இருக்காங்க. அதுக்கு மேல விபரங்கள் வேணும்னா... அதான் இருக் கவே இருக்கே தகவல் அறி யும் உரிமை சட்டம். அதுல கேட்டுக்கங்க''’என்றார் எரிச்சலாய்.சுகாதாரத்துறை செய லாளரான சுப்புராஜோ ""“ஆண் நர்ஸுகளின் தேவை குறைந்து விட்டதால்... நர்ஸிங் பட்டப்படிப்பிலும் ஆண்களுக்கு தடைவிதிக் கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறோம்''’என்கிறார் அதிரடியாய். இது.. ஆண் களை ஆட்டம் காணவைக் கும் காலம் போலிருக்கிறது.

திரைக்கூத்து!

நமீதாவுக்காக துடிக்கும் போலீஸ் அதிகாரி!

கவர்ச்சியை நம்ம டைரக்டர்கள் கையாளுவதற்கும், மலையாள டைரக் டர்கள் கையாளுவதற்கும் "பெரிய' வித்தியாசம் உண்டு. ஷகீலாவையே பிரமாண்டப்படுத்தியவர்கள் நமீதா கிடைத்தால் விடு வார்களா? இரட்டை இயக் குநர்களான பிரமோத்- பப்பன் "நில் கவனி என்னை காதலி' என்கிற படத்தை தமிழில் எடுத்து வருகிறார்கள். நமீதாவை அடைய துடிக்கும் ஒரு அடாவடி போலீஸ் அதிகாரி... அவரிடமிருந்து நமீதா தப் பித்தாரா? என்கிற கதையாம். கேட்கவா வேணும்.... நமீதாவை விதவிதமா படம் புடுச்சுக்கிட்டிருக் காங்க.

கௌப்பி விடுறாங்கண்ணே!

வீக் எண்ட் பார்ட்டியை வீட்டிலேயே கொண் டாடிவிடுகிறார் பாடலாசிரியர் சிநேகன். பார்ட்டியில் அவருக்கு சிநேகிதியாக வருவது நடிகை சுவாதி (பழைய சுவாதி) என கிசுகிசுக்கள் கிறங்கடிக்கிறது கோலிவுட்டில். ‘"அண்ணே... வீட்ல பொண்ணு பாத்துக்கிட்டு இருக்க நேரத்துல இப்படி அபாண்டமா கௌப்பி விடுறாங் கண்ணே...' கேட்கிறவர்களிடம் தன்னிலை விளக்கம் தர்றார் சிநேகன்.

அனுஷ்கா ஃபீலிங்!

தனக்கும் கோலிவுட்டுக்கும் சரியா ஒர்க்-அவுட் ஆகலியோ என ஃபீல் ஆகிறார் அனுஷ்கா! காரணம்.... சில வருடங்களுக்கு முன் அம்மணி கோலிவுட்டில் அறிமுகமான ‘"ரெண்டு' படம் சுமாராகத்தான் போனது! இப்போது விஜய்யுடன் நடித்திருக்கும் வேட்டைக்காரன் ரிலீஸாவதில் ஏகப்பட்ட தடங்கல். இதுதான் ஃபீலிங்கிற்கு காரணம்.

மீண்டும் பாக்யராஜ்!

"முந்தானை முடிச்சு', "தாவணிக் கனவுகள்' பட சமயங்களில் என் அப்பா எப்படி பரபரப்பாக இருந் தாரோ.. அதேபோல மீண்டும் அவரை பரபரப்பானவராக ஆக்குவேன்' என சாந்தனு உணர்ச்சிவசப்பட... மகனை ஆசு வாசப்படுத்திய பாக்யராஜ், "ஃபைனான்ஸ் பிரச்சனைகளால்தான் எனக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டது. படைப்பு ரீதியாக அல்ல. மறுபடியும் என் இடத்தை பிடிப்பேன்' என்றார். இந்த உணர்ச்சிமயம் நிகழ்ந்த இடம் "சித்து +2' படத்தின் ஆடியோ விழா. மகனை வைத்து பாக்யராஜ் இயக்கியிருக்கும் இந்தப்படம் பிரமாதமாக வந்திருப்பதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். திரைக் கதை மன்னன் என பெய ரெடுத்த பாக்யராஜ் சோடை போவாரா என்ன?

அப்படியா?

நிமோனியா காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி 1-ந் தேதியன்று சென்னையில் நடந்தது! இதில் சீப்-கெஸ்ட்டாக ஜட்டிப் பேச்சு காமெடி நடிகர் கலந்து கொண்டார். அவரை பார்த்ததும் செய்தி சேகரிக்க வந்த நிருபர்களும், புகைப்படக் கலைஞர்களும் ‘"காமெடி நடிகர் இருந்தா நாங்க நிகழ்ச்சியை கவரேஜ் செய்யமாட்டோம்' என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொல்லி விட்டார்கள். இதையடுத்து சோர்ந்துபோன முகத்துடன் வெளியேறினார் காமெடியர்.

பழகலாம் வாங்க! வீடியோ...!

"உட்காந்து யோசிப்பாய்ங்களோ' என்று வடிவேலு சொல்வது போலத் தான் சிலரது செயல்பாடுகள் இருக் கின்றன. கரூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற சுரேந்திரனுக்கு தொழில் என்னவோ வீடியோகடை தான். ஆனால், அவரும் அவர் கடையில் வேலை பார்க்கும் முத்துக்குமாரும் சேர்ந்து "நுகர்வோர் அமைப்பு மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கம்' என ஊரில் அடை யாளம் காட்டிக்கொண்டனர். வீடியோ கடைக்கு வந்து போகும் வடக்கு காந்திபுரத்தைச் சேர்ந்த 25 வயது பிரியாவுடன் இவர்களுக்கு நட்பு வளர்ந்தது.தனக்குப் பணம் தேவைப்படுவதாக சுரேந் திரனிடம் பிரியா சொல்லியிருக்கிறார். ""வட்டி வியாபாரம் செய்யும் மளிகைக்கடைக்காரர் மோகன்ராஜூக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன். அந்த ஆளு ஒரு சபலிஸ்ட்டு. சரி பண்ணிக்க. எங்க வீடியோ வேலையை நாங்க காட்டுறோம். அப்புறம் நீ கேட்குற நேர மெல்லாம் பணம் கிடைக்கும். நாம ஷேர் பண்ணிக்கலாம் '' என்று பிரியா வுக்கு ஐடியா கொடுத்தார் சுரேந்திரன்.சொன்னபடியே மோகன்ராஜின் அறிமுகம் பிரியாவுக்குக் கிடைத்தது. ""தீபா வளிக்கு ஜாலியா பழனிக்குப் போகலாமா'' என்று பிரியா கேட்க, போகலாமே என்றார் மோகன்ராஜூ ஜொள்ளு வடிய. பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் பக்கம் பக்கமாக 2 ரூம்களை ஏற்கனவே புக் செய்திருந்தார் கள் சுரேந்திரனும் முத்துக்குமாரும். ஒரு ரூமில் மோகன்ராஜூ-பிரியா ஜோடி நுழைய, இன்னொரு ரூமில் வீடியோ கேமராவை செட் பண்ணி வைத்தது -சுரேந்திரன் முத்துக்குமார் டீம். உச்சகட்ட நேரத்தில், ""மனசு சரியில்லே.. இந்த ரூம் வேணாம். ..அடுத்த ரூமுக்குப் போகலாம்'' என பிரியா சொல்ல, மோகன்ராஜூம் சம்மதித்தார். பழனிக்குப் போய்விட்டுத் திரும்பி, இரண்டு நாள் கழித்து மோகன்ராஜூக்கு மர்ம டெலிபோன் வந்தது. ""லாட்ஜ்ல நீயும் ...ம் இருந்த கோலத்தை பார்க்குறியா? 1 லட்சம் கொடு. இல்லேன்னா ஊரே பார்க்கும்படி செஞ்சிடு வோம். வீடியோ ஆதாரம் இருக்குது'' என்று மிரட் டியது டெலிபோன் குரல். திரும்பத் திரும்ப இப்படி மிரட்டல் வந்தால் என்ன செய்வது என கரூர் டி.எஸ்.பி யிடம் போய் உண்மையை சொன்னார் மோகன்ராஜூ.காக்கிகள் ஐடியாபடி, 1 லட்சம் தருவதாகச் சொல்லி சுரேந்திரன்-முத்துக்குமார் டீமை வரச் சொன்னார் மோகன்ராஜூ. ஆசையோடு வந்தவர்களை, அமுக்கிப்பிடித்தது மறைந்திருந்த போலீஸ். ஆபாச வீடியோ என்று கேஸில் பதிவானால் தன் இமேஜ் டேமேஜாகும் என்று மளிகைக்கடைக்காரர் பயந்ததால், பணம் கேட்டு மிரட்டியதாக மட்டும் வழக்குபோட்டு மனித உரிமை ஆசாமிகளை உள்ளே தள்ளியிருக்கிறது காவல்துறை. மனிதஉரிமை-நுகர் வோர் அமைப்பு என்ற பெயரில் ஏற்கனவே பலரிடம் இப்படி ஆட்டையைப் போட்டிருக்கும் இந்த இந்த இருவர் டீம் சிறைக்குள் என்ன புது ஐடியாவை யோசித்துக் கொண்டிருக் கிறதோ!

கலைஞருக்கு அமைச்சர் எழுதிய கண்ணீர் கடிதம்!

""ஹலோ தலைவரே... நடிகர் சங்கத்தில் போன 30-ந் தேதியன்னைக்கு செயற்குழு கூட்டம் நடந்தது.''
""மாதாமாதம் வழக்கமா நடக்குறதுதானே...
""இந்த மாத செயற்குழுவின் முக்கிய நோக்கமே, வாய்க்கொழுப்பு நடிகர்-நடிகைகள் மேலே ஊர் ஊருக்குப் பத்திரிகையாளர்கள் போட்டு ருக்கிற கிரிமினல் வழக்குகளை எப்படி சமாளிக்கிறதுங்கிறதுதான். நடிகை ஸ்ரீப்ரியா தன் பங்காக 1 லட்ச ரூபாய் தர்றேன்னு சொல்ல, மீதித் தொகை பற்றி பேச்சு வந்திருக்குது. அப்ப நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், ஏற்கனவே வழக்கு செலவை ஏற்றுக்கொள்வதா உத்தரவாதம் கொடுத்த சூர்யா, மிச்சப் பணத்தைத் தர ஒத்துக்கொண்டு விட்டார்னு சொல்லியிருக்கிறார். கமலின் திரையுலக 50-ஆம் ஆண்டுக்காக விஜய் டி.வி. நடத்திய பிரம்மாண்ட விழாவுக்கு நடிகர் சங்கத்துக்கு ஒரு இன்வி டேஷன்கூட கொடுக்காத நிலையில் நடிகர் சங்கம் சார்பில் நீங்க எப்படி அதில் கலந்துக்கலாம்னு சரத்குமாரிடம் சக நடிகர்-நடிகைகள் கேட்க, தப்புதான்னு சொல்லி மன்னிப்பு கேட்டி ருக்கிறார் சரத். இதற்கிடையில், நடிகர் விஜயகுமார் நானும் சினிமாவுக்கு வந்து 50 வருசமாச்சு. எனக்கு ஏன் விழா எடுக்கலைன்னு கோபப்பட்டி ருக்கிறார்.''

""குணசித்திர நடிகரான விஜயகுமாருக்கு காமெடிகூட நல்லா வருதே!''
""நடிகர் சங்கத்தில் கிளம் பிய எல்லாக் கேள்விகளையும் சமாளித்த சரத்துக்கு நெல்லையில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திலும் கட்சி நிர்வாகிகள் கிட்டேயிருந்து சரமாரியான கேள்விகள். எல்லாவற்றையும் சமாளித்துப் பதில் சொல்லி சமாதானப் படுத்திட்டார். கூட்டம் முடிந்து வரும்போது நம்மகிட்டே, கோடிகோடியா செலவு பண்ணி அரசியல் நடத்த முடியாது. கூட்டணி அரசியல்தான்னு காதை கடிச்சிட்டுப் போனார்.''
""வீட்டு வசதி வாரியத்துக் குச் சொந்தமான இடத்தை சீனியர் அமைச்சர் துரை முருகன் விதிகளுக்குப் புறம்பா தன்னோட குடும்பத்தாரோட பெயரில் வாங்கி யிருப்பதை யும் இது முதல்வருக்குத் தெரிந்து கண்டித்ததோடு, நிலத்தை திருப்பிக்கொடுக்கவும் உத்தரவிட்டாருன்னு நாம பேசியிருந்தோம். நிலத்தை அரசாங்கத்திடமே ஒப்படைச்சிட்டாராமே துரைமுருகன்.''""தன் குடும்பத்தார் பெயரில் வாங்கிய நிலங்களை மட்டும்தான் துரைமுருகன் திருப்பிக் கொடுத்திருக் காருன்னும் மற்றவங்க பெயரில் வாங்கிய நிலங்களை கொடுக்கலைன்னும் முதல்வருக்கு மறுபடியும் புகார் போயிருக்குது. டென்ஷனான கலைஞர் உடனே மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகனை வரச்சொல்லிவிட்டார். அவர்கிட்டே, இனி துரைமுருகன் அதிகம் என்னை பார்க்க வரவேணாம்னு நீங்களே சொல்லிடுங்கன்னு சொல்லி அனுப்பியிருக்கிறார். இதை ஜெகத் போய் சொன்னதும் நொந்துபோன துரைமுருகன், உன்னை தலைவர்கிட்டே அறி முகப்படுத்தி சீட் வாங்கிக் கொடுத்ததே நான்தான். என்கிட்டே நீயே வந்து தலை வரைப் பார்க்க வரவேண் டாம்னு செய்தி சொல் றே.. நேருவை மா.செ. வாக்க சிபாரிசு செய் தவரே கோ.சி.மணி தான். அவரை மா.செ. பதவியிலிருந்து ஒதுங் கிக்கும்படி நேரு மூலமே சொல்லி அனுப்பினார் ஸ்டாலின். நிலைமை எப்படி இருக்குது பார்த்தியான்னு கண் கலங்கி, அந்தக் கண்ணீரோடே கலைஞருக்கு கடிதமும் எழுதி யிருக்கிறார் துரைமுருகன்.
""என்ன எழுதியிருக் காராம்?''
""ரொம்ப உருக்கமா ஆரம்பித்திருக்கும் துரைமுருகன், என்னோட மந்திரி பதவியை வேண்டும்னாலும் எடுத்துக் குங்க. பார்க்க வரவேண்டாம்னு மட்டும் சொல் லிடாதீங்க. நான் உயிரோட இருக்கவே மாட்டேன்னு எழுதி யிருக்காராம். கடி தத்தைப் படிச்ச கலைஞர், அதைப் பற்றி யோ சித்துக்கிட்டிருக்கும்போது, பா.ம.க நிறுவனர் ராமதாஸின் பேட்டி ஒன்றை தமிழ் ஓசை பத்திரிகையில் படித் திருக்கிறார். அதில், துரைமுருகன் சட்டம் படித்த அறிவாளி. பொதுப்பணித்துறையை இரண்டாகப் பிரிப்பதா செய்திகள் வருது. அதை அவருக்குத் தரணும்னு ராமதாஸ் சொல்லியிருந்தார். இது கலைஞரின் கவ னத்துக்குப் போனதையறிந்த துரை முருகன், என்னய்யா இந்த டாக்டரு.. நம்மை புகழுற மாதிரி பேசி, வெடிகுண்டை வீசி காலி பண்ணிட்டாரேன்னு இன்னமும் நொந்து போயிட்டாராம். தமி ழகத்தில் எங்கெங்கே அகதி முகாம் இருக்கு தோ அந்த மாவட்ட அமைச்சர்களை யெல்லாம் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்திய முதல்வர், வேலூரில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான முகாம் இருந்தும் அந்த மாவட்ட மந்திரியான துரைமுருகனை இந்த கூட்டத்துக்கு அழைக் கலை.''""துரைமுருகனுக்கு கலைஞர் கொடுத்து வரும் ஷாக், மற்ற மந்திரிகளையும் அதிர வைத்திருக்குமே?''""சீனியர் மந்திரிகளின் பி.ஏ.க்களும் அரசாங்க காரைப் பயன்படுத்துவதோடு, மந்திரிகளின் வீட்டிலும் அரசாங்க கார் பயன்படுத்துறது வழக்கம். ஒரு சீனியர் மந்திரி தன்னோட பி.ஏக்கள் பயன்படுத்திய கார்களையும் வீட்டில் ஓடிக்கிட்டிருந்த காரையும் திருப்பி அனுப்பிச்சிட்டாரு. ஏற்கனவே, மரங்கள் நிறைந்திருக்கிற டிபார்ட்மென்ட்டின் மந்திரி 3 கார்களை பயன்படுத்துறதோடு, அரசாங்க கெஸ்ட் ஹவுசில் தன் குடும்பத்தினரை மாதக் கணக்கில் தங்க வைத்திருக்கிறாருன்னு முதல்வருக்குத் தெரியவந்து சத்தம்போட, அந்த மந்திரி கார்களைத் திருப்பிக்கொடுத்து, கெஸ்ட் ஹவுஸை காலி பண்ணினார். சிக்கன நடவடிக்கையை முதல்வர் விரும்புறார்னு தெரிஞ்ச சீனியர் மந்திரி, கார்களை திருப்பி அனுப்ப, மற்ற மந்திரிகளும் அவர் வழியில் செயல்பட ரெடியாயிட்டாங்க.''""பயத்திலாவது நல்லது நடக் கட்டும்.''""பொதுப்பணித்துறையை இரண்டா பிரித்து கட்டிடங்களுக்கு ஒரு துறையும், நீர்ப்பாசனத்திற்கு ஒரு துறையும் உருவாக்கப்படுது. அதில் ஒன்று அழகிரி சிபாரிசு செய்யும் ஐ.பெரியசாமி அல்லது பெரியகருப்பன் இருவரில் ஒருவருக்கும், இன்னொன்று ஸ்டாலின் சிபாரிசு செய்யும் நேருவுக்கும் கிடைக்கும்னு கோட்டை வட்டாரத்தில் பேச்சு.''""திருப்பதிக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்பட்டிருக்குதே... தன்னுடைய போர்க் குற்றங்களும், மனிதப் படுகொலைகளும் அம்பலத்துக்கு வரக்கூடாதுன்னுதான் திருப்பதி வெங்கடாஜலபதிகிட்டே ராஜபக்சே வேண்டிக்கிட்டாரோ!''""நேபாளத் தலை நகர் காட் மாண்டிலிருந்து திருப்பதி கோயிலுக்கு 81 பேரோடு வந்த ராஜபக்சேவுக்கு ஆந்திரா மந்திரி கல்லா அருணா குமாரி ரேணிகுண்டா வில் மாலை போட்டு வரவேற்பு கொடுத்தார். அங்கிருந்தே கிட்டத் தட்ட ராணுவ அணிவகுப்பு மாதிரிதான் மரியாதை. திருப்பதிக்கு நுழையுற செக்போஸ்ட்டிலிருந்து கோயில் வரைக்கும் எந்த வாகன நட மாட்டமும் இல்லை. காத்துக்கிடந்த பக்தர்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கலை. கோயில் அர்ச்சகர் களுக்கு 50ஆயிரம் ரூபாய் தட்சணையும் உண்டியலில் 1 லட்ச ரூபாயும் போட்டு சாமி கும்பிட்டார் ராஜபக்சே. அவரும் அவரோட பரிவார மும் திருப்பதி மலையிலிருந்து திரும்ப 5 மணிநேரம் எடுத்துக்கிட்டதால அதுக் கப்புறம்தான் பக்தர்களால் பகவானை சேவிக்க முடிந்தது. மதியம் 3 மணியிலிருந்து காத்திருந்த பக்தர்கள் நைட்டு 11 மணிக்குத்தான் சாமி கும்பிட்டாங்க. 3 மணிக்கு பிறகு க்யூவில் காத்திருந்த பக்தர்கள், சன்னதியை நெருங்க நள்ளிரவாயிடிச்சி. நடை பூட்டப்பட்டதால் மறுநாள் காலை வரையிலும் காத்திருந்து சாமி கும்பிட்டாங்க.''""தமிழர்களை முள்வேலிக்குள் அடைத்து வச்ச ராஜபச்சே, திருப்பதி பக்தர்களையும் கம்பி போட்ட க்யூவுக்குள் அடைச்சு வச்சிட்டாரா?''""அவர் இங்கே வந்திருந்த நாளில் கொழும்பு பம்பலப்பட்டியில் தமிழ் இளைஞரான சிவக்குமாரனை சிலர் வம்புக்கிழுக்க, அவர் பதிலுக்கு கல் வீசினார். அது சாலையில் சென்ற சிலர் மீது பட்டுவிட்டது. உடனே சிவ குமாரனை பைத்தியம்னு பட்டம்கட்டி போலீஸ் விரட்ட, அவர் கடல்பகுதிக்குப் போனார். அவரை போலீசும் சிங்களவர்களும் சேர்ந்து கடலி லேயே அடிச்சுக் கொன்னுட்டாங்க. அந்த இளைஞர் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சி யும் மனமிரங்காமல் சிங்கள போலீசார் ஈவிரக்கமின்றி கொன்றது வீடியோவில் பதிவாகியிருக்கு. சிங்களப் போலீசாரின் இந்த காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து கொழும்பு தமிழ் எம்.பி. மனோகணேசன் போராட் டங்களை முன்னெடுத்திருக்கிறார்.''""தமிழக போலீசாரெல்லாம் மக்களின் உயிரையும் உடைமையையும் காப்பாற்றுவதற் காக கடமையாற்றுவதா முதல்வர் பாராட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே..''""அந்த அறிக்கையை பெருசு பெருசா ஜெராக்ஸ் போட்டு எல்லா போலீஸ் ஸ்டேஷனிலும் ஒட்டிவைத்திருக்காங்க. எல்லாக் காவலர்களும் அதைப் படிக்கணும்னு சொல்லப்பட்டிருக்குங்க தலைவரே..''""நள்ளிரவில் கலைஞரை கைது செய்த போலீஸ் அதிகாரிகள், பொய் வழக்குப் போட்ட போலீஸ்காரர்கள், பத்திரிகை ஆசிரியர் மீது பொடாவை ஏவிய காவல்துறை அதிகாரிகள் இவங்களும் இந்த அறிக்கையை ஒட்டி வச்சிருக்காங்களா?''

தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களின் அடிப்படைத் தேவைக் காக 12 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருப்பதுடன், அகதி முகாம் களை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு முதல்வரிடம் அறிக்கை அளிக்கும் பணியும் வேகமெடுத்திருக்கிறது. இதற்காக நடந்த அமைச்சர்கள்-அதிகாரிகள் கூட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேசும்போது, அகதிகள்.. அகதிகள்.. என்று மூச்சுக்குமூச்சு சொல்ல.. முதல்வர் குறுக்கிட்டு, ""என்ன அகதிகள்? இலங்கைத் தமிழர்கள்னு சொல்லுங்க'' என்றதும், அமைச்சர் திருத்திக்கொண்டார்.மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, குடும்பத்தினருடன் இந்தோ னேஷியா நாட்டிற்குப் பயணம் செல்கிறார்.இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் நடத்தியதுபோல காங் கிரஸ் இயக்கத்திற்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்து தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப் பட்டுள்ளதால் வரும் 10-ந் தேதி முதல் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் இதற்கான பணியில் ஈடுபடவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் சோனியா.தேடப்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா ஊட்டி, கொடைக் கானல்களில் எஸ்டேட்டு களும், கோவை பகுதியில் பங்களாக்களும், ஈரோடு பகுதியில் தோட்டங்களும் வாங்கிப் போட்டிருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் சி.பி.சி.ஐ.டியினர். இவற்றில் பெரும்பாலானவை அவரது இரண்டாவது மனைவி உமா மற்றும் உமாவின் உறவினர்கள் பெயர்களில் பதிவாகியுள்ளதாம்.கப்பல் போக்குவரத்து துறை திருப்திகரமாக இல்லாததாலும் நிறைய பிரஷர்கள் வருவதாலும் ஜி.கே.வாசன் வேறு துறையை விரும்புகிறார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. வாசனோ தனக்கு நெருக்கமானவர்களிடம், ஏற்கனவே பல போஸ்டிங்குகள் போடப்பட்டிருக்கின்றன. மாற்றங்கள் செய்தால் கலைஞர் வருத்தப்படுவார். அதனால் நான் எதுவும் செய்வதில்லை என்றிருக்கிறார். இதனிடையே, மாநிலத்தலைவர் பதவியை வாசனுக்கு கொடுத்துவிட்டு, அமைச்சர் பதவியை எடுத்துக்கொள்ள மேலிடம் தீர்மானித்திருப்பதாக செய்திகள் கசிய, அப்படி எந்தத் தகவலும் மேலிடத்திலிருந்து வரலையே என்கிறது வாசன் தரப்பு.நவம்பர் 6-ந் தேதி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலைஞரும் சரத்பவாரும் கலந்துகொள்கிறார்கள். அப்போது கலைஞருக்கு கருப்புக் கொடி காட்ட அ.தி.மு.க ஆதரவு பெற்ற விவசாய சங்கங்கள் தயாராகி வருகின்றன.நவம்பர் 1-ந் தேதி மதுரையில் தி.மு.க பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தபோதும் அதற்கு முதல்நாள் (அக்டோபர் 31) அதே மதுரையில் ப.சி. ஏற்பாட்டிலான காங்கிரஸ் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி கொடுத்திருந்தது. இது தி.மு.க.வுக்கு எதிரான கூட்டம் என போலீசுக்கு யாரோ பீதியைக் கிளப்ப, காக்கிகள் குழம்பிப்போயிருந்தனர். ஒருவழியாக தி.மு.க கூட்டம் ரத்தானது. காங்கிரஸ் கூட்டமோ இந்திரா காந்தியின் நினைவுதின கூட்டமாக நடந்தது. அப்புறம்தான் காக்கிகளுக்கு நிம்மதி.




ஷகீலாவான நமீதா!












இரட்டை இயக்குநர்கள் பிரமோத்- பப்பன் இயக்கத்தில் கிச்சு ஃபிலிம்ஸ் சார்பில் ஜெகதீஷ் சந்திரன் தயாரிக்கும் "நில் கவனி என்னை காதலி' படத்தில் ஒப்பந்த மானார் நமீதா!தமிழ்- மலையாளம் என இரட்டை மொழிகளில் தயாராகும் படம் இது!ஷகீலாவுக்கே சலாம் போட்ட சேட்டன்கள் நமீதாவை விடுவார் களா?அழகான நமீதா பாலாவைக் காதலிக்க... நமீதாவின் அழகை கட்டாயக் கல்யாணம் மூலம் அடையத் துடிக்கிறார் போலீஸ் அதிகாரி கலாபவன்மணி. இந்தப் போராட்டத்தில் ஜெயித்தது யார் என்பது கதை!படத்தில் குளியல் காட்சி, படுக்கையறைக் காட்சி... என ஷகீலாவுக்கே சவால் விட்டிருக்கிறார் நமீதா









தங்கர் வாய்க்கொழுப்பு: ஜனா செம வெளுப்பு

இயக்குநர்கள் தங்கர்பச்சானும், எஸ்.பி.ஜனநாதனும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லும் அளவிற்கு சமீபத்திய விழாக்களில் ஜனநாதனையும், அவரது படங்களையும் பாராட்டி பேசினார் தங்கர்.
ஆனால் நடந்த உள் விவகாரமே வேறு.
பேராண்மை படத்தை ஜனநாதன் இயக்கிய அதே ஐங்கரன் நிறுவனத்திற்காக தங்கர் களவாடிய பொழுதுகள் இயக்கிவருகிறார். இப்படத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் நடித்துவருகிறார்கள்.
பேராண்மை படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்களிப்பு நிகழ்வு ஒன்றில் திடுதிப்பென்று உள்ளே நுழைந்த தங்கர், ‘’நான் அழையா விருந்தாளியாகத்தான் வந்திருக்கிறேன். அதற்கு காரணம். ஜனநாதன் என்கிற நல்ல இயக்குநர். சிறந்த தமிழ் படைப்பாளியை தேடிச்சென்று வாழ்த்துவதுதான் தமிழனுக்கு அழகு. அதைத்தான் நான் இப்போது செய்திருக்கிறேன்.
இப்படம் தமிழின் மிகச்சிறந்த படங்களுள் ஒன்று. விருதுகளை குவிக்கும்’’என்று வாழ்த்தி பேசினார்.
ஆனால் மேடையை விட்டி இறங்கியதும் ஐங்கரன் நிறுவனத்தாரிடம், ‘’என்னய்யா அப்படி படம் எடுத்துட்டாரு...இதெல்லாம் ஒரு படமா...இதுக்கு போய் எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம்..என்று தங்கர் சொல்ல, அது ஜனா காதுக்கு எட்டிவிட்டதாம்.
தங்கருக்கு போன் போட்ட ஜனா, ‘பேராண்மை படத்தை பற்றி உங்க அபிப்ராயம் என்ன’என்று கேட்டாராம்.
‘அதான் மேடையிலேயே சொன்னேனே..’என்று தங்கர் சொல்ல, ‘மேடையை விட்டு இறங்கியதும் என்ன சொன்னாய்’என்று கேட்டாராம் ஜனா.
மறுமுனையில் தங்கர் மவுனத்தை பதிலாக சொல்லிக்கொண்டிருக்க, ‘என் படத்தை விமர்சிக்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கு..’என்று ஜனா எகிற லைனை துண்டித்துவிட்டாராம் தங்கர்.
லைனை துண்டித்ததும் மறுபடி தொடர்பு கொள்ளவில்லையே பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த தங்கருக்கு ஷாக்காம். நேரிலேயே வந்து நின்றாராம் ஜனா.
’நாவல்களை வைத்துதானே நீ படம் எடுத்துக்கிட்டு இருக்குற..’-ஜனா.
‘அங்க மட்டும் என்னவாம். அதுதானே நடக்குது...’-தங்கர்.
‘இயற்கை,ஈ,பேராண்மை என்று ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் இது இந்த நாவல் என்று சொல்லிவிட்டுத்தான் எடுக்கிறேன்..’-ஜனா.
‘நானும் அதத்தான் செய்யுறேன். தலைகீழ் விகிதங்கள்தான் சொல்ல மறந்த கதை. நானே எழுதிய நாவல்தான் ஒன்பது ரூபாய் நோட்டு...’-தங்கர்.
‘என் படம் இயற்கை தேசிய விருது வாங்கியிருக்கு...உன் படம் அத வாங்கியிருக்கா அதுக்குள் எதுக்கு உனக்கு இப்படி வாய்க்கொழுப்பு. என்னோட மூணு படத்துலயும் நல்ல மெசேஜ் சொல்லியிருக்குறேன். அதுக்காக நான் மத்தவங்க படத்த குற்றம் சொல்லிக்கிட்டா திரியுறேன்...’’என்று ஜனா எகிறிக்கொண்டே போக, ‘இல்ல நான் வந்து..இல்ல நான் வந்து...’என்று தங்கர் மழுப்பிக்கொண்டே இருக்க சுற்றி இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தார்களாம்.

Monday, November 2, 2009

கட்சியை விட்டுப் போகாதே'' -அ.தி.மு.க.

கட்சிக்காரர்களிடமும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பை உண்டாக்கி யிருந்தது அக்டோபர் 28-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு.பொதுக்குழு போன்ற மாநிலம் முழுவது மிருந்தும் கட்சியினர் கலந்துகொள்ளும் விழாக் களின்போது ஜெ.வை வரவேற்று தலைமைக் கழகம், இளைஞரணி, மகளிரணி போன்ற அமைப்புகளின் தலைவர்கள் பேனர்கள் வைப்பது வழக்கம். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜெ. கலந்துகொண்ட முதல் பொதுக்கூட்டமான ஆண்டிப்பட்டி பொதுக் கூட்டத்திற்குக் கூட தமிழகத்தின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் விளம்பர தட்டிகள் வைத்து ஜெ.வை வரவேற்றார்கள்.இந்த பொதுக்குழுவுக்காக அமைக்கப் பட்ட விளம்பர பேனர்கள் பெரும்பான்மை யானவை திருவள்ளூர் மாவட்டத்திற்கு இளை ஞர்கள், இளம்பெண்கள் பாசறை துவக்க விழாவுக் காக ஜெ. படத்துடன் டாக்டர் வெங்கடேஷை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள்தான்.செயற்குழு கூட்டம் நடந்த வானகரம் ஸ்ரீவாரு திருமண அரங்கில் இருந்த ஒரு ர.ர., ""இதப்பாருங்க சார் என ஒரு இருக்கையில் எழுதப்பட்ட வாசகத்தை நம்மிடம் சுட்டிக் காட்டினார். "திருமதி ஜெனிபர் சந்திரன்', "திருமதி கோகுல இந்திரா' என எழுதப்பட்ட இருக்கைகளுக்கு மத்தியில் "மதிப்பிற்குரிய சின்னம்மா' என ஒரு இருக்கையில் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதேநேரம் மேடையில் ஜெ.வுக்கு போடப்பட்டிருந்த இருக்கையில் எந்தப் பெயரும் இல்லை'' என்றார் வருத்தத்துடன்.பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்திருக்க... ஜெ.வை பார்ப்பதற்காக பத்தா யிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பொதுக்குழுவில் திரண்டிருந்ததுதான் அ.தி.மு.க.விற்கே உரிய பலமாகும் என்றனர் சீனியர் கட்சிக்காரர்கள். பொதுக்குழு செலவுக் காக தலைமைக்கழகம் கொடுத்த பத்துலட்ச ரூபாயில் யானைகள் வரவேற்பு, கேரளாவின் செண்டை மேளம், கன்னியாகுமரியின் பெண்கள் பேண்ட், பொதுக்குழுவில் தலைவர்கள் பேசும் பேச்சு முழுவதையும் தொண்டர்கள் கேட்கக்கூடிய அளவில் ஏகப்பட்ட ஸ்பீக்கர்கள்... இவற்றோடு ர.ர.க்களுக்கு சைவ-அசைவ சாப்பாடு என ஏகப்பட்ட ஏற்பாடுகளை தலைமைக்கழகம் செய்து அசத்தியது. பொதுக்குழுவுக்கு சசிகலா புடைசூழ வந்த ஜெ., அதற்கு முன்பு சம்பிரதாயமாக நடந்த செயற்குழு நடந்த அரங்கிற்குள் நுழைந்தார். அவர் அங்கு சென்றவுடனே, சாப்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பந்தலுக்குள் நுழைய தொண்டர்கள் அவசரப்பட்டார்கள். திருவள்ளூர் மா.செ. மாதவரம் மூர்த்தி தனது ரியல் எஸ்டேட் தொழிலில் உதவும் ஆட்களின் கையில் பெரிய பெரிய கம்புகளைக் கொடுத்து கூட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார். சாப்பாட்டு அறைக்குள் நுழைய முயன்ற தூத்துக்குடி யைச் சேர்ந்த பெரியசாமி என்கிற தொண்டர், ரௌடி களின் தடியடியைத் தாங்க முடியாமல் சுருண்டுவிழ, அவர்மீது ஏறிய மற்ற ர.ர.க்கள் அவரை அடித்து மிதித்து துவைத்தார்கள். அதில் பெரியசாமி பலத்த காயமடைந்து அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இந்தத் தகவல் அப்பொழுது பொதுக்குழு மேடையிலிருந்த ஜெ.வின் காதுக்குப் போனது. பொதுக்குழு முடிந்ததும் தொண்டர்களோடு உட் கார்ந்து சாப்பிட திட்டமிட்டிருந்த ஜெ., அப்படிச் செய்தால் தன்னைப் பார்க்க முண்டியடிக்கும் தொண்டர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்படுமோ என அஞ்சி, தனக்காக சாப்பாட்டு அரங்கில் போடப்பட்ட ஏ.சி.யுடன் கூடிய ஏற் பாடுகளை நீக்கச் சொல்லிவிட்டார். பொதுக்குழுவில் வரவேற்புரை நிகழ்த்திய தம்பிதுரை முதல் வளர்மதி வரை எல்லோரும் தங்களை எப்படி யெல்லாம் ஜெ. வாழவைத்தார், எம்.எல்.ஏ. ஆக்கினார், எம்.பி. ஆக்கினார், பொறுப்புகளை கொடுத்தார் என்பதை மறக்காமல் ஒப்பித்தனர்.ஜெயக்குமாருக்கு வெறும் அஞ்சலி தீர்மானத்தை வாசிக்கும் பொறுப்பு மட்டும் அளிக்கப்பட அடுத்து வந்த ஓ.பி.எஸ். ஒருவிதமான நடுங்கும் குரலில் வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். சென்னை மண்டல மா.செ.க்கள் சார்பாக பேச வந்த சேகர்பாபு, ""என் உடல், உயிர், சொத்து எல்லாம் அம்மா வுக்கே. அம்மாவுக்கு எவன் துரோகம் செய்கிறானோ அவன் குடும்பம் விளங் காமல் போகும்'' என்று பேச... "என்ன இவர், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல பேசுகிறாரே' என சிரித்தனர் ர.ர.க்கள்.இந்த பொதுக்குழுவில் ஆச்சரியமாகப் பேசியவர் முன்னாள் அமைச்சர் முத்து சாமி. தொட்டில் குழந்தைகள் திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம் போன்ற நல்ல திட் டங்களை பாராட்டி அவர் பேசப்பேச, ஜெ. புன்னகை யோடு ரசித்துக்கொண்டிருந் தார். அடுத்ததாக பேசிய பொன்னையன், ஈழத்தில் நடைபெற்ற தமிழ் இன அழித்தொழித் தலைப் பற்றிப்பேசி அனைவரின் கண்களையும் குளமாக்கினார்.பொதுக்குழுவில் பேசிய மற்றவர்கள் அனைவரும், ""அடுத்த ஆட்சி நமதே, அந்த ஆட்சியில் அவர்களைவிட அதிக பணம் சம்பாதிப்போம் ஆகவே கட்சியை விட்டு ஓடிப்போகாதே'' என்பதையே கிளிப்பிள்ளை சொல்வதைப்போல திரும்பத் திரும்ப பல வடிவங்களில் சொல்லிக்கொண்டிருந்தனர். ""இதுதான் பொதுக்குழு கூட்டப்பட்டதன் நோக்கமா?'' என்கிற கேள்வி ர.ர.க்கள் மத்தியில் எழுந்தது.இறுதியாகப் பேசிய ஜெ., வழக்கத்துக்கு மாறாக எம்.ஜி.ஆரின் புகழை அதிகமாகப் பாடினார். ""அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லாம் என் பிள்ளைகள். நான்தான் அம்மா. அடுத்த ஆட்சி நமது ஆட்சிதான்'' என்று சொல்லிவிட்டு தமிழக பத்திரிகைகளை ஒரு பிடி பிடித்தார்.அவர் பேசி முடித்துவிட்டு கிளம்பியபோது ஏற்பட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு ர.ர., ஜெ.விடம் பேட்டி எடுக்க காத்திருந்த ஒருபெண் நிருபரிடம் சில்மிஷம் செய்ய... சக பத்திரிகையாளர்கள் அதை வன்மையாகக் கண்டித்தனர். இந்த பரபரப்பைத் தவிர, அரசியல் தாக்கம் எதுவுமின்றி சம்பிரதாயமாக நடந்து முடிந்தது அ.தி.மு.க. பொதுக்குழு.

அறுக்கப்படும் தமிழச்சிகளின் கர்ப்பப்பைகள்.

முள்வேலி முகாமில் உள்ள தமிழர்களை நிபந் தனைகளின்றி விடுவிக்க வேண்டும்- இதுதான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கோரிக்கை. ராஜபக்சேவிடம் இந்த கோரிக்கையை வைப்பதால் எந்தப் பலனுமில்லையென்று தமிழக மக்களிடம் பிரச்சாரம் செய்து இந்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக 4 திசைகளிலிருந்து தொடங்கிய பரப்புரை பயணம் திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துடன் அக்டோபர் 29-ந் தேதி நிறைவடைந்தது.தூறிக்கொண்டே இருந்த மழையிலும் உணர் வாளர்கள் திரண்டிருக்க, இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் பழ.நெடுமாறன், ""விடுதலைப்புலிகள் என்று 12500 தமிழர்களை தனியாக ஒரு முகாமில் வைத்திருக்கிறார்கள். இவர்களின் கதி என்ன என்றே தெரியாது. இலங்கை சென்ற குழு இவர்களைப் பற்றி விசாரித்ததா? வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நம்மை வரலாறு மன்னிக்காது. நம்மால் முடிந்தவரை ஏதாவது வழிகளில் உதவுவோம்'' என்றார்.சி.பி.ஐ. கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு, ""இங்கே பெய்யும் சாதாரண மழைக்கே நாம் ஓடி ஒளிகிறோம். ஆனால், இலங்கையில் ஈசானி மூலையில் மழை எப்படி இருக்கும்? அவர்கள் படும் கஷ்டங்களை எண்ணிப்பார்க்க வேண்டும்'' என்றார் சோகமான குரலில். சி.பி.ஐ.யின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் வார்த்தைகள் சூடாக இருந்தன. ""முள்வேலி முகாம்களில் உள்ள இளம்கர்ப்பிணிகளின் கர்ப்பப் பைகளை சிங்கள டாக்டர்கள் அறுத்து எறிகிறார்கள். தினமும் 60 கர்ப்பப்பைகள் அறுக்கப்படுகின்றன. அறுக்க மறுத்த 2 சிங்கள டாக்டர் களை கொன்றுவிட்டார்கள். எல்லா விவரமும் ஐ.நா.சபைக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது. தேதி குறிப்பிட்டு, முகாமில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யாவிட்டால் தமிழகம் சும்மா இருக்காது'' என்றார் தா.பா.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது ஆவேசப் பேச்சில், ""தமிழக இளைஞர்கள் கணினி மூலமும் செல்போன் மூலமும் இலங்கை அவலங்களை வீட்டுக்கு வீடு போட்டுக் காண்பித்து தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்த வேண் டும். புலிகள் இல்லை என்று யார் சொன்னது? புலிகளுக்கு நாம் எல்லா உதவியும் செய்வோம். உங்கள் தடையெல்லாம் எங்களுக்கு கால் தூசுக்கு சமம்'' என்றார். அவர் பேசியதும் கூட்டம் லேசாக கலைந்தபோதும், உணர்வாளர்களும் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு திரட்டிவந்திருந்த ஆட்களும் நிறைந்திருந்தனர். நெடுமாறன், தா.பா., வைகோ ஆகியோரது பேச்சில் கலைஞர் தாக்குதல் காரசாரமாக இருந்தது.பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ""தமிழகத்தில் 7 கோடி மக்களில் சரிபாதி பேர் பெண்கள். அவர்களில் 99% பெண் களுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றி தெரியாது. தமிழகத்தில் 72 கட்சிகள் இருக்கின்றன. இந்த மேடையில் இருக்கும் கட்சிகளைத் தவிர வேறு யாருக்கும் இப்பிரச்சினையில் அக்கறையில்லை. ஐந்தாம் கட்டப் போர் நடத்தவேண்டிய நிலையில் இருக்கிறோம். தனிநாடுதான் அந்த மக்களுக்குத் தீர்வு'' என்றார் அழுத்தமான குரலில். உணர்வாளர்களின் நெஞ்சில் நம்பிக்கையை விதைத்துள்ளது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பிரச்சாரப் பயணம்.

மனித உருவில் மிருகம்!

பன்னிரெண்டு வயசு பட்டாம்பூச்சியாய் சிறகடித்த கௌசல்யாவை நைஸாகப் பேசி காட்டுக்குள் அழைத்து... காம வேட்டை ஆடியது ஈவு இரக்க மில்லாத அந்த மிருகம். பருவம் கூட அடையாததால் அந்த ஆண் மிருகத்தின் குதறலில் தாக்குப்பிடிக்க முடியாமல் துடிதுடித்து இரத்தம் சிந்திய அந்த பிஞ்சு... ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனது.சிகிச்சை முடிந்தாலும் அந்த மிருகத்தின் பசி அடங்கவில்லை. தொ டர்ந்து கொண்டுதான் இருந்தது அந்த காம வேட்டை. பருவம் அடைந் தாள் கௌசல்யா. விடுமா அந்த மிருகம்? தன் உடம்பை புடைத்துக் கொண்டு புதிய உற்சாகத்துடன் களமிறங்கியது காம வெறிபிடித்த அந்த நாய்.ம்ஹும்... இதற்கு மேலும்... மகளை வைத்திருந்தால் குடும்ப மானம் போய்விடும் என்று வேதனைப்பட்ட கௌசல்யாவின் தாய் செந்தாமரை, புது விராலிப்பட்டியைச் சேர்ந்த மணிகண்ட னுக்கு திருமணம் செய்து அனுப்பி வைத்தாள். முதலிரவு கூட நடக்க விடாமல் தடுத்து மிரட்டினான் அந்த வக்கிரன். பல நாட் களுக்கு பிறகுதான் நடந்தேறியது முதலிரவு.
அதற்குப் பிறகு கண்ணீருடன் கௌசல்யா... ""முதல் பிரசவம்ங்றதால வளைகாப்பு எல்லாம் நடத்தி தாய் வீடான வேப்பந்தட்டைக்கே வந்தேன். பத்து மாசம் முடிஞ்சு ரெட்டை ஆண் குழந்தை பிறந்தது. ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.குழந்தை பொறந்த 14-வது நாள் குழந்தைக்கு பால் கொடுத்துக்கிட்டிருந்தேன். பின்னால ஒரு கை என்னை சீண்டியது. மிரண்டு போய் திரும்பிப் பார்த்தா அதே மிருகம்... அதே பார்வை. எனக்குள்ளே கோபம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சது. எத்தனை நாள் கத்தியை காண்பிச்சு என்னை மிரட்டி மிரட்டி சித்ரவதை செஞ்சிருப்பான்? அந்தக் காயங்களே இன்னும் ஆறல. இனி யும் இவனை சும்மா விடக்கூடாதுன்னு குழந்தையை கீழே கிடத்திட்டு எழுந் திருக்கிறதுக்குள்ள என்னை கட்டி அணைச்சு பலவந்தப் படுத்த ஆரம்பிச்சுட் டான். உடனே நான் கத்தி கூச்சல் போட அம்மா ஓடி வந்து அவனை பிடிச்சு இழுத்துத் தள்ள... ரெண்டுபேருமே சேர்ந்து அவனை அடிச்சு உதைச்சு தள் ளிட்டு... அந்த நள்ளி ரவு இருட்டி லேயும் ரெண்டு குழந்தை யையும் தூக்கிக் கிட்டு சோ ளக்காட்டுல புகுந்து புருஷன் வீட்டுக்கு தப்பிச்சு ஓடி வந்தேன்.மறுநாள் என் கணவன்கிட்ட... சின்ன வயசிலேர்ந்து அந்த காமக் கொடூரனால நான் பட்ட கஷ்டங் களையெல்லாம் ஒண்ணு விடாம சொல்லி அழுதேன். என் புருஷன் கடவுள்ங்க. "நடந்தது நடந்ததா இருக் கட்டும்... இனி நீ பயப்பட வேணாம்'னு ஆறுதல் சொன்ன கடவுள். தெய்வத்துக்கு சமமான என் மாமியாரும், மாமனாரும் ஆறுதல் சொன்னாங்க. எப்படிங்க ஆறும் மனசு? சின்ன வயசுல அந்த மிருகம் என்னை ஏதேதோ செய்யும்போது எனக்குப் புரியல. ஆனா அந்த நாய் என்ன பண்ணினான்னு நெனைக்கும் போதே... இந்த உலகத்துல இன்னும் உசுரோட இருக்கணுமான்னு தோணுது. ஜீரணிச்சுக்கவே முடிய லைங்க'' என்கிறார் கண்களில் தாரை தாரையாய் வழியும் கண்ணீரை துடைத்தபடியே கௌசல்யா.கணவரும், மாமியார் மாமனா ரும்... இப்படி பலரும் ஆறுதல் சொல்லி நிம்மதி அடையாத கௌ சல்யாவை வேட்டையாடிய மிருகம் யார் தெரியுமா? மனதை கல்லாக்கிக் கொள்ளுங்கள். கௌசல்யாவை பெற்ற அப்பன் ரெங்கராஜன்தான்.""அப்பனாங்க அவன்? சே! பெத்தப் புள்ளைக்கிட்ட இப்படி கேவலமா நடந்துக்க எப்படித்தான் அவன் மனசு போச்சோ தெரியல. "குழந்தையை நீங்க பாத்துக்கோங்க... இப்படிப்பட்ட கொடுமை யாருக்கும் வரக்கூடாது'ன்னு உண்மையை சொல்லி கதறினவ... தற்கொலை பண்ணிக்கப் போய்ட்டா. தனியா போற பெண்களை கூப்பிட்டு கற்பழிச்சுடறானுங்களே கொடூர நாய்ங்க. அதுக்காக அந்தப் பெண் தப்பானவளா ஆகிடுவாளா? என்னை பொறுத்தவரைக்கும் நீ பத்தினி தாண்டி'ன்னு சமாதானப்படுத்தினேன். "இருந்தாலும் இந்த மாதிரி ஈவு இரக்க மில்லாத காமக் கொடூரனை சட்டத்தின் முன்னால நிறுத்தி ஆயுள் தண்டனை கொடுக்கணும். தூக்கு தண்டனை கொடுத்தா உடனே செத்துப் போய்டு வான். ஆனா பெத்த மகளையே இப்படி சீரழிச்சோமேன்னு நெனைச்சு நெனைச்சு தினம் தினம் சாகணும். அப்படி ஒரு தண்டனையை அவனுக்கு வாங்கிக் கொடுக்கணும்ங்க'ன்னு எங்கிட்ட கதறினவ போலீஸ் ஸ்டேஷன்லயும் புகார் கொடுத்துட்டா என் மனைவி'' என்கிறார் உயர்ந்த மனப்பான்மையுள்ள கணவரான மணிகண்டன்.இவர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் வாசு தேவனோ, ""தகப்பன் மகள்ங்குற உறவு எவ்வளவு புனித மானது. அந்த உறவையே இந்த ஆளு கேவலப்படுத்திட்டான். இது சமூகச் சீரழி வின் உச்சக்கட்டம். அதுவும் பருவமடை யாத மைனர் பொண்ணாக இருக்கும் போதே இப்படி பாலியல் பலாத்காரம் செய்ததற்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். இப்படிப்பட்ட கொடூரனை சமூக குற்ற வாளியாக்க வேண்டும்'' என்று கொந்தளிக் கிறார் அவர்.மகளிர் போலீசாரோ அவன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ""பெத்த மகளையே வேட்டையாடின அவனோட பிறப்புறுப்பையே அறுத்து எறியணும்'' என்கிறார்கள் கோபம் கொப்பளிக்க.கௌசல்யாவையும் அந்த காமக் கொடூர ரெங்கராஜ னையும் எதிரே எதிரே அமர வைத்துதான் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அவன் செய்த சித்ரவதைகளை எங்கெல்லாம் ரத்தக்காயங்களை ஏற்படுத்தினான் என... தன் உடம்பைக் காட்டி சொல்ல அவனின் முகம் கடுகடுத்துப் போனதாம்.""அந்த மனித உருவிலான மிருகத்தை சட்டம் கடுமையாக கண்டித்தே தீரும். அவன் உசுரோட இருக்கிறதை விட சாகுறதே மேல். இவனுக்கெல்லாம் ஜாமீன் கொடுக்க சில கொடூரன்களும்... வாதாட வக்கீல் களும்... சே!'' என்று தலையில் அடித்துக் கொண்டு போகிறார்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள்.


ஒரு போராளியின் கடிதம்! - ஜெகத் கஸ்பர்

ஈழவிடுதலைப்போராட்ட அரசியற் களத்திற்குள் நான் அறிமுகமாகியது மிகப்பெரியதோர் பின்னடைவின், நெருக்கடியின் காலத்தில். வெளியேறியது புலிகள் ஆனையிறவில் ஈழக்கொடி உயர்த்திய வெற்றியின் நாளில். மீண்டும் உள் நுழைந்தது பேரிடர் சூழ்ந்த இறுதிப்போர் நாட்களில். நக்கீரன் வாசகர்கள் சந்திக்கையில் கேட்கும் கேள்வி- ""இத்தனை விபரங்கள் எப்படி உங்களுக்கு சாத்தியமாயிற்று?'' என்பது. கடந்த ஆகஸ்ட் மாதம் துஷாந்தன் என்ற போராளி எழுதிய கடிதத்தினை பதிலாகப் பதிவு செய்ய விழைகிறேன்.

12.08.2009அன்பின் ஜெகத் அண்ணா,

தங்களது "மறக்க முடியுமா?' தொடர் வெளிவரத் தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து படித்து வருகிறேன். ஈழ விடுதலைப் போராட்டத்தை வைத்துப் பிழைத்துக்கொண்ட பல சந்தர்ப்ப வாதிகளை இனம் காணக்கூடியதான இந்தப் போர் ஓய்ந்து, எம்மினம் அவல வாழ்வு வாழும் நாதியற்ற நிலையில், தங்களது எழுத்துக்கள் எம்மை புத்தெழுச்சி கொள்ள வைக்கின்றன. காலத்தின் தேவையான பலவற்றை உங்கள் நலன் பற்றியும் கவலை கொள்ளாது, அறத்துடன் முன்வைக்கிறீர்கள். "ஜெயசிக்குறுய்' ராணுவ நடவடிக்கை காலத்தில் தாங்கள் செவிவழியால் ஆற்றுப்படுத்தியது போலவே, தற்போதைய சூனிய நிலையிலும் தங்கள் எழுத்துக்கள் மருந்திடுகின்றன.பத்து வருடங்கள் கழிந்த நீண்டதோர் காலப் பகுதியின் பின் முற்றிலும் மாறுபட்ட பல சூழல்களைத் தாண்டிய பிறகு உங்கள் நினைவுகள் மடைதிறக்கின்றன. கம்பீரமான, நம்பிக்கை வரிகள் சுமந்து சந்தத்துடன் எம் காதுகளில் தங்கள் குரல் ஒலித்த ஞாபகங்கள், ஓடி வருகின்றன.தங்கள் குரலும், குரலைக் கேட்க உதவிய வேரித் தாஸ் வானொலி தமிழ்ப்பணியும் என்னுடன் ஒன்றித்துப் போய்விட்ட நினைவுகளைச் சொல்ல, கொஞ்சம் எனது சுய புராணத்தையும் சொல்லிவிடுகிறேன்.

அண்ணா, (உங்களை அருட்தந்தை என மத அடையாளத்தில் சுருக்கிட மனம் ஒப்பவில்லை) எனக்கு வயது 24. (85-ல் பிறந்தவன்) பிறந்தது வல்வெட்டித் துறையில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரமேயான "கெருடாவில்' எனும் சிற்றூர். என் அம்மாவின் அப்பா (தாத்தா - ஐயா என அழைப்போம்), ஒரு தமிழ் ஆசிரியராக இருந்தவர். வல்வெட்டித் துறை யின் மையப் பள்ளியான "சிவகுரு' வித்தியாசாலை யில் இருபது வருடங்களாக கற்பித்தவர். (அறுபது, எழுபதுகளில்) பின்னாளில் போராட்டத்தின் முது கெலும்புகளாக விளங்கிய பலர் (கிட்டு, மாத்தையா, வினோத் என பலர்) அவரிடம் படித்தவர்கள்.வீட்டில் அம்மம்மாவும் தமிழாசிரியையாகவே இருந்ததால் இயல்பாகவே தமிழ், ஈழவிடுதலை, தமிழுணர்வு என்பன என் சிறுவயது முதலே என்னுள் முளைவிட்டிருந்தது. ஐயாவின் இறுதி காலத்தில் கண் தெரியாது போய்விட, அவருக்கு செய்தித்தாள் படித்துக் காட்டும் வேலை எனக்கு. இதே காலத்தில் செய்தி ஊடகங்கள் என்றால் (92, 93-களில்) பி.பி.சி.தான். ஆனந்தி அக்காவின் குரலில், ஓரளவு நடுநிலையான நம்பகமான செய்திகள், விரும்பிக் கேட்போம். இந்த வேளையில்தான் சபா அண்ணாவின் குரலில் வேரித்தாஸ் வானொலி எனக்கு அறிமுகமானது.என்ன வேலை இருந்தாலும், 7.45-ற்கும், 9.15-ற்கும் ஐயாவின் "றழி' சைக்கிளின் பக்கத்தில் கூடிவிடுவோம். சைக்கிள் டைனமோவில் இருந்து உண்ர்க்ங்/Diode/Transister உபயத்துடன் கிடைக்கும் சிறிது இரைச்சலுடனான சிற்றலை மீற்றர்களின், உண்மையின் தூதுவர்களாய் பல்லாயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள வேரித்தாஸ் தமிழ்ப் பணி செய்திகளை கேட்போம். வேரித்தாஸில் சபா அண்ணா ஓய்வு பெற்று செல்லும்போது புதிதாக வருபவரின் குரல் எப்படியோ? என ஏங்கி யிருந்தபோதுதான் -தெளிவான நீரோட்டம் போன்ற, கம்பீரமான, சந்தத் தமிழில் செய்தி வழங்கும் உங்களைப் பெற்றோம்.தங்கள் மந்திரக் குரலில் உறவுப் பாலச் செய்திகள் ஒலிபரப்பாகும் அந்த ஐந்து, ஆறு நிமிடங்களும் Sielence Bell இங்ப்ப் ஒலித்தது போலவே இருக்கும். டைனமோவின் இரைச்சல், பழைய வானொலிப் பெட்டியின் சிற்றலை செய்யும் குளறுபடிகள் என எல்லாவற்றையும் தாண்டி செய்தி "பிடிக்க' எல்லோராலும் முடியாது. சிலவேளைகளில் சரி யான பீற்றர் கிடைக்காது, அக்கம் பக்க பீற்றர்களின் விரோதமான ஒலிகளைக் கேட்டு, எரிச்சலுடன் வானொலியை அணைத்துவிட்டு அயல் வீடுகளுக்கு ஓடிச்சென்று செய்தி கேட்போம். வலிகள் மட்டுமே தெரிந்த, வசந்தங்கள் ஒருபோதும் எட்டிக்கூடப் பார்த்திராத, அவலங்கள் சுமந்த எம் இனத்திற்காய், எந்த முன்தொடர்பும் இன்றி சரிவர எம் மனநிலை புரிந்து மருந்திட்டுத் தடவி, அரவணைத் தது தங்கள் குரல். மணிக்கூட்டில் 7.58, 7.59 என நேரம் ஓடும்போது மிக விரைவாக ஆனால் தெளிவு குன்றாது செய்தி வாசிக்கும் இலாவகம் தங்களுக்கு மட்டுமே வாய்ந்த ஒன்று. மேலும் அடிக்கடி எமக்காக நீங்கள் செய்யும் பிரார்த்தனையும், வெந்துபோன எம் உள்ளங்களுக்கு மருந்திட்டன. முகம் தெரியாது தங்கள் குரலால் மட்டுமே தொடுப்பு பெற்ற நாங்கள் உங்கள் குரலுக்கு அடிமையானோம். பின்னர் போராளி ஆகி களங் களில் நின்றபோதும், யாரின் தயவிலாவது கிடைக்கும் பற்றரிகளை வேரித்தாஸ் கேட்கவென கவனமாக வைத் திருந்தேன். (காவலரண்களில் சைக்கிள் கிடைக்காது). செய்திகள் கேட்டபின் பற்றரிகளை கழற்றி வெளியில் வைத்தும், பவர் குறையும்போது வெயிலில் வைத்தும் வாயால் கடித்தும் கூடிய காலம் அவற்றைப் பாவிப்போம்.நாம் எடுத்த உறுதிமொழிகளும் அடிக்கடி பொறுப்பாளர்களுடன் நடக்கும் கலந்துரையாடல்களின் போது கிடைக்கும் ஊக்கமும் இலக்கு நோக்கி எம்மை எவ்வாறு உறுதியுடன் பயணிக்க வைத்ததோ, அதேயளவு பங்கு தங்கள் குரலுக்கும் இருந்தது.கடுமையான களங்களின் பின்பும், தோழர்களை இழந்த துயரின்போதும் கசியாத கண்கள் தங்கள் செய்தியறிக்கைகளின்போதும், உறவுப்பால நிகழ்ச்சிகளை வழங்கும்போதும் கசிந்து விடுவதுண்டு.இப்படியாக தங்கள் குரலை வைத்து, கம்பீரமான, நெடிதுயர்ந்த, ஒரு "பயில்வான்' தோற்றத்துடன் (எங்கள் சொர்ணத்தார் போல) ஒருவரையே என் மனதில் கற்பனை செய்திருந்தேன். இவ்வேளையில் தங்களுக்கு எழுதி வேண்டியதின்படி தங்கள் கலண்டர் புத்தகம் ஒன்றைப் பெற்றிருந்தேன். (98 ஆக இருக்க வேண்டும்) அதில் குரலுக்கும், தோற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத தங்களைப் பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் இப்பள்ளி மாணவன் போன்ற உருவத்திற்கா அந்தக் குரல் சொந்தமானது என திகைப்படைந்தேன். கையடக்கமான அந்தக் கலண்டர் இன்றும் யாழிலுள்ள எங்கள் வீட்டு நூலகத்தில் உள்ளது.

மலேனியத்தின் தொடக்கத்தில் அற்றுப்போன தங்களுடனான தொடர்பு (குரல்) பின் எப்போதுமே எனக்கு கிடைக்கவில்லை. வேரித்தாஸ் பணி முடிந்து, புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் சுற்றுப்பயணம் செய்து தாங்கள் ஆற்றிய பணிகள் பற்றி அறிந்திருந்தேன். தங்கள் உரைகளைக் கேட்ட உறவுகள், நெகிழ்ந்து போய் எமக்கான ஆதரவுகளை அள்ளி வழங்கியதையும், கேட்டு மகிழ்ந்தேன். இப்பணிகள் காரணமாக சில நாடுகளுக்கு தங்களுக்கு விசா மறுக்கப்பட்டதாயும் கேள்விப்பட்டிருந்தேன். பின் (2002 புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தின்பின்) வெளியிடங்களில் நின்றபோது, தாங்கள் வன்னி வந்து சென்ற சேதி அறிந்தேன்.இடையிடையே tamilnaatham.com இணைய தளத்தில் தங்கள் நேர்காணல்களை கேட்டிருந்தேன். "அண்ணைக்கு' எழுதியிருக்கக் கூடிய கடிதங்களுக்கும் பின் உங்களுக்குத்தான் மனம் திறந்து எழுத வருகிறது. தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை "அண்ணை' என விளிக்கும் பாக்கி யம் பெற்றவன் நான். அந்த உறவில்தான் எம் உறுதியும் மாசுபடாது இருந்தது.வெறுமனே ஆயுதம் தாங்கிய மனித இயந்திரங்களாய் எம்மை ஆக்காது நல்ல பண்பு களை எம்மில் வளர்த்து, சமூகம், அரசியல், வரலாறு, மருத்துவம், விஞ்ஞானம் என எதிலுமே தேடலுடன் கற்கும் ஆர்வத்துடன் எமை வளர்த்தவர். பல்வேறு தேவைகளைக் கருதி உலக நாடுகளெங்கும் தன் பிள்ளை களை அனுப்பி, "தமிழீழம்' என்ற நெடுங்கனவு கண்டவர் எம் தலைவர்.தவறான நடத்தை, போதை எதற்கும் அடிமையாகாது, "அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்' என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர். குழந்தைகள், இயலாதவர்கள், அனாதைகள், காயமடைந்த போராளிகள், முதியோர் என மனித படைப்புகளிலேயே கடவுளை தரிசித்து போராளிப் பிள்ளைகளுக்கு ஆதர்சமாய் இருந்தவர்.தெளிவற்ற, கரடுமுரடான, சதிகளும்- சகதிகளும் நிரம்பிய பெரும் குழிகள் கொண்ட பாதையில் பலர் முயன்றும் ஓட்ட முடியாது போய்விட்ட "தமிழீழ தேசம்' என்ற வண்டியை மூன்று தலைமுறைகளுக்கும் மேலாய், விடாப்பிடியாய் ஓட்டிச் சென்ற ஓட்டியாய் அவரைப் பார்க்கிறேன்.மிக நீண்ட பாரம்பரியமாய் தொடர்ந்த, இறுக்க மான, மனிதாபிமானங்களைத் தூரவைத்துப் பார்க்க சாதியக் கட்டமைப்புகள் சிதைந்து போகவும், பெண் ணடிமை ஒழிப்பு, சீதன ஒழிப்பு போன்ற முற்போக்கு விடயங்கள் பக்கவிளைவுகளாக தொடரவும், நிலப் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுண்டுவிரல் அளவேயான ஈழத்தமிழ் இனத்தை உலகெங்கும் பேசச் செய்ததும், தமிழினத்தின் பாரம்பரிய குணங்களை மீண்டும் எழுச்சி பெற வைத்ததும்... கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் கூடிய புதியதொரு சமுதாயத்தை வழங்கியதும் ஆயுதப் போராட் டம் என்பதற்கு அப்பால், போராட் டம் எமக்கு வழங்கியவை.அண்ணா, ஏறத்தாழ ஒரு தலைமுறைக்கும் மேற்பட்ட கால வரலாறு தொக்கிப்போய் எம்முன் சூனியப்பெருவெளி சூழ்ந்து போயுள்ளது. இருந்தும் தடை களையும் சோதனைகளையும் கண்டு சோர்வடையாது, எஞ்சிய வர்களுடன் எம் இலக்கு எட்டப் படும். தன் இன விடிவு ஒன் றையே மனதில் விரித்து சாவை அணைத்த இருபத்தைந்தாயிரம் மாவீரர்களதும், தம் பொருளை, இருப்பிடங்களை, அவயவங் களை, உயிரைக்கூட அர்ப்பணித்த ஆதரவாளர்களதும் மக்களதும் கனவுகள் வீண்போகா. மீண்டும் யாருமற்றிருந்த இவ்வேளையில் நக்கீரன் எழுத்துக்கள் ஆறுதல் அளிக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள்.
நன்றி!நண்பர்களே!விடுதலைப் போராட்டம் கண்டுள்ள பின்னடைவும் அது எழுப்பியுள்ள சில வெற்றிடங்களும் முதலில் பலிகொள்வது உண்மையைத்தான். எப்போதோ நிறைவாகி யிருக்கிற இந்த "மறக்க முடியுமா' பகுதி தவிர்க்க முடியாமல் தொடர்வதும் சிங்கள பேரினத்திற்கு எதிரான போரில் ஓர் அங்கமாக உண்மைக்கான போரையும் எடுத்துச் செல்வதற் காகத்தான். உண்மைகள் நமது முழு விடுதலையை சாத்தியப்படுத்தும்.

நடிகைக்காக நடந்த சண்டை! மக்கள் பணம் அம்போ!

டைரக்டர் மு.களஞ்சியத்தின் ‘"என் கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் சீனுவாசன் படம் தயாரிப்பதாக சொல்லி மக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, தயாரிப்பாளர் சீனுவாசனை கைது செய்திருக்கிறார்!ஒரு நடிகைக்காக தயாரிப்பாளரும், டைரக்டரும் போட்ட சண்டையில் படம் நின்று போனது! இதுதான் இந்த சிக்கலுக்கு காரணம் என கிளுகிளு சங்கதிகள் தெரியவந்தது!இனி... அவரவர் வாய்ஸில் அவரவர் பிரச்சனை!சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரியும் ஏகாம்பரம் நம்மிடம் சொல்கிறார்.......""திருவண்ணாமலை வாலைசித்தர் ஆசிரமத்தில் நடக்கும் பூஜைகாரியங்களுக்காக மாதாமாதம் ஐநூறு, ஆயிரம்னு பணம் அனுப்புவேன்! இந்நிலையில் 2007-ம் வருஷம் எனக்கு ஒரு கடிதம் வந்தது! அதில்.... அகில இந்திய வாலைசித்தர் பேரவையின் பொதுச்செயலாளர் டாக்டர் சீனுவாசனும், அ.இ.வாலை சித்தர் பேரவை தலைவர் மு.களஞ்சியமும் சேர்ந்து ‘"என் கனவு நீதானடி' என்கிற படத்தை சிவகுரு ஃபிலிம்ஸ் என்ற பேரில் தயாரிக்கப் போறாங்க! களஞ்சியம் இயக்கி நடிக்கப் போறார்! இந்த படத்தயாரிப்பில் 50ஆயிரம் கட்டி ஷேர் வாங்கினால் லாபத்தில் பங்கு தரப்படும்! நஷ்டம் வந்தாலும் மூன்று ஆண்டுகளுக்குப்பின் உங்கள் முதலீடு திருப்பித்தரப்படும்னு சொல்லிருந்தாங்க! நானும் எனது உறவினர்களும் நகையை அடமானம் வச்சு ஐந்து ஷேர் வாங்கினோம்!06.02.08-ல் திருவண்ணாமலையில் பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்குச்சு! ஆனா கொஞ்ச நாள்லயே ஷூட்டிங் நின்னு போச்சு! பணத்தை திருப்பிக் கேட்டபோது இழுத்தடிச்சாங்க! அதான் புகார் கொடுத்தோம்!'' என்றார்! உடுமலைப் பேட்டை மஞ்சுளா, காஞ்சிபுரம் ராஜேந்திரன், பவானி அங்கப் பன் இப்படி பல ஊர்க்காரர்களும் நாலு,அஞ்சு பங்குகளை வாங்கி ஏமாந் திருக்காங்க!தயரிப்பாளர் சீனுவாசனின் அந்தரங்க உதவியாளரான அடிஅண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரன் என்கிற சிவக்குமார் நம்மிடம் பல விவரங்களைச் சொன்னார்!""நான் வேலுபிரபாகரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் அஸிஸ்டெண்ட் ஆக இருந்தவன்! மூணு வருஷத்துக்கு முன்னாடி சீனுவாசன் நட்பு கிடைச்சது! ‘நான் படம் தயாரிக்கப் போறேன்! நீ என்கூடவே இருனு சொன்னார்! அதன்படி அவரோட கணக்கு வழக்குகளையெல்லாம் நான் பாத்துக்கிட்டேன்! களஞ்சியம் கதை சொல்லி ஒரு கோடியே 60லட்ச ரூபாய் பட்ஜெட் என சொன்னார்! அதன்படி சென்னை அசோக் நகரில் ஆபீஸ் போடப்பட்டது! மக்களிடம் வாங்கிய பணத்தில் முதல்கட்டமா களஞ்சியத் திடம் 36 லட்ச ரூபாய் கொடுத்தார் சீனுவாசன்! பூமிகா நடிக்கிறார், மீராஜாஸ்மின் நடிக்கிறார்னு சொல்லி கடைசியில் ‘"கற்றது தமிழ்' ‘அங்காடித் தெரு' ஆகிய படங்களின் நாயகி அஞ்சலி நடிப்பதாகச் சொன்னார் களஞ்சியம்! திருவண்ணாமலையில் பூஜை போடப்பட்டு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் பத்து நாள் ஷூட்டிங் நடந்தது! ஒருநாள் ‘""நான் பிரபல டைரக்டர்! அதனால்தான் மக்கள் பணம் கொடுத்திருக்காங்க! அதனால் என்னிடம் சரியா கணக்கு காட்டுங்க!'' என சீனுவாசனிடம் கணக்கு கேட்டார் களஞ்சியம்! இதில் இருவருக்கும் தகராறு! இன்னொருநாள் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் இரண்டு பெண்களை சீனுவாசனின் அறைக்கு அனுப்பிவைத்தார்! இது தெரிந்து களஞ்சியம் சண்டைக்குப் போனார்! தயாரிப்பாளரை சந் தோஷப்படுத்துறதுக்காக கதாநாயகியை ஏற்பாடு செய்வாங்க டைரக்டர்கள்! நீயும் அஞ்சலியை என்ரூமுக்கு அனுப்பு!' என்றார் சீனுவாசன்! கோபமான களஞ்சியம் ‘""நான் அஞ்சலியை லவ் பண்றேன்! கனவுல கூட அவளை நீங்க நெருங்க முடியாது!'' எனச் சொல்ல... தகராறு முற்றி படப்பிடிப்பு நின்னது! "அஞ்சலியை தொடாம படம் எடுக்குற ஐடியா இல்லை!'னு தயாரிப்பை கிடப்பில் போட்டுட்டார் சீனுவாசன்! எந்த சமாதானத்துக்கும் அவர் ஒப்புக்கல! மக்கள் பணத்தை கேட்டு என்னை நச்சரிக்க,,, நான் இவரை நச்சரிக்க... விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் சாரோன் சவுந்தரை வச்சு என்னை மிரட்டி அனுப்பிட்டார்!'' என்றார்!“""சிவக்குமார் மோசமானவன்! நியாயம் கேட்கப் போனதால் என்வீட்டில் பெட்ரோல் குண்டு போட்டான்! அதான் அவனை மிரட்டினேன்!'' என்றார் சவுந்தர்!சீனுவாசனை சந்தித்தோம்!""சிவக்குமார் பெரிய பிராடு! அவன் சொல்வதெல்லாம் பொய்! பப்ளிக் ஷேர் நினைச்சபடி வராததால் படம் நின்னு போச்சு! வரும் ஜனவரிக்குள் பப்ளிக் பணத்தை திரும்ப தந்திடுவோம்!'' என்றார்!டைரக்டர் மு.களஞ்சியத்திடம் பேசினோம்!""பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும்.... இப்படி பல நல்ல படங்களை இயக்கியவன் நான்! ‘"என்கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் நான் கிடையாது! என்னுடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய என்னுடைய கிரியேடிவிடி வேலைக்கு சம்பளம் கிடையாது! அதனால் என்னை வொர்க்கிங் பார்ட்னராக சேர்த்துக் கொண்டார் சீனுவாசன்! மற்றபடி மக்களுக்கும், எனக்கும் எந்தவிதமான நேரடி அக்ரிமெண்ட்டும் கிடையாது! சீனுவாசன் பக்தி மான்! பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடந்தபோது அவர் தன் மனைவி யுடன்தான் தங்கியிருந்தார்! அப்படியிருக்க அவர் கண்ட பெண் களோடு இருந்ததாக சொல்வது தவறு! அஞ்சலியை ‘"சத்தமின்றி முத்தமிடு' படம் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகப் படுத்தினேன்! அந்தப் படம் நின்று போனது! ஆனாலும் அஞ்சலி பெரிய நடிகையாகி விட்டார்! இருப்பினும் அறிமுகப்படுத்திய நன்றிக்காக ‘"என் கனவு நீதானடி' படத்தில் நடித்தார்! மற்றபடி நான் அவரை காதலிப்பதாச் சொல்வது அபத்தம்! காதலிக்கிற மனநிலையிலும் நான் இல்லை! சிவகுமாரன் நடவடிக்கை சரியில்லாத ஆள்! அவர் சொல்வதை நம்ப வேண்டாம்!'' என்றார்!நாம் இந்த செய்தியை சேகரித்த சில நாட்களிலேயே சீனுவாசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்! இப் போது சிவகுமாரும் கைதாகி யிருக்கிறார்!


அம்மாவுக்கு மொட்டை! நிர்வாண சித்ரவதை!

கோவை உக்கடம் கோட்டைமேடு சின்னப் பள்ளிவாசல் இருக்கும் தெருவருகே மூச்சிரைக்க ஓடி வந்த 10 வயது சிறுவன் அஸாருதீன் ""பாட்டி... தாத்தா...'' என கூவிக் கொண்டு அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்து அப்பாவும், பாட்டியும், அத்தை, சித்தப்பாவும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு அம்மா தலைய மொட்டையடிச்சு வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்காங்க. அம்மாவ எங்களுக்குக் கூட காட்ட மாட்டீங்கறாங்க. நான் இங்க வந்து சொன்னது பாட்டிக்கு தெரிஞ்சுதுன்னா என் அப்பாவும் பாட்டியும் சேர்ந்து சூடு வச்சிரு வாங்க. சீக்கிரமா வீட்டுக்கு வந்து அம்மாவ அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க தாத்தா...'' என அழுதுகொண்டே சொல்லியவன் தாத்தா பாட்டியின் பிடியிலிருந்து உருவிக் கொண்டு அடுத்த தெருவான சாமராவ் தெருவில் உள்ள தன் அப்பா வீட்டிற்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் தன் தங்கச்சி சப்ரீனாவோடு ஹோம் ஒர்க் செய்வது போல் நடிக்க ஆரம்பித்தான்.தாத்தா அப்துல் கபூர் தன் சொந்தங்களோடு தன் மருமகன் வீட்டிற்குள் நுழைய அங்கே தன் மகள் மொட்டையடிக்கப்பட்டு அழுதபடி சுவரோரமாய் அமர்ந்திருப்பதை பார்த்து கொந்தளித்துப் போக... அவரின் சொந்தங்கள் மட்டுமல்ல இஸ்லாமியப் பொதுமக்கள் எல்லோரும் அந்தக் குடும் பத்தையே நையப் புடைத்து உக்கடம் போலீஸ் ஸ்டேஷ னுக்கு தகவல் தந்தனர்.அப்துல் கபூரின் மகளான நதீரா பானுவின் கணவனான இப் ராகிம்ஷா, மாமி யார் சரீபா, கொழுந் தன் பைரோஸ் ஆகி யோரை போலீஸ் கைது செய்தது. இந்த சம்பவத்திற் குப் பின் பேசிய அப்துல் கபூர்... ""அல்லா எனக்கு கொடுத்த நாலுமே பொம்பளைப் புள்ளைக. ரெண்டாவது பொண்ணுதான் இந்த நதீராபானு.பதினாறு பதினேழு வயசுலயே அந்த இப்ராகிமுக்கு நிக்காஹ் பண்ணிக் கொடுத்துட்டேன். நான் அப்பவே என் பொண்ணுக்கு 20 பவுனு போட் டேன். என் பொண்ணோட மாமியார் சரீபா ஆரம்பத்துல அமைதியாத்தான் இருந்த மாதிரி காமிச்சவங்க இப் ராகிம்ஷாவோட அண்ணன் ஒருத்த னுக்கு ரெண்டு நிக்காஹ் பண்ணி வச் சாங்க. ரெண்டுபேரிடமும் 50 பவுனு, 100 பவுனுன்னு வாங்கியிருக்காங்க. அதுல ஒரு பொண்ணு இந்த சரீபாவோட தொந்தரவு தாங்க முடியாம ஓடியேப் போயிருச்சு.அதுக்குப் பிறகும் இன்னொரு பொண்ண நிக்காஹ் பண்ணி 100 பவுன் வாங்கியிருக்கு. அதுக்கப்புறம் அந்தப் பொம்பளையும், அவளோடப் பொண்ணு ஆமினாவும் எம் பொண் ணப் பாத்து ஒவ்வொருத்தியும் 50 பவுனு, 100 பவுனுன்னு போட்டு வந் திருக்குக. நீ என்னத்தடிக் கொண்டு வந்தே? இனிமே இங்கயிருக்கிற எல்லாத்தோட ட்ரெஸ்ஸயும் நீதான் துவைக்கணும்னு எல்லாம் வேலையும் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. நதீராவுக்கு மூணு குழந்தை ஆனதுக்குப் பிறகு தான் ஒருநாளு எம் பொண்ணு மேல அபாண்டமா பழி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க சரீபாவும், ஆமினாவும்'' என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் கதறுகிறார்.மொட்டையடிக்கப்பட்ட தலை யோடு நம்மிடம் பேசிய நதீரா... ""என் னைய எப்படியாவது என் புருஷன் கிட்டயிருந்து பிரிச்சு நல்லா சம்பா திச்சுட்டு இருக்கற எம் புருஷனுக்கு வேறொரு பொண்ண நிக்காஹ் பண்ணி நிறைய நகை நட்டு வாங்க ணும்ங்கறதுதான் அவங்க குடும்பத் தோட திட்டமே. அதுக்காக நான் ஒரு பால்காரர்கிட்டப் பேசினாலும் சரி, பூக்காரர்கிட்டப் பேசினாலும் சரி... நான் அவுங்கக் கூடத் தொடர்பு வச்சி ருக்கிறதா எம் புருஷன்கிட்ட சொல்ல ஆரம்பிச்சாங்க. இவ வேண்டாம்டா... நீ இருக்குறதுக்கு இந்த தேவ...ள கை கழுவிட்டு வேற பொண்ணப் பாத்துக்கோ...ன்னு சொல்வதை நம்ப ஆரம்பிச்சுட்டாரு என் புருஷன். இதனால என்னோட துணியெல் லாம் கழட்டி நிர்வாணமா நிக்க வச்சு பெல்ட்டாலயே அடிப்பாரு எம் புருஷன். உனக்கு தொந்தியெல்லாம் வந்துருச் சுடி. வேறொரு பொண்ணப் பாக்க முடிவுபண்ணிட்டேன்னு சொல்ல நான் வேண்டாம்னு சொல்ல என் மாமியாரும் நாத்தனாரும் கூட சேர்ந்து அடிப்பாங்க.அன்னிக்கு வெள்ளிக் கிழமை நைட்டு. வேறொரு நிக்காஹ் பண்றதுக்கு நான் ஒத்துக்கணும்னு சொல்லி என் புருஷன்லயிருந்து கொழுந்தன் வரைக்கும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச் சாங்க. என் நாத்தனார் ஆமினா இவகிட்ட என்ன பர்மிஷன் கேட்கறது? இவளுக்கு மொட்டையடிச்சு வீட்டோட உக்கார வச்சிட்டு நாம அண்ணனுக்கு வேற பொண்ணப் பாத்துருவோம். மொட்டை அடிண்ணா... மொட்டை அடிக்க ஒத்துக்கலைன்னா சீமெண்ணய ஊத்தி கொளுத்தி விட்ருவோம்னு மிரட்ட... கொளுத்தற துக்கும் ரெடியா ஆகிட்டாங்க. அதுனால மொட்டையடிக்கறதுக்கு ஒத்துக்கிட்டேன்.எப்பவுமே அவுங்க என்னைய அடிக்கும்போது எதுவுமே உங்க வீட்டுக்கு தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா உங்கப்பன வேலைய விட்டுத் தொரத்திவிட்ருவோம்னு சொல்லும்போது எங்க குடும்பத்தோட வறுமையும், அடுத்து நிக்காஹ்க்கு தயாராயிருக்கற என் தங்கச்சியும்தான் ஞாபகத் துக்கு வருவாங்க. ஆனா எம் பையன் ஓடிப்போய் சொல்லாம இருந்திருந்தா ஒருநாளு கண்டிப்பா என்னைய கொளுத்தி யிருப்பாங்க. என்னோட மூணு குழந்தைகளும் அனாதையாப் போயிருக்கும். இனி ஏதாவதொரு வேலை செஞ்சாவது என் புள்ளைகள காப்பாத்திக்குவேன்'' என்கிறார் தன் குழந்தைகளை கட்டியணைத்தபடியே.போலீஸ் விசாரணை யின்போது இப்ராகிம்ஷா...""நான் எங்கம்மா பேச் சைக்கேட்டு இப்படி பண் ணிட்டேன். நான் பண்ணது தப்புனு உணர்ந்துட்டேன்''னு கதறியிருக்கிறானாம். ஆனா சரீபாவோ... எதையுமே அலட்டிக் கொள்ளாமல் சிறையை நோக்கி நடந்

அதிரடி - எதிரடி!

பொது மேடைகளில் தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் கடுமையாக விமர்சிப்பதில் சமீபகாலமாக அதிக ஆர்வம் காட்டி வருகிறார் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். கடந்த 27-ந்தேதி வாழப்பாடியார் நினைவுநாள் அஞ்சலி கூட்டத்தை சென்னை அடையாறில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நடத்தினர் கதர் சட்டையினர். இதில் கலந்து கொண்டு பேசிய இளங்கோவன், வழக்கம்போல் தனது பாணியில் விளாசித் தள்ளினார். இளங்கோவனின் தி.மு.க. விமர்சனம் குறித்து, தி.மு.க.வின் மூத்த பேச்சாளர் வெற்றிகொண் டானிடம் கேட்டோம்.

""நம் கட்சியின் மத்திய அமைச்சருக்கு எதிராக கண்டன கூட்டம் நடத்தப் போறாங் களாம். அதே நாளில் நாமும் ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டித்து கூட்டம் போட முடி யாதா'' என்று கேட்கிறாரே இளங்கோவன்?
இளங்கோவனுக்கு தைரியமிருந்தால் போடட்டுமே... போட்டுத்தான் பார்க்கட்டுமே! யார் தடுக்கப் போகிறார்கள்? வெறும் வாய்ச் சவடாலாக இல்லாமல் அப்படி ஒரு கூட்டம் போட்டு காட்டவேண்டும் இளங்கோவன். பிரதமர் மன்மோகன்சிங்கே, "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் வாதங்கள் சரி கிடையாது' என்று பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். பிரதமர், தி.மு.க. வைச் சேர்ந்தவரா? காங்கிரஸ்காரர்தானே! இளங்கோவன் போன்ற மண்டூகங்கள், பிரதமர் என்ன சொல்கிறார்? சோனியாகாந்தி என்ன சொல்கிறார்?ன்னு தெரிந்துகொண்டு பேசவேண்டும். ஊழல் நடக்க வில்லையென்று பிரதமர் சொன்ன பிறகும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை இளங்கோவன் பேசுகிறார் என்றால்... பிரதமரையே கண்டிக்கிறார்னு அர்த்தம்.

""எங்களிடம் ஆலோசிக்காமல் எப்படி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முடிவை எடுத்தீர்கள்னு ஒரு எம்.பி. (டி.ஆர்.பாலு) பாராளுமன்றத்தில் குதிக் கிறார். இதேமாதிரி நாங்களும் கேட்கட்டுமா? தமிழகத் தில் முதலமைச்சர் பதவி மட்டும்தானே இருந்தது. ஆனா, இப்போ துணையெல்லாம் உருவாக்கியிருக் கிறீர்களே... காங்கிரஸை கேட்டா இதை செய்தீர்கள்'' என்று இளங்கோவன் ஆவேசப்பட்டிருக்கிறாரே?

அடே... அடே... பைத்தியக்கார இளங்கோவனே... உனக்கு அரசியலமைப்பும் புரியவில்லை, ஆட்சியமைப்பும் புரியவில்லை. மத்திய சர்க்கார்ங்கிறது தற்போது கூட்டணி ஆட்சி தத்துவத்தில் இயங்குகிறது. தி.மு.க. போன்ற பல கட்சிகளை தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார் மன்மோகன்சிங். கூட்டணி ஆட்சியில் தோழமைக் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டு, ஆலோசித்து, விவாதித்து... அப்புறம்தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அந்த அடிப்படை யில்தான் தி.மு.க. கேள்வி எழுப்பியது. ஆனா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா நடக்கிறது? இல்லையே... தி.மு.க.வின் தனி ஆட்சி நடக்கிறது. இந்த சூழலில், தி.மு.க.வின் கொள்கை முடிவுக்கு காங்கிரஸ்காரரான இந்த இளங்கோவன்கிட்டே எதற்கு கேட்க வேண்டும்?
""ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டுமென்று காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் வைத்த கோரிக்கையைக்கூட இவர்கள் (தி.மு.க.) ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகெதற்கு இவர்களை நாம் தூக்கி சுமக்க வேண்டும்'' என்று இளங்கோவன் கேட்பதில் என்ன தவறு என கேட்கிறார்களே காங்கிரஸ்காரர்கள்

காங்கிரஸ்காரர்கள் ஒரு விஷயத்தை அழுத்த மாக புரிந்து கொள்ள வேண்டும். புத்தி பேதலித் துள்ள இளங்கோவனால் புரிந்துகொள்ள முடியு மான்னு எனக்கு தெரியலை. இருந்தாலும் சொல் கிறேன். காமராஜர் மீது கலைஞருக்கும், கலைஞர் மீது காமராஜருக்கும் இருந்த நட்பு, மரியாதை, பாசம் எல்லாம் ஒரு பொக்கிஷம் மாதிரி. இதனைப் பட்டிய லிட்டால் நூலகத்தில் வைக்கிற அளவுக்கு ஒரு பெரிய புத்தகம்தான் போடவேண்டியதிருக்கும். அப்படிப் பட்ட கலைஞரா, காமராஜர் பெயர் கூடாது என்று சொல்லுவார்? காமராஜருக்கு தி.மு.க.வும் கலைஞ ரும் செய்துள்ள மரியாதையில் 1 சதவீதம் கூட அன்றைய-இன்றைய காங்கிரஸ்காரர்கள் யாரும் செய்தது கிடையாது. பொது மேடைகளில், தி.மு.க.வுக்கு எதிராக தைரியசாலி மாதிரி பேசுகிற இளங்கோவன், சோனியாவை சந்தித்துப் பேசலாமே! ஏன் பேச மறுக் கிறார்? உங்கள் யோக்யதை என்னன்னு சோனியா வுக்கு தெரியும்ங்கிறதினாலதான் இளங்கோ வன் போன்ற "உபரி'களுக்கு அப்பாயிண்ட் மென்ட்டே தரமாட்டேங்கிறார். இந்த உண்மை யெல்லாம் காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா
""சமீபத்தில் நடந்த அண்ணா நூற் றாண்டு விழாவில், கலைஞரை பாராட்டி கவிஞர்கள் கவிதை வாசித்தனர். இதனை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசிய இளங் கோவன், "ஒருவரை பாராட்டி பேசுவதற் கென்றே புலவர் கூட்டம் ஒன்று அலையுது. அப்படி புகழ்ந்து பேசுவதை கேட்டு சிலர் ரசிக்கின்றனர்'' என்று நக்கலடிக்கிறாரே?

அரசியலில் ஒருவரை இழித்தும் பழித்தும் பேசி சுயஇன்பம் காண்பதில் அலாதி பிரியம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரை "அரசியல் அரு வருப்பு'' என்று தான் சொல்ல வேண்டும். புலவர்கள் என்பவர் கள் அறிவின் முதிர்ச்சிகள். அவர் கள், தகுதியுள்ள வர்களைத்தான் பாராட்டு வார்கள். இளங்கோவன் போன்ற தற்குறிகளையா பாராட்ட முடியும்? அனைத்து துறைகளிலும் ஆற் றல் மிக்கவரான, சாதித்துக் காட்டியவரான கலை ஞரை பாடுவதில்தான் தங்கள் கவிதைகளுக்குப் பெருமைன்னு உலக கவிஞர்கள் நினைக்கின்றனர். சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆற்றல்மிக்கவ ரான கலைஞருக்கு இணையாக ஒரு காங்கிரஸ்காரரை காட்டுங்களேன். கவிஞர்கள் மட்டுமில்லை... நாங்க கூட பாராட்டுகிறோம். அப்படிப்பட்ட ஒரு ஆளை காட்ட முடியுமா இளங்கோவனால்?
""என்னைத் தோற்கடித்து எனக்கு சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டார்கள்'' என்று தி.மு.க.வை குற்றம் சாட்டுகிறாரே இளங்கோவன்?

தனது தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியா மல் உளறுகிறார் இளங்கோவன். தி.மு.க. மீதும் அதன் தலைமை மீதும் மாசு கற்பிக்கப்பட வேண்டுமென்பதற் காகவே, இப்படிப்பட்ட விஷயத்தை கக்குகிறார். தி.மு.க. வை வசைபாடுகிற காங்கிரஸ்காரர்களை வாக்காளர்கள் மன்னிப்பதில்லை. ஈரோட்டில் நின்றால், யாருடைய தயவு மில்லாமல் ஈஸியாக ஜெயித்து விடுவேன் என டெல்லியில் மல்லுக்கட்டித்தானே அந்த தொகுதியை வாங்கி னார். ஜெயிக்க வேண்டியதுதானே...! இத்தனைக்கும் அவருடைய சொந்த மண் ஈரோடு. அங்கேயே உன்னால் ஜெயிக்க முடியவில்லையென்றால்... உன் யோக்யதை, தராதரம் அந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. தோற்கடித்துவிட்டார்கள். இதில் தி.மு.க. என்ன செய்யும்? அதனால், தி.மு.க.வைப் பற்றியும் கலைஞரை பற்றியும் மறைமுகமாக பேசுவதையெல்லாம் தவிர்த்து விட்டு... உருப்படற வழியை இளங்கோவன் பார்ப்பது நல்லது.