பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, January 2, 2010

2009 சினிமா... 'ஹிட்' அடித்த படங்கள்!

வழக்கம் போல 2009ம் ஆண்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியாகின. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவு 131 படங்கள் வெளியாகின இந்த ஆண்டு.
இவற்றில் வெற்றிக் கோட்டைத் தொட்டவை, கையைக் கடிக்காமல் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியவை 19 படங்கள் மட்டுமே என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.
அவற்றின் விவரம்...
நாடோடிகள்:
2009-ம் ஆண்டில் அதிக லாபம் தந்த படம் என்ற பெருமையைப் பெறுகிறது சசிகுமாரின் நாடோடிகள் திரைப்படம். சமுத்திரக் கனி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் பல மடங்கு நல்ல லாபம் தந்தது. சமுத்திரக் கனிக்கு புதிய வாழ்கையும் தந்தது.
அயன்:
ஏவிஎம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். இயக்குநர் கேவி ஆனந்த் என்றதுமே இது மிடில்கிளாஸ் படமாக இருக்கும் என்றுதான் நம்பினார்கள். படத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லாததால் சன்னுக்கு விற்றது ஏவிஎம். ஆனால் அயனோ மசாலா படமாக வந்து வசூலையும் அள்ளியது. சன் டிவியின் வியாபார உத்தியே இந்த பெரிய வெற்றிக்குக் காரணம் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.2009-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி சன் பிக்சர்ஸின் அயன்தான். சிவாஜி படத்துக்கு அடுத்து அதிக வசூல் பெற்ற படமும் இதுதான்.
உன்னைப் போல் ஒருவன்:
கமல்ஹாசன், மோகன்லால் நடிப்பில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில், சக்ரி டோலட்டியின் இயக்கத்தில் உருவாகி வெளியான உன்னைப் போல் ஒருவன், இந்திப்பட ரீமேக்தான் என்றாலும், தமிழில் ஒரு புதிய முயற்சியாகப் பார்க்கப்பட்டது.வித்தியாசமான தமிழ்ப் படமாக வந்த உன்னைப் போல் ஒருவன் மூலம் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனாலும் கமல் ஹாசன் தனது மதவாதப் பார்வையை இதில் திணித்திருப்பதாக சர்ச்சையையும் எழுப்பியது. எப்படியிருந்தாலும் கமலுக்கு இந்தப் படம் லாபமே, தமிழ் சினிமா வுக்கும் பலம் கூட்டியபடம்.
பசங்க:
எந்தவித ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் வந்து அனைவரது பாராட்டையும் அள்ளிக் கொண்டு போனது. ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டாதான் இந்தப் பசமும். ஆனால் கிராமப்புறத்து பசங்களும் உஷாராக, புத்திசாலித்தனமாக, லட்சிய வேகத்தோடு இருப்பவர்கள் என்ற செய்தியை நேட்டிவிட்டியோடு சொன்னதில் வெற்றி பெற்றிருந்தார் இயக்குநர் பாண்டிராஜ். நல்ல தயாரிப்பாளர் என்ற பெயரை சசிகுமாருக்குப் பெற்றுத் தந்தது பசங்க. ரேணிகுண்டா:
முற்றிலும் புதுமுகங்களுடன் வெளியாகி, சத்தம் போடாமல் அனைவரின் சபாஷையும் பெற்ற படம். அஜீத், நடிகர் என்ற நிலையிலிருந்து பெரிய நட்சத்திரமாக மின்ன உதவிய படங்களைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, தன் மகன் ஜானியையே பெரிய கதாநாயகனாக்கி விட்டார் இந்தப் படம் மூலம்.
வெண்ணிலா கபடிக் குழு:
இந்தப் படமும் புதுமுகங்களுடன் வந்து ரசிகர்களின் மனதில் அமர்ந்த படம். சக்தே இந்தியாவை இன்ஸ்பிரஷனாக வைத்து நம்ம ஊர் கபடியை பிரதானப்படுத்தி ஜெயித்தவர்கள் இந்தக் குழுவினர். மூச்சு விடாமல் வெற்றிக் கோட்டைப் பிடித்து வெற்றியும் பெற்றது இந்த டீம்.யாவரும் நலம்:மாதவன், நீத்து சந்திராவின் நடிப்பில் வெளியான இந்த திரில்லர் படம், சுமார்தான் என்றாலும், விநியோகஸ்தர்களின் புலம்பலுக்கு ஆளாகாமல் தப்பித்த ஆச்சரியப் படம்.
மாயாண்டி குடும்பத்தார்:
பீம்சிங் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற படம் இது. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க வைத்த படம். முற்றிலும் இயக்குநர்களே நடிகர்களாக மாறி அனைவரையும் வியக்க வைத்திருந்தனர். கூட்டுக் குடும்பத்தின் அழகு, அவலம், பங்காளிச் சண்டை என உறவுகளுக்குள் பின்னிப் பிணைந்த இந்த மண்ணின் மனிதர்களது வாழ்க்கையைத் திரையில் பார்த்தபோது மனசு கனத்துப் போனது. பெரிய வெற்றி இல்லை என்றாலும், தயாரிப்பாளர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த படம் இது.
சிவா மனசுல சக்தி:
ஸ்லீப்பிங் விக்டரி என்று கோலிவுட் வட்டாரத்தில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தையை நிஜமாக்கிய படம் இது. சுமாராக இருந்தாலும் நகரப் பகுதிகளில் இந்தப் படத்துக்கு பார்வையாளர்கள் அதிகமாக இருந்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு படமெடுக்க வந்த விகடன் டாக்கீஸுக்கு இந்த வெற்றி உற்சாகம் தந்தது (ஆனால் அதே விகடன் குழுமத்தின் வால்மீகி சோகத்தைக் கொடுத்து விட்டது).
ஈரம்:
பேய்ப் படம் என்று கூறினாலும் பேயை கண்ணிலேயே காட்டாமல் தண்ணீரை மட்டும் காட்டி மிரட்டலாக எடுக்கப்பட்ட வெற்றிப் படம்.இந்தப் படத்தை எவ்வளவோ கேட்டுப் பார்த்தது சன் டிவி. ஆனாலும் ஷங்கர் அழுத்தமாக அமைதி காத்தார். படத்தின் வெற்றியைப் பார்த்து, வட போச்சே என சன் பிக்ஸர்ஸே புலம்பும் அளவுக்கு நன்றாக ஓடிய படம்.
பேராண்மை:
ஜெயம் ரவியின் நடிப்புப் பக்குவத்தை படம் போட்டுக் காட்டிய, சிறப்பான கதையம்சத்துடன் கூடிய அருமையான படம். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் வாரிக் குவித்தது. வரிசையாக தோல்வியைத் தழுவிய ஐங்கரனுக்கு முதல் வெற்றியாக அமைந்தது இந்தப் படமே.
கந்தசாமி:
அது ஏனோ தெரியவில்லை இந்தப் படம் ஒட்டு மொத்தமாக விமர்சகர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது. ஓவர் பில்ட் அப் கொடுத்த சுசி கணேசன் கடைசியில் சிவாஜியின் கதையை காப்பியடித்துப் படமாக்கிய ஏமாற்றத்தின் விளைவு என்று கூட இசைத் சொல்லலாம். ஆனால் கலைப்புலி தாணுவோ பல கோடி ரூபாய் வசூல் விவரம் காட்டி, நூறாவது நாள் விழாவும் எடுத்துவிட்டார். எனவே இதுவும் ஹிட் லிஸ்டில் சேர்ந்தாகி விட்டது.
இவை தவிர,கண்டேன் அழகர் மலை, மதுரை சம்பவம், படிக்காதவன், மாசிலாமணி, கண்டேன்காதலை போன்ற படங்களும் சராசரியாக ஓடி தயாரிப்பாளர்களை நாலு காசு பார்க்க வைத்தன.

Friday, January 1, 2010

பாதிரியாருடன் கன்னியாஸ்திரி!


வேளாங்கண்ணி என்றாலே கிறிஸ்தவர்களின் புனித தலமாக மட்டு மல்ல ஜாதி, மதம் கடந்த சாந்திக்கான அமைவிடமும் கூட. இந்த புனித பூமியை ஒருமுறையாவது வந்து தரிசித்து விட வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் எண்ணுவது வழக்கம்.
வேளாங்கண்ணி மாதா தேவாலய திருவிழாவில் பல லட்சம் மக்கள் கூடி கொண்டாடுவது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. வெளி மாநிலத்து சுற்றுலா பயணிகளும் கூட இப்படி வந்து செல்வது வழக்கம்.
இதே புனித பூமிக்கு புனிதர்கள் மட்டுமல்ல, பலநூறு காமுகர்களும் அவ்வப்போது வந்து செல்வதும், கூட்டத்தைப் பயன்படுத்தி திருட்டு கும்பல் அதிகரிப்பதும் வழக்கம்தான்.
இந்த புனித வெள்ளி நாளில் மட்டும் பலநூறு திருட்டு சம்பவங்கள் நடந்தும் வழக்காக பதிவாகவில்லை.அதே புனித வெள்ளி நாளில்தான் வேறொரு ஏடாகூடமான 10 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சி வெளியாகி புனித பூமியை நிலைகுலைய செய்து வருகிறது.
ஒரு பெட்ரூமில் உள்ளே நுழையும் ஒரு பாதிரியாரும், ஒரு கன்னியாஸ்திரியும் அவரவர்க்கே உரிய உடையில் இருக்கின்றனர். இது ஃபாதரின் அறை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.உள்ளே நுழைந்த ஃபாதரின் முகம் காட்டப்படவில்லை. ஆனால் எதிரில் பெட்டில் உட்கார்ந்திருக்கும் கன்னியாஸ்திரி முகம் மட்டும் நன்றாகவே காட்டப்படுகிறது. கன்னியாஸ்திரி யான அந்த பெண்தான் முதலில் அந்த வேலையை தொடங்கு கிறார்.
சொல்ல முடியாத வரைமுறையற்ற விளையாட்டு களும் நடக்கிறது. இவையனைத்தையும் அந்த ஃபாதராக காட்டப்பட்ட நபர்தான் வீடியோ பதிவுகளையும் செய் திருக்கிறார். பல்வேறு விளையாட்டு களில் தொடங்கி உறவுகளில்தான் முடிகிறது. புனித பூமியில் புனிதர் களாக கருதப்பட்டவர்களின் லீலைகளை படம் பிடித்த பாதிரியாரே தன் நண்பர்கள் மூலமாக வீடியோவை வெளியிடங் களுக்கும் பரவ விட்டதால் இப்போது வேளாங் கண்ணி தாண்டியும் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.தேவாலய ஊழியர்கள் நம்மிடம், ""கன்னி யாஸ்திரிகளும், ஃபாதர்களும் ஏசுவின் உத்தரவுப்படி மக்களுக்கு முகம் சுளிக்காமல் சேவை செய்ய வருபவர்கள்தான்.
தங்கள் சேவையில் ஏதும் தடை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே திருமணம், இல்வாழ்வை துறந்து வருவார்கள். இந்த தேவாலயம் புகழ்பெற்றது. இங்கு பலநூறு பெண்கள் தினம் தினம் வந்து மக்கள் சேவை செய்ய வருகின்றனர். தேவன் அனுப்பினார்னு வருவாங்க. சேவையும் செய்வாங்க. புனிதமான உடையும் அணிந்து கொள்வாங்க. அவர்களில் ஒருசில காம இச்சை கொண்ட பெண் கள்தான் இப்படி கண்ட இடத்தில் தவறாக புனித மான உடையுடன் நடந்துகிட்டு புனித தலத்துக்கும், உடைக்கும் இழுக்கு ஏற்படுத்துறாங்க.
இங்க 6 பாதிரியார்களும், 5 பூஜை செய்றவங்களும், 15 பர்மனென்ட் கன்னியாஸ்திரிகளும் இருக்காங்க. ஆனா தினமும் 1000 பெண்கள் கன்னியாஸ்திரிகள் தியான கூடத்துக்கு வந்து பாட்டு பாடுவாங்க, சேவைகள் செய்வாங்க.இங்கேயே இருக்கிற ஒருசில ஃபாதர்கள் கொஞ்சம் கவுச்சி புடிச்சவங்களும் இருக்காங்க. இந்த பாட்டு பாட வர்ற கன்னியாஸ்திரிகளை பர்ம னென்ட் ஆக்குறேன்னு சிலரை பணிய வச்சிடு றாங்க. எல்லாருக்கும் தனித்தனியா தங்கும் அறைகள் தேவாலயம் ஒட்டியே இருக்கு. எல்லா சவுகரியமும் இருந்தாலும் பெண் உறவு வேணும் கிறபோது சிலர் இதுபோன்ற வேலைகள் செய்றாங்க.
சில பேர் வெளியிடங்களுக்கு போவாங்க. சிலர் இதுபோல அவங்க அறைகள்லயே நடந்துக்கிறாங்க. வெளியில இருந்து வரக்கூடிய பக்தர்களும் ஏதாவது பெண்களை தள்ளிக்கிட்டு வந்து இங்க அறையெடுத்து தங்கிட்டு போறவங்களும் இருக்காங்க. இப்ப இந்த வீடியோவுல இருக்கிற அந்த ஆண் யார்னு தெரியல. இதே தேவாலயத்துல பலமுறை சர்ச்சைகள்ல சிக்கியவராக ஒருவர் இருக்கிறார். அவர்தான் இந்த வேலை செய்வார்.
இங்க யாரும் யாரையும் கட்டுப் படுத்த முடியாமதான் நடந்துக் கிட்டு இருக்காங்க. புனித நாளான புனித வெள்ளியில் இந்த காட்சிகள் வெளியாகி இருப்பது ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. உடனே இது யார்னு கண்டு பிடிக்கணும். இல்லைன்னா புனித தலத்தின் புனிதம் கெட்டுப் போறதோட மேலும் தொடர்ந்து நடக்கத் தொடங்கிடும். இதுக்கு அரசுதான் நல்ல முடி வெடுக்கணும்'' என்று பேசியவர்கள் ஓடினார்கள் பூசைக்கு நேரமாச்சு என்று.இன்னும் சிலரோ, ""காஞ்சிபுரம் குருக்கள், சென்னை சாமியார், ஆந்திர கவர்னர் திவாரி வரிசையில இப்ப வேளாங்கண்ணியில வெளியாகி இருக்கிற இந்த புனித உடை ஏடாகூட காட்சிகள் ரொம்ப கேவலமா இருக்கு. இதுக்கெல்லாம் நல்ல நடவடிக்கை எடுக்கணும்.
வீடியோ எடுத்தவரையும் இதை வெளியில விடறவனையும் முதல்ல பிடிச்சு உள்ளே போடணும். ஊர் பேரை கெடுத்துட்டாங்க.புனிதமாக நினைக்கிற இந்த உடையும், உடைக்குள் இருக்கிற பெண்ணும் எப்படி என்ன சர்ச்சையை ஏற்படுத்தப் போகுதோ'' என்றனர். வேளாங்கண்ணி நகர மக்களோ, ""ஊர் பேரை கெடுத்துட்டாங்க'' என வருத்தப்பட்டனர்.
இந்த வீடியோ காட்சியில் பாதிரியார், கன்னி யாஸ்திரி வரைமுறையற்ற ஏடாகூட லீலைகளில் ஈடுபட்டிருக்கிறார்களே? யாரென்று தெரிந்து அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா? என்று தலைமை பாதிரியார் மைக்கேலிடம் பேசினோம்.""நீங்க சொல்றது புதுசா இருக்கு. இதுவரை என் கவனத்துக்கு வரல. இந்த வீடியோவுல யார் இருக்காங்க என்பதையும், எங்க எடுத்தாங்கன்னும் விசாரிக்கிறேன்.
தினமும் பல ஃபாதர்கள், கன்னியாஸ் திரிகள் வந்து போற இடம். இதுல யார்னு கண்டுபிடிக் கிறது? விசாரிக்கிறேன்'' என்றார் பொறுப்பாக.பாவங்களை மன்னியுங்கள் என்று மண்டியிட்டு நிற்கும் மக்களின் தூதுவர்களாக தேவனிடம் கொண்டு செல்லும் பாதிரியார்கள் போன்றவர் கள் இப்படியும் இருக்கலாமா? கன்னியாஸ்திரி என்றாலே புனித வார்த் தை.
அதை குழி தோண்டி புதைக்கலாமா பெண்கள்? என்ற வினாக்கள் தேவால யம் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

சமாதானம் நோக்கிய பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேண தயார்

எமது இறைமையை ஏற்று சமாதானம், சுபீட்சத்தை நோக்கிய எமது பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேணுவதற்கும் நாம் தயாராக உள்ளோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்து ள்ளதாவது; புதியதோர் ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் வேளையில் கடந்த வருடத்தை மீட்டிப்பார்ப்பதும் புதிய ஆண்டின் எதிர்பார்ப்புகள் குறித்து சிந்திப்பதும் மரபாகும்.
கடந்த வருடம் நாம் ஒரு தேசமாக ஒன்றிணைந்து 27 வருடகால கொடூரப் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து, எமது மக்கள் மத்தியிலிருந்த சந்தேகம், பிரிவினை என்பவற்றைத் துடைத்தெறிந்ததன் மூலம் நாம் பெற்றுக்கொண்ட அடைவுகள் குறித்த பெருமையோடும் திருப்தியோடும் புதிய ஆண்டில் பிரவேசிக்கின்றோம்.
எமது வரலாறு நெடுகிலும் நாம் செய்ததுபோன்ற அளப்பெரும் தியாகங்களின் மூலம் ஐக்கிய இலங்கையை வெற்றிகொண்டோம். புதியதோர் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் இச்சந்தர்ப்பம் தேசத்தின் வெற்றிக்காக உயர்ந்த தியாகங்களைச் செய்த படைவீரர்கள், அவர்களது பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவிமார்கள் அனைவருக்கும் தேசத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.
ஒரு தேசம் என்ற வகையில் முன்னேற் றத்தையும் சுபீட்சத்தையும் எதிர்பார்க்கும் எமது மக்களின் அபிலாஷைகளை நிறை வேற்றவும் எமது எதிர்கால சந்ததியினருக்கு அமைதியும் ஐக்கியமும் நிறைந்த நாட்டை கட்டியெழுப்பவும் முடியுமென்ற மிகுந்த நம்பிக்கையோடு நாம் இப் புத்தாண்டைப் பார்க்கிறோம்.
பயங்கரவாதத்தைத் தோற் கடிக்கும் எமது முயற்சிக்கு குறுக்கே நின்ற இடையூறுகளுக்கு எதிராக நாம் உறுதியாக இருந்ததுபோன்று கடந்தகால காயங்களைக் குணப்படுத்தும் விடயத்திலும் வெளியிலி ருந்துவரும் அழுத்தங்களுக்கு அடிபணியாது அந்த இலக்கை அடைந்துகொள்ள எம்மை அர்ப்பணித்துள்ளோம்.
பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் எமது முழுப்பலத்தையும் அபிவிருத்தி செயற்பாடு களை நோக்கி குவிப்பதற்கும் பயங்கர வாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் நாம் ஆரம்பித்த பல்வேறு பாரிய கருத்திட்டங்களைத் தொடர்வதற்கும் நாடு சுதந்திரமடைந்தது முதல் மறுக் கப்பட்டிருந்த முன்னேற்றத்தை எமது நாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப் பதற்கும் எனது அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. இன்று ஆரம்பிக்கும் புதிய தசாப்தத்தின் எமது அபிவிருத்தி மூலோபாயங்கள் இலங்கையை தென்னாசியாவிலேயே ஒரு கேந்திர நிலையமாக மாற்றியமைக்கும்.
அந்தவகையில் அபிவிருத்தியை கட்டியம் கூறும் வகையில் அமைக்கப்படும் துறை முகங்கள், விமான நிலையங்கள் மற்றும் விரிந்த நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக் கப்பட்டுவரும் அதேவேளை தகவல் தொழிநுட்ப அறிவையும் பரந்தளவில் அதிகரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.
எதிர்பார்க்கப்பட்ட ஒரு குறுகிய காலப் பகுதியில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்களில் பெருந்தொகையினரை மீள் குடியேற்றும் நடவடிக்கையில் நாம் வெற்றிகண்டோம். இதேபோன்று புத்தாண்டில் எமது மக் கள் நாட்டின் அரசியல் அபிவிருத்தியில் ஒரு தீர்க்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கையின் தேசிய விவகாரங்களில் மூலோபாய தலையீடுகளைக் கொண்டுவர விரும்புபவர்களால் ஏற்படுத்தப்படும் பொரு ளாதார தடை அல்லது வர்த்தக நலன்களை தடைசெய்யும் அச்சுறுத்தல்களால் நாம் பின்வாங்கப்போவதில்லை.
எமது நாட்டில் பயங்கரவாதத்தைத் தோற் கடித்து எமது மக்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவருவதில் எமக்கு முழு அளவில் உதவிய நாடுகளோடு பலமானதும் நிலையானதுமான நட்பை பேண நாம் அர்ப்பணிப்போடு உள்ளோம். அதேபோன்று, எமது இறைமையை ஏற்று சமாதானம் சுபீட்சத்தை நோக்கிய எமது பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேணுவதற்கும் நாம் தயாராக உள்ளோம். புலர்ந்திருக்கும் இப்புத்தாண்டில் நாம் எதிர்பார்க்கும் அபிவிருத்தி எமது சூழ லைப் பாதுகாப்பதுவும் அதிகரித்துவரும் போட்டிமிக்க உலக சந்தைச் சூழலில் எமது உற்பத்திகளுக்கு நல்லதொரு இடத்தை உறுதி செய்யும் அதேவேளை எமது தேசிய சொத்துக்களைப் பாது காப்பதுவுமாகும். எல்லா இலங்கையர்களினதும் அபி லாஷையான கண்ணியமும் கீர்த்தியும் மிக்கதோர் இலங்கை தேசத்தை கட்டி யெழுப்புவதற்காக தேசத்தின் ஸ்திரத்தன்மை எமது மக்களின் முன்னேற்றம் என்ப வற்றுக்கான அர்ப்பணிப்போடு சமாதானமும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த புத் தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மர்மமான முறையில் கணவன் மனைவி படுகொலை :திடுக்கிடும் தகவல்

தற்போது மீள் குடியேறியுள்ள குடும்பங்களை சோதித்துப் பார்ப்பதற்கும், இதுபோல உண்மையாகவே காட்டில் மறைந்திருக்கும் சில விடுதலை புலிகள் உணவு கேட்டு வந்தால் இவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் எனப் பரிசோதிக்கவே இவ்வாறு இராணுவத்தினர் நடந்துகொண்டதாக அங்கிருந்த சிலர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் உண்மையாகவே விடுதலைப் புலிகள் வந்து உணவு கேட்டால் கூடக் கொடுப்பதற்கு இனி மக்கள் அஞ்சுவார்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.சுமார் 3 நாட்களுக்கு முன்னர் இக் குடும்பம் கொலைசெய்யப்படதாகக் கூறப்படுகிற போதும் இதனைச் சுயாதீனமாக எம்மால் உறுதி செய்யமுடியவில்லை.
அதிலும் இவ் விடையம் குறித்து மக்கள் மேலும் கருத்துக்களைத் தெரிவிக்க மறுக்கின்றனர். மீள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் இவ்வாறான பல அசம்பாவிதங்கள் நடைபெறுகின்ற போதிலும் இதுவரை எதுவும் வெளிவராத நிலையிலேயே உள்ளது என்பது குற்பிடத்தக்க விடையமாகும்.
இவ்வாறன செயல்கள் மூலம் ஒரு உளவியல் போரைத் தொடுத்து, மீள் குடியேறிய மக்களை அச்சுறுத்தி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இலங்கை இராணுவம் பகிரங்கமாக முயல்வது தெரிகின்றது.புலம்பெயர் மக்களின் உறவினர்கள் யாராவது இது குறித்து அறிந்திருந்தால் எமது இணையத்துடன் தொடர்புகொள்ளவும்.
கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கணவன் மனைவி, யார் என்பது பற்றியோ அல்லது அவர்கள் பெயர்விபரங்களோ இன்னும் சரிவரக் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, December 31, 2009

""போர் வெடிக்கும்'' -அனல் வீசிய தஞ்சை மாநாடு


உணர்ச்சியும் எழுச்சியுமாய் இரண்டு நாட்கள் தகித்தது தஞ்சைத் தரணி. பழ.நெடு மாறனின் உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவையொட்டி, ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாடு, தஞ்சையில் எம்.நடராஜனுக்கு சொந்தமான தமிழரசி மண்டபத்தில் டிசம்பர் 26,27 தேதி களில் நடைபெற்றது.

திரும்பிய பக்கமெல்லாம் பிரபாகரன் பேனர்கள், ஈழ வரைபடம், சிங்கள அரசின் கொலைவெறித் தாண்டவக் காட்சி களாய் தஞ்சாவூர் காட்சியளித்தது.முதல்நாள், மேரீஸ் கார்னரி லிருந்து புறப்பட்ட பேரணியில் நெடு மாறன் தலைமையில் ஆயிரம்பேர் திரண்டிருந்தனர். வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தமிழர்களும் இதில் அடக்கம். உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் மாநாட்டு அரங்கத்திற்கு சென்று சேர்ந்தது பேரணி. மாநாட்டு அரங்க நுழைவாயிலில், முள்ளிவாய்க்காலில் இருந்து சேகரித்து வரப்பட்ட ரத்தம் தோய்ந்த மண் வைக்கப் பட்டிருந்தது. அதற்கு அஞ்சலி செலுத்தி விட்டே அரங்கிற்குள் நுழைந்தனர்.ஈழம் தொடர்பான புத்தகங்கள், குறுந்தகடுகள் வெளியிடும் நிகழ்ச்சிகளும் கருத்தரங்குகளும் முதல்நாளில் முதன்மை பெற்றிருந்தன. கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கிய இந்திய-இலங்கை கூட்டமைப்பின் சச்சிதானந்தம், ஈழத்தமிழர்களுக்காகத் தாய்த் தமிழகம் என்ன செய்து விட்டது என்ற ரீதியில் பேச, அரங்கத்தின் வெப்பநிலை உயர்ந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கவியரங்கமும், வெளிநாடு வாழ் தமிழர்களின் அரங்க மும் முக்கியமானவை.

கவியரங்கம் அதன் வீச்சோடு நடந்தேற, வெளிநாட்டுத் தமிழர்கள் அரங்கத்திற்குத் தலைமை தாங்க வேண்டிய இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் , துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது, அனுமதியில்லை என அவரை திருப்பி அனுப்பினர் இந்திய அதிகாரிகள். இது இரண்டாம் நாளின் பரபரப்பாக அமைந்தது.மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலை யிலும், செல்போனில் தலைமையுரையாற்றினார் சிவாஜிலிங்கம். ""ராஜதந்திர கடவுச்சீட்டு இருந்தும்கூட என்னை அனுமதிக்க மறுத்து விட்டது இந்திய அரசு.

ராஜபக்சேவையும் பொன் சேகாவையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்பதாலேயே இந்தியா என்னைத் தடுத்துவிட்டது. இந்தியா வின் தவறான வெளியுறவுக் கொள்கைதான் என்னை இந்த மாநாட்டுக்கு வர விடாமல் தடை செய்துள் ளது. இக்கட்டான நிலையில் ஈழத்தமிழினம் உள்ளது. ஈழத்தமிழர் உரிமைகள் காக்கப்பட, தொப்புள் கொடி உறவுகளின் துணைவேண்டும்'' என்றார்.

கனடாவிலிருந்து வந்தி ருந்த தேவராஜன், ""இந்திய சுதந்திரத்திற்காக சிவாஜிலிங்கத்தின் தாத்தா இலங்கையில் போராடினார். ஆனால், பேரனுக்கோ இந்தியாவில் நுழையவே அனுமதியில்லை'' என்றார் சோகத்துடன். மாநாட்டில் தோழர் நல்லகண்ணு, பேராசிரியர் விருத்தாசலம், பெங்ளூரு தமிழ்ச்சங்கம் சுப்ரமணியன், அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா ஆகியோருக்கு "உலகப் பெருந்தமிழர்' பட்டம், பிரபாகரன் படம் போட்ட விருதுடன் வழங்கப் பட்டது.தோழர் நல்லகண்ணு, ""முள்ளிவாய்க்கால் சோகம் இனி எந்த மூலையிலும் நடக்கக் கூடாது.

போராட்ட முறையை எதிரிதான் தீர்மானிக்கிறான். அதனால், ஆயுதம் ஏந்துவது தவறில்லை.

இலங்கைப் பிரச் சினையில் இந்திய அரசின் அணுகுமுறை தவறாக உள்ளது'' என்றார். ம.நடராஜன் பேசும்போது, ""தனித்தமிழ்நாடு அமைந் திருந்தால் தனி ஈழம் எப்போதோ அமைந் திருக்கும்'' என பரபரப்பூட்டினார்.தாயகத் தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று சச்சிதானந்தம் முதல்நாள் கேட்டதற்கு இரண்டாம் நாளில் பதிலளித்தார் பழ.நெடு மாறன்.

""புலிகளுக்கு சிகிச்சை அளித்த வைகோ தம்பி சிறைக்குப் போனார். நானும் போனேன். பயிற்சி பட்டரை அமைத்து உதவி செய்தவர் எம்.ஜி.ஆர். இது ஜெய லலிதாவுக்குப் பிடிக்கா மல், பயிற்சி அளிப் பவர்கள் எங்க ளையே அழிக் கலாமே என பிரதமர் இந்திராவிடம் சொல்ல, இதே கேள்வியை எம்.ஜி.ஆரிடம் கேட்ட இந்திரா, பதிலையும் அவரே சொல்லி எம்.ஜி.ஆரை எழுதச் சொன்னார். அதாவது, அவர்கள் புலிகள் அல்ல, அகதிகள் என்று.

சட்டசபைக்கு அனைவரும் கருப்புசட்டை போட்டு வரச்சொன்னார் எம்.ஜி.ஆர். அப்போதுதான் கலைஞரும் பேராசிரியரும் பதவியை ராஜினாமா செய்தார்கள்'' என்றார்.கவிஞர் காசிஆனந்தன், ""நான் சிங்கள அரசில் வேலை பார்த்தபோது, எனக்கு கீழே இருந்து வேலை பார்த்த சிங்களர்கள்கூட தமிழ் நாய்கள் என்பார்கள். பிரபாகரன் வந்த பிறகு, அதே சிங்களர்கள் எங்கள் தமிழர் களைப் பார்த்து தமிழ்ப்புலிகள் என்றார்கள்.

உலக வரலாற்றில் பிரபாகரன் குடும்பம் போல தியாகம் செய்த குடும்பம் இல்லை. விரைவில் பெரிய போர் வெடிக்கும்'' என்றார் உணர்ச்சி கரமாக.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ""திருப்பதிக்கு வந்த ராஜபக்சேவுக்கு அனுமதி வழங்குகிறார்கள். ஆனால், சிவாஜிலிங்கத்துக்கு அனுமதியில்லை. இது பின்னடைவு இல்லை.

தொடக்கம். 7 நாட்டு படைகளுடன் போரிட்ட ஒரே தலைவன் பிரபாகரன் மட்டும்தான். அவர் தலைமையில் வீறுகொண்டெழுவோம். வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு உலகத்தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதை இங்கேயும் கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்றார். அதுவே, தீர்மான மாகவும் நிறைவேற்றப்பட்டது.

ஈழத்தமிழர்களின் துயர்துடைக்க தாயகத் தமிழர்களின் கரங்கள் எப்போ தும் தயாராக இருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது தஞ்சையில் நடந்த உலகத் தமிழர் மாநாடு.

Wednesday, December 30, 2009

எரித்திரியாவில் உள்ள புலிகளின் விமானங்களை கைப்பற்றும் முயற்சி தோல்வி

hmmஎரித்திரியா நாட்டில் உள்ள ஒரு விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 விமானங்கள் தரித்து நிற்பதாகக் கூறப்படுகிறது. தரித்து நிற்பதாகக் கூறப்படும் சிலின் 143 ரக விமானங்களின் உரிமையினைக் கோரி அவற்றை தேர்தலுக்கு முன்னதாக இலங்கை கொண்டுவரும் நோக்கில் இலங்கை விமானப்படை அதிகாரிகள் சிலர் சமீபத்தில் எரித்திரியா சென்று திரும்பியுள்ளதாக அதிர்வு இணையத்திற்கு செய்திகள் கசிந்துள்ளது. இவ்வாறு எரித்திரியா சென்ற அதிகாரிகளிடம் சரியான உரிமைகோரும் பத்திரம் இல்லாததால் விமானங்களை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை அங்கு தரித்து நின்ற 10 விமானங்களில் 4 விமானங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கை அதிகாரிகள் அங்கு செல்ல முன்னரே, சுமார் 2 மாதத்திற்கு முன்னரே 4 விமானங்கள் அவுஸ்திரேலியா நோக்கி நகர்த்தப்பட்டு விட்டதாக விமான நிலைய அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். இதனால் மீதம் உள்ள 6 விமானங்களும் சரியான முறையில் உரிமை கோரப்பட்டு அப்புறப் படுத்தப்படலாம் என்று கூறிய அதிகாரிகள், அதனை இலங்கை அரசிடம் கொடுக்க மறுத்துவிட்டனர்.இதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய இலங்கை அதிகாரிகள் தற்போது என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகின்றனர். சிலின் 143 இலகு ரக விமானங்களைத் தயாரிக்கும் செக்கோஸ்லாவாக்கியாவிடம் இருந்து 2 விமானங்களை கொள்வனவு செய்துவிட்டு, அது தான் தாம் கைப்பற்றிய புலிகளின் விமானம் என்று தேர்தலுக்கு முதல் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Tuesday, December 29, 2009

Curfew in Jaffna to be lifted

Colombo- Sri Lankan authorities have decided to lift the night time curfew imposed in Jaffna from the 31st of this month. Governor of the Northern Province Major General G.A. Chandrasiri said that the curfew will be lifted from Jaffna as the normalcy has returned to the peoples' lives and the traveling on A-9 is permitted

Monday, December 28, 2009

இயேசுவுக்கு உலகம் தந்த முதல் பரிசு!


யாழ்ப்பாணத்து அருட்குரு ஒருவரின் தாயார் சென்னை வந்தி ருந்தார். கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்து சொல்லவும் நக்கீரன் செய்து வரும் நற்பணிகளுக்கு நன்றி கூறவுமாய் கடந்த புதன்கிழமையன்று என் அலுவலகம் வந்தார்.


நீண்டு உரையாட நேர அவகாசமிருக்கவில்லை. முல்லைத்தீவு வரை ஓடிக் களைத்து முள்ளிவாய்க்கால் கொடுமை கண்ட நான்கு லட்சம் தமிழருள் அக் கொடு மையின் காலத்தில் தாய்மையுற்ற பெண்களுக்குப் பிறக்கும் குழந்தை கள் குறைபாடுகளுடன் பிறக்கின்றன என்ற செய்தியை முக்கியமாகச் சொல்ல வேண்டியே என்னைச் சந்திக்க விரும்பியதாகவும் கூறினார்.


தனது உறவுப் பெண் ஒருவர் வவுனியா வதை முகாமில் எட்டாம் மாதத்திலேயே பிறப்புவலி காண, வவுனியா மருத்துவமனையில் பிள்ளைக்கு மட்டுமே படுக்கை-தாய் கூட்டத்தோடு கூட்டமாய் அழுக்கும் நாற்றமுமான அரசு மருத்துவமனையில் அல்லல்பட்ட அவலம், பிறந்த குழந்தையும் இதயத்தில் குறைபாடுடன் பிறக்க கொழும்பு நகருக்கு அவசர அறுவை சிகிச்சைக்கு வேண்டி புறப்பட்டு நிற்க ஆம்புலன்ஸ் வந்து சேரவே நான்கு நாட்களான கொடுமை... கொழும்பில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுக்கும் அவகாசம் இன்றி வதைமுகாமில் ""இருக்கிறேன் ஐயா'' பதிவு செய்வதற்காக மீண்டும் ஆம்புலன்சில் பதறிப் பயணம் செய்ய வேண்டிய வேதனை... அந்தத் தாயும் இப்போது பாதி மனம் பேதலித்தவளாய் ஆகிவிட்டாள்...கடந்துபோன கிறிஸ்து பிறப்பு தினத்தன்று நினைவிலும், ஜெபங்களிலும் நின்றவர்கள் தமிழீழத்தின் இத்தாயும் இவர்போன்று சொல்லொணா துன்பங்களை தொடர்ந்து அனுபவிக்கும் நூற்றுக்கணக்கான பெண்களும்தான்.


இயேசுவின் தாயாம் கன்னிமரியாளுக்கு பேறு கால வலி வந்துற்றபோது அவளும் தன் கணவருடன் அகதி போலவே தெருவில் நின்றார்கள். இல்லத்து வாயில்கள் எவையும் அவளுக்காயும் குழந்தை இயேசு பாலனுக்காயும் திறக்கவில்லை. வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறிச் செல்லும் சத்திரங்களில் கூட இடம் கிடைக்கவில்லை.


நிறைவாக மாடுகள் படுத்துறங்கும் தொழுவக் கிடையில்தான் இன்று உலகில் இருநூறு கோடிக்கும் மேலான மக்களால் "மீட்பர்' என வணங்கப்படும் இயேசு பிறந்தார். பனிவிழும் இரவொன்றில், கொடுங் குளிர் வாட்ட இவ்வுலகில் ஏழைகளும் அனாதைகளும் படுகிற அனுபவமே அம்மீட்பருக்கு இப்பூவுலகம் தந்த முதல் பிறந்த நாள் பரிசு.


அவர் பிறந்துவிட்ட செய்தியை வானகத்தின் தூதுவர்கள் வந்து முதலில் அறிவித்ததுகூட கடையர்களிலும் கடையர்களான ஆட்டிடையர்களுக்குத்தான். ""உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை, பூமியிலே நல் மனதுடை யோர்க்கு அமைதி'' என வாழ்த்துச் சொல்லிய அவ் வானகத் தூதுவர்கள், ""உங்களுக்காய் பெத்லெகெமின் மாட்டுத் தொழுவமொன்றில் உலக மீட்பர் பிறந்துள்ளார்'' என இடையர்களுக்கு அறிவித்தனர்.


நள்ளிரவில் சாக்குத் துணிகளால் போர்த்திக் கொண்டு வானக் கூரையின் கீழ் படுத்துறங்கிக் கொண்டிருந்த அந்த ஏழை ஆட்டிடையர்கள்தான் இயேசு பாலனை முதலில் சென்று கண்டு வணங்கும் பாக்கியம் பெற்ற வர்கள்.

வதைமுகாம்களிலும், தற்காலிகத் தடுப்பு முகாம்களிலும், பாலியல் வல்லுறவின் இருட் டறைகளிலுமாய் மானுடத்தின் மாண்புகள் இழந்து உழலும் நம் இனத்தின் அம்மக்களது சமகால அனுபவங்களும் இயேசுவினது பிறப்பு அனுபவமும் ஒன்றாகவே பார்க்க முடிகிறது.

இறைவன் ஏழ்மையை விரும்பவில்லை. வறுமை போல் கொடுமை வேறொன்றுமில்லை.

""இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்-பரந்து கெடுக இவ் உலகியற்றியான்'' என்ற வள்ளுவப் பெருந்தகை யின் கோபம் என் காதல்களில் ஒன்று. இவ் வுலகில் இரந்துண்ணும் கொடுமைக்கு ஒரு மனிதன் மாண்பிழைக்கும் நிலைவரின், இவ்வுலகைப் படைத்த அக்கடவுளே வந்து பிச்சையெடுத்துக் கெடுவானாக- என்று சாபமிடும் திருவள்ளுவக் கோபம்.

ஆம், இறைவன் ஏழ்மையை நேசிக்க முடியாது. ஆனால் ஏழைகளோடு நிற்கிறார், வறியவர்களோடு தன்னை அடையாளப் படுத்துகிறார். அந்நிலையிலிருந்து அம்மக்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதற்காய். உலகின் பெரியவர்களெல்லாம் கைவிட்டு விட்ட நம் மக்களுக்கு கிறிஸ்து பிறப்பு வாழ்த்தாக தூரத்திலிருந்து நாம் இதயத்தில் சொல்கிறோம்: கடவுள் நம்மோடு, நீதி நம்மோடு, மீட்பு வரும், தர்மத்தை சூது வெல்லும், தர்மம் மறுபடியும் வெல்லும்.

உண்மையில் இயேசு பிறந்த காலச் சூழமைவும் இன்றைய ஈழம் போலவே இருந்தது. அவரது அன்றைய தேசமான பாலஸ்தீனம் உரோமாபுரிப் பேரரசின் ராணுவ ஆக்கிரமிப்புப் பிடியில் நின்ற காலமது. அநியாய வரி, அவமானங்கள், பாலியல் வல்லுறவுகள் என அடிமைத்தனத்தின் கொடும் சுமைகளை அம்மக்கள் அனுபவித்திருந்த காலம்.

நமக்கென மீட்பர் ஒருவர் வருவார், நமக்கும் காலமும் வாழ்வும் வருமென அவர்கள் காத்திருந்த காலம். அக்காத்திருப்பின் நிறைவாகவே இயேசு வந்தார். அவரது வருகையைக் குறித்து பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே பழைய வேத புத்தகமொன்றில் இவ்வாறு சொல்லப்பட்டிருந்தது: ""இருளில் நடந்து வந்த மக்கள் போராளியைக் கண்டனர், மரண நிழல்படும் நாட்டில் வாழ்ந்தோருக்கு ஒளி உதித்தது''.

ஈழம் இன்று இருள் சூழ நிற்கும் நாடு. மரண நிழல் கவிந்து வெளிறி நிற்கும் பூமி. ஆயினும் நம்பிக்கையை விட்டுவிட முடியாது. நம்பிக்கையே விடுதலையின் உயிரும், ஒளியும், உப்பும்.இயேசு பிறந்தபோது நிகழ்ந்த பிறிதொரு கொடுமை உரோமாபுரிப் பேரரசின் எடுபிடிக் கூலி ஏரோது மன்னன் செய்தது.

சோதிடர் களும் குறிசொல்பவர் களும் ""பிறந்திருக்கும் இயேசு பாலன் உமது அரியணைக்கு அச் சுறுத்தலாய் இருப்பார்'' என வரலாறு முழுதும் நீங்காது வந்து போகிற மோசடிக் குறிசொல்வோர் போல் எச்சரிக்க, அம் மன்னன் முதலில் பாலன் இயேசுவை கண்டுபிடிக்க முயல்கிறான். அது இயலாதபோது அக் காலகட்டத்தில் நாட் டில் பிறந்த அத்தனை குழந்தைகளையும் கொன்று விடும்படி தன் கூலிப்படைகளுக்கு உத்தர விடுகிறான்.ராஜபக்சே-கோத்தபய்யா சகோதரர்களை இங்கு இழுத்து நிறுத்துவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

சமீபத்தில் ""சாட்சியில்லா போர்'' (ரஹழ் ஜ்ண்ற்ட்ர்ன்ற் ஜ்ண்ற்ய்ங்ள்ள்) என்ற அமைப்பிற்கு வாக்குமூலம் வழங்கியுள்ள இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் தகவலொன்றை வாக்குமூலமாய் பதிவு செய்துள்ளார்.

அதன்படி இலங்கை ராணுவப் பிடியில் இப்போது மனிதாபி மானமற்ற சித்திரவதைகளுக்கு உள்ளாகி வரும் சுமார் 12,000 விடுதலைப் புலிப் போராளிகளில் கணிசமானவர்களை தீர்த்துக் கட்ட ராஜபக்சே- கோத்தபய்யா சகோதரர்கள் முடிவு செய் துள்ளதாய் கூறி எச்சரித்துள்ளார். இந்த மனித உரிமை ஆர்வலர் இலங்கையின் ராணுவ உயர் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

இரு வாரங்களுக்கு முன் கிடைத்த பிறிதொரு செய்தியின்படி கைது செய்யப்பட்டு வதை முகாம்களில் வாழும் புலிகளின் முக்கிய முதல், இரண்டாம், மூன்றாம் நிலை தளபதிகள், அரசியற் பிரிவின் தலைவர்களை கதை முடிக்கும் திட்டம் தயார் என்று சொல்லப்பட்டது. இப்போது பெரு வாரியான போராளி களையும் முடித்துவிட முடிவு செய்யப் பட்டுள்ளதாய் எச்சரிக்கப்படுகிறது.மிகப்பெரும் நாடகமாக இது அரங்கேற்றப்படப் போகிறதெனவும் அந்த ஆர்வலர் எச்சரித்துள்ளார்.

அதாவது சரணடைந்த ஒரு தொகுதி புலிகளை அணியாக்கி பெருந்தொகையான புலிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வதை முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வைப்பார்களாம்.

அதனை சாக்காகப் பயன்படுத்தி அத்தனைபேரையும் கதை முடிப்பதுதான் திட்டமாம். உலகிற்கு எப்படி இந்நாடகம் பிரச்சாரம் செய்யப்படுமென்றால் வன்னிக்காடுகளில் தப்பி நின்ற புலிகள் ஒருங்கிணைந்து அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போராளிகளை மீட்க வேண்டித்தாக்குதல் நடத்தினார்கள். அதனை தடுத்து நிறுத்த ராணுவம் நடத்திய தாக்குதலில் இத்தனை நூறு அல்லது ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பதாகக் கதை விரிக்கப்படுமாம்.

ஏன் இந்த முடிவினை ராஜபக்சே-கோத்தபய்யா சகோதரர்கள் எடுத்துள்ளார்கள் என்பதற்கும் காரணம் சொல்லப்படுகிறது. சர்வாதிகாரிகள், மனித குலத்திற்கெதிரான குற்றம் புரிந்தவர்கள் என்றுமே நிம்மதியாக வாழ்ந்ததாய் வரலாறு இல்லை.

ராஜபக்சே சகோதரர்களையும் இப்போது பலவிதமான பயங்கள் பிடித் தாட்டுவதாய் தெரிகிறது. இப்போதைய முதற்பயம் தேர்தலில் ஒருவேளை தோற்றுவிட்டால்... என்பது. வெளியே பெரிய பலசாலிகள் போல் காட்டிக் கொண்டாலும் உண்மையில் ஒருவேளை தோல்வியை சந்திக்க வேண்டி வருமோ என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டிருப்பதாகவே கொழும்பு செய்திகள் கூறுகின்றன.

அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் தொடர்ந்து வரும் பாராளுமன்றத் தேர்தலை ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி வெல்கிற புதிய சூழல் எழலாம். ரணில் வென்றால் நிச்சயம் போர்க்கைதிகளாய் இப் போதிருக்கும் புலிகள் விடுவிக்கப்படு வார்கள்.

அவ்வாறு விடுவிக்கப்பட்டால் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கம் வலுவான இயக்கமாக மாறும் என்ற அச்சம் ஒருபுறம், அதனிலும் முக்கியமாக, மீண்டும் புலிகள் வலுப்பெற்றால் முதலில் அவர்கள் குறிவைக்கப் போவது தம்மையும், தமது குடும்பத்தவரையும்தான் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியுமெனச் சொல்லப்படுகிறது.உண்மையில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் கடைசி நாட்களில் தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பு நகரில் பெரிய தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தும் திட்டங்களை உறுதியாகத் தடுத்து நிறுத்திய வேலுப்பிள்ளை பிரபாகரன்- அப்போதும் கூட, ""நமது போராட்டம் சிங்களப் பேரினவாதத்திற்கும் அதனை நடைமுறைப்படுத்துகிற ராணுவத்திற்கும் எதிரானது- சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல'' என்றிருக்கிறார்.

அதேவேளை. உண்மையா என்பது நமக்குத் தெரியாது- ஆனால் அவர் இளைய தளபதியரிடம் கூறியதாக உலவும் செய்தி இது: ""ராஜபக்சேக்களை மட்டுமல்ல அவர்களது வம்சத்தையும் தமிழ் வரலாறு மன்னிக்காது. எமது இனத்தை அழித்த பாவிகள்... இவர்களை தமிழ் வரலாறு பழிதீர்க்கும்'' என்றிருக்கிறார்.

Sunday, December 27, 2009

பற்றி எரியும் ஆந்திரா! இளம்பெண்ணோடு கவர்னர் உல்லாசம்!

தெலுங்கானா விவகாரத்தை மையப்படுத்தி எழுந்திருக்கும் சூறாவளி யால் ஆந்திர மாநிலமே கலவரக் காடாக மாறி.. பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இதற் கிடையே ஆந்திர கவர்னர் நாரா யண் தத் திவாரி குறித்த "சீச்சி' ரகப் புகாரும் இன்னொரு பக்கம் பரவி... பரபரப்பை பற்றவைத்துக் கொண் டிருப்பதுதான் லேட்டஸ்ட் நில வரம்.


மத்திய அரசு தெலுங்கானாவை தனி மாநிலமாக ஆக்கப் போவதாக அறிவித்ததும் பின்னர் அப்படியே பல்டியடித்து "ஒருமித்த கருத்து உருவாகும்வரை புதிய மாநிலம் உருவாகாது' என்று மத் திய அமைச்சர் அம்பிகா சோனி மூலம் அறிவிக்க... பழையபடி தெலுங் கானா பகுதியில் மிக மூர்க்கமான போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன.


கலவரத்தில் இறங்கிய பொதுமக்களும் மாணவர்களும் 150-க்கும் மேற்பட்ட பஸ்களை அடித்து நொறுக்கினர். 2 ரயில் நிலையங்கள் தீவைக்கப்பட்டன. எப்போதும் ஜன நெரிசலில் திணரும் திருப்பதி கோயில்... போக்குவரத்து ஸ்தம்பித்ததால் காற்றுவாங்கியது. ஆந்திரா முற்றாக நிலை குலைந்துபோய்க் கிடக்கிறது.இதற்கிடையே... தெலுங்கானா மாநிலத்தை அமைக்க சந்திரசேகரராவ் தலைமையில் கூட்டு நடவடிக்கைக்குழு கட்சிகளால் அமைக்கப்பட... இதில் மாநில உள்துறை அமைச்சரான ஜனாரெட்டி தன்னை இணைத்துக் கொண்ட தோடு இதன் துணைத் தலைவராகவும் ஆகி மாநில காங்கிரஸுக்கு ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.


இந்தக் குழு பந்த், உண்ணா விரதம் என காந்தியவழியில் போராட்ட வியூகங்களை வகுத்தபடியே இருக்கிறது. தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவரான மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டியை ஆந்திர முதல்வராக்கினால்.. தெலுங்கானாவின் போராட்டச் சூடு தணி யுமா? என யோசிக்கும் மத்திய அரசு... ராஜினாமா முடி வில் இருக்கும் தனது கட்சி எம்.எல்.ஏ.க் களையும் அமைச்சர் களையும் எம்.பி.க் களையும் சமாதானப்படுத்தும் முயற்சியை ஒரு பக்கம் தொடங்கியிருக்கிறது. நிலைமை கட்டுப்படாவிட்டால்... கவர்னர் ஆட்சியை அமல்படுத்தும் முடிவையும் பரிசீலனையில் வைத்திருக்கிறது.



அதே சமயம் தற்போது ஆந்திர கவர்னராக இருக்கும் நாராயண் தத் திவாரி மீது தொடர்ந்து எழுந்துவரும் பல்வேறு புகார்களும் மத்திய அரசை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திவாரி உ.பி.மாநிலத்தைச் சேர்ந்தவர். சஞ்சய் காந்தியின் நெருக்கமான விசுவாசியாக அவர் காலத்தில் காட்டிக்கொண்டவர். மிசா காலத்தில் உ.பி.யில் இவர் அமைச்சராக இருந்த போது... விமானத்தில் இருந்து இறங்கிவந்த சஞ்சய் காந்தியின் சூ லேஸ் அவிழ்ந்திருப்பதைப் பார்த்து... ஓடிப்போய் அவர் காலடியில் உட்கார்ந்து சூ லேஸைக் கட்டியதால் பலத்த சர்ச்சையில் அப்போது அடிபட்டார். இது தவிர முறையற்ற பல திருமணங்களை செய்து கொண்டதாக இவர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் இருக்கிறது.


இந்த 85 வயதிலும் சபலத்தை விடாதவராக... ஆந்திரா மாநிலமே எரிந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் கவர்னர் மாளிகையில் மனம்போன போக்கில் மன்மத லீலைகளில் இறங்கி வசமாக சிக்கிக் கொண்டார்.கவர்னர் மாளிகையில் வேலை செய்த ராதிகா என்ற இளம்பெண்ணின் கட்டுடலைப் பார்த்து மயங்கிய கவர்னர் திவாரி... தனது பதவியைக் காட்டியும் பரிசுப் பொருட்களை வாரிக்கொடுத்தும் வசப்படுத்தினார். பின்னர் கவர்னர் மாளிகையின் பல்வேறு அறைகளில் அந்தப் பெண்ணுடன் அவர் மன்மத விளையாட்டை நடத்தினார். ஆரம்பத்தில் லாபங்கள் கருதி கவர்னரின் சல்லாப லீலைகளைப் பொறுத் துக்கொண்ட ராதிகா... கவர்னரின் அளவுக்கு மீறிய வேகத்திற்கும் அவர் கையாண்ட பொஸி சன்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.


ஒரு கட்டத்தில் ஆங்கில ஆபாசப் படங்களைப் போட்டுக்காட்டி... அதில் வருவது போல் நடந்து கொள்ளும்படி கவர்னர் வற்புறுத்தத் தொடங்க... கவர்னரை தவிர்க்க ஆரம்பித்தார் ராதிகா. ஆனால் ருசிகண்ட பூனையான கவர்னர் ராதிகாவை மிரட்டி தன் ஆசைகளுக்குப் பணிய வைக்க... தப்பிக்க வேறு வழிதெரியாத ராதிகா பிரபல ஏ.பி.என். தொலைக்காட்சியிடம் தஞ்சமடைந்தார். கவர்னர் திவாரிக்கு சூடுகொடுக்க விரும்பிய ஏ.பி.என். தொலைக்காட்சி... ராதிகாவிடமே மைக்ரோ கேமராவையும் கேமரா செல்போனையும் கொடுத்தனுப்பியது. ராதிகா கவர்னருக்குத் தெரியாமல் அந்த கேமராவையும் செல்போனையும் சரியான பொஸிசன்களில் மறைத்து வைத்துவிட்டு காத்திருக்க... வழக்கம்போல் ராதிகாவைக் கண்டு உற்சாகமாக கவர்னர் லீலைகளை ஆரம்பிக்க அத்தனையும் அப்பட்டமாகப் பதிவாகியது.. அந்தக் காட்சிகளை அதிரடியாக ஒளிபரப்ப ஆரம்பித்தது ஏ.பி.என்.இதைப் பார்த்த ஜனநாயக மாதர் சங்கம், புரட்சிகர பெண்கள் முன்னணி போன்ற பெண்கள் அமைப்புகள் கவர்ன ருக்கு எதிராக கவர்னர் மாளிகையை ஆவேசமாக முற்றுகையிட்டனர்.


இதைக்கண்டு வியர்த்துப்போன கவர்னர் மாளிகை ஆந்திர மாநில ஹை கோர்ட்டில் அவசரமாக முறையிட்டு அந்த ஒளிபரப்பை நிறுத்தியது. எனினும் கவர்னர் மாளிகையின் லட்சணத்தைப் பார்த்து ஒட்டுமொத்த ஆந்திராவும் காறித்துப்பிக் கொண்டிருக்கிறது.

குண்டு துளைக்காத BMW கார் இரண்டை மகிந்த வாங்கியுள்ளார்


மஹிந்த தேர்தல் பிரச்சாரங்களுக்குச் சென்று வரவென 106 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டுதுளைக்காத புதிய கார்கள் வாங்கப்பட்டுள்ளது.இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரச்சாரமும் சூடுபிடித்து வருகின்றது. இந்த தேர்தல் பிரச்சாரங்களிற்காக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குண்டு துளைக்காத புதிய கார்கள் இரண்டை வாங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பி.எம்.டபிள்யூ(BMW) வகையிலான இக்கார்கள் நேற்றுக் காலை 9.30 அளவில் மலேஷியன் எயர்லைன்ஸ் மூலம் ஃபிராங்ஃபர்ட்டிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.ஒரு காரின் விலை வரி அனைத்தையும் உள்ளடக்கி 53 மில்லியன் ரூபா என சுங்கவரித்துறை பேச்சாளர் கூறினார். பண்டாரநாயக்கா சர்வதேச விமான தகவல்களின்படி, இவ்விரு கார்களும் சுங்கவரித்துறைக்கு கொண்டுசெல்லப்படாமல் ஜனாதிபதிச் செயலாளரால் நேரடியாக விமானநிலையத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன.