பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, November 28, 2009

கடைசிவரை பிடிபடாத பிரபாகரன், பொட்டு அம்மான்: ராஜீவ்காந்தி கொலைவழக்கு தள்ளிவைப்பு

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். அவருடன் பொட்டு அம்மான், அகிலா, நளினி, முருகன் உட்பட பலர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டனர்.
சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்த வழக்கு, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தனியாக அமைக்கப்பட்ட தடா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் சி.பி.ஐ.யிடம் சிக்கவில்லை. எனவே வழக்கு பிரிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நளினி, முருகன் உட்பட சிலர் மீதான வழக்கு மட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கடைசிவரை பிடிபடாத பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் மீதான வழக்கு 1992-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தனியாக பிரிக்கப்பட்டது. இந்த வழக்கு, சென்னை முதலாம் கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 17 ஆண்டுகளாக பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. வழக்கின் முக்கியத்துவம் கருதி நீதிபதியின் அறையில் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முதலாம் தடா கோர்ட்டு நீதிபதி பி.ராமலிங்கம் விடுமுறையில் சென்றிருப்பதால், 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி எம்.ஏ.ஆனந்தகுமார் அறையில் நேற்று காலையில் விசாரணை நடந்தது.
சி.பி.ஐ. அதிகாரி மற்றும் வக்கீல் ஆஜராகி 4 மூலைகளிலும் சீலிட்ட கவர் ஒன்றை தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ம் வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கையில் நடந்த போரில் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின. அவர்கள் இறப்பு சான்றிதழை சி.பி.ஐ. தாக்கல் செய்தால்தான் வழக்கு முடிவுக்கு வரும்.
நேற்றைய விசாரணையில் அவர்களின் இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்யப்படவில்லை என்று கோர்ட்டு வட்டாரம் தெரிவித்தது. பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை அரசு கொடுக்க வேண்டும். எனவே இவர்களின் இறப்பு சான்றிதழைக் கேட்டு இலங்கை அரசிடம் சி.பி.ஐ. தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

ரகசிய குறியீடு இல்லாத 2.5 கோடி செல்போன்கள் செயலிழக்கின்றன!

இந்தியா முழுவதும் உள்ள, ரகசிய குறியீட்டு எண் இல்லாத இரண்டரை கோடி செல்போன்களின் இணைப்புகள் நாளை மறுநாள் முதல் துண்டிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. கொரியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மலிவு விலை செல்போன்கள் ஏராளமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. விற்பனையிலும் இவைதான் இன்று முன்னணியில் உள்ளது!செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்போன் குறியீட்டு எண்) என்ற ரகசிய குறியீட்டு எண் உள்ளது. இந்த எண் 15 இலக்கங்களை கொண்டது ஆகும்.
ஒவ்வொரு செல்போனுக்கும் ஒவ்வொரு ஐ.எம்.இ.ஐ. குறியீட்டு எண் இருக்கும்.ஒரு செல்போன் எந்த இடத்தில் இருந்து பேசப்படுகிறது என்பதை இந்த எண்ணின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். மேலும் செல்போன் தொலைந்து விட்டால், உரிமையாளர் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் இந்த எண்தான் உதவும்.ஆனால் கொரியா, சீனாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வந்து விற்கப்படும் ஏராளமான செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. என்ற சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இருப்பது இல்லை. இந்தியா முழுவதும், ரகசிய குறியீட்டு எண் இல்லாத சுமார் 2.5 கோடி செல்போன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த வகை செல்போன்களில் இருந்து பேசும் போது எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இது தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாக போய் விடுகிறது.எனவே, சமீப காலமாக தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாலும், நாட்டின் பாதுகாப்பு கருதியும் சர்வதேச குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் செயல்பாட்டை முடக்க மத்திய அரசு முடிவு செய்தது.இதைத்தொடர்ந்து, அத்தகைய செல்போன் வைத்திருப்பவர்கள் அதை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 'கெடு' விதித்திருந்தது மத்திய அரசு.அந்த 'கெடு' முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. எனவே, திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல், சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.செல்போன் உபயோகிப்பாளர்கள், 57886 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி தங்கள் செல்போனின் ரகசிய குறியீட்டு எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!

தம்பி படத்தை அடுத்து ’கோபம்’ காட்டவிருந்தார் சீமான். ஆனால், சூழ்நிலை அவரை ‘வாழ்த்துகள்’சொல்ல வைத்தது.
இந்த காலகட்டத்தில் சீமான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது, ‘’கோபம்’ என்று படம் எடுக்கப்போகிறேன்’ என்று சீமான் சொல்ல,பிரபாகரனுடன் பக்கத்தில் இருந்தவர் ‘சினம்’ என்று தலைப்பு வையுங்கள் என்றாராம்.
அதற்கு பிரபாகரன், ‘கோபம் என்று சொன்னால்தான் அதில் அழுத்தம் இருக்கிறது. ஒரு வேகம் இருக்கிறது. அந்த தலைப்பிலேயே படம் எடுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள். ஆனால் வாழ்த்துக்கள் மாதிரி மென்மையான படம் எடுக்க வேண்டாம்’என்று சொன்னாராம்.
அதன்படி சீமான் ‘கோபம்’காட்ட முடிவெடுத்துவிட்டார். நடிகர் விஜய்யும் சீமானுடம் இணைய முடிவெடுத்துவிட்டார்.
படப்பிடிப்புதான் எப்போது துவங்கப்போகிறது என்று தெரியவில்லை.

சுடாத நெருப்பும் சுடுகின்ற கண்ணீரும்….. மாவீரர்கள்

மாவீரர்களை நினைவு கொள்வதற்கான உரிமையை மீட்க முனைவோமா?
தமிழீழ தேசத்து மக்களைப் பொறுத்தவரை மாவீரர் நாள் என்பது புனிதர்களைப் பூசிக்கின்ற திருநாள்.
நவம்பர் 27 என்றவுடன் உலகெங்கும் வாழும் தமிழீழ தேசத்தவர்களுக்கு மாவீரர் நாள் தான் நினைவுக்கு வரும்.
ஆனால், இந்த நாளை தாயகத்தில் வெளிப்படையாக அனுஷ்டிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.
* சுற்றிலும் இராணுவக் கெடுபிடிகள் நிறைந்துள்ள தமிழர் தாயகத்தில் மாவீரர்களின் நினைவைப் போற்றும் நிகழ்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் கூர்மை பெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை இப்படியொரு இக்கட்டான நிலை தமிழ் மக்களுக்கு வந்ததில்லை. காலத்துக்குக் காலம் புலிகளின் தளப் பிரதேசங்கள் மாறிய போதும் புலிகளின் கட்டுப்பாட்டில் ஏதாவதொரு பிரதேசம் இருந்து கொண்டேயிருந்தது. அங்கெல்லாம் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடந்தேறி வந்தன. ஆனால், இன்றைய நிலையில் தாயகத்தில் ஒரு துண்டு நிலத்தில் கூட மாவீரர் நாளை சுதந்திரமான முறையில் அனுஷ்;டிக்க முடியாதளவுக்கு சிங்களத்தின் இரும்புக் கரங்கள் அழுத்திப் பிடித்துள்ளன.
மாவீரர் நாள் பற்றிய சிந்தனைகளே தமிழர்களுக்கு வரக் கூடாது என்பதற்காக பல்வேறு வாசல்களையும் திறந்து விடப் படைத்தரப்பும் அரசாங்கமும் தயாராக இருக்கின்றன. ஆனாலும் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து மாவீரர் நாளை அழித்து விட முடியாது.
அவர்களின் மனங்களில் இருந்து மாவீரர்களின் நினைவுகளை துடைத்து விட முடியாது.
தாயகத்தில் வாழுகின்ற மக்கள் ஒவ்வொருவரும் மாவீரர் நாளை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்காகக் காத்திருக்கின்றனர்.
அவரவர் மனங்களில் தீபம் ஏற்றி மாவீரர்களை நினைவு கொள்வதற்காகக் காத்திருக்கின்றனர்.
ஏனெனில், மாவீரர் ஒவ்வொருவரினதும் மரணங்கள் சாதாரணமானவை அல்ல. அவர்கள் யாரும் தமக்காக மடிந்தவர்கள் அல்ல.
மரணம் நிகழப் போவதை அறிந்து கொண்டே போர்க்களம் போனவர்கள்.
* சாவைச் தெரிந்து கொண்டே சரித்திரமானவர்கள். தமக்காகவே மாவீரர்கள் மரணத்தைத் தழுவினார்கள் என்ற உணர்வு ஒவ்வொரு தமிழனின் மனதிலும் படிந்து போயிருக்கிறது. சிலர் இதை வெளிப்படையாக காண்பிக்கின்றனர். பலர் அதை உள்ளுக்குள் போட்டுப் புதைத்து வைத்து மௌனமாக அழுகின்றனர். இதனால் தான் சிங்கள தேசத்தினால் மாவீரர்களின் நினைவுகளை தமிழ் மக்களிடமிருந்து பிரிக்க முடியாதிருக்கிறது.
மாவீரர்கள் பிற நாட்டில் இருந்தோ – வேற்றுலகில் இருந்தோ வந்து எமக்காகச் சண்டையிட்டவர்கள் அல்ல.
எம்முடனேயே பிறந்து – எம்முடனேயே வாழ்ந்து – எமக்காவே உயிர் கொடுத்தவர்கள் அவர்கள். அப்படிப் பட்டவர்களை தமிழ் மக்கள் ஒருபோதும் தமது இதயத்தில் இருந்து அகற்றி வி;ட முடியாது.
அதைச் செய்ய நினைப்பது சிங்கள தேசத்தால் இயலாத காரியம்.
* மாவீரர்களை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து மறைத்து விட சிங்கள தேசம் முயற்சிக்குமேயானால் அதைப் போன்ற தவறு வேறேதும் இருக்க முடியாது. தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைச் சிதைத்து – மாவீர்களின் தியாக வரலாற்றை மறைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், இந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறப் போவதில்லை. அதேவேளை, தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள், நினைவாலயங்களை அழித்து எமது வரலாற்றைப் புதைத்து விட எண்ணும் சிங்கள தேசத்தின் செயலுக்கு நாம் அடிபணிந்து நிற்கப் போகிறோமா என்ற கேள்வி இந்தத் தருணத்தில் எழுகிறது.
அப்படி அடிபணிவோமேயானால் அது மாவீரர்களை மறந்து போகச் செய்ய முனையும் சக்திகளுக்குத் துணை போனதாகி விடும்.
எமக்காக உயிர் கொடுத்த உத்தமர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துவதாக அமைந்து விடும்.
மாவீரர்களைப் போற்றும் நிகழ்வுகளை தாயகத்திலும் நடத்துகின்ற சூழலை உருவாக்கும் பொறுப்பும் எம்முடையதே. இது இலகுவில் சாத்தியமான தொன்றல்ல என்பது தெரிந்ததே.
இராணுவக் கெடுபிடிக்குள் இருந்து கொண்டு அதைச் செய்ய முடியாது தான். ஆனால், சட்டரீதியாக இதற்கு வாய்ப்;புகள் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.
* 1971 இலும், 1989 இலும் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடத்திய ஜேவிபி, இதன்போது மாண்டு போன தமது உறுப்பினர்களின் நினைவாக வீரர்கள் தினத்தை கொண்டாடுகிறது. அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கும் போது தமிழ் மக்கள் மாவீரர் நாளை பகிரங்கமாக நடந்த முடியாதா? ஜே.வி.பி.க்கு ஒரு நீதி எமக்கு ஒரு நீதியா? என்ற கேள்வியை தமிழ் மக்கள் எழுப்ப வேண்டிய தருணம் இது.
மாவீரர்கள் எமது பிள்ளைகள், சகோரர்கள், குடும்ப அங்கத்தினர்கள். அவர்களின் நினைவில் சுதந்திரமாக நனைவதற்குக் கூட, தமிழருக்கு உரிமை இல்லையா?
* இறந்து போன உறவுகளுக்காக அழுவதற்குக் கூட உரிமை இல்லை என்றால் – அப்படிப்பட்ட சிங்கள தேசத்தில் தமிழ் மக்ளுக்கு எப்படி நிம்மதியான வாழ்வு கிடைக்கும். இந்த உண்மையை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்வதற்கும் இதையொரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். மாவீரர்களை நினைவு கொள்வதற்கு சட்டரீதியான ஒரு அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சட்டவல்லுனர்கள் தயாராக வேண்டும். மாவீரர் துயிலுமில்லங்களிலும், நினைவாலயங்களிலும் கூடி – அவர்களுக்காக அழுவதற்கான, அவர்களின் நினைவை சுமப்பதற்கான உரிமைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்.
தட்டினால் தான் திறக்கும் – இது எமது விடுதலைப் போராட்டம் தந்த பாடம்.
அரசுக்கு எதிராகப் போராடி மடிந்த சிங்களவர்களை நினைவு கொள்ள முடியும் என்றால்- அதில் தமிழருக்கு எப்படி விதிவிலக்கு இருக்க முடியும்?
மண்ணுக்காக மரணித்தவர்களின் நினைவாலயங்களை அழிக்காமல் பாதுகாப்பதற்கும் சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்வதற்கு முயற்சிக்கலாம். போரில் இறந்த எதிரியின் நினைவாலயங்களைக் கூட மதிப்பது தான் உண்மையான போர் வீரர்களின் மரபு. ஆனால் அது சிங்கள தேசத்துக்குப் பொருத்தமானதொன்றல்ல.அப்படிப்பட்ட சிங்கள தேசத்துக்கு பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் ஊடாகவோ அல்லது சர்வதேச செல்வாக்குகளைப் பயன்படுத்தியோ தாயகத்தில் மாவீரர்களை நினைவில் நிறுத்துவதற்கான உரிமைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்.
மாவீரர்களை நினைவு கூர்வதற்கான உரிமைகளைக் கூடத் தர மறுக்கும் சிங்களதேசம் தமிழருக்கு வேறு எந்த உரிமைகளையும் கொடுத்து விடாது. இந்த உண்மையை சர்வதேசத்துக்கு உணர்த்துவதற்கு இப்படியானதொரு முயற்சி அவசியம். சிங்கள தேசத்தின் கதவுகளைத் தட்டி தட்டி எமக்கான உரிமைகளைக் கேட்பதற்கு தயாராவார்களா தமிழ் சட்டவல்லுனர்கள்?
கிருஸ்ணா அம்பலவாணர்

நான் அவனில்லை 2 - விமர்சனம்


நடிப்பு: ஜீவன், மயில்சாமி, லட்சுமி ராய், ஹேமமாலினி, ரச்சனா, ஸ்வேதா மேனன்

இசை: டி இமான்

தயாரிப்பு: நேமிச்சந்த் ஜபக், ஹிதேஷ் ஜபக்

இயக்கம்: செல்வா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

2007-ல் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த நான் அவன் இல்லை படத்தின் இரண்டாம் பாகம் இது. இம்மி கூட மாறாமல் அதே கதை... பார்முலா!முதல் பாகத்தில் இந்தியாவில் பெண்களை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடும் கதாநாயகன், இந்த இரண்டாவது பாகத்தில் கவர்ச்சியும் திமிரும் நிறைந்த நான்கு இளம் பெண்களை விதவிதமாக ஏமாற்றுகிறான், ஒரு நல்ல பெண்ணுக்கு உதவ.கடைசியில் மாட்டிக் கொள்ளும்போது, ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் பாதிரியார் வேடத்தைப் போட்டுக் கொண்டு 'நான் அவன் இல்லை' என்று வழக்கமான டயலாக்கை உதிர்த்துவிட்டு எஸ்கேப்பாகிறான்.

அடுத்த பாகத்தில் இன்னும் நான்கைந்து பெண்களுடன் கடலை போட வசதியாக முற்றும் என்று போட்டு முடிக்கிறார்கள் படத்தை!இதற்குமேல் கதை என்று சொல்ல ஒன்றுமில்லை படத்தில்.திரும்பத் திரும்ப எடுக்கப்படும் கதைகளைக் கூட, திரைக்கதை அழுத்தமாக இருந்தால் பெரிய வெற்றிப் படமாக்க முடியும். முதல் பாகத்தில் இதை நிரூபித்த இயக்குநர், இந்த இரண்டாம் பாகத்தில் சறுக்கியிருக்கிறார். இந்த மாதிரி படங்களின் ஒரே நோக்கம் அதிகபட்ச கவர்ச்சி... வக்கிரம்.

அதை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார் செல்வா. படத்தில் சில காட்சிகளில் ஹீரோ, ஹீரோயின் மார்பில் கைவைத்து, 'மார்பாலஜி' ட்ரீட் தருகிறார் - இதற்குப் பேருதவி புரிகறது வாலியின் வாலிப வரிகள். உடனே கர்ச்சீப் எடுக்கிறார்கள் ரசிகர்கள், வாயைத் துடைக்க!ஆனாலும் இந்த வாலி எபிசோட் சுவாரஸ்யமாக இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.லட்சுமி ராயை ஏமாற்ற ஜீவன் போடும் திட்டங்கள் அடேங்கப்பா ரகமாக இருந்தாலும், அதை 'அட இவ்ளோதானா' என்று சிம்பிளாக எடுத்திருப்பதில் நம்பகத்தன்மை மிஸ்ஸிங்.தமிழ்நாட்டுப் போலீஸைத்தான் கேணத்தனமாக சினிமாவில் காட்டுகிறார்கள் என்று பார்த்தால், வெளிநாடுகளில் போலீஸ், சட்டம் போன்ற சமாச்சாரங்கள் இருப்பதற்கான அறிகுறியே இந்தப் படத்தில் இல்லை.

கோடி கோடியாக ஏமாற்றுகிறார் நாயகன். ஜஸ்ட் லைக் தட் 'நான் அவனில்லை' என்று கூறிவிடுகிறார். இவரைப் பிடிக்க தமிழ்நாட்டிலிருந்து ஐரோப்பா போகும் போலீசும், அதைக் கேட்டுக் கொண்டு மண்டையை ஆட்டியபடி சென்னைக்குத் திரும்புகிறதாம்... அட போங்கப்பா!ஹேமமாலினி என்கிற ஸ்ருதி பிரகாஷை ஜீவன் ஏமாற்றும் காட்சிகளில் சென்சார் தூங்கி விட்டார்கள் போல!இந்த மாதிரி பாத்திரங்களில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டார் ஜீவன் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு பக்காவான பக்க வாத்தியம் மயில்சாமி. வாங்கிய பணத்துக்குக் குறைவில்லாமல், கவர்ச்சி காட்டியிருக்கிறார்கள் நான்கு நாயகிகளும். ஐந்தாவது நாயகியாக வரும் சங்கீதாவுக்கு பெரிதாக வேலையில்லை.

பாடல், பின்னணி இசை இரண்டுமே சொதப்பல். ஒளிப்பதிவு பரவாயில்லை.முன்பெல்லாம் அண்டா நிறைய பாலில் சில சொட்டு விஷம் கலப்பார்கள், மசாலா என்ற பெயரில். இப்போது நிலைமை தலைகீழ். நீங்களாகப் பார்த்து பாலை அடையாளம் காண வேண்டும். இந்தப் படமும் அந்த ரகம்தான்!

முமைத்கான்.. ஆடியோ விழாவில் ஜொள்ளு விட்ட பிரபலங்கள்!

மேடைகளில் நாகரீகமாகப் பேசுவதற்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என அடிக்கடி நிரூபித்து வருகிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்.கவர்ச்சி நடிகையாக இருந்தாலும், பொதுவிழா என்பதால் சேலை உடுத்தி வந்திருந்த கவர்ச்சி நடிகை முமைத் கானை மேடையில் வைத்தே ஆபாசமாக வர்ணித்தனர் திரைப் பிரபலங்கள்.நேற்று நடந்த ஒரு சினிமா ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இந்தக் கூத்து.
விழா துவங்கியதுமே, முமைத் கானின் சேலைப் புராணத்தைப் பாட ஆரம்பித்தவர்கள் அத்தோடு நில்லாமல் எல்லை மீறிப் போயும் வர்ணித்தார்கள்.மூத்த திரைப்பட இயக்கநர் வி.சி குகநாதன், "தாமரை கண்கள் என்று புத்தகத்தில் படித்து இருக்கிறேன். அது, முமைத்கானுக்கு இருக்கிறது. எது எது எங்கெங்கு இருக்க வேண்டுமோ, அது அது அங்கங்கே அழகாக இருக்கிறது என்று புளகாங்கிதப்பட்டுப் பேசினார்.தொடர்ந்து அவர் பேசுகையில், அவரிடம் ஒரே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். தயவு செய்து சம்பளத்தை மட்டும் உயர்த்தி விடாதீர்கள். சினிமா பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு பல நடிகைகள் வருவதில்லை. ஆனால், முமைத்கான் இந்த பட குழுவினரை மதித்து, விழாவுக்கு வந்திருக்கிறார். அதற்காக என் பாராட்டுக்கள்..." என்றார்.

அடுத்து கருணாஸின் டர்ன். மைக்கைப் பிடித்த கருணாஸ், "முமைத்கானுடன் நடித்தது என் பாக்கியம். அவரைத் தொட்டு நடிக்க தயக்கமாக இருந்தது. அவரோ என்னைப் பார்த்து, 'கமான் யா... கேரி ஆன்' என்று கூப்பிட்டு கட்டித் தழுவினார். அப்புறம் நான் சகஜமாக நடித்தேன்" என்றார். இன்னும் சிலர் முமைத்கானின் அழகு, கவர்ச்சிக்கு ஈடே இல்லை என்று புகழ்ந்து தள்ளினர், சங்கடத்தில் அந்த நடிகையே நெளியும் அளவுக்கு!

கதிரையில் இருந்து விழுந்த நாள் முதல் மஹிந்தவுக்கு காலம் சரியில்லையாம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜாதக பலன்கள் இப்போது நன்றாக இல்லை என சோதிடர்கள் கூறியுள்ளனராம். சனி மாற்றப் பலன்களால் பல விடயங்கள் நினைத்தது போல் நடக்காமல் தடைகள் ஏற்படுத்து அவருக்கு கெட்ட சகுனத்தைக் காட்டியுள்ளதாம்.
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப்பணிகள் முதலில் வீரவில பகுதியில் ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அமைச்சர் சாமல் ராஜபக்ஷ தனது கைத்தொலைபேசியூடாகக் கொடுத்த தகவல் மூலம் நிறுத்தியுள்ளார். பின்னர் அது மாத்தள பகுதிக்கு மாற்றப்பட்டது.புதிய விமானநிலைய அடிக்கல் நாட்டச் சென்ற மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக செல்லவிருந்த ஐ.ஐ 24 ரக ஹெலிகொப்ரரே நேற்று விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகொப்ரர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக ராணுவ பேச்சாளர் கூறினாலும் உண்மையில் ஜனாதிபதி பாதுகாப்புக்கென சென்ற ஹெலியே வீழ்ந்து நொருங்கியது.
அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய மாநாட்டில் 'உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்' என பெரிய டிஜிட்டல் போர்டில் எழுதும்போது மஹிந்த சில அசௌகரியங்களுக்கு உள்ளானாராம். அதேபோல ராணுவ கண்காட்சியைத் திறந்து வைக்க முயற்சித்தபோது ரொமோட் கொண்ட்ரோல் இயங்காமல் சிக்கல் கொடுத்துள்ளது. இவ்வாறு பல சகுனங்கள் அவருக்கு கெட்டவிதமாக அமைந்துள்ளனவாம். இவற்றுக்கெல்லாம் காரணம் மஹிந்தவின் சனி மாற்றப் பலன்களே என சோதிடர்கள் எச்சரித்துள்ளனராம்.மேடையில் கம்பீரமாக அமரவந்த மஹிந்த எபோது கவிழ்ந்து விழுந்தாரோ அன்றிலிருந்து எல்லாமே கெட்டதாக அமைவதாக பேசப்படுகிறது

சந்தர்ப்பம் கிடைத்தால் கோத்தபாயவை விசாரணை செய்வேன் - சரத்

யுத்தத்தின்போது அரச படைகளுக்கு வேண்டிய ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததில் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்பட்டதையடுத்து, அரசாங்கம் தாம் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள Hicorp நிறுவனத்தினூடாக வாங்கப்பட்ட ஆயுதங்கள் குறித்தே விசாரணை செய்யவுள்ளதாக அரசு கூறியுள்ளது.
இந்த நிறுவனமானது சரத் பொன்சேகாவின் மருமகன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே இந்நிறுவனமூடாக ஆயுதக் கொள்வனவு செய்து சரத் மோசடி செய்துள்ளதாகவும் மஹிந்தவின் வாதம் உள்ளது.ஆனால் சரத் பொன்சேகா இதற்கு நேர் எதிராக கருத்துக் கூறியுள்ளார். அரச படைகளுக்கான அத்தனை ஆயுதங்களும் கோத்தபாய ராஜபக்ஷவால் கொள்வனவு செய்யப்பட்டதே ஒழிய இந்த வியாபாரத்தின்போது விலை பேசுதல் போன்ற நிதிசார் நடவடிக்கைகள் எதிலும் தாம் ஈடுபடவே இல்லை என்கிறார் சரத். அனைத்து ஆயுதங்களும் 'Lanka Logistics' என்ற நிறுவனமூடாகவே வாங்கப்பட்டதாகக் கூறும் சரத் இந்நிறுவனத்தின் தலைவரும் கோத்தபாய தான் என்று கூறியுள்ளார்.
"ஆயுத கொள்வனவு குறித்த விசாரணைகள் கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த விசாரணை எதிர்காலத்திலும் கூட நடைபெறலாம். எனக்கு அந்த விசாரணைகளை நடத்தக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தால் நிச்சயம் அவ்விசாரணையை நடத்தி முடித்துக் காட்டுவேன்" என சரத் பொன்சேகா தாம் தான் அடுத்த ஜனாதிபதி என்பதுபோல கருத்துக்கள் கூறியுள்ளார்.தற்போதைய அரசாங்கம், எடுத்த குற்றச்சாட்டுக்கள் எல்லாவற்றுக்கும் தாமே காரணம் என்பது போல தம்மீது குற்றம் சாட்டி வருவதாகக் கூறிய சரத் பொன்சேகா உண்மையில் அரசுதான் பாதாளக்கும்பலுடன் தொடர்பு இருந்து சகல குற்றச்செயல்களிலும் ஈடுபடுகிறது என்றார். தேர்தல் பிரச்சாரம் தொடங்காத கட்டத்திலேயே இதுபோன்று இரு பகுதியும் கருத்துக்கள் வெளியிட தொடங்கியுள்ள நிலையில், பிர்ச்சாரம் தொடங்கினால் இன்னும் சிறப்பாக களைகட்டும் போல உள்ளது.

இலங்கையின் எம்.ஐ- 24 ரக உலங்கு வானூர்தி விழுந்து நொருங்கியது (3ம் இணைப்பு)

லங்கையின் தாக்குதல் உலங்கு வானூர்தியான எம்.ஐ-24 இன்று புத்தளப் பகுதியில் விழுந்து நொருங்கி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பயிற்சிப் பறப்பில் ஈடுபடும்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்விமானம் விழுந்து நொருங்கியதாக, இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். புத்தள துங்கிந்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ள, இவ் விமானத்தில் நான்கு விமானிகள் கொல்லப்பட்டனர் என அறியப்படுகிறது.மாவீரர் தினமான இன்று இந்த உலங்கு வானூர்தி வீழ்ந்து நொருங்கியுள்ளது, சில சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. உண்மையில் இது பறப்பில் ஈடுபடும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீழ்ந்ததா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

Friday, November 27, 2009

சீமான் கனடாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன
















கனடா அரசின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான கொள்கைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக விசாரணைக்குட்படுத்தப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் இயக்குநர் சீமானை கனடா அதிகாரிகள் இந்திய விமனத்தில் ஏற்றி நாடு கடத்தி விட்டதாகத் தெரிகிறது.

பெருமளவிலான ஈழ மக்கள் இரவோடு இரவாக திரண்டு விமான நிலையத்தில் நிற்க அவரை அதிகாரிகள் கொண்டு வந்து விமானத்தில் அனுப்பி வைத்தனர். இன்று இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு அவர் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் வருகிறார், அவருக்கு தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களும்,. நாம் தமிழர் அமைப்பினரும் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிகிறது.

“சிறிலங்காவுக்கு அன்றைய எதிரி பிரபாகரன்: இன்றைய எதிரி நான்” – முதன்முறையாக மனம் திறக்கிறார் பொன்சேகா

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்வதற்கு திட்டம் வகுத்து கட்டளை வழங்கிய சிறிலங்கா தேசிய பாதுகாப்பு சபை இன்று என்னை படுகொலை செய்வதற்கு திட்டம் வகுத்து அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
‘டெய்லி மிரர் ஒன் லைன்’ செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அந்த விரிவான செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
எனக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் அரசுக்கு தெளிவாக தெரியும். எனக்கு மட்டுமல்லாமல் இந்த நாட்டில் முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் அனைவரும் உணர்ந்தவிடயம். அவ்வாறு இந்த நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றால், அரச தலைவர் ஏன் 2000 பேரை தனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு வைத்திருக்கவேண்டும்? பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஏன் 500 பேரை பாதுகாப்புக்கு வைத்திருக்கவேண்டும்? வவுனியா கட்டளை தளபதியாக பதவி வகித்து, எந்த ஒரு வலிந்த தாக்குதலையும் நெறிப்படுத்தாத தற்போதைய இராணுவ தளபதி ஏன் நூற்றுக்கணக்கான படையினரை தனது பாதுகாப்புக்கு வைத்திருக்கவேண்டும்?
கடந்த நவம்பர் மாதம் நான் கலந்துகொண்ட எனது கடைசி தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பி.கஜநாயக்க, வவுனியாவிலிருந்து வெடிபொருள் நிரப்பிய லேடன் வாகனம் ஒன்று, வி.ஐ.பி. ஒருவரை படுகொலை செயவ்தற்காக கொழும்பு வந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று கூறினார்.
இவ்வாறான நிலையில், எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டு நான் அரச பாதுகாப்பு இல்லத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்ற முனைப்புடன் அரசு செயற்படுவது, நான் படுகொலை செய்யப்படவேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆகும்.
வீதியில் நான் இவ்வாறு குறைந்த பாதுகாப்புடன் சென்றுகொண்டிருக்கும்போது என்மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நான் மட்டுமல்ல என்னுடன் பாதுகாப்புக்கு வருபவர்கள், பாதசாரிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்கநேரிடும். அவ்வாறு இடம்பெற்றால்கூட பரவாயில்லை, நான் படுகொலை செய்யப்படவேண்டும் என்ற நோக்கத்துடனேயே அரசு செயற்பட்டுவருகிறது என்பதனை இந்நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
மே மாதம் நடைபெற்றது என்ன?
போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த மே மாத பகுதியில் நான் நாட்டிலிருக்கவில்லை என்ற செய்தி அரச தரப்பினால் பரப்பப்பட்டுவருகிறது. உண்மையில் நடந்தது யாதெனில், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் தலைவராக உள்ள லங்கா லொஜிஸ்டிக்கஸ் என்ற சிறிலங்கா படையினருக்கு ஆயுதங்களையும் தளவாடங்களையும் கொள்முதல் செய்யும் நிறுவனம் சீனாவிலிருந்து நூறு இராணுவ வாகனங்களை கொள்முதல் செய்வதற்கு திட்டமிட்டிருந்தது.
இது தொடர்பான சகல நடவடிக்கைகளையும் பாதுகாப்பு அமைச்சே மேற்கொண்டது. நான் உட்பட சில மேஜர் ஜெனரல்கள்,பிரிகேடியர்கள் அடங்கிய இராணுல அதிகாரிகள் சீனாவுக்கு சென்று குறிப்பிட்ட இராணுவ வாகனங்கள் தொடர்பான தொழில்நுட்ப தரம்நோக்கும் பணிக்கு குறிப்பிட்ட சீன நிறுவனத்தினால் அழைக்கப்பட்டிருந்தோம்.
இராணுவ தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல், சிங்கப்பூருக்கு எனது மருத்துவ சோதனக்காகவும் இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ் இராணுவ தளபதிகளை சந்திப்பதற்காக மட்டுமே, கடந்த இரண்டு வருடத்தில் நான் வெளிநாடு சென்றிருந்தேன். போர் நடவடிக்கைகளை ஒருங்கமைக்கும் பொறுப்புக்களை நான் மேற்கொண்டுவந்த காரணத்தினால், சீன நிறுவனத்தின் அழைப்பை பிற்போட்டுக்கொண்டே வந்தேன்.
ஆனால், மே மாதமும் நான் சென்று அந்த வாகனங்கள் தொடர்பான பணியை மேற்கொள்ளாவிடின் கொள்முதல் நடவடிக்கையை சீன நிறுவனம் ரத்து செய்திருக்கும். சிறிலங்கா அரசுக்கு பாரிய நட்டம் ஏற்படும்.
கடந்த மே 10 ஆம் திகதி எமது படைகள் ஆறு கிலோமீற்றர் பகுதியே கைப்பற்றவேண்டியிருந்தது. போர் ஆரம்பித்து 150 கிலோ மீற்றருக்கு படைகளை நான் வழிநடத்தியிருந்தேன். அப்போதெல்லம் நான் வவுனியாவிலிருந்து போரை நெறிப்படுத்தவில்லை. வரைபடங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், செய்மதி தொலைபேசிகள் ஆகியவற்றிக் அடிப்படையில் எனது கட்டளைகளை களத்திலிருந்த படைகளுக்கு வழங்கிவந்தேன்.
நான் கொழும்பிலிருந்தாலென்ன சீனாவிலிருந்தாலென்ன அமெரிக்காவிலிருந்தாலென்ன எனது கட்டளைகள் களத்தில் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்தன. படைநடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றது. சுமார் 20 ஆயிரம் விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.
நான் சீனா செல்வதற்கு முன்னர்கூட சகல திட்டங்களையும் எனது தளபதிகளுக்கு விளக்கி நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டுவிட்டுத்தான் சென்றேன். அதன்பிரகாரம், 17 ஆம் தகதி மாலை நாடு திரும்பி, 19 ஆம் திகதி காலை வரை களத்தில்நின்று போரை வெற்றிகரமாக நிறைவேற்றினேன்.
நான் சிறிலங்காவில் இல்லாதசமயம் எனக்குத்தெரியாமல் பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட ஒரு படைநடவடிக்கையால் அநியாயமாக 25 படையினர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைநதனர். மற்றும்படி, நான் திட்டமிட்டவாறே போர் நிறைவேறியது.
நண்பர்களின் துரோகம் வேதனையளிக்கவில்லை
ஒரு காலத்தில் எனது நண்பர்களாக திகழ்ந்த அரச அதிபர் மகிந்த, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய, இராணுவ தளபதி ஆகியோர் தற்போது எனக்கு எதிரிகளாக மாறியிருப்பது குறித்து எனக்கு கவலையில்லை. நல்ல மனம் படைத்தவர்கள் பிழையாக நடந்தால் வேதனையாக இருக்கும்.
ஆனால், இவர்கள் எனக்கு செய்யும் வேலைகள் குறித்து நான் வேதனையடையவில்லை. என்னைப்போல இந்தக்கூட்டத்தினரால் பாதிக்கப்படப்போகும் ஏனையோரை நினைத்தே எனக்கு கவலையாக உள்ளது. மகிந்த தலைமையிலானவர்கள் எனக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்கொண்டு அவற்றை முறியடிக்கும் துணிவும் தைரியமும் எனக்கு உண்டு. ஆனால், என்னைப்போன்று பாதிக்கப்படவுள்ள ஏனையோருக்கு அது இருக்குமா என்பது குறித்தே நான் கவலையடைகிறேன்.
எனக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுக்களை அரச தரப்பு தற்போது பரப்பிவருகிறது. எத்தனையோ விசாரணைகளையும் ஆரம்பித்திருக்கிறது. நான் இராணுவத்திலிருக்கும்போத ஏதாவது தவறு செய்திருந்தால் அது தொடர்பாக அரசு அப்போதே எனக்கு எதிராக அரசு உடன் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.
அவ்வாறு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்த தவறை அரச தரப்பின் ஆசீர்வாதத்துடனேயே நான் புரிந்திருக்கிறேன் என்றுதான் அர்த்தம். ஆகவே, நான் பதவி விலகிய நாள் முதல் என் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி பிரசாரம் செய்வது எந்த வகையிலும் அர்த்தமற்றது.
- என்று அவர் கூறியுள்ளார்.

இன்று மானத்தமிழர் போற்றும் மாவீரர்நாள்

தேசியத் தலைவர் உரை நிகழ்த்த வருவாரா இல்லையா என்ற ஏக்கங்களை சுமந்தபடி மக்கள் மாவீரர்களை அஞ்சலிக்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஈழத் தமிழினத்திற்கு மட்டுமல்ல உலகத் தமிழினத்திற்கே மானமும் மரியாதையும் கொடுத்த மாவீரர்நாள் இன்று. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் மாவீரர்நாள் உரை நிகழ்த்த, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அதற்கு விளக்கம் கொடுக்க, உலகம் முழுவதும் மக்கள் அந்த நாளை உணர்வுபூர்வமாகக் கொண்டாட, விமானப்படை மாவீரர் சமாதிகளுக்கு மலர்மாரி தூவ தமிழன் வான் முகட்டைத் தொட்ட வண்ண மயமான காலம் மாவீரர்நாள் கண்களில் இன்று பவனி போகிறது.
தேசியத் தலைவர் உரை நிகழ்த்த வருவாரா இல்லையா என்ற ஏக்கங்களை சுமந்தபடி மக்கள் மாவீரர்களை அஞ்சலிக்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள். மாவீரர் நாளன்று விளக்கை தலைவர் ஏற்றி வைத்தமைக்கு ஒரு குறியீடு இருந்தது. மக்கள் உள்ளங்களில் விடுதலையின் உண்மை ஒளி பரவவேண்டும் என்பதே அதன் குறியீடாகும். கடந்த மே மாதம் உலகம் முழுவதும் தமிழர் ஓரணியில் திரண்டபோது அவர்கள் உள்ளங்களில் எல்லாம் ஒளி பிறந்துவிட்டதை எல்லோரும் கண்டோம். ஒளி வரும்வரை நான் போராடுவேன் ஒளி வந்த பின்னர் நான் அங்கு தேவையில்லை, அந்த ஒளியின் வழியே மக்கள் நடந்து செல்வார்கள் என்று 2007ம் ஆண்டு மாவீரர்நாள் உரையில் வே.பிரபாகரன் கூறினார். மாவீரர்களின் ஒளி வழி காட்டுகிறது, அதன் வழி நான் நடக்கிறேன் என்று அதை அழுத்தமாகவும் தெரிவித்தார்.
இன்று ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் பாதை தெரிகிறது. சிறீலங்கா அரசு, இந்திய அரசு, உலக சமுதாயம் யாவும் எங்கே இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. இனியோர் அரசியல் பாதையை தெளிவான முறையில் வகுப்பதற்கு ஏற்ற அத்தனை சிரமங்களையும் மாவீரர்கள் சுமந்துவிட்டார்கள். முள் நிறைந்த பகுதியெல்லாம் நடந்து தமது உயிரைக் கொடுத்து, மக்கள் இனி எங்கெல்லாம் போகக் கூடாது என்பதற்காக தமது உயிரால் வழிகாட்டி, உயிரில் ஒளிகாட்டி சென்றுள்ளார்கள்.
அம்மா உன் கையால் ஒரு கிண்ணம் பால் குடிக்க வந்திருக்கிறேன்… கடைசியாக கரும்புலி மில்லர் தாயிடம் கூறிய வார்த்ததை இது…
என்னை தண்ணீரைக் குடிக்கச் சொல்லி களங்கப்படுத்தாதேயுங்கோ… இது தண்ணீரையும் குடிக்க மறுத்து திலீபன் சொன்ன கடைசி வசனம்.
ஒருவன் பாலைக் குடித்து உடலை எரித்தான் மற்றவன் தண்ணீரும் குடிக்காமல் உடலை எரித்தான்.
தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைப்பார்கள் மற்றவர்கள் ஆனால் மாவீரன் கேணல் கிட்டுவோ பேயகள் உலாவும் நடுக்கடலில் நெருப்பேற்றி வீரமரணமடைந்தான். இந்து சமுத்திரத்தின் நடுவிலேயே தீ உயிர்த் தீ மூட்டினான்.
மரங்கள் மூடிய மாங்குளத்து வீதியிலே ஒரு மரக்கன்றை நட்டு தேசத்தைக் காப்பாற்றுங்கள் என்று சிறுவர்களிடம் கூறிவிட்டு தீயானான் கரும்புலி போர்க்.
தனது வளர்ப்புத் தந்தையை சந்தித்த இடத்திலேயே மறுபடியும் வந்து உயிர் விடைபெற்றான் கரும்புலி காந்தரூபன்.
இப்படியாக ஒவ்வொரு மாவீரனுக்கும் ஒவ்வொரு புதுமை வரலாறு எழுதக்கூடியவாறு பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தேசத்திற்காக உயிர் கொடுத்தார்கள்.
இந்தப்போராட்டத்தில் ஆயுதம் ஏந்தியவர்களை மட்டும் மாவீரராகக் கருதிவிட முடியாத நிலை வன்னியில் ஏற்பட்ட இறுதிப் போரில் உருவானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகக் கலந்தார்கள், பலர் உயிருடன் புதைந்தார்கள், பலர் உதிரம் ஓடஓட மடிந்தார்கள். மரணத்திற்கு வரைவிலக்கணம் கூற முடியாத கொடுமைகளை சந்தித்தார்கள். செவ்விந்தியர்கள் அவர்கள் மண்ணில் எரிக்கப்பட்டு அத்தனை உடமைகளும் அபகரிக்கப்பட்ட காட்சி அரங்கேறியது. அங்கு மடிந்த அத்தனைபேருமே மாவீரர்கள்தான்.
இத்தனை காட்சிகளுக்குப் பிறகும் தலைவர் வந்து மாவீரர்நாளில் அடுத்த கட்டம்பற்றி சொல்ல என்ன இருக்கிறது என்பது யதார்த்தமான கேள்வி. ஆகவேதான் இம்முறை மாவீரர்நாளின் அடுத்த பக்கத்திற்குள் போகிறோம். ஈழத் தமிழினத்திற்கான வரலாற்றையும், அது போக வேண்டிய பாதையையும் மாவீரர்கள் எழுதிவிட்டார்கள். அதில் பயணிக்க வேண்டியதே காலத்தின் பாதையாக உள்ளது. மாவீரர்களின் ஒளி நிச்சயம் நமக்கு வழி காட்டும்.
மாவீரர்களின் புகழ் மேலும் மேலும் அதிகரிக்கும் ஒரு காலத்திற்குள் இன்றிலிருந்து போகிறோம். ஆமாம்… மணியடிக்கும் ஓசை கேட்கிறது! இது மாவீரர்நாள்.

பொன்சேகா ஒரு பயந்தாங்கொள்ளி – இலங்கை அரசு: சபாஷ் சரியான போட்டி!

னக்கு இதுவரை தோல்வியே இல்லை என்று கூறும் பொன்சேகா, கிளிநொச்சிக்குப் போகவே பயந்து கொண்டிருந்ததாகவும் , அவரை அதிபர் ராஜபக்சதான் தைரியப்படுத்தி அழைத்துச் சென்றதாகவும் இலங்கை பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை நிகழ்த்துவதில் போட்டிபோட்டு செயல்பட்ட முன்னாள் இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகாவும், அதிபர் ராஜபக்சவும் தற்போது எதிரிகளாக வரிந்துக்கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.
வரவிருக்கும் அதிபர் தேர்தலில் ராஜ பக்சவுக்கு எதிராக போட்டியிட திட்டமிட்டுள்ள பொன்சேகா, ” எனது ராணுவ வாழ்க்கையில் ஒரு தோல்வியையும் சந்தித்தவன் இல்லை ; பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன் ” என்று அண்மையில் மிகுந்த ஆணவத்துடன் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது எதிரியாகிவிட்ட பொன்சேகாவை மட்டம்தட்டும் வகையில் அவர் ஒரு பயந்தாங்குளி என்பது போன்று, தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் மூலம் செய்தி வெளியிட வைத்துள்ளார் ராஜபக்ச.
” ஈழப் போர் முடிந்ததும், அதிபர் ராஜபக்ச கிளிநொச்சி போக விரும்பினார்.அதை ராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவிடமும் தெரிவித்தார்.
அனால் அந்த யோசனையை விட்டு விடுமாறு அதிபரிடம் கூறிய பொன்சேகா, கிளிநொச்சிக்கு அதிபருடன் வர பயந்தார்.போர் இன்னும் நடக்கிறது என்றும் கூறினார்.தனது பயத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் ராஜபக்சதான் பொன்சேகாவுக்கு தைரியம் கூறினார்.பயப்பட வேண்டாம். தைரியமாக என்னுடன் வாருங்கள் என்று கோரினார். இதையடுத்து வேறு வழியில்லாமல், தனது மனதில் இருந்த அச்சத்தை முழுமையாக விடாமல் அவர் அதிபருடன் செல்ல ஒப்புக் கொண்டார்.
அதன் பின்னர் போர் பாதித்த பகுதிக்கு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்தார் அதிபர் ராஜபக்ச. கடும் போர் நடந்து கொண்டிருந்தபோது போர்க்களத்திற்குச் சென்ற முதல் உலக அதிபர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
அதேபோல மாவிலாறு சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது போரை அறிவித்தார் ராஜபக்ச. அப்போது பொன்சேகா களத்திலேயே இல்லை.விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிக்கி அவர் மருத்துவமனையில் இருந்தார்.
மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் நாட்களிலும் கூட போர் முனைக்கு அவர் ஒருமுறை கூட சென்றதில்லை.கொழும்பில் உட்கார்ந்து கொண்டு உத்தரவுகளை மட்டுமே பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
நான் ஒருபோதும் தோல்வியைச் சந்தித்ததில்லை என்று கூறும் பொன்சேகாவின் தலைமையில்தான் இலங்கை ராணுவத்திற்கு முகமலை பகுதியில் 3 முறை தோல்வி கிடைத்தது.கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் உயிரிழந்தனர் ” என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் பொன்சேகாவை கடுமையாக கிண்டலடித்து குறை கூறியுள்ளது.

கனடா பொலிஸாரால் இயக்குநர் சீமான் கைது

மாவீரர் நாளை முன்னிட்டு கனடா சென்றுள்ள திரைப்பட இயக்குனர் சீமான் ரொறன்ரோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் உள்ள ரொறன்ரோவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமான், பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசு என்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்று விடுவான் என்ற பயம். ஊழல் இல்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல் மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது. பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலை செய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத கொலை செய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது. ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜீ.ஆர். அவர்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு போராடியிருந்தால் இந்நேரம் வென்றிருப்பார்கள். ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும் என்றார்.

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி: ஹாட்லிக் கல்லூரி கணிதப்பிரிவு மாணவன் பெருமிதம்

பொறியியலாளராக வேண்டும் என்ற இலக்குடன் கல்வி பயின்றுவந்த நான் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெறுவேன் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இன்று தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றதையிட்டு அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் தமிழ் மொழி மூலம் கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற பரு. ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜோன் நிராஜ் தெரிவித்தார்.
மாவட்ட மட்டத்திலும் தமிழ் மொழி மூலம் தேசிய மட்டத்திலும் கணிதத்துறையில் முதல் இடங்களைப் பெற்ற அன்ரன் கிறிஸ்டர்ஸ் ஜோன் நிராஜ் உதயனுக்கு தெரிவித்ததாவது:
சின்னவயதில் இருந்ததே பொறியியலாளராக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் துளிர்த்தது. அந்த இலக்குடன் இலட்சியத்துடன் தொடர்ந்து பயின்று வந்தேன்.
எனக்குச் சிறுவயதில் இருந்து கல்வி புகட்டிய ஆசிரியர்கள் எனது பெற்றோரும் வழங்கிய ஊக்கம்தான் சிறந்த பெறுபேற்றைப் பெற உதவியது.
பாடசாலையிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் பெற்ற கல்விக்குப் புறம்பாக எனது நண்பர்களுடன் சேர்ந்து சுயமாக பயிற்சிகளை மேற்கொண்டதும் எனது பெறுபேறு சிறப்பாக அமையக் காரணமாக அமைந்தது.
எனது முன்னேற்றத்தில் எனது அப்பா, அம்மா, அக்கா, அத்தான் ஆகியோர் அதிக அக்கறை காட்டினார்கள். அவர்கள் எனக்கு வழங்கிய ஊக்குவிப்பு, ஒத்துழைப்பு என்பன காரணமாக இப்படியொரு சாதனையை நிலைநாட்ட முடிந்தது.
தொடர்ந்து கல்வியில் உயர்ந்து முன்னேற்றப் பாதையில் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளேன் என்றார்.

கொழும்பில் மூடப்பட்ட வீதிகள் திறக்கப்பட்டுள்ளன

கொழும்பில் பாதுகாப்பு நிமித்தம் மூடப்பட்டிருந்த வீதிகள், இன்று முதல் பொதுமக்களின் போக்குவரத்திற்காகத் திறந்து விடப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதியும் இன்று பிற்பகல் முதல் பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர கலதாரி விருந்தகத்திற்கும், ஜனாதிபதி செயலக வீதியின் ஊடாக காலிமுகத்திடல் சந்தி வரையில், மூடப்பட்டிருந்த வீதியும் திறக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று முதல் கொழும்பின் வீதிகளில், ஜனாதிபதியை தவிர்ந்த முக்கியஸ்தர்கள் பயணிக்கும் போது வீதிகள் மூடப்படும் நடைமுறை ரத்துச்செய்யப்படுவதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது சரத் பொன்சேகாவுக்கும் பொருந்தும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில், பதவியில் இருந்து விலகிய பின்னரும் சரத் பொன்சேகா வீதிகளில் பயணம் செய்யும் போது வீதிகள் மூடப்பட்டமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Thursday, November 26, 2009

ஒவ்வொரு தமிழனின் மனதுக்குள்ளும்...

வ்விதழ் உங்கள் கரங்களைச் சேரும் நாள் தமிழீழ தேசியத் தலைவர் என தமிழுலகம் கொண்டாடும் திருவேங்கடம் வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள். இந்நாளில் தமிழீழச் சிந்தனையாளர்களில் முக்கியமானவரும், அரசியல் எழுத்தாளருமான தி.வழுதி அவர்கள் கடந்த ஜூன் 10-ந் தேதி புதினம் இணையதளத்திற்கு எழுதிய மறக்க முடியாததோர் கட்டுரையின் சில பகுதிகளை இங்கு மறுபதிவு செய்கிறேன்.""தமிழீழ தேசியத் தலைவரும், தமிழீழத்தின் தலைமைப் போர்த் தள கர்த்தருமான மேன்மைமிகு திரு வேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்- தமிழர் சரித்திரத்தின் மகுடமாக எங்கள் மனங் களிலும் அறிவிலும் வாழ்கிறார். விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றி களின் பெருமை பாலா அண்ணை யைச் சாரும். விடு தலைப் போராட்டம் பெற்ற ராணுவ வெற்றிகளின் பெருமை பால்ராஜ், தீபன், சூசை, பொட்டு, பானு, ராஜு, கே.பி. என இன்னும் சிலரைச் சாரும். விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய இனத்தையும், அந்த சனத்திலிருந்து வந்த எம் போர்வீரர்களையும் சாரும். ஆனால் சதிகளும், துரோகங்களும், விலைபோதல்களும், நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடுமுரடான பாதை வழியே மனம் தளராமல் விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்''.மே 16, 17 நாட்களில் முள்ளிவாய்க்கால் காட்சிகள் காண பிரபாகரனின் மனதில் என்ன உணர்வுகள் எழுந்திருக்கக்கூடும் என்பதையும் ஆத்மார்த்தமான ஓர் அக உரையாடலாக வழுதி அக்கட்டுரையில் படம்பிடிக்க முயன்றிருந்தார். ""தமிழர் போராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?... அல்லது நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை. வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்'' என்று பாலா அண்ணை சொல்லும் ஆலோசனைகளை கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?...

அல்லது உறுதியான ஓர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால்- தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால்- இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொறுங்கும்போது தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொறுங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?...அல்லது- கடந்த காலங்களில் செய்யப்பட்ட சிலவற்றை செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சிலவற்றை செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?... அல்லது- தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி- எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?...

எதுவும் நமக்குத் தெரியாது.ஆனால், நெருக்கடியான நேரத்திலும் கூட அவர் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார் என்பதை மட்டும் நம்மால் உணர முடிகிறது.

முப்பது வருட காலமாகப் போராடி- சிறிது சிறிதாக அவர் பார்த்துப் பார்த்து கட்டி வளர்ந்த தமிழ் சாம்ராச்சியம்- அவரது கண்களுக்கு முன்னாலேயே துகள்களாக உடைந்து நொறுங்கி மண்ணோடு மண்ணாகிவிட்டது. ஆனால் இந்த முப்பது வருட காலப் போராட்டத்தில் பிரபாகரன் சாதித்தது உண்மையில் அவர் இந்த மண்ணுக்கு மேலே கட்டி வளர்த்த அந்தத் தமிழ் சாம்ராச்சியம் அல்ல. ஏனெனில் மண்ணுக்கு மேலே கட்டப்படும் சாம் ராச்சியங்கள் எழு வதும்- வீழ்வதுமே வரலாறு.பிரபாகரன் படைத்த உண்மையான சாதனை என்பது- ஒவ்வொரு தமிழனின் மனங்களுக்கு உள்ளும் அவர் கட்டியெழுப்பிய தமிழ் சாம்ராச்சியம்தான். அது நிமிர்ந்து எழுந்து கம்பீரமாக நிற்கின்றது. அது வீழ்ச்சி அற்றது."தமிழ் ஈழம்' என்ற விதையை எம் ஒவ்வொருவரது ஆத்மாவிற்குள்ளும் அறி விற்குள்ளும் அவர் ஆழப் புதைத்து விட்டிருக்கிறார்.

விடுதலை பெற்ற மனிதர் களாக- மதிப்புடனும் பெருமையுடனும்- இந்த உலகில் நாம் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற வெறியையும், வாழமுடியும் என்ற நம்பிக்கையையும் எமக்குள் அவர் ஊட்டி யிருக்கிறார்.தமிழ்த் தேசியத்தை திடப்படுத்தி, தமிழர் தாயகக் கோட்பாட்டை வலுப்படுத்தி, தமிழர் தன்னாட்சி உரிமைக் கோரிக்கையைப் பலப்படுத்தி- ஈழத் தமிழ் இனத்தின் சின்ன மாக, எங்களின் அரசியல் அடையாளமாக, எங்கள் தேசியத்தின் குறியீடாக, எங்கள் கோபத்தினதும், சோகத்தினதும், மகிழ்ச்சி யினதும் வெளிப்பாடாக நித்தியத்திற்கும் நின்று வாழும் ஒரு கொடியை தமிழுக்கு அவர் தந்திருக்கிறார்.இன்று உலகமும், சிங்களமும் அச்சப்படும் விடயம் பிரபாகரன் எங்கள் மனங்களுக்குள் கட்டி எழுப்பியிருக்கும் அந்த வீழ்த்த முடியாத சாம்ராச்சியம், அவர் எமக்கு ஊட்டிய உறுதியும், துணிவும் வீரமும்தான்.பிரபாகரன் தோன்றுவதற்கு முன்னால் வீரம்- துணிவு- உறுதி என்பவை பற்றியெல்லாம் தமிழர்கள் புத்தகங்களில் படித்து திரைப் படங்களில் பார்த்ததோடு சரி.

ஆயுதப் போராட்டமே ஒரே வழி எனத் துணிந்து வந்தவர்கள் கூட இந்தியாவின் ஆதிக்க ஆளுமைக்கு விட்டுக்கொடுத்து தமிழர்களின் உரிமைகளைக் கைவிடும் நிலைக்குள் தள்ளப்பட்டனர். ஆனால் சரியோ தவறோ பிரபாகரன் மட்டுமே தொடர்ந்து நடந்தார். அந்த மனிதர் மட்டுமே எங்கள் ஆத்ம தாகத்தின் முகமாக இந்த உலகிலே திகழ்ந்தார். அந்த மனிதர் மட்டுமே- எங்களாலும் முடியும் என்று எங்களையே நம்ப வைத்தார். தம்மைத் தாமே ஆளும் வகையான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாடு இந்த உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆகுவதற்கு அந்த மனிதர் மட்டுமே காரணம். சரிகளுக்கும் தவறுகளுக்கும் அப்பால் அந்த மனிதர் ஓர் புனிதமான கனவோடு வாழ்ந்தார்.

நாம் எல்லோருமே சுமந்த அந்தக் கனவை நிறைவு செய்வதற்குச் சிறந்த வழி என தனக்குப்பட்ட ஒரு வழியில் எந்தச் சலசலப்பும் இன்றி அவர் நடந்தார்.அந்தப் பயணத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்பந்தித்துவிட்டது. தவறுகளாகப் பார்க்கப்படும் இன்னும் சில நிகழ்வுகள் உண்மையிலேயே தவறுகள்தானா என்பதை அந்த வரலாறே நாளை தீர்மானிக்கட்டும். தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை என்ற அதியுயர் இலக்கு நோக்கிய ஒரு மிகப் பிரமாண்டமான போராட்டத்தை நகர்த்திச் செல்லும்போது- அந்த இலக்கு மட்டுமே அவரது கண்களுக்குத் தெரிந்ததால், ஏனைய சில விடயங்களை அவர் பார்க்கத் தவறிவிட்டார் என்பது உண்மைதான். ஆனால் அவரைப் பொறுத்தவரையில் - தமிழ் மக்களை தலைநிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பதுதான் அவர் வரித்துக் கொண்ட லட்சியம்.

அந்த லட்சியத்தில் களங்கமற்றவராகவே அவர் எப்போதும் இருந்தார்''.இவ்வாண்டில் நான் படித்த மறக்க முடியாத மிகச் சிறந்த கட்டுரை தி.வழுதி அவர்கள் புதினம் இணையதளத்திற்கு எழுதிய மேலே பதிவு செய்யப்பட்ட ஆக்கமே. வழுதி அவர்கள் தன் ஆக்கத்தை இவ்வாறு நிறைவு செய்திருந்தார்: ""பிறந் திருக்கும் புதிய சூழலில், புதிய சிந்தனையுடன், புதிய வழிமுறைகளில் இந்து, இசுலாமிய, கிறித்தவர் என்று பிரிந்திருக்காம லும், அமைப்புகள்- இயக்கங்கள்- கட்சிகள் என்று சிதறியிருக்காமலும் திறந்த மனதுடன்- ""தமிழர்கள்'' என்ற ஒரே உணர் விலும், அடையாளத் திலும் அணிதிரள் வோம்''.

வழுதி அவர்கள் எழுதிய அதே உணர்வோடுதான் உடைந்து நொறுங்கிச் சிதறுண்டு கிடக்கின்ற இக்காலத்தின் முன் நின்று "ஈழம் மலரும், ஈழம் சாத்தியமே' என்று கடந்த இதழில் நாம் வாதிடத் தொடங்கினோம். அதற்கு நடக்க வேண்டியவை என்ன என்பதில் எஞ்சியிருக்கும் மக்களைக் காப்பது, தமிழர் தாயக நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறாது தடுப்பதன் மூலம் தமிழீழ தாயகம் என்ற நில அலகினைப் பாதுகாப்பது என்ற இரண்டு காரியங்களையும் கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம்.

மூன்றாவதாக தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது அனைத்துலக அளவில் கவிந்துவிட்ட ""பயங்கரவாதம்'' என்ற நச்சுப் போர்வையை பக்குவமாய் நீக்கி ஈழத் தமிழ் மக்களுக்கு அரசியற் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை உலகம் ஏற்றுக் கொள்ள வைப்பது. இது நடந்துவிட்டதென்றால் தமிழீழ விடுதலையானது சாத்தியப்பாட்டு வட்டத்திற்குள் வந்துவிட்டதென நாம் கொள்ளலாம்.

நடந்துவிட்ட பெரும் பின்னடைவு களுக்கு உலகம் நம் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அரசியல் தார்மீகங் களைப் புறந்தள்ளி "பயங்கரவாதம்' என கொள்கைரீதியாக ஏற்றமையும், அதனையொட்டி எடுத்த நடவடிக்கை களும் முக்கிய காரணங்கள்.

அதிலிருந்து போராட்ட நியாயங்களை மீட்டெடுத்து உலகம் தமிழரின் அரசியற் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கச் செய்யும் பெரும் பொறுப்பு புலம்பெயர் தமிழரிடமே சுமத்தப்படுகிறது. அது அவர்களால் முடியும்.

ஆனால் சவாலானதும் கூட.

போலீஸ் கஸ்டடியில் மன்மத குருக்கள் கிளப்பிய கிளுகிளு பூதம்!

காஞ்சிபுரம் மன்மத குருக்கள் தேவநாதனின் லீலைகளை பற்றி... கடந்த இதழில் ரிப்போர்ட்டாக கொடுத்த நாம்... அவனது கிளுகிளு செல்போன் காமிராவில் சிக்கிய பெண்கள் சிலரையும் தேடிப்பிடித்து அவர்களின் வாக்குமூலத்தையும் அதில் சுடச்சுடத் தந்திருந்தோம்.இதற்கிடையே மேலும் விசாரிக்க ஒரு வாரம் தங்கள் கஸ்டடியில் அவனை ஒப்படைக்க வேண்டும் என காக்கிகள் கேட்க... மாஜிஸ்திரேட்டோ 2 நாள் மட்டும் கஸ்டடிக்கு ஒப்புக்கொண்டார். இதன்படி தேவநாதனை தங்கள் கஸ்டடிக்கு கொண்டுவந்தனர்.


விசாரணையின் போது தேவநாதன் எப்படி நடந்துகொண்டான்?


""சரியான கல்லுளி மங்கனா இருக்கான். கொஞ்சம் கூட அவன் அலட்டிக்கலை. அவனுக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை. அதுதவிர நேரா நேரத்துக்கு நல்ல சாப்பாடா கேட்டு வாங்கி திருப்தியா சாப்பிட்டான். "என்னடா... நீ கோயில்ல செக்ஸ் வச்சிக்கிட்டது தப்பில்லையா'ன்னு கேட்டதுக்கு... "வேதங்கள் செக்ஸைக் கொண்டாடுது. காமம் கடவுளுக்கு விரோதமான விஷயம் இல்லை'ன்னு லெக்ஸர் அடிச்சவன்... மன்மத விஷயங்களைச் சொல்லும் சமஸ்கிருத வேத சூத்திரங்களை கடகடன்னு ஒப்பிச்சான் பாருங்க.


அசந்துபோய்ட்டோம். அதேபோல் சிவன் தொடங்கி இந்திரன் வரை கடவுள்கள் செய்த மன்மத லீலைகள் பத்தியும் பட்டியலிட்டான். இன்னும் கொஞ்சநேரம் அவனை காமம் பத்தி பேச விட்டிருந்தா எங்களையே அவன் டைரக்ஷனுக்கு மாத்திவிட்டிருப்பான் போல'' என்கிறார்கள் அவனை விசாரித்த காக்கிகள்.

அவன் காக்கிகளிடம் கொடுத்த வாக்குமூலத்தில் பல விஷயங்களை பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறான். அதில் ஒரு பகுதியை மட்டும் பார்ப்போம்.""நான் ஐந்தாவது வரைதான் படிச்சேன். அதுக்குப் பிறகு சங்கரமட வேத பாடசாலையில் வேதம் படிச்சேன். சின்ன வயசிலிருந்தே காமத்தின் மீது அதீத ஆர்வம் எனக்கு. அப்பாவுடன் கோயிலுக்கு போறச்ச பெண்கள்ட்ட பக்குவமா... இதமா... பேசற கலையை வளர்த்துண்டேன். கோயிலுக்கு வர்ற பெண்களோட எண்ணங்களை அவங்க கண்களைப் பார்த்தே படிச்சுடுவேன். குழந்தை வரம் வேணும்னு ஆண்டவனைப் பிரார்த்திக்கிற பொண்ணுக லேசில் படிய மாட்டாங்க. ஆனா... குழந்தைக்கோ கணவனுக்கோ உடல்நிலை சரியில்லைன்னு கவலையோட கோயிலுக்கு வர்ற பொண்ணுகளை இதமா ஆதரவா பேசி வளைச்சிட முடி யும். அதேபோல் எல்லோர்ட்டயும் கலகலன்னு பேசற பொண்ணுகளை... "அம்பாள் கணக்கா இருக்கே... அம்சமான உடம்பு. கட்னவன் கொடுத்து வச்சவன்'னு கொஞ்சம் புகழ்ந்தா போதும்... நம்ம பக்கம் சரிஞ்சிடுவாங்க. ""அதேபோல் "கடவுள்முன் கருவறையில் சங்கமிச்சா... வாழ்க்கை ஏகபோகமா ஆகும்'னு சொல்லியும் பலரைத் தொட்டிருக்கேன். சிலர் கருவறையில் வேணாம்னு தயங்குவாங்க. அப்படிப்பட்டவங்களை... அவங்க வீட்டில் வைத்தோ... அல்லது லாட்ஜில் வைத்தோ... சல்லாபிப்பேன். பலபேரைத் தொட்டாலும் அவங்கள்ல 8 பேரை மட்டும்தான் செல்போன்ல கிளுகிளுப்பா படம் எடுத்திருக்கேன். அதிலும் கோயில்ல வச்சி ரெண்டுபேரை மட்டும் எடுத்திருக்கேன். அதில் ஒருத்தி டாக்டரேட் வாங்கின லேடி புரபஸர். இன்னொருத்தி பூக்காரி. மத்தவங்களை காஞ்சிபுரம், மாமல்லபுரம், சென்னைன்னு லாட்ஜில் வச்சி உல்லாசம் அனுபவிச்சி படம் எடுத்திருக்கேன். அப்படி நான் படம் எடுத்ததில் ஒருத்தி... தாசில்தாரோட மனைவி. இன்னொருவர் ஒரு லேடி டாக்டர்.""என்னோட கோயில் லீலைகளுக்கு அந்த பூக்காரி ரொம்ப உடந்தையா இருப்பா. நான் யாருடனாவது கருவறையில் சல்லா பிச்சா.. அந்தப் பூக்காரிதான் வாசல் பக்கம் காவலிருப்பா. யாராவது வந்தா... "சாமி அர்ச்ச னைக்கு


ஆளுவருது'ன்னு குரல் கொடுத்து உஷார் படுத்துவா. உடனே சல்லாபத்தில் இருந்த பெண்ணை ஓரமா -கருவறை உள்ளே யே நிக்கவச்சிட்டு.. அப்பாவி மாதிரி அர்ச்ச னைத் தட்டை வாங்கி... அர்ச்சனை பண் ணிட்டு... வர்றவாளை அனுப்பிடுவேன். காமம் தப்புன்னு நினைக்கிறது தப்பு. கோயில்ல சிலை களை மன்மத லீலைகளோட படைச்சதே... மன்மதக் கலையை பரப்புறதுக்காகத்தான். புதுசா கல்யாணமாகும் தம்பதிகளை கோயி லுக்கு அனுப்பறதே... சிலைகளைப் பார்த்துக் கத்துக்கோ என்பதற்காகத்தான். மன்மதத்தை சரியா கத்துக்காததால்தான் பலபேர் குடும் பத்தில் குழப்பம். என்னைப் பொறுத்தவரை கடவுள் கொடுத்த வரம் காமம்'' என்ற ரீதியில் அவன் கொடுத்த ஓப்பன் ஸ்டேட்மெண்ட்டைக் கேட்டு விக்கித்துப் போயிருக்கிறார்கள் காக்கிகள்.இவனது ஸ்டேட்மெண்ட்டைப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ந்துபோன காஞ்சிபுரம் கோயில் அர்ச்சகர்கள் தங்கள் சங்கத்தைக்கூட்டி... "இனி எந்தக் கோயிலிலும் தேவநாதனை அர்ச்சனை பண்ண அனுமதிப்பதில்லை' என தீர்மானமே போட்டிருக்கிறார்கள்.மற்ற பெண்கள் தேவநாதனோடு வீட்டிலும் விடுதி அறையிலும் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். எனவே இவர்களை கோயில் புனிதத்தைக் கெடுத்த குற்றவாளி களாக வழக்கில் சித்தரிக்க முடியாது. அதே சமயம் தேவநாதனின் கருவறை உல்லாசத்திற்கு பார்ட்னராக இருந்த...

அந்த லேடி புரபஸரையும் பூக்காரியையும் சேர்த் தால்தான் வழக்கு வலுவாக நிற்கும். எனவே மேற்கண்ட இரு பெண்களையும் கைது செய்யலாமா என்ற ஆலோசனையில் காவல்துறை இருக்கிறது. அதேபோல் பெண்கள் தொடர்பான வழக்கு என்பதால் ஒரு நேர்மையான பெண் ஆய்வாளரை விசாரணை அதிகாரியாகப் போட்டு மேலும் வழக்கைத் துருவலாமா? அல்லது வழக்கை சைபர் கிரைமிடம் ஒப்படைக்கலாமா?

என்றெல்லாம் பலத்த யோசனையிலும் இருக்கிறார்கள் காக்கிகள்.தேவநாதன் தனது மனைவி கங்காவையும் செல்போனில் கிளுகிளுப்பாக படம் எடுத்திருக்கிறானாம். இது போன்ற படங்களை தனது சொந்த ரசனைக்காக மட்டுமே தேவநாதன் எடுத்திருக்கும்போது...

"செக்ஸ் படம் எடுத்து இண்டெர்நெட்டில் பரப்பி னான்' என்ற குற்றச்சாட் டையும் இவன்மீது வைக்க முடியுமா? என காக்கிகளே நிறையவே நெற்றி சுருக்குகிறார் கள்.

ஏனெனில், அந்தப் படங்களை பரப்பியவர்கள் செல்போன் ரிப்பேர் கடை நடத்திய பாலாஜியும் செந்திலும்தான். எனவே பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடத்திவரும் காக்கிகள்... மேலும் தேவநாதனை ஒரு வாரம் விசாரிக்க... கஸ்டடி கேட்டு உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறார்கள்.ஒருவேளை அப்பீல் கிடைத்தால்...

இன்னும் பல கிளுகிளு பூதங்கள் தேவநாதனின் வாக்குமூலங்களில் இருந்து கிளம்பும்.


""அந்த ஸ்கூலுக்கு போகமாட்டோம்''

ச்சம்பட்டி பள்ளியில் படிக்கும் தங்கள் பெண் பிள்ளைகளுடன் நெல்லைக்குப் படையெடுத்த மீனாட்சிபுரம் தலித் மக்கள்... அங்குள்ள அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் அதிகாரியான ஜெசோலைட் செல்வியை முற்றுகையிட்டு.... ""அம்மா... இனி எங்க பிள்ளைகளை அச்சம்பட்டி இந்து நடுநிலைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பமாட்டோம்.
வேற ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்க்க நீங்கதான் உதவணும்'' என்றார்கள் கண்ணீருடன்.திகைத்துப்போன அந்த அதிகாரி...’’""என்ன ஆச்சு? அச்சம்பட்டி பள்ளிக்கூடத்துக்கு என்ன குறைச்சல்?'' என்றார் ஒன்றும் புரியாமல். மீனாட்சிபுரவாசிகளோ “""அங்க வாத்தியார்ங்கிற பெயரில் ஒரு கேடுகெட்ட மிருகம் இருக்கு. இனியும் எங்கப் பிள்ளைகளை அங்க அனுப்பினா... அவ்வளவுதான். அந்த பள்ளியில் எல்லா ஆசிரியர்களும் ஒரே சாதி என்பதால் அவரைத் தட்டிக்கேட்கமாட்டேங்கறாங்க'' என்றார்கள் கண்ணீரைத் துடைத்தபடி. அந்தக் கல்வி அதிகாரி மேலும் விளங்காமல் திகைக்க... பாதிக்கப்பட்ட மாணவிகள் கைகளைக் கட்டிக்கொண்டு..

பாடம் ஒப்புவிக்கும் பாணியில்... தாங்கள் அனுபவித்த சங்கடங்களை அவரிடம் ஒப்பிக்க ஆரம்பித்தனர்.""அம்மா... அங்க இருக்கும் ஜெயராஜ் சார் ரொம்ப மோசமா நடந்துக்கிறார். தினசரி நாங்க ஸ்கூலுக்கு வந்ததும்... எல்லாரும் ஜட்டி போட்டிருக்கீங்களா? காட்டுங்கன்னு சொல்வார். நாங்க அழுதாலும் விடமாட்டார். அவரோட அடிக்கு பயந்து வேறவழியில்லாம... நாங்க காட்டுவோம். அதுக்குப் பிறகும் சும்மா விடமாட்டார். மேல சும்மீஸ் போட்டிருக்கீங்களான்னு தொட்டுப் பார்ப்பார். அப்புறம் பின்பக்கமெல்லாம் தட்டி என்னென்னவோ சொல்வார். எங்களுக்கு பயமா இருக்கு. இனி அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டோம்'' என்றார்கள் சங்கடமும் வேதனையுமாக. திகைத்துப்போன கல்வி அதிகாரியோ ""கவலைப்படாதீங்க. நான் விசாரிக்கிறேன்'' என அவர்களை அனுப்பிவைத்தார்.அச்சம்பட்டி இந்து நடுநிலைப் பள்ளியில் இருக்கும் ஒரே ஆண் ஆசிரியர் ஜெயராஜ்தான். மீதமுள்ள நான்குபேர் ஆசிரியைகள். இது தொடர்பாக தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியிடமே நாம் கேட்டபோது, ""எங்கிட்டயும் அவங்க இந்தப் புகாரைச் சொன்னாங்க.

நானும் அந்த ஆசிரியரைக் கூப்பிட்டு கண்டிச்சிட்டேன். இதைத் தவிர நான் வேறு என்ன பண்ண முடியும்?'' என்று முடித்துக்கொண்டார். இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் கவனத்துக்குப்போக... அவ ரும் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். சர்ச்சைக்குரிய ஆசிரியர் ஜெயராஜை நாம் தொடர்புகொண்டு அவர் மீதான புகார் குறித்து கேட்டபோது, ""பள்ளிக்கூடப் பிள்ளைகள்... ஜட்டியெல்லாம் போட்டுக் கிட்டு நீட்டா...

ஒழுக்கத்தோட டிரஸ் பண்ணிக்கிட்டு வரணும்னு சொல்லுவேன். அதுதான் இப்ப தப்பா ஆய்டிச்சி. மத்தவங்க சொல்ற மாதிரியெல்லாம் இல்லைங்க'' என்கிறார் கூலாகவே.ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டிய ஆசிரியர்... ஒழுக்கம் என்ற பெயரில் ஒழுக்கத்துக்கு எதிராக நடப்பது மன்னிக் கக்கூடாத குற்றம்.

""யாரும் யாரோடவும்''

""நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குதுன்னு... குடுகுடுப்பை அடிச்சி... ஊருக்கெல்லாம் பலன் சொல்லி வாழ்க்கை நடத்திவரும் எங்களுக்கு.... எப்ப நல்ல காலம் பொறக்கும்னு தெரியலைங்க. நாங்க அடிமை வாழ்க்கையையும் அசிங்கமான வாழ்க்கையையும் சந்திக்கவேண்டியிருக்கு'' என கண்கலங்கினார்கள் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த அந்த கோடங்கிகள்.
எதற்கு இந்தப் புலம்பல்? யார் மீது புகார்? என நாம் விசாரித்த போது... தங்கள் துயரத்தைப் பட்டியலிடத் தொடங்கினார்கள் அவர்கள்.... “""குடுகுடுப்பை அடிச்சி அர்த்த ஜாமத்திலும்... ஊரே எழாத அதிகாலை வேலைகள்லயும் வீடுவீடா போய்... ஜக்கம்மா அருளால... எல்லாருக்கும் நடக்கப் போற பலன்களைச் சொல்லி... ஜனங்க கொடுக்குறதை வச்சி பிழைப்பை ஓட்டறவங்க நாங்க.
எங்களைக் குடுகுடுப்பைக்காரர்.. கோடங்கின்னு கூப்பிடுவாங்க. தமிழ்நாட்ல எடுத்துக் கிட்டா... ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சேலம்னு பல பகுதிகள்லயும்... பல கிராமங்கள் லயும் ஏறத்தாழ 40 ஆயிரம் பேருக்கு மேல்... நாங்களும் எங்க சொந்த பந்தங்களும் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இதில் இப்ப பெரும்பாலோர் குலத்தொழிலை விட்டுட்டு... லோக்கலில் கிடைக்கும் வேலைகளைச் செய்து...
பிள்ளைக் குட்டிகளைப் படிக்கவைக்கும் முயற்சியில் இருக்கோம். அப்படிப்பட்ட எங்க ஒட்டு மொத்த சமூகத்தையும்... நாட்டாமை என்ற பெயரில் ஆட்டிப் படைச்சிக்கிட்டு இருக்கார் ஒரத்தநாட்டைச் சேர்ந்த தாள.கணேசன். அவரோட அடாவடிகளை சகிக்கமுடியாம நாங்க தவிச்சிக்கிட்டு இருக்கோம். அவர் எங்களை அடிமையா நடத்தி... கட்டைப் பஞ்சாயத்து பண்ணிகிட்டு இருக்கார். எங்க சமூக ஜனங்க வாழ்ற பகுதிகள்ல பட்டக்காரர், கொத்துக்காரர்னு ரெண்டுபேரை நியமிச்சி...
அவங்க மூலம் எங்க ஜனங்களுக்குள் நடக்கும் பிரச்சினைகளைத் தன்னிடம் பஞ்சாயத்துக்குக் கொண்டுவரச்செய்து... மனம்போன போக்கில் எங்களைத் தண்டிக்கிறார்'' என்றார்கள் கோரஸாய்.""இப்படி மொட்டையாச் சொன்னா எப்படி? அப்படி என்னதான் அடாவடி பஞ்சாயத்து பண்றார்?'' என்றோம் அவர்களிடமே.அவர்களில் ஒருவ ரான முருகேசனோ, ""சின்ன சின்ன பிரச் சினை என்றாலும் தாள.கணேசன்கிட்டதான் நாங்க போகணும். அவர் முழுசா விசாரிக்காமலே.... 2 ஆயிரம், 3 ஆயிரம்னு அபராதத்தை விதிப்பார். அதோட செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டு.. மேல் சட்டை இல்லாம அந்தந்த ஏரியாவின் பட்டக்காரர், கொத்துக்காரர் கால்ல நாங்க விழுந்து மன்னிப்பு கேட்கணும். அப்படி கேட்காட்டி.. எங்க ஜனங்க யாரும் எங்ககூட பேசக்கூடாது. பேசினா அவங்களுக்கும் அபராதம்தான்.
இதில் என்ன கொடுமைன்னா.. யாராவது யார் மனைவியையாவது இழுத்துட்டுப் போய்ட்டாக்க... அந்த நபருக்கு சின்னதா ஒரு அபராதத்தைப் போடுவார். அபராதம் கட்டத் தயாரா இருக்கவன்.. அடுத்தவன் மனைவிகளை மடக்கி அவங்களோட தைரியமா வாழலாம். இதனால யார் வேணும்னாலும் எந்தப் பெண்ணோட வேணும்னாலும் அபராதத்தைக் கட்டிட்டு வாழலாம்னு ஆகிப் போச்சு. இதனால் எங்க சமூக ஒழுக்கமும் தலைகீழா மாறிக் கிட்டு இருக்கு'' என்றார் சங்கடமாய்.""சேலத்தை சேர்ந்த ஒரு முதியவருக்கு ஏற்கனவே ஐந்து மனைவிகள். காலம் போன கடைசியில்... அவர் 17 வயசு பொம்பளைப் பிள்ளையைக் கட்டிக்கிட்டார்.
இது தவறுன்னு தடுக்காத நாட்டாமை... அந்தப் பெரியவருக்கு ஒரு அபராதத்தைப் போட்டுட்டு... நல்லபடியா சேர்ந்து வாழுங்கன்னு அனுப்பிட்டார். அந்தப் பெரியவர் மாறிமாறி ரவுண்டுகட்டி விளையாடிக்கிட்டு இருக்கார். தாள.கணேசனைப் பொறுத்தவரை... யாரும் யாரோடவும் வாழலாம்ங்கிறதுதான் சித்தாந்தம். இந்த விவகாரங்கள்ல அபராதம்ங்கிற பேர்ல வசூலாகிற பணத்தையும் தாள.கணேசனே எடுத்துக்குவார். இவரது அடாவடிகளைக் கண்டு நொந்துபோன நாங்க..
"இனியும் கேடுகெட்டத் தனமா-அடிமைத்தனமா நாட்டாமைக்குக் கீழ வாழக்கூடாதுன்னுதான்... அவரின் பிடியில் இருந்து விடுவியுங்கள்னு' காவல்துறையிடம் மனு கொடுத்துட்டு... விடுதலைக்காகப் போராடிக்கிட்டு இருக்கிறோம்'' என்கிறார் வடிவேல் எரிச்சலாய். கோடங்கிகளுக்காகக் குரல்கொடுத்துவரும் வழக்கறிஞர் குஞ்சம்மாளையும் நாம் சந்தித்தோம். அவர் நம்மிடம், ""எப்போதோ இருந்த வழக்கத்தை இப்பவும் பிடிச்சிக்கிட்டு.. "நாட்டாமைத் தலைவன் நான்தான். நான் சொல்றதுதான் சட்டம்.
அதைத்தான் நீங்கள்லாம் கேட்கணும்'னு ஒருத்தர் கட்டைப் பஞ்சாயத்து பண்றாருன்னா... அதை எப்படி சட்டம் வேடிக்கை பார்க்குது? பஞ்சாயத் துங்கிற பேரில்... சரியான தம்பதிகள் பிரியவும்... தப்பான ஜோடிகள் சேரவும் உதவுறது எந்த வகையில் சரியானது? அதனால்தான் காவல்துறை அந்த அடாவடிப் பேர்வழி மீது நடவடிக்கை எடுக்கணும்னு பாவப்பட்ட கோடங்கி களுக்காக நான் குரல்கொடுத்துக்கிட்டு இருக்கேன். கோடங்கிகளுக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டேன்'' என்றார் அழுத்தம் திருத்த மாய். இது தொடர்பாக கோடங்கிகளின் நாட்டாண் மை என சொல்லிக் கொள்ளும் தாள. கணேசனிடமே நாம் கேட்டபோது...
’""என் மேல் சொல்லப்படும் புகார்கள் எல்லாமே பொய்யானது. இந்தக் காலத்தில் நாட்டாமை... மரத்தடிப் பஞ்சாயத்துன்னு நாம நடத்த முடியுமா? ஒரு காலத்தில் அதெல்லாம் நடந்திருக்கலாம். இப்ப அப்படி எதுவும் இல்லை. வருஷத்துக்கு ஒரு தரம் எங்க ஜனங்க எல்லாரும் திருவிழாவில் கூடுவோம். அப்ப நல்லது கெட்டதைப் பத்திப் பேசிக்குவோம். இதைக் கட்டைப் பஞ்சாயத்துன்னு சொன்னா என்ன பண்றது?'' என்கிறார் கூலாய்.ஊருக்கெல்லாம் பலன் சொல்லும் கோடங்கிகளுக்கு இனியாவது நல்லகாலம் பிறக்குமா?

யுத்தம் 4 -நக்கீரன் கோபால்


""என்னாச்சு கோபால்?'' -பரபரப்பும் பதற்றமும் கலந்த குரலில் கேட்டார் ரஜினி. பெங்களூரில் எதிர்கொண்ட நிலைமைகளைச் சொன்னேன். ரஜினியால் நம்ப முடியவில்லை.""என்ன சொல்றீங்க கோபால்?'' - அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக அவர் கேட்டதற்கு காரணம் இல்லாமலில்லை.2000-ம் ஆண்டு. வீரப்பனால் கடத்தப் பட்ட ராஜ்குமாரை மீட்பதற்கான முயற்சியில் இரு மாநிலங்களின் அரசுத் தூதராக நக்கீரன் டீம் மூன்றாவது முறையாகக் காட்டுக்குப் போய்விட்டு வந்திருந்த நாள்.


ராஜ்குமாரையும் அவருடன் கடத்தப்பட்டவர்களையும் அழைத்து வந்திருக்க வேண்டிய நாள். வீரப்பனிடம் இருப்ப வர்களை மீட்பதற்காக, தமிழ்த்தீவிரவாதிகளை விடுவிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் விதித்த தடையின் காரணமாக மீட்பு முயற்சி நிறை வடையவில்லை.நானும் தம்பி காம ராஜும் கோட்டையில் முதல் வர் கலைஞரை சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். என் செல்போன் ஒலிக்கிறது.


ரஜினிதான் அழைத்தார். அவர் குரலில் அவசரம் தெரிந்தது. நான் கலைஞரைப் பார்க் கிறேன். ""பேசுங்க'' என்கிறார் பெருந் தன்மையாக. ரஜினி பேசப்பேச நான், ""சொல்றேன்.. சொல்றேன்.. சொல்றேன்..''


என்று மட்டுமே சொல்லிக்கொண்டி ருக்கிறேன். முதல்வர் அருகில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் எல்லோரும் இருக்கிறார்கள்.
ரஜினி என்னிடம் பேசியதற்கு காரணம், அவரது லைனுக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பேசியதுதான்! ""இதுவரைக்கும் நாம்தான் தமிழ்நாட்டுக் குப்போய் அவங்ககிட்டே பேசுறோம். அவங்க நம்மை ஒரு முறைகூட பெங்களூ ருக்கு வந்து பார்க்கலை. எனக்கு கரு ணாநிதிஜி பற்றித் தெரியும். But our associates feel lot'' என்று சொல்லி யிருக்கிறார் கிருஷ்ணா. தமிழ்நாட்டுத் தரப்பிலிருந்து பெங்களூருக்கு வர வேண்டும் என்பதுதான் கிருஷ்ணா பேச்சின் சாராம்சம். இதைத்தான் ரஜினி என்னிடம் போனில் தெரிவித்தார். ""சொல்றேன்... சொல்றேன்..'' என்று நான் சொல்லிக்கொண்டிருந்தது இதனால் தான்.ரஜினியிடம் பேசியதை கலைஞரிடம் சொன்னேன். சட்டென அவர், ""நீங்களே போயிட்டு வாங்க ளேன்'' என்றார். இரு மாநிலங்களின் அரசுத் தூதராக காட்டுக்குச் சென்று மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நமக்கு, தமிழக அரசின் தூதராக கர்நாடகத்திற்கு செல்வது என்பது கூடுதல் கௌரவம். அந்த கௌரவத்தையும் நக்கீரனுக்கே கலைஞர் அளித்ததை எதிர்பார்க்க வில்லை. ""நானா?... சரி'' என்றேன். ""துணைக்கு ரஜினியை அழைச்சிட்டுப் போங்க கோபால்'' என்ற கலைஞர், தனது செயலாளர் சண்முகநாத னிடம் ரஜினிக்குப் போன் போட்டுக் கொடுக்கச் சொன்னார். ரஜினியின் லைன் கிடைத்ததும், ""கோபால் வருவதா கிருஷ்ணாகிட்டே சொல் லுங்க ரஜினி.
நீங்களும் துணைக்குப் போயிட்டு வந்திடுங்க'' என்றார் கலைஞர். ரஜினி ஓ.கே. சொன்னார்.தம்பி காமராஜ் மீட்பு முயற்சி தொடர்பான மற்ற வேலைகளுக்காகக் கிளம்பிவிட்டார். நான் ரஜினி வீட்டிற்குப் போனேன். வாசலில் காத் திருந்தார். ""வாங்க.. வாங்க கோபால்'' என வழக்கமான ஸ்டைலில் வர வேற்றவரிடம்,
""நீங்க உங்க வழக்கம் போல பெங்களூருக்குப் போயிடுங் கண்ணே.. நான் சதாப்தி ட்ரெயினில் வந்திடுறேன்'' என்றேன்.""ஹா... ஹா... ஹா...''- சினிமாவில் வெளிப்படும் அதே அட்டகாசமான சிரிப்பு ரஜினியிடமிருந்து வந்தது. ""என்னா பாஸ்.. நீங்க என் கூடத்தான் வர்றீங்க. இந்த நிமிஷத்திலேயிருந்து நான் உங்க பி.ஏ.! உங்களுக்கு பேங்ளூர்ல என்ன பேருன்னு நீங்க தெரிஞ்சுக்கல பாஸ். சதாப்தி... ம்.. சதாப்தி.. பேங்களூர் வாங்க சொல்றேன்.
ஹா.. ஹா.. ஹா..''ஏதாவது தவறாக சொல்லிவிட் டோமோ என யோசித்தேன். ரஜினி யாருக்கோ போன் செய்து, கன்னடத்தில் பேசினார். பிறகு என்னைப் பார்த்து, ""ரெடி.. போலாமா'' என்றார். ஃப்ளைட்டில் எக்ஸிகியூட்டிவ் கிளாஸில் எனக்கும் அவருக்கும் டிக்கெட் போடப்பட்டிருந்தது. ஏர் போர்ட்டுக்கு அவருடைய காரில்தான் போனோம். டிரைவர் கணபதிதான் ஓட்டி வந்தார். எங்களுக்கு முன்பாகவே ஏர்போர்ட்டில் பத்திரிகையாளர்கள் காத்திருந்தார்கள். பயணத்தின் நோக்கம் பற்றிக் கேட்பதற்காகத்தான்.நான் ரஜினியைப் பார்த்தேன். ""நீங்கதானே பி.ஏ.ன்னு சொன்னீங்க.
நீங்கதான் அவங்ககிட்டே பேசணும்'' என்றேன். அவர்தான் பத்திரிகையாளர் களிடம் பேசினார். ஃப்ளைட்டில் எங்களோடு கர்நாடக ஐ.ஜி. சீனிவாசன், முதல்வர் கிருஷ்ணாவின் செகரட்டரி ராகவேந்திர சாஸ்திரி இருவரும் வந்தனர். பெங்களூரு ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கு கிறது.வரிசையாக நிற்கின்றன சைரன் கார்கள். அதில் ஒன்று புல்லட் புரூஃப் கார். நான் ரஜினியைப் பார்க்கிறேன். ""இதெல்லாம் யாருக்குண்ணே!'' ""ஹா... ஹா.. ஹா.. உங்க பவர் உங்களுக்குத் தெரியல கோபால்.
இங்கே நீங்கதான் தெய்வம். வண்டியில ஏறுங்க.'' புல்லட் புரூஃப் கார் புறப்படுகிறது. டிராபிக் நெருக்கடி சுத்தமாக இல்லை. சென்னையிலிருந்து எங்களுடைய ஃப்ளைட் புறப்பட்டதுமே இங்கே டிராபிக்கை க்ளோஸ் பண்ணிவிட்டார்களாம். வழியில் கண்ணுக் குத் தெரிந்த கட் டிடங்களெல்லாம் கல்வீச்சுகளால் சேதமடைந்திருந் தன. கண்ணாடி கள் நொறுங்கியிருந் தன. ராஜ்குமார் கடத்தப் பட்டு, அன் றைய தேதியுடன் 45 நாட்கள் ஆகி யிருந்தன. 45 நாட்களாக கர்நாடகாவில் பந்த். எல்.கே.ஜி.யி லிருந்து எம்.பி.ஏ. வரை ஸ்கூல்- காலேஜ் எல்லாமே மூடிக்கிடக் கின்றன. கடைகள், அலுவலகங்கள் எதுவும் திறக்கப்படவில்லை என்று தெரிந்ததும் எனக்கு பகீர் என்றி ருந்தது.மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எங்கள் கான்வாய் ஒரு பெரிய ஏரியாவுக்குள் நுழை கிறது. எந்த இடம் என்று எனக்குத் தெரியவில்லை. பரந்து விரிந்த புல் வெளியில் வரிசையா கப் பலர் நிற்கிறார்கள்.
காரிலிருந்து நாங்கள் இறங்கியதும் அவர்கள் என்னருகே வந்து சடசட வென என் காலில் விழுகிறார்கள். நான் பதறிப்போய் விலகிக்கொண்டு ரஜினியைப் பார்க்கிறேன்.""எம்.எல்.ஏஸ்.... இவங்களெல்லாம் இந்த மாநிலத்து எம்.எல்.ஏ.க்கள். நான் சொன்னேனே தலைவா... உன் பவரை பேங்களூர் வந்து பாருன்னு. பார்த்துக்குங்க'' -அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறார்.
புல்வெளியைத் தாண்டி பங்களாவுக்குப் போனபோது அங்கும் வரிசையாகப் பெருந்தலைகள். நான் மறுபடியும் ரஜினியைப் பார்க்கிறேன்.""எம்.ப்பீஸ்...''எல்லோரும் கும்பிடுகிறார்கள். வணக்கம் சொன்னபடியே உள்ளே நுழைந்தால், கன்னட நடிகர் அம்பரீஷ். என்னை கட்டித் தழுவிக்கொண்டு, ""கடவுளே...'' என்கிறார். ரஜினி என்னை, "பார்த்தியா...' என்பதுபோல பார்க்கிறார். ""உங்களுக்காக சி.எம். வெயிட்டிங் கோபால்'' என்கிறார் அம்பரீஷ்.ஒரு கதவு திறக்கிறது."Yes Mr.Gopal. Come in. You are welcome''. -முதல்வர் கிருஷ்ணா எங்களை வரவேற்க, அவரருகில் கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே (இப்போது மத்திய அமைச்சர்) நின்றுகொண்டி ருக்கிறார். பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி அரசு முறைப்படி எனக்கு வரவேற்புத் தரப்படுகிறது. "You are my guest Mr.Gopal. I want to take photos with You'' -என்று கிருஷ்ணா சொல்ல, நடுவில் நான் நிற்கிறேன். என் வலது பக்கத்தில் கிருஷ்ணா, அவரையடுத்து மல்லிகார்ஜுன கார்கே. இடது பக்கத்தில் நடிகர் அம்பரீஷ்.
அவரையடுத்து ரஜினி. ஃபோட்டோ செஷன் முடிந்து புகைப்படக்காரர்கள் சென்றதும், அம்பரீஷும் புறப்பட்டுவிட்டார். நாங்கள் 4 பேர் மட்டும் இருக்கிறோம். திரும்பிப் பார்த்தேன். சடாரென்று கதவுகள் மூடப்படுகின்றன

க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L 2009) விஞ்ஞானப் பிரிவில் தமிழ் மாணவி அகில இலங்கை ரீதியில் முதலிடம்

ன்று வெளியாகியுள்ள 2009 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் கல்வி பயின்ற மைதிலி சிவபாதசுந்தரம் என்ற தமிழ்மாணவி அகில இலங்கை ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் (A/L 2009) முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தநிலையில் தம்மைபோன்று திறமைகளை வெளிக்காட்டியுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் அவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தாம் கல்வி கற்கும்போது பாடசாலையில் ஆசிரியர்கள் வழங்கும் பாடங்களை அன்றன்று படித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தாம் கல்விகற்ற சைவ மங்கையர் கழக பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார். இதேவேளை, அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள யாழ்.மாவட்டம், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவனான, அன்டன் கிறிஸ்டர்ஸ் ஜோன் நிராஜ் கணிதப் பிரிவில், அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் தொடர்பில் கருத்துரைத்துள்ள கல்லூரியின் அதிபர், குறித்த மாணவன், தாம் திறமையாக படிக்கும் அதேநேரம் மற்றைய மாணவர்களுக்கும் படிப்பு மற்றும் நிதியுதவிகளை செய்யும் ஒரு மாணவன் என குறிப்பிட்டுள்ளார்.

அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்!! – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை செயலகம்

விடுதலைப் புலிகளின் தலைமை செயலகத்தால் தமிழீழ புலனாய்வுப் பிரிவின் சார்பில் நெருடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை. தளபதி ராம் மற்றும் நகுலனால் குழம்பிப் போயுள்ள புலம் பெயர் தமிழீழத்தை, தெளிவுபடுத்தும் அறிக்கையாகவே தமிழீழ புலனாய்வுப் பிரிவால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ்பேசும் மக்களே,
எமது இயக்கத்தின் முன்னாள் தளபதிகளாக இருந்த திரு. ராம் மற்றும் திரு. நகுலன் ஆகியோர்கள் பற்றி அண்மைக் காலமாகப் பல்வேறு வகையான கதைகள் உலாவி வருவதானால், காலத்தின் கட்டாயத் தேவையையும், அவசரத்தையும் கருத்தில் கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்க வேண்டியது எமது கடமை என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினராகிய நாங்கள் உணர்கின்றோம்.
இந்த விடயத்தில், ராம் மற்றும் நகுலன் ஆகியோரது முக்கியத்துவத்திற்கு அப்பால் அவர்கள் பற்றி வெளிவரும் கதைகளின் பின்னணியில் சிறிலங்கா அரசு எமது இனத்தின் மீது நடாத்த முயலும் பெரும் உளவியல் போரே முக்கியமானதாகும். அதனை நாம் விளங்கிக் கொள்வதே அவசியமானதாகின்றது.
அந்த உளவியல் போரின் ஆழ அகலத்தையும், அந்தப் போரின் விளைவாக சிறிலங்கா அரசு ஏற்படுத்த முனையும் தாக்கத்தையும் புரிந்து கொள்வதற்கு தளபதிகள் ராம் மற்றும் நகுலன் பற்றி வெளியாகும் கதைகளின் உண்மைப் பின்னணியை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
எமது இயக்கத்தின் முன்னாள் தளபதியான ராம், கடந்த மே மாதத்தின் பின்னர், தன்னுடனிருந்த போராளிகள் சிலருடன் அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மறைவிடங்களில் மாறிமாறி இருந்து வந்தார். இவருடன் எமது இயக்கத்தின் இன்னொரு முன்னாள் தளபதியான நகுலனும் கூட இருந்தார். ஆனால், காலப்போக்கில், வீரச்சாவுகள், காணாமல் போதல்கள், சிங்களப் படையினரிடம் சென்று சரணடைதல் போன்ற பல்வேறு காரணங்களினால் ராம் மற்றும் நகுலனுடன் இருந்த போராளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது.
இந்த நிலையில், தனியாகத் தாக்குப் பிடித்து நிற்க முடியாத நிலையில் – மட்டக்களப்பில் இரகசியச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சில புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய ராம், பின்பு அவர்களது ஏற்பாட்டில், அவர்களது உதவியுடன் மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச மறைவிடமொன்றில் நகுலனுடன் தங்கியிருந்தார். இந்த நேரத்தில், மே மற்றும் யூன் மாதங்களில் வெல்லாவெளி பகுதியில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் தங்கியிருப்பதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறை செய்திகளை வெளியிட்டது. இந்த செய்திகளை தொடர்ந்து அடிக்கடி பல தடவைகள் இடங்களை மாற்ற வேண்டியிருந்தது. இதனால், இவர்கள் இருவரையும் பாதுகாத்து வைத்திருப்பதில் பல்வேறு சிக்கல்களை புலனாய்வுத் துறைப் போராளிகளும், இவர்களை வைத்திருந்த ஆதரவாளர்களும் எதிர்நோக்கினர்.
இத்தகைய சூழ்நிலையில், இன்னொரு திருப்பமாக, இறுதிக் கட்டப் போரின் போது வன்னியிலிருந்து வெளியேறி வந்து வவுனியா மறைவிடமொன்றில் தங்கியிருந்த புலனாய்வுத்துறையின் மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளர் பிரபா, மட்டக்களப்பு நோக்கி நகரும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு ராம், நகுலன் ஆகியோரைப் பாதுகாப்பாக வைத்திருந்த புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் ஏற்கெனவே தொடர்பு இருந்து வந்தது. அதன் காரணமாக அவர் ராம் மற்றும் நகுலனுடனும் தொடர்பில் இருந்தார். மட்டக்களப்பு நோக்கி நகரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரபா, அற்குரிய உதவியைப் பெறுவதற்காக அப்போது திருகோணமலையில் இருப்பதாகக் காட்டிக்கொண்ட தவேந்திரன் என்ற புலனாய்வுத் துறைப் போராளியுடன் தொடர்பினை ஏற்படுத்தினார். இவற்றுக்கு அமைய தவேந்திரனின் உதவியுடன் தான் மட்டக்களப்புக்கு வந்து அவர்களைச் சந்திப்பதாக ராம் மற்றும் நகுலனிடம் பிரபா சொல்லியிருந்தார்.
தவேந்திரன், எற்கெனவே, முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான போராளிகளுடன் சிங்களப் படையினரிடம் சரணடைந்திருந்தவர். சிறிலங்கா தடுப்பு முகாம்களிலிருந்து வேறு வழிகளில் தப்பி வெளியேறிய போராளிகள் மூலமாக தவேந்திரன் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்குவதாக தகவல்கள் கசிந்திருந்தன. இருந்த போதும், அவர் எவ்வாறு சிறிலங்கா தடுப்பு முகாமிலிருந்து வெளியில் வந்தார் என்பது பற்றிய விபரங்கள் சரிவர ஆராய முடியாத சூழலில், தன்னையும், ஏனைய சில போராளிகளையும் மட்டக்களப்புக்கு நகர்த்தும் ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக பிரபா தவேந்திரனைத் தொடர்பு கொண்டிருந்தார்.
இந்த இடத்தில் தவேந்திரன் பற்றிய ஒரு பின்னணியைத் தெரிந்து கொள்ளுவது அவசியம். இவரது தந்தை ஒரு சிங்களவர். இவரது சகோதரர்கள் கூட முற்றாகச் சிங்களச் சூழலிலேயே வளர்ந்து, சிங்கள இனத்திற்குள்ளேயே திருமண பந்தங்களையும் ஏற்படுத்தியவர்கள். தவேந்திரன் கூட மிகச் சரளமாக, சிங்களவர் போன்றே சிங்கள மொழியைப் பேசக்கூடியவர். இந்தச் சாதகமான பின்னணிகள் காரணமாக, திருகோணமலையின் சிங்களக் கிராமங்களை அண்டிய பிரதேசங்களிலேயே முன்னர் அவருக்குப் பணிகளும் வழங்கப்பட்டிருந்தன.
இத்தகைய சிங்களப் பின்னணிகள் இவருக்கு இருந்ததாலும், இந்த சிங்களத் தொடர்புகள் மூலமாக முன்னர் அவரால் செய்யப்பட்டிருந்த வெற்றிகரமான வேலைகளின் பெறுபேறுகளை மனதில் வைத்துக்கொண்டுமே, அவை சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையுடன், தான் மட்டக்களப்புக்கு நகருவதற்கான உதவி தேடிய பிரபா, தவேந்திரனை நாடினார். செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக , திருகோணமலையிலிருந்து வேறு சில சிங்களப் பொதுமக்களுடன் வாகனமொன்றில் வந்த தவேந்திரன், குறித்த நேரத்தில், குறித்த ஓரிடத்தில் வைத்து பிரபா குழுவினரை ஏற்றிச் சென்றார். வாகனத்திற்குள் ஏறிய பின்னர் தான், அதற்குள் இருந்தவர்கள் எல்லோரும் சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் எனபது பிரபாவுக்குத் தெரியவந்தது.
மட்டக்களப்பிலிருந்த ராம் மற்றும் நகுலனை இலக்கு வைத்து சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் வவுனியாவில் மேற்கொண்ட முதல் நடடிக்கை இதுவாகும்.
இதன் பின்னர், பிரபாவைக் கையாண்டு மட்டக்களப்பில் புலனாய்வுத்துறைப் போராளிகளின் பாதுகாப்பிலிருந்த தளபதிகளான ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தொடர்புகளை ஏற்படுத்தினர். ஆனால், ராம் மற்றும் நகுலனிற்கோ அல்லது அவர்களைப் பாதுகாத்த எமது புலனாய்வுத்துறைப் போராளிகளுக்கோ பிரபா சிறிலங்கா படையினருடன் இருக்கும் விடயம் அப்போது தெரிந்திருக்கவில்லை. ராம் மற்றும் நகுலனை மிகப்பாதுகாப்பான வேறோர் இடத்திற்கு தான் நகர்த்தப் போவதாகத் தகவல் கொடுத்த பிரபா, குறித்த ஓரிடத்தில் வேறு சில ஆட்களுடன் “ஹயஸ்” வாகனம் ஒன்றில் வந்து அவர்களை ஏற்றிச் சென்றார். தவேந்திரனும் அவருடன் வந்திருந்தார். பிரபாவுடன் வந்தவர்கள் அனைவருமே சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் என ராம் மற்றும் நகுலனைப் பாதுகாத்திருந்த புலனாய்வுத்துறைப் போராளிகள் கருதிய போதும், அவர்கள் தவேந்திரனின் தொடர்புச் சிங்களவர்கள் என பிரபா நம்ப வைத்தார்.
இதன் பின்னர், எமது புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாதிருந்த ராம் மற்றும் நகுலன் ஆகியோர் திருகோணமலைப் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக நம்பப்பட்டது. வெளிநாடுகளில் இருந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்ட ராம், தான் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும், அதற்கு தனக்கு நிதி மற்றும் ஆயுதங்களை ஒழுங்கு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார். இதனை அவரது ஒரு வீரசெயலாகவும், பெரும் தியாகமாகவும் கருதி யாரும் கேள்விகுட்படுத்தாத வகையில், நன்கு திட்டமிட்டு சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் செயற்படுத்தினர்.
இந்த நேரத்தில், திரு. செல்வராசா பத்மநாதன் (கே.பி) அவர்கள் எமது இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்தபோது, சிறிலங்கா அரசு அதனை ஒரு பெரும் அபாயமாக நோக்கியது. கே. பி அவர்களை விட்டு வைத்தால் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஒழுங்குபடுத்தி விடுவார் என்று அஞ்சிய சிறிலங்கா அரசு ராம் அவர்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவித்து கே.பி அவர்களை இலக்கு வைத்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு பகுதியினர் கே. பி. அவர்களின் தலைமையை ஏற்காது முரண்பட்டு இருந்த நேரத்தில், கே.பி. அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய ராம், அவருக்கு ஆதரவு தெரிவித்ததுடன், கே. பி. அவர்களது தலைமையை ஏற்கும்படி கடிதங்களையும் எழுதினார். அதேநேரத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் இருந்த குழப்பங்கள், மோதல்கள், பிரிவுகளைச் சாதுரியமாகப் பாவித்த சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் ராம் அவர்களுக்கும் கே.பி. அவர்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி நுட்பமாகக் காய்களை நகர்த்தி இறுதியில் கே. பி. அவர்களையும் கடத்தினர்.
இங்கு ராம் மற்றும் நகுலன் ஆகியோரை சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தனித்தனியாகக் கையாண்டனரா அல்லது ஒன்றாகச் சேர்த்து வைத்து நாடகங்களை அரங்கேற்றினரா என்பது இன்னும் புலப்படவில்லை. ஆனால், இவர்கள் இருவரையும் வைத்து வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் வளர்த்து, இந்தச் செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்துள்ளனர் என்பது மட்டும் தெளிவாகப் புலனாகின்றது.
இந்த நிலையில், கடந்த செப்ரெம்பர் மாதத்திற்குப் பின்னர் ராம் அவர்கள் சிறிலங்காப் படையினரிடம் இருப்பது பற்றிய தகவல்கள் மெல்லக் கசியத் தொடங்கின. அதனால், அவரை வைத்து தாங்கள் நடாத்தி வந்த புலனாய்வுப் போர் இனிமேல் வெற்றியளிக்காது போய்விடுமோ என சிறிலங்கா புலனாய்வாளர்கள் விழி்ப்படைந்தனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் 5ஆம் திகதி மின்னேரியா சிறிலங்கா படை முகாமிலிருந்து ராம் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும், பின்னர் அவர் நவம்பர் 10ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும் திடீரெனச் செய்திகள் வெளியாகின. அந்த நேரத்தில், தான் தப்பி ஓடி வந்துவிட்டதாக ராம் அவர்கள் வெளிநாட்டிலிருக்கும் எமது புலனாய்வுப் போராளி ஒருவருக்கு தொலைபேசி வழியாகச் சொன்ன கதைகள் நம்பும்படியானவையாக இருந்திருக்கவில்லை. உண்மையிலேயே ராம் அவர்கள் தப்பி ஓடியிருந்தாரா, அல்லது ராம் அவர்கள் தமது பிடியில் இருக்கும் தகவல் கசிந்த நிலையில் புதிய வியூகம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்தும் நோக்குடன் சிறிலங்கா படையப் புலனாய்வாளர்களே அவ்வாறான ஒரு கதையைப் பரப்பினார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ராம் மற்றும் நகுலன் ஆகியோரை வைத்து சிறிலங்காப் புலனாய்வுத் துறையினர் ஆடி வரும் இந்தப் புலனாய்வுப் போரின் உச்சக்கட்டம் தான், வரும் மாவீரர் நாளன்று ராம் நிகழ்த்தப்போகும் கொள்கை விளக்க உரை. இதில், சிறிலங்கா படையப் புலனாய்வாளர்கள் எடுத்துக்கொள்ளக் கூடிய முக்கிய தலைப்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது வீரச்சாவு.
தேசியத் தலைவர் அவர்களது வீரச்சாவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு அகவணக்கம் செலுத்தத் துடிப்பவர்களை ஒரு புறத்திலும், மறுமுனையில், தேசியத் தலைவர் அவர்கள் உயிருடன் வாழ்கிறார் என்று வாதிடுபவர்களையும் அணி பிரித்து மோத வைக்க எதிரி புதிய வியூகங்களை வகுக்கின்றான். தேசியத் தலைவர் அவர்களது வீரச்சாவு பற்றிய விடயம் இங்கே ஒரு கருவி மட்டுமே. அதன் உண்மையான நோக்கம், வெளிநாட்டுத் தமிழ்ச் சமுதாயத்தை இன்னும் குழப்பி, அவர்களுக்கு இடையில் இருக்கும் முரண்பாட்டை வளர்த்து, அவர்களைப் பலவீனப்படுத்துவதாகும்.
இவ்வாறாக, சிறிலங்கா அரசாங்கம் எம் மீது நடாத்த முனையும் பெரும் உளவியல் போருக்குப் பலியாகிவிடாமல் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என நாம் அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Wednesday, November 25, 2009

வெளிப்படையாகச் சொல்லுங்கள், ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்? – ஜெகத் கஸ்பாரும் தமிழீழமும்…

மல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்… மௌனத்தின் வலி’ என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்’ சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் வெறுக்கப்பட்ட ஜெகத் கஸ்பர், ஈழப் போராட்டத்தின் அழிவில் இந்தியாவின் பங்கை மூடி மறைக்க முயல்கிறார் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கஸ்பரைச் சந்தித்துப் பேசினோம். தன் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு நிதானமாகவும், சிலநேரங்களில் ஆவேசமாகவும் பதிலளித்தார்.

2009 மே-17க்குப் பின், தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறீர்கள். புலிகளுடன் உங்களுக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது?

“1995-ம் ஆண்டு. அப்போதைய அதிபர் சந்திரிகா பெரும் எடுப்பிலான யுத்தம் ஒன்றை தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு, யாழ்குடா நாட்டை ஆக்கிரமித்தார். ஏறக்குறைய 10 லட்சம் மக்கள் தங்கள் கையில் அகப்பட்ட உடைமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, வன்னி நோக்கிப் பயணம் நடத்திய அந்த நாட்களில், ஒரு வானொலி ஊடகவியலாளராக அந்த மக்களின் போராட்ட அனுபவத்துக்கு நான் அறிமுகம் ஆனேன். வன்னிக்கு வந்த மக்கள் தாங்கள் படுகின்ற அன்றாட அனுபவங்களை தங்கள் கடிதங்கள் மூலமாக எழுதினார்கள். மக்களின் துன்பங்களுக்கும், வலிகளுக்கும் வானொலி மூலமாக என்னால் ஆன அன்புநேயக் கருணையை உருவாக்கித் தந்தேன். அந்த ஒரு பயணத்தில்தான் தமிழ் மக்களின் அரசியல் சிக்கலுக்குத் தீர்வு, தனித்தமிழ் ஈழம்தான் என்று உணர்ந்தேன்.
அடிப்படைப் பிரச்னை என்பது, உலகம் காட்ட விரும்புவதுபோல் விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் அல்ல. தமிழ் மக்களை அடித்தொழித்து, சமூக-அரசியல்-பண்பாட்டு அடையாளங்களைச் சிதைத்து, ஒன்றும் இல்லாமல் ஆக்குகின்ற சிங்களப் பேரினவாதம்தான் இந்தச் சிக்கலுக்கான வேர் என உணர்ந்தேன். அந்த அடிப்படையில் அந்தப் போராட்டத்துக்கு அரசியல் தார்மிக ஆதரவை ஒலிபரப்பு நிலையம் ஊடாக வழங்கி வந்தேன். ஒலிபரப்பு என்று மட்டும் இல்லாது, வாய்ப்புக்கு உட்பட்ட நிலையில் எல்லாம் உதவினேன். குறிப்பாக, யுத்தம் சிதறடித்த பல்லாயிரக்கணக்கான உறவுகளை மீண்டும் ஒன்று சேர்த்து வைக்கும் பணியை வானொலி மூலமாகச் செய்ய முடிந்தது. வவுனியா, மட்டக்களப்பு, திரிகோணமலை, வன்னியில் பல இடங்களில் இருந்த திருச்சபை சார்ந்த அலுவலகங்கள் மக்கள் தொடர்பு மையங்களாக மாறின. சந்திரிகா அம்மையார் அந்த மக்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தார். அந்த ஐந்து ஆண்டுகால (1995-2000) மனிதாபிமானமற்ற அடக்குமுறையால் பட்டினி கிடந்து, அநாதையான பிள்ளைகளை எங்கள் வானொலி ஊடாகத் தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். கர்ப்பிணிகளைக் காப்பாற்றினோம். திருச்சபை அமைப்புகள் மூலம் உலக மனித உரிமைகள் அமைப்புகளிடம் தமிழ் மக்களின் போராட்டத்தின் அரசியல் நியாயங்களை எடுத்துச் செல்லும் பணியையும் செய்தேன்.”

உங்களுக்கு, விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு உண்டா, இல்லையா?

“நான் இயக்க உறுப்பினரும் இல்லை; இயக்கத்தோடு நேரடியான தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. என்னைப் பொருத்தவரையில் ஒரு எதார்த்தத்தைக் கண்டேன். அதற்குப் பதில் சொன்னேன். அது, செயலாக வெளிப்பட்டது. அப்போது, பலரோடும் தொடர்பு கொண்டேன். அவர்கள் யார் என்றுகூட கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, இயக்கத்துக்கு நான் ஆலோசகரும் அல்ல; பணியாளரும் அல்ல.”

விடுதலைப் புலிகளுக்கு புவி அரசியல் தெரியாததுதான் அவர்களின் தோல்விக்குக் காரணம் என்று விமர்சித்து வருகிறீர்களே?

“தப்பே செய்ய மாட்டோம் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள். சீனாவை விமர்சிக்கலாம்; ரஷ்யாவை விமர்சிக்கலாம்; அமெரிக்காவை விமர்சிக்கலாம்; இந்தியாவை விமர்சிக்கலாம். ஆனால், நம்மை மட்டும் யாரும் விமர்சிக்கக் கூடாது. வானத்தில் இருந்து வந்த பரிசுத்த புறாக்கள் தமிழர்கள்! இந்த விடுதலைப் போராட்ட அழிவுக்குக் காரணமே இதுதான்.
ஈழத்தின் இன்றைய விடுதலைப் போராட்டப் பின்னடைவுக்கு, பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவை, இன்று நிலவுகின்ற உலக ஒழுங்கு; இந்தியாவின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை. `அங்கே ஈழம் அமைந்தால், தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கும். ஈழம் அமைவதை அனுமதிக்கவே கூடாது’ என்ற நிலையில் இந்தியா இருக்கிறது. அதே வேளையில் இந்த உலக ஒழுங்கும், இந்திய வெளியுறவுக் கொள்கையும் மாறும், மாற்றப்படுகின்ற தன்மை கொண்டவைதான். இந்தச் சூழலில், உலகம் ஈழப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று வரையறுத்து, அந்தவொரு வட்டத்துக்குள் சுருக்கியது. ஆகையால்தான் உலக அளவில் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.
தமிழர்கள் எல்லோரும் இணைந்து இயங்கி, இது பயங்கரவாதம் அல்ல என்பதை விளக்கி, தமிழ் மக்களின் தேசிய, அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதே, நம் முன்னால் இருக்கின்ற சவால். இது நடக்க வேண்டும்.”

இந்தியப் பெருங்கடலில் தனக்கு ஆதரவு சக்தியாக இருக்கத்தக்க விடுதலைப் புலிகளையும், ஈழ மக்களையும் இந்தியா பகைத்துக் கொண்டது என்று சொல்லி வருகிறீர்களே?

“ஆமாம். இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கரம் வலுப்பெற்றுவிட்டது. இலங்கை என்பது சீனாவின் கிளை நாடு என்றாகிவிட்ட நிலையில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் முரண் வலுத்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவை கட்டுப்படுத்தி, மட்டுப்படுத்துகின்ற செயலுக்கு தமிழீழம் மட்டுமே துணையாக இருக்க முடியும். இந்திய-சீன யுத்தத்தின் போது, இலங்கை சீனாவுடன் இருந்தது. இந்திய-பாகிஸ்தான் போரின்போது இலங்கை, பாகிஸ்தானுடன் நின்றது.
இந்தியப் பெருங்கடலில் கேந்திரிய முக்கியத்துவம் பெறுவதற்கு, தமிழீழ ஆதரவு வேண்டும் என்று இந்தியா கருதுகிற நேரம் வரும். வர வைக்க வேண்டும். 37,000 போராளிகளும், ஒன்றரை லட்சம் மக்களும் இறந்தது ஈழம் என்கிற கனவுக்காகத்தான். ஈழம் அமையாவிட்டால், இந்த மக்களின் தியாகம் வீணாகிவிடும்.”

ஈழம் அமைவதை இந்தியா விரும்பாது என்கிறீர்கள். இந்தியாவில் இருந்து கொண்டு ஈழம் அமைய ஆதரவு தர முடியுமா?

“நீங்கள் கேட்பது சரிதான். ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட அழிவில் இந்தியாவின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்கிறேன். இந்தியா, இலங்கையின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியது உண்மை; போர்க் குற்றங்களில் இந்தியாவுக்கும் மறைமுகப் பங்கு இருக்கிறது. இந்தியக் கரங்களில் ஈழ மக்களின் ரத்தம் படிந்திருக்கிறது. இந்தியாவுக்கு பரிசுத்தப் பட்டம் கொடுக்க யாரும் தயாராக இல்லை. இதைச் சொல்வதில் எனக்கு தயக்கமோ, அச்சமோ கிடையாது. ஆனால், இதையே சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்ற தமிழ்நாட்டில் என்ன முயற்சி செய்தோம்? இங்கே எப்போதும், `பல்குழுவும் உட்பகையும்’! `அவர் செய்யவில்லை; இவர் செய்யவில்லை’ என்கிறார்கள். ஒரு நாட்டின் கொள்கையை மாற்ற நாம் என்ன செய்தோம்? சீனாவிடம் கறாராகப் பேச இந்தியாவால் முடியும். ஆனால் அப்படிப் பேச வைக்கிற அழுத்தம் இங்கே இல்லை. அவ்வளவுதான்.”

உலக நாடுகள் புலிகள் மீது தடை விதிக்க இந்தியாதான் காரணம் என்பது உண்மையா? அப்படியென்றால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வரமுடியுமா?

“நீங்கள் சொல்வதில் பாதி உண்மை; பாதி உண்மை இல்லை. இந்தியாவின் ராஜதந்திரம் தமிழர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மைதான். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா தன்னுடைய முழு ராஜதந்திர வளங்களையும் உலகஅளவில் நிறுத்தி வைத்திருந்தது. நிறுத்தி வைத்திருக்கிறது. இதில், மாற்றுக் கருத்துக்கு நிச்சயம் இடமில்லை. ஆனால், அதை இடைமறித்து முறியடிக்கிற ஆற்றல் தமிழர்களுக்கு இல்லை என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதை இடைமறிக்க வேண்டும்; அந்த வலு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த எல்லா காரியங்களும் மேற்‌குலக நாடுகளுக்குப் பிடித்திருந்தது என்று சொல்ல முடியாது.”

புலிகள் அப்படி என்ன தவறு செய்து விட்டார்கள்?

“இப்போதைக்கு அது பற்றியெல்லாம் சொல்ல முடியாது. காலம் வரும் போது வெளிப்படுத்துவேன். குறைந்தபட்சம் விவாதத்துக்கான களத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.”

இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?

“இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணிநேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. `தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் அதை ஏற்கவில்லை.”

ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை?

“அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்துக்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்லை.”

ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதாகச் சொல்லும் கஸ்பர் மீது புலிகள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள். புலிகளுக்குச் சேர வேண்டிய பெரும் தொகையை கஸ்பர் கையாடல் செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படுகிறதே?

“(கோபமாக) யார் என்னை விமர்சனம் செய்கிறார்கள்? என்னை விமர்சனம் செய்பவர்கள் புலிகளின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகளா? எதற்காக என் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள்? அவர்கள் எல்லாம், ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு என்ன செய்து கிழித்துவிட்டார்கள்? இடர் மிகுந்த காலத்தில் போராட்டக் களத்துக்குள் நுழைந்தேன். ஆனையிறவு வெற்றியின்போது, வெளியே வந்தேன். மீண்டும் முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக் காலத்தில் உள்ளே வந்திருக்கிறேன். என்னுடைய பங்களிப்பு என்ன என்று எனக்குத் தெரியும். சான்றிதழ் பெறக் கூடிய நிலையில் நானில்லை; எனக்குச் சான்றிதழ் தரக்கூடிய தகுதி, இணைய தளங்களுக்கு இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை.”

பிரபாகரனுடன் ஒருசில நிமிடங்கள் நடந்த சந்திப்பைப் பெரிதுபடுத்தி சுயவிளம்பரம் செய்கிறீர்கள் என்கிறார்களே?

“அதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? அதைப் பற்றி இவர்கள் பதற்றப்பட வேண்டிய அவசியம் என்ன? நான் பத்து நிமிடம் பார்த்தால் என்ன? பத்து மணிநேரம் பார்த்தால் என்ன? நீங்கள் என்னுடன் வரவில்லைதானே? தலைவருடனான என் சந்திப்பு வீடியோ ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன்”.

தடை செய்யப்பட்ட புலிகளை ஆதரித்துப் பேசும் நீங்கள் அரசின் எந்த நெருக்கடியையும் இதுவரை சந்திக்கவில்லை. இதுவே உங்கள் மீதான சந்தேகத்தைக் கிளப்புகிறது என்கிறார்களே?

“இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. (சிரிக்கிறார்) இது என்ன மனநிலை என்றே எனக்குப் புரியவில்லை? நான் கைது செய்யப்படவில்லை என்று ஏன் இவர்கள் வருந்துகிறார்கள்? நான் கைது செய்யப்படும் நாளுக்காக ஆசையுடன் காத்திருப்பவர்களைப் பார்த்து நான் என்ன சொல்வேன்? என்னுடைய ஜனநாயக உரிமையைச் செய்கிறேன். சட்டத்துக்கு விரோதமான எந்தச் செயலையும் செய்யவில்லை. உண்மையான பிரச்னையில் இருந்து திசைதிருப்பும் விவாதங்களுக்குச் செல்லவும் நான் விரும்பவில்லை.
வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன்.

எல்லா கட்சிகளுடனும் உரையாடுவதில் எனக்கு நம்பிக்கை உண்டு. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க, கட்சியினருடன் உரையாடலாம். அவர்களுடன் தனிப்பட்ட நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அது ஒன்றும் ஒழுக்கக்கேடு அல்ல. பொது நன்மைக்காக மற்றவர்களுடன் உரையாடுவது, பழகுவது தவறல்ல. வெறுமனே நான் எதிர் மூலையில் நின்று கொண்டு விமர்சனம் செய்வதில்லை. `நான் தெருவில் நிற்க வேண்டும்; சிறையில் இருக்க வேண்டும்’ என்று சொல்பவர்கள், மனநோயாளிகள்!”

வெளிப்படையாகச் சொல்லுங்கள், ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?

“கடைசிகட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, `தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. `ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.”

நீங்கள் அண்மையில் வெளியிட்ட `ஈழம்…மௌனத்தின் வலி’ புத்தகத்தில், தோழர் துரை சண்முகத்தின் ஈழ அவலம் தொடர்பான கவிதையில் இந்திய அரசுக்கு எதிரான சொற்களை நீக்கி வெளியிட்டீர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

“நான் அவரிடம் கவிதை கேட்கவும் இல்லை; வாங்கவும் இல்லை. இதை முன்னெடுத்துச் செய்தவர்கள், `போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பு’. கவிதைப் புத்தகம் அச்சிட்டு, அதை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியை நான் செய்தேன். புத்தக வெளியீட்டு விழாவுக்கு சில வேலைகளைச் செய்தேன். கவிதைகளை வாங்கியது, அதை வடிவமைப்புச் செய்தது, `இது இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று, எதிலும் நான் தலையிடவில்லை.”

அந்தப் புத்தகத்தை வெளியிட்டது, உங்கள் நல்லேர் பதிப்பகம்தானே? அப்படியானால் நீங்கள்தானே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்?

அடித்தல், திருத்தல் என எந்த வேலையையும் எங்கள் பதிப்பகம் செய்யவில்லை. `போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பு’ கவிதை வாங்கியது, நாங்கள் வெளியிட்டோம்.

சரி, இந்தக் கவிதைப் புத்தகத்தால் ஈழத்தில் நடந்த அவலத்துக்கு என்ன விமோசனம் கிடைக்கப் போகிறது என்று கேட்கிறார்களே?

(கோபமாக) என்னிடம் பேட்டி எடுத்து எதற்காகப் போடுகிறீர்கள்? இதில் யாருக்கு என்ன லாபம்? இதுவரை ஈழ விவகாரம் தொடர்பாக எத்தனை புத்தகங்கள் வந்திருக்கும்? இதோ இந்தப் புத்தகத்தைப் பாருங்கள், (மேசையில் இருக்கும் `பிரபாகரன்-வாழ்வும் மரணமும்’ என்ற புத்தகத்தை எடுத்துக்காட்டுகிறார்) இந்தப் புத்தகத்தின் விலை நூற்று இருபது ரூபாய். எங்கள் புத்தகத்தின் தரத்தைப் பாருங்கள். அந்தத் தரத்தில் நூறு ரூபாய்க்கு ஒரு புத்தகத்தை அச்சிட்டு உங்களால் வெளியிட முடியுமா? நீங்கள் பத்திரிகையாளர், ஒரு கேள்வி கேட்கும்போது ஓரளவுக்கு நியாயத்தன்மையோடு கேட்க வேண்டாமா? எத்தனையோ பதிப்பகங்கள் வெறும் வியாபாரம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு எத்தனையோ புத்தகங்கள் வெளியிடப்பட்டபோது, இந்த முற்போக்குச் சிந்தனைப் புரட்சியாளர்களுக்குத் தெரியவில்லை.
பொதுமக்கள் வெளிக்கு அந்த மானுட அவலங்களை எடுத்துச் செல்ல பத்து, இருபது பேர் சேர்ந்து ஆத்மார்த்தமாக ஒரு முயற்சி செய்திருக்கிறார்கள். அதையேன் விமர்சனம் செய்கிறீர்கள்? ஏன் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தப் பிரச்னையைப் பேசக் கூடாதா? நீங்கள் என்ன குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா? அப்படி குத்தகைக்கு எடுத்து என்ன பண்ணிக் கிழித்துவிட்டீர்கள்? கடந்த பத்து ஆண்டுகளில் `எல்லாருக்கும் உரிமை’ என்று, ஒரு புத்தகமாவது வந்திருக்கிறதா? வாங்க, உங்களால் முடிந்தால், இந்தப் புத்தகத்தை அச்சிட்டு விற்றுக் கொள்ளுங்கள்.”

தமிழ்நாட்டில் உள்ள வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ விடுதலை ஆதரவாளர்களை விமர்சனம் செய்கிறீர்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

வதை முகாம்களில் உள்ளவர்களை அவர்களின் இருப்பிடத்தில் வாழச் செய்வதற்கும், தமிழீழத் தாயகத்தில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்தவும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட எல்லாத் தமிழ் மக்களும் அரசியல் சுயநிர்ணய உரிமை கிடைக்கச் செய்ய வேண்டும்.
திரிகோணமலையில் 1927-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சிங்கள மக்கள் 1.3 சதவிகிதம்; தமிழ் மக்கள் 81.8 சதவிகிதம். 16.9 சதவிகிதம் பேர் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள். 1981-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் தமிழ் மக்களின் எண்ணிக்கை, 36 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. வெறும் 1.3 சதவிகிதமாக இருந்த சிங்களவர்கள், 36 சதவிகிதமாக வளர்ந்து விட்டார்கள். அதையே முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் நடத்த, ராஜபக்ஷே சகோதரர்கள் திட்டமிடுகிறார்கள். அப்படி நடந்தால், ஈழம் என்று பேசுவதற்கு தாயக நிலப்பரப்பு இல்லாமல் போய்விடும். அதை எல்லாம் செய்யும் சக்தி உலக நாடுகளுக்கு இருக்கிறது.
நாடாளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு இருக்கிறது. எனவே, யார் தவறு செய்தார்கள் என்று, விவாதிக்க வேண்டாம். இதனால் அந்த மக்களுக்கு என்ன நன்மை? நடக்க வேண்டியதைச் செய்ய எல்லோரும் ஒன்றுபட்டு ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும்.
திம்பு கொள்கையின் அடிப்படையில் அரசியல் தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும். ஆயுதப் போராட்டம் தோற்றதால் தமிழ் மக்களின் அரசியல் நியாயங்கள் தோற்றதாக நினைத்துவிடக் கூடாது. தமிழ் மக்களின் தீர்வுகளுக்கான பேச்சு வார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதில், எல்லாருக்கும் கருத்து ஒற்றுமை வரவேண்டும்.
நடந்த மனித உரிமை மீறல்களுக்கு அனைத்துலக நீதி விசாரணை வேண்டும். போர்க் குற்றங்களில் இந்தியாவும் குற்றவாளிதான்!” என்று முடித்துக் கொண்டார் கஸ்பர்.