பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, January 15, 2010

ராஜபக்சேவின் கள்ளக் காதலி!


இலங்கை அதிபர் தேர்தல் விறுவிறுப்பாகியிருக்கும் சூழலில்,மகிந்த ராஜபக்சேவின் ரகசிய காதலி பற்றி ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. ராஜபக்சேவின் இந்த ரகசிய உறவுகள், அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்சேவிற்கு தெரியவர...
அந்த ரகசிய காதலிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.சுதந்திரா கட்சியில் பரபரப்பாகியிருக்கும் இந்த விவகாரம் குறித்து அக்கட்சி வட்டாரங்களிடம் பேசியபோது,
’’ ""போரின் வெற்றிக்கு பிறகு ராஜ பக்சேவை போற்றிப் புகழ்ந்துரைக்கும் வகையில் "வணக்கம் மாமன்னரே'’என்கிற பாடல் எழுதப்பட்டது.இந்த பாடலை பிரபல சிங்கள பாடகி சஹோலிகமகே பாடினார். இந்த பாடல் தொடர்பாக ’அலரி மாளிகை’ (அதிபர் மாளிகை)க்கு சஹோலிகமகே வந்து போக வேண்டியிருந்தது. அப்போது ராஜபக்சேவையும் சந்திக்க நேர்ந்தது பாடகிக்கு.பாடகியின் அழகிலும் குரலிலும் மயங்கினார் ராஜபக்சே.
பாடகியின் நட்பை’விரும்பியுள்ளார். ராஜ பக்சேவின் விருப்பத்தை அறிந்ததும் பாடகியோடு ‘புதிய சிநேகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். பாடல் உருவாகும் பணி முடிந்துவிட்ட பிறகும் பாடகியுடனான அந்த ‘சிநேகிதம்’ துண்டிக்கப்படவில்லை.
மாறாக சிநேகத்தை இறுக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே.இந்த விவகாரம் ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சேவிற்கு தெரியவர,அதிர்ச்சி அடைந்தவர்... இது குறித்து ரகசியமாக விசாரித்திருக்கிறார். அப்போது பாடகியுடனான ரகசிய உறவுகள் உண்மைதான் என்று சொல்லப் பட்டிருக்கிறது.
அத்துடன், தனது பெர்சனல் மொபைல்ஃபோனிலிருந்து தினமும் பாடகியுடன் அதிக நேரம் ராஜபக்சே பேசியிருக்கும் விவ ரங்களையும் ஷிராந் தியே கண்டுபிடித்திருக் கிறார்.இது பற்றி ராஜபக்சேவிடம் பேச விரும்பாத ஷிராந்தி... ராஜபக்சேவின் சகோதரரும் இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சேவிடம் முறையிட்டுள்ளார். உடனே இந்த பிரச்சினையை முளையிலேயே ரகசியமாக கிள்ளியெறிய வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அதனடிப்படையில் பாதுகாப்புத் துறையில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய 2 அதிகாரிகளிடம் விஷயத்தை கூறியிருக்கிறார் கோத்தபாய.உடனே அந்த அதிகாரிகள் பாடகியை தொடர்புகொண்டு,’"ஜனாதிபதியுடனான தொடர்பை துண்டித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில்...
நீங்கள் அதிகம் சங்கடப்பட நேரிடும்'’என்று எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கையை அறிந்து ஆத்திரமடைந்த ராஜபக்சே, பாடகியை அச்சுறுத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கோபப்பட்டுள்ளார். அதேசமயம் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் எச்சரிக்கையால் பயந்துபோன பாடகியோ தற்போது தலைமறை வாகிவிட்டார்'' என்று விவரிக்கின்றனர்.இதற்கிடையே, தேர்தல் அரசியலுக்காக பாடகி சஹோலியை வைத்து ’"இளைஞர்களின் எதிர்காலம்' என்கிற விளம் பரப்படத்தை தயாரிக்கத் திட்ட மிட்டிருந்தார் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே.
பாடகியுடனான தனது கணவரின் ரகசிய உறவுகளை அறிந்திருந்த ஷிராந்தி, விளம்பரப்படம் தொடர்பாக பாடகியுடன் இருக்கும் தொடர்புகளை துண்டித்துக்கொள்ளுமாறு மகனுக்கு கட்டளை பிறப்பித்திருப்பதாகவும் கொழும்பில் தகவல்கள் பரவிக் கிடக்கின்றன.
ராஜபக்சேவின் இந்த ரகசிய சினேகிதம், இலங் கை அரசியல் மேல்மட்டத்தில் சத்தமில்லாமல் அலையடித்துக் கொண் டிருக்கிறது.

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

வேட்டைக்காரன் படம் சரியில்லை என்பது தெரிந்த விசயம். சன் டிவியின் விளம்பரத்தால் அது கொஞ்சம் மறைந்து போனது. விளம்பரத்தால் ஓரளவு கலெக்‌ஷன் ஆகிக்கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் சன் பிக்சர்ஸ், படத்தை ஓட வைப்பதற்கு ஏவி.எம். பாணியை கையாண்டதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாகிவிட்டது.
வேட்டைக்காரன் படத்தை தயாரித்தது ஏவி.எம்.தான். பொதுவாக ஏவி.எம். தயாரித்த படங்கள் ஓடுவதற்கு அந்நிறுவனம் பல பரிசு போட்டிகளை அறிவிப்பது வழக்கம். இந்த போட்டிகளில் முக்கிய நட்சத்திரமாக பெரும்பாலும் பங்கேற்று பரிசு அளித்தது நடிகை மனோரமா.
இப்படி பரிசு போட்டி அறிவிப்புகள் மக்கள் மத்தியில் ‘’ஆஹா அப்ப படம் ஓடலையா’’ என்ற கமெண்ட்டை கிளம்பும். வேட்டைக்காரனிலும் அதுதான் நடந்திருக்கிறது. வேட்டைக்காரன் படத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்போருக்கு 25 ஆயிரம் பரிசு என்ற விளம்பரம் வந்ததுமே வேட்டைக்காரன் படம் பார்க்காதவர்களும், அப்படம் பற்றி கேள்விப்படாதவர்களும், ‘’ஏன் வேட்டைக்காரன் படம் நல்லாயில்லையா? படம் ஓடலையா? இப்படி போட்டியெல்லாம் வைக்கிறாங்களே?’’என்ற கேள்வியை எழுப்பிவிட்டார்கள்.
அப்புறமென்ன, தியேட்டர்களில்.......!(சொல்ல வேண்டுமா என்ன..தெரிந்த விசயம்தானே)

Thursday, January 14, 2010

"தம்பி உயிரோடு நலமாக இருக்கிறான்: என்னை வந்து பார்ப்பதாக சொல்லிச்சென்றான்"

"தம்பி உயிரோட நலமாக இருக்கிறான்.
அவன் என்னை சந்திப்பதாக சொல்லியே சென்றான்" -
என்று தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா தெரிவித்துள்ளார் என விடுதலை சிறுத்தைகள் அணி தலைவர் தொல் திருமாவளவன் விகடனுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் சஞ்சிகைக்கு திருமாவளவன் வழங்கியுள்ள விரிவான செவ்வி வருமாறு:-
தமிழகம் திரும்பியதும் கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரியான விநோதினிக்கு ஒரு நண்பர் மூலம் தகவல் சொல்லிவிட்டு, விசா எடுப்பதற்கான வேலைகளில் தீவிரமானேன்.
அதற்குள்ளே என் கனவுத் தாழி உடைந்துபோய் விட்டது.கடந்த ஆறாம் தேதி இரவு அய்யா வேலுப்பிள்ளை இறந்ததாகச் செய்தி வந்தது. ஒரு மாவீரனின் தந்தையை மீட்கவும் காப்பாற்றவும் முடியாத கையறு நிலையில் துடித்தேன். அவசரகதியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கல நாதன், ஆகியோரிடம் பேசி, 'வேலுப்பிள்ளையின் இறுதி அஞ்சலி நிகழ்வில் நான் கலந்துகொள்ள வேண்டும்.
இலங்கை அரசிடம் பேசி ஏ-9 பாதையால் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்' எனச் சொன்னேன். ஒருவழியாக அனுமதி கிடைக்க, எட்டாம் தேதி இலங்கைக்கு பயணமானேன். வேலுப்பிள்ளைக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு இட்டிப்பான மன பாரத்தோடு திரும்பி இருக்கிறேன்!'' என்ற திருமாவளவனிடம் நம் கேள்விகளை அடுக்கினோம்.''இலங்கை போய் இறங்கியவுடன் முதலில் எங்கு போனீர்கள்?''''எம்.பி-யான செல்வம் அடைக்கலநாதன்தான் என்னை அழைக்க வந்திருந்தார். கொழும்பில் இருந்து வவுனியா 280 கிலோமீட்டர் தூரம்.
ஒன்பதாம் தேதி விடியற்காலை மூன்று மணிக்கு செல்வம் அடைக்கலநாதன், அரியனேந்திரன், தோமஸ் வில்லியம் ஆகிய எம்.பி-க்களோடு நானும் தமிழக வழக்கறிஞர்களான சந்திரசேகர், பிரபு ஆகியோரும் புறப்பட்டோம். வவுனியாவில் உள்ள 'ஸ்வர்கா' என்ற ஹோட்டலில் வேலுப்பிள்ளை அவர்களின் உடலை ராணுவப் பாதுகாப்போடு வைத்திருந்தார்கள். அங்கே பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவும் இருந்தார்.
முதலில் அவரைத்தான் பார்த்தோம். அங்கு வரும் வரை பார்வதி அம்மாவுக்கு தன் கணவர் இறந்தது தெரியவில்லை. முதுமையும் வேதனையும் அவரை ரொம்பவே சுகவீனமாக்கி இருந்தது.அந்தத் தாயைப் பார்த்ததுமே என் கண்கள் பொங்கி நிறைந்துவிட்டன.
அவர்களை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். ''ஐயா...'' என வேலுப்பிள்ளை குறித்து நான் வாய் திறந்ததுமே, ''அவர் சாமி கும்பிடப் போயிருக்கார், அல்லவா... சீக்கிரமே வந்திடுவார்...'' எனச் சொன்னார். அவரிடம் அந்த நிமிடம் வரை அப்படித்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.''அம்மா... நீங்கள் என்னோடு இந்தியாவுக்கு வந்து விடுகிறீர்களா?'' எனக் கேட்டேன். ''ஐயா வந்ததும் அவரை கேட்டுவிட்டுச் சொல்கிறேன்...'' என்றார்.
கணவர் மீது அவர் வைத்திருந்த மரியாதையைப் பார்த்து என் கண்கள் குளமாகிவிட்டது!''''வேலுப்பிள்ளை சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக ஒரு கருத்து இருக்கிறதே..?''''தமிழ் மக்கள் அடைக்கப்பட்டிருக்கும் வழக்கமான அகதிகள் முகாம்களில் மேதகு பிரபாகரனின் பெற்றோர் தங்க வைக்கப்படவில்லை. ராணுவ முகாமான பனாகொடா முகாமில்தான் அய்யா வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.சிலநாட்களாகவே அய்யா வேலுப்பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லையாம். உயர் ரத்த அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரை வெளியே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், உள்ளுக்குள்ளேயே சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு வரை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாளும் அருகருகேதான் வைக்கப்பட்டு இருந்தார்களாம். வேலுப்பிள்ளைக்கு சிகிச்சை அளிப்பதாகச் சொல்லி அவரை மட்டும் பிரித்து வேறெங்கேயோ தங்க வைத்திருக்கிறது ராணுவம்.கடந்த ஆறாம் தேதி இரவே வேலுப்பிள்ளை இறந்து விட்டாராம். அந்தத் தகவலை ராணுவத் தரப்பு அடுத்த நாள் காலையில்தான் வெளியிட்டிருக்கிறது. பிரபாகரனின் சகோதரியான விநோதினியின் வேண்டுகோளை ஏற்று, வேலுப்பிள்ளையின் உடலை சிவாஜிலிங்கம் எம்.பி-யிடம் ஒப்படைக்க ராணுவம் முடிவெடுத்தது.
வேலுப்பிள்ளை இறந்த தகவல் பார்வதி அம்மாளிடம் சொல்லப்பட, அவர் அதை நம்பாமல் அழத் தொடங்கிவிட்டார். ''எங்க ஐயா செத்திருக்க மாட்டார்...'' எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். உடல் நிலை சரியில்லாததால், அவர் இறந்து விட்டதாக ராணுவத்தினர் பார்வதி அம்மாவிடம் சொல்லி இருக்கின்றனர். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ராணுவத்தினர் ஏதோ செய்து விட்டதாகவே அவர் அஞ்சுவதாகத் தெரிகிறது. அய்யா வேலுப்பிள்ளை சித்திரவதை செய்யப்பட்டிருப்பாரோ என்கிற சந்தேகம் எனக்கும் உண்டு. ஆனால், அதை எப்படி உறுதிப்படுத்த முடியும்? முறையாக பிரேதப் பரிசோதனை செய்து, பாடம் பண்ணி, முகச் சவரம் செய்து, தலை வாரி, புது உடை உடுத்தி, வெண் பட்டுத் துணியால் போர்த்தி அவரை சவப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். அவருடைய நெற்றியையும் காலடிகளையும் தொட்டு வணங்கினேன்!
''''இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தன? அப்போது அங்கிருந்த தமிழ் மக்களின் மனநிலை எப்படி இருந்தது?
''''வல்வெட்டித்துறையில் உள்ள தீருவில் என்னும் பகுதியில் புலேந்திரன், குமரப்பா ஆகிய 12 பேருக்கான நினைவிட மைதானம் உள்ளது. அய்யா வேலுப்பிள்ளையின் உடல் அங்குதான் கொண்டு வரப்பட்டது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த சதுக்கத்தில், வேலுப்பிள்ளையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மக்கள் ஏதோவொரு பயத்தோடு தூரத்தில் நின்றே வேலுப்பிள்ளையின் உடலை பார்த்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி-க்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதி ராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ஸ்ரீகாந்தா, வினோ உள்ளிட்டோர் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.சைவ மரபுப்படி அய்யா வேலுப்பிள்ளைக்கு அனைத்து சடங்குகளும் நடக்கத் தொடங்கின.
அவருடைய உடம்பு பாடம் செய்யப்பட்டிருந்ததால், அதன் மேல் தண்ணீர் பட்டுவிடாமல் அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. வாழைப்பழம், தயிர், வெல்லம், பால் என பலவித அபிஷேகங்களும் அவரது உடலுக்கு அருகே செய்யப்பட்டது. ஒருபுறம் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டது.வேலுப்பிள்ளையின் மைத்துனர்களில் ஒருவரான (வேலுப்பிள்ளையின் தாத்தா வழி உறவான) ராமசாமி என்பவர்தான் இறுதிச் சடங்குகளை முன்னின்று செய்தார்.
ராணுவக் கண்காணிப்பு இருப்பது தெரிந்தும் வேலுப்பிள்ளையின் உடலை நோக்கி கண்ணீரோடு வந்த ஒரு தாய், ''மாவீரனை பெத்துக் கொடுத்த ராசாவே... என்னிக்கு இருந்தாலும் நாம நாடு அடையாம விடமாட்டோம்யா... நீங்கள் நிம்மதியாப் போய் வாருங்கோ!'' எனக் கதறினார். கொந்தளிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்களாக தமிழ் இளைஞர்கள் பலரும் இறுக்கத்தோடு அங்கே நின்று கொண்டிருந்தார்கள். சில இளைஞர்கள் துக்கத்தை வெளிக்காட்டும் விதமாக வாண வெடிகளைக் கொளுத்தினார்கள். ஒன்பதாம் தேதி காலையில் நிறைய இளைஞர்கள் தைரியமாக வேலுப்பிள்ளையின் உடலைப் பார்வையிட வந்தார்கள்.
அவர்கள் உணர்ச்சி வேகத்தோடு, ''கண்டிப்பாக தமிழீழம் மலரும். தலைவரின் கனவு நனவாகும்!'' என சத்தமிட்டார்கள். காலை 10.40 மணிக்கு அந்த சதுக்கத்திலிருந்து, மூத்த மகள் ஜெகதீஸ்வரியின் வீட்டுக்கு வேலுப்பிள்ளையின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள்.
பார்வதி அம்மாள் அடக்க முடியாத வேதனையில் கணவரின் சடலத்துக்கு அருகே அமர்ந்து குமுறிக் குமுறி அழுது கொண்டேயிருந்தார். 'என்னைய விட்டுட்டு எங்கேயும் போக மாட்டீங்களே... ஏன்யா எங்கிட்ட சொல்லாம போனீங்க..?' என அங்கே இருந்த நான்கு மணி நேரமும் அரற்றியபடியே இருந்தார். அவரைத் தேற்றுவதற்குள் தெம்பற்றுப் போய் நானும் குலுங்கத் தொடங்கிவிட்டேன்!
''''பிரபாகரனின் தாயாரோடு நீங்கள் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தீர்களாமே... தன் மகன் பிரபாகரன் குறித்து அவர் ஏதாவது சொன்னாரா?''''தலைவர் பிரபாகரன் குறித்து நான் கேட்டபோது, 'அவர் பத்திரமா இருக்கார்...' என்றே பார்வதி அம்மா திரும்பத் திரும்ப சொன்னார். போர்க் காலங்களில் பார்வதி அம்மா எங்கிருந்தார், யார் யாரெல்லாம் அவரை சந்தித்தனர் என்பது உள்ளிட்ட தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். வயதான நிலையிலும் மிகுந்த கவனத்தோடு பார்த்துப் பார்த்துப் பேசினார். 'தலைவர் பிரபாகரன் உங்களைப் பார்த்தாரா' என நான் கேட்டபோது,
'தம்பி உயிரோடு நலமாக இருக்கிறார். என்னை கனடாவில் வந்து சந்திப்பதாகச் சொல்லிச் சென்றார்' என்றார். அவருடைய உறவினர்கள் சிலருடைய பெயரைச் சொல்லி நான் சில விஷயங்கள் கேட்டபோதும், அவர்களின் பெயர்களை மிகத் திருத்தமாக, நல்ல சுவாதீனமாகவே சொன்னார். தற்போது சிவாஜிலிங்கத்தின் கவனிப்பில் இருக்கும் பார்வதி அம்மாவை கனடாவுக்கோ இந்தியாவுக்கோ அழைத்துக்கொள்ள அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்!'' என்ற திருமாவளவன், அங்கே எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Wednesday, January 13, 2010

என் சாமி கோயிலுக்கு போயிருக்கிறார் -பிரபாகரனின் அம்மா!

உலகத்தில் தமிழர்கள் இருக்கும் நாடுகளிலெல்லாம் பிரபாகரனின் தந்தைக்கு கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர் தமிழர்கள். பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு வேலுப்பிள்ளையின் உடல் கொண்டு செல்லப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மக்களின் அஞ்சலிக்குப் பிறகு வேலுப்பிள்ளையின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை விடுதலை செய்திருந்தது சிங்கள அரசு.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், பழனி ஆகியோர் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து சென்றிருந்தனர்.இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த திருமாவளவனை தொடர்பு கொண்டு பேசினோம்.
நம்மிடம் பேசிய திருமா, ‘""கடந்த 6-ந்தேதி மரண மடைந்திருக் கிறார் அய்யா வேலுப்பிள்ளை. அதனை உடனடியாக சிங்கள அரசு தெரிவிக்க வில்லை. மறுநாள் 7-ந்தேதி மதியத்திற்கு மேல்தான் அறிவித்தனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கத்திடமும் செல்வம் அடைக்கல நாதனிடமும் வேலுப்பிள்ளையின் உடலை சிங்கள அரசு ஒப்படைத்தது.
பிரபாகரனின் தந்தையின் உடலை தக்க மரியாதையுடன் அவர்கள் வல்வெட்டித்துறைக்கு கொண்டு சென்றனர். மற்றொரு வாகனத்தில் பார்வதி அம்மாள் அழைத்து வரப்பட்டார்.
பார்வதி அம்மாள் குளிப்பதற்காக வவுனியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் உடல் சில மணி நேரங்கள் இருக்க வேண்டியிருந்தது. 8-ந்தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட நாங்கள், வவுனியாவில் அவர்களுடன் இணைந்து கொண்டோம்.அங்கேயே அய்யா வேலுப்பிள்ளைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அறையில் இருந்த பார்வதி அம்மாவிற்கு ஆறுதல் சொன்னேன். வயதின் முதிர்ச்சிக் காரணமாக மிகவும் தளர்ந்து போயிருந்தார். என்னைப்பற்றி சொல்லிய போது கேள்விப்பட்டிருப்பதாகச் சொன்னார் அம்மா. அய்யா மரணமடைந்திருப்பதை வல்வெட்டித்துறைக்கு சென்ற பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருந்ததால் அவரிடம் யாரும் இறப்பு குறித்துப் பேசவில்லை. ஆனால் பார்வதி அம்மாள்,
"என் சாமி (அய்யா) கோயிலுக்கு போயிருக்கிறார். பின்னால வருவார்' என்றே சொல்லிக்கொண்டிருந் தார்.வவுனியாவிலிருந்து வல்வெட்டித் துறைக்கு புறப்பட்டபோது அவர்களோடு இணைந்து கொண்டேன். 9-ந்தேதி மாலை வல்வெட்டித்துறையைச் சென்றடைந்தோம்.
புலேந்திரன்குமரப்பா நினைவு சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப் பட்டது. வல்வெட்டித்துறைக்கு வந்ததும்தான் பார்வதி அம்மாளிடம் அய்யா மரணமடைந்திருப்பதையே சொன்னார்கள். அதை கேட்டு கதறித் துடித்தார் பார்வதி அம்மாள். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. அதாவது, ராணுவ முகாமில் கடைசி நாட்களில் வேலுப் பிள்ளையையும் பார்வதி அம்மாளையும் தனித்தனியே பிரித்து வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை. அதனால்தான் வேலுப்பிள்ளை மரணமடைந்த சம்பவம் அவருக்கு தெரிந்திருக்கவே இல்லை.
வல்வெட்டித்துறைக்கு வந்ததும் சிவாஜிலிங்கம் சொன்னபிறகுதான் தெரிந்தது.வல்வெட்டித்துறையில் எங்குதிரும்பினாலும் 100 அடிக்கு 2 ராணுவத்தினர் துப்பாக்கிகளை ஏந்தி கொண்டு நின்றிருந்தனர். ராணுவம் நிற்கும் தோரனையே மக்களை மிரட்டுகிற தொனியில்தான் இருந்தது. இதனால் அந்த பகுதி மக்களிடம் சொல்லமுடியாத பயம் சூழ்ந்திருந்தது. அதையும் மீறி ஏராளமானோர் அஞ்சலி செய்ய திரண்டு வந்திருந்தனர். இதில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தலைமையில் தமிழ் எம்.பி.கள் பலரும் வந்திருந்து கண்ணீர் அஞ்சலி செய்தனர். தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு சிதிலமடைந்திருந்தது. பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று இருந்ததால் அந்த வீடு சிதைந்திருந்தது. மக்கள் திரண்டு அந்த வீட்டை துப்புரவு செய்தனர்.
அதேபோல பிரபாகரனின் அக்காள் ஜெகதீஸ்வரியின் வீடும் சிதைந்திருந்தது. அந்த வீட்டையும் சுத்தப்படுத்தினர் மக்கள்.10-ந்தேதி ஜெகதீஸ்வரியின் வீட்டிற்கு வேலுப் பிள்ளையின் உடலை கொண்டு சென்று அங்கு சைவ முறைப்படி சில சடங்குகள் நடந்தன. சைவ மதத்தில் வேலுப்பிள்ளை தீட்சைப் பெற்றிருக்கிறார். அதனால் சைவ கடவுளான சிவபெருமானுக்கு எப்படி அபிஷேகம் செய்யப்படுமோ அந்த முறைகளில் சடங்குகள் நடந்தன. இந்த சடங்குகள் நடக்கிறபோது தேவாரம், திருவாசகத்தின் பாடல்களை பாடினர்.வேலுப்பிள்ளையின் உடல் "பாடம்' செய்யப்பட்டு சவப்பெட்டியில் வைத்திருந்தனர். முகத்தை ஷேவ் செய்து உடலுக்கு புதிய உடையை உடுத்தியிருந்தனர்.
பாடம் செய்யப்பட்ட உடல் என்பதால் உடலை மீண்டும் ஒருமுறை தண்ணீரால் சுத்தம் செய்வது சரியாக இருக்காது என்பதால் மிகப்பெரிய நிலைக்கண்ணாடி கொண்டு வரப்பட்டு சவப்பெட்டிக்கு முன்னால் நிறுத்தப்பட்டது. கண்ணாடியில் தெரிந்த உடலை சைவ சித்தாந்தப்படி தண்ணீர் விட்டு கழுவினர். தனது கணவர் வேலுப் பிள்ளையின் தலைமாட்டிலேயே அமர்ந்துகொண்டு கணவரின் முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் பார்வதி அம்மாள். அவரது கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. எல்லாவித சடங்குகளும் முடிந்ததும் பார்வதி அம்மாளின் கழுத்திலிருந்து தாலியை அகற்றினர். ஓ..வென்று கதறினார்.
நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது எங்களுக்கு. பார்வதி அம்மாளின் கதறலுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் மக்களும் வேலுப் பிள்ளையின் உறவினர்களும் கதறினர்.
அதன்பிறகு இரங்கல் உரை. தமிழகத்திலிருந்த வைகோ, பழ.நெடுமாறன், சீமான் ஆகியோரை சிவாஜிலிங்கம் தொடர்பு கொள்ள அவர்கள் வாசித்த இரங்கல் உரைமைக்கில் ஒலிபரப்பப்பட்டது. அதன் பிறகு நான், சிவாஜிலிங்கம், கஜேந்திரன் ஆகியோர் இரங்கல் உரை வாசித்தோம். இதனையடுத்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊரணிக்கு உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
வழி நெடுகிலும் மக்கள் தங்கள் வீடுகளின் இருபுறமும் நின்றுகொண்டு மலர் தூவி வணங்கினர். ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் "மாவீரனை இந்த மண்ணுக்கு ஈந்த மாமனிதரே... உங்கள் ஆன்மா அமைதி கொள்ளட்டும். அந்த மாவீரனின் (பிரபாகரன்) கனவு ஒரு நாள் நிறைவேறும். தமிழீழம் கிடைத்தே தீரும்....' என்று வீரமாக கோஷமிட்டுக்கொண்டே வந்தனர். ஊரணியில் வேலுப்பிள்ளையின் உடல் எரியூட்டப்பட்டது.
அவரது உடலுக்கு வேலுப்பிள்ளையின் உறவினர் ராமசாமி தீ மூட்டினார்.ராமசாமிக்குத்தான் அந்த உரிமையை தரவேண்டும் என்று கனடாவில் உள்ள பிரபாகரனின் அக்காள் வினோதினி சொல்லியிருந்ததால் ராமசாமி கொள்ளி வைத்தார். வேலுப்பிள்ளையின் பிறந்த நாள் ஜனவரி 10. அதே நாளில் அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது'' என்று அந்த துயர நினைவுகளை பகிர்ந்து கொண்டார் திருமா.

நக்கீரன் சொன்னது! கேட்காத மக்கள் கண்ணீர்!


அதிர்ச்சியோ ஆச்சர்யமோ படுவதற்கு ஒன்றுமில்லை.
"ஹெலிகாப்டர்ல இறங்கி வந்து... இப்படி யும் மோசடி' என்று ஜெ.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத் தின் தில்லுமுல்லுகளையும்...
ஜெகஜ் ஜால ஜெ.பி.ஜெ.வான இதன் உரிமையாளர் ஜஸ்டின் தேவ தாஸின் ஃப்ராடு தனத்தையும் கடந்த 08-10-08 நக்கீரன் இத ழிலேயே அம்பலப்படுத்தியிருந் தோம். அப்போதே அந்நிறுவனத் தில் பணம் போட்டு ஏமாந்த பலரும் போலீஸில் புகார் கொடுக்க... பணத்துக்கு துணை போகும் அதிகாரிகளால் தப்பித்துவிட்டார் ஜெ.பி.ஜெ.அதற்குப் பிறகாவது உஷா ரானார்களா மக்கள்? ம்ஹூம்... ஜெ.பி.ஜெ.வின் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் வாய் பிளந்து முன்பைவிட அதிகமாகவே பணம் கட்டி நிலத் திற்காக காத்திருந்தவர்களின் வயிற்றில் இடியாய் இறங்கி கண்ணீர் விட வைத்திருக்கிறது இந்த செய்தி.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக துறைமுகப்பகுதி தலைவர் முகமது ஹாலித் ""ரெண்டு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணம் கட் டின பாத்திமாவுக்கு நிலம் கொடுக்காம இழுத்தடிக் கிறதோட... எக்ஸ்ட்ராவும் பணம் கேட்டு மிரட்டுறதா நம்மக்கிட்ட வந்து சொன்னதும்... சென்னை அண்ணாநகர் 18-வது மெயின் ரோட்டுல இருக்குற ஜெ.பி.ஜெ.வின் தலைமை ஆபீஸுக்குப் போனோம். அங்க போனபிறகுதான் ஏகப்பட்ட பேர் ஏமாந்து போய்...
அடியாட்களால் மிரட்டப்படுறதும் தெரிய வந்தது. அதுக்கப்புறம்தான் எல்லாரையும் கூட்டிட்டுப் போய் புகார் கொடுத்தோம். சினிமாவும், சீரியலும் பார்க்குற நேரத்துக்கு நக்கீரன் மாதிரியான விழிப்புணர்வு பத்திரிகைகளை படிச்சாலே ஏமாறாம இருக்கலாம்'' என்கிறார் அவர்.
""தமிழ்நாடு மட்டுமல்ல ஜெ.பி.ஜெ.வின் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி என 120 கிளைகளும், 40 அலுவலகங்களும், 60 சேவை(?) மையங்களும் உள்ளன.
கர்நாடகாவில் மட்டுமே ரூ.7 கோடி அளவுக்கு பணம் வசூலித்து மோசடி செஞ்சுருக்காரு. விஜயக்குமார், மீனா, பா.விஜய்னு வெச்சு விளம்பரங்கள் பண்ணினது மட்டுமில்லாம... சினிமா, சீரியல் முன்னணி நடிகைகளிடமும் ஜெகஜ்ஜாலமாக இருக்கும் கில்லாடி இவர்'' என்கிறார்கள் ஜெ.பி.ஜெ.வை பற்றி நன்கு அறிந்தவர்களே.சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது இந்த வழக்கு. ஐ.ஜி.விஜயகுமாரோ, ""புகார்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. நாலரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெங்களூரில் கைது செய்யப்பட்ட ஜெ.பி.ஜெ.. நிறுவனத்தின் உரிமையாளர் ஜஸ்டின் தேவதாஸ் மீது 420 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செஞ்சுருக்கோம். முழுமையா விசாரித்த பிறகுதான் பல உண்மைகள் வெளிவரும்'' என்கிறார்.
"ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்' என்ற ஓல்டு டயலாக்கை விட்டுக் கொண்டிருக்காமல் அட்லீஸ்ட் ஜெ.பி.ஜெ.வுக்கு துணை போனவர்களையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.

நயன்-பிரபுதேவா! கும்பகோணம் கும்மாளம்!

சென்னை புத்தகக் காட்சியில், நக்கீரன் ஸ்டாலில் இருந்து வெளியே வந்த காவேரியின் கரங்களில் இருந்த புத்தகங்களை வாங்கிப் பார்த்தார் மெரீனா.
""இன்னாம்மே... பிரபாகரன் பேசுகிறார்... பிரபாகரன் சிந்தனைகள்... பிரபாகரன் நூறு... வீரம் விளைந்த ஈழம்னு ஒரே பிரபாகரன் கலெக்ஷனா கீது?''""என் டேஸ்ட் இப்படி.
நீ கவிதைப் புத்தகம் வாங்கினியா... இது யாருடி உன் கூட புதுசா ஒரு குட்டீஸ்? கவிதை மாதிரி அழகழகா?''""இவ பேர்கூட கவிதா தாண்டி... என் கிளாஸ் மெட்டோட கவிதைடி...
இவளை எழுதின கவிஞனையும் எழுதப்பட்ட காகிதத்தையும் காட்டவா? அதோ பார்... அந்த ஸ்டால்ல... நடனப் புயல் பிரபுதேவாவும் நயன்தாராவும் மாதிரி... அவங்கதான் இந்த கவிதையைப் பெத்தவங்க!''.""நிஜமாவே பிரபுதேவா-நயன்தாரா பத்தின ஒரு கும்பகோணம் சீக்ரெட் நியூஸ் எங்கிட்ட இருக்குடி... வாங்க வெளில...
பட்டிமன்றம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கு... அங்கே போய் உக்கார்ந்து சொல்றேன்...!''.""சொல்லுங்க காவேரி... சொல்றேன்னு கூட்டி வந்துட்டு... மேடையைப் பாத்துட்டு இருக்கீங்களே!''""ம்... மெரீனாவும் பெண்ணையும் வரட்டும்னுதான் இருந்தேன்... சொல்றேன்.
"சிவா மனசில சக்தி' படம் டைரக்டர் ராஜேஷ்... "பாஸ் என்ற பாஸ்கரன்'னு ஒரு படம் எடுக்கிறாரு... திருவாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சி, தஞ்சாவூர் ஏரியாக்கள்ல படம் சூட்டிங். படத்தோட ஹீரோயின் நயன்தாரா வுக்கும் ஹீரோ ஆர்யாவுக்கும் கும்ப கோணம் ஹோட்டல் ரிவர் சைட் ரிசார்ட்ல ரூம் போட்டுக் கொடுத்திருந்தாங்க...''""ஒரு நிமிஷம்... கன்டினீயூட்டிய மறந்திராத... நீ சொல்லப் போற நியூஸ், நம்ம திண்ணைக் கச்சேரியை நக்கீரன் அட்டையில கவர் ஸ்டோரியா போட்றாமாதிரி இருக்கும்ல... ஏன்னா... இதுவரை நாம் கவர்ல வர்ற லைடி அதான்... இன்னக்காச்சும் உன் நயன்தாரா நியூசால நமக்கு பிரமோஷன் கிடைச்சா சரி... ஆமா, நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் ரூம் போட்டுக் கொடுத்தாங்க... அப்புறம்?''.""அவங்க ரெண்டுபேருக்கும் தனித்தனி ரூம்... ஆர்யா அந்தப் படத்திலதான் ஹீரோ... நம்ம நியூஸ்ல இல்லை.
8 நாள் சூட்டிங் ஒழுங்கா போச்சு... அந்த எட்டுநாளும் கேமராவுக்கு முன்னால நிக்கிற நேரம் தவிர மற்ற நேரமெல்லாம், ஒரு காதில ஐபேடு ஒயர்... மறுகாதில செல்போன் ஒயர்... இன்ட்ரஸ்டா பாட்டுக் கேக்கிற மாதிரி செல்போன்ல சீரியஸா பேசிக்கினே இருந்தாராம் நயன்தாரா...!''.""பொறுமையைச் சோதிக்காம விஷயத்துக்கு வாங்கங்க!''.""கடைசி நாள் 23-ஆம் தேதி சூட்டிங் முடிஞ்சு ஹோட்டலுக்கு வந்த நயன்தாரா... அரைமணி நேரத் தில, ஹோட்டல் ரூம்ல இருந்து பிரபுதேவாவோட இறங்கி வந்து கார்ல ஏறிப் பறந்துட்டாரு... "பாஸ் கரன்' பட யூனிட்டே வாயைப் பொளந்திருக்கு. நாம இங்கேதானே இருக்கோம்... பிரபுதேவா எப்ப வந் தாருனு எல்லாருக்கும் ஷாக். அதே ஹோட்டல்லதான் ஆர்யா இருந்தார். "மாப்பிள்ளை' ரீமேக் படத்துக்காக வந்த நம்ம தனுஷ் தங்கியிருந்தார்.
இவங்களுக் கெல்லாம் நடனப் புயல் வந்தது பற்றி எதுவும் தெரி யலை. ஹோட்டல் பாய் ஒருத்தர் எனக்கிட்ட ரகசியமா சொன்னாரு... ரெண்டுநாள் முன்னயே வந்து... அந்த ரூமுக்குள்ளயே இருந்தாரு பிரபுதேவா... ஒரே கும்மாளம்தான். எனக்கே காலைலதான் தெரியும்னு... மறுநாள் சொன்னார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில பிரபுதேவா-நயன்தாராவுக்கு பிரபுதேவா அப்பா சுந்தரம் மாஸ்டர்தான் வீடு பாத்திட்டு இருக்காராம்!''.
""யாருக்கும் தெரியாம எப்படி ரெண்டுநாள் அந்த ரூம்ல இருக்க முடியும்?''""ஸாரிடி... நயன்தாராவோட மேனேஜருக்கும் மேக்கப்மேனுக்கும் தெரியு மாம்டி... பப்ளிக்குக்கும் மீடியா வுக்கும் தெரியக் கூடாதுனு சீக்ரெட்டை மெயின் டைன் பண்ணிருப் பாங்கம்மே... சரி வுடுங்க... இதெல் லாம் சீக்ரெட் டாவே இருந்துட்டு போவட்டும்!''

Sunday, January 10, 2010

வரன் பார்க்க அரவாணிகள் தொடங்கியுள்ள இணையம்




அரவாணிகளும் பெண்கள்தான், மதிப்புக்குரிய பெண்கள். அவர்களுக்கும் திருமணம் செய்து, கணவருடன் வாழ வேண்டும், சமூகத்தில் அந்தஸ்துடன் உலவ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.


அப்படிப்பட்டவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய திருநங்கை கல்கி புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். www.thirunangai.net என்ற பெயரில் கல்கி தொடங்கியுள்ள இந்த இணையதளம், அரவாணிகளுக்கு வரன் பார்க்கும் அருமையான வேலையை செய்கிறது.


கல்கி - பொள்ளாச்சியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தந்தை லாரி தொழிலில் ஈடுபட்டிருந்தார். 2 சகோதரிகள். கல்கி மட்டுமே வீட்டின் ஒரே ஆண் வாரிசு. கொடைக்கானலில் போர்டிங் பள்ளியில் சேர்ந்து படித்தார்.


சிறு வயதிலேயே தனது சகோதரிகளுடன் அதிக நேரத்தை செலவிட விரும்பாமல் ஆண்களுடனேயே செலவிட விரும்பினார். தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை அவர் உணர ஆரம்பித்தார். மேலும், அழகான பெண்களை விட துணிச்சலான, உறுதியான பெண்கள்தான் இவரை அதிகம் கவர்ந்தனர்.


13 வயதில் இவரது மனதுக்குள் அலையடித்த உணர்வுகளின் போராட்டத்தை தாயார் கண்டுபிடித்தார். கவலை கொண்டார்.


பள்ளிப் படிப்பிலிருந்து ஒரு நாள் விலகி முழுமையான திருநங்கையாக தன்னை மாற்றிக் கொள்ள முடிவு செய்தார் கல்கி. 14 வயதில் அரவாணிகள் குடும்பத்தில் இணைந்தார். இன்று கல்கி, சகோதரி பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் - இயக்குநர்.இவர் உருவாக்கியுள்ள திருநங்கை.நெட் இணையதளம், அரவாணிகளுக்கு வரன் பார்த்துத் தரும் வேலையைத் தொடங்கியுள்ளது.வெளிநாடுகளில் அரவாணிகளுக்கு திருமணம் என்பது சர்வசாதாரண விஷயம்.


ஆனால் இந்தியாவில் இது மிக மிக கடினமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக அரவாணிகளுக்கு மாப்பிள்ளைகள் கிடைப்பது என்பதும், தேடுவதும் சாதாரண விஷயமல்ல. பல தடைகள், இடையூறுகள், சிக்கல்கள் குறுக்கே நிற்கின்றன.இதுவே கல்கி தனி இணையதளம் தொடங்க முக்கியக் காரணம். இதுகுறித்து கல்கி கூறுகையில், நிறைய ஆண்களுக்கு திருநங்கைகளுடன் பழக வேண்டும் என விருப்பம் உள்ளது. ஆனால் கல்யாணம் என்று வரும்போது மறுத்து விடுகிறார்கள்.


எங்களது சமூகத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு நல்ல ஆண்களைக் கல்யாணம் செய்து குடும்பமாக வசிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சமூகத்தில் கெளரவத்தோடு வாழ வேண்டும் என்பதே அவர்களின் ஆசை.சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அரவாணிகள். அப்படிப்பட்டவர்களுக்கான தளம்தான் இந்த திருநங்கை.நெட்.எங்களது இணையதளம் மூலம் வரன்களைத் தேடிக் கொள்ளலாம், நல்ல ஆண் துணைவர்களைத் தேடிக் கொள்ளலாம்.


எல்லோருக்கும் போலவே எங்களுக்கும் காதல் வரும். நல்ல கணவன் வேண்டும் என்ற ஆசையம் வரும். எங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றாலும், குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டு அந்தக் குழந்தையுடனும், கணவருடனும் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என்றார்.தற்போது இந்த இணையதளத்தில் சில அரவாணிகள் தங்களுக்கு வரன் தேவை என்று கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த அரவாணிகளை கல்யாணம் செய்து கொள்ள விரும்பியும், துணைவிகளாக்கிக் கொள்ளவிரும்பியும், இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டவற்றிலிருந்து 200க்கும் மேற்பட்ட பதில்கள் வந்துள்ளனவாம்.அவர்களில் டாக்டர்கள், பொறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், தொழிலதிபர்களும் அடக்கமாம்.இருப்பினும் தீவிரப் பரிசீலனைக்குப் பிறகே வரன்கள் இறுதி செய்யப்படும் என்கிறார் கல்கி.அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி (மகளிர் தினம்) அல்லது பிப்ரவரி 14ம் தேதி (காதலர் தினம்) ஆகிய ஏதாவது ஒரு நாளில் முதல் கல்யாணம் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கல்கி.இந்தியாவில் அரவாணிகள் அல்லது திருநங்கைகள் குறித்த பார்வை மாறி வருகிறது.


அரவாணிகளும் கூட மாறி வருகிறார்கள். பாலியல் தொழில், பிச்சை எடுப்பது உள்ளிட்டவற்றிலிருந்து மீண்டு வருகிறார்கள். இதில் இன்னும் ஒரு படி மேலே போய், சாதாரணப் பெண்களைப் போல திருநங்கைகளும், கணவன், குடும்பம் என்ற கட்டமைப்புக்கு மாறும் சூழல் தற்போது வந்துள்ளதாகவே கருதுகிறேன் என்கிறார் கல்கி.

வேலுப்பிள்ளை உடல் இன்று தகனம் - திருமாவளவன் நேரில் அஞ்சலி

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாரகனின் தந்தை வேலுப்பிள்ளையின் உடல் தகனம் இன்று நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று இலங்கை சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வல்வெட்டித்துறைக்குச் சென்று வேலுப்பிள்ளையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.நேற்று வவுனியாவில் தனியார் விடுதியொன்றில் மக்கள் அஞ்சலிக்காக வேலுப்பிள்ளையின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வேலுப்பிள்ளையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து அவரது உடல் வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் நடைபெற்று, உடல் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக நேற்று சனிக்கிழமை நண்பகல் முதல் தீருவில் உள்ள குமரப்பா உட்பட பன்னிருவர் மயானத்திற்குச் சமீபமாக உள்ள சதுக்கத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அங்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் நேரில் வந்து தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனின் பிரதிநிதிகளான வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், பிரபு ஆகியோர் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வினோநோகராதலிங்கம், துரைரத்தினசிங்கம், சிவசக்தி ஆனந்தன், அரியநேத்திரன், கஜேந்திரகுமார், தாமஸ் வில்லியம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி வேட்பாளர் விக்கிரமபாகு கருணாரட்ண சார்பில் பிரதிநிதிகளும் வேலுப்பிள்ளை உடலுக்கு இறுதி மயாதையைச் செலுத்தினர். பிரபாகரன் குடும்பத்தினர் வரவில்லை...இதற்கிடையே, தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் அவரது பிள்ளைகள் யாரும் பங்கேற்கவில்லை.
பாதுகாப்பான முறையில் இதில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வதாக ராஜபக்சே அரசு அளித்த உறுதிமொழிகளையும் அவர்கள் நிராகரித்து விட்டனர்.பிரபாகரனின் ரத்த உறவுகளான மனோகரன் டென்மார்க்கிலும், ஜெகதீஸ்வரி இந்தியாவிலும், வினோதினி கனடாவிலும் உள்ளனர். மூன்று பேருமே வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
இறுதிச் சடங்குக்காக வந்தால், நிச்சயம் ராஜபக்சே அரசு தங்களைக் கைது செய்து அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் என்பதால் அவர்கள் வரவில்லை என்று தெரிகிறது.இதற்கிடையே, இன்னும் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருக்கும் பிரபாகரனின் மாமியார் ஏரம்புவையும் மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவாம்.

சுறா கேமராமேன் மாற்றம்... ஒரு அதிர வைக்கும் பின்னணி!!

விஜய்யின் 50வது படம் சுறாவில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் வடிவேலு என்பது தெரிந்த விஷயம். இந்தப் படத்தின் இயக்குநர் எஸ் பி ராஜ்குமாருக்கும் வடிவேலுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உண்டாம்.
வடிவேலுவின் இன்றைய சம்பளம் ரூ 10 லட்சம், நாளொன்றுக்கு.
இவரை சமீபத்தில் 5 நாட்கள் மட்டும் கால்ஷீட் பேசி அழைத்துச் சென்றுள்ளனர். வடிவேலு தொடர்புடைய காட்சிகள் அனைத்தையும் இந்த 5 நாளில் சுருட்டிக் கொடுத்துவிடலாம், இயக்குநர் நினைத்தால்.
அவரோ வேறு மாதிரி நினைத்துவிட்டார் போலிருக்கிறது. ஒருநாளைக்கு இரண்டொரு சீன் மட்டுமே எடுத்து வந்த இயக்குநர், மீண்டும் 5 நாள் வடிவேலுவின் கால்ஷீட்டை நீட்டிப்பதாகச் சொல்ல, கேமராமேன் எம்எஸ் பிரபுவுக்கு சந்தேகம் வந்துவிட்டதாம். ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி கூட்டிவந்த ஆர்டிஸ்டை வைத்து இப்படி இழுத்தடித்தால், மேற்கொண்டு ரூ 50 லட்சம் செலவாகுமே என்று யோசித்தவர் அதை இயக்குநரிடமும் கேட்க, அவர் கண்டு கொள்ளவே இல்லையாம்.அடுத்து சில காட்சிகளுக்கு 500 துணை நடிகர்கள் தேவைப்பட்டார்களாம்.
ஆனால் இயக்குநரே 1000 பேரை வரச்சொன்னாராம். 'எதுக்கு இப்படி... காசுக்கு பிடிச்ச கேடு. 500 பேர் இருந்தா 5000 பேரா காட்டக்கூடிய டெக்னிக் இருக்கும் போது இது வெட்டி செலவுதானே, என்று கேட்டுள்ளார் மீண்டும் எம்எஸ் பிரபு. அடுத்த நாள் பிரபுவுக்கு கல்தா கொடுத்த எஸ்பி ராஜ்குமார், என் கே ஏகாம்பரத்தை ஒளிப்பதிவாளராக போட்டுள்ளார்.