பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, December 5, 2009

வேலி தாண்டும் ஆடுகள்!

ன்னடியன் கால்வாய்ல உப்பிப் பொதும்பிக் கிடந்த அந்தப் பிணத்தை கரையில தூக்கிப் போட்டார்கள். உடுப்பு களை பார்த்தே அது தங்கபாண்டியன் என அடையாளம் கண்டார்கள். தலையில் காயம் இருந்தது.அழுது புரண்டு ஊரைக் கூட்டவில்லை அன்னலட்சுமி.
விதவையாகிவிட்டோமே என்ற கவலை குரலில் தெரிந்தது. ""எம்புருஷன்தாம்யா... கொள்ளை நேரமும் குடிச்சுக் குடிச்சே அழிஞ்சாரு. கண்ட எடத்தில விழுந்து கெடப்பாரு. தூக்கி வந்து வீட்ல போடுவேன். ரெண்டு நாளா மனுஷன் வீட்டுக்கு வரலை. எப்பவும் போல ரெண்டு மூணு நாள் கழிச்சு வருவார்னு நெனைச்சேன். இப்படி முண்டச்சி ஆக்கிப்போடுவார்னு நெனைக்கலைய்யா'' -நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் அஜீகுமாரிடம் மூக்கைச் சிந்தினார் தங்கபாண்டியன் மனைவி அன்னலட்சுமி.தற்கொலை என்றோ, குடிபோதை விபத்து என்றோ ஃபைலை க்ளோஸ் செய்யும் எண்ணத்தில்தான் இருந்தார் இன்ஸ்பெக்டர். உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எழுப்பிவிட்டது. ஆறப்போட்டு அன்னலட்சுமியை ஃபாலோ செய்தார். அன்னலட்சுமி வீட்டிற்குப் பக்கத்து தெரு வாலிபப் பையன் முத்துகிருஷ்ணன், தினமும் இருட்டியபின் வந்து விடியுமுன் வெளியே போவதைக் கண்டார்.இருவரையும் அள்ளிவந்து ஸ்டேஷன் லாக்கப் ரூமில் "விருந்து' வைத்தார்.

கக்கிவிட்டாள் அன்னலட்சுமி.""கட்டிட வேலைக்குப் போற எம் புருஷன் தெனக்கி குடிச்சிட்டு வந்து பொணம் மாதிரி உறங்கிடுவான். புருஷன் சொகமே கெடைக்கலீங்கய்யா... அதான் இந்த வாலிபப் பையனோட பழக்கம் வச்சுக்கினேன்.

இவன் பகல்ல வருவான். பகல்ல மட்டும்தான் வருவான். இவனுக்கும் எம் புருஷனுக்கும் தெரியாம, வி.கே. புரம் ஜோசியன் இசக்கிதாஸ் வருவான். அவன் ராவுல மட்டும்தான் வருவான்.நானும் முத்துகிருஷ்ணனும் பார்க்கக்கூடாத நெலையில கெடந்ததை எம்புருஷன் பாத்துப்புட்டான். ரெண்டு புள்ளை பெத்தவளுக்கு ஊர் மேயுற புத்தி ஏம்டினு அடிச்சான். அதான் முத்துகிருஷ்ணன்கிட்ட சொன்னேன். அவன் என் புருஷனை கூட்டிப்போய் தண்ணி வாங்கி ஊத்தி, சவுக்குக்கட்டையால நேக்கா தட்டி, கன்னடியன் கால்வாய்ல தூக்கிப் போட்டுட்டு வந்தான்.

புருஷனை ஏமாத்தினேன், போலீஸ்ட்ட மாட்டிக்கிட்டேன்'' -வாக்குமூலம் கொடுத்தாள் ஆபாசலட்சுமி.... ஸாரி... அன்னலட்சுமி.அன்னலட்சுமி, முத்துகிருஷ் ணன், இசக்கிதாஸ் மூவரும் இப்போது உள்ளே இருக்கி றார்கள். இந்தச் செய்தியில் ஒரு கொசுறு செய்தி...ஜோசியன் இசக்கிதாஸின் மனைவி ஜோதி லட்சுமி 10 நாள் முன்புதான் நாண்டுகொண்டு செத் திருக்கிறார். "கட்டின மனைவி நான் இருக்கையில ஏம்ய்யா அலையுதீரு?' என்று ஜோதிட கணவரிடம் சண்டை போட்ட அந்த அப்பாவி ஜோதிலட்சுமியின் தற்கொலையில் (?) உள்ள மர்மம் இன்னும் அவிழ்க் கப்படவில்லை.பக்கத்து வீட்டுக்காரனுக்கு முந்திவிரித்த தன் மனைவி லட்சுமியை அடிக்கவில்லை, வையவில்லை. ""இனிமே நீ எனக்கு பொண்டாட்டி இல்லை. வீட்டை விட்டுப் போ, பையனையும் கூட்டிட்டுப் போடி'' அருளாச்சி கிராமத்தைவிட்டே துரத்தினார் கணவர். ""சரிதான் போவே... ஆசை தீர காதலிக்க முடியாத உன்னோட எனக்கென்ன வேலை?'' -5 வயது மகன் மாதவனையும் கூட்டிக்கொண்டு கீழச் சுரண்டையில் இருக்கும் தன் தம்பி இசக்கிசெல்வத் தின் வீட்டுக்குப் போனாள் 40 வயது லட்சுமி.தம்பியின் வீட்டுக்கு வந்து 3 மாதம் கடந் திருக்கும்.

அக்கம்பக்க வீட்டுக்காரர்கள் பலர் இசக்கிசெல்வத்திடம் பட்டும் படாமல் சொன்னார்கள். ""இசக்கி... நீ மானஸ்தன். வாழாவெட்டியா வந்த உன் அக்கா நடத்தை சரியில்லப்பா. நீ வேலைக்கு கிளம்பினதுமே எவன் எவனோ வீட்டுக்கு வர்றானுக. கதவைத் தாழ்போடுறா. உன் தங்கச்சியும் அக்கா வுக்கு சப்போர்ட்டா வௌக்குப் புடிக்கிறாபோல... கண்டிச்சு வைப்பா!''சொல்லிச் சொல்லிப் பார்த்தான் 29 வயதே ஆன தம்பிக்காரன். திருந்துவதாய் தெரியவில்லை. ஒருநாள் வேலையில் இருந்து மத்தியானத்தில் திரும்பினான். வீடு தாழிடப்பட்டிருந்தது. தட்டினான்.

கதவைத் திறந்துகொண்டு ஒரு ஆள் வேகமாக ஓடினான். வீட்டுக்குள் அக்கா சேலையைத் தேடிக்கொண்டிருந்தாள்.உருட்டுக்கட்டையை எடுத்தான். அக்காவின் மண்டையில் ஓங்கிப் போட்டான். மண்டை பிளந்தது. ""அக்காவை அடிக்காதே அண்ணா'' -ஓடிவந்த தங்கையையும் அடித்துக் கொன்றான். ""அய்யோ மாமா... அடிக்காதே'' -குறுக்கே விழுந்த சிறுவன் மாதவனையும் அடித்துக் கொன்றான்.ரத்தம் உறைந்த சவுக்குக் கட்டையோடு, சுரண்டை காவல்நிலையத்தில் சரணடைந்தான். வாக்குமூலம் கொடுத்தான்... ""நான் மானஸ்தன்...'' உலகத்து சோகங்களையெல்லாம் உருக்கி, முகத்தில் அப்பிக்கொண்டு தலைவிரி கோலமாய் அம்பை அருகிலுள்ள ஆழ்வார்க்குறிச்சி காவல் நிலைய ஏட்டையாவின் காலில் வந்து விழுந்து கதறினார் 38 வயது மிக்கேலம்மாள்.""எஜமான்... என் புருஷன், என் உசுரு... ரெண்டு நாளா காணலை.

தேடோ தேடுன்னு தேடிப் பார்த்தோம்.... காணலை. கண்டுபுடுச்சுக் கொடுங்க எஜமான்'' -கண்ணீர் வடித்தார். மிக்கேலம்மாளின் கணவர் சார்லஸின் "பாடி'யை 11-ம் நாள் கண்டு பிடித்தார்கள் ஆழ்வார்க்குறிச்சி காட்டுக்கிணற்றில். சதைகள் பிய்ந்து அழுகிக் கிடந்தது சடலம். ""லோடுமேன் வேலை செய்ற என் தங்கத்துக்கு எதிரின்னு யாரும் இல்லியே... வேலை கிடைக்கலை, வருமானம் இல்லைன்னு கொஞ்சநாளா அனத்திக் கிட்டு இருந்தாருங்கய்யா... இப்பிடி தற்கொலை புத்தி ஏற்படும்னு சொப்பனத்திலகூட நான் நெனைக்க லையே'' -வீதி மண்ணெல்லாம் மேனியில் ஒட்ட... புரண்டு தேம்பினாள் மிக்கேலம்மாள்.தற்கொலை என்று ஃபைலை க்ளோஸ் செய்தது ஆழ்வார்க்குறிச்சி போலீஸ். எண்ணி இரண்டே வாரம். பக்கத்து தெரு சேவியர் சிங்க ராயனுக்கு கடுமையான காய்ச்சல். ஜன்னி கண்டு உளறினான்... பினாத்தினான்.""எம் புருஷன் சரியில்லை, நீதாம்யா வேணும்னு கட்டிப் புடிச்சா மிக்கேலம்மா. பத்திக்கிடுச்சு.

ஒருநாளா? ரெண்டு நாளா? மாதக் கணக்குல... கண்ணால பாத்துப் பிட்டான் சார்லஸ். என்னையும் மிக்கேலம்மாவையும் அவன் போட் டுத் தள்ளிடுவான்னு பயந்து நானும் அவளும் சேர்ந்து பிராந்தியில விஷத்தைக் கலந்து குடுத்து காட்டுக் கேணியில தூக்கிப் போட்டம்... போலீசு வருது... வருது போலீஸ்... அய்யய்யோ...'' -சேவியரின் பினாத்தல் அவன் மனைவிக்கு கேட்டு, அக்கம்பக்கம் விழுந்து ஆழ்வார்க்குறிச்சி காவல்நிலைய காதிலும் விழுந்து விட்டது. மிக்கேலம்மாளும் சேவியர் சிங்கராயனும் இப்போது பாளை சிறையில்.""நிலமோசடி, ஆதாயக் கொலைகளைவிட இந்த மாவட்டத்தில் பாலியல் குற்றக் கொலைகள் அதிகமாகி விட்டன.

விழிப்புணர்வு பிரச்சாரம் கட்டாயம் தேவை'' -இது நெல்லை எஸ்.பி.அஸ்ரா கார்கின் கருத்து. நெல்லுக்கு வேலி போட்ட தாமிரபரணிச் சீமையில், கற்பும் மானமும் கலங்குவது ஏன்?""1982-ல் பிறன்மனை நோக்கி வேலி தாண்டு வது ரொம்ப தப்புன்னு சொன்ன பெண்கள் அதிகம். 1992-ல் இதில் என்ன தப்பு என்றவர்கள் 2002-ல் இதெல்லாம் தப்பே இல்லை என்று சொல்கிறார்கள். தமிழ் பண்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டுக்கொண்டி ருக்கிறது'' என்கிறார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் குற்றவியல் ஆய்வுத்துறை பேராசிரியர் முனைவர் சோமசுந்தரம்.

சந்தியாவின் கவர்ச்சி ஆல்பம்!

வாரிசு நடிகரை வளைத்துவிட்டார் என்ற சீரியஸான புகாரில் சிக்கியுள்ள சந்தியா, இப்போதல்லாம் கோடம்பாக்கம் பக்கம் அதிகம் தலைகாட்டுவதில்லையாம்.பெரும்பாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு ப் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுகிறாராம்.
இப்போது தமிழில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் நடித்துவரும் சந்தியா, சமீபத்தில் ஒரு ஸ்பெஷல் போட்டோ செஷன் நடத்தினாராம். இதிலிருந்து கவர்ச்சி ததும்பும் (?) தனது ஸ்டில்களைத் தேர்ந்தெடுத்து, தனி ஆல்பமாக்கி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் பட உலக பிரமுகர்களின் பார்வைக்கு அனுப்பியுள்ளாராம்.

இதற்கு ஓரளவு பலனும் கிடைத்துள்ளதாம். இனி இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் வெளியாகி வெற்றி பெற்றால் தவிர, வேறு தமிழ்ப்படங்கள் ஒப்புக் கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டாராம் சந்தியா.

3 ஜி: 94455 55555 எண் ரூ1.8 லட்சத்துக்கு ஏலம்-பிஎஸ்என்எல்லுக்கு ரூ.8 லட்சம் லாபம்!

பி.எஸ்.என்.எல். 3 ஜி மொபைல் போன் எண்களை ஏலத்தில் விட்டதில் சென்னையில் 8 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
அதிகபட்சமாக, ஒரு எண் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.வீடியோ கால் வசதி கொண்ட 3 ஜி சேவையை சமீபத்தில் பி.எஸ்.என்.எல். சென்னையில் அறிமுகப்படுத்தியது.இந்த சேவையை தங்களுக்குப் பிடித்தமான பேன்ஸி எண்களுடன் பெற போட்டி போட்டனர் வாடிக்கையாளர்கள். எனவே வாடிக்கையாளரின் இந்த ஆர்வத்தை காசாக்கும் முயற்சியில் இறங்கிய பிஎஸ்என்எல், 292 'பேன்சி' எண்களை ஏலத்தில் விட முடிவு செய்தது.
ஏற்கனவே, 2 ஜி சேவைக்கான எண்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்த அனுபவம் பிஎஸ்என்எல்லுக்கு உண்டு.எனவே 3 ஜி எண்களும் ஏலத்தில் விடப்பட்டன. இதில் ஒவ்வொரு பேன்சி எண்ணுக்கும் குறைந்த பட்ச தொகையாக ஆயிரம், 2,000, 3,000 என நிர்ணயிக்கப்பட்டு நூறின் மடங்காக ஏலம் கேட்க வேண்டும் என்று, நிபந்தனை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த ஏலத்தில், 93 எண்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த, '3 ஜி' எண்கள் அனைத்தும் 94455 என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த ஏலத்தில் குறிப்பாக 94455 55555 என்ற எண் மட்டும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 99999 என முடியும் எண், 77 ஆயிரம் ரூபாய்க்கும், 56789 என முடியும் எண், 62 ஆயிரம் ரூபாய்க்கும், 66666 என முடியும் எண் 30,300 ரூபாய்க்கும், 12345 என முடியும் எண் 30 ஆயிரம் ரூபாய்க்கும், 94455 என முடியும் எண் 28 ஆயிரத்திற்கும், 11111 என முடியும் எண் 15 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டன.
இதன் மூலம், மூலம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. மீதியுள்ள எண்கள் அடுத்த வாரம் ஏலம் விடப்படுமாம்.

வாழைச்சேனையில் இலங்கை இராணுவம் அகதிகள் மீது துப்பாக்கிசூடு

வாழைச்சேனை கரடித்தோட்டம் கடற்கரையில் தமிழ் அகதிகள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். சற்று முன்னர் நடந்த இச் சம்பவத்தை, சிங்கள இணையத்தளங்கள் ஆயுதம் தரித்த மும்பல் ஒன்றே தமிழ் அகதிகளை சுட்டதாக கட்டுக்கதை ஒன்றை பரப்பியுள்ளது.
தமிழ் அகதிகள் கரடித்தோட்டம் கடற்கரையில் இருந்து வேறு நாட்டிற்குச் செல்ல காத்திருந்த வேளை அங்கு வந்த இலங்கை இராணுவம் இவர்களைக் கைதுசெய்ய முயன்றதுடன் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுளனர்.கடற்கரையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது தான் இராணுவம் அங்குசென்றதாக சில சிங்கள இணையத்தளங்கள் செய்திவெளியிட்டுள்ளபோதும், வாழைச்சேனையில் நடைபெற்ற இச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதும், காயமடைந்ததும் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வி.பு சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்ச்சி தோல்வி

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடமிருக்கும் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை அரச உடமையாக்க அனுமதி வழங்குமாறு சர்வதேச இணக்கச் சபையிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கே.பி.யிடமிருக்கும் சகல சொத்துக்களும் அவரது உண்மையான தகவலின் அடிப்படையில் இல்லாமை மற்றும் இந்தப் பணம் வியாபார நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட பணம் என்பதால் அது ஒருநாட்டிற்குரிய சொத்து எனத் தீர்மானிப்பது சிரமம் என்பதாலேயே இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இதற்கு முன்னர் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருக்கும் கே.பி.க்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ள அந்த வங்கியிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கே.பி.யின் பெயரில் எவ்வித வங்கிக் கணக்கும் சுவிஸ் வங்கியிடம் இல்லையெனவும் அவர்கள் அந்தப் பணத்தை வேறு பெயர்களில் வைப்பிலிட்டிருக்கலாம் எனவும் சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த சொத்துக்களுக்குரிய ஆவணங்கள் அமெரிக்காவில் பெட்டகமொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமானால் தன்னை விடுவிக்க வேண்டுமென கே.பி. தெரிவித்திருப்பதாகவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கே.பி.க்குரிய சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.
கே.பி.யிடம் 600 வங்கிக் கணக்குகளும் 5 கப்பல்கள் இருப்பதாகவும் இவற்றில் மூன்று கப்பல்கள் விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருந்தார். இந்த நிலையில் அந்தக் கப்பல்களை இலங்கைக்குக் கொண்டுவர தடையில்லை எனவும் அவற்றின் உரிமையைப் பெறுவதற்கு அரசாங்கத்திற்கு முடியாது எனவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் அந்தக் கப்பல்களைக் கொண்டுவந்து ஏதேனும் நஸ்டங்கள் ஏற்பட்டால், அந்தக் கப்பல்கள் காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு செலுத்த நேரிடும் என சர்வதேச சட்டவல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழில் இளம் தாய் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் ஒரு பிளையின் தாயார் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இளம் தாயான இவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியபின்னர், கொலைசெய்து புதைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் யாரால் கொலைசெய்யப்பட்டார் எப்போது இது நடந்தது என்ற விபரங்களைச் சரிவரப் பெற முடியவில்லை. கொலைசெய்யப்பட்டவர் 36 வயதுடைய செல்வபாமா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் அராலியில் உள்ள சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் பூத உடலை அவர் குடும்பத்திடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. செல்வபாமாவின் உடலை அவரது மகள் அடையாளம் காட்டியிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் இவ் உத்தரவைப் பிறப்பித்ததாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து அதிர்வின் நிருபர் தெரிவித்தார்.

கொழும்பு அப்பல்லோ மருத்துவமனையை வாங்கி விட்டாரா கோத்தபயா?

கொழும்பில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை யை மறைமுகமாக கோத்தபயா ராஜபக்சே வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.இந்தியாவின் முன்னணி மருத்துவமனைக் குழுமம் அப்பல்லோ. இது இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒரு கிளை அமைத்திருந்தது.
இலங்கை இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த மருத்துவமனையை அப்பல்லோ மருத்துவமனையை நடத்தி வந்தது அப்பல்லோ.இந்த நிலையில் தற்போது இந்த மருத்துவமனையின் பெயர் லங்கா ஹாஸ்பிடல்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த மருத்துவமனையின் தலைவராக கோத்தபயா ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இந்த மருத்துவமனையை கோத்தபயா ராஜபக்சே வாங்கி விட்டதாக பேச்சு எழுந்துள்ளது.

ஆகஸ்ட் 14ம் தேதி லங்கா ஹாஸ்பிடல்ஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் என்ற பெயரில் மாற்றப்பட்ட அப்பல்லோவின் இயக்குநர் குழுவில் கோத்தபயா சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஏற்கனவே இருந்த இயக்குநர் குழு கலைக்கப்பட்டு கோத்தபயா தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லங்கா ஹாஸ்பிடல்ஸ் என்று மாற்றப்பட்டுள்ள அப்பல்லோவில் 86 சதவீத பங்குகளை இலங்கை இன்சூரன்ஸ் நிறுவனம் வைத்துள்ளதாம்.இதுகுறித்து லங்கா ஹாஸ்பிடல்ஸ் தரப்பில் கூறுகையில், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு நவம்பர் 16 ஆம் தேதியுடன் காலாவாதியானது.இதையடுத்து அப்பல்லோ என்ற பெயரில் இருந்த தனியார் மருத்துவமனையானது அரசு கட்டுப்பாட்டில் வரவேண்டும் என உச்சநீதிமன்றம் பணித்துள்ளதையடுத்தே அதன் பெயர் லங்கா ஹாஸ்பிடல்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கோத்தபய ராஜபக்சேவை உள்ளடக்கி புதிய இயக்குநர் குழு உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படடுள்ளது.ஆனால் கோத்தபயா இந்த மருத்துவமனையை வாங்கி விட்டதாகவே இலங்கையில் பேச்சு அடிபடுகிறது.ஏற்கனவே பல தனியார் நிறுவனங்களை கோத்தபயா உள்ளிட்ட ராஜபக்சே சகோதரர்கள் சரமாரியாக வாங்கி வருவதாக சர்ச்சை உள்ள நிலையி்ல தற்போது இந்த வரிசையில் அப்பல்லோவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவ கம்ப்யூட்டர் நெட்வோர்க்கில் சீனா ஊடுறுவல்!

டெல்லி: சீனா வையொட்டியுள்ள வட கிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பை மேற்கொள்ளும் இந்திய ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் சீனா ஊடுறுவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ராணுவ கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை தங்களது பகுதியிலிருந்தபடி அறிந்து கொள்ள உதவும் சாப்ட்வேர்கள், வைரஸ்கள் மூலம் இந்த உளவு வேலையை செய்துள்ளது சீனா என்றும் தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள சுக்னா என்ற இடத்தில் வடகிழக்குப் பிராந்திய பாதுகாப்பை மேற்கொள்ளும் ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் தலைமை அலுவலகம் உள்ளது.இங்குள்ள கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள்தான் சீனா ஊடுறுவியுள்ளது.
இங்குள்ள கம்ப்யூட்டர்களில் இடம் பெற்றுள்ள தகவல்களை சீனாவில் இருந்தபடி சுட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.சீனாவின் உளவு சாப்ட்வேரை இந்திய ராணுவ கட்டமைப்புக்குள் ஊடுருவ வைத்ததில் சீனாவுக்கு இந்திய ராணுவத்தில் யாரோ துணை போயிருக்கலாம் என்றும் தெரிகிறது. அது யார் என்பதை அறிய தற்போது விசாரணை நடந்து வருகிறது.
அதேசமயம், வட கிழக்குப் பிராந்திய பாதுகாப்பு குறித்த பல முக்கியத் தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை சீனா, அறிந்து கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.இந் நிலையில் ராணுவ தலைமையகம் அருகே சமீபத்தில் தனியார் கல்வி நிறுவன வளாகம் ஒன்றுக்கு ராணுவம் அனுமதி அளித்திருந்தது.
தற்போது இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த அனுமதியை அளித்தவர் ராணுவச் செயலாளர் லெப்டினென்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷ் மற்றும் 3 அதிகாரிகள் என்பது தெரிய வந்துள்ளது. இந்திய ராணுவத்தின் கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் சீனா ஊடுறுவியிருப்பது கடந்த 2007ம் ஆண்டு முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. சிக்கிம், பூட்டான், திபெத் ஆகியவை சந்திக்கும் இடத்தில் உள்ள டோகா லா என்ற இடத்தில் உள்ள இந்தியா வின் ஆளில்லாத ராணுவ பங்கர்கள் இரண்டை சீனா தாக்கித் தகர்த்தது
அதன் பிறகுதான் கம்ப்யூட்டர்களில் இருந்து முக்கியத் தகவல்களை சீனா உளவு பார்ப்பது தெரிய வந்தது.சீனாவின் செயலால் எந்த அளவுக்கு இந்திய ராணுவத்தின் திட்டமிடல், பாதுகாப்பு உத்திகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

ஈழ அவலம்- தமிழில் உணர்ச்சிகரமாய் பேசிய சுஷ்மா

ழத் தமிழர்களின் அவல நிலை குறித்து ராஜ்யசபா வில் தமிழில் பேசி வேதனையை வெளிப்படுத்தி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் பாஜக உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ்.
நேற்று ஈழத் தமிழர்கள் நிலை குறித்து மத்திய அரசை மிகக் கடுமையாக சாடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். பாஜக, மதிமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக என அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக சாடின.

குறிப்பாக பாஜக மூத்த உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். தனது பேச்சின்போது தமிழிலும் அவர் பேசியது அனைவரையும் வியப்படைய வைத்தது.

கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி சுஷ்மா சுவராஜ் பேசுகையில், ஈழத் தமிழர் பிரச்சினை இந்தியாவின் தமிழ் மக்களுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக ஒட்டுமொத்த நாட்டின் இதயத்துடன் நெருங்கிய விஷயம்.இன்னொரு உயிருக்காக இரங்கக் கூடிய மனிதத் தன்மை ஒருவனிடம் இல்லாவிட்டால் அவனது ஆன்மா செத்துப் போய் விட்டது என்கிறார் பாரதியார். நிவாரண முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 2.5 லட்சம் தமிழ் மக்களின் உயிர் குறித்து ஒட்டுமொத்த இந்தியாவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.


உண்மையில் அவை முகாம்கள் அல்ல, மாறாக முள்வேலி சிறைச்சாலைகள் (இதைத் தமிழிலேயே சுஷ்மா சொன்னார்).

இலங்கையில் பெரும் அவலத்திற்கு மத்தியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இந்த அரசு செய்யப் போகும் நிவாரண நடவடிக்கைகள் என்ன என்பதை மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சொல்ல வேண்டும் (இந்தக் கேள்வியை தமிழிலேயே கேட்டார் சுஷ்மா).சமீபத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றாரே. அது ஏன். இதை அவர் விளக்க வேண்டும்.கிட்டத்தட்ட 50 ஆயிரம் குழந்தைகள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் போரின் போது இடம் பெயர்ந்து வந்தனர். அவர்களின் கதி என்ன, நிலை என்ன என்பதை இலங்கையிடம் கேட்டு இந்தியா விளக்க வேண்டும்.தமிழர்கள் மிகப் பெரிய அவல நிலையில் உள்ளன என்று ஐ.நா. கூறுகிறது. இந்த நிலையில் இலங்கை முகாம்களின் நிலை குறித்து அறிய அங்கு போன இந்தியக் குழு ( தமிழகத்திலிருந்து போன திமுக தலைமையிலான ஆளுங்கட்சிக் கூட்டணிக் குழு) தாக்கல் செய்த அறிக்கை என்ன. அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது.நிதியுதவி அளிப்பதோடு இந்தியாவின் கடமை முடிந்து போய் விடவில்லை.

ஆனால் இடம் பெயர்ந்த மக்கள் அங்கு எந்த நிலையில் வாழுகின்றனர் என்பதையும் இந்தியா கவனித்து வர வேண்டும்.இலங்கைக்கு பாரபட்சம் இல்லாமல் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய எம்.பிக்கள் குழுவை அனுப்பி ஆராய வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி எம்.பிக்களை மட்டும், தமிழர்களை மட்டும் அனுப்பி வைப்பதால் என்ன புண்ணியம். ஏன் அப்படி ஒரு குழுவை அனுப்பினீர்கள். இந்தப் பிரச்சினை ஒட்டுமொத்த இந்தியா சம்பந்தப்பட்டது. அப்படி இருக்கையில் தேசிய அளவிலான குழுவைத்தானே அனுப்பியிருக்க வேண்டும்.

வெறும் தமிழர்களை மட்டும் அனுப்பி வைப்பதன் மூலம், மத்திய அரசு மிகவும் குறுகிய கண்ணோட்டத்துடன் நடந்து கொண்டுள்ளது தெளிவாகியுள்ளது. இலங்கைக்கு இந்த அரசு அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவை அனுப்புமா (இந்தக் கேள்வியை திரும்பத் திரும்ப வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணவைப் பார்த்துக் கேட்டார் சுஷ்மா - அவர் அமைதியாக இருந்தார்) என்றார் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட சுஷ்மா சுவராஜ்.

சுஷ்மா சுவராஜின் பேச்சைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர்.மேலும் இல‌ங்​‌கை​யி‌ல் ஒரு அ‌ப்​பாவி நப‌ரை ‌போலீ​ஸா‌ர் அடி‌த்து உ‌தை‌த்து கட​லி‌ல் மூ‌ழ்​க​டி‌த்​தது ‌தொட‌ர்​பாக ஸ்வராஜ் குறி‌ப்​பி‌ட்டு ‌பேசி​ய​‌போது குறு‌க்​கி‌ட்ட கா‌ங்​கி​ர‌ஸ் எம்பிக்கள், இ‌தை​விட கா‌ட்​டு​மி​ரா‌ண்​டி‌த்​த​ன‌ம் குஜ​ரா‌த்​தி‌ல் நட‌ந்​து‌ள்​ள‌து.

அதை சுஷ்மா மறக்கக் கூடாது என்றனர்.இதையடுத்து பாஜக-கா‌ங்​கி​ர‌ஸ் உறு‌ப்​பி​ன‌ர்​க​ இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வன்னி மாவீரர் இல்லம் அரசாங்கத்தால் தரைமட்டமாக அழிப்பு

ன்னிப் பகுதியானது இலங்கை அரசாங்கத்தின் கைகளில் வந்துவிட்ட நிலையில், அங்கு அபிவிருத்திப் பணிகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக ராணுவத்தினர் அறிவித்து வருகின்றனர்.
உண்மையில் அங்கு வீரச்சாவடைந்த விடுதலைப் புலி மாவீரர்களுக்காக கட்டப்பட்டிருந்த மயானங்கள், நினைவுச் சின்னங்கள் என்பன அழிக்கப்பட்டு வருவதாகவும் அவ்விடங்களில் போரில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் சிலைகளை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆனையிறவு ராணுவத் தளத்தில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் நினைவாலயம் ஒன்று கட்டப்பட்டு வரும் நிலையில், மேலும் இதேபோன்ற நினைவுத் தூபிகள் கட்டப்படும் பொருட்டு கிளிநொச்சி நகர விளையாட்டு மைதானம் சுத்தமாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வன்னியின் பல பாகங்களிலும் புலிகளின் கல்லறைகளை நீக்குவதும் ராணுவ சிலைகள் எழுப்புவதிலும் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.வன்னியில் ஏ 9 சாலைக்கு உட்புறமாக மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்த மாவீரர்களின் கல்லறைகள் முற்று முழுதாக தரையோடு அழிக்கப்பட்டுள்ளன.

Friday, December 4, 2009

அவசர அழைப்பின்பேரில் பொன்சேகா நேற்றிரவு இந்தியா பயணம்: விமானநிலையத்தில் கெடுபிடி!

ந்திய அரசின் அவசர அழைப்பின்பேரில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியும் எதிர்க்கட்சிகளின் அரசதலைவர் வேட்பாளருமான சரத் பொன்சேகா நேற்று புதன்கிழமை இரவு இந்தியா சென்றுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொன்சேகாவை முக்கியஸ்தர்கள் செல்லும் வழியாக செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, சாதாரண பயணிகள் செல்லும் வழியாகவே அவர் விமானத்தை சென்றடைந்துள்ளார்.
இந்திய அரசின் அவசர அழைப்பின்பேரில் அங்கு செல்வதற்காக நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வி.ஐ.பிகள் செல்லும் வழியாக பொன்சேகா விமானநிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அவரை வழிமறித்த விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள், பொன்சேகா வி.ஐ.பிகள் செல்லும் பாதையை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, பொன்சேகாவின் பாதுகாப்பு ஒருங்கமைப்பாளர் விமானநிலைய கட்டுப்பாட்டாளர் கேணல் பிரசன்ன விக்ரமசூரியவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு அவர் பொன்சேகா வி.ஜ.பி. பாதையை பயன்படுத்த அனுமதி வழங்கவெண்டாம் என்று தமக்கு உயர் மட்டத்திலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவினால் பிறப்பிக்கப்பட்டத என்று பொன்சேகா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, பயணிகள் மற்றும் பிக்குகள் சிலருடன் பொன்சேகா சாதாரண பயணிகள் விமானத்தை சென்றடைய பயன்படுத்தும் வழியாக விமானத்துக்கு சென்றார் என்று விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவுக்கு இரண்டு நாள் விஜயமாக சென்றுள்ள பொன்சேகா நாளை வெள்ளிக்கிழமை மாலை நாடு திரும்புவார் என்று எதிர்கட்சிவட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது விஜயத்திற்கான காரணத்தை கேட்டபோது அது தனிப்பட்ட விஜயம் சென்று பொன்சேகா தரப்பினர் தெரிவித்துள்ளனர். நாளை நாடு திரும்பவுள்ள பொன்சேகா நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய சம்மேளனக்கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, December 3, 2009

புலிகளிடம் 14 கப்பல்கள்; கே.பியின் பெயரில் 600 வங்கிக் கணக்குகள், 5 கப்பல்கள்; மூன்றை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை

புலிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க ஏற்பாடு
இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள புலிகளின் சொத்துக்களை அரசுட மையாக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களு க்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
புலிகளிடம் 14 கப்பல்கள் இருக்கின்றன. அவற்றில் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் பெயரில் மாத்திரம் ஐந்து கப்பல்களும் 600க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.கே.பியின் பெயரிலுள்ள ஐந்து கப்பல்களில் மூன்று கப்பல்களை இலங்கைக்கு எடுத்துவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இந்த சொத்துக்களை சுவீகரிப்பது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள குழுக்களிடமும் தனிநபர்களிடமும் தற்போது இருக்கும் புலிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது.உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் உள்ள புலிகளின் சொத்துக்களை அரசாங்க புலனாய்வுத் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
தற்பொழுது தனி நபர்களினதும், குழுக்களினதும் கட்டுப்பாட்டிலுள்ள சொத்துக்களை அரசு சுவீகரிக்கவுள்ளது.கே.பி.யின் பெயரில் உள்ள சுமார் 600க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.புலிகளின் நிதி மார்க்கங்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப் பதற்காகவே கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றார். கே.பி.யின் வங்கிக் கணக்குகளின் மொத்த பெறுமதி தொடர்பாக இன்னும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சரித்திரம் சொல்லும் உண்மைகள்! - ஜெகத் கஸ்பர்



"உலக ஒழுங்கு', "பிராந்திய ஒழுங்கு' என்றெல்லாம் எழுதுகிறீர்களே, அவற்றை எப்படி புரிந்து கொள்வது என்று தோழர் ஒருவர் அப்பாவித்தனமாக கேட்டார். அவருக்கு ஓர் சிறு உதாரணத்தை சொன்னேன்.


தமிழர் இன அழித்தல் யுத்தத்திற்கு அரசியற் தலைமை கொடுத்தவர் ராஜபக்சே. களத்தில் கொடும் ராணுவத் தலைமை கொடுத்தவர் சரத் பொன்சேகா. இருவரும் யுத்தம் முடிந்த ஆறு மாதத்திற்குள் எதிரிகளாகி தேர்தல் களத்தில் சந்தித்துக் கொள்கிறார் களல்லவா? இத்தகு விசித்திரமான அரசியல் ரசாயன மாற்றங்களை கொஞ்சம் உற்று உன்னிப்பாக நோக்கினீர்களென்றால் அத்தகு ரசாயன மாற்றங்களை நிகழ்த்தும் உலக-பிராந்திய ஒழுங்குகள் உங்களுக்குப் புரியும்.


அல்லது, வெற்றி வெறியில் கொக்கரித்து நின்ற ராஜபக்சே சகோதரர்கள் திடீரென ஒருநாள் வெல வெலத்துப் போய் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, இந்திய ராணுவ உதவியை நாடியதாக பொன்சேகா குற்றம் சாட்டியதையும், இந்திய ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டதாக வந்த செய்தி களையும் கூர்ந்து ஆய்ந்தீர்க ளென்றால் புரியும், பிராந்திய ஒழுங்கு என்னவென்று.


அதுபோலவே மேலும் சில நண்பர்கள் கேட்பது, ஈழம் மலரும், ஈழம் வரும் என்றெல்லாம் எழுதுகிறீர்களே, இது நடைமுறையில் சாத்தியமா? இல்லை, துவண்டு கிடக்கும் உணர்வாளர்களை சாந்தப்படுத்த வேண்டி எழுது கிறீர்களா? -இப்படி பல கேள்விகள். ஐயமுறும் நண்பர் களுக்கு எனது பதில்:

அர்மீனியா, அசர்பைஜான், பெலாரஸ், எஸ்தோனியா, ஜார்ஜியா, கசக்ஸ்தான், கிரிக்ஸ்தான், லாத்வியா, லித்துவேனியா, மால்டோவா, தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ் தான், உஸ்பெகிஸ்தான், உக்ரைன், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவ்னியா, குரோஷியா, மாசிடோனியா, செர்பியா மற்றும் மான்டெனேக்ரோ, ஸ்லோ வேனியா, நமீபியா, யெமென், மார்ஷல் தீவுகள், எரித்ரேயா, பலாவ், கிழக்கு திமோர், கொசோவா... என்ன புதிய மொழியில் எழுதுகிறேன் என நினைக்கிறீர்களா? இவை யாவுமே 1990-ம் ஆண்டுக்குப் பின் இப்பூமிப் பந்தில் புதிதாகப் புலர்ந்தெழுந்த நாடுகள். கடந்த இருபது ஆண்டுகளில் மட்டுமே சுமார் 36 நாடுகள் புதிதாக உதயமாகியுள்ளன. தத்தமது தேசியப் பாடல்கள், கொடி கள், சட்டங்கள், நீதி அவைகள், பாராளுமன்றங் களுடன் இன்று இந்நாடுகள் உலகக் குடும்பத்தின் பெருமை மிகு உறுப்பு நாடு களாய் தலைநிமிர்ந்து நிற்கின்றன.

ஆக, கடந்த இருபது ஆண்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே ஆண்டொன்றுக்கு சராசரி இரு புதிய நாடுகள் நம் உலக வரைபடத்தில் உருவாகியிருக்கின்றன.

இந்த யதார்த்த உண்மையில் நின்றுகொண்டுதான், கடந்த 2008-ம் ஆண்டு பெப்ருவரி 17ம் நாள் கடைசியாக உலக சமுதாயத்தால் முழு உரிமைகள் கொண்ட தனிநாடாக ஏற்கப்பட்ட கோசொவா நாட்டு மக்கள் அனுபவித்த இன அழித்தல் துயர் களின் வரலாற்று வரை சாட்சியாகக் கொண்டுதான் எழுதுகிறேன், உலக வரைபடமொன்றும் மாற்றப்படா தன்மை கொண்ட சந்திர மண்டலத்துக் கற்பாறைக் களம் அல்ல.

அது சதா மாறிக் கொண்டே இருக்கும்.இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததும், பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்ததும் நம் தலைமுறையினரில் இன்னும் உயிரோடிருக்கிற பலர் பார்த்த அனுபவங்கள். எனில் ஏன் இலங்கையின் இன்றைய நிலப்பரப்பு இரண்டாக பிரிந்து ஈழம் தனியாக மலரக்கூடாது. மலரும். ஒன்றாய் நாம் நின்றால், சுயநலம் அறுத்து தமிழின உணர்வோடும் மானுட அறத்தோடும் உழைத்தால் நிச்சயம் ஈழம் மலரும். வரலாறு தான் நம் நம்பிக்கை. முள்ளி வாய்க்காலின் கூக்குரல்கள் ஓயாது. இறைவன் இருப்பது உண்மையென்றால் ராஜபக்சே கோத்தபய்யா சகோதரர்களை மனித குலத்திற்கெதிராய் குற்றம் புரிந்த பாவிகளாய் வரலாறு விரைவிலேயே அவமானம் செய்யும். அதற்கும் மிகச் சமீபத்திய உதாரணங்கள் பலர் உண்டு.

சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கெதி ராய் இன அழித்தல் குற்றம் செய்த செர்பிய சர்வாதிகாரி சுலொபொதன் மிலொசொவிச் யுத்தக் குற்றவாளியாய் 2006- மார்ச் மாதம் சிறைக் கம்பிகளுக்குள்தான் மன அழுத்தம் தாங்காது மாரடைப்பில் மரணம் கண்டார். இப்போதும் அனைத்துலக நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகப் பிரகடனம் செய்யப்பட்டு அவ மானத்தின் அடையாளங்களாய் நிற்கிறவர்கள் போஸ்னிய செர்பியத் தலைவர் ரடவன் கரட்சிக், லைபீரிய நாட்டு அதிபர் சார்லஸ் டெய்லர், சூடான் நாட்டு அதிபர் ஒமார் அல் பஷீர்... ஆம் இவர்களைப் போல் ராஜபக்சே-கோத்தபய்யா- பொன்சேகா மூவரும் நிற்க வேண்டும், நிறுத்தப்பட வேண்டும். நிகழும். நிகழ்ந்தே தீரும்.

கடந்த இதழில் மேற்சொன்ன இன அழித்தல் மும்மூர்த்திகளையும் போர்க்குற்றவாளிகளாய் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போற்றுத லுக்குரிய மனிதர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனல்லவா...? அப்புலத்தில் தேர்ந்த அனுபவம் கொண்ட இவர்களை அணுகி இப்பணியை ஏற்றுச் செய்யும்படி அமர்த்தி அதற்கு ஆகக்கூடிய பெருநிதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் யார் தெரியுமா? மானுடம் முற்றிலுமாய் ஒருபோதும் மடிந்தோ, வீழ்ந்தோ போவதில்லை என்ற நம்பிக்கையின் செய்தி அது.
இப்புனிதப் பணியைச் செய்யும் படி அக்குறிப்பிட்ட அமைப்பினை அணுகியவர்களும், அதற்கான பெருநிதிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் யாரெனில் -இலங்கையில் கடமையாற்றி, தமிழர் மீது நிகழ்ந்த -நிகழ்த்தப்பட்ட கொடூரங்களையெல்லாம் கண்டு -ஆனால் நம்மைப்போல் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் நின்ற சில நாடுகளின் வெளியுறவு ராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் உலக அமைப்புகளில் பணிபுரிந்த சில அதிகாரிகள். இவர்களில் சிலர் பணி ஓய்வு பெற்றுவிட்டவர்கள், சிலர் இப்போதும் பிற நாடுகளில் கடமை யாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தமிழருக்கு நடந்ததை பொது மானுடத்திற்கு நேர்ந்த அவலமாகவும், அதை அறிந்தும் கண்டும்கூட தங்களால் தடுத்து நிறுத்த முடியாத கையறு நிலையை தமது மனசாட்சிகளின் சவாலாகவும் கருதி நீதி தேடும் இப்புனிதப் பணியில் தம்மை அமைதியாக இணைத்துக்கொண்டிருக் கிறார்கள்.
தொடர்ந்தும், அவர்களை நான் விடாது வினவினேன் : ""ஐயா, கேட்பதற்காய் மன்னித் துக்கொள்ளுங்கள். மேற்குலக நாடுகளிலிருந்து புறப்படும் இத்தகைய முயற்சிகள் அனைத்திற்குள்ளும் அரசியல் வியூகங்களும், கணக்குகளும் இல்லாமல் இருக்காது. தயவு செய்து எதுவானாலும் வெளிப்படையாகக் கூறிவிடுங்கள்'' என்று வலியுறுத்திக் கேட்டேன். அதற்கும் அவர்கள் பொறுமையாகப் பதில் தந்தனர்.
""நிச்சயமாக இம் முயற்சியை முன்னின்று செய்யும் எங்களுக்கோ, இதனை செய்யும்படி எம்மைப் பணித்து அதற்கான செலவுகளைச் செய்யும் தனி மனிதர்களுக்கோ பொதுமானுடக் கரிசனையொன்றைத் தவிர்த்து வேறெந்த அரசியல் நோக்கும் இல்லை. அதேவேளை ஒன்றை நீங்கள் அறிய வேண்டும். என்ன வென்றால் மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லையென்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா மூவர் மீதும் உள்ளூர வெறுப்பே கொண்டுள்ளனர். இவர்களை ஆதரித்து ஆட்சி பீடத்தில் நிலைபெறச் செய்யும் அக்கறை எந்த மேற்கு நாட்டுக்கும் இல்லை. ஆதலால் எம் முயற்சிக்கு ஒரு கட்டத்தில் இந்நாடுகள் ஆதரவு தருகின்ற வாய்ப்பும், அதனால் இலங்கை மீதான போர்க்குற்ற நீதி விசாரணை என்றேனும் ஒருநாள் வெற்றிபெறும் வாய்ப்பும் அதிகம்'' என்றார்கள். நீதி நிற்கும்! மானுடம் வெல்லும்!
உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றி அவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன சில விடயங்கள் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானவை. தமிழீழப் போராட்டம் மீது கவிந்த பயங்கரவாதம் என்ற நச்சுத் திரையை நிரந்தரமாய் நீக்கிவிடவும், தமிழரின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிறுவியும் உதவக்கூடிய ஆலோசனைகள் முதலானதாகவும் மிக முக்கியமாகவும் அவர்கள் வலியுறுத்திக் குறிப்பிட்டது, மேற்குலகம் இன்று ஒருவகையான குற்றப்பழி உணர்வில் நிற்கிறது. தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன அழித்தல் பாவத்தில் தமக்கும் மறைமுக பங்கு உண்டு என நினைக்கிறது. ஏதாவது செய்ய வேண்டும் -குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என விரும்புகிறது. தயவுசெய்து புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் உங்கள் தமிழர்களோடு உங்களுக்கு தொடர்பிருந்தால் மேற்குலக நாடுகளின் இக்குற்றப்பழி உணர்வை கனப்படுத்தி தேசிய பாரமாக்கும் செயற்பாடுகளை தாமதமின்றி பெரிய அளவில் மேற்கொள்ளச் சொல்லுங்கள் - என்றனர்.
போருக்கெதிரான பத்திரிகையாளர்கள் இருபதுபேர் இணைந்து ஆக்கி நல்லேர் பதிப்பகம் வெளியிட்ட "ஈழம்-மௌனத்தின் வலி' புத்தகத்தை தற்செயலாக என் மேஜையில் கண்டு, புரட்டிப் பார்க்கலாமா என கேட்டனர். பின்னர் ஆயிரம் ரூபாய் கொடுத்து பத்து புத்தகங்கள் வாங்கிக் கொண்டனர். தமிழ் அவர்களுக்குப் புரியாது. ஆனால் அப்பதிவின் பின்புலத்தை எடுத்துச் சொன்னேன். அடுத்தநாள் தொடர்புகொண்டு கூறினார்கள்: இப்புத்தகம் போல் உலகத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துக்களோடு ஆங்கிலத்தில் ஓர் ஆக்கம் செய்து உலகெங்கும் -குறிப்பாக மேற்குலக நாடுகளின் மக்களுக்கு வினியோகிக்கும்படி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களுக்குச் சொல்லுங்கள் என சற்றேறக்குறைய மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். ஆம், உலக மனசாட்சியின் குற்ற உணர்வை பாரமுடையதாக்குங்கள். தமிழருக்கு அநீதி செய்துவிட்டோம் என ஒவ்வொரு நாடும் உணரச் செய்யுங்கள் -என்றனர்.அவ்வாறே தமிழர்கள் இந்நாட் களில் செய்யக்கூடாத சிலவற்றையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கைவிலங்கோடு இரண்டு மணி நேரம்'' -கனடாவில் சீமான்


மாவீரர் நாளில் கலந்து கொண்டு பேசுவதற்காக கனடா சென்றார் இயக்குநரும் "நாம் தமிழர்' இயக்கத்தின் தலைவருமான சீமான். மாவீரர் நாளில் இரண்டு கூட்டங்களில் இவர் பேசுவதாக திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதேசமயம், மாவீரர் நாளுக்கு முதல் நாள் கனடிய தமிழ் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கர்ஜனை செய்தார் சீமான். இதனைத் தொடர்ந்து சீமானை கைது செய்து, விசாரித்துவிட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது கனடா அரசு.
விசாரணையில் முழுமையாக நடந்தது என்ன? -சீமானிடம் கேட்டோம்.
""நான் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்தனர் கனடா இமிக்ரேஷன் அதிகாரிகள். அவர்களுடன் இருந்த ஒரு அதிகாரி என்னை அடையாளம் காட்டினார். யார் இவர்கள் என்று நான் யோசித்துக் கொண்டேயிருக்கையில், "எழுந்து நில்... திரும்பி நில்... கால்களை அகட்டி வை...' என்று கூறியபடியே எனது இரண்டு கைகளையும் முதுகுபுறமாக வளைத்து விலங்கிட்டனர். நான் அதிர்ச்சி அடைந்தேன்.
"கனடாவுக்கு வந்து இந்தியாவுக்கு எதிராகவும் உலக நாடுகளுக்கு எதிராகவும் சிங்களவர்கள் மீது குண்டு வீசுவோம் என்றும் எல்.டி.டி.ஈ.யை ஆதரித்தும் பேசியிருக்கிறாய். அதனால் உன்னை கைது செய்கிறோம். இண்டர்போல் அதிகாரி உன்னை விசாரிப்பார்' என்றனர். அப்போது நான் கூறியதை கேட்க மறுத்து, கைவிலங்குடன் இண்டர்போல் அலுவலகத்துக்கு கொண்டு போனார்கள்.நிறைய அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், சீக்கிய அதிகாரி ஒருவர் மட்டும் விசாரிப்பதற்காக காத்திருந்தார்.கனடா நாட்டு சட்டத்தின்படி பின்புறமாக கை விலங்கிடப்பட்டு இண்டர்போல் அதிகாரிமுன்பு நிறுத் தப்பட்டபோது, "விசாரணை இரண்டு மணி நேரத்துக்குமேலே நடக்கும். அதனால் கைவிலங்கை கழட்டி விடுங்கள்' என்று அந்த சீக்கிய அதிகாரி சொல்ல, ஒரு கதவை சுட்டிக்காட்டி "அந்த வழியாக இவர் ஓடிவிடு வார்' என்று கை விலங்கை அகற்ற மறுத்தனர் கனடா அதிகாரிகள். அதற்கு, சீக்கிய அதிகாரி "அப்படியானால் கைவிலங்கை முன்புறமாக மாற்றுங்கள்' என்று சொன்னதும் என் கை களை முன்புறமாக விலங்கிட்டனர்.
என்னை விசாரிக்க துவங்கிய சீக்கிய அதிகாரியிடம்..."நாம் தமிழர் இயக்கம்' தொடர்பாக வெளிவந்த புகைப்படங்கள், பேச்சுக்கள், பிரபாகரனும் நானும் இருக்கும் புகைப் படங்கள் இருந்தன.இவ்வளவு படங்களையும் எப்போது சேகரித்தார்கள் என்று ஆச்சரியப்பட்டேன்.நானும், பிரபாகரனும் இருக்கும் புகைப் படத்தில் பிரபாகரனை காட்டி "இவர் யார்?' என்றார் சீக்கிய அதிகாரி. "பிரபாகரன்' என் றேன்.
அடுத்து என் படத்தைக் காட்டி இது நீதானே? என்று கேட்க "ஆமாம்' என்றேன்.நீ எல்.டி.டி.ஈ.யை ஆதரிக்கிறாய், "நீ ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்த றியா? இல்லையா? அதைச் சொல்' என்று அவர் அதட்ட, "இந்திராகாந்தி கொலையை நீங்க நியாயப்படுத்தறீங்களா?' என்று எதிர் கேள்வியை நான் கோபமாக கேட்டேன். உடனே அவர், "நீ கேள்வி கேட்கக்கூடாது. நான் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்' என்றார்.அப்போது நான், "ராஜீவ் கொலையை நியாயப்படுத்த வில்லை.
இந்திய அமைதிப்படையை அனுப்பி ஈழத் தமி ழர்களை கொன்று குவித்தனர். அது தவறு என்று பேசியிருக்கிறேன்' என்றேன். உடனே சட்டென்று அந்த அதிகாரி, "அது தவறு என்றால், ராஜீவ் கொலையை நியாயப்படுத்துகிறாய் என்றுதான் அர்த்தம்' என்று எரிந்து விழுந்தார்.
உடனே நான், "குதர்க்கமாக நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள்... சரி... பொற்கோவிலுக்குள் ராணுவத்தை இந்திரா அனுப்பியதை சீக்கியர்கள் நியாயம் என்கிறார்களா?' என்று எதிர்கேள்வி கேட்டேன். அமைதியாக இருந்தார். ஒரு நிமிடம் கழித்து "கனடாவில் வந்து புலிகளை ஆதரித்து பேசக்கூடாது?' என்று அவர் சொல்ல "அதுதான் ஏன் பேசக்கூடாது' என்று நான் கேட்க, "தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிக்கக்கூடாது. அதனால் இங்கு சட்ட- ஒழுங்கு கெடும்'' என்றனர்.இண்டர்போல் அதிகாரி மீண்டும் பிரபாகரனை காட்டி, "இவர் உங்களுக்கு என்ன உறவு?' என்று கேட்க, அமைதியாக இருந்தேன். உடனே அவர் உனக்கு இவர் பிரதரா? என்று கேட்க, "ஆமாம்... யெல்டர் பிரதர்...' "தமிழ் ரத்தம். அந்த வகையில் எனக்கு மூத்த அண்ணன் அவர்' என்று சத்தமாக சொன்னேன்."நீ உடனடியாக இந்தியாவுக்கு போய்விட வேண்டும். மீறி இருந்தால் சிறையில் அடைப்போம்.
அதன்பிறகு நீதிபதி என்ன சொல்கிறாரோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்கள்.அதற்குள் கனடா தமிழ் இளைஞர்கள், வழக்கறிஞர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள்.அவர்களும் "மாவீரர் நாளில் இரண்டு கூட்டங்களில் பேசுவதாக இருக்கிறது. அதில் ஒரு கூட்டத்திலாவது பேச அனுமதியுங்கள்' என்று சொல்ல, அதற்கு அதிகாரிகள், "பேசியதும் உடனே பிளைட் ஏறிவிட வேண்டும். அதுவரை கடவுசீட் எங்களிடம்தான் இருக்கும். சரியா?' என்று சொல்ல, சரி... என்றோம். அப்போது, உடனே கனடா அதிகாரிகளில் ஒருவர் கொஞ்சம் பொறுங்கள்... என்று கூறிவிட்டு வெளியே சென்று யாருக்கோ பேசினார். பேசி முடித்துவிட்டு அவசரமாக உள்ளே வந்தவர்... "அதெல்லாம் முடியாது. உடனே நீங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்' என்று கூறி அங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு அழைத்து வந்து... ஒரு தனி அறையில் அடைத்து விட்டனர்.
அப்போதும் கைவிலங்கு அகற்றப்படவில்லை.அந்த அறையில் ஒரு கேமரா மூலம் நான் கண்காணிக்கப்படுவதை அறிந்தவுடன் "பேசாமல் பேசவைப்பான் பிரபாகரன்' என்ற பாடலை உரக்க பாடிக் கொண்டே இருந்தேன். விமானம் ஏறும்போதுதான் என் கைவிலங்கு அகற்றப்பட்டது'' என்ற சீமான், ""ராஜபக்சே சகோதரர்களின் சிங்கள இனவாதத்திற்கு ஒவ்வொரு நாடும் எப்படி யெல்லாம் உறுதுணையாக இருக்கிறதை அப்போது நான் உணர்ந்தேன். இது போன்ற அச்சுறுத்தல்களெல்லாம் என் ஈழ உணர்வை முடக்கிப் போட்டுவிட முடியாது. தமிழீழ போராட்டத்தை முன்னைவிட வலிமையாக நடத்துவேன்'' என்கின்றார் ஆவேச மாக.

ஏழு பெண்களை மணந்தவனின் ஆடடா...

"நான் அவனில்லை' திரைப்படத்து ஹீரோ ஜீவன்... பல பெண்களை ஏமாற்றுவதுபோல்... ஒரு கில்லாடிக் கிங்கரன் பல பெண்களை ஏமாற்றி அவர்களின் கற்பையும் காசையும் ஏகத்துக்கும் சூறையாடியிருக்கிறான்.அத்தகைய மன் மதத் திருட னிடம்... தான் ஏமாந்த கதை யைச் சொல் லித் தேம்பு கிறார்... தேனி மாவட்ட போடி யைச் சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணான நளினி.அவரது அனுபவத்தை அவரது வாய்ஸிலேயே கேட்போம்.""நான் செல்லமா வளர்க்கப் பட்டவள்.

வசதியான குடும்பம். அப்பா வரதராஜன் திடீர்னு இறந்துபோனதால்... என்னோட திருமணத்தை கடந்த எட்டு வருஷமா தள்ளி வச்சிக்கிட்டே இருந்தேன். வயது 35-ஐ நெருங்கியதால் எங்க அம்மா... இப்பவாச்சும் கல்யா ணத்துக்கு ஒத்துக்கோன்னு சொன்னதால்... மனசு மாறி நானே இண்டர்நெட்டில் மணமகனைத் தேடினேன்.

அப்ப... பொன்குமரன்ங்கிற ஒருத்தன் தன்னை லண்டன் வாழ் தமிழர்னும்... பெரிய தொழிலதி பர்னும் அறிமுகப்படுத்திக்கிட்டு தனக்கு ஏத்த வயதில் பெண் தேடுவதா விளம்பரப்படுத்தியிருந் தான். ரொம்ப நாகரிகமா விளம்பரம் இருந்ததால் என்னைப் பற்றிய விபரங்களைக் கொ டுத்து... பதிலுக்குக் காத்திருந் தேன். அடுத்த ரெண்டுநாளில் என் மொபைல் நம்பருக்கு வந்த அந்த ஆள்... புனேவிலும் தனக்கு சொத்துக்கள், தொழில்கள் இருப்பதாகவும்... இந்தியா வந்ததும் வீட்டுக்கு வர்றேன்னும் சொன் னான். இதையெல்லாம் மனப் பூர்வமா நம்பி.. எங்க வீட்டில் திருமணத்துக்கு ஒப்புதல் வாங்கினேன்.கொஞ்சநாள்ல அந்த ஆள் மறுபடியும் என்னைத் தொடர்புகொண்டு... "எங்க அப்பா, அம்மா விபத்தில் இறந்துட்டாங்க. அதனால் கொஞ்சம் திருமணத்தைத் தள்ளிவச்சுக்கலாம்'னு சொல்ல... நாங்களும் அந்த விபத்துக்காக வருத்தப்பட்டோம்.

அடுத்த கொஞ்சநாளில் மீண்டும் தொடர்புகொண்டு... "சீக்கிரம் திருமணத்தை ஏற்பாடு செய்யச் சொல்லு. திருமணம் முடிஞ்ச கையோடு என் புனே சொத்துக்களை உன்பெயரில் மாத்திடப் போறேன்'னு என்னிடம் சொன்னான். அதேபோல் திருமணத்தை போன மார்ச்சில் திருப்பதியில் ஏற்பாடு செஞ்சோம். கல்யாணத்துக்கு அவன் மட்டும் தனியா வந்தான்.

அப்பா, அம்மா இறந்ததால் தன் சொந்த பந்தத்துக்கெல்லாம் சொல்லலைன்னு சொன்னான். கல்யாணமும் நடந்தது. எங்க வீட்டில் 150 பவுன் நகைகளைப்போட்டு 15 லட்சம் தட்சணையாவும் கொடுத்தாங்க. இனிக்க இனிக்கப் பேசி என்னை எல்லாத்துக்கும் பணியவச்சான். கல்யாணமான பிறகு... "இனி நான் லண்டன் போகப் போறது இல்லை. இங்கேயே தங்கி பிசினஸை பார்க்கப்போறேன். முன்னாள் சி.எம்.மான ஓ.பி.எஸ்., ஏலக்காய் ஏற்றுமதி பிஸினஸுக்கு பார்ட்னரா கூப்பிடறார். அதுக்கு 40 லட்சம் கேட்கறார்'னு அவன் சொல்ல... அதையும் எங்க நிலத்தை அடமானம் வச்சிக்கொடுத்தோம். அதன் பிறகு அவனோட போக்கு சந்தேகப்படற மாதிரி இருந்தது. நாங்க விசாரிக்க ஆரம்பிச்சோம்.

அப்பதான் ஓ.பி.எஸ். குடும்பத்துக்கு இவனைத் தெரியாதுங்கிற விஷயம் தெரிந்தது. இதைப்பத்தி நாங்க பொன்குமரன்கிட்ட கேட்டோம். பதில் சொல்லாம மழுப்பிய பொன்குமரன் சொல்லாம கொள்ளாம புனேவுக்கு ஓடிப்போயிட்டான்.அதுக்குப் பிறகுதான் அந்த ஆளைப்பத்தின வண்டவாளமெல்லாம் எங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சது. அவன் பல பெண்களை மோசமான கோலத்தில் படம் எடுத்திருந்ததைப் பார்த்து ஆடிப்போய்ட்டேன். அந்த ஆல்பத்தை முழுசாப் பாக்கறதுக்குள்ள அதை எடுத்துட்டு ஓடிப்போய்ட்டான். என்னையும் இப்படி மோசமா படம் எடுத்திருப்பானோன்னு பயமா இருக்கு.

அவனை பிடிக் கும்வரை எனக்கு நிம்மதியே இல் லைங்க''’என்றார் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே. மேற்கொண்டு நடந்ததை நளினியின் அண்ணன் வெங்கட் ராமனே விளக்குகிறார்.

""அந்த பொன்குமரன் சொல்லிக்காம புனேக்கு ஓடிப் போனதால் நாங்க அவனைத் தேடிக்கிட்டு அவன் வீட்டுக்குப் போனோம். திடீர்னு நாங்க போனதால் திகைச்சுப்போய்ட்டான். அந்த வீட்டுச் சுவத்தில்... ஐந்து பெண்களோட அவன் திருமணக்கோலத் தில் இருக்கும் படம் தொங்குச்சு.
அதோட அவன் பல பெண்களிடம் நெருக்கமாக இருக்கும் படங்களும் அங்க ஆல்பத்தில் இருந்தது. இதைபத்தி யெல்லாம் நாங்க கேட்டதும்.. இதோ வர்ரேன்னு ஆல்பத்தோட ஓட்டம் பிடிச்சிட்டான். அக்கம்பக்க வாசிகளிடம் அவனைப் பத்தி நாங்க விசாரிச்சப்ப... அவனுக்கு எந்தத் தொழிலும் இல்லைங்கிறதும்... கடந்த 22 வருடமா அவன் புனேயில் வாடகை வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. பெரிய பிஸினஸ்மேனைப்போல் தன்னைக் காட்டிக்கொண்டு... இணையதளத்தின் மூலம் பெண்களை வளைத்து... அவர்களுடன் கொஞ்சநாள் வாழ்ந்து பணம் பறிப்பதுதான் அவனோட பிரதான தொழிலா இருந்திருக்கு.
இதையெல்லாம் சரியா தெரிஞ்சிக்காம எங்க தங்கை நளினியின் எதிர்காலத்தையும் ஏறத்தாழ 4 கோடி ரூபாயையும் அவனிடம் பறிகொடுத் திருக்கோம். இப்படிப்பட்ட பித்தலாட்டக் காரனை... சும்மாவிடக் கூடாதுன்னுதான் மதுரை தென்மண்டல ஐ.ஜி.யிடம் மனு புகார் மனு கொடுத்திருக்கோம்''’என்றார் ஆதங்கம் மாறாமல்.நளினியைப் போலவே 7 பெண்களை இணையதளத்தில் வலைவிரித்து வளைத்திருக் கிறான் பொன்குமரன். இவனது வலையில் சிக்கி... கடைசிநேரத்தில் தப்பி யிருக்கிறார் நாக்பூரைச் சேர்ந்த பெண்டாக்டர் நர்மதா. அவரிடம் தனக்கு லண்டனில் ஓட்டல் இருப்ப தாகச் சொல்லி ஏமாற்றி... நிச்சயதார்த்தம்வரை போயிருக் கிறான். அதற்கு முன்பே பல லட்ச ரூபாயை அதை இதைச் சொல்லி அவரிடம் வாங்கியும் விட்டான். அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் ஒரு பெண், டாக்டர் நர்மதாவிடம் போய், "போயும் போயும் இவனிடமா சிக்கினாய்? இவன் பயங்கர பிராடாச்சே.
இவனின் டுபாக்கூர் டயலாக்கில் சிக்கி ஏமாந்தவர் களில்... நானும் ஒருத்தி'’என விஷயத்தைப் போட்டுடைக்க... இதைக்கண்ட பொன் குமரன்... அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டான். தன்னை ஏமாற்றிப் பணம் பறித்த பொன்குமரனைத் தேடிக்கொண்டிருந்த டாக்டர் நர்மதா... அவன் மீது நளினி புகார் கொடுத்திருப்பதை அறிந்து... தானும் புகார் கொடுக்க ரெடி யாகிவிட்டார். இதேபோல் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் எஸ்.ஐ. ஒருவரையும் அவன் தன் வலையில் வீழ்த்தியிருப்பதாக தற்போது கூடுதலாக ஒரு தகவல் கசிய ஆரம்பித்திருக்கிறது.நளினியின் வழக்கறிஞரான சரவணகுமாரோ, ""நளினியைப் போலவே இந்தியா முழுக்க பல மாநிலங்களிலும் பல பெண்களை வளைத்து தனது திருவிளை யாடல்களை நடத்தியிருக்கிறான் பொன்குமரன். அவனைக் குற்றக்கூண்டில் ஏற்றாமல் ஓயமாட்டோம்''’ என்கிறார் ஆவேசமாக.ஐ.ஜி.கிருஷ்ணமூர்த்தி யோ, ""இன்ஸ்பெக்டர் பாண்டி யன் தலைமையில் ஒரு தனிப் படையை நியமிச்சி...., பொன் குமரனைப் பிடிக்க நடவடிக் கைகள் முடுக்கி விடப்பட்டிருக் கிறது.
அவனை விரைவில் மடக்கிவிடுவோம். அவன் பிடி பட்ட பிறகுதான் அவன் இன் னும் எத்தனைப் பெண் களை வீழ்த்தியிருக்கான்னு தெரிய வரும்''’என்கிறார் அழுத்தமாக.

மன்மத குருக்களுக்கு செருப்படி!

பெண்கள், பொதுமக்கள், அர்ச்சகர் சங்கத்தினர் அனைவரின் கோபப் பார்வைக்கும் உள்ளாகியிருக்கும் மன்மத குருக்கள் தேவநாதன், மீதான போலீஸ் கஸ்டடியை நீட்டிப்பு பெற்று விசாரித்தனர் சிவகாஞ்சி ஸ்டேஷன் காக்கிகள்.


அவனோ... ""காமம் கடவுள் கொடுத்த வரம். கருவறைக்குள் சல்லாபித்தால் சுபிட்சங்கள் சேரும் என்ற நம்பிக்கையாலும்... என் மீதான விருப்பத்தாலும்தான்... பெண்கள் தானாக என்னிடம் வந்து விழுந்தார்களே தவிர... நானாக யாரையும் வற்புறுத்தி செக்ஸில் ஈடுபடுத்தவில்லை''’என சொல்லிக் கொண்டிருந்தான்.தமிழகம் முழுக்க அந்த மன்மத குருக்களுக்கு எதிரான அலை வீசுவதை அறிந்த டி.ஜி.பி. ஜெயின், "அவனை விட்டுவிடாதீர்கள். தீர விசாரித்து கடுமையாக நடவடிக்கை எடுங்கள்'’என காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர் காக்கிகள். தேவநாதனை "செமையாய் கவனித்ததோடு'... அவனது கருவறைப் பார்ட்னர்களில் ஒருவர் என, ஏற்கனவே நாம் அடையாளம் காட்டியிருந்த பெண் புரபஸரான தாராவை அந்த தேவநாதன் முன் கொண்டுவந்து நிறுத்தினர்.



தாராவோ தேவநாதனை கண்டதும் "இந்தச் சண்டாளனால் என் வாழ்க்கையே இப்ப வீணாப் போயிடிச்சி. கோயிலுக்குப் போன என்னை... ஒருநாள் கருவறைக்குள் அழைத்து பலவந்தமா கெடுத்தான். அப்புறம் அந்தக் காட்சிகள் தன் செல்போனில் இருப்பதாச் சொல்லி மிரட்டியே... பலமுறை அதே கோயிலுக்கு வரச்சொல்லியும்... என் வீட்டுக்கே வந்தும்... உல்லாசமா இருந் தான். என்னை பலவந்தமா கெடுத்தவன்தான் இந்தப்பாவி''’என கதறினார்




இதேபோல் இன்னொரு கருவறைப் பார்ட்னரான நக்கீரனில் வாக்குமூலம் தந்த பூக்காரப்பெண் கலாவையும் கும்பகோணத்தில் மடக்கி அ

வரிட மிருந்தும் முதற்கட்டமாக தேவநாதன் தன்னைக் கெடுத்ததாக வாக்குமூலம் பெற்றனர். இதன் பின்னரே பல பெண்களை வலுக்கட்டாயமாகக் கெடுத்ததாக ஒத்துக்கொண்டான் தேவநாதன். இதையறிந்த காவல்துறை மேலிடம்... வழக்கை மாவட்ட குற்றப்பிரிவுக்கு உடனடியாக மாற்ற.. மூன்றாம்நாள் விசாரணையை மாவட்டத்துறை மேற்கொண்டது.அவர்கள் அவனை அதே மச்சேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பூஜைப்பாடலை ரெக்கார்டர் வாய்ஸில் ஒலிபரப்பும், சின்ன வடிவிலான எலக்ட்ரானிக் கருவியைக் கைப்பற்றினர். கிளுகிளு லீலைகளில் இருக்கும்போது இந்த வாய்ஸை ஒலிக்கவிட்டுவிட்டு... பக்திப்பரவசமாய் ஈடுபடுவானாம் தேவநாதன்.
அங்கு தனது சிருங்கார லீலைக்காட்சிகளை நடித்துக்காட்டிய அவனை... பாலாஜியின் செல்போன் கடைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குருக்களின் சைனா செல்போனையும்... அவனது செக்ஸ் காட்சிகள் பதிவான கம்ப்யூட்டரையும் கைப்பற்றினர். அப்போது நடந்த விசாரணையில் அவன், தான் எடுத்த கிளுகிளு படங்களை இணையதளங்க

ளுக்கு விற்க... பேரம் நடத்தியதையும் ஒப்புக்கொண்டிருக்கிறான். அதையும் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் பட்டியலிட்ட எட்டு பெண்களையும் ஏறத்தாழ மடக்கிவிட்ட காக்கிகள் அவர்களிடம் வாக்குமூலமும் வாங்கி வருகிறார்கள்.இதற்கிடையே திங்கட்கிழமை மாலையோடு தேவநாதனின் கஸ்டடி காலம் முடிந்ததால்... அவனை அன்று மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் ஒன்றாவது கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர். அதற்கு முன்பாகவே பத்திரிகையாளர்களும்... மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மகேஷ், ஜெஸி போன்றவர்களுடன் ஏராளமான பெண்களும் திரண்டிருந்தனர். தேவநாதனுடன் அந்த ஜீப் வந்ததுதான் தாமதம்... ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த ஜீப்பை சுற்றிவளைத்தனர். 'தேவநாதனை வெளியே விடாதே... போலீஸே தேவநாதனைத் தூக்கில் போடு...' என்பதுபோன்ற கோஷங்களுடன்... ஜீப்பில் இருந்து இறங்கிய தேவநாதன் மீது... சாணியையும்... பிய்ந்த செருப்புகளையும்... துடைப்பத்தையும் சரசரவென அவர்கள் வீச... தேவநாதனின் முகமெல்லாம் சாணி.
திகைத்துப்போன காக்கிகள் பெண்களைத் துரத்த முயல... எரிமலையான பெண்கள் போலீஸை நெட்டித்தள்ளினர். போலீஸ் அவர்களை அடித்து விரட்ட முயன்ற நொடியில்... வேகமாக ஓடிவந்த டி.எஸ்.பி. சமுத்திரக்கனி “""யாரையும் அடிக்காதீங்க. வேனில் ஏத்துங்க''’என காக்கிகளுக்கு உத்தரவிட்டார். பெண்களை மடக்கி வேனில் ஏத்தும் சமயத்தில் தேவநாதனை மாஜிஸ்திரேட்டிடம் பாதுகாப்பாகத் தூக்கிக் கொண்டு ஓடினர் காக்கிகள். கோர்ட் அறைவரை செருப்புகளும் துடப்பக் கட்டைகளும் வந்து விழுந்தன. கொஞ்சம் அசந்திருந்தாலும் அந்த பெண்கள் சேனை, அந்த மன்மத குருக்களைப் பீஸ் பீஸாக்கியிருக்கும். மாஜிஸ் திரேட்டோ, தேவநாதனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே வேனில் ஏற்றப்பட்ட பெண்களை ஸ்டேஷன்வரை அழைத்துச் சென்று அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக வழக்கைப் பதிவு செய்துவிட்டு உடனே ரிலீஸ் செய்தனர் காக்கிகள். பெண்களின் எழுச்சியான எதிர்ப்புணர்வைக் கண்டு காக்கி களே திகைத்துப்போயிருக்கிறார்கள்.மன்மத குருக்கள் தேவநாதனை ஒருவேளை... சட்டமே நழுவவிட்டாலும் பெண்ணினம் விடாது போலிருக்கிறது.

திருமா அமைக்கும் புதிய கூட்டணி!

""ஹலோதலைவரே.. .. சென்னை ஏர்போர்ட்டில் சி.பி.ஐ. பொறியியல் கஸ்டம்ஸ் அதிகாரிகள்சிக்கி, இப்ப கண்டிஷன் பெயிலில் வெளியே வந்திருக்கிற விஷயம்தெரிஞ்சதுதான்.''
""ஏர்போர்ட் கஸ்டம்ஸில் லஞ்சப் பணமா பல கோடி ரூபாய் புழங்கி யிருக்குதாமே?''
""ஆமாங்கதலைவரே.. வெளியே தெரியாத இன்னொரு லஞ்ச விவகாரம் பற்றி சொல்றேன்.கும்மிடிப்பூண்டி பகுதியில் மார்வாடிகள் நடத்துற இரும்புத் தொழிற்சாலைகள்நிறைய இருக்குது. தங்களுக்குத் தேவையான இரும்பு ஸ்கிராப்களை டன் கணக்கில்இறக்குமதி செய்றாங்க. இதற்கு கலால் வரி அதிகம். ஆனா, மத்திய கலால்துறைஅதிகாரிகளை செமத்தியா கவனிச்சிடறதால, வரி கட்டாமலேயே பல டன்களை இறக்குமதிபண்ணிடுறாங்க. போன வருஷம் ஒரு தொழிலதிபருக்கு வந்த ஸ்கிராப்களோடுவெடிகுண்டும் இருந்தது. இதற்காக கைது செய்யப்பட்ட அவர், தனக்கு வேண்டியகலால் அதிகாரிகள் தயவால் தப்பிச்சிட்டார்.''
""கஸ்டம்ஸில் கோடிகளில் லஞ்சம் புழங்குற மாதிரி இங்கும் புழங்குமே!''
""கலால்ஏரியாவில் இன்னொரு விஷயமும் புழங்குது. இரும்புத் தொழில் மார்வாடிகள்பலரும் தமிழ் சினிமாவில் ஃபைனான்ஸ் பண்றாங்க. இந்த உபதொழில் மூலமாசினிமாவில் உள்ள பிரபல நடிகைகள் நல்லா பழக்கமாயிடுறாங்க. கறார் காட்டும்சில கலால் அதிகாரிகளுக்கு நடிகைகளை நட்புறவாக்கி, தங்கள் இரும்புத்தொழிலைஸ்ட்ராங்க் பண்ணிடுறாங்க. கஸ்டம்சுக்குள் நுழைஞ்ச சி.பி.ஐ.கலாலுக்குள்ளும் நுழைஞ்சா பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளியே வருமாம்.''
""அரசியல் வட்டாரத்தில் என்ன பரபரப்பு தகவல்?''
""தி.மு.க.கூட்டணியில் நீடித்தாலும் சில நெருடல்களோடுதான் இருக்குது விடுதலைச்சிறுத் தைகள் கட்சி. சட்டமன்றத் தேர்தலில் மாயாவதி யின் பகுஜன் சமாஜ்கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான ரகசிய முயற்சியாக அந்தக்கட்சியின் எம்.பியான அம்பேத் ராஜனோடு திருமாவளவன் பேச்சுவார்த்தைநடத்தியிருக்கிறாராம். சிறுத்தைகளுடனான கூட்டணி மூலம் தமிழ்நாட்டில்பகுஜன் சமாஜ் கட்சிக்கு நல்ல அடித்தளம் உருவாகும்னு திருமா சொன்னதைமாயாவதி தரப்பும் யோசிக்க ஆரம்பித்திருக்குதாம்.''



பத்மலட்சுமி மீண்டும் நி்ர்வாண போஸ்!


கர்ப்பமாக இருக்கும், சல்மான் ருஷ்டியின் மாஜி மனைவி பத்மா லட்சுமி ஒரு பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொணட்வர் மாடல் பத்மா லட்சுமி. தற்போது இவர் 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். சல்மான் ருஷ்டியின் மனைவியான இவர் கடந்த 2007ம் ஆண்டோடு ருஷ்டியை விட்டுப் பிரிந்து விட்டார்.இந்த நிலையில், பேஜ்சிக்ஸ் என்ற பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

முழங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இந்த போஸ் உள்ளது.இவர் மாடலிங்குக்காக நிர்வாண போஸ் தருவது இது முதல் முறையல்ல என்றாலும கர்ப்பமாக இருக்கும்போதும் மாடலிங் போஸ் தந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்தப் பத்திரிகையின் உள்பக்கம் இடம் பெற்றுள்ள இன்னொரு புகைப்படத்தில், மைலி சைரஸ் வானிட்டி பேர் பத்திரிகைக்கு கொடுத்த குஜால் போஸை காப்பி அடித்து அதேபோல போஸ் கொடுத்துள்ளார் பத்மா.இதுகுறித்து பத்மா கூறுகையில், நிர்வாணத்தின்போது நான் அழகாக இருப்பதாக உணர்கிறேன்.

உடைகள் அணிந்திருக்கும்போது அதற்கு ஒரு பெயர் வந்து விடுகிறது. ஆனால் நிர்வாணம் அப்படியல்ல. நம்மை அப்படியே வெளிக்காட்டும் முக்கிய குறியீடாக நான் கருதுகிறேன். நிர்வாணத்தின் மூலம் மட்டுமே நம்மை அப்படியே வெளிக்காட்ட முடியும் என்கிறார்.39 வயதாகும் பத்ம லட்சுமி, தனது தற்போதைய வாழ்க்கை குறித்து கூறுகையில், எனது வாழ்க்கையை மீண்டும் ஆக்கப்பூர்வமான பாதையில் செலுத்திக் கொண்டு வருகிறேன்.

என்னைப பொறுத்தவரை நான் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன் என்றார்.சரி பத்ம லட்சுமியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் தந்தை?. அந்தக் கேள்விக்கு பத்மா லட்சுமியே இன்னும் பதில் அளிக்கவில்லை, பிறகு சொல்கிறேன் என்று கூறிச் சிரிக்கிறார்!.

11000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்???

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு கடுகதி வேகத்தில் அடையாள அட்டைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.
குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளாராம், இந்த அறிவுறுத்தல் யாரிடம் இர்ந்து தேர்தல் ஆணையாளருக்கு பிறப்பிக்கப்பட்டது என இதுவரை தெரியவில்லை.
சுமார் 2,000 பெண் போராளிகள் உள்ளிட்ட 11,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் 17 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மூன்று முகாம்கள் நிரந்தர தடுப்பு முகாம்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது இவ் வேளையில் வோட்டுக்களைப் பெறும் நோக்கில் ரஜபக்ஷ பிரதர்ஸ் தமது நாடகத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.
தடுப்பு முகாம்களில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கம் பதிலளிக்க உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் எந்த மாதிரியான சூழலில் வாக்களிக்கப்போகின்றார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையே

நவாலி வயல்வெளி வெள்ளத்தில் இளம் பெண்ணின் சடலம்

நவாலி வயல்வெளியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலையுண்டதாகக் கருதப்படும் இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. களையோடை அம்மன் ஆலயத்திற்குச் சமீபமாக பிரதான வீதியோரமாகவுள்ள வயல் வெள்ளத்தில் நாக்கு வெளியே தள்ளிய நிலையில் சடலம் காணப்பட்டதாக அப்பகுதிக்குச் சென்ற விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.
மஞ்சள், சிவப்பு நிற பஞ்சாபி உடை அணிந்து கையில் கௌரி காப்பு நூலும் கட்டியிருந்த அப்பெண் சுமார் 30 வயது மதிக்கத் தக்கவர் என்று கூறப்பட்டது.
நெற்றியிலும் முகத்திலும் கடியுண்ட காயங்களும் காணப்பட்டன என்றும், காதிலிருந்து தோடுகள் அறுத்தெடுக்கப்பட்ட அடையாளங்கள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அங்கு திரண்டு நின்ற மக்கள் எவரும் சடலத்தை அடையாளம் காட்டவில்லை.
அந்தப்பெண் வேறிடத்தில் கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் அப்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் கருதுகின்றனர். சம்பவ இடத்தில் மல்லாகம் பதில் நீதிவான் என்.
தம்பிமுத்து மரண விசாரணை நடத்தியதை அடுத்து பெண்ணின் சடலம் யாழ். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இத்தாலி பெண்மணி இந்தியாவுக்கு அன்னையாகலாம்; ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு அம்மாவாகலாம்; என் தலைவன் எனக்கு அண்ணனாகக் கூடாதா? சீமானுடன் ஒரு நேர்காணல்

வீர வணக்க நாள் நிகழ்வுக்காக கனடா போன ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சீமான், அங்கே கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். ‘பிரிவினையைத் தூண்டும் விதமாக சீமான் பேசினார்’ என கனடா அரசு குற்றம்சாட்ட… இன்னொரு புறமோ இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கனடாவுக்கு விசிட் அடிக்கும் நேரத்தில், தேவையற்ற சலசலப்புகளைத் தடுக்கும் விதமாகவே சீமான் திருப்பி அனுப்பப்பட்டதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது. இந்நிலையில் நாம் சீமானை சந்தித்தோம்.
”கனடாவில் அப்படி என்னதான் பேசினீர்கள்?”

”வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி நாளாகக் கொண் டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும் ‘ஈழமுரசு’ என்னை அழைத்திருந்தது. இதற்கிடையில் 25-ம் தேதி கனடா மாணவர் சமூகம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின நிகழ்வில் நான் கலந்துகொண்டு பேசினேன். அங்கே பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் ஒரு வார்த்தையைக்கூட நான் உச்சரிக்கவில்லை. ‘தந்தையர் நாடாக நாம் நினைத்த இந்தியாவும், உலக நாடுகளும் ஈழ தேசத்தை அவமான சாட்சியாக்கிவிட்டன.
நாம் எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இனி யாரையும் நம்பி பலனில்லை. நமக்கான சுதந்திரம், நம் கையில்தான் இருக்கிறது. அதற்காக யாரும் உயிரைக் கொடுக்க வேண்டாம்; உணர்வையும் ஒற்றுமையையும் கொடுத்தால் போதும்!’ என்பதுதான் அங்கே நான் வைத்த பிரதான வாதம்.
இதில் எங்கே இருக்கிறது பிரிவினைக்கான சதி? இத்தனைக்கும் கனடா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அங்கேயும் ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை இந்திய தேசம் கற்றுக் கொடுத்து விட்டதோ என்னவோ… அதனால்தான் காரணமே இல்லாமல் என்னை கைது செய்து, மாவீரர் நாளில் நான் பேச முடியாதபடி தடுத்து விட்டார்கள்.”

”கைது நடவடிக்கை மிகக் கடுமையாக

இருந்ததாகச் சொல்லப்படுகிறதே?”


”மாணவர் சமூக அமைப்பு விழாவில் நான் பேசிவிட்டு வந்த அடுத்தநாள் அதிகாலை என்னை எழுப்பியது கனடா நாட்டு போலீஸ். ‘இந்தியாவை பழித்துப் பேசியது ஏன்?’ எனக் கேட்டார்கள். அதை நான் மறுத்ததும், ஏதோ ஏழெட்டு கொலைகளை நிகழ்த்திய குற்றவாளியைப் போல் கையில் விலங்கிட்டு, பின்புறமாக கட்டி ரொம்ப தூரத்துக்கு என்னை நடத்திக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு இந்திய அதிகாரியான சிங் ஒருவர் என்னை விசாரித்தார்.
பல கேள்விகளைக் கேட்ட அந்த அதிகாரி, ‘ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்துகிறீர்களா?’ என்றார். ‘உங்கள் சீக்கிய சமூகத்தினர் இந்திரா காந்தியைக் கொன்றார்களே… அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா?’ எனக் கேட்டேன். இதனால் அந்த சிங்குக்கு கோபம் வந்து விட்டது. உடனே நானும் தலைவர் பிரபாகரனும் இருக்கும் படத்தைக் காட்டி, ‘இவர் உன்னோட பிரதரா?’ எனக் கேட்டார். ‘ஆமாம்… தமிழ் ரத்தம் ஓடும் அனைவருக்குமே அவர் சகோதரர்தான்!’ எனச் சொன்னேன். அடுத்தடுத்தும் ரெண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக என்னைக் குடைந்து கொண்டே இருந்தார். எதையாவது என் வாயிலிருந்து பிடுங்கி, என்னை நிரந்தரமாக கனடா சிறை யிலேயே சிக்க வைத்து விட வேண்டும் என்பதுதான் அவருடைய திட்டமாகத் தெரிந்தது.”


”பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், மறைந்து விட்டதாகவும் மாறி மாறிக் கிளம்பும் செய்திகளால், உலகத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே? இதனால்தான், தமிழகத் தலைவர்கள் பலரும் வெளிநாடுகளில் தங்ளுக்குள் சங்கடம் நேரலாம் என்றெண்ணி இது போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை என்றும் கருத்து நிலவுகிறதே?”

”வெளிநாடுவாழ் தமிழர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான் அவர்களிடையேயான எழுச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பன்மடங்காகப் பெருகியிருக்கிறது. வெளிநாடுகளில் பரவியிருக்கும் டக்ளஸ், கருணா போன்ற வர்களின் ஆதரவாளர்கள்தான் தேவையற்ற குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து வருகிறார்கள். பிரபா கரனும், அவர் தலைமையிலான தேசிய ராணுவமும் அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும் – அதையே நம்பும் உலக நாடுகள், புலிகள் அமைப்பு மீதான தடையை இப்போதாவது நீக்க வேண்டியதுதானே? இல்லாத இயக்கத்துக்கு ஏன் தடை நீட்டிக்கிறீர்கள்? தரிசு என்று சொல்லிக்கொண்டே, அந்த நிலத்துக்கு வேலி போடும் முரண்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏன் கடைப்பிடிக்கின்றன? தலைவர் பிரபாகரன் நிஜமாகவே கொல்லப்பட்டிருந்தால், அவருக்குரிய வீர வணக்கத்தை தமிழர்கள் தைரியமாக நிகழ்த்தி இருப்பார்கள்.”

Wednesday, December 2, 2009

ஆசினுடன் வேகமாக நெருங்கும் சல்மான்

ண்டன் ட்ரீம்ஸ் படத்தில் இணைந்து நடித்ததால் சல்மான் கானுக்கும், ஆசினுக்கும் கெமிஸ்ட்ரி செமத்தியாக வேலை செய்யத் தொடங்கி விட்டதாம். படப்பிடிப்பு முடிந்த போதிலும் ஆசினுடன் நெருங்கிப் பழகி வருகிறாராம் சல்மான். இதனால் காத்ரீனா கைபிடமிருந்து அவர் வேகமாக விலகி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆமிர்கானுடன் தனது முதல் இந்திப் படத்தை முடித்த ஆசின் அடுத்து சல்மான் கானுடன் ஜோடி போட்டு லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்தார்.இப்படத்தில் அஜய் தேவ்கனும் நடித்துள்ளார். படப்பிடிப்பின்போது அஜய் தேவ்கனுடன் நட்பானார் ஆசின். இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக கூறப்பட்டது.ஆனால் உண்மையில் சல்மான் கானுடன்தான் ஆசினுக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டு விட்டதாம்.

படப்பிடிப்பு முடிந்த பின்னரும் கூட இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்களாம்.இருவருக்கும் படத்தில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் கெமிஸ்ட்ரி ஏக போகமாக இருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.தற்போது இருவரது நட்பும் அடுத்த கட்டத்திற்குப் போய் விட்டதாம். அதாவது இருவரும் மிக மிக நெருக்கமாக பழகி வருகிறார்களாம்.இதுகுறித்து சல்மானுக்கு நெருக்கமானவர்கள் சிலர் கூறுகையில், சல்மான் கானும், ஆசினும் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக பழகி வருகிறார்கள்.லண்டன் ட்ரீம்ஸ் படத்திற்குப் பின்னர் இருவரும் நெருக்கமாகி விட்டார்கள். காத்ரீனை கைபை விட தற்போது ஆசின் மீதுதான் சல்மான் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

இருவரது நட்பும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக தெரிகிறது என்கிறார்கள்.தனது தனிப்பட்ட அனைத்து செயல்களுக்கும் சல்மானிடம்தான் ஆசின் ஆலோசனை கேட்கிறாராம். ஆசின் - சல்மான் நெருக்கத்தால் காத்ரீனா கைப் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

2வது படித்த போதே ஐ லவ்யூ சொன்னேன்! - விஷால்

நான் படிக்கிற காலத்திலிருந்தே தீராத விளையாட்டுப் பிள்ளைதான். இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே உடன் படித்த பெண்ணுக்கு ஐலவ்யூ சொன்னவன் நான் என்றார் நடிகர் விஷால்.விஷால் நடிக்கும் தீராத விளையாட்டு பிள்ளை படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது.
இந்தப் படத்தின் அறிமுக பிரஸ் மீட் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற விஷால், படத்தின் தலைப்புக்கான காரணத்தைக் கூறினார்:

"இந்தப் படம் என்னுடைய சொந்த வாழ்க்கைக் கதையா என்று நிறையபேர் கேட்கிறார்கள். அவர்களுக்கு எனது பதில், ஆம் என்பதுதான்.இப்படத்தில் வரும் சில சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. திரில்லர் படம்போல் இருக்கும். 3 கதாநாயகிகள் உள்ளனர். அவர்களில் யாரை நான் திருமணம் செய்கிறேன் என்பது சஸ்பென்ஸ் ஆக நகரும்.

பிளேபாய் கேரக்டர்தான் என்றாலும் செம இன்ட்ரஸ்டிங்காக சுவாரஸ்யமாக இருக்கும் படம். இதில் ஸ்ரேயா, ரீமாசென் போன்ற 3 நடிகைகளை நடிக்க வைக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் ஒவ்வொருத்தரும் தனக்கு முக்கியத்துவத்தை எதிர்பார்த்தனர். எனவேதான் புதுமுக நடிகைகளை நடிக்க வைத்தோம்.இந்தப் படம் முடித்ததும் நான் இமயமலை போகிறேன். இந்த விஷயத்தில் நான் ரஜினியைக் காப்பியடிப்பதாக சிலர் எழுதியுள்ளனர். அது உண்மையல்ல. அவரை நான் மதிப்பவன்.

ஆனால் அவரைக் காப்பியடிக்க வேண்டியதில்லை.இமயமலைக்கு போவது பிடிப்பதால் போகிறேன். ஒவ்வொரு படம் முடிந்ததும் இமயமலை போய் வருகிறேன். அது என் தனிப்பட்ட விஷயம். சில நேரங்களில் லொகேஷன் பார்க்கக் கூட போவேன் என்றார்.

நொடிக்கு ஒரு பைசா: கட்டணப் போரில் குதித்தது எம்டிஎன்எல்!

அரசுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் இ்பபோது 3 ஜி மொபைல் சேவைக்கும் நொடிக்கு ஒரு பைசா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லி, மும்பை நகரங்களின் தொலைபேசி மற்றும் செல்போன் சேவயை எம்டிஎன்எல்தான் கவனிக்கிறது. இங்கு 2 ஜி மற்றும் 3 ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது எம்டிஎன்எல். இப்போது தனியார் தொலைபேசி நிறுவனங்கள் ஒரு நொடிக்கு ஒரு பைசா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து எம்டிஎன்எல்லும் இந்த கட்டணப் போரில் குதித்துவிட்டது.
இந்த மாதம் முதல் எம்டிஎன்எல்லின் 2 ஜி மற்றும் 3 ஜி மொபைல்கள் உள்ளிட்ட அனைத்து செல்போன் சேவைகளுக்கும் ஒரு நொடிக்கு ஒரு பைசா கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மீண்டும் புதிதாக ஒரு இந்தியத் துரோகம்?: ஈழத் தமிழர்கள் மீது

ழத் தமிழர்களின் இத்தனை கால அவலங்களுக்கும் மூல காரணமாக விழங்கும் இந்திய ஆதிக்க சக்திஇ தற்போது ஈழத் தமிழர்களை மையப்படுத்திப் புதியதோர் துரோகத்தை அரங்கேற்ற முற்படுகின்றது.
கடந்த வாரத்தில் இந்திய உளவு நிறுவனமான றோவினால் தமிழக ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்ட செய்தி ஒன்று இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. கடந்த வார இறுதியில் ‘இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்’ என்ற தலைப்பில் ஜுனியர் விகடன் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ‘விழ விழ எழுவோம்; ஒன்று விழ ஒன்பதாக எழுவோம்’ என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் ‘இலங்கையில் மீண்டும் போர் மூளும்இ அதுவும் இந்தியாவின் துணையோடு’ என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில் என்று அந்த இந்தியப் பலிபீடத்திற்கு விடுதலைப் புலிகளை வலிந்து பதிவு செய்துள்ளார்கள்.
இந்தியா தமக்கு உதவும் என்ற நம்பிக்கையை ஈழத் தமிழர்கள் இழந்து வெகு காலமாகிவிட்டது. இறுதி யுத்த காலத்திலும் இந்தியா சிங்கள தேசத்துடன் இணைந்து நடாத்திய யுத்தத்தை நிறுத்துமாறு விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் இந்தியா கவனத்தில் கொள்ளவே இல்லை. ஈழத் தமிழர்களைப் பகடைக்காயாக்கி இலங்கைத் தீவில் தன் கரங்களை வலுப்படுத்தவே இந்தியா முனைந்தது. அதற்காக இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் பலி கொள்ளப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும்இ ஈழத் தமிழர்களின் பலம் அழிக்கப்பட்டதற்கும் இந்தியாவே பிரதான பாத்திரம் வகித்தது என்பதை அந்தப் பேரவலத்தை எதிர்கொண்ட ஈழத் தமிழாகள் என்றும் இந்தியாவை மன்னிக்கமாட்டார்கள்.
அந்த ஜுனியர் விகடன் இதழில் இந்தியாவின் தற்போதைய இந்த சிந்தனை மாற்றத்திற்கான காரணங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஈழத் தமிழர்களின் நலன் சார்ந்த எந்தக் காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை.’போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லைத்தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன.
இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்; போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும்’ என்ற இந்தியாவின் நான்கு சுயநல நோக்கங்களை சிறிலங்கா அரசு உதாசீனம் செய்ததன் காரணமாகவே இந்தியா மீண்டும் ஈழத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அச்சுறுத்தல் மூலம் சிங்கள தேசத்தை அடிபணிய வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவின் நான்கு கோரிக்கைகளுக்காகவும் ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திக் களம் இறங்க வேண்டும் என்ற சிந்தனையை தமிழீழ விடுதலைக்கான போராகச் சித்தரிப்பதற்கு இந்தியா முற்படுகின்றது.
தனது விருப்பங்களையும் மீறி சிங்கள தேசத்தில் பலம் பெற்றுவரும் சீன ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கான கருவியாக ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரத்தை இந்தியா கைக்கொள்ள முயற்சிக்கின்றது.’இந்தியாவின் யுத்தத்தையே நாம் நடாத்தினோம்’ என்று யுத்தம் முடிந்த பின்னர் சிறிலங்கா தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஈழத் தமிழினத்தின் இன அழிப்பிற்கு பின்பலமாக நின்ற இந்தியா இதற்கும் அதிகமான நன்றிக்கடனை எதிர்பார்க்க முடியாது என்பதே சிங்களத்தின் நிலைப்பாடாக உள்ளது. போர் முடியும்வரை இந்தியாவின் அத்தனை கோரிக்கைகளுக்கும் தலையாட்டி வந்த சிங்கள அரசுஇ இப்போது சீனாவின் குரலுக்கும்இ விருப்பங்களுக்கும் அதிக மதிப்புக் கொடுத்து வருகின்றது.
கடல் நீர் எல்லை ஆதாரச் சட்டத்தைக் காரணம் காட்டிஇ அந்தமான் முதல் முல்லை தீவு கடல் பகுதியைக் கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க மறுக்கும் ராஜபக்ஷோ மற்ற மூன்று கோரிக்கை களையும்கூட மறுத்து விட்டார். இதனால்இ இலங்கையுடனான உறவில் இந்தியாவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது. அதேசமயம்இ சீனாவுடனான உறவை இலங்கை வலுப்படுத்தத் தொடங்கியிருப்பதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றது இந்தியா. அத்துடன் இந்திய நலன்களை மீறி அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டொலர்களையும்இ நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா.
அதோடுஇ வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு இராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும்இ வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு இராணுவத் தளத்தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப்பான ‘றோ’ மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.
இந்தியாவின் வட திசையில் இருக்கும் சீனா இந்தியாவின் மேற்கில் அமைந்துள்ள பாகிஸ்தானில் மூன்று இராணுவத் தளங்களையும் கிழக்கில் அமைந்துள்ள பங்களாதேஷில் இரண்டு இராணுவத் தளங்களையும் ஏற்கெனவே நிறுவியிருக்கிறது. ஈழத் தமிழர்களைப் பகைத்துக் கொண்டதன் மூலம் இந்தியா தெற்கிலும் செல்வாக்கிழந்த நிலையில் உள்ளது. ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பிற்குத் துணை போனதன் மூலம் ஈழத் தமிழர்களின் பலமாக விழங்கிய விடுதலைப் புலிகள் சிங்கள தேசத்தால் தோற்கடிக்கப்பட்டார்கள். இந்தியச் சதியினால் விடுதலைக் கனவுகளோடு உயிர் கொடுத்த தமிழினம் முள்ளிவாய்க்காலில் உயிர் பறிக்கப்பட்டு விட்டார்கள். தமிழீழ ஆன்மா இந்தியச் சதியால் மீண்டும் சிங்கள தேசத்திடம் அடிமைப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது இந்திய நட்புக் கரம் தறிக்கப்பட்டுவிட்டதனால் தெற்கிலும் சீனா பலமாகக் கால் பதிக்கின்றது.
கச்சத்தீவில் தனது இராணுவத் தளத்தை அமைக்கப் போகிறது. தற்போது சிங்கள தேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலும் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கப் போகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் மகிந்த ராஜபக்ஷேவும்இ சரத் பொன்சேகாவும் களம் இறங்கிய நிலையில் இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியாவுக்கு சாதகமான நிலை ஏற்பட வாய்ப்பில்லை. இந்த இருவரில் யாரையும் ஆதரிக்கும் நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை. வருகின்ற பேயிலும் பார்க்கப் பழகிய பேயை வைத்துக் காய் நகர்த்தும் நிலையை எடுத்துள்ள இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதற்குப் பயன்படுத்த முனைகின்றது. தமிழீழ மக்களது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத முயற்சியாகவே இதனை நோக்கலாம்.
யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு 78 வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க மறுத்ததைக் கவனத்தில் கொண்டால் இந்தியக் கனவுகள் ஈடேறும் சாத்தியம் கிடையாது. ஈழத் தமிழர்களின் எஞ்சியிருக்கும் ஒரே சக்தியான புலம்பெயர் தமிழர்கள் தங்கள் போராட்டங்களை விரைவு படுத்துவதன் மூலம் சீனாவின் மேலாதிக்க விரிவாக்கத்தை விரும்பாத மேற்குலகின் ஆதரவு தவிர்க்க முடியாததாகிவிடும். இந்தியா விடும் றீலை நம்பி ஈழத் தமிழர்கள் மீண்டும் பலிபீடத்தை நோக்கிச் செல்லாமல் மனிதாபிமானம் கொஞ்சமாவது மீந்திருக்கும் மேற்குலகின் கரங்களைப் பற்றி நடப்பதே ஈழத் தமிழர்களுக்கு நல்ல தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்பதே யதார்த்தம்.
-சி. பாலச்சந்திரன்

தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும்: யாழிலிருந்து சனீஸ்வரன்

கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும். இவ்வாறு யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு அனுப்பியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சனீஸ்வரனின் ஆய்வறிக்கையின் முழுவடிவம்:
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் (பாபா கவுண்டிங் ஸ்ரைல்) கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். குருதி குடித்தவன் ஒரு அணியில் குடிக்கச் சொன்னவன் மறு அணியில்.
மான மறத் தமிழச்சிகளின் மானங்கெடுத்தவன் ஒரு அணியில் கெடுக்கச் சொன்னவன் மறு அணியில். எங்கள் செஞ்சொலைக் குழந்தைகளை கொன்று குவித்தவன் ஒரு அணியில் ஏவிவிட்டவன் மறு அணியில். சபாஷ் சரியான போட்டி. தமிழனை வெங்களமாடி வென்றவன் யார்? இனி சிங்களம் இதனைத் தீர்மானிக்கும். தமிழனை யார் அதிகம் கொன்றானோ அவனுக்கு வெற்றி வாகை கிடைக்கும். இனவாதம் அவனுக்கு பட்டாபிஷேகம் நடாத்தும். காக்கை வன்னியன்களும் எட்டப்பன்களும் யார் வெல்கிறானோ அவன் பக்கம் போய் ஒண்டிக்கொண்டு அவன் தின்று வீசிய எலும்பை நக்கி உண்டு மகிழ்வர். அவன் கால் கழுவி கிடைத்த நீரை தீர்த்தம் என்று உண்டு மகிழ்வர்.

அவனே தமிழனின் துயர் தீர்க்க வந்த வீர புருஷன் என்று கோஷமிடுவர்.
ஓரிரண்டு தமிழருக்கு வேலை வாய்ப்பு, சில வாசிகசாலைகளுக்கு கொஞ்சம் காசு. ஆசீர்வதிக்கப்பட்ட சில வீதிகளுக்கு தார். சில கோவில்களுக்கு நிதி, என்று எதிரியினால் பிச்சையிடப்பட அதை தாங்களே வாங்கி வந்ததாக இவர்கள் பீத்திக்கொள்வர். பத்திரிகைகளில் நன்றியுடன் பாராட்டுகிறோம் என்று விளம்பரம் போடச் சொல்வர். இவர்களும் போடாவிட்டால் உயிர் போய்விடும் என்ற அச்சத்தில் போடுவர். எங்கள் குருதியிலும் எங்கள் ரணத்திலும் எங்கள் அவலத்திலும் சிங்களம் கொண்டாடும் மாபெரும் தேர்தல் திருவிழா. தமிழனை யார் கூட அடித்தான் என்று சிங்களவன் வாக்கிடப் போகிறான். அவலங்களை அதிகம் புரிந்தவன் யார் என்று சிங்களம் பட்டிமண்டபம் நடாத்தும். ஒரு அணி மறு அணியை தாக்குவதற்கு தமிழன் கருப் பொருளாவான். தமிழச்சிகளின் மானம் சிங்களத்தின் தேர்தலுக்கு வித்திடும். எது எப்படியோ வெல்லப்போகிறவன் விக்கிரமபாகு கருணாரட்ண போன்றதொரு இனவாதம் பேசாத சிங்களவனாக இருந்தால் சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை.

அவர்கள் தமிழரை தமது சகோதரர்களாகவே எண்ணுகின்றனர் என்று தமிழர் தரப்பு நம்பலாம். முடியுமா? முடியாது. தமிழனை யார் கூட அடித்தான் என்று பார்க்கும் தேர்தலாகவே இது இருக்கப் போகின்றது. இப்போது தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது. தேர்தலைச் சந்தித்து அறிவாயுதம் கொண்டு எதிரியை வீழ்த்தப் போகின்றதா? பொது வேட்டபாளரொருவரை நிறுத்தி வாக்குகளைப் பிரித்து தமிழர் தனித்துவத்தை நிலைநிறுத்தப் போகின்றதா? தமிழர் தரப்பு தீர்மானிக்க வேண்டிய விடயம் இது. தமிழன் வாக்கிடாததால் மகிந்த என்னும் கொடுங்கோலன் வந்தான். அவனையும் சகோதரக் கம்பனிகளையும் வீட்டுக்கனுப்ப வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்காது என்றே நினைக்கின்றேன்.
எது எப்படியோ எங்கள் விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயநலமின்றி சிந்தித்து தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க வேண்டிய நிலையில் இருப்பதை எவரும் மறந்துவிட முடியாது. கூட்டமைப்பினர் அற்ப சொற்ப சலுகைகளுக்கு மயங்காது கட்டுக் கோப்புடன் செயற்பட்டு வரலாற்றில் இடம் பிடிப்பார்களா? முள்ளி வாய்க்காலில் கிடைத்த அவலத்திற்கு தமிழர் தரப்பு தரும் பதிலாக இத்தேர்தல் அமையப் போகின்றது. கொன்றவனை கொல்லச் சொன்னவனும் மோதிக் கொள்வார்கள். ஒருவன் மீது மற்றவன் புழுதிவாரித் தூற்றுவார்கள். ஒருவன் செய்த கொடுமைகளை மற்றவன் வெளிக் கொணருவான். போர்க்குற்றங்கள் வெளிவரும். உலகம் விழித்துக் கொள்ளும். தமிழன் ஆயுதத்தால் சாதிக்க முடியாதவற்றைக்கூட அறிவால் சாதித்துக் கொள்வான்.
எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும் இதனை தமிழர் அறிவர்.
பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் …… யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

வெளிநாட்டில் இருந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளன! கைப்பற்றப்பட்ட புலிகளின் கப்பல்கள் மூன்று அடுத்த சில நாட்களில் கொழும்பை

புலிகளின் தலைமை கடந்த மே மாதம் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அழிக்கப்பட் நிலையில், புலிகள் இயக்கத்தின் தலைவர் என தன்னைதானே அழைத்துவந்த குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் (கே.பி) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்காசிய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு வரப்பட்டது நீங்கள் அறிந்ததே.தொடர்ந்து புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் கே.பி என்பவரே புலிகளுக்காக கடந்த காலங்களில் ஆயுதங்களை கொள்முதல் செய்து அனுப்பி வந்தவர் என்பதுடன் புலிகளின் சரக்கு கப்பல்கள் பலவற்றை வைத்து போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.
இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட 10 கப்பல்கள் வரை இலங்கை கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்ட நிலையில், கே.பி. வழங்கிய தகவலின் பிரகாரம் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்கள் பல சர்வதேச பொலிஸாரின் துணையுடன் முடக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் முடக்கப்பட்ட மேற்படி புலிகளின் சொத்துக்களில் 3 கப்பல்கள் சர்வதேச நாடுகளின் துணையுடன் அடுத்த சில நாட்களில் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக முக்கிய அரச வட்டார தகவல்களில் இருந்து தெரியவருவதுடன், அடுத்து வரும் வாரங்களில் ஆசிய நாடுகளில் வைத்து முடக்கப்பட்ட புலிகளின் சொத்துக்கள் பல அம்பலத்திற்கு வரவுள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tuesday, December 1, 2009

தமிழர்களின் பாரம்பரியமான திருக்கோணமலை கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளது

திருக்கோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயாளர் பிரிவு வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளது. இங்கு அகஸ்தியர் ஸ்தாபனம் இருந்தமைக்காண அடையாளம் எதுவும் இல்லா நிலையில் இவ்வகற்றல் இடம் பெற்றுள்ளது. இதனால் கங்கு வேலி பிரதேச மக்கள் பலத்த அச்சமடைந்துள்ளனர். இந்து மக்களுக்கு விடுக்கப்படட சவாலாக இது காணப்படுகின்றதா அல்லது நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து இச் செயற்பாடு செய்யப்பட்டதா என்ற அச்சம் நிலவுகின்றது.

புராண வரலாற்றைக் கொண்டது அகஸ்தியர் ஸ்தாபனம். அகத்திய குறுமுனி இங்கு வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. இந்து சமய தத்துவங்களின் அடிப்படையில் சிவபெருமானின் திருமண நிகழ்வுக்காக எல்லோரும் கைலையில் கூடிய பொழுது கைலாயமே ஒரு புறம் சரிந்தது. இதனை நிவர்த்தி செய்ய அகத்தியரை தென்பகுதிக்கு சிவபெருமான் அனுப்பி வைத்தார். இது வரலாறு கூறிய பாடம். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழர்களின் பூர்வீகம் இல்லாது ஒழிப்பதை அரசாங்கம் நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இப்பிரதேசங்களில் பௌத்த அதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பல தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர். தமிழர்களின் எச்சங்கள் அழிக்கப்படுகின்றது. 2006 ஆம் வருட இடப்பெயர்வின் போது மற்றொரு வரலாற்றுப் பெருமை மிக்க சம்பூர் பத்தரகாளி அம்மன் ஆலயம் அழிக்கப்பட்டது. அப்போது இப்பிரதேச மக்கள் மெல்ல மெல்ல இடம் பெயர்ந்து மட்டக்களப்பு வரை சென்று தமது உயிர்களைப் பாதுகாத்திருந்தனர். இந் நிலையில் கூட கங்கு வேலி பிரதேசத்து மக்கள் இடம் பெயராமல் அருகில் இருந்த நிலாப்பொள என்னும் சிங்கள கிராம மக்களின் ஆதரவுடன் தங்கியிருந்தனர். அப்போது எழாத அச்சம் இப்போது கங்குவேலிமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்கள் கூட அகஸ்தியர் ஸ்தாபனத்திற்கு வந்து போக இயலாத நிலையில் இருந்தனர். வைகாசி மாதம் யுத்தம் முடிவடைந்ததும் சிங்கள மக்கள் தடையின்றி தமிழர்களின் பிரதேசங்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டதாக அரசு பிரச்சாரம் செய்தது. இதனைத் தொடர்ந்து சிங்கள மக்கள் உல்லாசம் அனுபவிக்க தமிழ் பிரதேசங்களுக்கு சென்று வருவதை பொழுது போக்காக கொண்டுள்ளனர் இந் நிலையில் இத் தாபனம் அழிக்கப்பட்டுள்ளது. மாவீர் தினத்தின் பரிசாக இச்செயற்பாடு இடம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. இம்மாதம் 20 ஆம் திகதி அன்று பிரதேச வாசிகள் இப்பகுதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். 28ம் திகதி சனிக்கிழமை இங்கு சென்ற ஒருவர் ஸ்தாபனம் அகற்றப்பட்டிருந்ததைக் கண்ட அதிர்ச்சி அடைந்து இத்தகவலை பிரதேச வாசிகளுக்கு தெரிவித்தார். இதனைக் கேட்ட பிரதேச வாசிகள் கூட்டமாக சென்று அவ்விடத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினர்.


திட்டமிடட முறையில் இச் செயற்பாடு செய்யப்பட்டதாகவே கதப்படுகின்றது. இவ் விடயம் சம்பந்தமாக யாரிடமும் முறையிட கூட முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். அகத்தியர் ஸ்தாபனத்தை அழித்ததைத் தொடர்ந்து தமது கிராமமும் அழிக்கப்படுவதற்கு திட்டமிடப்படலாம் எனக் கருதிய நிலையில் இவர்கள் காணப்படுகின்றனர்.

ரஜினி மகள் தயாரித்த கோவா படத்துக்கு இடைக்காலத் தடை

டிகர் ரஜினி காந்த்தின் மகள் தயாரித்துள்ள 'கோவா' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.வரும் டிசம்பர் 11ம் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்குமாறு சௌந்தர்யா ரஜினிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்.ஏ.பி.சி. பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் மணியன் என்பவர் செளந்தர்யாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், "அபிராமபுரத்தில் உள்ள ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த், 2007ம் ஆண்டு என்னை சந்தித்து கோவா படம் தயாரிப்பதற்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, எனது நிறுவனத்தின் சார்பில் அவருக்கு 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 லட்சம் ரூபாயும், 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 60 லட்சம் ரூபாயும் கடனாகக் கொடுத்தேன்.

இந்த கடனை 24 சதவிகித ஆண்டு வட்டியில் திருப்பி கொடுப்பதாக அவர் எனக்கு கடனுறுதிப் பத்திரம் எழுதித் தந்தார். கோவா படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்தக் கடனை திரும்பச் செலுத்தி விடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.இது தவிர, என்னுடைய சொந்த பணத்திலிருந்தும் அவருக்கு 50 லட்சம் ரூபாய் தந்தேன். இந்த மூன்று கடனையும் அவர் எனக்கு திரும்பச் செலுத்தவில்லை. எனவே, கடனை திரும்பக் கேட்டு செளந்தர்யா ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதினேன்.இதற்கு பதில் அளித்த ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இயக்குனர் லதா ரஜினிகாந்த், இந்த பணத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் திரும்பத் தந்துவிடுவதாக கூறியிருந்தார்.ஆனால், அவர்கள் தெரிவித்திருந்தபடி பணத்தை எனக்கு திரும்பத் தரவில்லை.

இந்த நிலையில், அந்த நிறுவனம் தயாரித்த கோவா படத்தை விரைவில் வெளியிட இருப்பதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.அந்த படம் வெளியானால் நான் கொடுத்த கடன் தொகையை திரும்ப வாங்க முடியாமல் போய்விடும். எனவே, ரூ.1.60 கோடி அசல் தொகையை 24 சதவிகித ஆண்டு வட்டியுடன் எனக்கு உடனடியாக திரும்பச் செலுத்த வேண்டும்.

அதுவரை கோவா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ராஜசூர்யா கோவா படத்தை டிசம்பர் 11ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ரஜினி பிறந்த நாளன்று இந்தப் படம் வெளியாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.

டாக்டரை மணக்கிறார் கஞ்சா கருப்பு!




பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, சிவகங்கையை சேர்‌ந்த சங்கீதா என்ற டாக்டரை மணக்கிறார். வரும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம்தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென தனியிடம் பிடித்தவர் கஞ்சா கருப்பு. இவர் பள்ளிப் படிப்பும் இல்லாதவர். அடிக்கடி தன்னைச் சந்தி்க்கும் பத்திரிகையாளர்களிடம், "நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குனதில்லண்ணே..." என்பார்.

கருப்பு படிக்விட்டாலும் அவருக்கு வரப்போகும் மனைவி ஒரு பிஸியோதெரபி டாக்டர். சமீபத்தில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் ஜனவரி 27ம்தேதி நாட்டரசன் கோட்டையில் உள்ள கோயிலில் நடைபெற உள்ளது.

திருமணம் முடிந்ததும் கையிலுள்ள படப்பிடிப்புகளை முடித்துவிட்டு, மனைவியுடன் ஹனிமூனுக்கு வெளிநாடு போகிறாராம் கஞ்சா கருப்பு.

டாடா சாம்ராஜ்யம்... அடுத்த வாரிசு யார்?

டாடா குழுமம்... பொதுவுடைமைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், இந்தியா வுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனம் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்திய தொழில் துறைக்கு முகவரி தந்த நிறுவனம் டாடா குழுமம் என்றால் மிகையல்ல.
இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலையை துவங்கியது டாடா நிறுவனம்தான். இந்தியாவில் விமான சேவையை ஆரம்பித்ததும் டாடாவே. இதுமட்டுமல்ல... தொழில் துறையில், 'முதல் முதலாக' என்று பல விஷயங்களைச் செய்த பெருமை மிக்க நிறுவனம் டாடா குழுமம்.71 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட, சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று டாடா.

இன்றும் டிசிஸ், டாடா நானோ என தொழில் துறையைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த டாடா குழுமத்துக்கு சேர்மனாக இருப்பவர் ரத்தன் டாடா. 1868-ல் ஜாம்ஷெட்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், வழிவழியாக அவரது குடும்ப வாரிசுகள் தலைமையில் இயங்கி வருகிறது. இன்று 114 நிறுவனங்கள் டாடா குழுமத்துக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றில் 27 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜேஆர்டி காலத்தில் டாடா குழுமம் மிகப் பெரிய விரிவாக்கத்தைச் சந்தித்தது. ஏர் இந்தியா நிறுவனம் துவங்கப்பட்டது இவர் கால்ததில்தான். பின்னர் மத்திய அரசு இந்த நிறுவனத்தை நாட்டுடைமையாக்கியது.1991 முதல் ரத்தன் டாடா தலைவராக உள்ளார்.இவர் காலத்தில்தான் டாடா சாம்ராஜ்யம் 85 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானத்தில் 65 சதமவிகிதம் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே வருகிறது.இந்நிலையில் ரத்தன் டாடா வரும் 2012-ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். அப்போது அவருக்கு 75 வயது பூர்த்தியாகிறது.

எனவே தனக்கு அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் ரத்தன் டாடா. ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. எனவே அவருக்கு வாரிசுகள் கிடையாது. இதனால் ரத்தன் டாடாவின் அடுத்த வாரிசு யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.டாடா குழு தலைவர் பதவி என்பது சாதாரண விஷயமல்ல... மிகவும் பொறுப்பு மிக்கதாவும், சர்வதேச அளவில் மதிப்பு கொண்டதாகவும் இருப்பதால் சரியான நபரின் கையில் இதை ஒப்படைக்க வேண்டும் என்ற கவலை பிறந்துள்ளது டாடாவுக்கு.

இப்போதைக்கு அவர் முன் எந்த சாய்ஸுமில்லை... பெப்ஸிகோவின் இந்திரா நூயி, சிட்டி குழுமத்தின் விக்ரம் பண்டிட் மற்றும் டாடா குடும்பப் பெயரைத் தாங்கி நிற்கும் நோயல் டாடா போன்றவர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. இவர்களைத் தவிர, டாடா குழுமத்தில் இப்போதுள்ள ரவிகாந்த், கோபால கிருஷ்ணன் போன்றோர் பெயர்களும் அடிபடுகின்றன.ஆனால் ரத்தன் டாடா மனதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.டாடா குழுமத்துக்கு பொருத்தமான தலைவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க, உலகின் டாப் மேன்பவர் நிறுவனங்களை அணுகியுள்ளார் டாடா. அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தகுதிவாய்ந்த தலைவர் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவார் என டாடா குழும அதிகாரி ஒருவர் தெரிவித்தார். என்ன நினைக்கிறார் டாடா?

ரத்தன் டாடா இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றபோது, நிலைமை அவரது கட்டுக்குள் இல்லை. டாடாவின் துணை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரிகளை தனக்குக் கீழ் கொண்டு வருவது அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஆரம்ப வருடங்களை இந்த உள் விவகாரத்திலேயே செலவழிக்க வேண்டி இருந்தது, ரத்தன் டாடாவுக்கு. இந்த முறையும் அந்த மாதிரி சூழல் உருவாகக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் ரத்தன் டாடா.

இன்று நிறுவனம் முழுமையாக அவர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த கட்டமைப்பை அப்படியே கைமாற்ற வேண்டும் என்பது அவர் ஆசை. வெளிநாட்டவரும் தலைவராகும் வாய்ப்பு...இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த டாடா, "டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் நிறுவனத்துக்கு உள்ளும் இருக்கலாம்... வெளியிலும் இருக்கலாம். அதேபோல, அவர் ஒரு இந்தியராக இருந்தால் தேர்வு செய்ய எளிதாக இருக்கும்.

அதே நேரம், இந்த தலைமைப் பதவியில் ஒரு வெளிநாட்டவரும் அமர வாய்ப்பிருக்கிறது (“It would certainly be easier if that candidate were an Indian national. It could also be an expatriate sitting in that position," ). ஆனால், இந்த நிறுவனத்தின் பெருமை, தேசத்தின் மதிப்பு, ஒற்றுமைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவராக அவர் இருக்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை" என்றார். யாருக்கு இந்த டாடா சாம்ராஜ்ய அரியாசனம் கிடைக்கப் போகிறது என்பதை இந்தியர்கள் மட்டுமல்ல... கார்ப்பரேட் உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது!.

மன்சூர் அலிகான் வழக்கு-நடிகர் சிட்டிபாபுவுக்கு பிடிவாரண்ட்

டிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், காமெடி நடிகர் சிட்டிபாபுவுக்கு சென்னை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.மன்சூர் அலிகான் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், திரைப்படம் தயாரிப்பதற்காக சிட்டிபாபு என்கிற சாஜித் அதீப் கடந்த 22.12.2008 அன்று என்னிடம் ரூ. 6 லட்சம் வாங்கினார். இந்த தொகையை பல்வேறு தவணைகளாக என்னிடம் பெற்றுக் கொண்டார்.
இந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை.இதே போல அவரது மனைவி ஜெரீனா என்பவரும் என்னிடம் ரூ. 7 லட்சத்து 17 ஆயிரம் கடன் வாங்கினார். இவரும் பணத்தை திருப்பித் தரவில்லை.

அதற்கு பதில் காசோலைகளை இருவரும் தனித்தனியாக கொடுத்தனர். ஆனால் அவர்களது வங்கி கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. எனவே அவர்கள் மீது செக் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் மன்சூர்.இந்த மனு எழும்பூர் 14வது கோர்ட் நீதிபதி காஞ்சனா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிட்டிபாபுவும், ஜெரீனாவும் ஆஜராகவில்லை.இதையடுத்து இருவரையும் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறி மாஜிஸ்திரேட் காஞ்சனா பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

சிட்டிபாபு பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.