Saturday, November 14, 2009
'ஈழம் மௌனத்தின் வலி' புத்தக வெளியீட்டு விழா!
விமானத்துறையில் கால் பதிக்கும் கலாநிதி மாறன்!
Friday, November 13, 2009
பதவி விலகலுக்கான காரணங்கள் ! :சரத் பொன்சேக்கா
அனுப்பியிருந்த ஐந்து பக்கங்களைக் கொண்ட கடிதத்தின் பிரதி ஜனாதிபதி செயலகத்திற்கும் கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தின் பிரதி எமது இணையத்தளத்திற்கும் கிடைத்தது.
1. தற்போது கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக பணியாற்றும் ஜெனரல் ஜீ.எஸ்.சீ. பொன்சேக்கா ஆர்.டபிள் யு .பி, ஆர்.எஸ்.பி, வி.எஸ்.வி, யு எஸ்.பி, ஆர்.ஈ.டி.எஸ், பி.எஸ்.சி. ஆகிய நான் 1970ம் ஆண்டு பெப்ரவரி 5ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், 1971ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி அதிகாரி தரத்திற்கு நியமிக்கப்பட்டேன். தனிப்பட்ட ரீதியாகவும் வேறு வழிகளிலும் கடந்த 25 வருட காலம் தீர்விற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. இரத்தம் சிந்தும் பயங்கரவாதத்தில் நாடு சிக்கியிருந்த சந்தர்ப்பத்தில் என் மீது அதிக நம்பிக்கையும், தெளிவும் இருந்ததனால் 2005ம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி நீங்கள் என்னை லெப்டினன் ஜெனரலாக தரம் உயர்த்தி இராணுவத் தளபதியாக நியமித்தீர்கள்.
இரகசியமானது
இணைப்பு – அ2009 நவம்பர் 12
1. இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படும் வரை இராணுவத் தளபதியாக கடமையாற்ற வேண்டும் என நான் விடுத்த வேண்டுகோளை கவனத்தில் கொள்ளாது சூழ்ச்சியொன்று ஏற்படலாம் என பல சக்திகள் உங்களை தவறாக வழிநடத்தியதன் காரணமாக விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை வெற்றிகொண்டவுடனேயே இராணுவத் தளபதி பதவியில் மாற்றத்தை மேற்கொண்டது. சூழ்ச்சி தொடர்பான அச்சம் பற்றி இராணுவத்தினர் நன்று அறிந்தவிடயமாகும்.
2. யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியாக மூன்று வருடங்கள் முன்னுதாரணமாக சேவையாற்றிய அப்போது கூட்டுப் படை தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை எனக்குப் பின்னர் இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு நான் செய்த பரிந்துரையைக் கவனத்தில் கொள்ளாது ஹோல்டிங் ப்ரோமசன் கட்டளை அதிகாரியாக மாத்திரம் இறுதிப் போரில் கடமையாற்றிய, ஒழுக்காற்று விசாரணையை எதிர்நோக்கவிருந்த அதிகாரியொருவரை எனக்கு அடுத்ததாக நியமித்தமை.
3. இராணுவத் தளபதி என்ற பதவி மிகவும் சிரேஸ்ட பதவியென்ற போதிலும் சாதாரண மக்களையும், இராணுவ உறுப்பினர்களில் அதிகளவானவர்களையும் தவறாக வழிநடத்தக் கூடிய சிறிய இணைப்புப் பொறுப்புக்களைத் தவிர வேறு அதிகாரங்கள் அற்ற பாதுகாப்புக் கூட்டுப் படைத் தலைமை அதிகாரியாக நியமித்தமை, போரை முன்னெடுத்த இராணுவ உறுப்பினர்களுக்கு சிறந்த நிர்வாகக் கட்டமைப்பையும், அவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை உரிய நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும் எனது கடமைகளை நிறைவேற்ற சந்தர்ப்பமளிக்காது, இராணுவப் பதவியிலிருந்து விலகுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் யுத்த வெற்றியின் பின்னர் இரண்டு வாரங்களில் அழுத்தம் கொடுத்தமை, மற்றும் இரண்டு மாதங்களுக்குள் எனது பதவியின் அதிகாரங்களை கையளிக்குமாறு நீங்கள் மேற்கொண்ட அழுத்தங்கள்,
4. அதுமாத்திரமல்லாது, எனது நியமனம் வழங்கப்பட முன்னர் பாதுகாப்புக் கூட்டுப் படைத் தலைமை அதிகாரிக்குள்ள அதிகாரங்கள் தொடர்பில் நான் தவறாக வழிநடத்தப்பட்டேன். முன்னர் இருந்த அதிகாரங்களைவிட அந்தப் பதவிக்கு, அதிகளவான அதிகாரங்கள் வழங்கப்படும் என என்னிடம் கூறப்பட்ட போதிலும், எனது நியமனத்தின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் சூட்சும விவகார ஆலோசகரினால் எழுத்தப்பட்ட கடிதத்தில், எனது நியமனமானது படையினருக்கிடையில் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே அன்றி அனைத்துப் படைகளுக்கும் தலைமைத்துவம் வழங்க அல்ல எனத் தெரிவித்திருந்தார். நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் அந்தக் கடிதத்தை இதனோடு இணைந்து அனுப்பியிருக்கிறேன். இந்த நடவடிக்கைகளின் மூலம் இராணுவத் தலைமைத்துவத்தின் அதிகாரங்களை எனக்கு வழங்க நீங்களும், அரசாங்கமும் விருப்பமில்லை என்பதுடன், என்னைக் குறித்த அவநம்பிக்கைக் கொண்டுள்ளமையும் தெளிவாகியுள்ளது. யுத்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட சேவையைக் கருத்திற்கொள்ளும் போது இவ்வாறான நிலைமை மிகவும் அதைரியத்தை ஏற்படுத்த ஏதுவாக அமைந்தது.
5. அதேவேளை, பின்னர் நடைபெற்ற பாதுகாப்புத் தலைமை அதிகாரிகளின் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒழுக்கமற்ற வகையில் அநாவசியமான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். முப்படைகளையும் செயற்படுத்தும் அதிகாரம், கூட்டுப் படைத் தலைமை அதிகாரிக்கு வழங்கினால் அது மிகவும் ஆபத்தானதாக இருக்குமென எனக்குக் கீழ் பணியாற்றும் இராணுவ அதிகாரிகளின் முன் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்தினால் நான் மிகவும் அசௌகரியத்திற்குள்ளானேன்.
6. யுத்தம் முடிவடைந்து விட்டதாக 2009 மே மாதம் 18ம் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய நீங்கள், தொடர்ந்தும் இராணுவத்தினரைப் படையில் இணைப்பது அநாவசியமானது எனவும், தேவைக்கதிகமான பலத்தைக் கொண்ட இராணுவமொன்று இருப்பதாக மக்கள் மத்தியில் கருத்தொன்று நிலவுவதாகவும் கூறினீர்கள். யுத்த வெற்றி சம்பந்தமாக தனது பாராட்டுக்களை தொடர்ந்தும் கூறிவந்த உங்களின் வாயால் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டமை ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். பெற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய வெற்றியை இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட இராணுவத்தை பக்கசார்பான இராணுவம் என நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை நான் தனிப்பட்ட ரீதியில் உணர்ந்துகொண்டேன். நான் இராணுவத்தின் அதிகாரங்களிலிருந்து விலகிய பின்னரும் நீங்கள் மீண்டும் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தீர்கள். இந்த அறிக்கையானது என்னை மிகவும் அருவருப்பிற்குள்ளாக்கிய விடயமாகியது. இது யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த இராணுவத்தினருக்குச் செய்யும் அவமதிப்பு எனக் கூறவேண்டும்.
7. தற்போதைய இராணுவத் தளபதி தான் பதவியேற்றுக்கொண்ட பின்னர் எனது பணிக் காலத்தில் யுத்தத்திற்காக பாரிய பங்களிப்புக்களை வழங்கிய சிரே ட இராணுவ அதிகாரிகளை இடமாற்றும் நடவடிக்கைகளையே உடனடியாக ஆரம்பித்தார். இராணுவத்தின் சேவா வணிதா பிரிவின் எனது மனைவியுடன் பணியாற்றிய கனிஸ்ட ஊழியர்கள்கூட இடமாற்றப்பட்டனர். இதன்மூலம் அதிகாரிகள் பக்கசார்பாக சவாலுக்கு உட்படுத்துவதும், எனது பலம் சம்பந்தமாக தவறான தகவலை இராணுவத்தினருக்கு வழங்கி அவர்களை அதைரியத்திற்கு உட்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது என்பதே இதன்மூலம் தெளிவாகியது.
8. தேசத்திற்காக வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இராணுவம், சூழ்ச்சியில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக நீங்கள் சந்தேகித்து 2009 ஒக்டோபர் 15ம் திகதி இந்திய அரசாங்கத்தை உசhராக இருக்குமாறு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்து இராணுவத்தினரை உசார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுத்தமையானது மிகவும் மனவருத்தத்தை அளித்தது. பயங்கரவாதக் குழுவொன்றைத் தோற்கடிக்க முடிந்த திறமையானதும், தொழில்ரீதியான இலங்கை இராணுவத்தின் தோற்றமும், நற்பெயரும் இதன்மூலம் உலக இராணுவத்தினரால் குறைத்து மதிப்பிடப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நோக்கி கொண்டுசெல்ல தலைமை வழங்கிய எனக்கு, இராணுவத்திற்குள் இருக்கும் சார்பு நிலை இந்த சந்தேகத்திற்கு காரணமாக இருக்கலாம்.
9. வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்வதற்காக விடுமுறைப் பெற்று கடந்த ஒக்டோபர் 23ம் திகதி முதல் நவம்பர் 5ம் திகதி வரை நான் நாட்டிலிருந்து வெளியேறியிருந்த காலப்பகுதியில் இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதான நுழைவாயில்களுக்கு அருகில் பணியில் அமர்த்தப்பட்டிருந்த எனக்குரிய சிங்கப் படைப் பிரிவின் படையினர் நீக்கப்பட்டு, மற்றுமொரு படைப் பிரிவின் படையினர் பணியில் அமர்த்தப்படுமளவிற்கு அச்சமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பிற்காக நான்கு வருட காலமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிங்கப் படைப் பிரிவின் படையினரின் திறமையானது பாதுகாப்புச் செயலாளரின் கருத்திற்கமைய ஒரு இரவிற்குள் குறைந்தமையானது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும். இராணுவத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் வாகனங்களை சோதனையிடும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிங்கப் படைப் பிரிவின் போர்ப் பயிற்சி பெறாத நான்கு பேருக்குப் பதிலாக இராணுவப் பயிற்சிகளைப் பெற்ற 14 படையினர் ஈடுபடுத்தப்பட்டமை சிங்கப் படைப் பிரிவின் பயிற்சிப் பெறாத இராணுவ சிப்பாய்கள் நால்வரின் பணிகளுக்கு இடைய+று ஏற்படுத்தி, இரண்டு இராணுவ அணிகளை பணியில் அமர்த்தியதன் மூலம் சில வெளிநாட்டுத் தூதரகத் தரப்பினரையும், மக்களையும் குழப்பத்திற்குள்ளாகியமை.
10. பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனையின்படி கஜபா படைப் பிரிவின் படையினர் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத்தில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டதன் மூலம் இராணுவத்தினருக்கிடையில் பக்கசார்பு நிலை ஏற்பட்டு அவர்கள் பிரிந்துசெல்லும் நிலைமையை ஏற்படுத்தி, இராணுவம் அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதாக நம்பிக்கையை உருவாக்கி, ஆயுதம் தாங்கிய ஆயுதப் படைப்பிரிவினர், சிங்கப் படைப் பிரிவினரை மீறிச் செல்ல வேண்டும் என நம்பிக்கைக் கொண்டுள்ள தற்போதைய இராணுவத் தளபதி இதற்கு உறுதுணை வழங்கி வருகிறார்.
11. எமது தேசத்தின் வரலாற்றை மாற்றுவதற்காக அரசாங்கத்திற்கு நான் வழங்கிய தனிப்பட்ட பங்களிப்புக்களைக் கருத்திற்கொள்ளாது நான் தேசத் துரோகி என அடையாளப்படுத்த அரசாங்கத்திலுள்ள சிரேஸ்ட அரசியல்வாதிகள், ஏனைய தரப்பின் ஊடாக இழிவுபடுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு, வதந்திகளுக்கு இடமளித்தமை,
12. நான் வெளிநாட்டில் இருந்த காலத்தில், எனது பணிக்காக பதில் அதிகாரி மற்றும் பதில் கூட்டுப் படைத் தலைமை அதிகாரியொருவரை நியமிக்கப்படவில்லை. இதன்மூலம் மிகவும் பேசப்பட்டதும், பலர் கூறுவது போல் அது மிகவும் முக்கியமான பதவியெனில் அந்தப் பதவிக்காக பதில் அதிகாரியொருவரை நியமிக்காததன் மூலம் என்னால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற சகல சேவைகளையும் கருத்திற்கொள்ளாது முக்கியமற்ற பதவியை எனக்கு வழங்கியிருப்பதையே உணர்த்தியது.
13. சாதாரண நிலையிலிருந்து தொழில்ரீதியாக உயர் நிலைக்குக் கொண்டுவர நான் மிகவும் சிரமப்பட்டு பணியாற்றிய இராணுவம் தற்போது கைவிடப்பட்டிருப்பது கவலைக்குரியது என்பதை உணரமுடிகிறது.
14. யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய நிலைமையும் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்திய விடயமாகியது. அவர்கள் சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் வாழக்கூடிய வகையில் விடுதலைப் புலிகளின் கொடூரத்திலிருந்து அவர்களை மீட்பதற்காக ஆயிரக்கணக்கான படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். எனினும், தற்போது அவர்களில் பலர் மிகவும் பாரதூரமான நிலைமையின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கத்திடம் உரிய திட்டமிடல் இல்லாததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமது பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் உரிய முறையில் அகற்றப்படும் வரை இடம்பெயர்ந்தவர்களை நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள நண்பர்கள், உறவினர்களுடன் வாழ அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
15. எனது தலைமையின் கீழ் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டாலும் உங்களது அரசாங்கத்தினால் இதுவரை சமாதானத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. தமிழ் மக்களின் மனதை வெல்ல தெளிவான கொள்கை இல்லாததன் காரணமாக, பெறப்பட்ட வெற்றி அழிந்துபோவதுடன் எதிர்காலத்தில் மற்றுமொரு எழுச்சி ஏற்படக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது.
16. யுத்தத்தின் இறுதியில் முழு நாடும் எதிர்பார்த்த சமாதானத்தின் பிரதிபலன்கள் இன்னும் கிடைக்கவில்லை. மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பொருளாதாரக் கஸ் டங்கள் அதிகரித்துள்ளதுடன், வீண் விரையமும், ஊழல் மோசடிகளும் அதிகரித்துள்ளன. ஊடகச் சுதந்திரமும் ஏனைய ஜனநாயக உரிமைகளும் அடக்கப்பட்டு வருகின்றன. எமது தாய் மண்ணில் சமாதானமும் அபிவிருத்தியும் கொண்ட புதிய யுகத்தை உருவாக்க எம்மால் முடியுமானால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பல அர்ப்பணிப்புக்கள் வீண் போகாது.
Pranab to discuss Fonseka and other issues with Lanka during visit
ராஜபக்சே அதிரடி:பொன்சேகாவின் உறவினர்கள் பணிநீக்கம்
போர்க்குற்றங்கள் குறித்து அவரிடம் அமெரிக்கா விசாரிக்கப் போவதாகச் செய்தி வெளியானது. இலங்கை அதிபர் ராஜபட்சவின் தம்பியும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபட்சவுக்கு எதிரான ஆதாரங்களை பொன்சேகாவிடம் அமெரிக்கா கோரியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இலங்கை திரும்பிய பொன்சேகா, அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளார். அதனால் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்திருக்கிறார்.
இந்த ராஜிநாமா ஏற்கப்பட்டதும் படைப்பிரிவுகளில் பணியாற்றும் அவரது உறவினர்கள் பதவியில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளார்கள் என்று இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைக்கூத்து!
பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிப்பதாக இருந்தது. இதில் ரவி தரப்பிற்கு உடன்பாடில்லையாம். இதனால் கமல் மகள் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்யும் வேலைகளில் தீவிர மாக இருக்கிறார் பிரபுதேவா. தனது பாலிவுட் அறிமுகப் படம் ‘"லக்' அதிர்ஷ்டத்தை தராததால் இசையின் மீது கவனம் செலுத்த முடிவு செய்திருந்தார் ஸ்ருதி.ஆனால் பெரிய சம்பளம் கொடுத்து தெலுங்கு படம் ஒன்றில் சித்தார்த் ஜோடியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். தெலுங்கில் நடிக்க தயாராகிவிட்ட ஸ்ருதி தமிழை தள்ளிவைப்பாரா என்ன? அதிலும் பிரபுதேவா இயக்கம் என்பதால் ஸ்ருதியும் ஆர்வம் காட்டு கிறாராம்.
கைவசம் சரியான வாய்ப்பில்லாமல் இருந்த பூனம்பாஜ்வாவை தனது ‘"கச்சேரி ஆரம்பம்' படத்தில் ஜோடியாக்கிய ஜீவா, தனது "சிங்கம் புலி' படத்திலும் ஜோடியாக்கியிருக்கிறார்.‘என்ன சங்கதி?... என கேட்டால் "கதைக்கு பொருத்தமாக இருந்ததால் டைரக்டர்கள் பூனம்பாஜ்வாவை தேர்வு செய்திருக்காங்க. இதில் என்னோட கைங்கர்யம் ஏதுமில்லை' என்கிறார். அடடே... நல்ல கதையா இருக்கே?!
ஹீரோக்களுக்கு நயன் மீதான மோகம் குறைந்துகொண்டே வர.... டைரக்டர்களுக்கு நயன் மீதான மோகம் அதிகரிக்கிறதோ என்னவோ?வெங்கட்பிரபு, தான் இயக்கிவரும் "கோவா' படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு நயனை ஆடவைத்தே தீரவேண்டும் என அடம் பிடித்து வருகிறாராம்.
வடிவேலுவின் காமெடி கூட்டணியில் இருந்த சிலருக்கும் வடிவேலுவுக்கும் சில மனஸ்தாபங்கள். இதனால் கூட்டணியில் இருந்தவர்கள் விவேக்கிடம் போனார்கள். ஆனால் அங்கு வரவேற்பு இல்லை. இதையடுத்து சந்தானத்திடம் ஜாய்ண்ட் ஆகியிருக்காங்க.
அடுத்த ரவுண்ட்டில் களமிறங்கியிருக்கும் சுவா நடிகை ஒரு படவிழாவிற்கு கண்கூசும் விதமாக துணி(!) உடுத்தி வந்திருந்தார். அது ஒரு பத்திரிகையில் பளிச்சென வந்துவிட்டது. கல்யாண பேச்சுகள் நடந்துகொண்டி ருக்கும் நேரத்தில் இந்த போட்டோ பிரசுரமானது நடிகையை சங்கடப்படுத்திவிட்டது. அந்த புகைப்படக்காரருக்கு போன் போட்ட நடிகை, "என்னாண்ணா இப்புடி போட்டோ புடுச்சு போட்ருக்கீங்க?' என வருத்தப்பட.... "அப்புறம் ஏம்மா இப்படி ட்ரெஸ் பண்ணீட்டு வந்தீங்க?' என போட்டோ பார்ட்டி கேட்டிருக்கிறார். "இந்த மாதிரி விழாக்களில் தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர்கள் வருவாங்க. அவங்க கண்ல கிளாமரா தட்டுப்பட்டா எதாவது சான்ஸ் கிடைக்குமே... அதான்! மத்தபடி பொது இடத்துல இப்புடி வரணும்னு ஆசையா என்ன?’’ -என பாவமாக பதில் சொன்னாராம்.
தலைமை நீதிபதி தினகரனுக்கு ஆதரவும்...!
விவசாயத்துக்கு பிராந்தி!
சீரழியும் கண்ணகியின் பூம்புகார்!
நம்முடன் டீக்கடையில் பேசிக்கொண்டிருந்த ஒரு காக்கி, ""கடல் கொண்ட இந்த ஊரை பெருமையா மறுபடியும் உருவாக்கினாரு நம்ம முதலமைச்சர். இங்கதான் இத்தனையும் நடக்குது. சுற்றுலாத்துறையும் கண்டுக்கிறதில்லை. காவல்துறை உயரதிகாரிகளும் கண்டுக்கிறதில்லை. எங்க கடமையையும் செய்ய விடுறதில்லை'' என்று பெருமூச்சு விட்டார்.காமாந்தகர்களின் ஊராகிவிட்டது கண்ணகி வாழ்ந்த பூம்புகார்.
தவறுகளைத் தட்டிக் கேட்கக்கூடாதா?
""ஒரு வருஷத்துக்கு முன்னால எங்களோட தொண்டு நிறுவனத்துக்கு மனித உரிமை இயக்கம்னு பேரு வச்சோம். பதிவும் செஞ்சோம். இன்னைக்கு வரைக்கும் அந்தப் பேருக்கு ஒரு பங்கமும் வராம செயல்படறோம். ஆனாலும், எங்களையே உறுத்துற அளவுக்கு இந்த விருதுநகர் மாவட்டத்துல கந்து வட்டிக்கு விடறவங்க, சாராய பார் நடத்துறவங்க, கட்டப் பஞ்சாயத்து பண்ணுறவங்கன்னு மனித உரிமைகளை காலடில போட்டு மிதிக்குறவங்களே இந்த அமைப்புகளை நடத் துறாங்க. இப்பல்லாம் மனித உரிமை இயக் கம்னு பேரச் சொல்லவே தயக்கமா இருக்கு''.மிகவும் நெக்குருகித்தான் பேசினார் மனித உரிமை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளரான விஜயகுமார். "மனித உரிமை கள் என்ற பெயரில் இனி தொண்டு நிறு வனங்கள் செயல்பட முடியாது' என்று அர சாங்கமே சாட்டையைச் சுழற்றியிருக்கிறதே?சாம்பிளுக்கு ஒன்றிரண்டு-மந்திரி பி.ஏ. உத்தரவு போட, கலெக்டர் பி.ஏ. பரிந்துரைக்க... கோயம்புத்தூர் சர்க்யூட் ஹவுசில் ரூம் கிடைக்கிறது அந்த டுபாக்கூர் மனித உரிமை ஆசாமிக்கு. அங்கேயே "ப்ரஸ் மீட்' வைத்து மாட்டிக் கொள்ளும் அளவுக்கு விவரம் இல்லாத அந்த நபர்தான் மனித உரிமைகளின் பெயரால் தமிழகம் முழுவதும் மரியாதைக்குரியவராக பவனி வந்திருக்கிறார்.சிவகாசியில் ஒரே டூவீலரில் மூன்று பேர் வருகிறார்கள். அந்த வண்டியை நிறுத்துகிறார் டிராஃபிக் எஸ்.ஐ. முத்தரசு. ஃபுல் மப்பில் இருந்த மூவரும் மனித உரிமை அடையாள அட்டையை எஸ்.ஐ.யின் முகத்துக்கு நேரே நீட்டிவிட்டு "பை... பை...' சொல்லியிருக்கிறார்கள்.இதுபோன்ற மனித உரிமை கலாட்டாக்கள் ஒரு புறம் நடந்தேறினா லும், உருப்படியான காரியங்களையும் சில அமைப்புகள் செய்யா மல் இல்லை. திருத்தங் கல்லில் அப்படி நடந்த ஒரு கூட்டத்தில்...""லஞ்சம் கொடுக்காம எந்த ஒரு காரியமும் நடக்காதுன்னு ஏன் நெனக்குறீங்க? உங்க மனுவை நேர்ல கொடுக்க வேண்டிய அவ சியமே இல்லை. பதிவுத் தபால்ல அனுப்பி வைங்க. ஒரு மாசம் பொறுத்திருங்க. ஒரு நடவடிக்கையும் இல்லைன்னா 10 ரூபாய் ஸ்டாம்பு ஒட்டி தகவல் உரிமைச் சட்டத்தின் துணை கொண்டு கேள்வி கேளுங்க. மக்கள் விவரமா நடக்க ஆரம்பிச்சாலே லஞ்சம் கேட்குறது தன்னால குறைஞ் சிடும்'' என்று மக்களுக்கு வகுப்பே எடுத்தார்கள்.அகில இந்திய நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் ராஜேந்திரன் நம்மிடம் ""எங்கே அநியாயம் நடந்தாலும் எங்க அமைப்பு மூலம் தட்டிக் கேட்பேன். அதனால இதுவரைக்கும் 18 வழக்குகளைச் சந்திச்சிருக்கேன். தட்டிக் கேட்டால்தானே தவறுகள் குறையும். ரேசன் கடைக்குக் கூட போயி எடையச் சரிபார்ப்போம். இந்த மாதிரி அரசு இயந்திரங்களை நாங்க கண்காணிக்குறது பிடிக்காமத்தான் எங்கள ஒடுக்க நெனக்குது அரசாங்கம். தவறான அமைப்புகளைக் கண்டறிந்து களையெடுப் பதை விட்டுவிட்டு, மொத்தத்துல மனித உரிமை அமைப்புக்களே இருக்கக் கூடாதுன்னா என்ன அர்த்தம்?'' -கண் சிவக்க கேள்வி கேட்டார்.மனித உரிமை அமைப்புக்கள் மீதான உத்தரவை மறுபரிசீலனை செய்யுமா அரசாங்கம்?
சினிமா தியேட்டரில் டாக்டர்கள்!
சென்னை அருகே பெரும் ஆபத்து!
தற்கொலையை தடுத்த நக்கீரன் செய்தி!
""இனி உயிரோட இருக்கக் கூடாதுனு ரெண்டுவாரம் முன்னயே நானும் என் மனைவியும் முடிவு பண்ணிட்டோம். பசங்க ரெண்டு பேரையும் என்ன பண்றது? அந்தக் குழப்பத்திலதான் டிலே பண்ணிட்டோம். இந்த வாரம் நக்கீரன்ல "மனித உருவில் மிருகம்' செய்தியைப் படிச்சோம். பெத்த மகளையே நாசம் செய்து கொண்டிருந்த அந்த மிருகத்தை எதிர்த்துப் போராடி தண்டனைக்கு ஆளாக்கிய கௌசல்யாவின் மன உறுதியை படிச்ச பிறகுதான்... இந்த பாவிகளை எதிர்த்து போராடணும்கிற உறுதி கொஞ்சம் வந்திருக்கு... ஆனாலும் தற்கொலை எண்ணம் இன்னும் இருக்கு...!'' -விம்மினார் வீரபுத்திரன்.""நேரில் வருகிறோம்!'' முகவரியை கேட்டோம். விரைந்தோம்.சென்னை திருவேற் காட்டிலிருந்து ஆவடி செல்லும் சாலையில் உள் வாங்கிய பரிசுத்தமான ஒரு பட்டிக்காடு. செங்கல் சூளை களுக்கு நடுவில் வெக்கை படிந்து நின்ற அந்த "சுந்தர சோழபுரம்' கிராமத்தில் ஏரிக்கரைத் தெருவில், செங்கல் சூளை அதிபர் சீனிவாசன் வீட்டில் குடியிருக்கிறார் வீரபுத்திரன்.""நான், என் மனைவி பாக்கியலெட்சுமி, ரெண்டு பையன்கள்... எப்போதும் பினாத்திக் கொண்டிருக்கும் நடக்க முடியாத என் விதவைத் தாய்... இதுதான் என் குடும்பம். பிழைப்புக்காக கோவில்பட்டியில் இருந்து 2 வருடம் முன்பு சென்னைக்கு வந்து மதுரவாயலில் குடியிருந் தேன். 5 மாதம் முன்னால இங்கே வந்தோம்.இந்த ஹவுஸ் ஓனர் சீனிவாசன் இந்த ஏரியாவில முக்கியமான ஆளு... போலீஸ் ஸ்டேஷனே இவர் கண்ட்ரோல்ல தான் இருக்கு...! எந்தப் பொம்பளையைப் பார்த்தாலும் ரெட்டை அர்த்தத்தில கேலியும் கிண்டலுமா பேசுவார் சீனிவாசன்... வயசானவர்... நமக்கென்னனு பேசாம இருந்துட்டேன். எப்பவாச்சும் நான் குடிப்பேன்... 9.9.09 அன்னக்கி கொஞ்சம் கூடவே குடிச்சிட்டேன். மொட்டை மாடிக்கு போய் தூங்கிட்டேன். என் ஒய்ப் கௌசல்யா வந்து எழுப்பிப் பார்த்திருக்கா... நான் எந்திரிக்கலை... கிடக்கட்டும்னு கீழே இறங்கி... வீட்டுக்குள்ள போயிருக்கிறாள்... கௌசல்யாட்டயே கேளுங்களேன்!'' மனைவியைக் காட்டினார் வீரபுத்திரன்.""சொல்லுங்கம்மா...!'' என்றோம்.""அந்த சீனிவாசன்... எங்க கிச்சன்ல இருட்ல உட்கார்ந்திருந்தான். எனக்குத் தெரியலை. திடீர்னு பின்னால வந்து கட்டிப் புடிச்சான் திமிர்னேன்... சுவர்ல என் தலை மோதி மயங் கிட்டேன். என்னைத் தூக்கிட்டு அவன் வீட்டுக்கு கொண்டு போய் போட்டு என்னைச் சீரழிக்கும் போதுதான் சுயநினைவு வந்தது. அலறுனேன்... அவன் பொண் டாட்டி மாரியம்மாளும் என் மகன்களும் ஓடிவந்தாங்க... அப்பத் தான் என்னை விட்டுட்டு அவன் போனான். மாரியம்மா என் கால்ல விழுந்து கெஞ்சுச்சு. யார்ட்டயும் சொல்லாதே... ரொம்ப அசிங்கம்னு அழுதுச்சு.ஒருவாரம் கழிச்சு மறுபடியும்... கட்டிப் புரண்டேன்... முடியலை... என் சேலையை உருவி என் காலையும் கையை யும் கட்டினான். கதறினேன். வாயில துணியை வைத்து அடைச்சான். சிகரெட்டால என் உடம்பெல்லாம் சுட்டான். கெடுத்தான். அப்பத்தான் பக்கத்து காயலாங்கடை பையன் ஓடிவந்து பார்த்தது. அவனையும் மிரட்டி அனுப்பினான்.28-ஆம் தேதி மூணாவது தடவையா அதே கொடுமை. அப்புறம்தான் சாக முடிவு செஞ்சேன். இவர் என்னை சமாதானப்படுத்தினார் 7.10.09 அன்னைக்கு, திருவேற்காடு போலீஸ் ஸ்டேஷன்ல போய் இன்ஸ்பெக்டர் துரைராஜ்ட்ட சொன்னோம். புகாரும் எழுதிக் கொடுத்தோம். வழக்குப் பதிவு பண்ணாம... சீனிவாசன்ட்ட சொல்லிவிட்டார் இன்ஸ்பெக்டர்.தினமும் போலீஸ் ஸ்டே ஷனுக்கு அலைஞ்சோம். சீனி வாசன், அவர் நண்பர்கள் சேகர், பழனித்தேவர், அவங்க ஆளுங்க ஸ்டேஷன் இருந்து வீடு வரை எங்களை கேவலப்படுத்தி டார்ச்சர் செய்வாங்க... அப்புறம் கமிஷனர் ஜாங்கிட் சார்ட்ட புகார் கொடுத் தோம். அந்தப் புகாரும் இன்ஸ்பெக்டர் கைக்கு வந்திருச்சு... எந்த நிமிஷம் இந்தக் கும்பல் எங்களை கொலை செய்யும்னு தெரியலை... அப்புறம்தான் தற்கொலை முடிவுக்கு வந்தோம். நக்கீரன்ல கௌசல்யா கொடுமையை படிச் சிட்டு உங்களுக்குப் போன் செய்தோம்... எங்களை சீரழிச்சு... தற்கொலைக்கு தூண்டுன... இவருக்கு தண் டனை வாங்கிக் குடுக்க ணும்...!''.அவர்களுக்கு ஆறுதல் கூறி, மனதிற்கு துணிவூட்டிவிட்டு, திருவேற்காடு காவல்நிலையம் சென்றோம். ""ஆமா அந்தப் பொண்ணு அடிக்கடி வந்தது. சீனிவாசன் மேல புகார் சொல்லுது. நம்ப முடியலையே... ஒண்ணு செய்யலாம்... நான் வேணும்னா எஃப்.ஐ.ஆர். போடட்டுங்களா?'' சிரிக்காமல் சீரியஸாகவே கேட்டார் இன்ஸ்பெக்டர் துரைராஜ்.நாம் அந்தக் காவல் நிலையத்தில் இருந்தபோதே அங்கு வந்தார் செங்கல் சூளை சீனிவாசன். அவரிடமே பாக்கியலட்சுமியின் கதறல் புகார்கள் பற்றிக் கேட்டோம்.""அவளோட மகன் என் கடையில 500 ரூபாயை திருடிட்டான். அதைக் கேட்டேன்... வீட்டைக் காலி பண்ணச் சொன்னேன். உடனே அபாண்டமா சொல்ல ஆரம்பிச்சிட்டாள்!'' இன்ஸ்பெக்டரை பார்த்துச் சிரித்தபடி சொன்னார் சீனிவாசன்.ஏரிக்கரை தெரு மக்களோ, ""இந்தக் கொடூரத்தை மறைப்பதற்காக இதுவரை ஒரு லட்சத்துக்கு மேல் ஸ்டேஷனுக்கு கப்பம் கட்டி இருப்பார் செங்கல்சூளை!'' என்கிறார்கள்.
யுத்தம் சேலஞ்ச் - II
நக்கீரன் மீது ஜெயலலிதா என்கிற ஜெயா வழக்குகளைப் போட்டு முடக்கப் பார்த்தார். டெஹல்கா மீது ஜெயா ஜெட்லி என்ற ஜெயா வழக்குகளைப் போட்டபடியே இருந்தார். வழக்குகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் எங்கள் டெஹல்கா நிறுவனத்தி லிருந்து பலரும் வெளியேறத் தொடங்கினர். பத்திரிகையின் எதிர்காலம் குறித்த அச்சம், அவர்களின் சொந்த எதிர்காலம் குறித்ததாக மாறியது. அதன் விளைவு, 125 பேர் இருந்த எங்கள் நிறுவனத்தில் என் சகோதரி லீனா தேஜ்பால் மற்றும் சோமா சௌத்ரி, பிரிஜ் கிஷோர், பிரயாக் இந்த 4 பேர் மட்டுமே மிச்சமிருந்தனர். ஆனால், ஜெயலலிதா போட்ட வழக்குகளை எதிர்த்து உங்கள் நக்கீரன் நிறுவனம் வலுவாக இருந்தது. வழக்குகளைத் துணிச்சலாக எதிர்கொண்டது. நக்கீரன் நிறுவனத் தைச் சார்ந்தவர்கள் உறுதியோடு நின்றதை இந்தியாவின் பெரிய பெரிய பத்திரிகை நிறுவனத் தினரே ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
-தருண் தேஜ்பால்ஆசிரியர்-டெஹல்கா
எங்கள் நிறுவனத்திற்கு உள்கட்டமைப்புகள் அதிகம். எல்லா வசதிகளும் இருக்கிறது. நினைத்தால் ஃப்ளைட்டில் பறந்து சென்று எந்த செய்தியையும் எடுப் பதற்கான வசதி உள்ளது. அதற்குத் தகுந்தது போல எங்களிடம் பலம் வாய்ந்த ஆட்கள் இருக்கி றார்கள். ஆனால், எந்தவித கட்டமைப்பு வசதிகளும் இல்லா மல் பெரிய அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி ஜெயித்த நக்கீரன் பத்திரிகையின் துணிச்சலைக் கேள்விப்படும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
-பிரணாய் ராய்தலைமை நிர்வாகி- என்.டி.டி.வி
நேர்மைத்திறத்துடன் செயல்படும் ஊடக சாதனையாளர்களே வியக்கும் போராட்டத்தை எதிர்கொண்டது உங்கள் நக்கீரன். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டது அன்றைய ஆட்சி. 2001 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா. அதில் நக்கீரன் மீதான அவரது வஞ்சகம் தெளிவாகவே பதிவாகியிருந்தது. வீரப்பனின் பிடியில் 108 நாட்கள் சிக்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்கும் போராட்டத்தில் அரசுத்தூதராக நக்கீரன் செயல்பட்டு, கர்நாடகத் தமிழர்களின் நிம்மதியான வாழ்வுக்கு உத்தர வாதத்தை ஏற்படுத்தி, மீட்புப் பணியில் வெற்றி பெற்றது. அதைப் பொறுக்க முடியாத ஜெ, தன் தேர்தல் அறிக்கையில், நக்கீரன் கோபால் என என் பெயரைக் குறிப்பிட்டு, "ஆட்சிக்கு வந்தால் நக்கீரன் மீது உறுதியாக நடவடிக்கை எடுப்போம். மைய அரசையும் நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம்" என தெரிவித்திருந்தார்.தேர்தல் அறிக்கையிலேயே பொறி வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் ஜெ.வுக்கு சாதகமாக அமைந்தன. தேர்தலில் போட்டியிடும் தகுதியிழந்தும் அவசரகதியில் முதல்வராகப் பொறுப்பேற்றார்.ஆரம்பமானது பேயாட்டம்.அசரவில்லை நக்கீரன்.அய்யன் திருவள்ளுவர் சொல்லுவார்...
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்றல் அதுவே படை.
உயிரைப் பறிக்கும் எமனே எதிர்வந்து நின்றாலும் அதனைத் துணிவுடன் எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதுதான் படை. நக்கீரன் படை அந்த ஆற்றலுடன் எமனை எதிர்த்து நிற்கத் தொடங்கியது... யுத்தம்!
ரஜினி வழியில் விஜயகாந்த்!
""என்னங்க சொல்றீங்க தலைவரே...''
""ஆமாப்பா.... கோவை மாவட்டம் அவி னாசியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. 28 வயசு. பெண் குரலில் பிசிறில்லாம பேசி அசத்துறவர். அவர் ஏரியாவில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்ததுன்னா சிறப்பு பேச்சாளர் வருவதற்கு முன்னாடி, கூட்டத்துக்கு வந்தவங்களுக்கு போரடிக்காம இருக்கிறதுக்காக 4 குரலில் பேசி கலக்குவார். லோக்கலில் ஜெ. குரலில் பேசிக்கிட்டிருந்த வெள்ளியங்கிரிதான் இப்ப பல வி.ஐ.பி.க்களிடம் அதே குரலில் பேசி பரபரப்பை உண்டாக்கிட்டார்.''
""இப்படியொரு வேலை யை செய்தவர் மேலே நட வடிக்கை ஏதாவது உண்டா?''
""ஜெ தரப்பிலிருந்தோ அ.தி.மு.க சார்பிலோ புகார் தந்தாதானே காவல்துறை நடவடிக்கை எடுப்பாங்க.''""தலைவரே.. .. நீங்க டூப்ளிகேட் ஜெ. வாய்ஸ் பற்றி சொன்னீங்க. நான், ஒரிஜினல் விஜயகாந்த் வாய்ஸ் பற்றி சொல்றேன். தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 9-ந் தேதியன்னைக்கு மாநில மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அப்ப விஜயகாந்த், தி.மு.க. இவ்வளவு பெரிய கட்சியா வளர்ந்ததற்கு காரணம் மாணவரணியின் சிறப்பான செயல்பாடுதான்னு சொன்னார். மாணவ ரணி மா.செ. ஒருவர் விஜயகாந்த்தை குஷிப்படுத்துறதா நினைச்சு, நீங்கதான் அடுத்த முதல்வர், உங்களை அரியணை யில் ஏற்றாம விடமாட்டோம்னு சொல்ல, சட்டென குறுக்கிட்டிருக்கிறார் விஜயகாந்த். அட.. போங்கப்பா இதை கேட்டு கேட்டு புளிச்சுப்போச்சு. நான் முதலமைச்சர் ஆகுறதும் ஆகாததும் ஆண்டவனோட பிராப்தம். அவன் நினைச்சா எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். நீங்க ஊருக்குப் போய் ஃபீல்டு ஒர்க் பாருங்கன்னு சொல்லியிருக்காரு.''
""புது டைப்பான வாய்ஸா இருக்கே?''""
தே.மு.தி.க மாணவரணி நிர்வாகிகளும் அதைத்தான் சொல்றாங்க. நம்ம கேப்டன் ரஜினி வழியில் போக ஆரம்பிச்சிட் டாரோன்னு தங்களுக்குள்ளே பேசிக்கிட்டு, கூட்டம் முடிந்ததும் மட்டன் பிரியாணி விருந்தில் கலந்துக்கிட்டாங்க. தலைவரே.... அடுத்த மேட்டருக்கு வர்றேன். இதோ அதோன்னு ஒரு வழியா திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர்ந்துட்டாரு. ஜூலை மாதமே பா.ஜ.க கொடியை தன்னோட காரிலிருந்து அவிழ்க்கச் சொல்லிட்ட திரு, அப்போதிருந்தே காங்கிரசில் சேர தொடர் முயற்சி மேற்கொண் டிருந்தார். தீபாவளி சமயத்தில் டெல்லியில் சோனியா, ராகுல் இருவரையும் சந்தித்திருந் தார். இணைப்புத் தேதிக்கு சோனியா அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காமலே இருந்தது. அவரை காங்கிரசுக்கு கொண்டு வருவதில் மும்முரமா இருந்தவர் ப.சிதம்பரம்.'' ""அவர் முன்னிலையில்தானே காங்கிரசில் இணைந்திருக்கிறார் திருநாவுக்கரசர்.
""இந்த முறை 4 நாட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்தும் சோனியா அப்பாயிண்ட் மெண்ட் கிடைக்கலை. அவருக்கு ப.சி மூலமா தகவல் போனப்ப, நீங்களும் ஆசாத்தும் இருந்து கட்சியில் சேர்த்திடுங்கன்னு சொல் லிட்டாராம் சோனியா. இதையடுத்து, தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை அவசரமா டெல்லிக்கு அழைத்து, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் முன்னிலையில் திருநாவுக்கரசரை காங்கிரசில் சேர்த்துக்கிட்டாங்க.''""தனியாக ஒரு இணைப்பு விழா நடக்கும்னும் அறிவிக்கப்பட்டிருக்குதே!''""திருநா வுக்கரசர் தன்னோட ஆதரவாளர்களோடு திருச்சியில் டிசம்பர் மாதம் இணைப்பு விழாவை பிரமாண்டமா நடத்த திட்டமிட்டிருக்கிறார். அதில் சோனியா கலந்துக்குவாராங்கிற எதிர்பார்ப்பும் இருக்குது. திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர்ந்துவிட்டாலும் அவரோடேயே இதுநாள்வரை அரசியல் பயணம் மேற்கொண்ட கவிஞர் காசிமுத்து மாணிக்கம் போன்ற தீவிர ஆதரவாளர் கள் தி.மு.க பக்கம் போவதற்கு பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டிருக்காங்க.''""நானும் காங்கிரஸ் தரப்பு தகவல் சொல்றேம்ப்பா.. இது புதுச்சேரி மேட்டர். புதுச்சேரி கடற்கரையில் மகன் கண் முன்னேயே தாய்க்கும் மகளுக்கும் நடந்த பாலியல் கொடுமை பற்றி நம்ம நக்கீரனில் வெளியாகியிருந்த செய்தி ஒட்டுமொத்த மாநிலத்தையும் பரபரப் பாக்கியிருந்தது. சமீபத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி நிதியி லிருந்து புதுவை காவலர்களுக்கு வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது. அதில் பேசிய நாராயணசாமி, நம்ம நக்கீரன் செய்தியை சுட்டிக்காட்டி, நக்கீரனில் இந்தளவுக்கு எழுதிய பிற காவது நடவடிக்கை எடுக்கக்கூடாதா? யாருக்காக பயந்து கிடக்குறீங் கன்னு போலீசாரை பார்த்து காரசாரமா கேட்டார். ராஜ்யசபா எம்.பி. கண்ணனும், எல்லா அரசியல்வாதி களும் ஒரு ரவுடி குரூப்பை கையில் வச்சிருக்காங்க. போலீஸ்காரங்கள் துணிச்சலா நட வடிக்கை எடுக்க ணும்னார்.''""விழாவில் புதுச்சேரி முதல்வரும் இருந்திருப்பாரே?''""மேடையிலிருந்த புதுவை முதல்வர் வைத்திலிங்கம் நொந்து போய் உட்கார்ந் திருந்தார். ஒரு சி.எம்.மே பத்திரிகை பார்த்துதான் செய்தியை தெரிஞ்சுக்க வேண்டிய அளவுக்கு பாண்டி போலீசாரின் செயல்பாடு இருக்குது. இப்படியொரு சம்பவம் நடந்ததுமே என்கிட்டே சொல்லியிருந்தா என்ன நடவடிக்கை எடுக்குறதுன்னு சொல்லியிருப்பேன். யார்யாரோ செய்ற தப்புக்கு என் தலை உருளுதுன்னு போலீஸ் அதிகாரிகள் கிட்டே கடுப்பைக் காட்டியிருக் கிறார்.''""இதுக்குப் பிறகாவது புதுவை போலீசார் பொறுப்பா செயல்படுறாங் களான்னு பார்ப்போம்.... மறுபடியும் தமிழ்நாட்டுக்கு வர்றேங்க தலைவரே.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அழகிரியை குறிவைத்து பல கேள்விகளை எழுப்பணும்னும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெருசா கிளப்பணும்னும் அ.தி.மு.க எம்.பி.க்களுக்கு இன்ஸ்ட் ரக்ஷன் கொடுத்திருக்கிறார் ஜெ. அதோடு திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல்களில் யாரை களமிறக்கலாம்னு செங் கோட்டையன்கிட்டே ரிப்போர்ட் கேட்டிருக்கிறார். திருச்செந்தூரில் அனிதாராதாகிருஷ்ணனை தி.மு.க. நிறுத்தினால் அ.தி.மு.க மா.செ. சண்முகநாதன், சுப்ரமணிய ஆதித்தன், கார்னட் வைகுண்டராஜனின் தம்பி இந்த மூவரில் ஒருவரை நாம நிறுத்த லாம்னு செங்கோட்டையன் ரிப்போர்ட் கொடுத் திருக்கிறார். இதில் வைகுண்டராஜனின் தம்பி நான் ஆட்டத்துக்கு வரலைன்னு சொல்லிட்டாராம். அதனால டாக்டர் வெங்கடேஷை நிறுத்தலாமா அல்லது முந்தைய இடைத்தேர்தல் போல இதையும் புறக்கணிக்கலாமான்னு ஜெ. யோசிச்சுக்கிட்டி ருக்கிறார்.''""நான் சொல்லப்போறதும் இடைத் தேர்தல் நியூஸ்தான்.மேற்குவங்கத்திலும் கேரளா விலும் நடந்த இடைத்தேர்தல்களில் மார்க் சிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சித் தோல்வியையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை மாற்றணும்ங்கிற கோஷம், சி.பி.எம் தோழர்களிடம் அதிகமாகி யிருக்குது.''
அஜீத் - விஜய் ரகசிய சந்திப்பு அதிரடி ப்ளான்
அடுத்த தலைமுறையில் ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் பயங்கர வன்முறையில் ஈடுபட்டார்கள். ஆரம்பகாலங்களில் இருந்தே கமல் வித்தியாசமான படங்களில் நடித்து வந்தாலும் கூட ஒரு கட்டத்தில் ரஜினி போல் கமலும் மாஸ் ஹீரோவாக முடிவு செய்தார். ஒரே நாற்காலிக்கு இருவரும் குறி வைத்ததால் இருதரப்பு ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். இந்த ஹீரோக்களும் ஒருவரை ஒருவர் தங்கள் படங்களில் சாடிக்கொண்டனர். அதன்பின் கமல் வித்தியாசமான படைப்புகளில் கவனம் செலுத்த... மாஸ் ஹீரோ நாற்காலி ரஜினிக்கு கிடைத்தது.இப்போது விஜய்க்கும், அஜீத்துக்கும்தான் போட்டி. அஜீத் அவ்வப்போது வித்தியாசமான கெட்-அப்களில் நடித்து வந்தாலும் விஜய் போலவே மாஸ் ஹீரோ நாற்காலியைத்தான் விரும்புகிறார். அதனால் இவர்களிடையே போட்டி கடுமையாக இருக்கிறது. அவரின் ரசிகர்களும் அதனால் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள்.அஜீத்தும், விஜய்யும் பெரிய நட்சத்திரங்களாக உருவெடுப்பதற்கு முன் "ராஜாவின் பார்வையிலே' படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அந்தப் படத்தில் விஜய்க்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதன்பின் இருவரும் தனித்தனியே அசுர வளர்ச்சியை நோக்கி விரைந் தார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கிடையே எந்த மோதலும் கிடையாது. அஜீத்தும் பல ஹிட்களை கொடுத்த பிறகு 'அஜீத்தையும், விஜய்யையும் சேர்ந்து நடிக்க வைத்தால் என்ன? என்கிற ஐடியாவில் இறங்கியது மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம். வசந்த் இயக்கத்தில் "நேருக்கு நேர்' படம் ஆரம்பிக்கப்பட்டது! படத்திற்கும் பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் ‘கதையில் தனக்கு முக்கியத்துவம் இல்லை' என்று தெரிந்த அஜீத் படத்திலிருந்து விலகிக் கொண்டார். (அஜீத்திற்குப் பதில் சூர்யா நடித்தார்) அந்த சம்பவத்திலிருந்துதான் அஜீத்-விஜய் போட்டி தொடங்கியது. "கல்லூரி வாசல்' படத்தில் பிரசாந்த்தும் அஜீத்தும் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் மனக்கசப்பு. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற நியதிப்படி திடீரென விஜய்யும், பிரசாந்த்தும் சந்தித்து பரபரப்பு மூட்டினார்கள். இதனால் அஜீத்தை தனிமைப்படுத்துவது போல ஒரு தோற்றம் அப்போது கோலிவுட்டில் நிலவியது. அதற்கேற்ப அஜீத்தும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். பிரசாந்த்தும், அப்பாஸும் சேர்ந்து நடிக்கவிருந்த "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் கதாநாயகி விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரசாந்த் விலக... விஜய்-பிரசாந்த் கூட் டணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜீத் அந்த படத்தில் நடித்தார். இப்படி பிரசாந்த் தை நடுவில் வைத்து அஜீத்-விஜய் மோதல் கொஞ்சநாள் நடந்தது. அடுத்து விஜய் தோல்வியை தொடர்ந்து சந்தித்துவிட்டு "குஷி' படம் மூலம் எழுந்தார். அந்தப் படத் தில் ‘என்னைய மட்டுமில்ல.... என் இமேஜைக் கூட ஒன்னால ஒண்ணும் பண்ணா முடியாது' என பஞ்ச் டயலாக் பேசினார் விஜய்.
அஜீத் தன்னை "தல'யாக "தீனா' படத் தில் சொன்னார். உடனே "திருமலை' படத்தில் ‘"இங்க எவண்டா தல?' என டயலாக் பேசினார் விஜய்! இப்படி மாறி மாறி மோதிக்கொண் டார்கள். இதனால் அவரின் ரசிகர்களும் அடித்துக்கொண் டார்கள்."ஏகன் அப்படின்னா அழிக்கும் கடவுள் சிவன். ஆனா இந்த ஏகன் புரொடி யூஸரையும் சேத்து அழிச்சுட் டான்' என விஜய் தரப்பு மெஸேஜ் அனுப்புவதும், ‘"வில்லு' படம் பார்த்த குழந்தைகளுக்கு வாந்தி பேதி. படத்தை தடை செய்யச் சொல்லி மக்கள் அரசுக்கு கோரிக்கை' என அஜீத் ஆட்கள் பதில் மெஸேஜ் தர... இப்படி விஞ்ஞான வளர்ச்சியையும் தங்கள் மோதலுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இந்நிலையில்... கடந்த 5-ந் தேதி ஏவி.எம். ஸ்டுடியோவில் "அசல்' படத்தின் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த அஜீத்தும், "சுறா' படத்தின் பாடல் காட்சியில் நடித்துக் கொண்டி ருந்த விஜய்யும் காலை 11.30 மணியளவில் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள்!இந்த சந்திப்பிற்கான வாய்ப்பு இப்போது இருவருக்கும் கிடைத்தாலும் மூன்று மாதத்திற்கு முன்பி ருந்தே இவர்களை சந்திக்க வைக்க கணேஷ் எனும் தொழிலதிபர் முயற்சி எடுத்து வந்தார்! இரு வருக்கும் பொதுவான நண்பரான கணேஷ் ஒரு சமரச திட்டத்தையே தயாரித்து இருவரிடமும் மாறிமாறி பேசி வந்தார். அந்த திட்டம்?விஜய் படமும், அஜீத் படமும் ஒரே நாளில் வெளியாகிறது; அவரவர் ரசிகர்கள் படத்தை பார்க்கிறார் கள். இந்த இரண்டு படத்தில் எது நல்ல படம் என தெரிந்து கொண்ட பிறகே பொதுவான ரசிகர்கள் அந்த படத்தை மட்டும் பார்க்கிறார்கள். இதனால் ஒருவர் படம் ஹிட். மற்றவர் படம் தோல்வியடைகிறது. வருடத்துக்கு ஒருபடம் தரும் அஜீத்தும், விஜய்யும் அதை ஒரேநாளில் தராமல் பொங்கலுக்கு விஜய் படம் என்றால், சித்திரைக்கு அஜீத் படம், தீபாவளிக்கு விஜய் படம், பொங்கலுக்கு அஜீத் படம்னு வெளியிடலாம். இதனால் இருவர் படமும் தொடர்ந்து வெற்றி பெறும். இதன் மூலம் இருவரும் தங்கள் இமேஜை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். இதுதான் அந்த நண்பரின் சமரச திட்டம்! இந்த திட்டம் குறித்து விஜய்யும், அஜீத்தும் சந்தித்து பேசிக்கொள்ள முடிவும் செய்யப்பட்டி ருந்த நிலையில் சந்திப்பிற்கான தோது இல்லாமலேயே இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு ஏவி.எம்.மில் அமைந்துவிட்டது!அஜீத் வந்து விஜய்யை சந்திப்பதா? விஜய் வந்து அஜீத்தை சந்திப்பதா? என்கிற கேள்விக்கு இடம் தராமல் விஜய் தன் செட்டிலிருந்து நடந்து செட் வாசலுக்கு வந்தார். அதற்குள் அஜீத் விஜய் யின் செட்டுக்குள் நுழைய.... . "சுறா' யூனிட்டுக்கு செம ஷாக்! விஜய் புன்னகைத்தபடி அஜீத்தை கை குலுக்கி வரவேற்றார். இருவரும் யூனிட்டில் இருந்தவர்களிடம் கேஷுவலாக பேசிவிட்டு அதன்பின் தனியே அமர்ந்தார்கள்! இருவரும் பரஸ்பரம் குடும்ப நலன் விசாரித்துக் கொண்ட னர். இருவருக்கும் பழரசம் தரப்பட்டது. அஜீத்தின் கிருதாமீசை கெட்-அப்பை விஜய் பாராட்டினார். தொடர்ந்து.... தீபாவளிக்கு தனது "வேட்டைக் காரன்' படம் வெளிவராமல் போனதன் பின்னணியையும் அதனால் தனக்கு ஏற்பட்ட மனவருத்தங்களையும் அஜீத்திடம் பகிர்ந்து கொண்டாராம் விஜய். தங்களின் பட வெளியீடு சம்பந்தமான சமரச திட்டத்தின் மீதும் ஒரு நல்ல முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. இனி தொடர்ந்து நட்புறவுடன் செயல்படுவது என்றும், இதனால் தங்களின் ரசிகர்கள் மோதிக் கொள்ளும் சூழலுக்கு இடம் தரக்கூடாது என்றும் முடிவு செய் திருக்கிறார்களாம்.ஆக... இளைய தளபதி - தல சந் திப்புதான் இப்போ தைய கோலிவுட் டின் ஹாட் டாபிக். ரசிகர்கள் மோதிக் கொண்டு ரத்தம் சிந்தா மல் இருக்க இந்த சந்திப்பு பயன்பட்டால் சரி!
ஊதிவிட்ட விவேக்: பற்றி எரிந்த பத்திரிக்கையாளர்கள்
’குவாட்டரும், கோழி பிரியாணியும்...’என்று சினிமாவில் பேசிய டயலாக்கை பத்திரிக்கையாளை நக்கலடிக்கவும் பயன்படுத்தினார்.
பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று கொஞ்சமும் கவலைப்படாமல் பேசிவிட்டீர்களே சக நடிகர்களே கடிந்துகொண்டார்கள். உங்களால் ஒட்டுமொத்த நடிகர்கள் மீதும் கோபம் வரும் என்று கோபப்பட்டார்கள்.
இதெல்லாம் ஜுஜூபி என்று சிரித்த விவேக் இப்போது ’அன்றைக்கு ஒரு நாள் என் தொண்டை கட்டிப்போய் பேச முடியாமல் போயிருக்கக்கூடாதா’ என்று தன் வட்டத்திடம் நொந்து போய் புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.
ஆனாலும் அவரின் வில்லங்கம் மட்டும் ஓயவேயில்லை.
விவேக் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை என்று பத்திரிக்கையாளர்கள் முடிவு செய்திருந்தனர்.
பத்பஸ்ரீ விருது வாங்கியதை எந்த பத்திரிக்கையும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அந்த விருது வாங்குவதற்கான தகுதி விவேக்கிற்கு இல்லை என்று அந்த விருதை தடுக்க பலர் முற்பட்டபோது பயந்து போய்தான் தனது சாதி சங்கத்திடம் முறையிட்டார்.
உன் வாய்க்கொழுப்புக்கு நீயே அவஸ்தைபடு என்று சொல்லி சாதி சங்கம் கழட்டிவிட்டது. தன் சாதியை சேர்ந்தவர்கள் மூலமாக பத்திரிக்கையாளர்களுக்கு சமாதானத்தூது விட்டுப்பார்த்தார். பிரயோசனமில்லை.
கடந்த வாரம் நடந்த ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக விவேக் கலந்து கொண்டது தெரிந்ததும், விழாவையே ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் புறக்கணிக்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கதிகலங்கிப் போனார்கள். அந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியே எந்த பத்திரிக்கையிலும் வராமல் போகவே,இனிமேல் விவேக்கை எந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடக்கூடாது என்று முடிவெடுத்தார்களாம்.
இந்நிலையில் இன்று சென்னை பிலிம்சேம்பரில் ‘நல்வரவு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.
’விவேக் பேசிய வார்த்தைகள் காற்றோடு போய்விடுபவை அல்ல... காலம் உள்ளவரை பத்திரிகையாளர்கள் மீது வீசப்பட்ட அவச்சொற்கள். அவர் அன்றைக்கு அனைத்துப் பத்திரிகையாளர்களையுமே வேண்டுமென்றே திட்டினார் என்பது அவருக்கே தெரியும்.
பத்திரிகையாளர்களைப் பார்த்து மிகவும் கீழ்த்தரமாக, அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பிரயோகித்த இந்த நடிகருக்கு இதுவரை பகிரங்கமாக பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு காட்டவில்லை.
அதற்கொரு வாய்ப்பை அவரே உருவாக்கித் தருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் அவருக்கு நிச்சயம் கறுப்புக் கொடி காட்டுவோம்’என்று ஆவேசமடைந்தார்கள்.
அப்புறம் யோசித்த பத்திரிக்கையாளர்கள், இது ஒரு பாடல் வெளியீட்டு விழா. இதில் போய் நாம் அபசகுணமாக எதுவும் செய்து தயாரிப்பாளர் மனதை புண்படுத்தவேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார்கள்.
நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே வில்லங்கத்தோடுதான் வந்திருந்தார். தான் பேசினால்தானே பிரச்சனை. மற்றவர்களை பேச வைப்போம் என்று உள் வேலை பார்த்திருக்கிறார்.
ஆர்.கே.செல்வமணி பேசும் போது அந்த உள் வேலை ஆரம்பமானது.
‘’அன்று பெரியக்கலைவாணர் மஞ்சள் பத்திரிக்கையை எதிர்த்து பரபரப்புக்குள்ளானார். இன்று சின்னக்கலைவாணர்...மஞ்சள் பத்திரிக்கை என்று சொல்லமாட்டேன்...மஞ்சள் செய்தியை எதிர்த்து பரபரப்புக்குள்ளாகியிருக்கிறார்...’’என்று ஆத்திரமூட்டினார்.
’இது இசை வெளியீட்டு விழா. பாடல்கள், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், படம் பற்றி பேசுங்கள். இந்த பிரச்சனையை பேச இதுவல்ல இடம்’’என்று பத்திரிக்கையாளர்கள் ஆவேசமானார்கள்.
’இல்ல..இல்ல..அதுவந்து..’என்று செல்வமணி சமாளிக்க முடியாமல் திணறியபோது விழிபிதுங்கி உட்கார்ந்திருந்தார் விவேக்.
’அவர் பேசியது தவறுதான்..இது இசைவெளியீட்டு விழா..’என்று சிவசக்தி பாண்டியன் சமாதானம் செய்தார். வியர்த்து விறுவிறுத்துப்போன செல்வமணி, சரி,சரி என்று படத்தைப்பற்றி பேசிவிட்டு உட்கார்ந்துவிட்டார்.
விவேக் மட்டும் எதாவது வாய்திறக்கட்டும். அப்புறம் இது இசை வெளியீட்டு விழாவாக இருக்காது என்று பத்திரிக்கையாளர்கள் அமைதியானார்கள்.ஆனால் விவேக் பேச எழுந்த போது பத்திரிக்கையாளர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
விவேக் பேச வரும்போது பலரும் அவர் காதில் கிசுகிசுத்து அனுப்பினார்களாம். அதன்படி இந்த பிரச்சனை பற்றி பேசவே இல்லையாம். வழக்கமாக பேசுவது போல் நக்கல்,இரட்டை அர்த்தத்துடனும் பேசவில்லையாம்.
Fonseka allowed to retire with “immediate effect”
பொன்சேகா ராஜினாமா ஏற்பு: 3பக்க கடிதம்-16காரணங்கள்!
இந்நிலையில் அவர் இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளார். அதனால் அவர் முப்படைகளின் தலைவர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்துவிட்டார்.
மகிந்த ராஜபக்சேவுக்கு அனுப்பிய 3 பக்க ராஜினாமா கடிதத்தில், ராஜினாமா செய்வதற்கான 16 காரணங்களை எழுதியிஉருந்தார்.
அக்கடிதத்தில், ‘’இலங்கையில் ராணுவ ஆட்சி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார் ராஜபக்சே.
புரட்சியை தடுக்கும் பொறுட்டு அவர் கடந்த அக்டோபர் 15ல் இந்தியாவின் உதவியை நாடினார்’’என்பன உட்பட 16 காரணங்களை குறிப்பிடிருந்தார்.
யார் துரோகி?
பலரும் அறிய காதல் லீலை - பாழாகிறது சமூக ஒழுங்கு
கோவை நகரவாசிகள், பள்ளி மாணவ, மாணவியரின் பிரதான பொழுது போக்கும் இடம் வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக் காட்சி சாலை. பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்படுகிறது. மிருகக் காட்சி சாலை, செவ்வாய் தவிர பிற நாட்களில் காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை செயல்படுகிறது. மிருகக் காட்சிசாலையை பார்வையிட நகர் பகுதி பள்ளிகளில் இருந்து மட்டுமின்றி, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் அதிகம் வருகின்றனர்.
ஒழுங்கீன செயல்கள்: வ.உ. சி., பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டதும் ஆண், பெண் ஜோடிகள் நுழைந்து ஆங்காங்கு ஆக்கிரமித்துக் கொள் கின்றனர். புல்வெளியில், புதர் மறைவில், மரத்தின் பின்னால் என பல இடங்களிலும் தனியாக அமர்ந்து சேஷ்டையில் ஈடுபடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும், மடியில் படுத்தபடியும் காதல் விளையாட்டு புரிகின்றனர். இவர்களில் பலரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூங்காவுக்கு வருவோரை பற்றிய எவ்வித கவலையும் கொள்வதில்லை. சமீபத்தில், இது போன்ற ஜோடிகளின் அத்துமீறல் அதிகரித்ததை தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் போலீசுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. மாலை நேரத்தில் திடீர் ரெய்டு நடத்திய போலீசார், பூங்காவில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டிருந்த ஜோடிகளை பிடித்து கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பினர். ஓரிரு நாட்கள் போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்த காரணத்தால், ஜோடிகளின் சில்மிஷ வேலைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பின்னாளில் போலீசாரின் கண்காணிப்பு படிப்படியாக குறைந்து, தற்போது அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதை வேடிக்கை பார்த்து ரசிக்கவும், மொபைல் போன் கேமராவில் படம் பிடிக்கவும் சில வாலிபர்கள் சுற்றித்திரிகின்றனர்; சில ஜோடிகளை படம் பிடித்து மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட போட்டோவை காண் பித்து மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் நடந் துள்ளன. எனினும் ஆண், பெண் ஜோடிகள் வருவது குறைந்தபாடில்லை.
மாணவர்கள் "கட்': வ.உ.சி., பூங்காவில் காதல் ஜோடிகளின் சில்மிஷ செயல்கள் ஒரு புறம் அதிகரித்திருக்க, மறுபுறம் பள்ளி மாணவர்கள் வகுப்பை "கட்' அடித்துவிட்டு, பூங்கா மற்றும் வ.உ.சி.,மைதானத்தில் சுற்றித்திரிவதும் அதிகம் நடக்கிறது. புத்தக மூட்டைகளை மைதானத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுகின்றனர். மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்து செல்வதை போல, வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இந்த மாணவர்களில் சிலர் புகை பிடிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.
கஞ்சா ஆசாமிகள்: கஞ்சா விற்கும் நபர்கள், பாலியல் தொழிலுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் நடமாட்டமும் வ.உ.சி., பூங்கா மற்றும் மைதானம் பகுதியில் அதிகரித் துள்ளது. கையில் "பேக்'குடன் சுற்றித் திரியும் நபர்கள் கஞ்சா பொட்டலங்களை திறந்தவெளியில் சர்வ சாதாரணமாக விற்கின்றனர். இதை வாங்கவும் "வாடிக்கையாளர்கள்' வருகின்றனர். இவர்கள், பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுப்பதால், மாணவர்களையும் கஞ்சா புகைக்கும் பழக்கம் தொற்றிக் கொள்ளும் அபாயமிருக்கிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் வந்து செல்லும் வ.உ.சி., பார்க்கில் ஆண், பெண் ஜோடிகளின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
ஆசிரியை ஆவேசம்: வ.உ.சி., பூங்காவுக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்திருந்த ஆசிரியை கூறியதாவது: வ.உ.சி., பூங்கா மட்டுமின்றி, மிருகக் காட்சி சாலை வளாகத்திலும் சிலர் ஜோடி, ஜோடியாக அமர்ந்துள்ளனர். பலரும் தங்களை கவனிப்பார்களே, என்ற கூச்சம் கூட அவர் களிடம் இல்லாதது கவலை அளிக்கிறது. மிருகங்களை பார்வையிட பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்தால், இது போன்ற ஜோடிகள் தான் அதிகம் இருக்கின்றனர். இவர்களை பிள்ளைகள் வேடிக்கை பார்த்தபடி செல்லும் போது, நாங்கள் கண்டித்து அவர்களின் பார்வையை திசைதிருப்ப வேண்டியுள்ளது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, கோவை மாநகராட்சி நிர்வாகம், கூடுதல் காவலாளிகளை நியமித்து கண்காணிக்கலாம். சில்மிஷ செயலில் ஈடுபடுவோரை, பார்க்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது, பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, ஆசிரியை தெரிவித்தார்.
Thursday, November 12, 2009
Fonseka says he will decide on Politics on handing over the Uniform..
When asked by reporters if he had an issue with the government General Fonseka said "You have to ask that from the Government".
Fonseka also said that he had done his best for the country and now he wants to retire from the current position he holds.
Government confirms Fonseka handed over letter
General Fonseka resigns as Chief of Defense Staff
சரத் பொன்சேகாவிற்கு எதிராகப் போராட பல்லாயிரக் கணக்கான பிக்குகள் தயார் ?
இதனால் ஆளும் தரப்பு, சரத் பொன்சேகா தேர்தலில் நிற்பது அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே தவிர்ப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. இதன் ஒரு வழிமுறையாக தற்போதைய அரசுத் தலைவருக்கு ஆதரவு தரும் வகையில், சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட முயன்றால், பிக்குகள் முன்னணி போராட்டத்தில் குதிக்கவுள்ளது.
பிக்குகள் முன்னணி, சுமார் 15 ஆயிரம் பிக்குகளுடன் மாபெரும் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு ஆதரவாக மேலும் சில பெளத்த அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் யுத்தத்துக்கு எதிரான அமைப்ப நடத்தவிருந்த பேரணியொன்றின் இடையில் புகுந்த பிக்குமார்களும், பெளத்த அமைப்புகள் சிலவும் பெரும் குழப்பம் விளைவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது