பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, January 8, 2010

ரஜினியின் 2வது மருமகன்


ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறுகிறது. கட்டுமான நிறுவனத்தின் அதிபர் மகனை அவர் மணந்து கொள்கிறார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.அவர் திரைப்பட நடிகர் தனுசை மணந்து கொண்டார்.
ரஜினிகாந்தின் 2வது மகள் சௌந்தர்யா ஆக்கர் ஸ்டுடியோ என்னும் பெயரில் அனிமேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ரஜினியை மையமாக கொண்ட சுல்தான் தி வாரியர் என்னும் அனி மேஷன் படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவா படத்தை யும் அவர் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தனது 2வது மகள் சௌந்தர்யாவுக்கு திருமணம் செய்ய ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். படம் முடியவுள்ள நிலையில் அவர் தனது மகள் திருமணத்தை பேசி முடித்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவன அதிபர் ராம்குமார் என்பவரின் மகன் அஸ்வினுக்கும், ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கும் திருமணம் பேசப்பட்டிருப்பதாக இரு குடும்பத்திற்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஸ்வின் பொறியியல் படிப்பை முடித்து பின்னர் அமெரிக்காவில் மேற் படிப்பு படித்தவர். தற்போது தனதுதந்தை நிறுவனத்தில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். சௌந்தர்யாஅஸ்வின் திருமணம் அடுத்த மாதம் 14ந் தேதி நடை பெறலாம் என்று கூறப்படுகிறது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பந்தம் இருதரப்பினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி யிருப்பதாகவும் தெரிகிறது.