


வவுனியா செட்டிக்குளத்தில் நடைபெறும் வைபவமொன்றில் வைத்து இவர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகம் தெரிவித்துள்ளது.
புலிகளினால் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்ட, ஆனால் பயங்கரவாதத்துடன் நேரடியாகத் தொடர்பு இல்லாதவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க கூறினார்.இன்று விடுவிக்கப்படுபவர்களில், வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களிடையே 18 வயதுக்குக் குறைவானவர்கள் சுமார் 100 பேரும் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது. ஏனையவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டு வருவதோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பற்றவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் தயா ரத்னாயக்க கூறினார்.
இதற்கிடையில், இன்று விடுவிக்கப்படும் 713 பேரையும் இலங்கை புலனாய்வுப் பிரிவு இன்னொரு தடவை தாம் ஆராயவேண்டும் எனவும், அதற்கான ஒரு குழுவை வவுனியா அனுப்ப வேண்டும் எனவும் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு குற்றவியல் நீதிபதி சம்பக் ஜானகி ராஜரட்ன நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுவிக்கப்படுபவர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாதவர்கள் எனும்போது மீண்டும் விசாரணை செய்வதற்கு அவசியம் இருக்கிறதா என்ன? அவர் புலனாய்வாளர்களைக் கேள்வி கேட்டிருந்தார்.