பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, January 1, 2010

சமாதானம் நோக்கிய பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேண தயார்

எமது இறைமையை ஏற்று சமாதானம், சுபீட்சத்தை நோக்கிய எமது பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேணுவதற்கும் நாம் தயாராக உள்ளோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்து ள்ளதாவது; புதியதோர் ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் வேளையில் கடந்த வருடத்தை மீட்டிப்பார்ப்பதும் புதிய ஆண்டின் எதிர்பார்ப்புகள் குறித்து சிந்திப்பதும் மரபாகும்.
கடந்த வருடம் நாம் ஒரு தேசமாக ஒன்றிணைந்து 27 வருடகால கொடூரப் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து, எமது மக்கள் மத்தியிலிருந்த சந்தேகம், பிரிவினை என்பவற்றைத் துடைத்தெறிந்ததன் மூலம் நாம் பெற்றுக்கொண்ட அடைவுகள் குறித்த பெருமையோடும் திருப்தியோடும் புதிய ஆண்டில் பிரவேசிக்கின்றோம்.
எமது வரலாறு நெடுகிலும் நாம் செய்ததுபோன்ற அளப்பெரும் தியாகங்களின் மூலம் ஐக்கிய இலங்கையை வெற்றிகொண்டோம். புதியதோர் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் இச்சந்தர்ப்பம் தேசத்தின் வெற்றிக்காக உயர்ந்த தியாகங்களைச் செய்த படைவீரர்கள், அவர்களது பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவிமார்கள் அனைவருக்கும் தேசத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.
ஒரு தேசம் என்ற வகையில் முன்னேற் றத்தையும் சுபீட்சத்தையும் எதிர்பார்க்கும் எமது மக்களின் அபிலாஷைகளை நிறை வேற்றவும் எமது எதிர்கால சந்ததியினருக்கு அமைதியும் ஐக்கியமும் நிறைந்த நாட்டை கட்டியெழுப்பவும் முடியுமென்ற மிகுந்த நம்பிக்கையோடு நாம் இப் புத்தாண்டைப் பார்க்கிறோம்.
பயங்கரவாதத்தைத் தோற் கடிக்கும் எமது முயற்சிக்கு குறுக்கே நின்ற இடையூறுகளுக்கு எதிராக நாம் உறுதியாக இருந்ததுபோன்று கடந்தகால காயங்களைக் குணப்படுத்தும் விடயத்திலும் வெளியிலி ருந்துவரும் அழுத்தங்களுக்கு அடிபணியாது அந்த இலக்கை அடைந்துகொள்ள எம்மை அர்ப்பணித்துள்ளோம்.
பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் எமது முழுப்பலத்தையும் அபிவிருத்தி செயற்பாடு களை நோக்கி குவிப்பதற்கும் பயங்கர வாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் நாம் ஆரம்பித்த பல்வேறு பாரிய கருத்திட்டங்களைத் தொடர்வதற்கும் நாடு சுதந்திரமடைந்தது முதல் மறுக் கப்பட்டிருந்த முன்னேற்றத்தை எமது நாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப் பதற்கும் எனது அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. இன்று ஆரம்பிக்கும் புதிய தசாப்தத்தின் எமது அபிவிருத்தி மூலோபாயங்கள் இலங்கையை தென்னாசியாவிலேயே ஒரு கேந்திர நிலையமாக மாற்றியமைக்கும்.
அந்தவகையில் அபிவிருத்தியை கட்டியம் கூறும் வகையில் அமைக்கப்படும் துறை முகங்கள், விமான நிலையங்கள் மற்றும் விரிந்த நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக் கப்பட்டுவரும் அதேவேளை தகவல் தொழிநுட்ப அறிவையும் பரந்தளவில் அதிகரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.
எதிர்பார்க்கப்பட்ட ஒரு குறுகிய காலப் பகுதியில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்களில் பெருந்தொகையினரை மீள் குடியேற்றும் நடவடிக்கையில் நாம் வெற்றிகண்டோம். இதேபோன்று புத்தாண்டில் எமது மக் கள் நாட்டின் அரசியல் அபிவிருத்தியில் ஒரு தீர்க்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கையின் தேசிய விவகாரங்களில் மூலோபாய தலையீடுகளைக் கொண்டுவர விரும்புபவர்களால் ஏற்படுத்தப்படும் பொரு ளாதார தடை அல்லது வர்த்தக நலன்களை தடைசெய்யும் அச்சுறுத்தல்களால் நாம் பின்வாங்கப்போவதில்லை.
எமது நாட்டில் பயங்கரவாதத்தைத் தோற் கடித்து எமது மக்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவருவதில் எமக்கு முழு அளவில் உதவிய நாடுகளோடு பலமானதும் நிலையானதுமான நட்பை பேண நாம் அர்ப்பணிப்போடு உள்ளோம். அதேபோன்று, எமது இறைமையை ஏற்று சமாதானம் சுபீட்சத்தை நோக்கிய எமது பயணத்தில் எம்மை ஊக்குவிப்பவர்களோடு நல்லுறவைப் பேணுவதற்கும் நாம் தயாராக உள்ளோம். புலர்ந்திருக்கும் இப்புத்தாண்டில் நாம் எதிர்பார்க்கும் அபிவிருத்தி எமது சூழ லைப் பாதுகாப்பதுவும் அதிகரித்துவரும் போட்டிமிக்க உலக சந்தைச் சூழலில் எமது உற்பத்திகளுக்கு நல்லதொரு இடத்தை உறுதி செய்யும் அதேவேளை எமது தேசிய சொத்துக்களைப் பாது காப்பதுவுமாகும். எல்லா இலங்கையர்களினதும் அபி லாஷையான கண்ணியமும் கீர்த்தியும் மிக்கதோர் இலங்கை தேசத்தை கட்டி யெழுப்புவதற்காக தேசத்தின் ஸ்திரத்தன்மை எமது மக்களின் முன்னேற்றம் என்ப வற்றுக்கான அர்ப்பணிப்போடு சமாதானமும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த புத் தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.