பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, January 13, 2010

நக்கீரன் சொன்னது! கேட்காத மக்கள் கண்ணீர்!


அதிர்ச்சியோ ஆச்சர்யமோ படுவதற்கு ஒன்றுமில்லை.
"ஹெலிகாப்டர்ல இறங்கி வந்து... இப்படி யும் மோசடி' என்று ஜெ.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத் தின் தில்லுமுல்லுகளையும்...
ஜெகஜ் ஜால ஜெ.பி.ஜெ.வான இதன் உரிமையாளர் ஜஸ்டின் தேவ தாஸின் ஃப்ராடு தனத்தையும் கடந்த 08-10-08 நக்கீரன் இத ழிலேயே அம்பலப்படுத்தியிருந் தோம். அப்போதே அந்நிறுவனத் தில் பணம் போட்டு ஏமாந்த பலரும் போலீஸில் புகார் கொடுக்க... பணத்துக்கு துணை போகும் அதிகாரிகளால் தப்பித்துவிட்டார் ஜெ.பி.ஜெ.அதற்குப் பிறகாவது உஷா ரானார்களா மக்கள்? ம்ஹூம்... ஜெ.பி.ஜெ.வின் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் வாய் பிளந்து முன்பைவிட அதிகமாகவே பணம் கட்டி நிலத் திற்காக காத்திருந்தவர்களின் வயிற்றில் இடியாய் இறங்கி கண்ணீர் விட வைத்திருக்கிறது இந்த செய்தி.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக துறைமுகப்பகுதி தலைவர் முகமது ஹாலித் ""ரெண்டு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணம் கட் டின பாத்திமாவுக்கு நிலம் கொடுக்காம இழுத்தடிக் கிறதோட... எக்ஸ்ட்ராவும் பணம் கேட்டு மிரட்டுறதா நம்மக்கிட்ட வந்து சொன்னதும்... சென்னை அண்ணாநகர் 18-வது மெயின் ரோட்டுல இருக்குற ஜெ.பி.ஜெ.வின் தலைமை ஆபீஸுக்குப் போனோம். அங்க போனபிறகுதான் ஏகப்பட்ட பேர் ஏமாந்து போய்...
அடியாட்களால் மிரட்டப்படுறதும் தெரிய வந்தது. அதுக்கப்புறம்தான் எல்லாரையும் கூட்டிட்டுப் போய் புகார் கொடுத்தோம். சினிமாவும், சீரியலும் பார்க்குற நேரத்துக்கு நக்கீரன் மாதிரியான விழிப்புணர்வு பத்திரிகைகளை படிச்சாலே ஏமாறாம இருக்கலாம்'' என்கிறார் அவர்.
""தமிழ்நாடு மட்டுமல்ல ஜெ.பி.ஜெ.வின் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி என 120 கிளைகளும், 40 அலுவலகங்களும், 60 சேவை(?) மையங்களும் உள்ளன.
கர்நாடகாவில் மட்டுமே ரூ.7 கோடி அளவுக்கு பணம் வசூலித்து மோசடி செஞ்சுருக்காரு. விஜயக்குமார், மீனா, பா.விஜய்னு வெச்சு விளம்பரங்கள் பண்ணினது மட்டுமில்லாம... சினிமா, சீரியல் முன்னணி நடிகைகளிடமும் ஜெகஜ்ஜாலமாக இருக்கும் கில்லாடி இவர்'' என்கிறார்கள் ஜெ.பி.ஜெ.வை பற்றி நன்கு அறிந்தவர்களே.சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது இந்த வழக்கு. ஐ.ஜி.விஜயகுமாரோ, ""புகார்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. நாலரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெங்களூரில் கைது செய்யப்பட்ட ஜெ.பி.ஜெ.. நிறுவனத்தின் உரிமையாளர் ஜஸ்டின் தேவதாஸ் மீது 420 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செஞ்சுருக்கோம். முழுமையா விசாரித்த பிறகுதான் பல உண்மைகள் வெளிவரும்'' என்கிறார்.
"ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்' என்ற ஓல்டு டயலாக்கை விட்டுக் கொண்டிருக்காமல் அட்லீஸ்ட் ஜெ.பி.ஜெ.வுக்கு துணை போனவர்களையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.