பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, January 15, 2010

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

வேட்டைக்காரன் படம் சரியில்லை என்பது தெரிந்த விசயம். சன் டிவியின் விளம்பரத்தால் அது கொஞ்சம் மறைந்து போனது. விளம்பரத்தால் ஓரளவு கலெக்‌ஷன் ஆகிக்கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் சன் பிக்சர்ஸ், படத்தை ஓட வைப்பதற்கு ஏவி.எம். பாணியை கையாண்டதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாகிவிட்டது.
வேட்டைக்காரன் படத்தை தயாரித்தது ஏவி.எம்.தான். பொதுவாக ஏவி.எம். தயாரித்த படங்கள் ஓடுவதற்கு அந்நிறுவனம் பல பரிசு போட்டிகளை அறிவிப்பது வழக்கம். இந்த போட்டிகளில் முக்கிய நட்சத்திரமாக பெரும்பாலும் பங்கேற்று பரிசு அளித்தது நடிகை மனோரமா.
இப்படி பரிசு போட்டி அறிவிப்புகள் மக்கள் மத்தியில் ‘’ஆஹா அப்ப படம் ஓடலையா’’ என்ற கமெண்ட்டை கிளம்பும். வேட்டைக்காரனிலும் அதுதான் நடந்திருக்கிறது. வேட்டைக்காரன் படத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்போருக்கு 25 ஆயிரம் பரிசு என்ற விளம்பரம் வந்ததுமே வேட்டைக்காரன் படம் பார்க்காதவர்களும், அப்படம் பற்றி கேள்விப்படாதவர்களும், ‘’ஏன் வேட்டைக்காரன் படம் நல்லாயில்லையா? படம் ஓடலையா? இப்படி போட்டியெல்லாம் வைக்கிறாங்களே?’’என்ற கேள்வியை எழுப்பிவிட்டார்கள்.
அப்புறமென்ன, தியேட்டர்களில்.......!(சொல்ல வேண்டுமா என்ன..தெரிந்த விசயம்தானே)