பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, October 25, 2009

தி.மு.க. மத்திய மந்திரி அமைச்சகத்தில் சி.பி.ஐ. பாய்ச்சல்! ஏன்? எதற்கு?


""ஹலோ தலைவரே... டெல்லியில் நடந்த சி.பி.ஐ. ரெய்டு, தமிழகத்தில் கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும்ங்கிற பரபரப்போடு அரசியல் நோக்கர்களிடம் விவாதம் நடந்துக் கிட்டிருக்குது.''""தொலைத் தொடர்புத்துறை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நடந்த ரெய்டு பற்றித்தானே சொல்றே?''""ஆமாங்க தலைவரே... மகாராஷ்ட்ரா, ஹரியானா, அருணாச்சலப் பிரதேசம் இந்த 3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மூன்றிலும் காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்ற செய்திகள் பரவிக்கிட்டிருந்த அதே நேரத் தில்தான் டெல்லியில் ரெய்டு நடந்துக் கிட்டிருந்தது. நாம ஏற்கனவே பலமுறை விளக்கமா பேசியிருக்கிற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தமான புகார்களையடுத்துதான் சி.பி.ஐ.தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சோதனை நடந்திருக்குது. 2ஜி ஸ்பெக்டரம் எனப்படும் இரண்டாம் தலை முறை அலைக்கற்றைகளை யுனிடெக், ஸ்வான் என்ற 2 கம்பெனிகளுக்கு மத்திய அமைச்சர் ஆ.ராசா பொறுப்பு வகிக்கும் தொலைத்தொடர்பு துறை குறைந்த விலையில் கொடுத்ததாகவும், அதை இந்த நிறுவனங்கள், வெளி நாட்டுக் கம்பெனிகளுக்கு அதிக விலைக்கு விற்றுவிட்டதால், இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம்ங்கிறதும்தான் குற்றச்சாட்டு.'
'""இதைத்தான் எம்.பி. எலெக்ஷன் சமயத்திலேயே எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ததே... அப்புறம் நாடாளு மன்றத்திலும் இதே பிரச்சினையைக் கிளப்பியபோதும், ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டினால் எந்த நட்டமும் இல்லைன்னு, தொடர்ந்து வருமானம் கிடைக்கிற விதத்தில்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி ஒதுக்கப்பட்டிருக்குதுன்னு எதிரிகளே பாராட்டுறவிதத்தில் பதில் கொடுத்திருந்தாரே ஆ.ராசா....''""19-ந் தேதி பிரதமர் தலைமையில் கேபினட் மீட்டிங் நடந்தது. அதில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டிருக்கு. யுனிடெக் கம்பெனி 1200கோடி ரூபாய்க்கு ஸ்பெக்ட்ரத்தை வாங்கி, டெலிநாக் என்கிற வெளிநாட்டு கம்பெனிக்கு 6000 கோடிக்கு விற்றது தொடர் பான ஆலோ சனையின்போது, வெளிநாட்டு கம்பெனி இதை வாங்கியிருப்பதால், அதன் முதலீடு நம் நாட்டில் செய்யப்படும். இது நமக்கு லாபம் தான்னு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சொல்லி யிருக்கிறார். இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பிரதமர் தலைமையில் கூடிய கேபினட்டும் க்ளியர் பண்ணிடிச்சி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வாங்கிய வெளிநாட்டு கம்பெனிக்கு பாகிஸ்தானிலும் நெட் வொர்க் இருக்குது. இதனால, நம்நாட்டு ரகசியங்கள் அங்கே போக வாய்ப் பிருக்குதாங்கிறதையும் ஆய்வு செய்துதான் இந்த முடிவை எடுத்திருக்காங்க. 19-ந் தேதியே க்ளியர் பண்ணப்பட்ட விவ காரத்திற்குத்தான், 21-ந் தேதியன்னைக்கு சி.பி.ஐ. வழக்குப் பதிவு பண்ணியிருக்குது. அதாவது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 22 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு என சொல்லப்படுகிறதுன்னு வழக்கு. இதன்பேரில்தான் 22-ந் தேதி ரெய்டு நடந்தது.''""தன் தலைமையிலான கேபினட் க்ளியர் பண்ணிய விஷயம் தொடர்பா, தன் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதை பிரதமர் எப்படி அனுமதித்தார்?''""
22-ந் தேதியன்னைக்கு டெலிகாம் அலுவலகமான சஞ்சார் பவனில் சி.பி.ஐ. ரெய்டு நடத்திக்கிட்டிருந்த தகவலை, மதியநேர ஓய்வுக்குப் பிறகு கலைஞரின் கவனத்துக்கு இங்கே உள்ளவங்க கொண்டு போயிருக்காங்க. பிரதமர் அனுமதியில்லாமல் சி.பி.ஐ. எப்படி செயல்படும்னு யோசித்த கலைஞர், உடனே அமைச்சர் ஆ.ராசா விடம் பேசியிருக்கிறார். பிரதமரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்கும்படி சொல்ல... ஆ.ராசாவும் பிரதமரை சந்தித்து, கேபினட் முடிவை நினைவூட்டி, அதன்பிறகு இப்படியொரு நடவடிக்கை மேற்கொள்ள என்ன காரணம்னு நேரடியாகவே கேட்டிருக்கிறார். தனக்குத் தெரியாமலேயே இந்த ரெய்டு நடந்திருப்பதா சொன்ன பிரதமர், இதை உங்க லீடர்கிட்டேயும் சொல்லுங்க. ரெய்டு நடத்தியது எந்த அடிப்படையிலேன்னு நானும் விசாரிக்கிறேன்னு சொல்லியிருக்கிறார். மறுநாள், டி.ஆர்.பாலுவும் பிரதமரை சந்தித்து விசாரிக்க, அப்பவும் தனக்குத் தெரியாமல் இது நடந்திருப்பதைச் சொன்ன பிரதமர், தனக்குப் பக்கத்திலிருந்த அதிகாரிகள் கிட்டே, ஏன் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப் பட்டதுன்னு எனக்கு ரிப்போர்ட் கொடுங்கன்னு சொல்லியிருக்கிறார்''.""பிரதமர் கட்டுப்பாட்டில் உள்ள துறையில் அவரோட அனுமதியில்லாமல் அவருக்கே தெரி யாமல் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுதுன்னா, அதற்கு பலமான பின்னணி இருக்கணுமே?


''""நிறைய பின்னணித் தகவல்களைச் சொல் றாங்க தலைவரே.. .. காங்கிரசை சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி கொடுத்ததைக் கண்டித்து மதுரையில் கலைஞர் பங்கேற்கும் தி.மு.க பொதுக்கூட்டம் பற்றிய அறிவிப்பு வந்தது. ராகுல்காந்திக்கு நெருக்க மானவரான ஜெய்ராம்ரமேஷ், இதை ராகுல் கவனத்துக்குக் கொண்டுபோனதால, தி.மு.க.வுக்கு செக் வைக்கும் விதத்தில், ராகுல் இன்ஸ்ட்ரக் ஷன்படி சி.பி.ஐ. நடவடிக்கை தொடங்கி யிருக்குதுங்கிறது ஒரு பின்னணி.""21-ந் தேதி காலையிலேயே சி.பி.ஐ. வழக்குப் பதிவு பண்ணிடிச்சி. 21-ந் தேதி நைட்டுதான் கண்டன கூட்டம் பற்றிய அறிவிப்பு வந்தது. பின்னாடி அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு முன்னாடியே எப்படி செக் வைப் பாங்க?''""இன்னொரு தகவல் என்ன சொல்றாங்கன்னா, தமிழகத்துக்கு ராகுல் வந்தப்ப அவரை சந்திக்க நடிகர் விஜய் திட்டமிட்டிருந்தாராம். சந்திக்கக் கூடாதுன்னு ஒரு தரப்பு மிரட்டியதாகவும், அதனாலதான் சந்திப்பு நடக்கலைன்னும் ராகுல்காந்திக்கே தகவல் பாஸ் பண்ணிட்டாராம் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய் விவகாரத் துக்காக ராகுல் எடுத்த ஆக்ஷன்தான் இதுன்னும் ஒரு தகவல்.''""சீரியஸான மேட்டரை பேசிக் கிட்டிருக்கோம். சின்னபுள்ளத்தனமான காரணத்தை சொல்றியே?''""டெல்லி உயர்மட்டத்திலிருந்து கிடைச்ச 2 காரணங்களை சொல்றேங்க தலைவரே... சென்ட்ரல் விஜிலென்ஸ் பரிந்துரைப்படிதான் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்குது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பா சுப்ரீம்கோர்ட்டில் ஒரு பொதுநல மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருக்குது. இது சம்பந்தமா கோர்ட் கேள்வி கேட்டால், ஆக்ஷன் எடுத்துக்கிட்டிருக்கிறோம்னு பதில் சொல்வதற்காகத்தான் சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுன்னு ஒரு காரணம் சொல்றாங்க.''""இன்னொரு காரணம்?'' ""3 மாநில சட்டமன்றத் தேர்தல் தொடர்பா சோனியாவும் ராகுலும் எக்சிட் போல் எடுக்கச் சொல்லியிருந்திருக் காங்க. அதில், மகாராஷ்ட்ராவில் காங்கிரசும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் சம அளவிலான இடங்களில் ஜெயிக்கும்னு ரிசல்ட் கிடைத்திருந்ததாம். இப்படி ஒரு ரிசல்ட் வந்தால், இரண்டு கட்சிகளுக்கும் தலா இரண்டரை வருஷம்னு முதல்வர் பதவியை பங்குபோடும் திட்டத்தை சரத்பவார் முன்வைப்பார்னு யோசித்திருக்கு காங்கிரஸ் மேலிடம். இதற்கு ஏதாவது ஒரு வகையில் செக் வைக்கணும்னு முடிவெடுத்திருக்காங்க. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை அரசிடமிருந்து வாங்கிய கம்பெனிகளில் ஒன்றான ஸ்வான் நிறுவனம், சரத்பவாருடையது. ரியல் எஸ்டேட் நிறுவனமான ஸ்வான், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸை எப்படி வாங்கியது என் பதை கண்டுபிடிக்கப் போவ தாக எலெக்ஷன் ரிசல்ட் டுக்கு முதல்நாளான 21-ந் தேதியன்னைக்கு வழக்குப் பதிவு பண்ணி, ரிசல்ட் வந்துக்கிட்டிருந்த நாளில் ரெய்டை நடத்தி, சரத் பவாருக்கு செக் வைத்த தோடு, தி.மு.கவை மையப் படுத்தி எதிர்க்கட்சிகள் பல மாதங்களா இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைக் கிளறிக் கொண்டிருப்பதால் தி.மு.க.வுக் கும் ஒரு செக் வைப்போம்னு வெற்றிக்களிப்பில் இருக்கும் காங்கிரஸ் மேலிடம் செயல்பட்டிருக்குது.
''""ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!''""
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள பா.ம.க, சி.பி.எம், சி.பி.ஐ. கட்சிகள் முடிவு செய்திருக்குது. இந்தக் கட்சிகளெல்லாம் தி.மு.க.வுடன் நெருங்குவதைப் பார்த்தால் 2011-லும் 2006 சட்டமன்றத் தேர்தல் போலவே கூட்டணி அமையும்போலத் தெரியுது. காங்கிரஸ் சைடிலிருந்து வெளிப்படும் ராங் சிக்னல்கள்தான் புதியகுழப்பத்தை உண்டாக்குது.''""தலைவரே... ... செம்மொழி மாநாட்டில் ஏன் கலந்து கொள்ளணும்னும், ஏன் கலந்துகொள்ளக் கூடாதுன்னும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் டிஸ்கஷன் நடந்திருக்குது. இதில் சி.பி.ஐ. தரப்பில் நடந்த விவாதத்தின்போது, இப்ப உள்ள நிலைமையில் செம்மொழி மாநாடு தேவையா? தள்ளி வைக்கலாமேன்னு கருத்துகள் வந்திருக்குது. சி.பி.எம். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடிவெடுத்துவிட்ட நிலையில்... நாமும் கலந்துக்குவோம்னும், இலங்கைத் தமிழர் பிரச்சனை உள்ளிட்ட தமிழர் பிரச்சனையை வலியுறுத்துவோம்னு சி.பி.எம். தரப்பு தீர்மானித்திருக்குது. அதோடு ஜெ. தரப்பில் நம்மை விரும்பலைங்கிறது அவங்க நடவடிக்கைகளி லிருந்தே தெரியுதுன்னும், தமிழுக்காக நடக்கும் மாநாட்டில் கலந்துகொள்வது சரிதான்னும் இரு கட்சியினரும் முடிவு எடுத்திருக்காங்களாம்.அதே நேரத்தில், ரொம்ப நாளா அப்பாயிண்ட் மென்ட்டுக்காக காத்திருந்த வைகோவுக்கு கார்டனில் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது. வியாழக்கிழமையன்னைக்கு ஜெ.வை சந்தித்த வைகோ, முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பா கூட்டுப் போராட்டம் நடத்துவது சம்பந்தமாகவும் அரசியல் சூழல்கள் பற்றியும் பேசி யிருக்கிறார். எம்.பி. யாகியிருந்தா ஈழப் பிரச்சினையில் இன் னும் வேகமா செயல் பட்டிருப்பேன்னு சொல்லியிருக்கிறார்.


''""வைகோவைப் பற்றி தகவல் சொன்ன தால நானும் ஒரு விஷயத்தை சொல்றேன். போனமுறை நம்ம நக்கீரனில், குருவிகுளம் அம்மன் கோயி லில் வைகோ மனைவி விபூதி வாங்க மறுத்ததால், தாயகம் முன்பாக விபூதி கொடுக்கும் போராட்டம் நடத்தப்போவதா இந்து மக்கள் கட்சி அறிவித் திருப்பதை வெளியிட்டிருந் தாங்க. அம்மன் கோயிலில் அந்த மாதிரி ஒரு சம்பவமே நடக்க லைன்னு வைகோ மறுப்பதோடு, எங்க மூதாதையர் வழிபட்ட கோயில்களுக்கு பாரம்பரியமா செய்ய வேண்டியதை செய்துகொண்டிருக் கிறோம். என் அம்மாவும், மருமகளும் வீட்டிலேயே சாமி கும்பிடுவார்கள். கட்சி அலுவலகமான தாயகத்துக்கு பக்கத்தில் உள்ள கோயிலுக்கும் வெள்ளை அடித்துத் தந்திருக்கிறோம்னு சொல்றார்.''""அ.தி.மு.க பொதுக்குழுவில் என்ன விசேஷம்?''""முல்லைப்பெரியாறு, இலங்கைத் தமிழர்கள் விவகாரம், செம்மொழி மாநாடு, விலைவாசி உயர்வு இது எல்லாவற்றிலும் கலைஞரை அட்டாக் பண்ணி தீர்மானம் நிறைவேற்றப்படுமாம். அதோடு கட்சி நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களும் இருக்குமாம். 8 மா.செ.க்கள் மாற்றப்படுவதோடு, பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீரையும், அவைத்தலைவர் பதவியிலிருந்து மதுசூதனனையும் தூக்குவதுன்னு ஜெ. திட்டமிட்டி ருக்கிறாராம். அ.தி.மு.கவின் 38-ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் கட்சியின் ஆண்டுமலரைப் பெற்றுக்கொண்ட அன்வர்ராஜாவை அவைத்தலைவ ராக்கலாமான்னு யோசிக்கப்பட்டதாம். எந்த இறுதி முடிவும் எடுக்காமல் மாற்றி மாற்றி பெயர்களை யோசித்துக்கொண்டிருக்கிறார் ஜெ.''""பொதுக்குழு சம்பந்தமா நானும் ஒரு தகவல் சொல்றேன்.. அ.தி.மு.க.வில் செயற் குழு, பொதுக்குழுன்னாலே மதிய சாப்பாடு ரொம்பவும் எதிர்பார்ப்போடு இருக்கும். சைவம்- அசைவம்னு வகைவகையா விருந்து பரி மாறுவாங்க. இந்த முறை நோ சாப்பாடு.''


மிஸ்டுகால்
தனது நண்பரான மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழியின் இரண்டாவது மகன் உதயநிதியின் திருமணம்- வரவேற்பு இரண்டு விழாக்களையும் முன்னின்று நடத்தி வைத்தார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். வரவேற்பு விழாவுக்கு வந்த வி.ஐ.பிக்களை பந்திக்கு அழைத்துச்சென்று சாப்பிடவைத்தவர் அமைச்சர் நேரு. திருநாவுக்கரசர் வந்தபோது முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, பொன்னு சாமி இருவரும் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். எப்பதாண்ணே அங்கிருந்து (பா.ஜ.க.) கிளம்புவீங்கன்னு பொன்னுசாமி கேட்க, சீக்கிரம் வரேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் திரு.
ராஜபக்சேவின் சகோதரி நிருபமாவின் கணவர் திருக்குமரன் நடேசன். ஏற்கனவே இவர், நான்காம் கட்ட போருக்கு முன் நெல்லை மாவட்டம் சிவசைலத்திற்கு வந்து எதிரிகளை அழிப்பதற்கான யாகத்தை நடத்திவிட்டுப் போயிருந்தார். இப்போது போர் முடிந்த நிலையில், திருச் செந்தூர் கோயிலிலும் பாபநாசம் கோயிலிலும் பலத்த பாதுகாப்புடன் பூஜைகள் செய்து வழிபட்டார். பாபநாசத்தில் அவர் நடத்தியது சங்கல்ப யாகம். தானும் தனது உறவுகளும் நீண்ட ஆயுளோடு வாழ் வதற் காகத்தான் இந்த யாகம்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணப் பெருமாளுக்கு ஜெயேந்திரர் 3 அடி நீளமுள்ள 288 கிராம் எடையில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கப்பூணூல் அணிவித்துள்ளார். அதுபோல கோமதி அம்மனுக்கு தங்கத்தாலி அணிவித்துள்ளார். வேண்டுதல் நிறைவேறவேண்டும் என்பதற்காகத்தான் இந்த காணிக்கை செலுத்துவார் களாம். ஜெயேந்திரர் என்ன வேண்டியிருக்கிறார் என்ற விவாதம் காஞ்சி மடத்தில் நடக்கிறது.