பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, October 25, 2009

பூவை கசக்கி எறிந்த சண்டாளர்கள்!


தீபாவளியை உச்சபட்ச சந்தோஷத்தோடு கொண்டாட விரும்பிய தங்கராசு, சூர்யா, தமிழ் ஆகிய மூவர் டீம்... தங்கள் மனையேரிப்பட்டிக்கு அருகிலேயே இருக்கும் செங்கிப்பட்டி டாஸ்மாக் கடைக்குப் போனது. மூச்சுமுட்டக் குடித்தது. புத்தியும் உடம்பும் தடுமாறிய நிலையில்... "மாப்ளே வாங்கடா போலாம்' என்றபடி சாலையைக் குறுக்கும் நெடுக்குமாய் அளந்தபடியே மனையேரிப்பட்டியை நோக்கி நடந்தார்கள்.நடக்க இருக்கும் விபரீதம் புரியாத 9 வயதுச் சிறுமி பத்மாவதி... தன் அம்மா செல்வராணியிடம் ஓடிப்போய் “""இந்த சரவெடியை வெடிக்க வாம்மா?''’என ஆசையாகக் கேட்டு அடம்பிடிக்க.....சமயபுரம் கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த செல்வராணி...’’""அதெல்லாம் வெடிக்க வேணாம். பக்கத்து வீட்டு அக்கா வெல்லாம் கிளம்பிட்டாங்க. கோயிலுக்குப் போகணும். ரெடியா இரு''’என்றர் கறாராக. வீட்டு வாசலில் வெடித்தால் அம்மா திட்டுவாரே என நினைத்த சிறுமி பத்மாவதி... வெடியை எடுத்துகொண்டு... "ஜல்ஜல்' என கொலுசு சிணுங்க... வீட்டைத் தாண்டி கொஞ்சதூரம் துள்ளலாய் நடந்தாள். அலங்காரக் கவிதையாய் எதிரில் வந்துகொண்டிருந்த சிறுமியைக் கண்ட அந்த மூன்று 18 வயது இளந்தாரிப் பயல்களும்... வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். புத்தி ஒதுங்கி நிற்க... அவர்களது உள்ளே இருந்த மிருகம் விழித்துக்கொண்டது.வெறிச்சோடிய வீதி அவர்களுக்கு தைரியத்தைக் கொடுத்தது. ""பாப்பா வெடி வெடிக்கப்போறியா?''’என அவர்களில் ஒருவன் கேட்க... ""ஆமாண்ணே...’’என்றது சூதுவாது தெரியாத அந்தக் குறும்புக் கவிதை. “""வா... அந்தப் பக்கமா போய் வெடிக்கலாம்''’என அவர் கள் சிறுமி பத்மாவதியை நெருங்கிச் சூழ்ந்துகொண்டார்கள். பிறகு?நெஞ்சுவலிக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடுவந்திருந்த அம்மா செல்வராணி... கண்ணீர் வசிய சொல்கிறார்... ""கோயிலுக்குக் கிளம்பிய நான்... எங்க பத்மாவைத் தேடிப்பார்த்துட்டு, சரி... வெடி வெடிக்கிற ஜோரில் இருக்கான்னு விட்டுட்டுப் போய்ட்டேன். பாதிவழியில் எம்பிள்ளையக் காணேம்னு தகவல்வர அடிச்சிப் பிடிச்சிக்கிட்டு ஓடிவந்தேன். எங்கெங்கேயோ தேடியும் கிடைக்கலை. அப்புறம்தான் போலீஸுக்குப் போனோம். அதுக்குள்ள எம் புள்ளையை...''’என்றவர் பேச முடியாமல் மூர்ச்சையானார். என்ன நடந்தது என்பதை தஞ்சை மாவட்ட எஸ்.பி. செந்தில்வேலனே விளக்கினார். ""அவங்க வீட்டில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஒரு கிணத்தில் சிறுமியின் சடலத்தைக் கண்டு பிடிச்சோம். சடலத்தைப் பார்க்கும் போதே... பாலியல் துன்புறுத்தலுக்கு சிறுமி ஆளாக்கப்பட்டிருக்கிறாள் என்பது தெரிந்தது. அந்த கிராமத்தில் இருக்கும் அத்தனை இளவட்டப் பசங்களையும் தூக்கிவந்து விசாரிச்சப்பதான்... தங்கராசு, சூர்யா, தமிழ் என்ற மூவர் டீம்... போதை வெறியில் சிறுமியை தூக்கிட்டுப்போய்... பலாத் காரம் பண்ணியதும்... அதில் மூச்சுத் திணறி சிறுமி இறந்ததும் தெரிய வந்தது. குற்றவாளிகளை ரிமாண்டு பண்ணிட்டோம்''’என்றார்.குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். இந்த சண்டாளர் களின் குடி... ஒரு சிறுமியின் உயிரையும் அவளது குடும்ப நிம்மதியையும் ஒருசேர குடித்திருக்கிறது.