பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, October 26, 2009

ஆர்.கே. ஹோட்டல் திறப்பு - வடை சுட்டார் வடிவேலு!!

எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களின் ஹீரோ ஆர்கே, தி நகரில் புதிதாக ஒரு ஓட்டலைத் திறந்துள்ளார். இதற்கு 'வாங்க சாப்பிடலாம்' என பெயர் சூட்டியுள்ளார். வைகைப் புயல் வடிவேலு இந்த ஓட்டலை வடை திறந்து வைத்தார்.இந்த ஓட்டலுடன் சர்வதேச தரத்தில் அமைந்த உடற்பயிற்சி மையம், பில்லியர்ட்ஸ் மையம், நீச்சல் குளம், பொழுதுபோக்கு க்ளப் என பலவித வசதிகளும் கொண்ட விஐபி அக்சஸ் கிளப்பும் உண்டு. இந்த ஓட்டலை இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு. காலை 8 மணிக்கே ஓட்டலுக்கு வந்து விட்ட வடிவேலு, ஓட்டலின் கல்லாவி்ல் சற்று நேரம் உட்கார்ந்தார். பின்னர் உணவக சமையல்காரர்கள் அணியும் தொப்பியை அணிந்து கொண்டவர், சமையல் பகுதிக்குள் நுழைந்து வடை சுட ஆரம்பித்தார்!"நாங்கள்லாம் இதிலயும் கில்லாடிங்கய்யா..." என்று தன் பாணியில் சொன்ன வடிவேலு, பின்னர் முதல்மாடியில் உள்ள பில்லியர்ஸ் மேசைக்குச் சென்றார். 'இதை எப்படி விளையாடறதுன்னு சொல்லுப்பா' என்று கேட்டுத் தெரிந்து கொண்டு விளையாடிக் காட்டினார். பின்னர் உடற்பயிற்சி மையத்துக்குள் நுழைந்து கொஞ்ச நேரம் சைக்கிளிங் செய்தவர், அசைவ வகை உணவுகளை சுவைத்தார். "அருமையா பண்ணியிருக்கீங்கய்யா... பிரமாதமான டேஸ்ட்" என்று பாராட்டியவர், ஆர்கேயை வாழ்த்திச் சென்றார்

இந்த ஓட்டல் குறித்து ஆர்கே கூறியதாவது:

அருமையான, உயர்தர, தரமான உணவு தரவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். இந்த உணவகத்தின் சுவையும் தரமும் எல்லா வித புகழ்பெற்ற உணவகங்களுக்கு சவால் விடும் என்பது மட்டும் உறுதி.அதற்காக கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேல் மெனக்கெட்டிருக்கிறோம். கடந்த இரு மாதங்களாக மூன்று வேளையும் பல்வேறு உணவு வகைகள் செய்யப்பட்டு, அது எப்படி இருக்கிறது என்ற பரீட்சை மட்டுமே நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட 5000 நபர்களை வெவ்வேறு குழுவாக சாப்பிட வைத்து, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். நடிப்பும் தொழிலும் எனது இரு கண்கள். உணவிடுதல் புண்ணியம் என்பார்கள். அதனால் உணவிடும் தொழில்!நடிப்பில், அடுத்து பெரிய இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் இயங்க உள்ளேன். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும்..." என்றார் ஆர்கே.உணவகம் திறப்பு விழா என்பதால் இன்று காலை சாப்பிட வந்த அனைவருக்கும் இலவசமாகவே சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.