பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, October 29, 2009

இந்திய-சீன எல்லைப்பிரச்சினையைவிடவும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஊடகங்கள் எதிர்பார்ப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றிய பதில்களைத்தான் என்பது தாய்லாந்தில் ஏசியான் மாநாட்டில் அவர் கலந்துகொண்டபோது இந்திய செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளிலிருந்தே வெளிப்பட்டது. தேசிய சேனல்கள் தரும் இந்த முக்கியத்துவத்தின் பின்னணியில் அரசியல் அதிகாரப் போட்டியும், பெரும் பிசினஸ் போட்டியும் இருப்பதை டெல்லி வட்டாரங்கள் மிகத் தெளிவாக விவரிக்கின்றன.


ஸ்பெக்ட்ரம் ஏகபோகம்

தொலைத்தொடர்புக்கு அத்தியாவசியமான ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகள் வான்வெளி முழுவதும் நிரம்பியிருக்கின்றன. இவற்றை யார் பயன்படுத்துவது என்ற உரிமத்தை வழங்கும் அதிகாரம் கொண்டது மத்திய தொலைத்தொடர்புத்துறை. ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி, இந்தியாவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துக் காத்திருந்தன. ஆனால், யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை. தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக 2007-ல் பொறுப்பேற்ற ஆ.ராசா இப்பிரச்சினையின் மீது கவனம் செலுத்தினார்.நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தின் கட்டுப் பாட்டில் பெருமளவு ஸ்பெக்ட்ரம் இருப்பதையும் அதிலிருந்து செல் வாக்கு மிக்க ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெற்றிருப்ப தையும் மற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதும் ஆ.ராசாவுக்குத் தெரிய வந்தது.


மக்கள் நலனை யோசித்த மந்திரி


ஏகபோகமாக ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப் பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் போக, மிகுதியாக உள்ள ஸ்பெக்ட்ரமை, விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தால், இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் வியாபார போட்டி உருவாகும். இந்தப் போட்டியினால், செல்போன் அழைப்புகளுக் கான கட்டணங்களை ஒன்றுக்கொன்று குறைத்து அறிவிக்கும். இது செல்போனை அதிகளவில் பயன் படுத்தும் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆ.ராசாவின் சிந்தனை.இதுகுறித்து தனது துறையின் அதிகாரி களிடம் ஆலோசித்தார் ஆ.ராசா. அதி காரிகளோ, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நீங்கள் இறங்கினால் உங்களுக்கு பல பிரச்சினைகள் உருவாகும். இப் போது இருப்பதுபோலவே இருந்து விட்டுப்போகட்டும் என அக்கறை யுடனும் ஒருவித எச்சரிக்கை சமிக்ஞை யுடனும் தெரிவித்தனர். பயன்படுத்தப் படாமல் இருக்கும் அலைக்கற்றைகளை முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏன் எச்சரிக்கிறார் கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார் அமைச்சர். ராட்சஸ கால்களுடன் பெரும் உருவமெடுத்து நிற்கும் பிசினஸ் பின்னணி அவருக்குத் தெரிய வந்தது.


நம்பர் ஒன் கம்பெனியின் சபதம்


இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையில் நம்பர் ஒன் இடத்தைத் தொடக்கத்திலேயே பெற்றிருந்தது ஏர்டெல் நிறுவனம். ஸ்பெக்ட்ரமை புதிய நிறுவனங்களுக்கும் ஒதுக்கினால், ஏற்கனவே போட்டா போட்டியில் உள்ள செல்போன் களத்தில் கடும் போட்டிகள் உருவாகும் என மிரண்டார் ஏர்டெல் நிறுவனத்தை நடத்தும் பாரதி டெலிகம்யூனிகேஷனின் ஓனர் சுனில் மித்தல். அதனால், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் தனது செல்வாக்கான கரங்களை நுழைத்து, புதிதாக எந்த நிறுவனமும் அலைக்கற்றைகளைப் பெற முடியாதபடி தடைகளை உருவாக்கியிருந்தார். அமைச்சகத்தின் அதிகாரிகள் முதல் உயர்மட்டம் வரை அவருக்கு ஆதரவாகவே இருந்துவந்தது.தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப் பேற்றதும் அவரிடமும் தனது செல்வாக்குக் கரத்தை நீட்டும் எண்ணத்துடன் சந்தித்தார் சுனில் மித்தல். வேறு கம்பெனிகளுக்கு ஸ்பெக்டரமை ஒதுக்காதீர்கள் என அமைச்சரிடம் நேரில் தெரிவிக்க, ஆ.ராசா கோபமாகி, சுனில் மித்தலுக்கு சூடான பதில் கொடுத்துள்ளார். தனது இத்தனைகால முயற்சிகள் முறிந்துபோகும் என்ற பதற்றத்துடன் வெளியே வந்த மித்தல், ராசாவை இந்தத் துறையிலிருந்தும் மத்திய கேபினட்டிலிருந்தும் தூக்காமல் விடமாட்டேன் என சபதம் செய்தார். அதற்கான லாபியிலும் தீவிரமானார்.





அமைச்சர் ஆ.ராசா தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. ஏர்டெல்லுக்குப் போட்டியாக பல நிறுவனங்கள் செல்போன் கம்யூனிகேஷனுக்குள் வந்தன. இதன்காரணமாக, வியாபாரப்போட்டி உருவாகி, கட்டணங்கள் குறைந்தன. போட்டிக்களத்தை விரும்பாத ஏர்டெல்லின் சுனில் மித்தல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு என இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்கினார். அமைச்சர் ஆ.ராசாவோ, பிரதமர் தலைமையிலான கேபினட் கூட்டத்தின் முடிவு, நிதியமைச்சரின் ஒப்புதல் ஆகியவற்றின் பேரிலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்றது என்பதை தெளிவாக்க, இது தொடர்பான விவாதங்களை எழுப்பின எதிர்க்கட்சிகள். எல்லாக் கேள்விகளுக்கும் ஆ.ராசா விளக்கமளித்தபடியே இருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தன. ஆனாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ஊடகங்கள் வாயிலாக ஆ.ராசாவுக்கெதிரானப் பிரச்சாரங்களை மித்தல் தரப்பு மேற்கொண்டபோதும், தொலைத்தொடர்புத் துறைக்கு அவரே மீண்டும் கேபினட் அமைச்சரானார்.சபதம் நிறைவேறாத நிலையில், வியாபாரத்தையாவது பெருக்கலாம் என்ற முடிவில் தென்னாப்பிரிக்காவின் எம்.டி.என் கம்பெனி பங்குகளை வாங்கி பாரதி டெலிகம்யூனிகேஷனை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டார் மித்தல். இதற்கு இந்தியாவின் மும்பை ஸ்டாக் எக்சேஞ்சிலும் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிலும் மித்தலின் நிறுவனம் இடம் பிடிக்க வேண்டும். இது இந்திய பங்கு வர்த்தக விதிகளுக்கு முரணானது என்பதால், எம்.டி.என். நிறுவனத்திற்குள் நுழைவதற்கு விதிகள் இடம் தரவில்லை. இதனால் மித்தலின் முயற்சியும் வெற்றிபெற வில்லை. தனது முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால், போட்டிக் கம்பெனிகளுக்கு இடம் கொடுத்த ஆ.ராசா மீதான கோபம் மித்தலுக்கு அதிகமானது என்கிறது பிசினஸ் வட்டாரம்