பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, October 29, 2009

கணவனை கெடுத்த மனைவி!

எந்தப் பதவி போனாலும் ஈரோட்டுக்கு என் புருஷன்தாண்டா கிங் என்று சுட்டுவிரலை நீட்டி, போலீசாரிடமே சவால் விட்ட மனைவி உமாவோடு ஓடிக்கொண்டிருக்கிறார் ராஜா.கோர்த்துப் பிடித்து கோர்ட்டில் நிறுத்தாமல் விடமாட்டோம் என்று துரத்திக்கொண்டிருக்கிறது போலீஸ்.மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறார் கலைஞர். நில அபகரிப்பு, சிவபாலன் கடத்தல் என்றதுமே அமைச்சர் பதவியைப் பறித்தார். இப்போது மா.செ. பதவியை மட்டுமில்லாமல், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கிவிட்டார். ஆட்சியில் இருக்கும்போது ஒரு மாவட்டச் செயலாளர், கட்சியிலிருந்தே நீக்கப்பட்டது தி.மு.க. வரலாற்றில் இதுதான் முதல் தடவை. ஈரோடு மாவட்ட உடன்பிறப்புகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்.கே.கே.பி.ராஜாவின் கதி.ராஜாவை கைது செய்வதற்காக விரட்டிக் கொண்டிருக்கும் சி.பி.சி.ஐ.டி. ஸ்பெஷல் டீம் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.""ராஜா விவகாரத்தில் புதிதாக கிடைத்த தகவல்களைச் சொல்லுங்களேன்...!''""அதுதான் போன இதழில் "விடிய விடிய நிர்வாண சித்ரவதை! மாஜியின் கொலைவெறி யாட்டம்!' என்று லைவ் ரிலே செய்துவிட்டீர்களே. அப்புறம் என்ன ராஜ ரகசியம் இருக்கு. சொல்ல லாம்... சில விஷயங்களைச் சொல்லலாம். பழைய கேஸ்ல முன்ஜாமீன் கிடைத்ததும் நிரபராதின்னு நிரூபிச்சிட்டால் மீண்டும் அமைச்சர் பதவி கிடைச்சிடும்னு ராஜா நெனைச்சிருக்கார். அதனாலதான் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்துட்டான் சிவபாலன்னு தெரிஞ்சும், அவர் வீட்டுக்கே தன்னோட காரை அனுப்பி பெருந்துறை வீட்டுக்கு கூட்டிவரச் சொல்லி, கேஸை வாபஸ் வாங்கணும்னு சமாதானம் பேசியிருக்கார். அந்த ஆள் 10 கோடி கேட்டு 5 கோடிக்கு இறங்கி வந்திருக் கிறார். சரி ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்னு சொல்லி, தானே கூட்டிப்போய் சிவபாலனை அவர் வீட்டில் இறக்கிவிட்டிருக்கிறார். "சிவபாலன் சம்மதிச்சிட்டான், 5 கோடி கேக்குறான்... ரூட் க்ளியராகிவிடும். அபகரிப்பு வழக்கு தள்ளுபடி யாகிவிடும். தலைவர் கலைஞர் என்னை மீண்டும் அமைச்சராக்கிவிடுவார்னு தனது ரெண்டாவது மனைவி உமாவிடம் சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவுக்கு சுர்ருனு கோபம் மூக்குக்கு ஏறிருச்சாம். "நீயெல்லாம் ஆம்புளைதானா? ஒரு சப்பைப் பயகிட்ட போய் கெஞ்சினியா? அதுவும் 5 கோடி தர்றம்னு. த்தூ... பிறந்தமேனிக்கு விட்டு முட்டிக்கு முட்டி தட்டுனா துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு கேஸை வித்ட்ரா பண்ணப் போறான். நீ அவனை மிட்நைட்ல நம்ம பண்ணை வீட்டுக்கு வரவச்சிட்டு எனக்கு போன் போடு. நான் வந்து அவனுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கிறேன்'னு சுண்டி விட்ருச்சு அந்த அம்மா. நிதானம் தவறி அன்னைக்கு துப்பாக்கியை சிவபாலன் பொட்டுல வச்சு சுட்டாரு ராஜா. நல்லவேளை... துப்பாக்கியில் குண்டு இல்லை. அப்புறம் நடந்ததெல்லாம் நக்கீரன்ல வந்தவைதான்.'' விவரித்தார் அந்த அதிகாரி.மனைவி சொல்லே வேதவாக்கா? அந்த அளவுக்கு ரெண்டாவது மனைவி மீது பற்றுதலா?""ராஜாவோட முதல் மனைவி பரிமளா உயர்ந்த பெண்மணி. சாந்தமானவர். அடக்கமானவர். இந்த உமா ஏற்கனவே ஒரு காதலை முறித்து, ஒரு டாக்டருக்கு மனைவியாகி, அது கசந்து இந்த ராஜாவின் காதலியாகி, அப்புறம் திருமணமும் செய்துகொண்டவர். அதுக்கப்புறம் ராஜா ஒரு ரிமோட்தான். அதிகாரம், ஆணையெல்லாம் உமாமகேஸ்வரிதான். இப்பகூட அந்த உமாதான் ஓடவைத்துக்கொண்டிருக்கிறார்'' -சிரித்தார் அந்த அதிகாரி.என்.கே.கே.பி.ராஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவரை தொடர்புகொண்டோம்...

""அமைச்சர் பதவி பறிபோனதும் ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ.க்களை, கட்சி நிர்வாகிகள் கூட்டம் எல்லாரும் ராஜினாமா செய்யணும்னு சொன்னார். அதே மாதிரி இப்பவும் மிரட்டுகிறார். ஆனால் பயப்படலை. சரிப்பா... விடுப்பா... உங்க அப்பாவைத்தானே பொறுப்பாளரா போட்டிருக்காங்க. பொறுமையா போன்னு அட்வைஸ்பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. யாரும் சப்போர்ட் இல்லைன்னு உறுதியானதும்தான், முன்ஜாமீனுக்கு ஏற்பாடுபண்ணச் சொல்லிட்டுப் பதுங்கிட்டாரு'' என்றார் அந்த நண்பர்.ராஜாவுக்கு ஏற்பட்ட இந்த நிலை பற்றி ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என்ன நினைக்கிறார்கள்?அவர்களையே தொடர்புகொண்டு கேட்டோம்.""சேரக்கூடாத சேர்க்கை ராஜாவை தடம்புரள வைத்துவிட்டது. தி.மு.க.வில் ஒரு சிறிய பொறுப்பு கிடைத்தாலும் அது பெருமைக்குரிய விஷயம். அந்தப் பெருமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்'' என்கிறார் பவானிசாகர் எம்.எல்.எ.வும் ஒ.செ.யுமான ஜீவா ஓ.சுப்பிரமணியம்.""என்னோட அரசியல் வழிகாட்டியே ராஜாதான். கட்சிக்காக உழைச்சார். மற்றவங்களை உழைக்க வச்சார். எல்லாம் கெட்ட நேரம். பதவியெல்லாம் பறிபோயிருச்சு. ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. அதுக்காக நான் ஒ.செ.பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா பண்ணுவம்னு நினைச்சிடாதீங்க'' என்கிறார் சத்தியமங்கலம் ஒ.செ.யும் எம்.எல்.ஏ.வுமான தர்மலிங்கம்.""என்.கே.கே.பி. ராஜா பிரச்சனைகளைத் தவிர்த்திருக்க வேண்டும்'' என்கிறார் அந்தியூர் எம்.எல்.ஏ. குருசாமி.மாவட்டப் பொறுப்பாளராக தி.மு.க. தலைமை நியமித்துள்ள என்.கே.கே.பெரியசாமியை அவரது பாரதிதாசன் கல்லூரியில் சந்தித்தோம்.""என் மகன் ராஜா கட்சிக்காக பாடுபட்டான். மா.செ. ஆனான். ஆனதால் ஒண்ணரை கோடியில் கழகத்திற்கு அலுவலகம் கட்டினான். மற்றபடி என் மகனைப் பற்றியோ, சமீபத்திய நிகழ்ச்சிகள் பற்றியோ என்னிடம் கேட்காதீர்கள்.

கட்சி வேறு மகன் வேறு'' கிளிப்பிள்ளை போல இதையே சொல்லிக்கொண்டிருந்தார் புதிய பொறுப்பாளரான அவர்.சனிக்கிழமை இரவு. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ராஜா, தன் மனைவியோடு சென்னைக்கு செல்வதாகக் கூறிவிட்டு தாளவாடியில் உள்ள தனது எஸ்டேட்டுக்குத்தான் கிளம்பியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னை தேடிக்கொண் டிருப்பது தெரிந்ததும், கர்நாடகாவுக்குள் சென்றுவிட்டார்.""விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். இதற்காக 5 ஸ்பெஷல் டீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் ராஜாவையும் அவருடைய ஆட்களையும் அரெஸ்ட் செய்துவிடுவோம்'' என்றார் டி.எஸ்.பி.சாம்பசிவம்.