Deal or No Deal என்ற பெயரில் சன் டிவியில் பிரமாண்ட கேம் ஷோ ஒளிபரப்பாகவுள்ளது. 20க்கும் மேற்பட்ட டிவி சானல்களுடன் உள்ள சன் டிவி குழுமம் இந்தியாவின் மிகப் பெரிய டிவி குழுமத்தில் முக்கியமான இடத்தில் உள்ளது.சன் டிவி யில் தற்போது டீலா நோ டீலா என்ற பெயரில் புதிய கேம் ஷோ ஒளிபரப்பாகவுள்ளது.மொத்தம் 26 எபிசோடுகளுடன் இந்த கேம் ஷோ ஒளிபரப்பாகும். அக்டோபர் 31ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை இது ஒளிபரப்பாகும்.ஒவ்வொரு போட்டியாளரும் ரூ. 50 லட்சம் வரை இதில் பரிசை வெல்ல முடியும்.உலகத் தரம் வாய்ந்த அரங்குகளில் இது நடைபெறவுள்ளது. எளிமையான போட்டி, சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் வகையிலான விறுவிறுப்பான போட்டிகள் என விருந்து படைக்கக் காத்திருக்கிறது டீலா நோ டீலா.ஒவ்வொரு எபிசோடிலும், பார்வையாளர்களுக்காக ரூ. 1 லட்சம் பரிசுத் திட்டமும் உள்ளது.ஆனந்த தாண்டவம் படத்தில் நடித்த நடிகர் ரிஷி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.
