பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, December 21, 2009

ஏ-9 வீதியூடாக பயணம் செய்வதற்கு இனி வாகனங்களுக்கும் பாதுகாப்பு அனுமதி தேவையில்லை


யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 பாதை யூடாக பயணம் மேற்கொள்ளும் போது மக்களின் வாகனங்கள் நாளை திங்கட்கிழமை தொடக்கம் எந்தவித பாதுகாப்பு அனுமதியும் பெறத்தேவை இல்லை.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு மீள்குடியமர்வு மற்றும் அபிவிருத்திக்குமான ஜனாதிபதி செயலணி யின் தலைவருமான பஸில் ராஜபக்ஷ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அகில இலங்கை இந்து மாமன்ற உறுப் பினர்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசுகை யில் அவர் இப்படிக் கூறினார்.
வடக்கில் இருந்து கொழும்பு வந்த வர்கள் எந்தவித பதிவுகளையோ அல்லது அது தொடர்பான நடைமுறைகளையோ இனிமேல் மேற்கொள்ளாமல் மீண்டும் அங்கு பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) பெறும் நடைமுறை கடந்த மாதம் முழுமையாக நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் ஏ 9 பாதையூடாக சுதந்திரமாகப் பயணம் மேற்கொள்ளலாம்.