""ஹலோ தலைவரே.. .. இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்து, யார் ஜெயிக்கப் போறாங்கங்கிற ரிசல்ட்டுக்காக 2 தொகுதிகளும் காத்துக்கிட்டிருக்குது.''
""கணிப்புகள், எதிர்பார்ப்புகள்னு அரசியல் வட்டாரம் பரபரப்பா இருக்குமே...''
""கணிப்புகள், எதிர்பார்ப்புகள்னு அரசியல் வட்டாரம் பரபரப்பா இருக்குமே...''
""ஆளுங்கட்சிக்குள்ளே நடக்கும் லீடிங் போட்டி இருக்கட்டும். இவங்க ரெண்டு பேரோட கணிப்பையும் காலி பண்ணனும்ங்கிற வேகத்தோடு, எதிர்த்தரப்பான அ.தி.மு.கவும் வேகம் காட்டுமே?''
""திருச்செந்தூர் தொகுதிக்கு செங்கோட் டையன் பொறுப்பாளர். வந்தவாசி தொகுதிக்கு தம்பிதுரை பொறுப்பாளர். இரண்டு தரப்பிலுமே வெற்றியைவிட, தோல்விக்கான ஓட்டு வித்தி யாசத்தைக் குறைக்கணும்ங்கிற கால்குலேஷன்தான் அதிகமா இருக்குது. செங்கோட்டையன் பொறுப்பில் இருக்கும் திருச்செந்தூரைவிட வந்தவாசியில் ஓட்டு வித்தியாசம் கம்மியா இருக்கணும்னு தம்பிதுரை கணக்குப் போட, அவர் தொகுதியைவிட நம்ம தொகுதியில் ஓட்டு வித்தியாசம் கம்மியா இருக்கணும்னு இவர் கணக்குப் போடுறார்.''
""யார், யார் கணக்குகளுக்கு மக்கள் மார்க் போட்டிருக்காங்கிறது 23-ந் தேதி காலையில் தெரிஞ்சிடும்ப்பா. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தோட கணக்கு என்ன? தேர்தலில் தனியா நின்னுட்டு, பிரச் சாரத்தில் கூட்டணி பற்றியெல்லாம் பேசிக்கிட்டிருந்தாரே? என்னவாச்சாம் அவருக்கு?''
""இரண்டு தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் விஜயகாந்த் ரொம்ப டென்ஷனாகவே இருந்தாருங்க தலைவரே... அரசியல் அனுபவத்தில் பெரியவங்களைகூட ஏகவசனத்தில் அவர் பேச, அவர் கட்சிக்காரங்களே நம்ம தலைவருக்கு என்னாச்சுன்னு முணுமுணுத்திருக்காங்க. விஜயகாந்த் பிரச்சாரம் செய்த இடங்களில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. தொண்டர்களும் ஆர்வத்தோடு வேலை பார்க்கலை. கட்சி நிர்வாகிகளும் சைலண்ட் ஆயிட்டாங்க. அதனால, திருவண்ணாமலை மா.செ.வைக்கூட மாற்றிப் பார்த்தார். அப்பவும் தேர்தல் வேலைகளில் வேகம் எடுக்கலை. கட்சிக்காரங்களுக்கு நம்பிக்கை கொடுக்க ணும்ங்கிறதுக்காகத்தான், தனியா ஓட்டுக் கேட்கப் போன இடத்தில் கூட்டணி அமைப்போம்னு பேசினார்.''
""தே.மு.தி.க. முக்கிய நிர்வாகிகள்கிட்டே இந்த கணக்கு பற்றி கேட்டேங்க தலைவரே... விளக்கமா சொன்னாங்க. கட்சி ஆரம்பிக்கிறதுக்காக நடத்திய மாநாடு, அதற்கப்புறம் சட்ட மன்றத் தேர்தல், உள் ளாட்சித் தேர்தல், எம்.பி. தேர்தல், இடையிடையே இடைத்தேர்தல், அப்புறம் இளைஞரணி மாநாடுன்னு தொடர்ச்சியா செலவுதான். எல்லாத்துக்கும் காசை செலவு பண்ணி எந்த வெற்றியும் இல்லாமல் கட்சி நிர்வாகிகள் சோர்ந்து போயிட்டாங்க. புதுசா கட்சிக்கு வந்த பணக்காரப்புள்ளிகளும் எம்.பி. தேர்தலில் நின்னு செலவழிச்சதிலேயே நொந்து போயிட்டாங்க. எம்.பி. தேர்தல் சமயத்திலேயே கூட்டணி அமைக்கணும்ங்கிற குரல் தே.மு.தி.க. நிர்வாகிகளிடமிருந்து பலமா வெளிப்பட்டது.''
""பண்ருட்டி ராமச்சந்திரனும் சுதீஷும் டெல்லிவரைக்கும் போனாங்களே...''
""அப்பவே காங்கிரசோடு கூட்டணி சேர்ந்திருந்தா 4 எம்.பி, ஒரு மினிஸ்டர் பதவி தே.மு.தி.கவுக்கு கிடைச்சிருக்கும்னு கட்சிக்காரர்கள் இப்பவும் சொல்லிக்கிட்டுத்தான் இருக்காங்க. இதற்கு முன் நடந்த 5 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாததால, 25%க்கு மேலே ஓட்டு வாங்கி, இரண்டாவது இடத்தைப் பிடிச்சி, அதை வச்சே சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி பேசலாம்னு விஜயகாந்த் கணக்குப் போட்டிருந்தாரு. ஆனா, அந்தளவுக்கு ஓட்டு கிடைக்கலை. இதுவும் தொண்டர்களை சோர்வாக்கிடிச்சி. இனி கட்சியை நிமிர்த்தணும்னா கூட்டணிதான் வழின்னு கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து சொல்லிக்கிட்டிருந்தாங்க. திருச்செந்தூருக்குப் பிரச்சாரத்துக்குப் போன விஜயகாந்த்கிட்டேயே இதைக் கட்சிக்காரர்கள் சொல்லிட்டாங்க. நெருக்கடி அதிகமாவதைப் புரிஞ்சுக்கிட்டுத்தான் கூட்டணின்னு பேசியிருக் கிறார்.''
""தி.மு.க.வோடு தே.மு.தி.க. கூட்டணி அமைக்க வாய்ப்பேயில்லை. அ.தி.மு.க.வோடு பேசப்பட்ட கூட்டணி பேரங்களும் இதுவரைக்கும் சரிப்படலை. முதல்வர் கனவோடு பேச வர வேணாம்னு போயஸ் கார்டனிலிருந்து சொல்லப் பட்டிருக்குது. அப்படின்னா விஜயகாந்த்துக்கு இருக்கிற ஒரே வழி, தி.மு.க. கூட்டணியில் இருக்கிற காங்கிரசை தன் பக்கம் இழுப்பதுதான். அதற்கான மூவ் நடக்குதா?''
""யாரை யார் இழுக்குறாங்க அப்படிங் கிறதுதான் ஹைலைட்டான மேட்டருங்க தலைவரே... காங்கிரசில் கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்கக்கூடியவர் சோனியாதான். அதே நேரத்தில், 2011 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கு வியூகம் வகுத்து முன்னெடுக்கப் போகிறவர் ராகுல்காந்தி. தனிக்கட்சி ஆரம்பித்து கூட்டணி சேரலாம்னு ஐடியா பண்ணிய நடிகர் விஜய்கிட்டே, நீங்க காங்கிரசில் சேர்ந்திடுங்கன்னு சொல்லியிருந்தார் ராகுல். விஜய காந்த் விஷயத்திலும் ராகுலோட நிலை அதுதானாம்.
''""ஓ...''
""போன வாரத்தில் ராகுல் தன்னோட ஆக்ஷன் டீமோடு தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசியிருக்கிறார். விஜய காந்த் முதல்வர்ங்கிற கண்டிஷனை ஏற்கமுடியாது. இந்தியா முழுக்க காங்கிரஸ் முதல்வர்களை உருவாக்க ணும்ங்கிறதுதான் நம்ம எய்ம். தமிழ்நாட்டில் மட்டும் விதி விலக்கா செயல்படமுடியுமா? விஜயகாந்த் தன்னோட கட்சியை காங்கிரசில் சேர்த்தால், அவரை முதல்வர் கேண்டிடேட்டா முன்னிறுத்துவது பற்றி ஆலோ சிக்கலாம்னு சொல்லியிருக்கிறார். விஜயகாந்த்தை காங்கிரஸ் கூட்டணிக்கு கொண்டு வர விரும்பும் தமிழக கதர்ச்சட்டைகள் இருவர் மூலம் ராகுலின் ஐடியா, விஜயகாந்த்கிட்டேயே பக்குவமா சொல்லப்பட்டிருக்குது. முதல் தேர்தலிலேயே ஓஹோன்னு ஜெயித்த த.மா.கா.வோட நிலைமை என்னாச்சு! தனிச்சு நின்னீங்கன்னா அடுத்த தேர்தலில் உங்க கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்களே இருக்க மாட்டாங்க. காங்கிரசில் தே.மு.தி.க.வை இணைத்துவிட்டால் நிதி நெருக்கடி பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம். உங்க கட்சியிலிருந்து வர்றவங்களுக்கு மரியாதை கிடைக்கும். பொறுப்புகளும் கொடுக்கப்படும். வீம்புக்கு தனியா நின்னு ஓட்டு சதவீதம் குறைஞ் சுக்கிட்டே போனா இந்த வாய்ப்பும் கிடைக்காதுன்னு சொல்லியிருக்காங்க.''
""விஜயகாந்த் என்ன சொன்னாராம்?''
""அவர் தரப்பிலிருந்து, காங்கிரஸ்-தே.மு.தி.க. கூட்டணி அமைத்து தொகுதிகளை சமமா பங்கிட்டுக் கொண்டு போட்டியிட்டு, யார் அதிக இடங்களைப் பிடிக்கிறாங்களோ அவங்களுக்கு முதல்வர் பதவிங்கிற ஃபார்முலா மறுபடியும் சொல்லப் பட்டிருக்குது. அதை காங்கிரஸ் மேலிடம் ஏற்கலையாம். காங்கிரசுடன் தே.மு.தி.க. இணைப்புங்கிறதுதான் அவங்க டெல்லியின் ஒரே சாய்ஸ். தொண்டர்களிடமிருந்து நெருக்கடி அதிகரித்திருப்பதால் காங்கிரசில் சேருவது பற்றி விஜயகாந்த் சீரியஸா யோசிக்க ஆரம்பித்திருக் கிறார்னு அவ ருக்கு ஆலோ சனை சொல் லும் இடத்தில் உள்ளவர்கள் சொல்றாங்க தலைவரே...''
""இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அடிக்கடி டெல்லிக்கு வருவதும், அப்படி வரும்போதும் போகும்போதும் சென்னை விமான நிலையத்தில் குரல் கொடுப்பதுமாக இருக்கிறாரே... விசிட்டின் நோக்கம் என்னவாம்?''
""முன்னேயெல்லாம் 3 மாசத்துக்கு ஒரு முறை அவர் இந்தியாவுக்கு வந்துபோவது வழக்கம். ஆனா, போருக்குப்பின்னாடி அடிக்கடி வருகிறார். அதிலும் இலங்கையில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த ஒரு மாத இடைவெளியில் 2 முறை இந்தியாவுக்கு வந்துவிட்டார். இலங்கைத் தேர்தலில் இந்தியா கூர்ந்து கவனம் செலுத்து வதுதான் இதற்கு காரணம். சீனாவுக்கு ஆதரவான ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா நிற்கிறார். தேர்தலில் அவர் ஜெயித்தாலும் ரணில் கையில்தான் பவர் இருக்கும்னு இந்தியா நினைப்பதா ரணில் தரப்பு சொல்லுது.''""இந்த விசிட்டில் டெல்லியில் யாரை சந்தித்தாராம் ரணில்?''""வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைத்தான் சந்தித்தார்.
பொன்சேகாவுக்கு இந்தியாவின் ஆதரவு இருப்பதை உறுதி செய்துகொண்ட ரணில், ஈழத்தமிழர்களின் இப்போதைய கவனமெல்லாம் மறுகுடியேற்றத்தில்தான் இருக்கிறது. இந்த விஷயத்தில் ராஜபக்சே அரசு சரியா செயல்படலைங்கிற கோபம் அவர்களுக்கு இருப்பதால், தமிழர் பகுதிகளில் பொன்சேகாவுக்கு ஆதரவு கிடைக்கும்னு சொல்லியிருக்கிறார். தமிழர் கட்சிகள் தனி வேட்பாளரை நிறுத்துகிறதா, அவற்றின் நிலைப்பாடு என்னங்கிறதையெல்லாம் இந்தியத் தரப்பு உன்னிப்பா விசாரித்ததாம்.''