புலிகள் வெள்ளைக்கொடிகளுடன் வந்த போது அவர்களை படையினர் சுட்டுக்கொன்றனர் என வெளியான தகவலில் உண்மையில்லையாம், அதோடு ராணுவ அதிகாரி ஒருவரினாலேயே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்குமானால் அதற்கு தாம் வருந்துவதாகம் கூறியுள்ளார் சவீந்திர சில்வா. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, எந்த ஒரு பொதுமகனையும் சுட்டுக்கொல்லுமாறு தனக்குக் கட்டளையிடவில்லை என்றும் அவர் கூறுகிறார். மேலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டமையை போன்றே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கொல்லப்பட்டாராம். ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தமக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை எனவும் தொடர்ந்து கூறியுள்ள சவீந்திர சில்வா, தாம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடப் போகிறார் என வெளியான தகவலும் பொய் எனக் கூறியுள்ளார். Send To Friend இச் செய்தியை வாசித்தோர்: 1710
Monday, December 21, 2009
அரசியல் பிரிவு தலைவர்களை படைத்தரப்பு சுடவில்லையாம் - சவீந்திர சில்வா
கடந்த வாரம் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரும் முன்னாள் ராணுவத்தள பதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார் எனக் கூறப்பட்ட தகவலில், புலிகள் அரசியல் துறையினரை சுட்டுக்கொல்லுமாறு, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சவீந்திர சில்வாவுக்கே உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினர் வெள்ளைக் கொடிகளுடன் வந்த போது அவர்களை படையினர் சுட்டுக்கொன்றதாக வெளியான தகவலை தாம் செய்தித்தாள்களிலேயே வாசித்ததாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 58 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.