பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, December 24, 2009

கவர்ச்சி நடிகை ஷகிலா, சென்னையை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை காதல் திருமணம் செய்துகொள்கிறார்.


கவர்ச்சி நடிகை ஷகிலா, சென்னையை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை காதல் திருமணம் செய்துகொள்கிறார். இவர்கள் திருமணம், சென்னையில் வருகிற ஜுன் மாதம் நடக்கிறது.

நான் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். சினிமாவில் நான் பிரபல நடிகையாக புகழ் பெறுவதற்கு எங்க அம்மாதான் காரணம். அவர் எனக்கு பாதுகாப்பாகவும், துணையாகவும் இருந்தார். சமீபத்தில், அம்மா மரணம் அடைந்து விட்டார். அந்த கவலையில், உடல் மெலிந்து விட்டேன். முன்பு இருந்ததை விட, 20 கிலோ எடை குறைந்து இருக்கிறேன்.
அம்மா இறந்தபின், நான்தான் சமைக்கிறேன். நான் சமைத்த சாப்பாட்டை, சாப்பிட பிடிக்கவில்லை. உணவு பழக்கவழக்கங்கள் மாறிவிட்டதால், என் உடல் மெலிந்து வருகிறது.
கடந்த இரண்டரை வருடங்களாக, நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவர், சென்னையை சேர்ந்த ஒரு தொழில் அதிபர். இப்போதைக்கு அவருடைய பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அம்மாவின் மறைவுக்குப்பின், எனக்கு ஒரு பாதுகாப்பும், துணையும் தேவைப்படுகிறது.
அதனால், என் காதலரை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். அதற்கு, அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார். எங்கள் திருமணம், சென்னையில் வருகிற ஜுன் மாதம் நடைபெற இருக்கிறது. இது காதல் திருமணம் என்றாலும், அவருடைய பெற்றோர்களின் சம்மதத்துடன் நடக்கிறது.
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நான் நடிப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.