பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, December 21, 2009

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் குண்டுவெடிப்பு ‐ மூவர் காயம்

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினால் காயமடைந்த மூவர் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். கொழும்பு கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் அமைந்துள்ள ஓர் உணவகத்தில் இன்று மாலை 4.45 மணியளவில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் போது வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மூன்று பாதசாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சமையில் எரிவாயு சிலின்டரே வெடிப்புக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகித்த போதும், குறித்த பகுதிக்கு வந்து நிலைமையினை பார்வையிட்ட தீயணைப்புப்படையினர் எரிவாயு சிலின்டர் வெடித்தற்கான அறிகுறி எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மிகவும் பதற்றத்துடன் காணப்பட்ட அப்பகுதி மக்கள் பொலிஸார் வருகையையடுத்து அமைதியடைந்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.