பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, December 20, 2009

லண்டன் நகரை தகர்க்க பயங்கரவாதிகள் சதி

மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதைப் போல் இங்கிலாந்து தலைநகரமான லண்டனையும் தாக்க பயங்கரவாதிகள் மேற்கொண்ட சதியை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். கடந்த 2-ந் தேதி இணையதளங்கள் மூலம் பயங்கரவாதிகள் செய்து கொண்ட தகவல் பரிமாற்றத்தை ரகசியமாக கண்காணித்த ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர், அதன் முழு விவரத்தையும் சேகரித்தனர். அதில் மும்பை நகரில் நடத்திய தாக்குதலைப் போல் லண்டனிலும் நடத்துவது பற்றி செய்தி பரிமாறியது தெரியவந்தது. இதையடுத்து ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் லண்டன் நகருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.