இயக்குநர்கள் தங்கர்பச்சானும், எஸ்.பி.ஜனநாதனும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லும் அளவிற்கு சமீபத்திய விழாக்களில் ஜனநாதனையும், அவரது படங்களையும் பாராட்டி பேசினார் தங்கர்.
ஆனால் நடந்த உள் விவகாரமே வேறு.
பேராண்மை படத்தை ஜனநாதன் இயக்கிய அதே ஐங்கரன் நிறுவனத்திற்காக தங்கர் களவாடிய பொழுதுகள் இயக்கிவருகிறார். இப்படத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் நடித்துவருகிறார்கள்.
பேராண்மை படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்களிப்பு நிகழ்வு ஒன்றில் திடுதிப்பென்று உள்ளே நுழைந்த தங்கர், ‘’நான் அழையா விருந்தாளியாகத்தான் வந்திருக்கிறேன். அதற்கு காரணம். ஜனநாதன் என்கிற நல்ல இயக்குநர். சிறந்த தமிழ் படைப்பாளியை தேடிச்சென்று வாழ்த்துவதுதான் தமிழனுக்கு அழகு. அதைத்தான் நான் இப்போது செய்திருக்கிறேன்.
இப்படம் தமிழின் மிகச்சிறந்த படங்களுள் ஒன்று. விருதுகளை குவிக்கும்’’என்று வாழ்த்தி பேசினார்.
ஆனால் மேடையை விட்டி இறங்கியதும் ஐங்கரன் நிறுவனத்தாரிடம், ‘’என்னய்யா அப்படி படம் எடுத்துட்டாரு...இதெல்லாம் ஒரு படமா...இதுக்கு போய் எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம்..என்று தங்கர் சொல்ல, அது ஜனா காதுக்கு எட்டிவிட்டதாம்.
தங்கருக்கு போன் போட்ட ஜனா, ‘பேராண்மை படத்தை பற்றி உங்க அபிப்ராயம் என்ன’என்று கேட்டாராம்.
‘அதான் மேடையிலேயே சொன்னேனே..’என்று தங்கர் சொல்ல, ‘மேடையை விட்டு இறங்கியதும் என்ன சொன்னாய்’என்று கேட்டாராம் ஜனா.
மறுமுனையில் தங்கர் மவுனத்தை பதிலாக சொல்லிக்கொண்டிருக்க, ‘என் படத்தை விமர்சிக்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கு..’என்று ஜனா எகிற லைனை துண்டித்துவிட்டாராம் தங்கர்.
லைனை துண்டித்ததும் மறுபடி தொடர்பு கொள்ளவில்லையே பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த தங்கருக்கு ஷாக்காம். நேரிலேயே வந்து நின்றாராம் ஜனா.
’நாவல்களை வைத்துதானே நீ படம் எடுத்துக்கிட்டு இருக்குற..’-ஜனா.
‘அங்க மட்டும் என்னவாம். அதுதானே நடக்குது...’-தங்கர்.
‘இயற்கை,ஈ,பேராண்மை என்று ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் இது இந்த நாவல் என்று சொல்லிவிட்டுத்தான் எடுக்கிறேன்..’-ஜனா.
‘நானும் அதத்தான் செய்யுறேன். தலைகீழ் விகிதங்கள்தான் சொல்ல மறந்த கதை. நானே எழுதிய நாவல்தான் ஒன்பது ரூபாய் நோட்டு...’-தங்கர்.
‘என் படம் இயற்கை தேசிய விருது வாங்கியிருக்கு...உன் படம் அத வாங்கியிருக்கா அதுக்குள் எதுக்கு உனக்கு இப்படி வாய்க்கொழுப்பு. என்னோட மூணு படத்துலயும் நல்ல மெசேஜ் சொல்லியிருக்குறேன். அதுக்காக நான் மத்தவங்க படத்த குற்றம் சொல்லிக்கிட்டா திரியுறேன்...’’என்று ஜனா எகிறிக்கொண்டே போக, ‘இல்ல நான் வந்து..இல்ல நான் வந்து...’என்று தங்கர் மழுப்பிக்கொண்டே இருக்க சுற்றி இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தார்களாம்.