'சீனா வில் 1 பில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு கண்டறியப்பட்டுள்ளது'.
இதனால் இந்தியா வுக்கு என்ன கலவரம்?இதுவரை சீனா பயன்படுத்தி வந்த இரும்புத் தாதுவில் பாதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான். அதாவது இந்த கண்டுபிடிப்பு மூலம் இந்தியாவின் இரும்பு ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட உள்ளது என்பது கலவரமான செய்திதானே.
சீனாவின் ஹீபே மாகாணத்தில் லூனான் கவுன்டி என்ற இடத்தில் ஆறு கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த இரும்புத் தாது படுகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் 41.43 மீட்டரிலிருந்து 108.95 மீட்டர் அடர்த்தியில் இந்தத் தாது படர்ந்துள்ளதாம்.
100 முதல் 600 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்தத் தாதுவை தோண்டியெடுக்கும் பணி விரைவில துவங்க உள்ளது.சீனாவைப் பொறுத்தவரை இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது. காரணம், இரும்புத் தேவை அந்நாட்டுக்கு மிக அதிகம்.
ஆனால் அதைச் சமாளிக்கும் அளவு இருப்பு அவர்களிடம் இல்லாமல் இருந்தது. இதனால் பெருமளவு இரும்புத் தாதுவை இந்தியாவிடமிருந்தும், லத்தீன் அமெரிக்க நாடுகளிடமிருந்தும் இறக்குமதி செய்துவந்தது.ஏராளமாக இறக்குமதி செய்வதால், தங்களுக்கு சிறப்புச் சலுகை வேண்டும் என சமீபத்தில்தான் வெனிசூலா நிறுவனத்துடன் தனி ஒப்பந்தமே போட்டது சீனாவின் 'வோன் அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனம்'.
இப்போது இந்த புதிய கண்டுபிடிப்பால், தனது இரும்புத் தாது இறக்குமதியை பாதிக்கும் மேல் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது சீனா.