பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, December 14, 2009

வி.புலிகளின் பணத்தில் ஜனாதிபதி தேர்தல் செலவுகள் புதிய திட்டம் அம்பலம்

கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யுடன் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 11ம் திகதி மாலை பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு ஆதரவளிக்குமாறு கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கே.பி.யிடன் கோரியுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கான பிரசாரப் பணிகளுக்கு விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான நிதியைப் பயன்படுத்தினால் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமென கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கே.பி.யிடம் கூறியுள்ளாராம்.
சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் கே.பி. பின்னர் எவ்விதத்திலும் விடுபட முடியாது எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கூறியதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.