பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, December 14, 2009

மஹிந்த தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. பா.உ.தங்கேஸ்வரி.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வினை எட்ட முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் யாவும் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதே நேரம் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதா என்ற விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கூட்டமைப்புடன் கலந்துரையாடி வருவதாக பா.உ சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான முடிவொன்றை விரைவில் எட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.