பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, November 26, 2009

யுத்தம் 4 -நக்கீரன் கோபால்


""என்னாச்சு கோபால்?'' -பரபரப்பும் பதற்றமும் கலந்த குரலில் கேட்டார் ரஜினி. பெங்களூரில் எதிர்கொண்ட நிலைமைகளைச் சொன்னேன். ரஜினியால் நம்ப முடியவில்லை.""என்ன சொல்றீங்க கோபால்?'' - அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக அவர் கேட்டதற்கு காரணம் இல்லாமலில்லை.2000-ம் ஆண்டு. வீரப்பனால் கடத்தப் பட்ட ராஜ்குமாரை மீட்பதற்கான முயற்சியில் இரு மாநிலங்களின் அரசுத் தூதராக நக்கீரன் டீம் மூன்றாவது முறையாகக் காட்டுக்குப் போய்விட்டு வந்திருந்த நாள்.


ராஜ்குமாரையும் அவருடன் கடத்தப்பட்டவர்களையும் அழைத்து வந்திருக்க வேண்டிய நாள். வீரப்பனிடம் இருப்ப வர்களை மீட்பதற்காக, தமிழ்த்தீவிரவாதிகளை விடுவிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் விதித்த தடையின் காரணமாக மீட்பு முயற்சி நிறை வடையவில்லை.நானும் தம்பி காம ராஜும் கோட்டையில் முதல் வர் கலைஞரை சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். என் செல்போன் ஒலிக்கிறது.


ரஜினிதான் அழைத்தார். அவர் குரலில் அவசரம் தெரிந்தது. நான் கலைஞரைப் பார்க் கிறேன். ""பேசுங்க'' என்கிறார் பெருந் தன்மையாக. ரஜினி பேசப்பேச நான், ""சொல்றேன்.. சொல்றேன்.. சொல்றேன்..''


என்று மட்டுமே சொல்லிக்கொண்டி ருக்கிறேன். முதல்வர் அருகில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் எல்லோரும் இருக்கிறார்கள்.
ரஜினி என்னிடம் பேசியதற்கு காரணம், அவரது லைனுக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பேசியதுதான்! ""இதுவரைக்கும் நாம்தான் தமிழ்நாட்டுக் குப்போய் அவங்ககிட்டே பேசுறோம். அவங்க நம்மை ஒரு முறைகூட பெங்களூ ருக்கு வந்து பார்க்கலை. எனக்கு கரு ணாநிதிஜி பற்றித் தெரியும். But our associates feel lot'' என்று சொல்லி யிருக்கிறார் கிருஷ்ணா. தமிழ்நாட்டுத் தரப்பிலிருந்து பெங்களூருக்கு வர வேண்டும் என்பதுதான் கிருஷ்ணா பேச்சின் சாராம்சம். இதைத்தான் ரஜினி என்னிடம் போனில் தெரிவித்தார். ""சொல்றேன்... சொல்றேன்..'' என்று நான் சொல்லிக்கொண்டிருந்தது இதனால் தான்.ரஜினியிடம் பேசியதை கலைஞரிடம் சொன்னேன். சட்டென அவர், ""நீங்களே போயிட்டு வாங்க ளேன்'' என்றார். இரு மாநிலங்களின் அரசுத் தூதராக காட்டுக்குச் சென்று மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நமக்கு, தமிழக அரசின் தூதராக கர்நாடகத்திற்கு செல்வது என்பது கூடுதல் கௌரவம். அந்த கௌரவத்தையும் நக்கீரனுக்கே கலைஞர் அளித்ததை எதிர்பார்க்க வில்லை. ""நானா?... சரி'' என்றேன். ""துணைக்கு ரஜினியை அழைச்சிட்டுப் போங்க கோபால்'' என்ற கலைஞர், தனது செயலாளர் சண்முகநாத னிடம் ரஜினிக்குப் போன் போட்டுக் கொடுக்கச் சொன்னார். ரஜினியின் லைன் கிடைத்ததும், ""கோபால் வருவதா கிருஷ்ணாகிட்டே சொல் லுங்க ரஜினி.
நீங்களும் துணைக்குப் போயிட்டு வந்திடுங்க'' என்றார் கலைஞர். ரஜினி ஓ.கே. சொன்னார்.தம்பி காமராஜ் மீட்பு முயற்சி தொடர்பான மற்ற வேலைகளுக்காகக் கிளம்பிவிட்டார். நான் ரஜினி வீட்டிற்குப் போனேன். வாசலில் காத் திருந்தார். ""வாங்க.. வாங்க கோபால்'' என வழக்கமான ஸ்டைலில் வர வேற்றவரிடம்,
""நீங்க உங்க வழக்கம் போல பெங்களூருக்குப் போயிடுங் கண்ணே.. நான் சதாப்தி ட்ரெயினில் வந்திடுறேன்'' என்றேன்.""ஹா... ஹா... ஹா...''- சினிமாவில் வெளிப்படும் அதே அட்டகாசமான சிரிப்பு ரஜினியிடமிருந்து வந்தது. ""என்னா பாஸ்.. நீங்க என் கூடத்தான் வர்றீங்க. இந்த நிமிஷத்திலேயிருந்து நான் உங்க பி.ஏ.! உங்களுக்கு பேங்ளூர்ல என்ன பேருன்னு நீங்க தெரிஞ்சுக்கல பாஸ். சதாப்தி... ம்.. சதாப்தி.. பேங்களூர் வாங்க சொல்றேன்.
ஹா.. ஹா.. ஹா..''ஏதாவது தவறாக சொல்லிவிட் டோமோ என யோசித்தேன். ரஜினி யாருக்கோ போன் செய்து, கன்னடத்தில் பேசினார். பிறகு என்னைப் பார்த்து, ""ரெடி.. போலாமா'' என்றார். ஃப்ளைட்டில் எக்ஸிகியூட்டிவ் கிளாஸில் எனக்கும் அவருக்கும் டிக்கெட் போடப்பட்டிருந்தது. ஏர் போர்ட்டுக்கு அவருடைய காரில்தான் போனோம். டிரைவர் கணபதிதான் ஓட்டி வந்தார். எங்களுக்கு முன்பாகவே ஏர்போர்ட்டில் பத்திரிகையாளர்கள் காத்திருந்தார்கள். பயணத்தின் நோக்கம் பற்றிக் கேட்பதற்காகத்தான்.நான் ரஜினியைப் பார்த்தேன். ""நீங்கதானே பி.ஏ.ன்னு சொன்னீங்க.
நீங்கதான் அவங்ககிட்டே பேசணும்'' என்றேன். அவர்தான் பத்திரிகையாளர் களிடம் பேசினார். ஃப்ளைட்டில் எங்களோடு கர்நாடக ஐ.ஜி. சீனிவாசன், முதல்வர் கிருஷ்ணாவின் செகரட்டரி ராகவேந்திர சாஸ்திரி இருவரும் வந்தனர். பெங்களூரு ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கு கிறது.வரிசையாக நிற்கின்றன சைரன் கார்கள். அதில் ஒன்று புல்லட் புரூஃப் கார். நான் ரஜினியைப் பார்க்கிறேன். ""இதெல்லாம் யாருக்குண்ணே!'' ""ஹா... ஹா.. ஹா.. உங்க பவர் உங்களுக்குத் தெரியல கோபால்.
இங்கே நீங்கதான் தெய்வம். வண்டியில ஏறுங்க.'' புல்லட் புரூஃப் கார் புறப்படுகிறது. டிராபிக் நெருக்கடி சுத்தமாக இல்லை. சென்னையிலிருந்து எங்களுடைய ஃப்ளைட் புறப்பட்டதுமே இங்கே டிராபிக்கை க்ளோஸ் பண்ணிவிட்டார்களாம். வழியில் கண்ணுக் குத் தெரிந்த கட் டிடங்களெல்லாம் கல்வீச்சுகளால் சேதமடைந்திருந் தன. கண்ணாடி கள் நொறுங்கியிருந் தன. ராஜ்குமார் கடத்தப் பட்டு, அன் றைய தேதியுடன் 45 நாட்கள் ஆகி யிருந்தன. 45 நாட்களாக கர்நாடகாவில் பந்த். எல்.கே.ஜி.யி லிருந்து எம்.பி.ஏ. வரை ஸ்கூல்- காலேஜ் எல்லாமே மூடிக்கிடக் கின்றன. கடைகள், அலுவலகங்கள் எதுவும் திறக்கப்படவில்லை என்று தெரிந்ததும் எனக்கு பகீர் என்றி ருந்தது.மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எங்கள் கான்வாய் ஒரு பெரிய ஏரியாவுக்குள் நுழை கிறது. எந்த இடம் என்று எனக்குத் தெரியவில்லை. பரந்து விரிந்த புல் வெளியில் வரிசையா கப் பலர் நிற்கிறார்கள்.
காரிலிருந்து நாங்கள் இறங்கியதும் அவர்கள் என்னருகே வந்து சடசட வென என் காலில் விழுகிறார்கள். நான் பதறிப்போய் விலகிக்கொண்டு ரஜினியைப் பார்க்கிறேன்.""எம்.எல்.ஏஸ்.... இவங்களெல்லாம் இந்த மாநிலத்து எம்.எல்.ஏ.க்கள். நான் சொன்னேனே தலைவா... உன் பவரை பேங்களூர் வந்து பாருன்னு. பார்த்துக்குங்க'' -அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறார்.
புல்வெளியைத் தாண்டி பங்களாவுக்குப் போனபோது அங்கும் வரிசையாகப் பெருந்தலைகள். நான் மறுபடியும் ரஜினியைப் பார்க்கிறேன்.""எம்.ப்பீஸ்...''எல்லோரும் கும்பிடுகிறார்கள். வணக்கம் சொன்னபடியே உள்ளே நுழைந்தால், கன்னட நடிகர் அம்பரீஷ். என்னை கட்டித் தழுவிக்கொண்டு, ""கடவுளே...'' என்கிறார். ரஜினி என்னை, "பார்த்தியா...' என்பதுபோல பார்க்கிறார். ""உங்களுக்காக சி.எம். வெயிட்டிங் கோபால்'' என்கிறார் அம்பரீஷ்.ஒரு கதவு திறக்கிறது."Yes Mr.Gopal. Come in. You are welcome''. -முதல்வர் கிருஷ்ணா எங்களை வரவேற்க, அவரருகில் கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே (இப்போது மத்திய அமைச்சர்) நின்றுகொண்டி ருக்கிறார். பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி அரசு முறைப்படி எனக்கு வரவேற்புத் தரப்படுகிறது. "You are my guest Mr.Gopal. I want to take photos with You'' -என்று கிருஷ்ணா சொல்ல, நடுவில் நான் நிற்கிறேன். என் வலது பக்கத்தில் கிருஷ்ணா, அவரையடுத்து மல்லிகார்ஜுன கார்கே. இடது பக்கத்தில் நடிகர் அம்பரீஷ்.
அவரையடுத்து ரஜினி. ஃபோட்டோ செஷன் முடிந்து புகைப்படக்காரர்கள் சென்றதும், அம்பரீஷும் புறப்பட்டுவிட்டார். நாங்கள் 4 பேர் மட்டும் இருக்கிறோம். திரும்பிப் பார்த்தேன். சடாரென்று கதவுகள் மூடப்படுகின்றன