பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, November 22, 2009

'ரஜினியுடன் நடிக்கணும்..' சிணுங்கும் தமன்னா!

ரஜினியுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நாயகிகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் தமன்னா. கமலின் அடுத்த பட நாயகி இவர்தான் என்று பரபரப்பாகப் பேசப்படும் தமன்னா, இப்போதெல்லாம் விருப்ப நடிகர்களாக ரஜினி - கமல் இருவரையுமே குறிப்பிடுகிறார் (எப்படி சாமர்த்தியம்!).தமன்னாவின் முதல் படம் கேடி. அது வந்த வேகத்தில் பெட்டிக்குள் போய்விட, தமன்னாவும் தனது சொந்த ஊரான பாடியாலாவைப் பார்க்கப் போய்விட்டார் கொஞ்ச நாளைக்கு.பின்னர் தெலுங்கில் அவர் நடித்த ஹேப்பி டேஸ் அம்மணிக்கு ஏக சந்தோஷத்தை வாரி வழங்கியது. உடனே 'கல்லூரி'யில் நடித்தார்.
சுக்கிர தசை அங்கே ஆரம்பமானது.இப்போது கமல் படத்துக்கு இவர்தான் நாயகி என்பது முடிவாகிவிட்டதால், இப்போதே மற்ற நாயகர்கள் இவரது கால்ஷீட்டை வாங்கிவிடச் சொல்கிறார்களாம் இயக்குநர்களிடம். குறிப்பாக தனுஷ் தனது படங்களில் தமன்னாவைத்தான் போட வேண்டும் என அடம் பிடிக்கிறாராம்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதுதானே நடிகைகள் பாலிசி... கணிசமாக சம்பளத்தை உயர்த்திவிட்டவர், தனுஷுடன் நடிக்கும் அடுத்த படத்துக்கு ஒரு கோடிக்கு மேல் ரேட் பேசிவிட்டதாகத் தகவல். இன்னொரு பக்கம் ஒரே படத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக நயன்தாரா வந்தது எப்படி என்று ஆராய்ந்தவர், சந்திரமுகி ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டாராம்.அடுத்த நிமிடமே தனது மேனேஜரிடம் சிணுங்க, அதுவே பின்னர், "சூப்பர் ஸ்டாருடன் நடிக்க விரும்புகிறார் தமன்னா... சம்பளமெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை" என பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த மாதிரி செய்தியாகி விட்டதாம்!