பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, November 28, 2009

கதிரையில் இருந்து விழுந்த நாள் முதல் மஹிந்தவுக்கு காலம் சரியில்லையாம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜாதக பலன்கள் இப்போது நன்றாக இல்லை என சோதிடர்கள் கூறியுள்ளனராம். சனி மாற்றப் பலன்களால் பல விடயங்கள் நினைத்தது போல் நடக்காமல் தடைகள் ஏற்படுத்து அவருக்கு கெட்ட சகுனத்தைக் காட்டியுள்ளதாம்.
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப்பணிகள் முதலில் வீரவில பகுதியில் ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அமைச்சர் சாமல் ராஜபக்ஷ தனது கைத்தொலைபேசியூடாகக் கொடுத்த தகவல் மூலம் நிறுத்தியுள்ளார். பின்னர் அது மாத்தள பகுதிக்கு மாற்றப்பட்டது.புதிய விமானநிலைய அடிக்கல் நாட்டச் சென்ற மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக செல்லவிருந்த ஐ.ஐ 24 ரக ஹெலிகொப்ரரே நேற்று விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகொப்ரர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக ராணுவ பேச்சாளர் கூறினாலும் உண்மையில் ஜனாதிபதி பாதுகாப்புக்கென சென்ற ஹெலியே வீழ்ந்து நொருங்கியது.
அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய மாநாட்டில் 'உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்' என பெரிய டிஜிட்டல் போர்டில் எழுதும்போது மஹிந்த சில அசௌகரியங்களுக்கு உள்ளானாராம். அதேபோல ராணுவ கண்காட்சியைத் திறந்து வைக்க முயற்சித்தபோது ரொமோட் கொண்ட்ரோல் இயங்காமல் சிக்கல் கொடுத்துள்ளது. இவ்வாறு பல சகுனங்கள் அவருக்கு கெட்டவிதமாக அமைந்துள்ளனவாம். இவற்றுக்கெல்லாம் காரணம் மஹிந்தவின் சனி மாற்றப் பலன்களே என சோதிடர்கள் எச்சரித்துள்ளனராம்.மேடையில் கம்பீரமாக அமரவந்த மஹிந்த எபோது கவிழ்ந்து விழுந்தாரோ அன்றிலிருந்து எல்லாமே கெட்டதாக அமைவதாக பேசப்படுகிறது