பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 27, 2009

கொழும்பில் மூடப்பட்ட வீதிகள் திறக்கப்பட்டுள்ளன

கொழும்பில் பாதுகாப்பு நிமித்தம் மூடப்பட்டிருந்த வீதிகள், இன்று முதல் பொதுமக்களின் போக்குவரத்திற்காகத் திறந்து விடப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதியும் இன்று பிற்பகல் முதல் பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர கலதாரி விருந்தகத்திற்கும், ஜனாதிபதி செயலக வீதியின் ஊடாக காலிமுகத்திடல் சந்தி வரையில், மூடப்பட்டிருந்த வீதியும் திறக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று முதல் கொழும்பின் வீதிகளில், ஜனாதிபதியை தவிர்ந்த முக்கியஸ்தர்கள் பயணிக்கும் போது வீதிகள் மூடப்படும் நடைமுறை ரத்துச்செய்யப்படுவதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது சரத் பொன்சேகாவுக்கும் பொருந்தும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில், பதவியில் இருந்து விலகிய பின்னரும் சரத் பொன்சேகா வீதிகளில் பயணம் செய்யும் போது வீதிகள் மூடப்பட்டமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.