பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, November 22, 2009

தேர்தல் அறிவிப்பு ஒத்தி வைப்புக்கு விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமே காரணம்

லங்கை அரசாங்கம் தேர்தல் அறிவிப்பை ஒத்தி வைத்ததற்கு விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் வழக்கம்போலவே கொள்கை விளக்க உரை வரும் நவம்பர் 27 ஆம் தேதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் விடுதலைப் புலிகளின் கொள்கை பிரகடனம் எவ்வாறு வெளியிடப்படவுள்ளது என்பதை சர்வதேச சமூகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றது.
இந்நிலையில் தேர்தல் அறிவிப்பினை அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டால்,கொள்கை விளக்க உரையில் தேர்தல் முடிவுகளை மாற்றும் விதமான சில முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என்று இலங்கை அரசு தரப்பு அச்சமடைந்துள்ளது.
எனவே மாவீரர் தின உரை நிறைவடையும் வரை தேர்தல் அறிவிப்பினை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மாவீரர் தின உரைக்கு முன்பாகம, அரசு தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டும் பட்சத்தில் அதற்கு ஏற்ற வகையில் கொள்கை விளக்க உரையில் மாற்றங்ளை ஏற்படுத்தவும் விடுதலைப் புலிகள் தரப்பு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இம்முறை வெளியிடப்படவுள்ள விடுதலைப்புலிகளின் கொள்கை விளக்க உரையானது இலங்கையில் நடைபெறவுள்ள எந்த தேர்தல் முடிவினையும் தீர்மானிக்கும் சக்தி மிக்கதாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர் கால தமிழ் மக்களின் தெரிவுகள் குறித்து தெளிவான முடிவுகளை விடுதலைப்புலிகளின் மாவீரர் தின உரை பிரதிபலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.