
இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் எல்லோராலும் பாரட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் கேரள அமைச்சர் பேபி மட்டும் ராஜா மீது மன வருத்தத்தில் உள்ளார்.
இதற்கு காரணம், சமீபத்தில் நடந்த பழசிராஜா படத்தின் நிகழ்வில் ராஜா பேசும் போது, ’’பழஸி ராஜா என்ற மலையாளப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அந்தப் பாடல்கள் பெரும் வெற்றியடைந்துள்ளன. இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இளையராஜா பங்கேற்றுப் பேசினார்.அப்போது படத்துக்கு பாடல் எழுதிய மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குரூப், உணர்ச்சியற்ற வரிகளை எழுதித்தர, அதை அந்தப் படத்தின் தன்மைக்கேற்ப உணர்ச்சிப்பூர்வமாக தான் மாற்றியது குறித்து விவரித்தார். இத்தனைக்கும் அவர் தவறாக அந்தக் கவிஞர் பற்றிச் சொல்லவில்லை. கவிஞர்கள் படத்தின் தன்மைக்கேற்ப பாடல்களை எழுத வேண்டும்’’ என்று கூறினார்.
இது பற்றி அறிந்த கேரள மாநிலத்தின் அமைச்சர், ’’ஓ.என்.வி.குரூப்பும் பெரிய சாதனையாளர்தான். இதை மறந்துவிட்டாரா இளையராஜா?
ஒருவேளை இளையராஜாவுக்கு மறதிநோய் இருக்கலாம். இதனால்அவர் பழசிராஜா பாடல்கள் குறித்து விமர்சனம் எழுப்பி இருக்கலாம். இது நல்லதல்ல...’’என்று தெரிவித்தார்.