விழா துவங்கியதுமே, முமைத் கானின் சேலைப் புராணத்தைப் பாட ஆரம்பித்தவர்கள் அத்தோடு நில்லாமல் எல்லை மீறிப் போயும் வர்ணித்தார்கள்.மூத்த திரைப்பட இயக்கநர் வி.சி குகநாதன், "தாமரை கண்கள் என்று புத்தகத்தில் படித்து இருக்கிறேன். அது, முமைத்கானுக்கு இருக்கிறது. எது எது எங்கெங்கு இருக்க வேண்டுமோ, அது அது அங்கங்கே அழகாக இருக்கிறது என்று புளகாங்கிதப்பட்டுப் பேசினார்.தொடர்ந்து அவர் பேசுகையில், அவரிடம் ஒரே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். தயவு செய்து சம்பளத்தை மட்டும் உயர்த்தி விடாதீர்கள். சினிமா பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு பல நடிகைகள் வருவதில்லை. ஆனால், முமைத்கான் இந்த பட குழுவினரை மதித்து, விழாவுக்கு வந்திருக்கிறார். அதற்காக என் பாராட்டுக்கள்..." என்றார்.
அடுத்து கருணாஸின் டர்ன். மைக்கைப் பிடித்த கருணாஸ், "முமைத்கானுடன் நடித்தது என் பாக்கியம். அவரைத் தொட்டு நடிக்க தயக்கமாக இருந்தது. அவரோ என்னைப் பார்த்து, 'கமான் யா... கேரி ஆன்' என்று கூப்பிட்டு கட்டித் தழுவினார். அப்புறம் நான் சகஜமாக நடித்தேன்" என்றார். இன்னும் சிலர் முமைத்கானின் அழகு, கவர்ச்சிக்கு ஈடே இல்லை என்று புகழ்ந்து தள்ளினர், சங்கடத்தில் அந்த நடிகையே நெளியும் அளவுக்கு!