பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, December 12, 2009

வேட்டைக்காரன் படத்திற்கு வெளிநாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது


மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இளைய தலைவலியின் வேட்டைக்கரனை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
வேட்டைக் காரனுக்கு வேட்டு வைப்பானா தமிழன்??


வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல… வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.
காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் இலங்கை ராணுவத்துக்கு, வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கபட்டுள்ளது. இப்படம் தயாரிக்கும் போதும், பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போதும் இத் தவறுகள் தமிழ் நாட்டில் பலரால் சுட்டிகாட்டப்பட்டுள்ளன. இதனை நடிகர் விஜய் புறக்கணித்துள்ளார்.
படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளதாக அறியப்படுகிறது. போர் உக்கிரமடைந்த காலத்தில் சிங்கள படைகளை வலுப்பெற வைக்க பாடல்களை இயற்றி மெட்டுப்போட்ட கயவர்களுடன் இவர் கூட்டுச் சேர்வதா? அதே மெட்டை விஜய் படத்திலும் இவர்போட நாம் பணத்தை வாரி இறைத்து நடிகர் விஜயை வாழ்த்துவதா?

இதுவும் ஒரு பிழைப்பா? தமிழர்களே சிந்தியுங்கள், எமது பெருந்தொகையான பணம் இவ்வாறு வசூலிக்கப்பட்டு, ஒரு சில நபர்களிடன் கோடிக்கணக்கில் முடங்கி இருக்கிறது.
அவர்கள் தமிழர்களுக்கு உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல், தமிழர்களின் மனதைப் புண்படுத்தாமல் வாழ கற்றுக்கொள்ளவேண்டும், இதுவே நாம் இவர்களுக்குப் புகட்டும் நல்ல பாடமாக அமையும்.

இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு, தமிழர்கள் தெரியப்படுத்துங்கள்.
வேட்டைக்காரனுக்கே வேட்டு….