பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, December 6, 2009

இலங்கையில் ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு படைத்தளபதிகளே காரணமாக இருந்தனர்: கோத்தபாய

லங்கையில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமையின் பின்னணி தமக்கு தெரிந்திருந்த போதும், இராணுவ தளபதிகளை காப்பாற்றும் முகமாகவே அதனை வெளிப்படுத்தவில்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, ஊடக சுதந்திரம் குறித்து கருத்துரைத்து வருகின்ற நிலையிலேயே இந்த தகவலை கோத்தபாய வெளியிட்டுள்ளார்.
பல ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொலை செய்யப்பட்டனர். இதில் சண்டே லீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவும் அடங்குகிறார். இவரின் கொலை தொடர்பில் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் என்ற விடயம் தமக்கு தெரியும் என்ற போதும் அதனை தற்போதும் வெளியிடமுடியாது என கோட்டாபய குறிப்பிட்டு;ள்ளார்.
எனினும் சரத் பொன்சேகா, ஊடக சுதந்திரம் தொடர்பாக பேசி வருவதால் அதனை பற்றிக் கதைப்பது கட்டாயமாகிவிட்டது என கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் யாவும் தம்மீதே சுமத்தப்பட்டு வந்ததாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர், 2006 ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் மட்டும்,16 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 39 பேர் தாக்குதல்களுக்கு உள்ளாகினர்.