கடந்த மே மாதம் புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனநாயகம் துளிர்விட்டு வருகின்றது என்பதற்கு நாளை மறுதினம் இடம்பெறவுள்ள கூட்டம் ஒர் எடுத்துக்கட்டு. ஒரே மேடையில் தமிழ்கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். மனித உரிமைகள் இல்லத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி மக்கள் பேரணி, தீபமேற்றல் ஆகிய நிகழ்வுகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன.வீரசிங்கம் மண்டபத்தில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை இந்த நிகழ்வுகள் இடம்பெறும். அதை தொடர்ந்து முத்தமிழ் சங்கமத்துடன் மக்கள் பேரணி இடம்பெற்று மாலை 6:30 மணிக்கு தீபமேற்றும் நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA) மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எஸ்.அரியநேந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின்(DPF) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்(EPDP) செயலரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின்(TULF) தலைவர் வீ,ஆனந்தசங்கரி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF) பத்மநாபா பிரிவு தலைவர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
யாழ் நகரில் ஒரே மேடையில் தமிழ்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடவிருப்பது குறிப்பிடத்தக்கது.