""போருக்குப்பிறகு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் அளவுக்குமீறிய சீன விசு வாசத்தை இந்தியா உன்னிப்பா கவனிச்சுக் கிட்டுத்தான் இருக்குது. ரணில் இந்தியாவுக்கு வந்தப்ப, ராஜபக்சேவின் ரகசிய செயல்பாடு களை இந்திய அரசிடம் விளக்கிட்டுப் போனார். இதற்கடுத்துதான் அவசரமா கொழும்புக்கு பறந்த பிரணாப் முகர்ஜி, ராஜபக்சேவிடம் இந்தியாவின் அதிருப்தியை நேரடியாகவே வெளிப்படுத்தினார். அதன் பிறகும் ராஜபக்சே தனது சீன விசுவாசத்தி லேயே இருப்பதால் அதிபர் தேர்தலில் அவர் தோற்கணும்னு இந்தியா விரும்புது. எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளரா களமிறங்கும் பொன்சேகாவை இந்தியா அழைத்ததன் பின்னணி இதுதானாம்...''
""ஓ.. இந்தியாவின் அழைப்பின்பேரில் தான் பொன்சேகா வந்தாரா?'
""ஆமாங்க தலைவரே... யுத்த காலத்தில் இந்தியா தெரிவித்த நிபந்தனைகளை நிறை வேற்றுவேன்னு சொல்லியிருக்கும் பொன் சேகா, இந்தியாவுக்கு விசுவாசமா நடந்துக்கு வேன்னும் சொல்லியிருக்கிறார். அவரை ஆதரிக்கும் சிங்களக் கட்சிகளின் நம்பகத் தன்மை, தமிழ்க் கட்சிகளின் ஓட்டு சிதறினால் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது பற்றி யெல்லாம் பொன்சேகாவிடம் டீடெய்லாக கேட்டிருக்கிறது இந்தியா.''
""ராஜபக்சேவுக்கும் தோழன், பொன் சேகாவுக்கும் காவல்னு செயல்படுதுப்பா நம்ம தேசம்...''