பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, December 6, 2009

பத்திரிக்கையாளர்கள் ஆவேசம்: பயந்து ஓடிய விவேக்

ராஜ் டிவி நிறுவனத்தின் தயாரிப்பில் டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் ‘மகனே என் மருமகனே’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார் விவேக்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று மாலை ராஜ் டிவியின் அரங்கத்திற்குள் நடந்தது.
பத்திரிக்கையாளர்கள் அரங்கத்திற்குள் வந்ததுமே, ராஜ் டிவி நிறுவனத்தாரிடம் விவேக் இந்த சந்திப்புக்கு வரக்கூடாது. அவர் மீடியாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார். நீங்களும் ஒரு மீடியாக்காரர்.

ஆனால் அவரை வைத்து படம் எடுத்திருக்கிறீர்கள். பரவாயில்லை; ஆனால் இங்கே அவர் வரக்கூடாது என்று ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினர்.
’மீடியாவைப்பற்றி விவேக் கடுமையாக விமர்சித்தது உண்மைதான்.

அவர் இங்கு வந்ததும் எல்லோரும் இருந்து பேசி ஒரு இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டுவோம்’ என்று இயக்குநர் டி.பி.கஜேந்திரனும், ராஜ் டிவி நிறுவனத்தார் நால்வரும் சமாதானபடுத்தினர்.
அவர்கள் சமாதாப்படுத்தவும் பத்திரிக்கையாளர்களில் ஒரு தரப்பினர், ‘சரி, அவர் வரட்டும். இன்று இந்த பிரச்சனையை பேசி முடிவெடுப்போம்’ என்று சொன்னார்கள்.
ஆனால் மறு தரப்பினரோ, இதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இனி பேசுவதே வீண்.

அவர் இங்கு வரக்கூடாது என்று உறுதியாக இருந்தனர்.
விவேக் வரட்டும் ஒரு முடிவு கட்டுவோம் என்று ஒரு பிரிவினர் உள்ளே காத்திருக்க, உள்ளே நுழையவிடாமல் தடுப்போம் என்று அரங்கின் நுழைவாயிலில் ஒரு பிரிவினரும் காத்திருக்க,இந்த தகவல் அரங்கை நோக்கி வந்துகொண்டிருந்த விவேக்கிற்கு போக, தலைதெறிக்க ஓடி காரில் ஏறி பறந்துவிட்டாராம்.
வெகு நேரம் காத்திருந்த இரு தரப்பினரையும் ராஜ் நிறுவனத்தார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பின்குறிப்பு-1:(படத்தில் காமெடியை விட கிளாமர் தூக்கலாம். ரெண்டு நாயகிகளூடன் கிளாமரில் புகுந்து விளையாடியிருக்கிறாராம் விவேக்)
பின்குறிப்பு-2:நடிகைகளைப்பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக தமிழ் திரையுலகத்தினர் நடிகர் சங்கத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்லோரும் ஆபாசமாகவும், வன்முறையாகவும் பேசினார்கள்.

ஆபாச,வன்முறை பேச்சில் உச்சதுக்கே போனார் விவேக்.
இப்படி உச்சத்துக்கே போனதால் சினிமா தரப்பினரும் விவேக்கை எச்சரித்தார்கள்.