பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, December 7, 2009

மருவத்தாருடன் மோதும் தைலாபுரம்!


முக்கியமான அரசியல் கட்சித் தலைவரை, பெரிய ஆதரவோடு வலம் வரும் ஒரு சாமியாரை எதிர்த்துப் பேச வைத்திருக் கிறது.
அந்த தலைவர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ். அவரது விமர்சனத்திற்கு ஆளான சாமியார்... மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்.பா.ம.க.வின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் ராமதாஸ் டிரைவரின் மாமனாருமான வைத்தீஸ்வரன் தம்பி வெங்கடாசலபதியின் திருமணம் மேல் மருவத்தூரிலுள்ள என்.வி.எம். திருமண மண்டபத்தில் நடந்தது.அந்த திருமண விழாவுக்கு வந்த ராமதாஸ் தனது பேச்சில், ""காஞ்சிபுரத்துல கோயில் கருவறையிலேயே ஒரு அய்யர் அசிங்கம் செய்யுறான்.

நாம அவங்களை வைச்சு பூஜை கல்யாணமெல்லாம் பண்றோம். இந்த சாமியார் பசங்கள வச்சுதான் கல்யாணம் சடங்கெல்லாம் நடத்தணுமா? பெத்தவங்களை வச்சு நடத்துனா நல்லாருக்காதா?'' என திருமண சடங்குகளை விமர்சித்து பேசிக் கொண்டே வந்தவர் திடீ ரென டிராக் மாறினார். அங்கே கூடி யிருந்த மக்களைப் பார்த்து பேச ஆரம்பித்தவர், ""காஞ்சிபுரத்து கருவறையில மட்டுமா அநியாயம் நடக்குது. இங்கே மேல் மரு வத்தூருல அநியாயமே நடக்கலையா?'' என கேட்க, அங்கிருந்தவர் கள் ""ஐயா ரொம்ப அநியாயம் நடக்குது'' என சொன்னார்கள். அதை அப்படியே ஒரு ஓப்பனிங் ஆக எடுத்துக் கொண்ட ராமதாஸ், ""பங்காரு அடிகளார் இருபது வரு டத்திற்கு முன்னாடி பென்ஸ் கார்லயா போனாரு.

எதுல போனாரு?'' என பொதுமக்களை கேட்க, அவர்கள், ""ஓட்டை சைக்கிளிலதான் போனாரு'' என பதில் சொன்னார்கள். ""பங்காரு அடிகளாரோட கோயில் இவ்வளவு பெருசா மாட மாளிகை மாதிரியா இருந்தது? காலேஜு காலேஜா கட்டியிருக்கிறாரே?'' என அடுத்த கேள்வியை கேட்டு தொடர்ந்தார். ""இதுவரைக்கும் அரசுக்கு சொந்தமான எத்தனை ஏரிகளை அடி களார் தூர்த்து பில்டிங் கட்டி யிருக்காரு?'' என கேட்க, ""மொத்தம் மூணு ஏரியை தூர்த்துப்புட்டாரு'' என குரலெழுப்பினார்கள் திருமண வீட்டுக்கு வந்திருந்தவர்கள்.

திருமண விழாவில் இருந்த பங்காரு அடிகளா ரின் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.தனது பேச்சிற்கு எதிர்ப்பு வரு வதைப் பார்த்த ராமதாஸ், ""நான் சும்மா சொல்லலை. கீழ்மருவத்தூர் ஏரி, குளமெல்லாம் என்னாச்சு? எங்கே இருக்குது? எல்லாம் அவங்க கட்டுன காலேஜுக்குள்ளே இருக்குது. அரசு நிலத்துல லாட்ஜ், கடையெல்லாம் கட்டி வியாபாரம் பண்றாரு. கல்வி நிலையம் வச்சு காசு பார்க்குறாரு. ஏழை பாளைங்க... பணம் கட்ட முடியா தவங்களை கண்டுக்கவே மாட்டேன் கிறாரு'' என்று ஆவேசமாக பேசிய தோடு, திடீரென்று பங்காரு அடி களாரை எதிர்ப்பதன் காரணத்தையும் அந்த மேடையிலேயே சொன்னார்.""நான் நினைச்சா உங்க முன் னாடியே தமிழக முதல்வர் கலைஞர் கிட்ட இந்த மேடையிலிருந்தே பேசமுடியும். பிரதமர்கிட்ட பேச முடியும்.

அவங்க எல்லாம் மரியாதை கொடுக்க தெரிஞ்சவங்க. அந்த மரியாதை பங்காரு அடிகளிடம் இல்லை. நான் கைப்பட அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். மாச கணக்காச்சு. இன்னிக்கு வரைக்கும் பதில் இல்லை'' என டாப் கியரில் போனவர், ""வன்னியர்கள் எல்லோரும் செவ்வாடை கட்டிக்கிட்டு லட்சக்கணக்குல பணத்தை கொண்டுபோய் அடிகளாரின் உண்டியலில் கொட்டுறோம்.

நம்ம வீட்டு பொம்பளைங்களை கொட்டுற மழையில் கொண்டுபோய் நிறுத்தி வைச்சு ஆதரவு காட்டுறோம். இதையெல்லாம் காண்பிச்சு அடிகளார் வந்தவாசி இடைத்தேர்தலில் வன்னியர் ஓட்டெல்லாம் நான் வாங்கித் தர்றேன்னு பேரம் பேசுறார்'' என சொல்லி முடித்தார்.ராமதாஸின் இந்த பேச்சு பங்காரு அடிகளாரின் பக்தர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதுபற்றி பங்காரு அடிகளார் என்ன சொல்கிறார் என்பதை அறிய அவரை ஓம்சக்தி பத்திரிகை ஆசிரியர் முருகானந்தத்தின் உதவியுடன் சந்தித்தோம்.தனது அத்தையின் மரணத்தால் சோகத்தில் இருந்த அடிகளாரிடம் உறவினர்கள் துக்கம் விசாரித்துக்கொண்டி ருந்தார்கள். அவரிடம் "ராமதாஸின் பேச்சு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, ""இருபது வருஷத்துக்கு முன்னாடி மேல்மருவத்தூருக்கும் சோத்துப்பாக்கத்துக்கும் இடையில் பயணம் செய்ய ஏரோபிளானா இருந்தது? அன்று என்னிடம் ஓட்டை சைக்கிள்தான் இருந்தது.

ஓட்டை சைக்கிளில் போனதை நான் இழிவாக நினைக்கவில்லை. இன்று பென்ஸ் காரில் போறதை பெருமையாகவும் நினைக்கலை. இரண்டும் எனக்கு ஒன்றுதான். நான் லட்சக்கணக்கான மக்களை இயற்கையை வழிபடுங்கள் என்றுதான் போதிக்கிறேன். மக்களுக்கு என்னால முடிஞ்ச நல்ல சேவைகளை செஞ்சுக்கிட்டு வர்றேன். என்னைப் பத்தி தப்பா பேசுறவங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பலை. எல்லாம் கடவுளுக்கும் மக்களுக்கும் தெரியும்'' என்றார் மிகவும் அமைதியாக.ராமதாஸ் ஏதாவது சிபாரிசு கடிதம் கொடுத் தாரா என அடிகளாருக்கு நெருக்கமானவர் களிடம் கேட்டபோது, ""அப்படி எதுவும் அடிகளாரின் கவனத்திற்கு வரவில்லை'' என சொன்ன அவர்கள்...""கலைஞரிடம் ராசியாக போகணும்னு ராமதாஸ் விரும்புறார். அதற்கு அடிகளாரை தூது போகச் சொன்னாரு. அடிகளார் அரசியலை எப்பொழுதும் விரும்பாதவர்.

அதனால் அந்த ஆலோசனையை ஏற்க மறுத்திட்டாரு. அந்த கோபத் துல அடிகளாரை சகட்டு மேனிக்கு தாக்கிட்டாரு'' என்கிறார்கள்.மருவத்தூரும், தைலா புரமும் மோதிக்கொள்வது அரசியல் நெடுஞ்சாலையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.