விதவையாகிவிட்டோமே என்ற கவலை குரலில் தெரிந்தது. ""எம்புருஷன்தாம்யா... கொள்ளை நேரமும் குடிச்சுக் குடிச்சே அழிஞ்சாரு. கண்ட எடத்தில விழுந்து கெடப்பாரு. தூக்கி வந்து வீட்ல போடுவேன். ரெண்டு நாளா மனுஷன் வீட்டுக்கு வரலை. எப்பவும் போல ரெண்டு மூணு நாள் கழிச்சு வருவார்னு நெனைச்சேன். இப்படி முண்டச்சி ஆக்கிப்போடுவார்னு நெனைக்கலைய்யா'' -நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் அஜீகுமாரிடம் மூக்கைச் சிந்தினார் தங்கபாண்டியன் மனைவி அன்னலட்சுமி.தற்கொலை என்றோ, குடிபோதை விபத்து என்றோ ஃபைலை க்ளோஸ் செய்யும் எண்ணத்தில்தான் இருந்தார் இன்ஸ்பெக்டர். உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எழுப்பிவிட்டது. ஆறப்போட்டு அன்னலட்சுமியை ஃபாலோ செய்தார். அன்னலட்சுமி வீட்டிற்குப் பக்கத்து தெரு வாலிபப் பையன் முத்துகிருஷ்ணன், தினமும் இருட்டியபின் வந்து விடியுமுன் வெளியே போவதைக் கண்டார்.இருவரையும் அள்ளிவந்து ஸ்டேஷன் லாக்கப் ரூமில் "விருந்து' வைத்தார்.
கக்கிவிட்டாள் அன்னலட்சுமி.""கட்டிட வேலைக்குப் போற எம் புருஷன் தெனக்கி குடிச்சிட்டு வந்து பொணம் மாதிரி உறங்கிடுவான். புருஷன் சொகமே கெடைக்கலீங்கய்யா... அதான் இந்த வாலிபப் பையனோட பழக்கம் வச்சுக்கினேன்.
இவன் பகல்ல வருவான். பகல்ல மட்டும்தான் வருவான். இவனுக்கும் எம் புருஷனுக்கும் தெரியாம, வி.கே. புரம் ஜோசியன் இசக்கிதாஸ் வருவான். அவன் ராவுல மட்டும்தான் வருவான்.நானும் முத்துகிருஷ்ணனும் பார்க்கக்கூடாத நெலையில கெடந்ததை எம்புருஷன் பாத்துப்புட்டான். ரெண்டு புள்ளை பெத்தவளுக்கு ஊர் மேயுற புத்தி ஏம்டினு அடிச்சான். அதான் முத்துகிருஷ்ணன்கிட்ட சொன்னேன். அவன் என் புருஷனை கூட்டிப்போய் தண்ணி வாங்கி ஊத்தி, சவுக்குக்கட்டையால நேக்கா தட்டி, கன்னடியன் கால்வாய்ல தூக்கிப் போட்டுட்டு வந்தான்.
புருஷனை ஏமாத்தினேன், போலீஸ்ட்ட மாட்டிக்கிட்டேன்'' -வாக்குமூலம் கொடுத்தாள் ஆபாசலட்சுமி.... ஸாரி... அன்னலட்சுமி.அன்னலட்சுமி, முத்துகிருஷ் ணன், இசக்கிதாஸ் மூவரும் இப்போது உள்ளே இருக்கி றார்கள். இந்தச் செய்தியில் ஒரு கொசுறு செய்தி...ஜோசியன் இசக்கிதாஸின் மனைவி ஜோதி லட்சுமி 10 நாள் முன்புதான் நாண்டுகொண்டு செத் திருக்கிறார். "கட்டின மனைவி நான் இருக்கையில ஏம்ய்யா அலையுதீரு?' என்று ஜோதிட கணவரிடம் சண்டை போட்ட அந்த அப்பாவி ஜோதிலட்சுமியின் தற்கொலையில் (?) உள்ள மர்மம் இன்னும் அவிழ்க் கப்படவில்லை.பக்கத்து வீட்டுக்காரனுக்கு முந்திவிரித்த தன் மனைவி லட்சுமியை அடிக்கவில்லை, வையவில்லை. ""இனிமே நீ எனக்கு பொண்டாட்டி இல்லை. வீட்டை விட்டுப் போ, பையனையும் கூட்டிட்டுப் போடி'' அருளாச்சி கிராமத்தைவிட்டே துரத்தினார் கணவர். ""சரிதான் போவே... ஆசை தீர காதலிக்க முடியாத உன்னோட எனக்கென்ன வேலை?'' -5 வயது மகன் மாதவனையும் கூட்டிக்கொண்டு கீழச் சுரண்டையில் இருக்கும் தன் தம்பி இசக்கிசெல்வத் தின் வீட்டுக்குப் போனாள் 40 வயது லட்சுமி.தம்பியின் வீட்டுக்கு வந்து 3 மாதம் கடந் திருக்கும்.
அக்கம்பக்க வீட்டுக்காரர்கள் பலர் இசக்கிசெல்வத்திடம் பட்டும் படாமல் சொன்னார்கள். ""இசக்கி... நீ மானஸ்தன். வாழாவெட்டியா வந்த உன் அக்கா நடத்தை சரியில்லப்பா. நீ வேலைக்கு கிளம்பினதுமே எவன் எவனோ வீட்டுக்கு வர்றானுக. கதவைத் தாழ்போடுறா. உன் தங்கச்சியும் அக்கா வுக்கு சப்போர்ட்டா வௌக்குப் புடிக்கிறாபோல... கண்டிச்சு வைப்பா!''சொல்லிச் சொல்லிப் பார்த்தான் 29 வயதே ஆன தம்பிக்காரன். திருந்துவதாய் தெரியவில்லை. ஒருநாள் வேலையில் இருந்து மத்தியானத்தில் திரும்பினான். வீடு தாழிடப்பட்டிருந்தது. தட்டினான்.
கதவைத் திறந்துகொண்டு ஒரு ஆள் வேகமாக ஓடினான். வீட்டுக்குள் அக்கா சேலையைத் தேடிக்கொண்டிருந்தாள்.உருட்டுக்கட்டையை எடுத்தான். அக்காவின் மண்டையில் ஓங்கிப் போட்டான். மண்டை பிளந்தது. ""அக்காவை அடிக்காதே அண்ணா'' -ஓடிவந்த தங்கையையும் அடித்துக் கொன்றான். ""அய்யோ மாமா... அடிக்காதே'' -குறுக்கே விழுந்த சிறுவன் மாதவனையும் அடித்துக் கொன்றான்.ரத்தம் உறைந்த சவுக்குக் கட்டையோடு, சுரண்டை காவல்நிலையத்தில் சரணடைந்தான். வாக்குமூலம் கொடுத்தான்... ""நான் மானஸ்தன்...'' உலகத்து சோகங்களையெல்லாம் உருக்கி, முகத்தில் அப்பிக்கொண்டு தலைவிரி கோலமாய் அம்பை அருகிலுள்ள ஆழ்வார்க்குறிச்சி காவல் நிலைய ஏட்டையாவின் காலில் வந்து விழுந்து கதறினார் 38 வயது மிக்கேலம்மாள்.""எஜமான்... என் புருஷன், என் உசுரு... ரெண்டு நாளா காணலை.
தேடோ தேடுன்னு தேடிப் பார்த்தோம்.... காணலை. கண்டுபுடுச்சுக் கொடுங்க எஜமான்'' -கண்ணீர் வடித்தார். மிக்கேலம்மாளின் கணவர் சார்லஸின் "பாடி'யை 11-ம் நாள் கண்டு பிடித்தார்கள் ஆழ்வார்க்குறிச்சி காட்டுக்கிணற்றில். சதைகள் பிய்ந்து அழுகிக் கிடந்தது சடலம். ""லோடுமேன் வேலை செய்ற என் தங்கத்துக்கு எதிரின்னு யாரும் இல்லியே... வேலை கிடைக்கலை, வருமானம் இல்லைன்னு கொஞ்சநாளா அனத்திக் கிட்டு இருந்தாருங்கய்யா... இப்பிடி தற்கொலை புத்தி ஏற்படும்னு சொப்பனத்திலகூட நான் நெனைக்க லையே'' -வீதி மண்ணெல்லாம் மேனியில் ஒட்ட... புரண்டு தேம்பினாள் மிக்கேலம்மாள்.தற்கொலை என்று ஃபைலை க்ளோஸ் செய்தது ஆழ்வார்க்குறிச்சி போலீஸ். எண்ணி இரண்டே வாரம். பக்கத்து தெரு சேவியர் சிங்க ராயனுக்கு கடுமையான காய்ச்சல். ஜன்னி கண்டு உளறினான்... பினாத்தினான்.""எம் புருஷன் சரியில்லை, நீதாம்யா வேணும்னு கட்டிப் புடிச்சா மிக்கேலம்மா. பத்திக்கிடுச்சு.
ஒருநாளா? ரெண்டு நாளா? மாதக் கணக்குல... கண்ணால பாத்துப் பிட்டான் சார்லஸ். என்னையும் மிக்கேலம்மாவையும் அவன் போட் டுத் தள்ளிடுவான்னு பயந்து நானும் அவளும் சேர்ந்து பிராந்தியில விஷத்தைக் கலந்து குடுத்து காட்டுக் கேணியில தூக்கிப் போட்டம்... போலீசு வருது... வருது போலீஸ்... அய்யய்யோ...'' -சேவியரின் பினாத்தல் அவன் மனைவிக்கு கேட்டு, அக்கம்பக்கம் விழுந்து ஆழ்வார்க்குறிச்சி காவல்நிலைய காதிலும் விழுந்து விட்டது. மிக்கேலம்மாளும் சேவியர் சிங்கராயனும் இப்போது பாளை சிறையில்.""நிலமோசடி, ஆதாயக் கொலைகளைவிட இந்த மாவட்டத்தில் பாலியல் குற்றக் கொலைகள் அதிகமாகி விட்டன.
விழிப்புணர்வு பிரச்சாரம் கட்டாயம் தேவை'' -இது நெல்லை எஸ்.பி.அஸ்ரா கார்கின் கருத்து. நெல்லுக்கு வேலி போட்ட தாமிரபரணிச் சீமையில், கற்பும் மானமும் கலங்குவது ஏன்?""1982-ல் பிறன்மனை நோக்கி வேலி தாண்டு வது ரொம்ப தப்புன்னு சொன்ன பெண்கள் அதிகம். 1992-ல் இதில் என்ன தப்பு என்றவர்கள் 2002-ல் இதெல்லாம் தப்பே இல்லை என்று சொல்கிறார்கள். தமிழ் பண்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டுக்கொண்டி ருக்கிறது'' என்கிறார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் குற்றவியல் ஆய்வுத்துறை பேராசிரியர் முனைவர் சோமசுந்தரம்.