பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, November 16, 2009

விவேக்குக்கு கருப்புக்கொடி...

வாய்க்கொழுப்பு நடிகர் விவேக் நடித்திருக்கும் நல்வரவு என்ற படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா எதிர்வரும் 13 ந் தேதி பிலிம்சேம்பரில் நடைபெற இருக்கிறது. படத்தின் நாயகன், நாயகி ஆகியோர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் விவேக்கும் கலந்து கொள்வதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சார்பில் நிருபர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து விவேக்கை எப்படி எதிர்கொள்வது என்ற தீவிர ஆலோசனையில் இறங்கியது சினிமா பிரஸ் கிளப். விவேக் அத்துமீறி பேசியதற்கு தயாரிப்பாளரோ இயக்குனரோ பொறுப்பாக முடியாது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது கோடிகளை கொட்டி படம் எடுப்பவர்களுக்கு வலியேற்படுத்துகிற செயல். எனவே விவேக் உள்ளே வரும் போது கருப்பு கொடி காட்டுவது என்றும், அவர் பேச ஆரம்பிக்கும் போது மட்டும் ஒட்டுமொத்த சினிமா பத்திரிகையாளர்களும் அரங்கத்தை விட்டு வெளியேறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த தகவலை உடனடியாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் நடந்த நிமோனியா விழிப்புணர்வு பேரணிக்கு வந்திருந்த விவேக்கை அங்கு எதிர்பார்க்காத நிருபர்கள், விவேக் வருவார் என்று தெரிந்திருந்தால் நாங்கள் வந்திருக்கவே மாட்டோம் என்று குரல் எழுப்ப, வெறுப்போடு வெளியேறினார் விவேக். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோதும், போட்டோகிராபர்கள் திரும்பிக் கொண்டு அவருக்கு முதுகு காட்டி நின்றார்கள். இப்படி தனக்கு போகிற இடத்திலெல்லாம் அவமானம் என்று தெரிந்தும் வருகிறார் என்றால் அதன் நோக்கம் என்னவாக இருக்கும்?
தங்கள் முடிவை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள். அதையும் மீறி விவேக் வருவாரா? பொறுத்திருப்போம்!