பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Tuesday, November 17, 2009

captain tv- vijayakanth/விஜயகாந்தின் கேப்டன் டி.வி.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேப்டன் டி.வி.யை தொடங்க டி.வி. ஒளிபரப்புக்கான அனுமதிகேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் இருந்து டி.வி. ஒளிபரப்புக்கான அனுமதி கிடைத்தது. அதனை தொடர்ந்து டி.வி. தொடங்குவதற்கான பணிகள் விறு விறுப்படைந்துள்ளன. விஜயகாந்த் சினிமாவில் பேசிய அரசியல் வசனங்களை தொகுத்து “கேப்டனின் சாட்டையாடி” என்ற தலைப்பில் புதிதாக நிகழ்ச்சி தயாரிக்கப்படுகிறது. தே.மு.தி.க. தொண்டர்களையும் மற்ற நேயர்களையும் கவரும் விதத்தில் புதுமையான நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட உள்ளது. தே.மு.தி.க.வினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த கேப்டன் டி.வி. ஒளிபரப்பை தமிழர் திருநாளான பொங்கல் முதல் தொடங்க விஜயகாந்த் முடிவு செய்திருந்தார்.
ஆனால் கேப்டன் டி.வி. அலுவலகத்திற்கான பணிகள் இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டாததால் கால அவகாசம் தேவைப்பட்டது. அதனால் நலம் விரும்பிகளோடு ஆலோசனை நடத்திய அவர் கேப்டன் டி.வி. ஒளிபரப்பை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்தார். அதன்படி, பழைய தமிழ்ப் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14 முதல் கேப்டன் டி.வி. ஒளிபரப்பாக உள்ளது. பெரும்பாலும் வெற்றிக்கொடி நாட்டிய சாட்டிலைட் சானல்கள் இந்த நாளில் தான் தொடங்கப்பட்டது என்ற சென்டிமெண்ட் காரணமாக அன்று முதல் கேப்டன் டி.வி. மக்களை சென்றடையும் என்று கட்சி நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.