பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, November 16, 2009

என் மார்பை கடிச்சு...! குழந்தை மீது ...


6-ந் தேதி மதிய நேரம். குமரி மாவட்ட களியக்காவிளை அருகே இருக்கும் பூவார் காவல் நிலையத்தை நோக்கி பதட்டமாக ஓடிவந்தாள்... இளம்பெண் ரோகிணி. அவள் இடுப்பில் கைக்குழந்தை.""யாரம்மா நீ? உனக்கு என்ன வேணும்?''’என காக்கிகள் கேட்க... ரோகினியோ...’""சாரே எனக்கு ஒரு கம்ளைண்ட் கொடுக்கான் உண்டு''’’ என்றாள் மலையாளத்தில். ""என்ன கம்ளைண்ட்? யார் மேல் கொடுக்க போறே?''’-என காக்கிகள் கேட்க...""ஒரு செருக்கன் என் மார்ப கடிச்சி...''’என ஏடாகூட புகாரை அவள் ஒப்பித்தாள். இதைக்கேட்டு திகைத்த காக்கிகள் ""எங்க இருக்கான் அந்த அயோக்கியப் பய?''’என கோபமாகக் கேட்டபடி... லத்தியோடு ரெடியாக...""ஆ செருக்கன் இவடே தன்னே உண்டு''’என்றாள். இதைக் கேட்டு மேலும் திகைத்த காக்கி கள்...’’ஆஹா இங்க இருக்கும் காக் கிகள்ல ஒருத்தர்தான் ஏடாகூடம் பண்ணிட்டார்போல' என ஒருவரை ஒருவர் சந்தேகமாகப் பார்க்க... அந்த ரோகிணியோ... ""இதா கையில் இருக் கும் என்ற 2 வயசுக் குஞ்சு தன்னே பால்கழிக் காம்ப கடிச்சுவெச்சு''’’ என்று தன் இடுப்பில் அமர்ந்து திருதிருவென வேடிக்கை பார்த் துக்கொண்டிருந்த தன் கைக் குழந்தையைக் காட்ட... இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காக்கிகள்...""என்ன உன் ரெண்டு வயசுப் புள்ளை மேலயா இப்படி ஒரு புகாரக் கொடுக்க வந்தி ருக்கே?''’ என்றார்கள். அவளோ ""ஆமா சாரே...'' என்றாள் கூலாய். இதைக் கேட்டு கடுப்பான காக்கிகள் ""லூஸாம்மா நீ? போ போ கம்ளைண்டெல்லாம் வங்க முடியாது. பால்குடி மறக்காத பச்சைப் புள்ளைமேல புகார் கொ டுக்க வந்துட்டா புகார்...''’என துரத்திவிட்டனர். எனினும் காவல் நிலைய வாசலில் நின்று அந்தப் பக்கமாக போவோர் வருவோரிட மெல்லாம் போலீஸ் புகார் வாங்க மாட்டேங்குது’என புகார் சொல்லி கொண்டிருந்தாள் ரோகிணி.அவளை நெருங்கிப் பேச்சுக்கொடுத்தபோது “""பெத்த பிள்ளையை தாய் கொலை செஞ்சா.. தாய்மேல நடவடிக்கை எடுக்குறாங்கள்ல. பிள்ளை தாயைக் காயப்படுத்தினா நட வடிக்கை எடுக்க மாட்டாங் களா?''’-என வினோத நியாயம் பேசினாள் அந்த பட்டதாரி இளம்பெண். குழந்தை மீது இப்படி வழக்கெல்லாம் போட முடியுமா? என வழக்கறிஞர் செண்பகவள்ளியிடம் நாம் கேட்க, ""ஐ.பி.சி. 82-வது பிரிவின்படி 7 வயதுவரை உள்ள குழந்தைகள் எதைச் செய்தாலும் அது தவறு கிடை யாது. 7-ல் இருந்து 12 வரை உள்ள குழந்தைகள் தவறு செய்தாலும் அவங்களுக்குத் தண்டனை கிடையாது. 12 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் தவறு செய்தா... பெற்றோர்கள்தான் அதில் முதல் குற்றவாளி''’என்றார் விளக்கமாக.உளவியல் நிபுணரான இக்பால் ஷெரிப்போ ""அந்தப் பெண்ணோட மனநிலை விசித் திரமா இருக்கு. உறவுமுறை பார்க்காம எல்லோர் மேலும் குற்றம் காண்பது கூட ஒரு வகை மேனியாதான். இதற்கு உடனடியா அந்தப் பெண் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கவுன்சிலிங்கி லேயே கூட அவர் குணமாக லாம்''’-என்கிறார் நிதானமாக.